Loading

குமரி – 10

வேலன் கருணாகரனிடம் வேலை செய்பவன். பெற்றவர்கள் இறந்தவுடன், கூடப்பிறந்தவர்களால் துரத்தப்பட்டு, பசிக்கு கருணாகரனிடம் வேலை செய்தவன், அவனின் நம்பிக்கையையும் பெற்றான்.

நன்றாக  இருந்தவன் முல்லை இக்காலனிக்கு வந்தவுடன், அவனுக்கு அசரீரி கேட்டுக் கொண்டே இருந்தது. அதனைக் கண்டு பயந்து கொண்டிருந்தான். ஆனால், அது இவனுக்கு புரிய வைக்க முற்பட்டது. அதை இவன் கண்டு கொள்ளாமல் இருக்க கோவிலுக்கு சென்று கயிறு கட்டிக் கொண்டான். அதன் பின் இவனை  அவ்வான்மாக்கள் அணுக முடியவில்லை.

பின்பு, ஒரு நாள் இன்பா இறந்ததாக செய்தி வந்தது. எங்கோ பேருந்தில் பயணம் மேற்கொண்ட பொழுது அவன் விபத்தில் சிக்கி இறந்ததாக செய்தி வந்தது. ஆனால், ஒரு இரவுப் பொழுது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்த பொழுது இன்பா நின்றுக் கொண்டிருந்தான்.

அவன் அதிர்ந்து கதவை மூட முற்பட, இன்பா தான் அதை தடுத்து வீட்டினுள் நுழைந்தான்.வேலனை அமைதிப் படுத்தி, அவ்வான்மாக்கள் யார் என்றும், எதற்காக அவனை துரத்துகிறது என்றும் விளக்கமாக அவனிடம் கூறினான்.

அதன் பின், அக்கயிறை அவன் கழற்ற, இரு ஆன்மாவும் முன் வந்து வேலனைப் பார்த்து தலை வணங்கியது.பின்பு, வேலனுக்கு சில ஞாபகங்கள் கொண்டு வந்து, அவனின் குணாதிசயங்களை வெளியில் கொண்டு வந்தது. அதிலிருந்து அனைவரும் ஒன்றாக செயல்படுகின்றனர்.

இன்பா விபத்தில் சிக்கி சாகவே இல்லை. இல்லாத கணக்கை காண்பித்து அவன் கருகியதாக மருத்துவமனையில் கூறியதும், கையில் பணம் இல்லாததால் அழுத்தி அவர்களிடம் அடுத்து கேட்க முடியாத சூழலில் இருந்ததால் அவர்கள் கூறுவதை ஒப்புக் கொண்டு கண்ணீர் மட்டுமே விட முடிந்தது அவர்களுக்கு. கணவனும் அல்லாது, மூத்த மகனின்  புறக்கணிப்போடு, இளைய மகனின் இழப்பும் நாச்சியாரின் உடலில் ஆட்டம் கண்டது. இருந்தும் மகளுக்களுக்காக என்று தன்னை தேற்றி எழும்பி விட்டார்.

வேலூரில் கருணாகரனை விடுவித்து இவர்களை தேடி கண்டுபிடித்து வருமாறு அனுப்பி விட்டான். இன்னொரு காவலனை விடுவித்து செழியனை தேடுமாறு அனுப்பி வைத்தான் அத்தலைவன்.

கருணாகரன் தேடினானா இல்லை மேம்போக்காக தேடி விட்டு இல்லை என்று கூறினானா என்று தெரியவில்லை, அந்த காவலன் வங்கியில் ஆள் வைத்து எந்த கிளையில் உள்ளான் என்பதை கண்டுபிடித்து விட்டான். அத்தலைவனிடம் வந்து செழியன் மத்தக்கிரியில்  உள்ள கிளையில் வேலை பார்ப்பதாக கூறினான்.அவன் கூறியவுடன், மத்தக்கிரிக்கு பயணம் மேற்கொள்ள முற்பட்டனர்.

அத்தலைவன் ஒசூரை அடைந்த சமயம் போன் வந்தது கருணாகரனிடம். இவன் எதுக்கு கூப்பிடுகிறான் என்று எரிச்சலோடு எடுக்க, இன்பமான செய்தியை பகிர்ந்தான் அவன்.முல்லைக்கு தருமரி ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள எஸ்டேட்டில் வேலைக் கிடைத்ததாக  என்றோ ஒரு நாள் நாச்சியார் கூறியதாக கூறினான். அதை வைத்து ஓசூரை தொடும் முன்பு, அவர்களை பிடிக்க தருமபுரி நோக்கி பயணப்பட்டான்.

