Loading

குமரி – 2  🏝️

முல்லை சலிப்புடன் கதவைத் திறந்த பொழுது மதுவின் வாடை நாசியில் வந்தது. மூக்கை பிடித்துக் கொண்டு பார்த்தாள் முல்லை. கருணாகரன் தான் குடித்து விட்டு அழுக்கு பணியனும், கிழியப் போகும் கைலியையும் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்து பல் இளித்து கொண்டிருந்தான்.

உள்ளே ஹாலில் படுத்திருக்கும் தன் தங்கையை காப்பாத்தற்காகவும் , தான் இரவு உடை அணிந்திருப்பதால் தன்னை காப்பாற்றி கொள்ளவும் ஒரு பக்கக் கதவை முழுதாக மூடி  இன்னொரு கதவில் தன்னை முழுதாக மறைத்து தலையை மட்டும் வெளியில் நீட்டிய படி நின்று “என்ன சார் என்ன வேணும்?” என்று அவரிடம் கேட்டாள்.

“அது ஒன்னும் இல்லை முல்லை …. இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். குடிக்கத் தண்ணீ இல்லை. கொஞ்சம் தண்ணீ தர்றீயா? ” கூறி உள்ளே நுழையப் பார்க்க

வந்த கோபத்தில் சடாரென்று கதவை அடைக்க மூக்கில் அடித்து விட்டது கருணாகரனுக்கு.போதையில் இருந்ததால் தடுமாறி கீழே விழுந்து விட்டான். அவன் சுதாரிப்பதற்குள் தங்கையை எழுப்பி அறையில் படுக்க வைத்தாள். வேகமாக அடுப்பறையில் தண்ணீர் எடுத்து வருவதற்குள் எழுந்து உள்ளே  நுழைந்து விட்டான் கருணாகரன்.

அவள் தண்ணீர் எடுத்த வந்த பொழுது  போதையில் தடுமாறி கொண்டிருந்தவன் அன்னையைப்  பார்ப்பதை உணர்ந்து  அவன் பின் மண்டையில்  விளக்கமாறை வைத்து சாற்றி விட்டாள்.

அதனால் போதையில் தெளிந்தவன்  அலறிக் கொண்டு திரும்பி பார்க்க ” இல்லை அய்யா, உங்க பின்னாடி  பல்லி இருந்தது. அதான் அடிச்சேன். இந்தாங்க தண்ணீர் ” என்று கூறி அவன் கையில் கொடுத்தாள்.

அவன் அலறலில்  விழித்து விட்டார் நாச்சியார்  . அதனால் ஒன்றும் கூற முடியவில்லை அவரால். நாச்சியாரும் எழுந்தவுடன் நின்றிருந்த கருணாகரனை பார்த்து என்னவென்று கேட்டார். முல்லை தண்ணீர் சொம்புடன் நிற்பதைக் கண்டு வேகமாக மகளிடம் சொம்பை வாங்கிக் கொண்டு முல்லையை அடுப்பறைக்குள் நிற்க வைத்து விட்டார்.

தண்ணீரை வாங்கிக் குடித்து விட்டும் நின்றுக் கொண்டே இருக்க  ” இன்னும் என்ன வேணும் ” என்று பல்லைக்கடித்துக் கொண்டு கேட்டார்.

” இல்லை, பக்கத்து வீட்டு அக்கா சொன்னுச்சு உங்க மருமக ஏதோ
கத்துனானு ? அதான் எதுவும் பிரச்சனையா எதுவும் உதவி வேணுமானு கேட்கலாம்னு வந்தேன் ? “பல்லை இளித்துக் கொண்டே தள்ளாடியபடி கருணாகரன் கேட்டான்.

“அதை காலையில கேட்டு இருக்கலாமே ? இப்படி நைட்டு 12 மணிக்கு தான் கேட்கனுமா ?” பொறுமையை கையில்  பிடித்து மெதுவாக அதே சமயம் பல்லை கடித்துக் கொண்டு முல்லை கேட்டாள்.

