Loading

குமரி – 11

ரவீந்தரை பார்த்து கொண்டே வந்தவள் ராகவேந்தரை கவனிக்கவில்லை. ராகவேந்தர் வேகமாக எழுந்து “மொழி என்ன இங்க ?” என்று கூறிய பிறகே அவள் ராகவேந்தரைக் கண்டாள்.

கண்டவள் அதிர்ந்து விட்டாள். இவனுக்கு தெரிந்தால் காலேஜுக்கு தெரிந்து விடும். அதன் பின், கடன் கேட்டவர்களோ, கருணாகரனுக்கோ தெரிய வாய்ப்பு வருமே என்ற பயம் அதிகரித்தது அவனுக்கு. அவளின் பயம் தேவையில்லை என்பது போல் திடீரென்று ஒரு பட்சி கண்ணாடியால் ஆன ஜன்னலில் அடித்தது. அதில் சுய நினைவு பெற்று மனதை நிலைப்படுத்தினாள்.

பின்பு, “சீனியர்  நம்ம அப்புறம் பேசலாம். இப்போ நான் வேலைக்கு வந்துருக்கேன்” என்று கூற , ராகவேந்தர் விடாமல் “நீ இன்னும் காலேஜே முடிக்கல. அப்புறம் எப்படி வேலை? ” என்று கேட்டவுடன், இவ்வளவு நேரம் அமைதியாக இவர்களின் சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பாலகுமரனை பார்த்தான்.

” மேம் தான் சார் உங்கக்கிட்ட கூட்டிட்டு போக சொன்னாங்க ” என்று அவர் கூறியவுடன், “அதை தான் அம்மா சொன்னாங்களே ” என்று கூறி அவன் அன்னைக்கு அழைத்தான்.அவன் அன்னை என்ன கூறினாரோ தெரியவில்லை. அவளிடம் இன்டர்வியூ எடுக்க அமர வைத்தான்.

இதன் பின் தனக்கு வேலை இல்லை என்று நினைத்து  விட்டு இருவருக்கும் பொதுவாக வணக்கத்தை  வைத்து விட்டு வெளியேறினார் பாலகுமரன்.

ரவீந்திரன் அவளைப் பற்றி கூற சொல்ல, அனைத்தும் தெளிவாக கூறினாலும் ராகவேந்தரை கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே கூறினாள். அதைக் குறித்து கொண்டான். இருந்தும் அவளின் பேச்சு தனக்கு பிடித்தமையால் ராகவை வெளியே இருக்க சொல்லி விட்டு இன்னும் சில கேள்விகள் கேட்டான். அனைத்துக்கும் தெளிவாக பதில் கூறியதால் அவளை தேர்ந்தெடுத்தான்.

“நாளைக்கு காலை ஷார்ப்பா எட்டு மணிக்குலாம் இங்க இருக்கணும் புரியுதா!” என்று கூறி விட்டு அவன் வேலையை செய்யத் தொடங்கினான். சிறு நிமிடத்திற்கு பிறகே ஏதோ தோன்ற, நிமிர்ந்து பார்த்தான். இன்னும் அங்கேயே இருக்கும் சென்மொழியை கேள்வியாக பார்த்தான்.

“சார், வேலை பத்திலாம் சொன்னீங்க சம்பளம் பத்தி சொல்லல? ” என்று சென்மொழி கேட்க, எழுதிக் கொண்டிருந்தவன் பேனாவை கீழே வைத்து விட்டு நிமிர்ந்து  உட்கார்ந்து “ஏன் மேடம் சம்பளம் பத்தி சொன்னா தான் வேலைக்கு வருவீங்களா? “என்று நக்கலாக கேட்டான்.

“இல்லை சார், தெரிஞ்சுக்கிட்டா எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் இல்லையா ! எனக்கு பத்துமா இல்லையானு தெரியனும் இல்லையா!” என்று அவன் நக்கலாக கூறுகிறான் என்று புரியாமல் பேசினாள். அவனுக்கு எரிச்சல் கூடியது.

கடுப்பில் தலையில் கை வைத்து “கெட் அவுட் “என்று கத்தினான். அதில் புரிந்து கொண்டு வேகமாக வெளியில் ஓடி வந்தாள். ரவி கத்திய சத்தம் வெளியில் இருக்கும் ராகவிற்கும் கேட்டது.பதறிக் கொண்டு ஓடி வந்தவன் கண்டது தலையில் கை வைத்து இருக்கும் ரவியைத் தான்.  சென்மொழி செல்வதை கண்டுவிட்டு ரவியின் அறைக்கு சென்றான்.

நிமிர்ந்து பார்த்த ரவி ராகவை முறைத்தான். ஏனென்றால், வந்ததிலிருந்து ராகவ் சிரித்து கொண்டிருந்தான். “நான் வேற நினைச்சேன் அண்ணா. பாவம் அந்த பொண்ணு. உன்கிட்ட போயா மாட்டனும்னு .அப்படினு நினைச்சு காப்பத்தலாம்னு அவளுக்கு கண் ஜாடை காமிச்சேன். நம்ம ஜூனியர் ஆச்சேனு . ஆனால், அவ வேற லெவல். உன்னையே டென்சன் பண்ணிட்டா! ஹா ஹா” என்று கூறி வயிற்றை பிடித்து சிரித்தான்.