அதே சமயம் ஒசூரில் கையில் கிட்டுடன் மஞ்சுளா கண்ணீர் மல்க நின்றுக் கொண்டிருந்தாள். கரு உருவாகியதற்கு மகிழ்வதா இல்லை கணவன் என்ன கூறுவானோ என்று பயப்படுவதா என்று நினைத்து குழம்பி கொண்டிருந்தாள். ஆண் ஆன்மா அவளைப் பார்த்து சிரித்தது. ஏனென்றால்,  மஞ்சுளாவின் சிசுவாக உருவாகியது அந்த பெண் ஆன்மாவே. இதுவும் ஒருவருடைய உத்தரவின் படி நடந்து கொண்டிருக்கிறது.

🌿🌿🌿🌿🌿

அந்த வர்ணனையான வத்தல் மலையில்  ஆலயத்தில் முல்லை, சென்மொழி, ஆசன், செம்பியா நால்வரோடு ஆண் ஆன்மா சிவபெருமானின் ஓமநமசிவாய மந்திரத்தை 1008 முறை உச்சரித்து யாகம் மேற்கொண்டனர். மீதமுள்ள பாரி, அரசி மற்றும் நாச்சியார் மயக்க நிலையில் இருந்தனர்.

அதே நேரம் வேறு ஒரு இடத்தில் இத்தகைய யாகத்தை அளிப்பதற்கு வேறு ஒருவன் இதே மந்திரத்தை மாற்றி சிவாய நம ஓம் என்று 1008 முறை உச்சரித்து கொண்டிருந்தான்.

இரண்டு மணி நேர யாகத்திற்கு பின் ஆன்மா அம்மைக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்தது.பின்பு, சென்மொழி ஆரத்தி காண்பிக்க, முல்லை அமைதியின் சொருபமாக வேடிக்கை பார்த்தாள். அனைத்தும் முடிந்து ஆன்மா மூவரையும் எழுப்பியது. துயில் கலைந்தது போன்று இருந்தது மூவருக்கும்.

ஆனால், அரசிக்கு மட்டும் சந்தேகம் எழுந்தது. செம்பியாவின் பார்வையில் வித்தியாசம் தெரிந்ததை உணர்ந்தாள். தாயைப் போல் வளர்த்தவள் ஆயிற்றே. வித்தியாசத்தை கண்டுக் கொண்டாள்.

பின்பு, அவர்களை வழியனுப்பி விட்டு இவர்கள் நால்வரும் குடில் நோக்கி வந்து கொண்டிருந்தனர். முன்னால் ஆசனும், பாரியும் செல்ல, பின்னால் அரசியும், செம்பியாவும் சென்றனர். அரசி எவ்வாறு பேச்சை தொடங்குவது என்று யோசித்துக் கொண்டே வந்தார்.

அதனை உணர்ந்து செம்பியாவே தமக்கையிடம் கேட்டான் ” என்னிடம் ஏதாவது கேட்கனுமா? “

இதற்கு மேல் என்ன தயக்கம் என்று “செம்பியா, நான் உன்னை என் தம்பி போல பார்க்கல. அது உனக்கே தெரியும். ” என்று புதிர் போட, செம்பியா குழம்பி விட்டான்.

“அது தான் தெரியுமே அக்கா” என்று செம்பியா கூற, “நான் சொல்றதை முழுசா கேளு. உனக்கு எல்லாமே சிறப்பா  கிடைக்க நான் என்னைக்கும் உனக்கு உறுதுணையா நிப்பேன். நீ தான் தேர்ந்தெடுத்த ஆசனோட சிஷ்யனா இருக்கேனு. எனக்கு இல்லற வாழ்க்கை வேணாம்னு ” என்று கூறிய நொடி தரையை பார்த்து நடந்து கொண்டிருந்த செம்பியா அதிர்ச்சி ஆகி அரசியைப் பார்த்தான்.

