Loading

மறுநாள் காலையில் தலையைப் பிடித்தபடி எழுந்தமர்ந்தான் சஜீவ்.

 

சஜீவ், “ஆஹ்… முடியலயே… செம்ம தலைவலி… அப்போவே ஹரி சொன்னான்… கேட்டிருக்கனும்…. ” எனத் தலையைப் பிடித்தபடி புலம்ப அவன் முன் லெமன் ஜூஸை நீட்டினாள் நித்ய யுவனி.

 

சஜீவ் நித்ய யுவனியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க,

 

“லெமன் ஜூஸ்… ஹேங்ஓவருக்கு…” என்றாள் அமைதியாக.

 

“தேங்க்ஸ்…” என்று விட்டு சஜீவ் அதனை வாங்கிக் கொள்ளவும் நித்ய யுவனி சென்று விட்டாள்.

 

லெமன் ஜூஸைக் குடித்ததும் தலைவலி சற்று மட்டுப்படுவது போல் இருந்தது.

 

அப்போது தான் அவன் கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தவன், “ஓ மை காட்… நான் எப்படி பெட்ல தூங்கினேன்… அப்போ யுவி எங்க தூங்கி இருப்பா… மூக்கு முட்ட குடிச்சி வேற இருந்தேனே… நைட்டு என்ன பண்ணித் தொலச்சிட்டேனோ… சும்மாவே ஆடுவாள்… இதுல கால்ல சலங்கைய வேற கட்டி விட்டுட்டேன்….” என சஜீவ் புலம்பிக் கொண்டிருக்கும் போதே அறைக்குள் நுழைந்தாள் நித்யா.

 

ஆனால் சஜீவ் எதிர்ப்பார்த்தது போல் அல்லாமல் அவனை எதுவும் கூறாது அமைதியாக தன் வேலையைப் பார்த்தாள்.

 

நித்ய யுவனியின் அமைதி சஜீவ்விற்கு ஒரு மாதிரியாக இருக்க, “யுவி…” என அழைத்தான்.

 

நித்ய யுவனி அவனைக் கேள்வியாகத் திரும்பிப் பார்க்க,

 

“ஐம் சாரி யுவி… ஏதோ டென்ஷன்ல குடிச்சிட்டேன்… நான் நெஜமாவே குடிக்கிறத விட்டுட்டேன்… நேத்து தான் கொஞ்சம் கவலைல…. சாரி… உனக்கு பிடிக்காதுன்னு தெரியும்… சத்தியமா இனி இப்படி பண்ண மாட்டேன்… வேணும்னா என்ன திட்டு… அமைதியா இருக்காதே… நைட் என்ன நடந்ததுன்னே ஞாபகம் இல்ல… நான் எப்படி இங்க வந்தேன்… ” என சஜீவ் கேட்க,

 

“ஹரி அண்ணா தான் கூட்டிட்டு வந்தாரு… அவர் தான் உன்ன பெட்ல படுக்க வெச்சிட்டு ட்ரஸ்ஸ சேன்ஜ் பண்ணி விட்டுட்டு போனாரு… அப்புறம்… எனக்கு பிடிக்காததுக்கு என்ன… குடிக்கிறது குடிக்காதது உன் இஷ்டம்… எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல… நான் யாரு அதெல்லாம் கேக்குறதுக்கு… நான் சாதாரணமா தான் இருக்கேன்…” என்றாள் கசந்த புன்னகையுடன்.

 

பல நாள் கழித்து நித்ய யுவனி தன்னிடம் அமைதியாகப் பேசியிருந்தாலும் சஜீவ்விற்கு அது கஷ்டமாக இருந்தது.

 

அவள் புன்னகையில் மறைந்து இருந்த சோகத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

நித்ய யுவனியின் கண்கள் சிவந்து இருப்பதைக் காணும் போதே அவள் இரவு உறங்கியில்லாதது விளங்கியது.

