Loading

குமரி –  6

“எதுக்குமா விஷம் கலந்த? ” என்ற ஆதங்கமாக கேட்டாள் முல்லை. சென்மொழி தட்டி விட்ட டம்ளரை விடப் போச்சே என்கிற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தவள் ,முல்லையின் கேள்வியில் கையை டம்ளர் போல் வைத்ததை எடுக்காமல் அப்படியே வைத்துக் கொண்டிருந்த தன் கையைப் பார்த்து விட்டு திரும்பி தன்  அன்னையைப் பார்த்தாள்.

ஏற்கனவே தலைவலி வேறு இருந்தது, மேலும் அவர் அழுது கொண்டிருப்பது  இன்னும் எரிச்சலூட்டியது அவளுக்கு.”தலைவலி போற மாதிரி காபி போடச் சொன்னா, உயிர் போற மாதிரி காபி போட்டுட்டு அழுக வேற செய்ற “என சென்மொழி எரிச்சலோடு கேட்டாலும் தேம்பி தேம்பி அழுது கொண்டேதான் இருந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் “எதுக்கு இப்போ அழுகுற , என்ன நடந்துச்சு இப்போ?” மேலும் கடுப்போடு கேட்டாள் சென்மொழி.

முல்லை தான் சென்மொழியை அடக்கி விட்டு தன் அன்னையிடம் “அம்மா, நகை போகுதேனு வருத்தபடுறீங்களா? விடுங்க மா , பாத்துக்கலாம். எல்லா நகையுமா போகும். பத்து பவுன் தான் போகும். மீதி பதினைஞ்சு பவுன் இருக்கு இல்லையா. வருத்தப்படாதீங்க.” என அம்மாவை சமாதானம் செய்யும் பொருட்டு கூறினாள்.

இதைக் கேட்டு தலையில் அடித்து இன்னும் அழுதார். அதன் பின்னே, சென்மொழிக்கும், முல்லைக்கும் ஏதோ விபரீதம் உள்ளது என்று உணர்ந்தனர். பிரச்சனையின் தீவிரம் அவரின் அழுகையிலேயே தெரிந்தது. முல்லை மனதிலேயே தாள முடியாத துயரத்தை கொடுத்து விடாதே என்று அவசரமாக கடவுளுக்கு மனு போட்டாள்.

கடவுள் எனக்கு செவி ஒன்று இல்லை நீ என்னிடம் வேண்டி கொள்ளும் போது மட்டும் என்று நினைத்து அவரது வேண்டுதலை நிராகரித்து விட்டார். அதன் பயன் நாச்சியார் அழுது கொண்டே கூறினார் “உங்க அண்ணனை நம்பி இருபத்தி அஞ்சு பவுனையும் தூக்கி கொடுத்துடேன் டி” .

அதிர்ந்த விட்டனர் முல்லையும், சென்மொழியும். முல்லையின் கண்களில் வரும் கண்ணீரை காண முடியாத அந்த ஆண் ஆத்மாவும் “ஏன், என் அம்மைக்கு இப்படியொரு சோதனை . அவரைப் போல் நல்ல உள்ளம் அக்காலத்திலும், இக்காலத்திலும் இல்லை. பின்பு ஏன் இப்படி . அம்மை வேறு எனக்கு விதிமுறை வேறு இட்டுள்ளார். இல்லையெனில் ” என்று கடவுளிடம் மன்றாடியது.

பெண் ஆன்மாவோ ஒன்றும் கூறாமல் அவ்வீட்டை விட்டு வெளியேறி எங்கோ சென்றது. ஆண் ஆன்மா எப்பக்கம் செல்வது என்று புரியாமல் நிற்கும் பொழுது ஜன்னலின் வழி பார்த்துக் கொண்டிருப்பவனை கண்டு சிரித்து விட்டு தன் துணை நோக்கி சென்றது தன் அம்மையின் பாதுகாப்பிற்கு ஆள் உள்ளது என்ற திருப்தியில்.

🌨️🌨️❄️❄️❄️🌨️🌨️

பொன்னையார் ஆற்றின் கரையில் தமிழ்நாட்டின் மாநிலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கீழ் அடங்கியுள்ள தொழில்துறை நகரமான ஓசூர் நகரம். காலை ஒன்பது மணி அளவில்  நகரமே பரபரப்புடன் இருந்தது.