அதை குறித்துக் கொண்ட அரசி எச்சிலை விழுங்கி ” ஒரு தடவை முடிவு பண்ணால் மாற கூடாது செம்பியா. உன் ஆசைகளை விட உன் உயிரே எனக்கு முக்கியம். நீ சென்மொழியை மறந்திடு ” என்று கூறிய மறு நொடி படியின் ஒரத்தில் உள்ள செடிகள் சலசலத்தது. ஏதாவது ஊர்வன ஊர்ந்து செல்கின்றது என்று நினைத்துக் கொண்டாள் அரசி.

ஆனால், அதற்கான காரணம் அவ்வான்மா சிரித்ததே. அது செம்பியாவை பார்த்து ஏளனம் செய்தது. அதை பார்த்து முறைத்து விட்டு, என்றும் கோபமே கொள்ளாதவன் இன்று தன் தமக்கையிடம் கோப முகத்தை காட்டியதோடு “இதே மாதிரி போய்  மச்சான் கிட்ட சொல்லிடாத . மச்சான் ஆசன் கிட்ட போய் சொல்லிடுவாரு.நான் சென்மொழியை பாக்குற விதம் வேற . நான் நேரம் வரும் பொழுது சொல்றேன்.எனக்கு இல்லற வாழ்க்கையில ஈடுபாடு இல்லை. அதுல மாற்றமும் இல்லை ” என்று கூறி விறுவிறுவென நடந்து ஆசன் மற்றும் பாரியுடன் பயணத்தை மேற்கொண்டான்.

🌿🌿🌿🌿🌿

மலைகளுக்கு நடுவே  சீர் செய்யப்பட்ட தேயிலை எஸ்டேட் ஒரு புறமும், மொத்த வண்ணமும் சீராக கொட்டி  கிடப்பது போல் பூக்கள் பூத்து குலங்கின மறுபுறத்தில். பார்க்கவே ரம்மியமாக இருந்தது. அதற்கு நடுவில் கல்லால் ஆன ஒரு  இரண்டு மாடி கட்டிடம்.  அதை சுற்றி நாலாபுறமும் அதே போல் இரண்டு மாடி கட்டிடம்.

அந்த கட்டிடத்தை நெருங்கும் பொழுது தான் தெரிந்தது வலது புறத்தில் ஒய்யராமாக விற்றிருந்தது ஒரு மாளிகை. அக்காலத்தில் ஆங்கிலேயர்களின் கலையோடும்  , நம்மனுடைய அரசக் காலத்தில் உள்ள கலையோடும் கலந்து புது விதமாக இருந்தது அம்மாளிகை . பூக்களில் மழை  தூறல் சிதறியது போல், ஆங்காங்கே சிறு சிறு ஓட்டு வீடுகள் இருந்தது.

எப்படி இவ்வளவு அழகாக அமைக்க முடியும் என்ற ஆச்சரியத்தோடு பயணப்பட்டனர் மூவரும். துணைக்கு வந்தவன் தான் சுற்றியுள்ள அனைத்து விஷயங்களை பற்றியும் கூறிக் கொண்டே வந்தான். ஆனால், அவை யாவும் அக்கட்டிடத்தை நெருங்கும் சமயம் முல்லையின் காதில் விழுகவில்லை. ஏனென்றால், அங்கு நின்றுக் கொண்டிருந்தது மகாராணி ராணி சேரியின் உருவம் கொண்ட பெண்மணி. நெருங்க நெருங்க பயம் நெஞ்சை கவ்வியது. அதற்கு எதிர்மாறாக சென்மொழி புன்கையுடன் அவரை நோக்கி பயணித்தாள்.

அவர் அருகில் இருப்பவரிடம் ஏதோ வேலை விஷயமாக பேசிக் கொண்டிருந்தார். அவரை நெருங்கியவுடன், துணைக்கு வந்தவன் வேகமாக “குட் மார்னிங் அம்மா ” என்று பணிவாக கேட்டான். கம்பீரமான தோரணையுடன் அவனை நிமிர்ந்து பார்த்து தலையசைத்து விட்டு அருகில் இருப்பவர்களை புருவ முடிச்சுகளோடு பார்த்தார்.

துணைக்கு வந்தவன் தான் ” அம்மா, எஸ்டேட்க்கு வேலைக்கு வந்து இருக்காங்க. கையில கடுதாசி வச்சிருக்காங்க ” என்று கூறியவுடன் கூரிய பார்வையால் பார்த்தார் இந்திராணி.

