Loading

குமரி – 12

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டானிய  ஆட்சி காலமாக இருந்தது. அப்பொழுது அனைவரும் சுதந்திரத்துக்கு போராட துணிந்த சமயம். சிவகங்கை மாவட்டத்தில்  செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மற்றும் முத்தாத்தாள் நாச்சியாரின் மகளும்,முத்து வடுகநாதரின் துணைவியான வேலு நாச்சியார் ராணியாக இருந்தார். இவரே முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனை ஆவார்.

அவரிடம் பல போர்கலைகளை கற்றுக் கொள்ள  தமிழ்நாட்டிலுள்ள அத்தனை மாவட்டத்திலிருந்தும் மக்கள் வந்தனர். அதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதே நேரம் கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மற்றும் தமிழ்நாட்டின் எல்லைக்கு மத்தியில் உள்ள வனப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தனர் குறிச்சியான்கள்.

அவர்கள் வனப் பகுதியில் இருந்ததால் பெரிதாக பாதிக்கப்படவில்லை. ஆனால், வேலு நாச்சியாரின் பயிற்சிற்கு சென்ற பெண்களை கண்டு கவர்ந்திழுக்கப்பட அவர்களை பின் தொடர்ந்து வந்த பொழுது  தான் பிரிட்டனியர்கள் கண்டனர். பெண்களை கண்டு மயங்கி பின் தொடர்ந்தவர்கள் , அந்த பகுதியின் வனப்பும், செழிப்பும், மண் வளமும் , மக்களின் திறமையும் , வயதானாலும் தோற்றம் இளமையாக இருப்பதும், இரு பாலினர்களின்  அழகும் அவர்களை மொத்தமாக கவர்ந்தது.

ஏனென்றால், பல நூறு வருடங்களாக பூக்களின் அத்தனை பாகங்களின் சிறப்பை பற்றி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் அனைத்து நுணுக்கங்களும் தெரியும். எந்தெந்த காலத்தில் , எப்படி பட்ட நிலத்தில் ,எவ்வகையான பூக்கள் பூக்கும் என்பதும் தெரியும். அது போல், இன்றும் வனத்திற்கு சென்று இன்னும் பல்லாயிர செடிகளை கண்டறிருக்கின்றனர். அப்பொழுதே இருவேறு பூக்களின் மகரந்தத்தை வைத்து புது வகையான பூக்களையும் பூக்க வைக்கின்றனர். இவர்கள் வளர்க்கும் அனைத்தும் பூச் செடிகளே . காயோ, கனியோ வராது. ஆனால், இவர்களின் உணவிற்கு தனியாக விவசாயம் செய்து கொள்கின்றனர். என்றும் இளமை தோற்றமும் , வயது முதிர்ந்த காலத்திலும் பதின் பருவத்தின் ஆற்றல் பெறுவதற்கான யுக்தியையும் கண்டுபிடித்து அதன் படி பின்பற்றுகின்றனர்.

இவ்வாறு எந்த குறையும் இல்லாமல், அனைத்தும் செழிப்பமாக இருக்கும் அப்படி பட்ட நிலமும், பெண்களின் அழகும் அவர்களை அடைய தோன்றியது. ஆனால், அவர்களின் அறிவை அடைய பறிங்கி கொள்ளும் முறை அபத்தமானது. பதுங்கும் முறையே சரி என்று நினைத்து, அவர்களின் குடிலுக்கு முக்கிய கேப்டனுடன் இரு சிப்பாய்கள் சென்றனர்.

இன்று ஆசனாக இருப்பவரின் கொள்ளு தாத்தா இரும்பொறை தான்  அன்று தலைவராக இருந்தார். அவரின்  மனைவி செல்லக்கிளி. இரும்பொறை , பெயருக்கு ஏற்றார் போல் கம்பீரமானவர் .கம்புச் சண்டையில் இருந்து வாள் சண்டை வரை அத்தனையும் அத்துப்படி. அதே போல், செல்லக்கிளி மருத்துவத்தில் கை தேர்ந்தவர். பிரசவம் பார்ப்பது, பிறந்த குழந்தையின் இருமல், சளியிலிருந்து  வயோதிகத்தில் வரும் நோய் வரை அனைத்திருக்கும் கை வைத்தியம் வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட வைத்தியத்தை கற்றுக் கொள்வதற்காக நான் வந்திருக்கேன் என்று கேப்டன் இரும்பொறையின் முன் நின்றார். ஆனால், இரும்பொறை யோசித்து கொண்டே இருந்தார். பின்பு, அவர்கள் என்றும் தெய்வமாக நினைக்கும் மலைகளை நினைத்து இரு பூக்களை வைத்து அதில் ஒரு பூவை  அக்கேப்டனையே எடுக்கக் கூறினார்.

