Loading

ஒரு வழியாக கண்மணியின் வீட்டிற்கு முன்பு வரிசையாக மூன்று காரும் வந்து நின்றது..

 

 

 அந்தக் காரே கூறியது அவர்களின் வசதி வாய்ப்பை..

 

 

 

 விஐபி முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கினான்..

 

 

 தரகரும் கண்மணியின் தாயும் அருகில் இருக்கும் சிலரும் வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள்..

 

 

 சிறிய வீடாக இருந்தாலும் ரொம்பவும் சுத்தமாக நேர்த்தியாக கலை நயத்தோடு இருந்தது..

 

 

 

 அனைவரும் வந்து அங்கிருந்த பாயில் அமர்ந்தார்கள்..

 

 

சீதாராம் அருகருகே அமர்ந்ததும் அவர்களுக்கு அருகில் தாம்பூல தட்டு வைக்கப்பட்டது..

 

 

 மீராவையும் யசோதாவையும் பார்த்த பின் தான் கண்மணியின் தாய்க்கு கொஞ்சம் மனம் அமைதியாக இருந்தது.. ஏனென்றால் பொட்டிக் வரும்பொழுது கண்மணியுடன் அவர்கள் பேசுவதை பார்த்திருக்கிறார்..

 

 

 

 அப்படி என்றால் அவர்களுக்குத்தான் கண்மணியை பிடித்து தரகர் மூலம் பேசி இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டார்..

 

 

“ சரி நல்ல நேரம் முடியறதுக்கு முன்ன பொண்ணை அழைச்சிட்டு வாங்க.. பொண்ணை பார்த்துட்டு அப்புறம் பேச வேண்டியதை எல்லாம் பேசிக்கலாம்..” என்றார் தரகர்..

 

 

 அதன் பின் கண்மணியின் தோழிகள் இருவர் அவளை அழைத்து வந்தார்கள்..

 

 

 விஜய் அவளை நேரில் சந்தித்து பேசியதிலிருந்து அவளிடம் இருந்து வரும் விஷ் கூட அதன் பின் வரவில்லை.. அந்த நம்பரை பிளாக் பண்ணி வைத்து விட்டாள் கண்மணி..

 

 

 அது தெரிந்தும் கூட சிரித்தானே தவிர வேறு எதுவும் அவன் நினைக்கவில்லை..

 

 

 

 அழகிய பட்டு சேலையில் அழகு பதுமையாக நடந்து வந்தாள் கண்மணி..

 

 

 தாய் சொன்னபடி அங்கிருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்து.. தலை நிமிர்ந்ததும் எதிரே மீராவை பார்த்ததும் சற்று அதிர்ச்சி அடைத்தாள்..

 

 

அன்று பார்த்தது போன்று இன்றும் அவன் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததால் அன்று வந்து தன்னிடம் பேசியது மீராவின் மகன் என இன்று தெரிந்து கொண்டாள்..

 

 

“ வாம்மா கண்மணி வந்து இப்படி எங்க பக்கத்துல இரு..” என்றார் மீரா..

 

 

 

“ முதல் பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி அவங்களுக்குள்ள பிடிச்சிருக்கா என்று தெரிஞ்சிக்கிட்டு அதுக்கப்புறம் நம்ம பேச வேண்டியதை பேசலாம்..” என்றார் கண்மணியின் அம்மா..

 

 

“ அதுவும் சரிதான்.. இந்த காலத்தில் ஒருவர் ஒருவர் பார்த்து பேசிக்கிறது நல்ல விஷயம் தான்.. போ விஜய்.. போய் பொண்ணு கிட்ட பேசி.. பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுகிட்டு வா…” என்று கூறி மீரா அனுப்பிவைதார்..

 

 

 அவளாக மாப்பிள்ளையிடம் பேச வேண்டும் என கேட்டால் கட்டாயம் தாயிடம் திட்டு வாங்க வேண்டி வரும் என்று தெரியும்.. யாராவது இதை சொல்ல மாட்டார்களா என ஏங்கி தவித்து போய் இருந்தாள் கண்மணி..

 

 

 அதற்கு அவளது தாயே வழி செய்து கொடுப்பார் என அவள் நினைக்கவில்லை..

 

 

 இதற்காக தானே காத்திருந்தாள்.. அவன் எழும் முன்பே அவள் எழுந்து நின்றாள்..

