
அத்தியாயம்:25
ஆராவும், ஆதித் கிருஷ்ணாவும் பிரிந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் எதிரில் கண்ணாடி அணிந்து அமர்ந்திருந்த மகேஷை பார்த்தாள். அவன் ஆம் எனச் சொல்லி விட வேண்டும் என்று அவள் நினைத்தாள். ஆனால் அதற்கு மாறாக.
“இல்லை மேடம், ஆராவுக்கு எதோ கனவு அது இதுன்னு உளறிக்கிட்டு இருந்திருக்கா, அதுக்கு ஆதித் சம்மதிக்கலை போல”
“ஓ! இவளுக்குக் கனவெல்லாம் இருக்கா? என்ன கனவாம் அவளுக்குப் பாட்டுப் பாடுறது பிடிக்கும் சொந்தமா ஆர்கிஸ்ட்ரா வைக்கணும்னு ஆசை பட்டிருப்பாள், அப்படித் தானே? வேற என்ன இருந்திட போகுது. அவ லெவலுக்கு இந்த மாதிரி கனவு தான் இருந்திருக்கும்” என ஏளனமாய் மஹதி சொன்னாள்.
“இல்லை மேடம், ஆராவுக்கு நார்வே போகணுமாம். அங்க தெரியுற நள்ளிரவு சூரியனை பார்க்கணுமாம்” என மகேஷ் சொன்ன நொடியில் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“வாட்?? இதெல்லாம் ஒரு ட்ரீம்னு இதுக்காக ஆதித் கூடச் சண்டை வேற போடுறாளா? ஆதித் கிட்ட இருக்கப் பணத்துக்கு அவளுக்கு அந்த நார்வேல ஒரு பேலேஸே கட்டி தர முடியும். இதெல்லாம் ஒரு கனவு” என மஹதி ஏளனமாய்ப் பேசினாள்.
“அவளோட கனவை அவளோட பணத்தில செய்யணும்னு நினைக்கிறாளாம்” என மகேஷ் சொன்ன போது அதிர்ந்து விழித்தாள் மஹதி.
“வாட் அவ்வளவு பணம் இந்த அநாதை கிட்ட இருக்கா?” அதே அதிர்வுடன் கேட்டாள்.
“அதைப் பத்தியெல்லாம் தெரியலை மேடம், பட் சேவிங்க்ஸ் பண்ணி வச்சிருக்கிறதா சொல்லியிருக்கா?”
“ஓ!!” என்றாள் அவள்.
“அவ கனவுக் கூட இப்போதைக்கு அவளுக்கு இரண்டாம் பட்சம் தான் மேடம், அதை விட முக்கியமான ஒரு விசயத்தைத் தேடி அலைஞ்சிட்டு இருக்கா” என்றான் மகேஷ்.
“அப்படி என்ன விசயம்? தேடுற அளவுக்கு அவ்வளவு அவசியமானதா?”
“அவளோட அப்பா அம்மா எப்படி இறந்தாங்க? அவங்க யாரு. அவளோட அப்பா அம்மா வாழ்ந்த அந்தப் பாழடைந்த வீட்டுக்கு ஏன் போகக் கூடாதுன்னு ஆதித் சொன்னான்? எல்லாத்தையும் யோசிச்சிட்டு ஆதித் வரதுக்கு முன்னாடியே இதையெல்லாம் கண்டு பிடிக்கணும்னு தீவரமா இருக்கா?”
“இதை அவளே உன்கிட்ட சொன்னாளா?”
“ஆமாம், ஆதித் மேல இருக்கக் கோபத்தில் இப்படி உளறிட்ட. அவகிட்ட ஈஸியா விசயத்தை வாங்க முடியாது ஆனால் அன்னைக்கி ராத்திரியே எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டா?”
“மகேஷ்! நீ அவளைக் கடத்திட்டுப் போய்க் கல்யாணம் பண்ணிக்கோயன், என்னோட ரூட்டும் க்ளியர் ஆகிடும்” என அவசரமாய்ச் சொன்னாள் மஹதி.
“ஆரா, என்ன சின்னக் குழந்தையா மிட்டாய் கொடுத்து ஏமாத்தி கூட்டிட்டு போறதுக்கு. எல்லாத்திலும் சுயமாய் எழுந்து நிற்கணும் ஆசைப் படுற பொண்ணு அவ, இவ்வளவு நாள் நான் அவ கூட ஃப்ரெண்டா இருக்கேன், அவளை என்னால நெருங்கவே முடியலை.”