அதே கேள்வி கணைகளோடு நாச்சியாரும்  பார்க்க “அது வேற ஒன்னும் இல்லைம்மா, நான் ஒரே ஆளு கடைக்கு காலையில் ஏழரை மணிக்கே போயிடுவேன். இரவு பத்தரை பதினொன்று ஆகிடும். அதான் நம்ம காலனியில் இருக்கீங்க. அதுவும் வீட்டில் அப்பா இல்லாத இரண்டு பொம்பள பிள்ளைகள் வேற இருக்காங்களே , பையனும் இருந்தும் இல்லாதது போல் இருக்கான். அதான் உதவி எதுவும் வேணுமான்னு கேட்கலாம் தான் ” என்று வேர்வை வழிய ஒரு வழியாக சாக்காக ஒரு பதில் கூறி விட்டான்.

கருணாகரன் மனதில் “ஹப்பாடா ஒரு வழியா சொல்லியாச்சு. இந்த அம்மா என்ன சொன்னாலும் நம்பும். ஆனால் இந்த முல்லை எதுனாச்சும் எடுத்துக் கொடுத்துட்டால் அவ்வளவு தான்” என்று நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

முல்லைக்கு தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக வெள்ளந்தியாக இருக்கும் அம்மாவைக் கண்டாள். தன் அம்மா நம்பி விடுவாரோ என்று முல்லை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே
“பாருடி, இப்படி மூணாவது மனுசனுக்கு இருக்கிற இரக்கம் கூட உங்க அண்ணனுக்கு இல்லை.அவன் பொண்டாட்டி அவ்வளவு கத்துறா அமைதியா எல்லாத்தையும் கேட்டுட்டு வீட்டுக்குள்ளே இருக்கான். எல்லாம் நேரம். நீங்க பிறந்த வயித்துல தான் அவனையும் பெத்தேன். அவன் மட்டும் ஏன் இப்படி இருக்கான். கடவுளே “அழுது புலம்பி கொண்டிருந்தார் அவர் பாட்டிற்கு.

நாச்சியார் கத்தலில் தூக்கம் கெட்டு சென்மொழி வெளியில்  வந்தாள். முல்லைக்கும் தர்ம சங்கடமாக இருந்தது. எவரேனும் வந்து திட்டு விடுவாரோ என்று. ஏனென்றால், இது காலனி .பக்கத்தில் தான் வீடு இருக்கும். இரவில் இவ்வாறு கத்துவததோடு கருணாகரனும் வீட்டில் இருப்பதால் பிரச்சனை வருமோ என்று கையை பிசைந்து கொண்டு நின்றாள்.

இவளுக்கே  இப்படியென்றால் கருணாகரனுக்கு போதையே தெளிந்து விட்டது. ஏனடா வந்தோம் என்று ஆகிவிட்டது. இவர் கத்துவதால் எங்கு தன் குட்டு வெளிப்படுமோ  என்று அவனுக்கும் கிலி உண்டாகி விட்டது.

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். அந்நேரம் திடீரென்று  கருணாகரனின் கதவை யாரோ அறைந்து சாத்தியது போன்று இருந்தது. இதைக் காரணமாக வைத்து கருணாகரன் ஓடியே விட்டான்.

“அம்மா, அந்தாள நம்பாத. அவனும் அவன் பார்வையும். சரியே கிடையாது மா!” கதவை சாத்திவிட்டு சென்மொழி பொங்கி கொண்டு கூறினாள்.

“ஆமாடி, எவனையும் நம்பாத உன் அண்ணணை நம்பு உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துருவான்” கண்ணை கசக்கி முந்தானையில் துடைத்து அழுது கொண்டே கூறினாள்.

“அய்யோ, ஏண்டி ஆரம்பிச்ச ? போச்சு இதோட இந்த அம்மாவும் தூங்காமா நம்ம தூக்கத்தையும் கெடுக்க போகுது ?” என்று முல்லை புலம்ப அதை ஆமோதிப்பது போல் தலையை அசைத்த சென்மொழி “இந்தாம்மா உன் சீம புத்திரனை திட்டினது போதும் .போய் தூங்கு. எல்லாருக்கும் நாளைக்கு வேலை இருக்கு ” என்று சென்மொழி   அன்னையை அதட்டி தூங்க சென்றவள் தன் அக்காவையும் இழுத்து கொண்டு சென்று விட்டாள் அறைக்கு.

உள்ளே வந்தவள் அறையை சாற்றி விட்டு படுக்க வந்தாள் சென்மொழி. “ஏய், அம்மா பாவம்டி. தனியா அழுதுகிட்டு இருக்கு” முல்லை இரக்கத்தோடு கூறினாள்.