 

சஜீவ் ஏதோ கூற வர, “நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்…” என்று விட்டு அவசரமாக வெளியேறினாள்.

 

“ஏன் இவ இப்படி நடந்துக்குறா… நைட் என்ன நடந்திருக்கும்…” என சஜீவ் யோசிக்க தலைவலி வந்தது தான் மிச்சம்.

 

சற்று நேரத்தில் கீழே இறங்கி செல்ல அவனைப் பார்த்து முறைத்தார் பிரபு.

 

சஜீவ், “மா காஃபி…” என்று விட்டு சோஃபாவில் அமர,

 

பிரபு, “நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல சர்வா…” என்றார் கோவமாக.

 

அவரைப் புரியாமல் பார்த்த சஜீவ், “என்னாச்சுப்பா… நான் என்ன பண்ணேன்…” என்க,

 

“என்ன இது புதுசா குடிச்சிட்டு எல்லாம் வீட்டுக்கு வர… முன்னாடி மாதிரி இல்ல இப்போ… உன்ன நம்பி ஒரு பொண்ணு இருக்கா… நீ இப்படி எல்லாம் பண்ணினா நித்யா மனசு எவ்வளவு கஷ்டப்படும்…” என்றார் பிரபு.

 

சஜீவ், “சாரிப்பா… ஏதோ டென்ஷன்ல… ஆனா நான் குடிச்சிட்டு ஒன்னும் பண்ணலப்பா… ஹரி என்னைக் கூட்டிட்டு வந்து தூங்க வெச்சிட்டான் போல..” எனும் போதே காஃபியுடன் வந்த ஈஷ்வரி,

 

“கட்டினவ ஒழுங்கா இருந்தா என் பையன் எதுக்கு நைட் எல்லாம் குடிச்சிட்டு வீட்டுக்கு வரணும்…” என்க,

 

“வாய் இருக்குற பழிக்கு கண்டபடி பேசாதே ஈஷ்வரி… சர்வா.. உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டது மட்டும் தான் ஹரிஷ்… உன்ன சாப்பிட வெச்சி ட்ரஸ் மாத்தி விட்டு தூங்க வெச்சதெல்லாம் நித்யா… நான் ஹெல்ப் பண்றேன்னு சொன்னதுக்கு அவளே பாத்துக்குறேன்னு சொல்லி என்னை அனுப்பி வெச்சா… ” என்றார் பிரபு.

 

சஜீவ், “யுவி தான் எல்லாம் பண்ணினாலா… அவ ரொம்ப ஹர்ட் ஆகி இருப்பாளே… பட் யுவி எனக்காக இதெல்லாம் பண்ணாள்னு நெனக்கும் போது சந்தோஷமா இருக்கு…” என மனதில் நினைத்துக் கொண்டிருக்க,

 

“அப்பா..” என அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் ஜீவிகா.

 

வீரும் அவள் பின்னே வர பிரபு, “வா ஜீவி… வாங்க மாப்பிள்ளை… ஆமா என்ன காலையிலேயே ரெண்டு பேரும் வந்திருக்கீங்க…” என்க,

 

“ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு போயிருந்தோம்பா…” என பிரபுவிற்கு பதிலளித்த ஜீவிகா சஜீவ்விடம் திரும்பி,

 

“ஆமா எங்கண்ணா அண்ணி…‌ ஹாஸ்பிடலுக்கு கூட வரலன்னு சொன்னாங்க..” எனக் கேட்டாள்.

 

“என் கிட்ட ஹாஸ்பிடலுக்கு போறேன்னு தானே சொல்லிட்டு போனா.. எங்க போயிருப்பா…” என மனதில் நினைத்த சஜீவ்,

 

“ஃப்ரெண்ட பார்க்க போயிருக்கா ஜீவி…” என்றான்.