“ஒரே ஒரு வழி தான் இருக்கு” என்றாள் மஹதி.
“என்ன வழி மேடம்”
“அவளைத் தீர்த்துக் கட்டிரு, நான் உனக்குப் பணம் தரேன்”என்றாள்.
“வாட்? அவளை நான் காதலிக்கிறேன் என்கிட்டையே வந்து இப்படிப் பேசிட்டு இருக்கீங்க”
“இப்போ என்ன சொல்ற” எனச் சொன்னவள் ப்ளங்க் செக்கில் கையெழுத்திட்டு அவன் முன் நீட்டினாள்.
“எவ்வளவு பணம் தேவையோ ஃபில் பண்ணிக்கோ? உனக்குப் பணத் தேவை இருக்குன்னு எனக்குத் தெரியும்” என்றாள் வில்லதனமாய். மகேஷின் கைகள் சற்று நடுங்கியது. ஆனால் ஆராவா? பணமா? என்ற கேள்விக்குப் பணம் என்ற பதிலை தெரிவு செய்தவன் பல்லைக் காட்டிய படி அவள் முன் அமர்ந்திருந்தான்.
“சரி” என அவன் சொன்ன நொடியில் ஆராவுக்கு எதிரான திட்டத்தை மஹதியின் மனம் தீட்ட ஆரம்பித்தது. ஆரா இந்த உலகில் எந்த மூலையிலும் இருக்கக் கூடாது. ஆதித் வருவதற்குள் இந்த வேலைகளைக் கச்சிதமாய் முடித்தாக வேண்டும் எனத் தீர்க்கமாய் முடிவெடுத்தவள். செக்கை அவன் கையில் கொடுத்து விட்டு அந்த ஹோட்டலில் இருந்து வெளியேறி கார் பார்க்கிங்க்கு சென்று தன் தந்தைக்கு அழைப்பு விடுத்தாள்.
“டாட்!!” என்றாள் அவள்,
“சொல்லுமா மஹதி!” ஜெகன்நாத்தின் குரல் அவள் செவிகளில் விழுந்தது.
“அந்த ஆராவை இந்த உலகத்தை விட்டு அனுப்புறதுக்கான எல்லா வேலையும் தொடங்க போறேன் டாட், நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்” எனத் தன் மகள் கேட்க,
“பைத்தியம் மாதிரி பேசாதே மஹதி! அந்தப் பொண்ணைக் கொண்ணுட்டு நீ ஜெயிலுக்குப் போகப் போறீயா? நீ ஹோம் மினிஸ்டரோட பொண்ணுன்னு மறந்திடாதே, எப்போதும் மீடியாவோட முணாவது கண்ணு உன்னைக் கண்காணிச்சிட்டு இருக்கும்ன்னு மறந்திடாதே” என எச்சரித்தார் ஜெகன்.
“அவளைக் கொண்ணுட்டு உள்ள போறதுக்கு ஒரு பலி ஆடு தயாரா இருக்கு”என அவள் சிரித்தபடி சொல்ல,
“என்ன சொன்னாலும் நீ கேட்க போறதில்லை. நாளைக்கு எல்லாத்தையும் பண்ணிட்டு என்ன காப்பாத்துங்க டாட்ன்னு வந்து நிக்காதே, நான் கோதண்டம் எல்லாத்தையும் பார்த்துக்குவான்னு சொல்றேன் நீ தான் கேட்க மாட்டேன்ற” எனத் திட்டிவிட்டு அழைப்பை துண்டித்தார் ஜெகன். ஆராவை எந்த ஒரு தடயமும் இன்றித் தீர்த்துக்கட்ட முடிவெடுத்திருந்தாள் மஹதி.