“நம்மளா அழுக சொன்னோம் .நீ சொன்ன  ஒரே காரணத்துக்குத் தான்  அந்த வாயாடிட்ட பேசாம அமைதியா இருக்கேன். இன்னைக்கு எவ்ளோ பேசுது. பொறுமை கொஞ்சம் கொஞ்சமா காத்துல பறக்குது “சென்மொழி படபடவென பொறிந்து தள்ளினாள்.

சென்மொழியின் குணம் அறிந்தே முல்லையும் நாச்சியாரும் மஞ்சுளா பேசுவதற்கு சென்மொழி பேசும் முன்  இவர்கள் பேசிவிடுவார்கள். அவன் அண்ணுக்கும் தெரியும் என்பதால் மஞ்சுளா சென்மொழியிடம் பேசினாலே வெளியில் வர மாட்டான். இது எதுவும் தெரியாமல் மஞ்சுளா சென்மொழியை ஒவ்வொரு முறையும் பிள்ளைபூச்சி அமைதி என்று நினைத்து இவளையே திட்டுவாள்.

இவ்வாறு முல்லையும் ,சென்மொழியும்  பேசிக் கொண்டிருந்த நேரம் கருணாகரன் அவன் வீட்டை திறந்தான். “அய்யோ, நம்ம இன்னைக்கு ஏதாச்சும் செய்து முல்லையை வழிக்கு கொண்டு வரலாம்னு போனா இந்தம்மா பேசிப் பேசியே போதையையும் இறக்கி தலை வலியும் வர வச்சிடுச்சு. ஹப்பா, எப்படி தான் புருஷன் இருந்தானோ? ஒரு வேளை அதனால தான் போய்டான் போல …..” என்று அவன் கூறி முடிப்பதற்குள் அவன் முதுகில் சுளிரென்று ஒரு அடி விழுந்தது போல் இருந்தது. திரும்பி பார்த்தவன் அரண்டு விட்டான்.

“உங்களை போல் ஜென்மங்கள் ஏன் இன்னும் உயிர் வாழ்கின்றனர்? இறந்து விடு மூடரே ” என்று ஒரு அசிரீரி அவன் காதில் ஒலிப்பது போல் இருந்தது. அதில் பயந்து நடுங்கி உடல்கள் முழுவதும் வேர்த்து விட்டது. அப்பொழுது தான் ஞாபகம் வந்தது முல்லை வீட்டில் இருக்கும் பொழுது நம் வீட்டின் கதவு அறைந்து சாத்தியது போன்று சத்தம் கேட்டது.

அப்பொழுது தான் அவனுக்கு தைரியம் வந்தது. “எவனோ நம்மள பயப்பட வைக்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு விளையாடுறான். இன்னிக்கு அவனை வெளுத்து உப்பு கண்டம் ஆக்குறேன் ” என்று மனதில் நினைத்து கொண்டு கைலியை தூக்கி கட்டிக் கொண்டான்.

“வாடா, இப்ப வாங்கடா முன்னாடி! ஏற்கனவே அடி வாங்குனவனா இல்ல புதுசா ? ஒருத்தனா நிறையா பேரா? வாங்கடா முன்னாடி? உண்மையான ஆம்பளனா வாடா ? மீசை உள்ளவனா வாடா? அந்த பொம்பளையைப் பத்தி பேசுனா உனக்கு என்னடா? அது  ஒரு முத்தினது. அதுக்கு போய் வக்காலத்து வாங்குற ? ” என்று இன்னும் தகாத வார்த்தைகளை சொல்லி கொண்டிருந்தவன் திடீரென்று தடுக்கி கீழே விழுந்து மயங்கி விட்டான்.

மயங்கிய கருணாகரனை பிரம்பால் அடித்து வெளுத்தது ஒரு உருவம். அதை தடுத்தது ஒரு இளந்தென்றல் காற்று. அதில் தனது ஆக்ரோசத்தை குறைத்தது அந்த அகோர பெண் உருவம். காற்றின் மூலம் வந்த ஆண் ஆன்மா கருணாகரனை சுற்றி ஒரு புகை வளையம் உருவாக்கி அதில் சிவ மந்திரம்   அடி வயிற்றிலிருந்து உச்சரித்து அவனின் நினைவுகளில் இந்நிகழ்ச்சிகளை அழித்தது. பின்பு , பெண் ஆன்மாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டது.

இவை அனைத்தையும் மறைந்திருந்து ஒரு உருவம் பார்த்து விட்டு சென்றது.

