
மரம் தேடும் மழைத்துளி 12
பார்வதி காலை 6 மணிக்கு கிருஷ்ணன் வீட்டின் முன்பு நின்று “எய்யா கொழுந்தனாரே…” என்று அழைப்பு விடுக்க.
கிருஷ்ணரும் சரவணனும் ஒன்றாக வெளிய வந்தார்கள்.
கிருஷ்ணன், “என்ன மதினி காலையிலேயே வந்து நிக்கீக?
“உங்க மருமக ராத்திரி வீட்டுக்குள்ள போய் கதவடைச்சா, தட்டத்தட்ட திறக்கவே மாட்டேங்குறாள். எனக்கு பயமா இருக்கு. எதுவும் ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருக்குமோனு மனசு கெடந்து அடிச்சுக்குது”. என்றார் பார்வதி பதற்றமாக.
“ என்ன விஷயம் நடந்துச்சு? எதுக்காக கதவடச்சா? எதையும் சொல்லாமலே மொட்ட கட்டையா கதவடச்சுகிட்டா பயமா இருக்குனு சொல்றீக”. என்று கிருஷ்ணன் விவரம் கேட்க.
பார்வதி, “உங்க மவேன் குடிச்சுப்பாேட்டு ஒன்னுக்கு இருந்துட்டான் போல இருக்கு. அதுக்கு கோவிச்சுக்கிட்டு போய் கதவ அடைச்சுக்கிட்டா.”
கிருஷ்ணன், “முருகன் குடிபோதையில் எழுந்து, சிறுநீர் கழிக்க முடியாமல். படுக்கையிலேயே இருந்துவிட்டு உறங்கி விட்டான் போல என்று எண்ணி. “இந்த நாய்க்கு போதையில எந்திரிச்சு நடக்க தெம்பு இருக்காதே. இது எதுக்கு அளவுக்கு அதிகமாக குடிக்குது. இப்படி குடிச்சிட்டு மாேண்டு கேவலப்படுத்துது.” என்று வசை பாடியபடி பக்கத்து வீட்டுக்கு விரைந்து நடந்தார். அவரைத் தொடர்ந்து சரவணன் நடந்து வந்தான். பார்வதி இவர்கள் பின்னால் நடந்து வந்தார்.
முருகன் பாவமாக கதவைத் தட்டிக் கொண்டு, “ருக்கு என்னை மன்னிச்சிடுடி. ருக்கு கதவை திறடி. ருக்கு…” என்று கூவிக் கொண்டிருந்தான்.”
கிருஷ்ணன் வந்த வேதத்தில் முருகனின் பிடரியில் ஓங்கி ஒரு அடி கொடுத்ததும். கிருஷ்ணன் புறம் திரும்பி நின்றான். கன்னத்தில் பளார், பளார், என்று நான்கு அறை கொடுத்தவர். “செய்றதெல்லாம் செஞ்சுட்டு. மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்கியா நாயே? செத்த நாயே!.சோத்தை தானே திங்குற. உன்னைய குடிக்காதே. மத்தவங்களுக்கு வாங்கி ஊத்துன்னு சொல்லிட்டு வந்தால், இந்த சின்ன வேலையா பார்த்து இருக்கே.? என்றவர் கதவைத் தட்டி, “மருமகளே ருக்கு. கதவ தொற ம்மா. கதவ தொற. உன் காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன் கதவை திற.” என்று கெஞ்சுதலாக அதே நேரத்தில் சத்தமாக அழைத்தார்.
அவரது வயதுக்கும், அவர் அந்த குடும்பத்தில் மூத்தவர் என்ற தகுதிக்கும், மதிப்பு கொடுத்த ருக்மணி, எழுந்து, கதவை திறந்து விட்டாள்.
இரவு முழுவதும் உறங்காது விழித்திருந்ததால், கண்களை சூழ்ந்த கருவளையம் கண்களில் இருக்க. அழுது களைத்த சோர்ந்த முகத்தோடு இருந்த ருக்மணி சுவரின் ஓரம் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
வந்திருப்பவர்களை மரியாதைக்கும் வாங்க என்று அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் அமர்வதற்கும் இருக்கை கொடுக்கவில்லை. உலக சிந்தனைகளில் இருந்து விடுபட்டவள் போல அமர்ந்திருந்தாள்.
