Loading

வணக்கம் நட்பூக்களே!

என்ன ஆரம்பிக்கலாமா?

ரொம்ப நாளா நீங்க எப்போ எப்போனு கேட்டு காத்துட்டு இருந்ததை பத்தி பேச தான் வந்திருக்கோம்.

தூரிகையோட இரண்டாம் ஆண்டை கொண்டாடும் விதமாக புதினம் போட்டியைப் பற்றிய அறிவிப்பு இதோ!

தூரிகையின் “காதல் வெப்சைட்” புதினம் போட்டி .

புதிய கண்ணோட்டத்தில் நம்ப தூரிகை. காதல் வெப்சைட்டா புதுசா இருக்கே பேரு மாத்திட்டீங்களானு யோசிக்காதிங்க….

போன முறை பட்டாஸா வெடிச்சு களைச்சு போய்ட்டோம், அதனால் இந்தமுறை காதலோடு கதைக்க முடிவு பண்ணியிருக்கோம்.

சரி சரி காதலோட கதைக்க நாங்க ரெடி! நீங்க ரெடியா?

என்ன பண்ணனும்? எப்படி பண்ணனும்? னு பல கேள்விகள் உங்க மனசுல இருக்கும்.

ஒவ்வொண்ணா சொல்லுறேன் பொறுமையா இருங்க. எழுத்தாளர்கள் நீங்க பண்ண வேண்டியது கீழ கொடுத்திருக்க ஐந்து பிரிவில் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து கதையோட தலைப்பை முடிவு செய்து கடைசியா கொடுத்திருக்கும் ஃபார்மை பூர்த்தி பண்ணவும்.

பின் உங்களுக்கான லவ் பின்கோடு வழங்கப்படும், எழுத்தாளர் தங்கள் பெயரை மறைத்து அவரவருக்கு வழங்கிய லவ் பின்கோடு பெயரில் எழுத வேண்டும்.

அப்போ ஒரு பிரிவில் ஒரு கதை தான் எழுதணுமா எனக்கு நிறையா எழுதணுமேனு கேட்காதீங்க,
ஒருவர் எத்தனை பிரிவில் வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் ஒரு கதை மட்டுமே ஒவ்வொரு பிரிவில் எழுத முடியும்.

காதல் வெப்சைட்டின் காதல் பிரிவுகள்

1. ஆன்டி ஹீரோ /ஆன்டி ஹீரோயின்
Antihero / Antiheroine

2. மெல்லிய சாரலாய் காதல்
Soft romantic love

3. கல்யாணம் முதல் காதல் வரை
Marriage to love

4. லிவ்-இன் காதல்
Live-in love

5. காதல் – முறிவு – காதல்
Breakup to love

எழுத்தாளர்களுக்கான விதிமுறைகள்

1. பெயர் மறைத்து எழுதும் போட்டி என்பதால், நேர்மையாக இருந்தல் அவசியம். விதி மீறல் நிரூபிக்கப்பட்டால் அந்த கதை எந்த நேரமென்றாலும் போட்டியில் இருந்து விளக்கப்படும்.

2. புதினத்தின் வார்த்தை எண்ணிக்கை 45000 வார்த்தைகளுக்கு குறையவோ 55000 வார்த்தைகளுக்கு மேல் அதிகரிக்காமலோ பார்த்துக்கொள்ளவும்.

3. படைப்புகள் எழுத்தாளரின் சொந்த படைப்பாக இருத்தல் அவசியம்.

4. பாலுணர்வு தூண்டும் காட்சிகளையோ, விரசமான பகுதிகளையோ தவிர்ப்பது நலம்.

5. குறிப்பிட்ட மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டோ சாடியோ எழுதுவதை தவிர்க்கவும். வன்முறை தூண்டும் கதைகளத்தை தவிர்க்கவும்

6. பெண்ணடிமை, வன்புணர்வு, போன்றவற்றை ஆதரிப்பதை தடுக்கவும்.

7. போட்டியில் வெற்றி வாய்ப்பை தட்ட எழுத்துபிழை, இலக்கண பிழைகளை தவிர்க்கவும். அதிக பிழைகள் இருப்பின் வெற்றியை நழுவ வாய்ப்பிருக்கிறது.

8. போட்டியின் முடிவு முழுவதும் வாசகர்களின் வாக்குபதிவே முடிவு செய்யும்.

அப்போ அவ்வளவு தானா? இல்லையே இன்னும் இருக்கே!

போட்டின்னு இருந்தா பரிசு இல்லாமயா?

பரிசு மழை இதோ!

முதல் பரிசு – ₹ 6000 + ஸ்பெஷல் கிப்ட் + பிரிண்ட் செய்யப்பட்ட சான்றிதழ்

இரண்டாம் பரிசு – 5000 + ஸ்பெஷல் கிப்ட் + பிரிண்ட் செய்யப்பட்ட சான்றிதழ்

மூன்றாம் பரிசு – 3000 + ஸ்பெஷல் கிப்ட் + பிரிண்ட் செய்யப்பட்ட சான்றிதழ்

இன்னும் முடியல முதல் மூன்று பட்டியலில் இடம் பெற தகுயிருந்தும் சிறு வித்தியாசத்தில் பின்னேறும் மூன்று கதைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

சிறப்பு பரிசு – 3 (தலா ₹1000)

மேலும் பங்குபெற்ற அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும்.

எழுத்தாளர்களுக்கு மட்டும் தான் போட்டியா என்று கோபித்துக் கொள்ள வேண்டாம் வாசக செல்லங்களே!

உங்களுக்கு இல்லாமயா,
சிறந்த விமர்சனம் செய்யும் வாசகர்களை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கப்படும். உங்களுக்கும் பரிசு மழை காத்திருக்கின்றன.

போட்டி படிவத்தை பூர்த்திச் செய்யவேண்டிய இறுதி நாள் – ஆகஸ்ட் 25,2023 இரவு 12குள்.

போட்டி தொடங்கும் நாள் – செப்டம்பர் 1, 2023.

போட்டி முடிவடையும் நாள் – டிசம்பர் 31

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScsn2fapBtuSrnNpGurGO4NEJamEjL2Et8xz7ZXUlqC_0A8hQ/viewform?usp=sf_link

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
23
+1
4
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்