 

_______________________________________________

 

ஜானகி, “வாம்மா நித்யா… ஜனனிய பார்க்க வந்திருக்கியா…” என்க,

 

நித்ய யுவனி, “ஆமாம்மா… ரூம்ல இருக்காளா… சரி நீங்க எப்படி இருக்கீங்க… அப்பாவும் பிரேம்ணாவும் எங்க…” எனக் கேட்டாள்.

 

ஜானகி, “நான் ரொம்ப நல்லா இருக்கேன்டா… உன் அப்பாவும் அண்ணாவும் ஆஃபீஸ் போய்ட்டாங்கமா.. ஜனனி ரூம்ல தான் இருக்கா… நீ போய் பாரு… நான் உங்க ரெண்டு பேருக்கும் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்…” என்று விட்டு சமையலறை சென்றார்.

 

நித்ய யுவனி ஜனனியின் அறைக்குச் செல்ல கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த ஜனனி நித்ய யுவனியைக் கண்டதும் எழுந்து அமர்ந்தவள்,

 

“வா நித்து.. என்ன திடீர்னு வந்திருக்க…” என்றாள்.

 

நித்ய யுவனி, “ஹ்ம்ம்… சும்மா தான் ஜெனி… நீ எப்படி இருக்க… எப்போ உனக்கு க்ளினிக் இருக்கு…” என்க,

 

ஜனனி, “இன்னும் ரெண்டு நாள்ள நித்து… உன் கிட்ட தான் வருவேன்…” என்றாள் புன்னகையுடன்.

 

“தாராளமா வா…‌உனக்கு நான் தான் பிரசவம் பார்ப்பேன்… பாப்பாவ நான் தான் முதல்ல தூக்குவேன்…” என்றாள் நித்ய யுவனி.

 

அதற்குள் ஜானகி இருவருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றார்.

 

நித்ய யுவனி, “கரெக்ட் டைமுக்கு சாப்பிட்றியா ஜெனி… மெடிசின்ஸ் எல்லாம் ஒழுங்கா எடுத்துக்குறியா.. ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸுக்கு ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்…” என சொல்லிக் கொண்டே போக,

 

ஜனனி, “டாக்டரம்மா… நான் எல்லாம் ஒழுங்கா தான் செய்றேன்.. இல்லன்னா உன் அண்ணன், என் மாமியார் எல்லாரும் விட்டுடுவாங்களா… நீ இப்போ டாக்டரா என்னை பார்க்க வந்தியா இல்ல என் ஃப்ரெண்டா வந்தியா…” என்றாள் கேலியாக.

 

நித்ய யுவனி, “போடி… நீ எப்படி வேணா எடுத்துக்கோ… எனக்கு என் பெஸ்டியோட ஹெல்த் முக்கியம்…” என்க,

 

“சரி சரி… சாரி… சொல்லு நீ எப்படி இருக்க… சந்தோஷமா இருக்கியா…” எனக் கேட்க,

 

பதிலேதும் கூறாமல் ஜனனியை அணைத்துக் கொண்டாள் நித்ய யுவனி.

 

ஜனனி, “என்னாச்சு நித்து… ஏதாவது ப்ராப்ளமா…” என்க,

 

“என்னால சர்வேஷ் பண்ணத மறக்க முடியல ஜெனி…” என்றாள் நித்ய யுவனி.

 

தன்னிடமிருந்து அவளை விலக்கிய ஜனனி, “கொஞ்சம் நாள்ல எல்லாம் சரி ஆகிடும் நித்து… சஜீவ் அண்ணாவோட காதல் உனக்கு அது எல்லாத்தையும் மறக்க வெச்சிடும்…” என்க,

 

நித்ய யுவனி, “பட் அவன் என் கூட‌ சந்தோஷமா பேச வரும் போதே நான் ஏதாவது சொல்லி அவன ஹர்ட் பண்ணி விட்றேன்… நேத்துக் கூட இப்படி தான்…” என்றவள் சுசித்ரா வந்ததிலிருந்து நடந்தவற்றை கூறினாள்.