—
நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்துக் கொண்டிருந்தது. தனது தாய் தந்தையைப் பற்றிய தகவல் எங்காவது கிடைத்திடாதா என்று தேடிக்கொண்டு தான் இருந்தாள் ஆரத்யா. ஆனால் அவளால் வேலையை விட்டுவிட்டு பாண்டிச்சேரி வரை போய்த் தகவல்களைத் திரட்ட முடியவில்லை. அவளின் நார்வே கனவாவது நிஜம் ஆகுமா? என்ற ஏக்கத்துடன் பணத்தின் பின் ஓடிக்கொண்டிருந்தாள் ஆரா. அவ்வப்போது ஆதித் கிருஷ்ணாவிடம் உரையாடல். குறுஞ்செய்திகள் எல்லாம் இவர்களின் காதலை நீர் ஊற்றி வளர்த்துக்கொண்டிருந்தது. அவளின் தலைவன் டெல்லி பயணம் புறப்பட்டு நான்கு நாட்கள் கடந்திருந்தது
“க்ரிஷ்! இன்னைக்கி நாலாவது நாள், எப்போ அந்தப் பதினைஞ்சாவது நாள் வரும்” எனத் தன் படுக்கையில் படுத்த படி புரண்டவளின் இதழ்களில் புன்னகை அழகாய் அமர்ந்திருக்க, அப்போது தான் உறங்கி விழித்ததால் கேசம் கலைந்து இரவு உடையில் இருந்தாள் ஆரத்யா. ப்ளூடூத் ஹெட்போன் மாட்டியபடி உரையாடிக்கொண்டிருந்தாள் அவள்.
“ஏய் ஸ்மைலி!! இன்னும் பதினொரு நாள் தான் இருக்கு என்னோட பேபி டாலை பார்க்க வந்திடுவேன்” என அவன் பதில் கொடுத்தான்.
“என்ன பண்ணிட்டு இருக்க க்ரிஷ்?” என அவள் கேட்டாள்.
“கெட்டிங் ரெடி டியர் ஸ்மைலி”
“ஓஹோ!! ரெடி ஆகிட்டே பேசிட்டு இருக்கீங்க?”
“யெஸ் மை டியர்”
“ப்ரேக் ஃபாஸ்ட் என்ன இன்னைக்கி?”
“எப்போதும் போலச் சப்பாத்தி தான்” என்றான்.
“ம்ம்ம்” என்ற பதில் அவளிடம் இருந்து.
“நீ ஆஃபீஸ் போகலையா?” என அவனின் கேள்விக்கு,
“இன்னைக்கி எனக்கு லீவ், க்ரிஷ் நீ இங்கே இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். பேசாமல் நானும் லீவ் போட்டு டெல்லி கிளம்பி வந்திடவா?” ஆர்வமாய்க் கேட்டாள் ஆரா.
“வர்றீயா ஸ்மைலி? ப்ளைட் டிக்கெட் போடவா சொல்லு போட்டுடலாம்” ஷூ லெஸ் கட்டிய படி அவளிடம் கேட்டான்.
“இல்லை வேண்டாம்” என உடனே மறுப்பு தெரிவித்தாள்.
“நீ தானே வர்றேன்னு சொன்ன? அப்பறம் வரமாட்டேன்ற”
“இன்னைக்கி ஒரு நாள் தானே லீவ், நாளைக்கி ஆஃபிஸ் போகணும். அங்கே உன்னை வந்து பார்த்திட்டு திரும்பி வர மனசே வராது க்ரிஷ்” என அவள் இழுக்க,
“ஹே ஸ்மைலி! உனக்கு நான் இருக்கேன் அப்பறம் எதுக்காக இந்த ஜாப்? விட்டுட்டு வா பார்த்துக்கலாம்”
“நோ நோ க்ரிஷ்! ஜாப் விடுறதெல்லாம் ரொம்பக் கஸ்டம். உனக்குத் தான் என்னோட டெஸ்டினேசன் பத்தி தெரியும் தானே அப்பறம் இப்படிப் பேசுற” வினவினவளிடம்.
“ஹே ஸ்மைலி, கிளம்ப வேண்டிய டைம் வந்திடுச்சு. வொர்க் முடிச்சிட்டு கூப்பிடுறேன். லேட் ஆகிட்டா துங்கிடு என்னோட கால்காக வெயிட் பண்ணாதே. டேக் கேர் டியர் ஸ்மைலி” என ஆதித் கிருஷ்ணா சொல்ல.
“மிஸ்ஸிங் யூ பேட்லி க்ரிஷ்” என்றாள் ஆரா.