அவனையும் திட்டி வெளியேற்றி விட்டு ரவி தன் வேலையை பொறுப்புடன் பார்க்க ஆரம்பித்தான். வெளியில் சென்ற சென்மொழியை தேடி  கொண்டிருந்தான் ராகவ் .

முல்லையை பூக்கள் கொட்டிக்கிடக்கும் அக்களத்திற்கு ( ஃபீல்ட்) அழைத்து சென்றார். அவள் அனைத்தையும் பார்த்து விட்டு, குறிப்பு எடுத்துக் கொண்டாள். அங்கு வேலை செய்யும் அனைவரும் பழங்குடியினரே. பின்பு, அவளை ஆலையத்துக்கு (ஃபேக்டரி) அழைத்து சென்றார். எவ்வாறு பூக்கள் உபயோகிக்கின்றனர், எத்தகைய பூக்களின் பாகம் மருந்தாக மாறுகின்றது, எந்தெந்த பூவிலிருந்து எந்தெந்த மருந்து எடுக்கின்றனர் என்று ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்தாள். அதோடு குறிப்பும் எடுத்துக் கொண்டாள்.

பின்பு, அதனை நோட்டில் கணக்காக எழுதியிருப்பதை காண்பித்தார். புருவ முடிச்சுக்களோடு பார்த்தவள் அதையும் குறித்துக் கொண்டாள். பாலகுமரனை “கூப்பிடுறேன் சார்” என்று கூறி விட்டு அந்த நோட்டை அரைமணி நேரமாக அலசி ஆராய்ந்து குறிப்பாக எடுத்துககொண்டாள். புரியாததை கணக்கரிடம் கொண்டு சென்று சந்தேகத்தை தீர்த்து கொண்டாள்.

இவை அனைத்தையும் இந்திராணி அவரின் அறையிலிருந்து கேமரா மூலம் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அனைத்தையும் முடித்து விட்டு, பாலகுமரனிடம் போய் நின்றாள். “என்னாம்மா ஏதாச்சும் சந்தேகமா? “என்று பாலகுமரன் வினவ, ” இல்லை சார் ! எனக்கு என்ன சார் வேலை? ” என்று முல்லைக் கேட்டவுடன்,சிரித்துக் கொண்டே “இத தானம்மா நீ முன்னாடி கேக்கணும் !நீயா ஏதேதோ பண்ணுற.அம்மா எல்லாத்தையும் கேமரால பாத்துட்டாங்க போல. உன்ன வரச் சொன்னாங்க ” என்று கூறினார்.

முல்லைக்கு அவரை சந்திக்கவே மிகவும் பயமாக இருந்தது. அவரை பார்க்கும் போதெல்லாம் அந்த கோர சம்பவமே ஞாபகத்திற்கு வருகின்றது. இருந்தும் வேறு வழியில்லாமல்  அவரை சந்திக்க முற்பட்டால். மருத்து தயாரிக்கும் ஆபிஸிற்கும் ,மெயின் ஆபிஸிற்கும் இடையில் இரு மையில் தூரம் இருந்தது.

அதில் அவள் நடக்கும் பொழுது யாரோ ஒருவரை இன்னொருவர் பின்தொடர்வதை எதார்த்தமாக பார்த்தாள்.அதன்பின்பே, உன்னிப்பாக கவனித்தாள்  இருவரில் ஒருவர் சென்மொழி என்று.பின்னால் யார் செல்வது என்று அவனை நோக்கி செல்லும் நேரம் இந்திராணி அழைப்பதாக அவரின் பி.ஏ கூற, அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்று விட்டாள்.

உள்ளே நுழைந்ததும் . ஐம்பது வயது மிக்க மனுஷி என்று எவராலும் கூற முடியாதபடி கம்பீர தோரணையோடு அமர்ந்து கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். இவ்வயதிலும் இவ்வளவு ஆற்றலோடும், துடிப்போடும் இருப்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயமே. அப்பொழுது பார்த்தது போலேயே இருந்தது முல்லைக்கு.

அவள் வந்ததிலிருந்து இப்பொழுது வரை அவளின் முக பாவனைகளை அங்குலம் அங்குலமாக கவனித்து கொண்டிருந்தார். இருபது வருடமாக வீட்டினில் பிள்ளைகளுக்கு  தாயாகவும் , கணவனுக்கு மனைவியாக மட்டுமே இருந்து அவரின் வட்டம் சிறிதாக இருந்தது. எப்பொழுது கணவன் இறந்தாரோ அன்றிலிருந்து இன்று வரை தன்னை முழுதாக மாற்றிக் கொண்டார். தனக்கு முன் நிற்பவர்களின் மன நிலையை ஆராயும் திறனையும் வளர்த்துக் கொண்டார்.