 

ஜனனி, “உன் மனநிலை எனக்கு புரியிது நித்து… சஜீவ் அண்ணாவால நீ ரொம்ப ஹர்ட் ஆகி இருக்க… அதனால தான் தெரிஞ்சோ தெரியாமலோ நீ அவர ஹர்ட் பண்ணிட்டு இருக்க… பட் அவர் உன்ன ரொம்ப காதலிக்குறாரு நித்து… அதான் நீ என்ன பண்ணினாலும் அவர் பொறுமையா போறாரு… நீ அவர மன்னிச்சு ஏத்துப்பன்னு அவர் நம்பிட்டு இருக்காரு… அதனால கொஞ்சம் அண்ணாவ புரிஞ்சிக்க ட்ரை பண்ணு நித்து… இந்த அஞ்சி வருஷத்துல என்ன வேணா நடந்து இருக்கலாம்… ஆனா அதன் மூலமா நீ மட்டுமில்ல.. அண்ணாவும் நெறய கஷ்டப்பட்டு இருக்காரு… ஆனா எல்லாத்தையும் மீறி அவர் உன் கழுத்துல தாலி கட்டினது திரும்ப உன்ன இழந்துட கூடாதுங்குறதுக்கு தான்… என் நித்துவ பத்தி எனக்கு ரொம்ப நல்லா தெரியும்… அவளால யாரையும் அவ்வளவு ஈஸியா வெறுக்கவோ கஷ்டப்படுத்தவோ முடியாது… அதுவும் சஜீவ் அண்ணாவ நிச்சயம் முடியாது… அந்த சுசித்ரா வேற அங்க வந்திருக்கா… கண்டிப்பா ஏதோ ப்ளேனோட தான் வந்திருக்கா… நீயும் சஜீவ் அண்ணாவும் ஒன்னா இருந்தா தான் அவங்க திட்டத்த முறியடிக்க முடியும்… அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி சஜீவ் அண்ணா உன்ன எந்த அளவுக்கு காதலிச்சாறோ அதை விட பல மடங்கு இப்போ உன்ன காதலிக்கிறாரு… உன் லவ் மட்டும் கொறஞ்சதா என்ன… அவரு இன்னொரு பொண்ண லவ் பண்ணி இருக்காருன்னு தெரிஞ்சும் நீ அவர நம்பலயா… அவர புரிஞ்சிக்கலயா… இப்போவும் எதுவும் மாறல நித்து… அண்ணா கூட… நீ தான் மனசு இறங்கனும்… ஒரு தடவ சஜீவ் அண்ணாவுக்கு பேச வாய்ப்பு கொடு…” என்க,

 

அவளை மீண்டும் அணைத்துக் கொண்ட நித்ய யுவனி, “தேங்க்ஸ் ஜெனி… உன் கிட்ட பேசினதுக்கு அப்புறம் தான் மனசு கொஞ்சம் ரிலீஃபா இருக்கு… ” என்றாள்.

 

பின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நித்ய யுவனி ஹாஸ்பிடல் கிளம்பினாள்.

 

_______________________________________________

 

அன்று நித்ய யுவனி வீட்டுக்கு வரும் போது நன்றாகவே இரவாகி விட்டது.

 

களைப்பாக அறைக்குள் நுழைந்தவள் முதலில் கண்டது கட்டிலில் அமர்ந்து கையில் ஏதோ வைத்தபடி யோசித்துக் கொண்டிருந்த சஜீவ்வைத் தான்.

 

அறையில் அரவம் கேட்டதும் அவசரமாக தன் கையில் இருந்ததை பின்னே மறைத்த சஜீவ் நித்யா யுவனி ஒற்றைப் புருவம் உயர்த்தி தன்னைப் பார்க்கவும் இளித்து வைத்தான்.