“லவ் யூ ஆரா!!” எனச் சொல்லி அழைப்பை அவன் துண்டித்த போது அவள் வீட்டின் அழைப்பு மணி மெல்ல இசைந்தது.
“யாரு??” எனக் குரல் கொடுத்த படி வந்தவள் வாயில் கதவில் பொருத்தப்பட்டிருந்த லென்ஸ் வழியே வெளியே பார்த்தாள். மகேஷ் தான் நின்றிருந்தான். கோபம் கொண்டு கதவை திறந்தவள்,
“என்ன விசயம் வீடு வரைக்கும் வந்திருக்க, அவனை வெளியில் நிற்க வைத்து பேசினாள்.
“ஏய் ஆரா உள்ளே கூப்பிட மாட்டியா?”
“எதாவது முக்கியமான விசயமா உள்ளே வா” என்றவள் காதில் அணிந்திருந்த ஹெட்போனை கழட்டியபடி சொன்னாள்.
“உனக்குத் தான் ஒரு ஆஃபர் வந்திருக்கு போறீயா எனக் கேட்டான் அவன்.”
“என்ன ஆஃபர்??”
“நம்ம தமிழ் சினிமால பிரபலாமான மியூசிக் டிரக்டர் ஒருத்தர் இருக்காறே”
“ஒருத்தர் எங்கேடா இருக்காங்க நிறையப் பேர் இருக்காங்களே அதில் யாரை நீ சொல்லுற”
“அதான் ஆரா!! இப்போ கூட அவாரட்லாம் வாங்கினாரே”
“ஹம்ம் ஆமா எஸ்.ஆர் முருகேஷ்” என்றாள் அவள்.
“ஆமாம் அவரே தான், அவரோட பொண்ணு கல்யாணத்தை நார்வேல வைக்கிறாராம். அதோட ரிசப்ஷன்ல பாடுறதுக்குக் குரூப் சிங்கர்ஸ் வேணுமாம். ஆடிசன் போயிக்கிட்டு இருக்குதாம். அதோட மேனேஜர் நமக்குத் தெரிஞ்சவர் தான். உனக்கு நார்வே போகணும்னு கனவு இருக்கு இது நல்லா ஆஃபரா இருக்கேன்னு தான் உன்கிட்ட சொல்லலாம்ன்னு வந்தேன்”
“எந்தத் தேதியில டா?” என அவள் கேட்டாள். அவன் ஒரு தேதியை சொல்ல, ஆதித் கிருஷ்ணா திரும்பி வரவிருக்கும் அதே தேதியில் தான் அந்தத் திருமணம் நடக்கவிருப்பதாக இருந்தது. அப்படிப் போக இருந்தால் இவள் இரண்டு மூன்று நாட்கள் முன்னவே கிளம்ப வேண்டியதாய் இருக்கும். போன்ற கணக்குகளை மனதிற்குள் போட்டாள்.
“டிக்கெட் விசாலாம்?” என அவனைப் பார்த்தாள்.
“எல்லாமே அவங்க பார்த்துப்பாங்க ஆரா. உன்னைச் சேஃபா சென்னை வந்து விட்டுடுவாங்க” என அவன் உறுதியாய்ச் சொன்னான். ஒரு வாரத்திற்க்குள் இதை முடித்து விட்டுச் சென்னை திரும்பினால். அதற்குப் பின் திருமணம் பற்றிய பேச்சுகளை ஆதித் கிருஷ்ணாவிடம் பேசலாம் என ஆராவுக்குத் தோன்றியது. இந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என முடிவெடுத்தாள் ஆரா.
“ஒரு நிமிசம் இரு, க்ரிஷ் கிட்ட கேட்டுக்குறேன்” என்றவள் அலைப்பேசி எடுத்து குறுஞ்செய்தி அனுப்ப முற்பட்ட போது தடுத்து நிறுத்தினான் மகேஷ்.
“ஆரா முதலில் மேனஜரை பார்த்து பேசிட்டு வருவோம். க்ளிக் ஆனதுக்கு அப்பறம் சொல்லிக்கலாம்” என அவன் சொல்வதும் அந்த நேரத்தில் அவளுக்குச் சரியாகப் பட்டது.
“சரி டா மகேஷ், இன்னைக்கி எனக்கு லீவ் தான் இன்னைக்கே போய்ப் பார்த்திட்டு வந்திடலாமா?” என ஆரா ஆர்வமானாள்.