முருகன் அவள் முன்பு கைகூப்பி நின்று. “என்னை மன்னிச்சுக்கோ ருக்கு” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தான். காது கேளாதவள் போல அமர்ந்திருந்தாள்.
“ஏம்மா அவன் செஞ்சது தப்புதான். அவன் சார்பா நான் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கிறேன். மன்னிச்சுக்கோ.” என்று கிருஷ்ணன் மன்னிப்பு கேட்க. ருக்கு தலை நிமிர்ந்து கிருஷ்ணனை பார்த்தாள். அவள் பார்க்கிறாள் என்றதும்.
கிருஷ்ணன், “நீ பெத்த பிள்ளையாய் இருந்தால், அது படுக்கையில் ஒன்னுக்கு இருந்து விட்டுருச்ன்னா அதுக்காக கோபப்படுவியா ம்மா? ஒரு கை, கால் விளங்காதவன் எந்திரிச்சு போக முடியாத நிலைமையிலே ஒன்னுக்கு வந்துட்டா, அதுக்காக அவன்ட்ட கோவிச்சு என்னம்மா செய்ய? அப்படி ஒரு மேலுக்கு முடியாதவனா நினைச்சு மன்னிச்சுக்கோ ம்மா.” என்று மறுபடியும் மன்னிப்பு கேட்டார்.
ருக்மணி, “நீங்க சொல்றதெல்லாம் சரிதான் மாமா. ஆனா இவன் செஞ்ச காரியம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா மாமா? படுத்த படுக்கையிலே ஒன்னுக்கு இருந்துட்டா பரவாயில்லையே மாமா. எப்படி ஒன்னுக்கு இருந்தான்னு அவன் கிட்டயே கேளுங்க. என்று சொல்பவளுக்கு அடக்க முடியாமல் அழுகை வந்துவிட, குமுரி அழுது தன்னை ஆசுவாசப்படுத்தி மீண்டும் தொடர்ந்தாள். நின்ன மேனிக்கு என் தலையில வந்து மோண்டுட்டான் மாமா. எம்புட்டு வக்கிரம் பிடிச்ச பயலா இருந்தா இப்படி ஒரு காரியத்தை செய்து இருப்பான். என் தலையில மோளனும்கறது அவன் ஆசை கிடையாது மாமா. என் வாயில மோளனும்னு அவன் அந்த வேலையை செஞ்சுட்டான். என் வயிறு எரியுது. இவனெல்லாம் விளங்குவானா? இவனை பெத்தவளும் விளங்குவாளா?” என்று சொன்ன ருக்மணி, தன் இரு கைகளால் தன் தலையில் அடித்துக் கொண்டு. ஓ… என அழுது ஒப்பாரி வைத்தாள். அவள் சொல்வதை கேட்ட கிருஷ்ணருக்கு கண்கலங்கி விட்டது. சரவணன் இப்படி ஒரு கொடூர மிருகமா முருகன். என்று தோன்றியது. அவள் அழுவதை பார்த்த சரவணனுக்கும் கண்கலங்கியது.
கிருஷ்ணன, பார்வதியின் புறம் திரும்பி, “என்ன மதனி படுக்கையில மோண்டுட்டான்னு பொய் சொல்லிட்டீங்க. அவ தலையில நிதானத்தோடதான் மோண்டுருக்கான் இதெல்லாம் ஒரு ஆம்பள செய்ற காரியமா? சமையல் கட்டுல போய் சாணி போடுவானா?”
பார்வதி, வாசலில் நின்று மருகிக் கொண்டிருந்தவர், வீட்டுக்குள் வந்து. முருகனது கையை பிடித்து இழுத்து, அமர்ந்திருக்கும் ருக்மணியின் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்கள் தாயும் மகனும்.
ருக்மணி, என் கண்னுக்கு எதிர்க்க வந்து நிக்காதடா. அப்படியே ஓங்கி மிதிச்சேன். சொவத்துல (சுவற்றில்) போய் மோதி செத்துருவ. எனக்கு இருக்க வெளத்துக்கு என்ன செய்வேன்னு தெரியாது. எந்திரிச்சு போயிருடா. பாவி மவனே. இப்படி கால்ல விழுந்து தானடா ஏமாத்தி கூட்டிட்டு வந்து. வாயில மோண்ட. நீ விளங்குவாயாடா? என் கொலையை (ஈரக்குலை) கொதிக்க வச்சிட்டு. நீ நல்லா இருந்துருவோம்னு நினைக்கிறயாடா? நீயெல்லாம் நாசமா தான் போயிடுவே.” என்று சொல்லி கதறி அழுதாள்.