 

தோளைக் குலுக்கிய நித்ய யுவனி இரவுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று விட பெருமூச்சு விட்ட சஜீவ்,

 

“பெரிசா வாங்கிட்டு வந்துட்ட… இப்போ இதை எப்படி அவ கிட்ட கொடுக்க போற… கோவத்துல தூக்கி வீசிட்டா என்ன பண்றது… சரி பார்க்கலாம்…‌ முதல்ல அவ வெளிய வரட்டும்…” எனத் தனக்குள் பேசிக் கொண்டான்.

 

நித்ய யுவனி தலையைத் துவட்டியபடி வெளியே வர திடீரென்று சஜீவ் சென்று அவள் முன் நிற்கவும் அவளுக்கு திக் என்றானது.

 

அதிர்ந்து நெஞ்சில் கையை வைத்தவள் சஜீவ்வை முறைக்க,

 

“அது… யுவி… நான்… வந்து…” என வார்த்தைகள் வராது திக்கியவன் தன் பின்னே மறைத்து வைத்திருந்த பரிசை நித்யாவிடம் நீட்டினான்.

 

அவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்த நித்ய யுவனியின் முகம் அந்தப் பரிசைக் கண்டதும் மலர்ந்தது.

 

இரு கரங்கள் ஒரு கண்ணாடியினால் ஆன இதயத்தைத் தாங்கியிருக்க அவ் இதயத்தினுள் இருவரும் முதல் முறை வெளியே சென்ற போது எடுத்த புகைப்படம் இருந்தது.

 

 

 

அதனைக் கண்டதும் நித்ய யுவனியின் நினைவு அன்றைய நாளை நோக்கி சென்றது.

 

_______________________________________________

 

சஜீவ் யூ.எஸ்ஸிலிருந்து வந்த மூன்றாம் நாள் இருவரும் சேர்ந்து வெளியே சென்றனர்.

 

சஜீவ் கெஞ்சிக் கேட்டதால் வகுப்பைக் கட் அடித்து விட்டு வந்திருந்தாள் நித்ய யுவனி.

 

நித்ய யுவனி, “எங்க போய்ட்டு இருக்கோம் சஜு… ப்ளீஸ் சொல்லு சஜு… ப்ளீஸ் ப்ளீஸ்…” என சஜீவ்வின் கையில் தொங்க,

 

“ஷ்ஷ்ஷ்… நான் சொல்லும் வர வாய தெறக்க கூடாது… நீ சொன்னன்னு தான் பைக்ல வராம பஸ்ல வந்திருக்கோம்… இப்போ நான் சொல்றத கேளு…” என்றான் சஜீவ்.

 

உதட்டைப் பிதுக்கிய நித்யா வாயில் விரல் வைத்தாள்.

 

சற்று நேரத்திலே பஸ் நிற்கவும் அவர்கள் வந்து நின்ற இடத்தைப் பார்த்து கண்களை விரித்தாள் நித்ய யுவனி.

 

சஜீவ், “என்ன யுவி… பிடிச்சிருக்கா…” எனப் புன்னகையுடன் கேட்க,

 

“சஜு… கார்னிவல் பார்க்கவா கூட்டிட்டு வந்திருக்க… வாவ் சஜு… நல்லா என்ஜாய் பண்ணலாம்… வா வா சீக்கிரம்…” என சஜீவ்வை இழுத்துக் கொண்டு ஓடினாள் நித்ய யுவனி.

 

முதலில் இருவரும் ஃபெரிஸ் வீலில் ஏறினர்.

 

உயரத்தை அடையும் போதெல்லாம் நித்ய யுவனி மகிழ்ச்சியில் கூக்குரலிட சஜீவ்வோ நித்ய யுவனியையே வைத்த கண் வாங்காது பார்த்தான்.

 

மீண்டும் உயரத்தை அடையும் போது நித்ய யுவனி திடீரென, “சஜு……. ஐ லவ் யூ……. ” எனக் கத்த,

 

சஜீவ், “ஹேய் யுவி… என்ன பண்ற…” எனக் கேட்டான்.