கருணாகரன் கடினப்பட்டு தன் கண்களைத் திறந்தான். யாரோ தூரத்தில் தன்னை அழைப்பது போல் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவு பெற்று எழுந்த பொழுது அவன் உடல் படுமோசமாக வலித்தது. தலையும் கணப்பது போல் இருந்தது.  கண்களை  திறந்து திறந்து மூடி சூரியன் வெளிச்சத்திற்கு பழக்கப்படுத்தி கொண்டான்.அப்பொழுது தான் தெரிந்தது அவனுக்கு தான் வீட்டில் தான் இருக்கிறோம் என்று. கதவைத் தட்டும் சத்தமும் நன்றாக உணர முடிந்தது அவனால்.

அவன் சிரமம் கொண்டு எழ முயன்ற பொழுது  அவன் கால்கள் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. திரும்ப திரும்ப முயன்று எழும் சமயம் கதவை உடைத்து ஒரு கும்பல் நுழைந்தது.

ஏற்கனவே தலை வலி இருந்ததில் கண் இருட்டி கொண்டு வந்தது. யாரோ அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். தன் கன்னத்தை தட்டுவதும் தெரிந்தது. வாயில் தண்ணீர் ஊற்றியப் பின் தான் தெரிந்தது அவனுக்கு தன் தொண்டை வற்றி இருப்பதும், பசி வயிற்றை கிள்ளுவதும்.

ஒரு வழியாக சுயநினைவு பெற்று கண்முழித்து தெளிவாக பார்த்தான். தூரத்திலிருந்து யாரோ அழைப்பது போல் இருந்த குரல் இப்பொழுது நன்றாக அருகில் கேட்டது. அக்குரலின் சொந்தக்காரன் தன் கடையில் வேலை செய்யும் வேலன் என்று தெரிந்தது.

“அண்ணா, என்னாச்சு? ஏன் இப்படி இருக்கீங்க ? எவ்ளோ நேரம் கதவை தட்டினோம் ? ” என்று பதறிக் கொண்டு அவன் கூறிக் கொண்டே போக “தண்ணீர் வேணும். பசிக்குது! எதாச்சும் சாப்பிட தா!” என்று குரல் தழுதழுக்க கூறினான் கருணாகரன்.

பத்து நிமிடத்தில்  அவன் வாயில் எலுமிச்சை சாறு இறங்குவது தெரிந்தது. வறண்ட தொண்டைக்கு இதமாக இருந்தது.
அடுத்து சில நிமிடங்களிலேயே  சாம்பார் வாசனை நாசியில் ஏற இட்லி வாயில் இறங்கியது. நான்கு இட்லி உண்டு முடித்த பின்னே நன்றாக சுயநினைவுக்கு வந்தான்.அதன் பின்னே நன்கு உணர்ந்தான் அவன் உடலின் எரிச்சலை.

நன்றாக விழித்தவனை வேலன் திரும்பவும்   கேள்விகளால் துளைக்க எரிச்சல் தாங்காமல் “தயவு செய்து என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போ முடியல? “என்று துடிதுடித்தான். அதை பார்த்து பெண் ஆன்மா அகங்காரமாக சிரித்தது.

அப்பொழுது முல்லை ஓடி வந்தாள் எங்கிருந்தோ எடுத்து கொண்ட வந்த இலைகளோடு . அதை குளிர்ந்த நீரில் நனைத்து அவன் மேல் போர்த்தினாள் .

அவனைக்கு உதவி செய்த முல்லையை பார்த்து அந்த ஆன்மா தனது கார் நிற அருவி போன்ற முடி விரிந்து ,கண்கள் சிவந்து, கண்களில் இருந்து  ரத்தம் வடிந்து, கூரிய நகங்களால் தன் உடலையே கீறி  உடல் முழுவதும் ரத்தம் வந்து, சிங்கம் போன்ற பற்களைக் கடித்து தன் கோபத்தை கட்டுபடுத்தாமல் கத்தியது. அக்கத்தலில் கருணாகரனுக்கு இன்னும் அதிகமாக எரிந்தது.

அவன் கத்திகொண்டே அந்த இலைகளை தூர வீசினான். அது தீப்பற்றி எரிந்தது. அதிர்ந்து அக்காலனியில் உள்ள அனைவரும் முல்லையை பார்த்தனர்.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்