அதனை புரிந்து கொண்டவன் “இல்லைம்மா வழி தெரியாம நீரோடை பக்கம் வந்துட்டாங்க. அதோட அவங்க மயங்கி விழுந்ததால ஒரு நாள் அங்க தங்குனாங்க மா ” என்று விளக்கம் கொடுத்தான்.

சொன்னவுடன் முல்லையிடம் திரும்பி கைகளை நீட்டினார். புரிந்து கொண்டு அப்பாயின்மெண்ட் ஆர்டரை கொடுத்தாள். பிரித்து பார்த்தவர், தனது போனை உயிர்பித்து யாரையோ இங்கு அழைத்தார். ஐம்பது வயது மிக்க ஒரு மனிதர் வந்தார். அவரிடம் முல்லையை அறிமுகப்படுத்தி வேலையைப் பற்றிக் கூற சொன்னார்.

பின்பு, முல்லையிடம் “இன்றே வேலையில் சேர்ந்துவிடு . உங்க அம்மாவை குவார்டர்ஸில் விட சொல்லுறேன். ஈவினிங் கணக்கு பிள்ளையை கேட்டீனா வழி சொல்லுவாரு. ” என்று கூறி ஐம்பது வயது மிக்க கணக்கு பிள்ளையிடம் திரும்பி பாலகுமரன் சார், இவர்களுக்கு வீடும், இந்த பொண்ணுக்கு வேலை பத்தியும் சொல்லிடுங்க” என்று கூறி கிளம்ப எத்தனிக்கும் நேரம், சென்மொழி அழைத்தாள்.

என்ன என்று பார்க்க , “நான் பி.எஸ்சி கம்யூட்டர் செகண்ட் இயர் படிச்சுட்டு இருந்தேன். எனக்கு ஏதாச்சும் வேலை இருக்கா? ” என்று கேட்க , யோசித்த இந்திராணி பாலகுமரனை பார்க்க “அக்கவுண்ட்ஸில் ஆள் வேணும் அதே மாதிரி ரவி சாருக்கு பி.ஏ வேணும்” என்று கடகடவெனக் கூற , அரை நிமிடம் யோசித்து விட்டு பாலகுமரனை நோக்கி “ரவிக்கிட்ட அழைச்சுட்டு போங்க” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

அவர் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் முல்லை. எங்கோ நிம்மதியாக இருந்தால் போதும் என்று நினைத்து நாச்சியார் குவார்டர்ஸிற்கு சென்று விட்டார். முல்லையையும்  , சென்மொழியையும் அழைத்துக் கொண்டு ரவீந்தரிடம் சென்றார் பாலகுமரன்.

வாசலிலேயே முல்லையை நிற்க சொல்லி விட்டு ரவீந்தரிடம் சென்மொழியை அழைத்து சென்றார். கண்ணாடி கதவினுள்
உள்ளே கம்பீரமாக ஒருவன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். ஆணும் அழகு என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆப்பிள் நிற கலரில், சீராக டிரிம் செய்யபட்ட முடியை ஜெல் வைத்து அடிக்கி இருந்தான்.

தான் பக்கா பிஸ்னஸ் மேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக இக்கால இளைஞர்களின் ஆயுதமான தாடியை  மொத்தமாக ஷேவ் செய்து,  தமிழ்நாட்டிற்கே உரிய மீசையை மட்டும் அளவாக வைத்து, நகங்கள் முதற்கொண்டு சீராக வெட்டி, வெள்ளை நிற முழுக்கை ஆடை அணிந்து, அதன் மேல் டிஷர்ட் போன்ற காலரில்லா ஸ்வெட்டர் அணிந்து, சட்டையின் காலரை வெளியே தெரியும்படி வைத்து , கையில் ரோலக்ஸ் வாட்ச் அணிந்து  இருந்தான்.இட காதில் கடுக்கன் மின்னியது. அவனை காணக் காண திகட்டவில்லை சென்மொழிக்கு.

கதவை தட்டி உள்ளே இருவரும் நுழைய, சென்மொழியை கண்டு அதிர்ந்தான் எதிரில் அமர்ந்திருந்த ராகவேந்தர்.

கீர்த்தி☘️

நான் குறிப்பிடும் கடவுள், ஊரின் பெருமை, நாட்டை குறிப்பிடுவது, மதத்தை குறிப்பிடுவது  அனைத்தும் கற்பனையே. என் மனதிற்கு தோன்றியதை எழுதியுள்ளேன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்