 

 

 வந்ததிலிருந்து அவளது நடவடிக்கைகளையும் முகத்தில் வந்து போகும் பதட்டம் கோவம் என பல உணர்வுகளையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் விஐபி..

 

 

 அவர்களது வீட்டிற்கு பின்பக்கம் இருக்கும் தோட்டத்திற்கு இருவரும் வந்ததும்..

 

 

“ ஏங்க அன்னைக்கு தானே சொன்னேன்..இந்த கல்யாணம் எல்லாம் சரிப்பட்டு வராது.. எனக்கு உங்களை பிடிக்கவில்லைன்னு.. அப்படி இருந்தும் இன்னைக்கு பொண்ணு பார்க்க எல்லாரும் அழைச்சிட்டு வந்து நிக்கிறீங்க.. உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?.. மீரா ஆண்டி பையன்னு பார்க்குறேன்.. இல்லன்னா இப்ப நடக்கிறதே வேற..”

 

 

“ இல்லன்னா என்ன நடக்கும்.. ம்ம்ம் சொல்லுங்க மேடம்..” 

 

 

“ விஐபி சார் தான் எனக்கு பிடிக்கும் என்று சொல்லியும் நீங்க இப்படி வந்து நிற்கிறது உங்களுக்கே சரியா இருக்கா?.. ஓப்பனா என் மனசுல யாரு இருக்கான்னு நான் சொல்லிட்டேன்.. அது தெரிஞ்சும் இப்படி பண்றீங்கன்னா எனக்கு இது சரியா படல..” என்றாள்..

 

 அவளோடு இன்னும் கொஞ்சம் விளையாடி பார்க்க ஆசை வந்தது விஐபிக்கு..

 

“ ஏங்க நீங்க சொல்ற விஐபி எவ்வளவு பெரிய ஆள்.. அவர போய் எப்படிங்க நீங்க கல்யாணம் பண்ணிக்க முடியும்?.. இதெல்லாம் நடக்கிற காரியமா என்ன?.. அவர பார்க்குறதுக்கு எவ்வளவு கஷ்டப்படணும்.. அப்படி இருக்கும் போது அவருக்கு நீங்க ஆயிரத்தில் ஒரு ரசிகை… நீங்க இப்படி அவரை நினைச்சுகிட்டு உங்க வாழ்க்கையை கெடுக்குறீங்கன்னு அவருக்கு தெரிஞ்சா உடனே ஓடி வந்து உங்களுக்கு வாழ்க்கையா கொடுக்க போறார்?.. சும்மா போங்க நடக்காத வெட்டி கதை பேசாம.. உங்க மனச மாத்திட்டு கல்யாணத்துக்கு ரெடி ஆகுங்க.. பெருசா விஐபி பெரிய அவன் இவன்னு வந்து யாரைப் பற்றியும் என்கிட்ட பேசாதீங்க… உங்களை நெனச்சிட்டு இருக்க என்னை பாருங்க..” என்றான்..

 

அவன் இப்படி பேசும் போது அவளது முக ரியாக்ஷனை பார்த்து அவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது.. ஆனாலும் சிரித்து காரியத்தை கெடுக்க கூடாது என கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்..

 

 

“ ஹெலோ சார்.. மரியாதையா பேசுங்க.. அவர் வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் ஆசை ப்பட்டதில்லை.. எனக்கு அவரை பிடிக்கும்.. அது லவ்வா இல்ல கிரஷ்ஷா எதுவா வேணா இருக்கட்டும்.. இந்த உலகத்துல எவ்வளவு மேஜிக் நடக்குது .. அப்படி ஒரு மேஜிக் நடந்து எனக்கும் அவருக்கும் கல்யாணம் நடந்தால் அது சந்தோசம் தான்.. அப்படி எதுவும் நடக்காமல் எங்களுக்கு கல்யாணம் நடக்காட்டியும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. காலம் முழுக்க நான் வாழும் வரைக்கும் அவர மனசுல நினைச்சுக்கிட்டே வாழ்ந்துட்டு போயிடுவேன்..