“கண்டிப்பா ஆரா! சீக்கிரம் புறப்பட்டு வா நான் தெரு முனையில் இருக்கிற டீகடையில் வெயிட் பண்ணுறேன்” எனச் சொல்லி வெளியேறினான் மகேஷ். அவனை வெளியே அனுப்பிவிட்டு கதவை தாழிட்டு புறப்பட ஆரம்பித்தாள். அரைமணி நேரத்தில் கிளம்பி தெருமுனையில் இருக்கும் டீகடையே நோக்கி நடந்து வந்தாள் ஆரத்யா. வெள்ளை நீற குர்த்தாவும், கருப்பு நிற ப்ளாஸோ பேண்ட் அணிந்திருந்தவளின் சிகை போனி டெயிலில் அடங்கியிருந்து. தேநீரை அருந்தியபடி நின்றிருந்தவன் பார்வையிலே ஆரத்யாவை வருடினான். மஹதியை பார்த்துப் பேசிய பின் அவன் ஒரு தெளிவான முடிவை எடுத்திருந்தான். அந்த முடிவை நோக்கி தான் இப்போது காய் நகர்த்திக்கொண்டிருக்கிறான் மகேஷ்.
“எல்லா டாக்குமென்ட்டும் எடுத்துகிட்டியா?”
“ம்ம்ம் எடுத்துக்கிட்டேன்” என்றாள் அவள்.
“அங்க உனக்கு எல்லாத்துக்கும் சம்மதமா கேட்பாங்க சரின்னு மட்டும் தான் நீ சொல்லணும் புரிஞ்சுதா ஆரா?” என அவன் சொல்ல சரியெனத் தலையசைத்தபடி பைக்கின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள் ஆரா.
“மகேஷ்! இது மட்டும் க்ளிக் ஆச்சுன்னு வையேன் உன்னை என்னோட லைஃப் லாங் மறக்க மாட்டேன்”
“மறக்கவும் விடமாட்டேன் ஆரா” எனத் தனக்குள் புலம்பியவனை,
“என்ன சொன்ன மகேஷ்??” என அவள் கேட்க ,
“நிச்சயம் இது க்ளிக் ஆகும், உன்னோட கனவும் நிறைவேறும் ஆரா, ஆல் தி பெஸ்ட்” என்றான்.
“ஆடிசன்ல என்ன பாட்டு பாடின நல்ல இருக்கும் மகேஷ்??” என அவளைக் கேட்க,
“உனக்குப் பிடிச்ச பாட்டைப் பாடு ஆரா” என அவன் சொல்ல,
“பயமா இருக்குடா மகேஷ்” எனப் புலம்பினாள் ஆரா.
“பயப்படாதே ஆரா! இந்த ஆடிசன் ஜெஸ்ட் ஃபார்பமாலிட்டி தான், நீ ஆல்ரெடி செலக்ட் ஆகிட்ட தெரியுமா”
“லூசு மாதிரி பேசாதே மகேஷ், திறமை இருந்தால் தான் செலக்ட் பண்ணுவாங்க”
“உனக்குத் தான் திறமை இருக்கே ஆரா” என்றான் மகேஷ்.
“நான் பாடாமலே என்னோட திறமையைத் தெரிஞ்சுக்க அவங்க என்ன கடவுளா? “
“இல்லை ஆரா நம்ம கச்சேரி வீடியோஸ் மேனஜர்கிட்ட போட்டுக் காமிச்சேன் அவர் தான் நிச்சயமா இந்தப் பொண்ணைச் செலக்ட் பண்ணிருவேன்னு சொன்னாரு”
“பொய் சொல்லாதே டா, பணம் ஏதும் கொடுத்து ஏற்பாடு பண்ணிருக்கியா?” என அவள் சரியாய் கேட்க, மகேஷோ தடுமாறி தவித்தான்.
“சீ சீ பணமெல்லாம் கொடுக்கலை, அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்” எனத் திக்கி திணறி பதில் சொல்லியபடி கண்ணாடியை பார்த்தான். அதில் இமைக்காமல் அவனின் பிம்பம் பார்த்து முறைத்தபடி அமர்ந்திருந்தாள் ஆரா.