அதனாேலேயே, முல்லையின் பார்வை தன் மேல் விழுவதை வெகு சீக்கிரமாகவே கவனித்து விட்டார். இருந்தும் ஒன்றும் கூறாமல் அவளே பேசட்டும் என்று அமைதியாக அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். பொறுத்து பொறுத்து பார்த்து முடியாமல் “மேடம் ” என்று அழைத்தாள்.

என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தார். “கூப்பிட்டாங்கலாம் மேம் ” என்று கூறியவுடன் கையில் இருக்கும் நோட்புக்கை கேட்டு கையை நீட்டினார்.அவள் யோசனையோடு அவர் கையைப் பார்க்க, பொறுமை இழந்து “நோட்பேடை தாம்மா ” என்று கூறியவுடன் உடனே கொடுக்காமல் அரை நொடி சிந்தித்து விட்டே கொடுத்தார்.அவளின் செயல் மெச்சுதலாக இருந்தது இந்திராணிக்கு .

அவளை அமரச் சொல்லிவிட்டு  பொறுமையாக அவளின் குறிப்புகளை பார்த்தார். படித்து முடித்தவுடன் வேலைக்கு சேர்ந்த ஆர்வத்தில் குறைகளை கண்டறிந்து எழுதவது போல் எழுதியிருந்தாள்.அதைப் படித்து விட்டு சிரித்துக் கொண்டே ” இதை இப்படி கையால எழுத முடியும். பிராக்டிகல்லா செய்ய முடியுமானு யோசிக்கனும் ” என்று நக்கலாகக் கூறினார்.

அவரை ஒரு நொடி ஆழப் பார்த்து விட்டு “ஒரு நாலு பேப்பருக்கு அப்புறம் பாருங்க மேம் “என்று கூறியவுடன் ஆர்வமே இல்லாமல் திருப்பி பார்த்தார். பார்த்தவர் மனதிலேயே மெச்சிக் கொண்டார். ஏனென்றால், கணக்குகளை பார்த்து அதற்கேற்ப செய்ய வேண்டிய மாற்றங்களை அட்டவணையில் போட்டு, விளக்கப்படத்துடன் (சார்ட்) பிரித்து
காட்டிருந்தாள்.

அமைதியாக பார்த்தவர் “குட் “என்று கூறி விட்டு, அவளின் நோட்பேடை அவளிடம் ஒப்படைத்து விட்டு வெளியில் நிற்க சொன்னார். பின்பு பி.ஏ வை அழைத்தார். பதினைந்து நிமிடத்திற்கு பின், புதிய அப்பாய்ன்மெண்ட் ஆர்டரோடு வந்தான் அப் பி.ஏ. அதைத் திறந்து பார்த்தவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. பூக்களில் மருந்து உற்பத்தி செய்யும் பிரிவில் மெம்ராக தேர்ந்தவள் இப்பொழுது அசிஸ்டென்ட் மேனேஜர் போஸ்ட் கிடைத்தது.

அச்சந்தோஷத்தோடு வெளியில் வந்து பார்த்தால், வேந்தன் நடந்து வந்து கொண்டிருந்தான். கால்கள் பின்னிக் கொண்டது.

“இவனைக் கண்ட நிமிடம் கொல்ல வேண்டும் என்று நினைத்தேனே. ஆனால், என்னை பயம் கவ்வுகிறதே. என்னை நானே கோழையாக்கிறேனே. வேண்டாம் மொழியாள். தைரியத்தை சேரு” என்று அவளுக்குள்ளேயே அவளுக்கு தைரியத்தை ஊட்டினாள்.

அவன் நெருங்க நெருங்க கண்கள் சிவந்தது. அவனை கொல்ல வேண்டும் என்கின்ற எண்ணம் இப்பொழுது துளிர் விட்டு தழையாகி, மரமாகி, வேராகி நிற்கிறது அவளுக்கு ஏதுவாக.

அவன் அவளிடம் நெருங்க  இருக்கும் அரை நொடியில் பின்னிருந்து இந்திராணி அழைக்க , வலதுபுறத்தில் இருந்து ராகவ் வந்து கொண்டிருந்தான். முக்கோணத்தில் மூவரையும் சந்தித்தவுடன் மனம் பின்னோக்கி சென்றது. கால்கள் பின்னியது. தலை சுற்றியது. கீழே சரிந்தாள். அவளை தாங்கி பிடித்தான் ரவீந்தர். ஆனால், அவள் கண் மூடும் சமயம் “வேந்தா , ரவி வேந்தா” என்று கூறி அவனின் கன்னம் தொட்டு மூர்ச்சையானாள்.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். வரலாற்று சிறப்பு மிக்க கதைக்கருவும், பழங்காலத் தமிழின் எழுத்து நடையும் அபாரம். படிப்பதற்கு மிகவும் இனிமையாகவும் அதே நேரம் பண்டைய கால தமிழின் சிறப்பை உணர்த்தும் விதமுமாக அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.