ஓசூரில் இருந்து இருபத்தி இரண்டு மணி நேர பயணத்தில் உள்ள ஊர் மத்திகிரி. அவ்வூரில் உள்ள ஒரு வீட்டினுள்ளே மஞ்சுளா வீட்டின் ஓரத்தில் அமர்ந்து அழுக , அவளை சமாதானம் கூட செய்யாமல் கீழே அமர்ந்து சுவற்றில் சாய்ந்து கைகளை நெற்றியில் வைத்து யோசித்து கொண்டிருந்தான் செழியன். நேரங்கள் கடந்து கொண்டே இருக்க, இவர்களின் பணிப்போர் மட்டும் நீடித்துக் கொண்டே இருந்தது.

அலைபேசியின் சிணுங்கலில் தான் கயநினைவு பெற்றனர் இருவரும். செழியன் அலைபேசியை எடுத்தவுடன்  அவனின் மேனேஜர் கத்த ஆரம்பித்து விட்டார். இவன் கெஞ்சி கூத்தாடி ஒரு லட்சத்தை அவருக்கு அனுப்பி விட்டு இவ்வூரில் வேலை கிடைக்க உதவி கோரினார். பணத்தை பார்த்துவுடன் மேனேஜர் முதலையும் ஒருவாரத்தில் அமைத்து தருகிறேன் என்று கூறி வைத்து விட்டார்.

அதன் பின்பு தான் செழியன் மனைவியைப் பார்த்தார். அவள் அழுவது தாங்கமுடியாமலா இல்லை எரிச்சலிலா என்று தெரியவில்லை தலையை நன்கு தேய்த்துவிட்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவள் காலைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.அவளின் அருகில் சென்று அவள் கையைப் பிடிக்க வெடுக்கென்று தள்ளி விட்டாள் மஞ்சுளா.

அதில் கோபம் எழ, செழியன் அவள் கையை மறுபடியும் கெட்டியாக பிடித்தது மட்டுமின்றி அதனை இன்னும் இறுக்கினான். இதனால், காற ஆரம்பித்தாள் மஞ்சளா . எங்கு சத்தம் அக்கம்பக்கத்தில் கேட்டு விடுமோ என்கின்ற பயத்தில் அவளின் வாயை மூடினான். “கொஞ்சம் அழுகையை நிப்பாடுறீயா. எதுக்கு இப்போ ஒப்பாரி வைக்கிற . வீடு கிடைச்சதே பெரிய விஷயம். இப்படி நீ அழுதா வெளிய போக சொல்லிடுவான் அந்த ஓனர் “

மஞ்சுளா வெடுக்கென்று நிமிர்ந்து “இப்போ நான் அழுகுறது தான் பிரச்சனையா ? ஹான் …. உன்னோட அமைதியையும், நேர்மையையும் பார்த்து தான் லவ் பண்ணேன். ஆனால்,  நீ இப்படி எல்லா இடத்திலையும் ஏமாத்தி என்னை இங்க கூட்டிட்டு வந்துருக்க? “

செழியன்  “எல்லாரையும் ஏமாத்துனதுக்கு வருத்தப்படுறீயா இல்லை உங்க அப்பாக்கிட்ட பொய் சொல்லி வாங்கின பத்து லட்சத்துக்கு வருத்தப் படுறீயா?” என்று நக்கலாக கேட்டான்.

மஞ்சுளா  ஒன்றும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். ஏனென்றால், நேற்று செழியன் அவன் அம்மாவிடம் பொய் சொல்லி வாங்கி வந்த இருபத்து ஐந்து பவுனை மஞ்சுளாவிடம் கொடுத்தவுடன் முகமே பிரகாசமாகியது. ” இவ்ளோ வச்சுக்கிட்டு தான் பந்த பாட்டு படிச்சுச்சுங்களா உன் ஆத்தாகாரியும், உன் கூடப்பிறந்தவங்களும் ” என்று அவர்களை சாடிக்கொண்டே கழுத்தில் போட்டுப் பார்த்தாள்.