அவர் எடுப்பதற்கு முன், இதில் இருப்பது என்ன என்று கேட்டார். இரும்பொறை “தாங்கள் முதலில் ஏதேனும் ஒரு பூவை எடுங்கள். அதன் பின் நான் கூறுகிறேன் ” என்று முறைத்து கொண்டே கூறிவிட்டு பக்கத்தில் இருக்கும் அரச இலைகள் இரண்டை பறித்து அதில் பூக்களை மடித்து வைத்தார். அதன் பின்னும் யோசித்துக் கொண்டே நிற்க, இரும்பொறைக்கு கோபம் வந்து விட்டது. ” இன்னும்  வேடிக்கை பார்ப்பது ஏன்? ஏதேனும் ஒன்றை எடும்மையா . எவ்வளவு நேரம் நானும் நிற்பது ? ” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினார்

“என் ஆர்வம் புரியாமல் ஏன் என்னிடம் கோபமாக கூறுகிறீர்கள் ? அதனின் எதிர்வினை என்ன  என்பதை தெரிந்து கொள்ளவே  கேட்கிறேன் .” என்று ஆங்கிலத்தில் கூறி அதை சிப்பாயி தமிழாக்கம் செய்தார்.

அடுத்த இரும்பொறை ஏதோ பேச வருவதற்கு முன், செல்லக்கிளி ஒடி வந்து “பேசாமல் இரும்மையா நீ! சீமைத்துரையை எவ்வளவு தான் கேள்வி கேட்ப? “என்று தன் கணவனிடம் கத்தாமல் அதே நேரம்  கடுப்புடன் கூறினார். இரும்பொறை கூற வருவதை காதில் வாங்காமல் அச்சிப்பாயிடம் திரும்பி “நான் தான் மருத்துவச்சி. என் பேரு செல்லக்கிளி. இந்த இரண்டு பூவில்  வெள்ளையா இருக்கிற இந்த பூ பேரு ஆம்பல் . இதோ சிவப்பா இருக்கிற இந்த பூ பேரு காந்தள் வெள்ளை சம்மதத்தை குறிக்கும். சிகப்பு எச்சரிக்கைய குறிக்கும்”  என்று வேறு இரு பூக்களை காண்பித்து கூறி விட்டு ஒரு பொட்டலத்தை எடுக்க சொன்னார்.

கேப்டன் ஒன்றிக்கு இருமுறை யோசித்து விட்டு ஒன்றை எடுத்தார். செல்லக்கிளி தான் ஆர்வமாக இலையைப் பிரித்து பூவைப் பார்த்தார். அதில் ஆம்பலே வந்திருந்தது. இரும்பொறை அவரை கூரிய விழிகளால் காண, அக்கேப்டனோ இரும்பொறையை காணாமல் செல்லக்கிளியிடம் திரும்பி “உங்கள் வயது என்ன ? ” என்று கேட்டார்.

அவரோ “என் வயது 91. என் கணவரின் வயது 98. “என்று அவர் சாதாரணமாக கூறினார். கேப்டனுக்கோ ஆச்சர்யம் இருந்தும் ஒன்றும் கூறாமல் “எனக்கு இந்த மலர்களைப் பற்றி சொல்லி கொடுப்பீர்களா ? ” என்று பணிவுடன் கேட்டார்.

தன்னை குருவாக நினைத்ததை எண்ணி சந்தோசம் கொண்டு தன் கணவரிடம் கூட ஒப்புதல் கேட்காமல் சரி என்று கூறி விட்டார். பிறகு, சிவன் வீற்றிருக்கும் கோவிலுக்கு சென்று சந்தனத்தை கையில் எடுத்து வந்து கேப்டனின் நெற்றியில் இட்டார்.

அவர்கள் குல வழக்கப்படி இத்தகைய வரைமுறைகள், மலர்களை பற்றி கற்க வேண்டுமானால் கண்டிப்பாக கற்கும் சமயம் குறிச்சியர்களா மாற வேண்டும்.  இது சிவனின் ஆணை என்று நம்புகின்றனர். அதனால், செல்லக்கிளி கொஞ்சம் சந்தனத்தை அரச இலையில் மடித்து  அவரின் கையில் கொடுத்தார். அதை வாங்கி சிப்பியின் கையில் கொடுத்தார்.

அதனை கண்னை சுருக்கி பார்த்தார் இரும்பொறை. அதனை கவனித்த சிப்பாயி ” அவருக்கு மலையில் ஏறி பழக்கமில்லை. அதனால் , கையில் குச்சியை தவிர எதுவும் வைத்து கொள்வது ஆபத்து என்று நான் தான் கூறினேன் ” என்று கூறி முடித்த நொடி , ” ஆமாம், ஆமாம் ….. பாதுகாப்பு தான் முக்கியம் . ஆதவன் இறங்கிறதுகுள்ள போயிடுங்க ” என்று கூறி, வனத் தொடக்கம் வரை வந்து வழியனுப்பி விட்டார் செல்லக்கிளி.