“எதுக்கு இப்போ உனக்கு இவ்வளவு தடுமாற்றம்? முதலில் வண்டியை ஸ்டாப் பண்ணு” என வாகனத்தை நிறுத்த சொன்ன அடுத்த நொடியில் ப்ரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தினான்.
“ஆரா!!” அவன் தடுமாறி நிற்பதை பார்த்து முறைத்து நின்றாள் ஆரா.
“ஏய் ஆரா சத்தியமா பணம் கொடுத்து இந்த ஆஃபரை நான் ரெடி பண்ணலை. நானும் உன் கூடச் சேர்ந்து தான் பாடப் போறேன். இரண்டு பேர்ல யாரை செலக்ட் பண்ணுறாங்கன்னு பார்ப்போம்.” என அவளிடம் சொன்ன பிறகு மீண்டும் முறைத்தாள் அவள்.
“எம்மா தாயே நீயே வந்து கேட்டுக்கோம்மா, பணம் கொடுத்திருந்தேன்னு தெரிந்தால் நீ ஒன்னும் போக வேண்டாம்” என அவன் சொல்லி அவளைச் சம்மதிக்க வைத்து மீண்டும் அழைத்துச் சென்றான்.
—
ஆடிசன் முடிந்து இருவரும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். மகேஷ் அமைதியாய் அவளுடன் நடந்து வந்தான். ஆராவின் மனதில் பல விதமான யோசனைகள். அவளுக்கு நார்வே செல்ல வாய்ப்புக் கிடைத்தது சந்தோசம் என்றாலும். அந்த வாய்ப்பு மகேஷூக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தமும் அவளுக்கு இருந்தது. மகேஷூம் ஆராவும் டூயட் பாடல்கள் பாடி பழக்கப்பட்டவர்கள்.
குழுவில் ஒருவராய் நின்று பாடினாலும் அவளின் கனவான நள்ளிரவு சூரியனை அங்குக் காணலாம் என்ற ஆர்வமும் அவளுக்குள் இருக்கத் தான் செய்த்து.
“மகேஷ்! உனக்கும் கிடைச்சிருந்தால் நல்லா இருந்திருக்கும்” என்றாள் ஆரா.
“அதான் உனக்குக் கிடைச்சிடுச்சே நீ போயிட்டு வா ஆரா” என அவன் சொன்னான்.
“சரி நான் க்ரிஷ்க்கிட்ட டிஸ்கஸ் பண்ணிக்கிறேன், அப்பறம் டிசைட் பண்ணுறேன்” என ஆரா சொன்ன போது,
“நீ ஒன்னும் டிஸ்கஸ் பண்ண வேண்டாம், போக வேண்டாம்ன்னு சொல்லிட்டா உன் கனவு என்ன ஆகுறது ஆரா. நீ போயிட்டு வந்திட்டு சொல்லிக்கோ.” எனத் தவறான அறிவுரையைச் சரியான நேரத்தில் கொடுக்க, அவளோ குழம்பி விழித்தாள்.
இந்த வாய்ப்பை தவற விடக் கூடாது என மனதளவில் முடிவெடுத்துக் கொண்டாள் ஆரா. ஆதித் கிருஷ்ணாவிடம் சொல்லாமல் செல்வதை நினைத்து அவளின் மனதில் குழப்பம் எழுந்தது. அதே சமயம் மஹதியிடமிருந்து அழைப்பு வர மகேஷ் ஆராவை விட்டு விலகி நடந்தான்.
“அவளைக் கொல்ல சொன்னால், அவ கூட ஊர் சுத்திட்டு இருக்கீயா?” மஹதியின் குரல் கோபத்தில் ஒலித்தது.
“மேடம் சரியான நேரம் அமைய வேண்டாமா? நேரம் பார்த்து முடிச்சிடுறேன் பணத்தைக் கொடுத்திட்டீங்கல்ல உங்க வேலை முடிஞ்சுதுன்னு நினைச்சுகோங்க”
“முடிச்சிட்டு என்னைப் பார்க்க வரணும் புரிஞ்சுதா”
“சரிங்க மேடம்” என அவன் அழைப்பை துண்டித்துத் திரும்பிய போது, அருகில் நின்றிருந்த ஆராவை பார்த்து மிரண்டு போனான் மகேஷ்.
—