செழியன் இது தான் சமயம் என்று  நண்பனிடம் வாங்கிய பணத்தை பற்றியும், வட்டிக்கு வாங்கிய பணத்தை பற்றியும் கூறினான். மஞ்சுளா அமைதியாக பார்த்தாள். தான் தான் அப்பணத்தை செலவு செய்து விட்டோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் “ஹாங்… வீட்டுக்கு தேவையான சாமான் தான் வாங்கியிருக்கேன். கல்யாணம் ஆனதிலிருந்து ஒரு புடவை கூட எடுத்ததில்லை. சம்பளமும் கம்மி. அப்போ நான் என்ன பண்ணுறது ? ” என்று அவள் நகையைப் பார்த்துக் கொண்டேக் கூறினாள்.

தான் இவ்வளவு பேசியும் ஒன்றும் கூறாமல் இருக்கிறானே என்று நிமிர்ந்த மஞ்சுளாவின் அருகில் வந்து அவளின் கன்னத்தை பிடித்து அவள் உதடோடு உதடு ஒரசி அவளை கட்டியணைத்து மோன நிலைக்கு கொண்டு சென்றாள். தனக்கு  வரும் சம்பளத்தில் குழந்தையெல்லாம் சாத்தியமே இல்லை என்று கூறியவன் இன்று இவ்வாறு செய்தவுடன் அவள் வேறு உலகிற்கே சென்று விட்டாள்.

“லஞ்சம் வாங்கி உன் ஆசைகளையும் திருப்தி படுத்தி, அவனுடைய வேலையையும் முடிச்சுடலாம்னு நினைச்சேன். ஆனால், அவன் வேறு வழியா போய் வேலையை முடிச்சுட்டு என்னை அசிங்கப்படுத்திட்டான். சரி எதுக்கு வம்புனு அவன் ரூபாயை கொடுத்திடுலாம்னு வீட்டுக்கு வந்தா…….” என்று கூறிய நொடி மஞ்சுளா நிமிர்ந்து அவனைக் கலக்கத்துடன் கண்டாள்.

அவளின் தோளைத் தட்டி “நினைச்சு வந்தா , காதலிக்கும் போது உன்னை எப்படி பாத்தேனோ அதே மாதிரி இவ்வளவு நாள் கழிச்சு இப்போதான் பார்க்குறேன் “. மஞ்சுளா ஒரு நிமிடம் நெகிழ்ந்து விட்டாள். அவள் வேகமாக அவன் சட்டையை இழுத்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். ” “அதனால் நான் ஒரு முடிவு செய்திருக்கேன் . இந்த பொருள்களையும், அம்மாக்கிட்ட வாங்கின நகையையும் சேர்த்து நம்ம எங்கையாச்சும்  வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போய்டுவோமா? ” என்று இதுதான் தக்க சமயம் என்று கேட்டுவிட்டான்.

மஞ்சுளா “எப்படியும் இந்த ரூபாயைத் தர முடியாது. இந்த கிழவி கொடுத்த நகையை அவளுகளுக்கு தெரிஞ்சா வாங்கிட்டு போய்டுவாளுக இல்லை கடன் கொடுத்தவன் வாங்கிட்டு போய்டுவான் .இதுக்கு இவர் சொல்ற மாறி போய்ட்டா நமக்கு தான் எல்லாமே ” என்று மனதில் மனக்கணக்கு போட்டு விட்டு சரி என்று கூறி விட்டாள். யாருக்கும் சத்தம் வராதவாறு பொருள்களை ஏத்தி விட்டு இரவே ஓசூருக்கு பயணம் மேற்கொண்டனர்.

வண்டியில் ஏறியவுடன் தன் தகப்பனிடம் சொல்வதற்கு அலைபேசியில் அழைத்து சொல்ல, “அய்யோ! அப்போ மருமகன் என்கிட்ட வாங்குன பத்து லட்சமும் போச்சா ? ” என்று கேட்க, தண்ணீர் பாட்டில் வாங்கி வந்தவன் வேகமாக மஞ்சுளாவின் போனை வாங்கி தூர எறிந்து விட்டான்.