அதன் பின், பார்க்கும் அனைவரிடமும் ” இங்க பாரேன் ! நம்ம நாட்டை ஆள வந்த சீமைங்க இப்போ என்கிட்ட கத்துக்க வராங்க. இப்படியே போனா நானே இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்துருவேன். நான் பேச்சுற பேச்சுல அவங்க தப்பு பண்ணத உணர வச்சிடுவேன் “என்று பெருமையாக கூறிக் கொண்டே வந்தார்.

இதையெல்லாம் பார்த்தும் ஒன்றும் கூறாமல் இரும்பொறை தனது மகனான கொற்றனையும் , பேரனான விழியனையும் அழைத்து விஷயத்தை கூறி கண்காணிக்க சொன்னார். பின்பு, தன் தொடையை யாரோ சுரண்டுவது போல் இருக்க  , பின்னால் திரும்பி பார்த்தார். “கீழே பாருங்க தாத்தா ” என்று ஒரு மழலை குரல் ஒலித்தது.

குனிந்து அச்சிறுவனைப் பார்த்தவர், தனது கால் முட்டிக்கு கீழ் இருக்கும் தனது கொள்ளு பேரனான இளமாறனை கண்டு சிரித்து விட்டு அவனின் உயரத்திற்கு குனிந்தார். இச்சிறுவனே இப்பொழுது கூறும் ஆசன்.

“என்ன ராசா? ” என்று அவர் வாஞ்சையுடன் கேட்க, “கொல்லு தாத்தனே, எப்போ பாரு நீங்க அப்பனுக்கும், தாத்தனுக்கு மட்டுமே வேலை சொல்லுறீங்க 😡. எனக்கும் சொல்ல மாட்டிறீங்க.” என்று கோபமாக முகத்தை வைத்து கைகளை கட்டிக் கொண்டு நின்றான்.

விழியன் தான் அருகில் வந்து கையை நீட்டி “ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன் மாறா . தாத்தனிடம் இவ்வாறு பேசாதே என்று!உன் வயது என்ன? அவர் வயது என்ன? ” என்று சரமாரியாக திட்டி விட்டார்.

இரும்பொறை”ஏன் அய்யா  திட்டுகிறீர் ? அவன் இப்பொழுதே நம் குல வீரனாக வருகிறான்”

இளமாறன் (ஆசன்) ” இல்லை அய்யா, கத்தி சண்டையை விட எனக்கு  மருத்துவம் தெரிவதில் ஆர்வம் அதிகம். நான் அதில் கைதேர்ந்தவனாக வர வேண்டும் ” என்று கூற, விழியன் தான் “இப்பொழுது தானே கூறினேன் மறுமொழி கூறாதே என்று. உன் அம்மை என்னதான் உன்னை வளர்த்தாளோ ? ” என்று கூறிய நொடி,

“என் அம்மை என்னை நல்லவிதமாக தான் வளர்த்துள்ளார். உங்களுடைய ரத்தமும் என்னுடைய உடம்பில் ஓடுகிறதல்லையா! அதனால் இந்த வேகம் ” என்று முறுக்கிக் கொண்டான்.

அடுத்து விழியன் பேச வருவதற்குள் கொற்றன் விழியனை சாந்தப்படுத்தி” அவன் சரியாக தான் பேசுகிறான் .  முன் கோபத்தை விடும் அய்யா ” என்று மகனுக்கு அறிவுரை கூறிய பின் பேரனிடம் குனிந்து “உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். ஆனால், மற்ற விஷயங்களில் அடிப்படை தெரிய வேண்டும். சரியா ? ” என்று புரியும்படி பொறுமையாக கூறினான்.

ஒரு சில நொடி யோசித்து விட்டு “சரி, அப்படி என்றால், இப்பொழுதே எனக்கு சொல்லி தாருங்கள் ” என்று குருவை  வணங்குவது போல் தாத்தனின் கால்களில் வணங்கி விட்டு நின்றார்.

அவனின் செயலில் சிரித்துக் கொண்ட  இளம்பொறை , “எங்களுக்கு குருவே சென்மொழியாள். அவளிடம் சென்று கற்றுக் கொள் ” .

இளமாறன் “ச்சீ, அவளா?? “

” என்ன ச்சீயா? வந்தேன் உன்னை பின்னி விடுவேன் “

கீர்த்தி☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. சில்வியா மனோகரன்

      செல்லக்கிளியின் பெருமை என்ற பேயால் என்ன என்ன என்ன விளைவுகள் வரப்போகின்றனவோ… இந்த இளமாறன் கொஞ்சம் துடுக்கா தான் இருக்கிறான்…