 

 

 ஒருத்தர பார்த்து ரசிக்கவோ இல்ல நினைக்கவோ.. அந்த ஆளுக்கு தெரிஞ்சி டிஸ்டர்ப் பண்ணாம நினைக்க உரிமை இருக்கு.. அது போதும் எனக்கு.. ஒரு முறையாவது அவரை நேரில் பார்க்காமல் போய்டுவேனா?.. நான் அவர் மேல வச்சிருக்க லவ் உண்மை என்றால் காலமே எங்களை சந்திக்க வைக்கும்..

 

 

 எங்க அப்பா இல்லாம எங்க அம்மா என்னை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க.. அவங்களுக்கு இந்த சினிமா நடிகர் பாடகர் அவர்களை எல்லாம் ரசிக்கிறது புகழ்வது எல்லாம் பிடிக்காது.. ஆனா அதையும் மீறி நான் விஐபி சார் மனசுல நினைக்கிறேன்னா எனக்கு அவர் மேல் எவ்வளவு விருப்பம் என்று நீங்க தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.. எங்க அம்மா வார்த்தை மீறி என்னால இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது..

 

 

அதனால நீங்களே போய் இந்த கல்யாணம் வேணாம்.. பொண்ணு பிடிக்கலைன்னு மரியாதையா சொல்லிடுங்க.. அப்படி இல்ல இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்னா நீங்க ஒரு பொண்ணுக்கு தாலி கட்ட மாட்டீங்க.. ஒரு பொணத்துக்கு தான் தாலி கட்டுவீங்க.. அப்புறம் உங்க இஷ்டம்…” என்றாள் கண்மணி..

 

 

 

 அவளுக்கு ஆயுள் குறைவு என ஜோசியர் சொன்னதில் இருந்து அவனுக்கு மனதுக்குள் மிகுந்த வலியாக இருந்தது.. இப்போது அவளே பொணமாகத்தான் இருப்பேன்.. என கூறிய அந்த வார்த்தை அவனை முரடனாக மாற்றியது..

 

 

 அவள் பேசி முடித்ததும் அவனுக்கு வந்த கோபத்து ஓங்கி அறைந்து விட்டான்…

 

 

 அவள் அழகை முகத்தில் வந்து போகும் அபிநயத்தை ரசிக்க வந்தவன்.. இன்று அவனே அவளை அடித்து அழ வைத்துவிட்டான்..

 

 

அவள் கன்னம் சிவந்து போய் அவள் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது..

 

 அப்போதே முடிவெடுத்து விட்டான்..எங்கே தான் விஐபி என்று சொல்லாமல் சென்று விட்டால் விபரீதமாக இந்த முட்டாள் பெண் ஏதாவது முடிவெடுத்து விடுவாளோ என பயம் வந்தது..

 

 

 விளையாட்டு வினையாக வேண்டாம். என நினைத்து முகத்தில் இருக்கும் மாஸ்க் கழட்டி தூக்கி வீசிவிட்டு அவளை இழுத்து மார்பில் அணைத்துக் கொண்டான்..

 

 

“ சாரிடி கண்ணம்மா.. உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு தெரிஞ்சும் நீ இப்படி ஒரு வார்த்தை சொன்னது எனக்கு பிடிக்கல..என்னால தாங்கிக்க முடியல.. அந்த கோவத்துல அடிச்சிட்டேன்.. ரியலி சாரிடி.. இப்ப நீ வந்து என் முகத்தையும் என் கண்ணையும் பார்த்து நீ என்னை பிடிக்கவில்லை என்று சொன்னால் நானே இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு போயிடுறேன்.. இப்ப சொல்லு என்னை பிடிச்சிருக்கா?. இல்லையா?..” என்றான்..

 

 அவனில் இருந்து அவளை சற்று தள்ளி நிறுத்தி அவன் முகத்தை பார்க்க வைத்து கேட்டான்..

 

 

 உரிமை இல்லாத பெண்ணை கை நீட்டி அடித்தது.. அவள் பிடிக்கவில்லை என்று கூறிய பின்பும் அவள் எதிர்பாராத நேரத்தில் அணைத்தது என அவளுக்கு பிடிக்காத காரியங்களை அவன் செய்ததால் அவனை நிமிர்ந்து முகத்தை பார்க்க ஒரு நிமிடமும் அவளுக்கு விருப்பமில்லை..

 

  அவனைப் பார்க்காமலே “ இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. இல்லாட்டி கட்டாயம் நான் சொன்னதுதான் நடக்கும்.. ” என்று கூறி அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்..