செழியனின் செயலைக் கண்டு அதிர்ந்து விட்டாள். வண்டியும் கிளம்பியது. நேராக இறங்கிய இடம்  மத்திகிரியில் உள்ள வீடு தான்.அங்கு இறங்கியவுடன் இவள் கத்த ஆரம்பித்தாள்.அதனை பொருட்படுத்தாமல் இவன் பொருட்களை அடுக்கினான்.

பின்பு, அமைதியாக வெளியில் சென்று சாப்பாடு வாங்கி வந்தான். திரும்பவும் இவள் ஆரம்பிக்க, உச்சப்பட்ச கடுப்பில் கன்னத்தில் அறைந்தான். “இதோடு எதாச்சும் பேசுனா நான் மனுஷனா இருக்க மாட்டேன் ” என்று பொறுமையாக அதே சமயம் கண்டிப்போடும் கூறி விட்டு, அவனின் மேனேஜரிடம் போனில் பேச சென்று விட்டான். இவள் ஒரு ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

வேலூர் மாவட்டம்

செழியன் நகையை எடுத்துச் சென்று விட்டான் என்று கூறியவுடன் மூவரும் மூன்று மூலையில் அமர்ந்து விட்டனர். மாலை நேர பால்காரார் காலனிக்கு வந்து சத்தம் கொடுத்த பின்னே சாயங்காலம் ஆனது கூட தெரியாமல் அமர்ந்திருப்பது அவ்வீட்டினருக்கு   தெரிந்தது. அதில் கயநினைவு பெற்றப் பின்னே பசி வயிற்றை கிள்ளுவது தெரிந்தது. நான்கு ஐந்து முறை கத்தியும் யாரும் வெளி வராமல் இருக்கவே அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர்.

அதில் சுய நினைவுப்பெற்று முல்லை கதவைத் திறந்தாள். பால்காரர் சத்தமிட ஒன்றும் கூறாமல் அமைதியாக பால் வாங்கி உள்ளே சென்று விட்டாள். பாலை காய்ச்சி தங்கைக்கும் அம்மாவிற்கும் கொடுத்து தானும் குடித்து விட்டு நாச்சியாரின் அருகில் அமர்ந்தாள் .

அவரின் கையைப் பிடித்து “நான் சொல்வதை கேளுங்கள்  ” என்று கூற , நாச்சியார் ” இனிமே நீ சொல்லுற எல்லாமே நான் செய்றேன். என்னை இரண்டு பேரும் மன்னிச்சுருங்க ” என்று கூறி கைக்கூப்பினார். சென்மொழிக்கு கோபம் இருந்தாலும், தன் அன்னையின அவல நிலை கண்ணீரை கொடுத்தது.

மறுநாள் காலை பதினொரு மணி அளவில் முல்லையின் வீட்டு வாசலில் அத்தலைவன்  கண்கள் சிவக்க நிற்க, அவனின் அடியாள்கள் கைகளை பிசைந்து கொண்டிருந்தனர். ஏனென்றால், முல்லையின் வீட்டில் அனைத்து பொருள்களும் இருந்தது அம்மூவரைத் தவிர.

இரவோடு இரவாக தப்பித்து கிளம்பிய மூவரும் வேலூரில் இருந்து தர்மபுரிக்கு மூன்று மணி நேரத்தில் சென்றடைந்தனர். அங்கிருந்து வத்தல் மலைக்கு சென்றுவிட்டனர். ஏற்கனவே முல்லைக்கு அங்குள்ள எஸ்டேட்டில் வேலைக்கு வருமாறு கடிதம் வந்திருந்தது. அதை இப்பொழுது பயன்படுத்திக் கொண்டனர்.

உள்ளே சென்றதிலிருந்து ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது போல் இருந்தது. எங்கோ சென்ற ஆன்மாக்கள் இரண்டும் முல்லையின் மேல் தென்றல் வீசி, பூக்களைத் தூவி வரவேற்றது .” வந்து விட்டாய் அம்மா!உன் இடத்திற்கே வந்து விட்டாய் ” என்று ஆண் ஆன்மா மனம் மகிழ்ந்து  கூறியது.

முல்லை அந்நேரம் உடம்பில் ஏதோ பாய்வது போன்று தோன்றி மயங்கி சரிந்தாள்.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்