முருகன் செய்த செயல், கிருஷ்ணனுக்கு அதிர்ச்சியை தரவில்லை. மாறாக ஆச்சரியத்தை தந்தது. அவன் தந்தையும் இப்படித்தான் நடந்து கொண்டிருந்தார். தற்போது அவர் உடன் இல்லாமலும், அவரது சாயல் துளியும் மாறாமல் வந்திருக்கிறானே!.”.என்று வருந்தினார்.
சரவணன், அவனது அப்பாவின் காதுக்கு அருகில் வந்து, “பாவம் ப்பா அவளை, அவங்க வீட்டுக்கு போக சொல்லிடுங்க.” இவனோட, அவள் இருந்து மேலும் மேலும் கஷ்டப்பட வேண்டாம்.” என்று மனது பொறாமல் கிசுகிசுத்தான்.
கிருஷ்ணனுக்கும, சரவணன் சொல்வது சரிதான் என்று தோன்றியது. அதன்படியே
கிருஷ்ணன்,”எம்மா நீ இவனோட வாழ்ந்ததெல்லாம் போதும். நீ உன் வீட்டுக்கு கெளம்பு ம்மா…”
கிருஷ்ணனது வார்த்தையைக் கேட்ட பார்வதியும், முருகனும் திடுக்கிட்டு பார்த்தார்கள்.
ருக்மணி, “என்ன மாமா? யாருக்கும் தெரியாம நடந்ததை, எங்க ஆத்தாளுக்கும் தெரியப்படுத்தி. அவள சாகடிக்கனும்னு பார்க்கிறீங்களா? அது மட்டும் நடக்காது. நான் இங்கேயே இருந்து. இவக ரெண்டு பேரையும் சங்காரம் (சம்காரம்) பண்ணிட்டுத்தேன் போவேன்.”
பார்வதி, “சரித்தா… எங்க ரெண்டுபேத்தையும் கொன்னுரு.” என்று தரையில் விழுந்து வணங்கினார்.
கிருஷ்ணன், “என்ன மன்னிச்சிடு த்தா… இவனோட இருந்து மேலும் மேலும் வருந்துறதுக்கு. உங்க வீட்டுக்கு போன்னு சொன்னேன். ஆனா உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்களும் தாங்க மாட்டாங்க. அதை யோசிக்க மறந்துட்டேன். நீ பேசாம என் வீட்டுக்கு வந்து இரு த்தா. இந்த கோபம் கொஞ்சம் ஆறும்தண்டியும் என் வீட்டுல இரு.”
“கோபம் தணிஞ்ச பிறகு இவனோட வந்து குடும்பம் நடத்தவா மாமா இவன் அதுக்கு தகுதியானவன்னு நினைக்கிறீர்களா? இந்த அரக்க ஜென்மத்தோட மனுசி வாழ முடியுமா? இவனையெல்லாம் பிறந்த அன்னைக்கே மூச்ச பிடிச்சு கொன்னு போட்டு இருக்கணும். இத்தனை தூரம் வளர்ந்த பிறகு. அவேன் ஆத்தா கொல்ல மாட்டா. நான் தான் கூட இருந்து இவனை கொல்லனும்.” என்று அவள் நிலையாமையை பலவாறாக எடுத்துச் சொல்லி புலம்பி கொண்டே இருந்தாள் ருக்மணி.
கிருஷ்ணன், “இதுக்கு என்னதாம்மா முடிவு. நீ என்ன செய்யணும்னு நினைச்சு இருக்கே அதையாவது சொல்லு.”