 

 

‘ இவளை.. என்ன பண்ணலாம்.. பாருடின்னு சொல்லுறேன்.. பார்க்க மாட்டேன்னு போறளே கண்ணம்மா..’ என்று சிறந்த பாடகனை புலம்பி தவிக்க விட்டு சென்று விட்டாள் கண்மணி..

 

 

 

 அவளுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தும் அவள் அதை தவற விட்டு விட்டாள் கண்மணி..

 

 

 இனி திருமணத்திற்கு இடையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்களா?. இல்லையா?. என்று தெரியவில்லை..

 

 

 அவன் உள்ளே வந்து பொண்ணை பிடிச்சிருக்கு என கூறியதும். மீரா கண்மணியிடம் ஒரு வார்த்தை கேட்கும் படி கூறினார்..

 

 

“ என் பொண்ணுக்கு என்ன தெரியும்?.. அவ சின்ன பொண்ணு.. நான் பார்க்கிற மாப்பிள்ளையை தான் அவ கல்யாணம் பண்ணிப்பா.. எங்களுக்கு மனப்பூர்வமான சம்மதம்.. நம்ம மேற்கொண்டு பேச வேண்டியதை பேசி தட்டை மாத்திக்கலாம்.. ” என்றார்..

 

 

“ இனி பேசுறதுக்கு என்ன இருக்குது சம்மந்தி.. நாங்க சொல்ல வேண்டியது எல்லாம் நேரத்தோடு தரகரிடம் சொல்லிட்டோம்.. இருந்தாலும் சபையில் வச்சு சொல்லுறோம்.. நம்ம பசங்க சந்தோசமா வாழனும் அதுக்கு அவங்களுக்கு நல்ல படியா கல்யாணம் பண்ணி வைக்கணும்.. உங்க பொண்ணு கண்மணிக்கு உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சு எங்க வீட்டு மருமகளா அனுப்பி வைங்க.. எதுவுமே நாங்க கேட்க மாட்டோம்.. அவ்வளவுதான் இனி தட்ட மாத்திக்கலாம்.. ” என்றார் யசோதா..

 

 

“ எழும்புங்க ராம் சீதா முறைப்படி தட்டை மாத்திக்கோங்க.. ” என்றார் மீரா..

 

 

 மகனும் மருமகளும் ஜோடியாக நின்று தட்டை மாற்றியதை பார்த்து தெரிந்து கொண்டதும் கணேசனுக்கு அப்படி ஒரு சந்தோசமும் பூரிப்பும்..

 

 

 அவள் அவனை பார்க்கவில்லை.. பிடித்திருக்கு என சொல்லவில்லை.. என்பதை தவிர எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக தட்டை மாற்றி கண்மணியின் தலையில் சீதா பூ வைத்து திருமணத்தை உறுதி செய்து கொண்டார்கள்..

 

 

 

துர்காவின் திருமணத்தன்று சீதாவை பட்டுச்சேலையில் பார்த்தது.. அதன் பின்பு இன்று தான் பட்டுச்சேலை உடுத்தி பூ வைத்து சீதா அழகாக இருந்தாள்..

 

 

 நிமிடத்துக்கு ஒருமுறை அவளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ராம்..

 

 

 

 அதைப் பார்த்தவள் பல்லை கடித்துக் கொண்டு அவன் வீட்டிற்கு வரும்வரை காத்திருந்தாள்..

 

 

“ சரிங்க சம்மந்தி கூடிய சீக்கிரமே வரும் முகூர்த்தத்தில் கல்யாணத்தை வச்சுக்கலாம்.. கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலையை பாருங்க.. அப்போ நாங்க கிளம்புறோம்.. ” என்று கூறி மீராவும் மற்றவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றார்கள்..

 

 

 

 அவள் முகத்தை பார்க்காமல் சென்றதும் மீண்டும் மாஸ்க் அணிந்து கொண்டுதான் கண்மணியின் வீட்டுக்குள் வந்தான் விஐபி..

 

 

 திருமணத்துக்கு இடையில் அவள் ஏதாவது விபரீதமாக முடிவெடுக்கும் முன்பு அவளை நேரில் சந்தித்து நான் தான் விஐபி எனக் கூறி விட வேண்டும் என நினைத்துக் கொண்டான்..

 

 

 அவன் நினைப்பது எதுவும் நடக்காது என்பது அவனுக்கு தெரியவில்லை..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்