 

உண்மையில் அவனுக்கு நித்ய யுவனி அவ்வாறு கத்தவும் வெட்கமாக இருந்தது.

 

அதனை மறைக்கத் தான் நித்ய யுவனியிடம் அவ்வாறு கேட்டான்.

 

சஜீவ்வின் முகத்திலிருந்த வெட்கத்தை கண்ட நித்ய யுவனி, “வாவ் சஜு… நீ வெட்கப்படுறியா… ப்ளீஸ் ப்ளீஸ்…‌இன்னொரு தடவ வெட்கப்பட்டு காட்டு… ரொம்ப அழகா இருக்க…” என்க,

 

“அச்சோ.. சும்மா இரு யுவி…” என அவனின் வெட்கத்தை மறைக்க மறுபக்கம் திரும்பிக் கொண்டான் புன்னகையுடன்.

 

அடுத்து இருவரும் பம்பர் காரில் சென்றனர்.

 

சஜீவ்விடம் தானே ஓட்டுவதாக பிடிவாதம் பிடித்து ஓட்ட ஆரம்பித்தவள் தன் திறமையெல்லாம் அதில் காட்டினாள்.

 

சஜீவ்விற்குத் தான் ஒவ்வொரு முறையும் நித்ய யுவனி வளைத்து வளைத்து ஓட்டவும் பயமாக இருந்தது.

 

பின் ரோலர்கோஸ்டரில் செல்ல அதன் வேகத்தில் சஜீவ் கண்களை மூடிக் கொள்ள நித்ய யுவனியோ எந்தப் பயமும் இன்றி கூச்சலிட்டுக் கொண்டு அப் பயணத்தை அனுபவித்தாள்.

 

அது நிற்கவும் இருவரும் இறங்க சஜீவ், “உனக்கு கொஞ்சம் கூட பயமா இல்லையா யுவி… எனக்கு செம்ம டயர்டா வேற இருக்கு…” என்க,

 

வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்த நித்ய யுவனி, “என்ன சஜு… சின்னப் பையன் மாதிரி பயம்னு சொல்ற… இதெல்லாம் கிடைக்கிற நேரம் என்ஜாய் பண்ணனும்… சரி சரி… கொஞ்சம் நேரம் உன்ன ஃப்ரீயா விடுறேன்… ஏதாவது சாப்பிட்டுட்டு ஃபோட்டோ எடுக்கலாம்…” என்றாள்.

 

பின் இருவரும் சேர்ந்து அங்கு கட்டியிருந்த சிறிய சிறிய கடைகளில் தமக்குப் பிடித்தவற்றை வாங்கி உண்டு விட்டு அங்கு வந்திருந்த ஒருவரிடம் சஜீவ்வின் மொபைலைக் கொடுத்து இருவரும் சேர்ந்து வித விதமாக புகைப்படங்கள் எடுத்தனர்.

 

சஜீவ் அவற்றை நித்ய யுவனியின் மொபைலுக்கு அனுப்பப் பார்க்க அவனைத் தடுத்த நித்ய யுவனி,

 

“வேணாம் சஜு.. இந்த ஃபோட்டோஸ் உன் கிட்ட மட்டும் இருக்கட்டும்… தேவைப்பட்டா நான் கேக்குறேன்… உனக்கு தான் என்னைப் பத்தி தெரியுமே சஜு… எங்கயாவது கண்டபடி மொபைல தூக்கி போடுவேன்… அப்புறம் யாராவது பார்த்தா பிரச்சினை ஆகிடும்…” என்றாள்.

 

அன்றைய நாள் முழுவதும் நித்ய யுவனி சந்தோஷமாக அனுபவிக்க சஜீவ்வோ தன்னவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.