“நான் ஒரு முடிவும் எடுக்கல. ஆனா இந்த வீட்டை விட்டு போகக் கூடாதுங்கிறதுல திடமா இருக்கேன். இதனால் வரைக்கும் இவனுக்கு பயந்து நான் செய்ய நினைச்சதையும் செய்யாம இருந்துட்டேன். நல்ல வேளை இவ்வளவு சீக்கிரத்துல அவன் சுய ரூபத்தை காட்டிட்டான். அதுவும் நல்லதுக்கு தான். இவனை விட்டு ஒதுங்கி வாழ்வதற்கு இதுதான் சரியான நேரம். ஆனால் தனி குடித்தனம் எங்கேயும் போகப் போறது இல்ல. இந்த வீட்டிலயே மாடியில் தங்கிக்கிறேன். இவன் என் மூச்சு காத்து படுத தூரத்தில் கூட வந்து நிக்க கூடாது. இவன் பணத்துல, இவனோட ஆத்தா சமைச்சு போட்ட சோத்தையும் நான் தொட மாட்டேன். எனக்கு வேணுங்குறதை நானே செஞ்சு சாப்பிட்டுக்கிடுவேன். இவன் இனிமேல் திருந்தி, நல்லவனா வந்தாலும் எனக்கு ஒன்னும் இல்ல. திருந்தாம நாசமா போனாலும் ஒன்னும் இல்ல. எங்க ஆத்தா உயிரோட இருக்கும் வரைக்கும். இவனுக்கு பொண்டாட்டியா இந்த வீட்ல இருப்பேன். அவளோட மனசு நோகுத மாதிரி இவக ரெண்டுபேரும் ஏதாவது செய்ய நினைச்சால், அன்னைக்கு இவனை கொன்னுட்டு. இந்த தாலியை அறுத்து போட்டுட்டு நான் வெளியேறி போயிருவேன்.” என்று தெளிந்த மனநிலையில், தன்னுடைய திடமான முடிவை வெளிப்படுத்தினாள் ருக்மணி.
முருகன், அவளது முடிவுக்கு சம்மதம் தெரிவிப்பது போல, இருக்கைகளை கூப்பி அவளை வணங்கியபடி. மனதார, “நீ என்னை விட்டு எங்கேயும் போகாமல் இருந்தால் போதும் ருக்கு. என்னால் இனி உனக்கு எந்த இடைஞ்சலும் வராது. உன்னை பழிவாங்க நினைச்ச எனக்கு இந்த தண்டனை சரிதான்.” என்று எண்ணிக் கொண்டு நின்றான்.
பார்வதி, தன்னுடைய மருமகளை எண்ணி பெருமை பட்டு கொண்டார், இந்த சின்ன வயதிலேயே இத்தனை தெளிவான ஒரு முடிவை எடுத்து. தன்னுடைய தாய்க்கும் எந்த நிகழ்வையும் தெரியப்படுத்தாமல், புருசனையும் அவமானப்படுத்தி கோபத்தை மேலும் அதிகப்படுத்தாமல் ஒதுங்கி வாழ எடுத்த இந்த சிறப்பான முடிவை வரவேற்பது போல மகிழ்வோடு அவளை கைகூப்பி வணங்கினார்.
பார்வதி கிருஷ்ணனை “கொழுந்தனாரே அவ என் கையால சாப்பிட வேண்டாம் உங்க வீட்ல எதையாவது சாப்பிட வையுங்க.” என்று தயங்கி தயங்கி சொல்ல.
“ஒரு வேளை சாப்பிடாட்டி உயிர் போகாது மாமா. எனக்கு ஒரு சீமண்ணெய் அடுப்பும், பொங்கி திங்க கொஞ்சம் அரிசி பருப்பும், கடனா கொடுங்க. நான் அடுத்த வாரம் திருப்பிக் கொடுத்துருவேன்.” என்று வீருகொண்டவளாய் எழுந்து, தன்னுடைய விரிந்த தலையை அள்ளி முடிந்தாள்.
கிருஷ்ணன் அவளை தேம்ப வைத்து விடக்கூடாது என்று எண்ணம் கொண்டவராய், தன்னுடைய சட்டை பையில் இருந்து 500 ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தார். “இப்போதைக்கு வீட்டில் புது அடுப்பு எதுவும் இல்ல தாயி. நீ கடையில புது அடுப்பும் சீம எண்ணெயும் அரிசி பருப்பும் அந்த ரூபாயில் வாங்கிக்கோ. அடுத்த வாரம் நீ திருப்பிக் கொடுக்கிறதா சொன்ன மாதிரி கொடுத்துடு.” என்று சொன்னவர் சரவணனை பார்த்து, “சரவணா… இந்தப் பிள்ளையை கடைக்கு கூட்டிட்டு போய். வேணுங்கறதை வாங்கி கொடுத்து கூட்டிட்டு வா.” என்று அனுப்பி வைத்தார்.