 

_______________________________________________

 

அன்றைய நினைவில் புன்னகையுடன் நித்ய யுவனி சஜீவ் தந்த பரிசை வாங்கிக் கொள்ள அவள் முகத்திலிருந்த மகிழ்ச்சியைக் கண்டதும் தன் தயக்கம் நீங்கி,

 

“ஹேப்பி பர்த்டே யுவி…” என்றான் தன் கரம் நீட்டி.

 

அப்போது தான் அவளின் பிறந்த நாளே நித்ய யுவனிக்கு நினைவு வந்தது.

 

நித்ய யுவனி சஜீவ்வின் நீட்டிய கரத்தையே பார்க்க அவளுக்கு விருப்பமில்லை என நினைத்த சஜீவ் தன் கரத்தை பின் இழுக்கப் பார்க்க அதற்குள் அவன் கரத்தைப் பற்றிய நித்ய யுவனி, “தேங்க்ஸ்.. அழகா இருக்கு இந்த கிஃப்ட்… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றாள் புன்னகையுடன்.

 

நித்ய யுவனி தன் கரம் கோர்த்தது ஒரு பக்கம் அதிர்ச்சி என்றால் அவள் புன்னகையுடன் தன்னிடம் பேசியது பேரதிர்ச்சி.

 

சஜீவ் அதிர்வில் நித்ய யுவனியின் கையை இன்னும் விடாமல் இருக்க கஷ்டப்பட்டு அவன் பிடியில் இருந்த தன் கரத்தை விடுவித்தாள் நித்ய யுவனி.

 

அப்போது தான் தன்னிலை அடைந்த சஜீவ், “சா.. சாரி யுவி…” என்றான்.

 

நித்ய யுவனி அந்தப் பரிசைக் கையில் வைத்து ரசிக்க சஜீவ்வோ நீண்ட நாள் கழித்து தன்னவளின் முகத்தில் இருந்த புன்னகையை ரசித்துக் கொண்டிருந்தான்.

 

சஜீவ் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் மனதில் இனம் புரியா உணர்வொண்று தோன்ற,

 

“நா… நான்.. நான் போய் தூங்குறேன்…” என்ற நித்ய யுவனி சஜீவ் தலையசைக்கவும் அவன் தந்த பரிசை மேசை மீது வைத்தவள் அவசரமாக தலை வரை போர்வையைப் போர்த்தி படுத்துக் கொண்டாள்.

 

நித்யாவைக் கண்டு புன்னகைத்த சஜீவ் அறை விளக்கை அணைத்து விட்டு வெளியே சென்றான்.

 

அனைவரும் ஏற்கனவே உறங்கி விட்டிருக்க சத்தம் வராது கதவைத் திறந்து கொண்டு தோட்டத்துக்கு சென்ற சஜீவ்,

 

“ஹுஹூ… ” எனக் கத்தியவன், “என் யுவி ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னால மனசு விட்டு சிரிச்சா… எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா… கூடிய சீக்கிரமே யுவி என்னை புரிஞ்சிப்பா… எனக்கு அந்த நம்பிக்கை வந்திடுச்சு… என் பழைய யுவிய திரும்ப கொண்டு வருவேன் நான்…” என்றவன் அங்கிருந்த கல் பெஞ்ச்சில் படுத்துக் கொண்டு வானில் இருந்த பௌர்ணமி நிலவில் தன்னவளின் முகத்தை கற்பனை செய்து புன்னகைத்தான்.

 

விதியோ அவன் கூறியதைக் கேட்டு கை கட்டி சிரித்தது.

 

❤️❤️❤️❤️❤️

 

– Nuha Maryam –

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Archana

      ஏம்மா கொஞ்சமே கொஞ்சம் இவங்க சிரிச்சா ஏன் இப்படி விதியே நடுவுல கொண்டு வந்து அவங்க சந்தோஷத்தை கெடுக்குறீங்க பாவம் பா சஜூ🤧🤧🤧🤧.

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.