Loading

அத்தியாயம் – 16

 

ஒரு வாரம் கடந்த நிலையில் ரிஷியின் காயம் நன்றாகவே குணமாகியிருந்தது, நித்யா தான் தன் பிள்ளையை கவனிப்பது போல் கூடவே இருந்து அவனது ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்திருந்தாள், வேலைக்கு போகாமல் வீட்டிலேயேயிருந்து மனைவியின் பணிவிடைகளை ரசித்து அனுபவிப்பது கூட ஜிவ்வென்று இருந்தது அவனுக்கு, இதில் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம் என்றால் அவன் அவர்களின் தேன்நிலவிற்காக ஏற்பாடு செய்திருந்த பிளான் தோல்வியுற்றது மட்டுமே,…. ஏற்கனவே உடல் காயத்திற்காக விடுப்பு எடுத்தவன், மேலும் தேன்நிலவிற்காக மீண்டும் விடுப்பு எடுக்க மனம் ஒப்பவில்லை, பின் வரும் நாட்களில் பார்த்துக் கொள்ளலாம் என கிடப்பில் போட்டுவிட்டான்,..

ஒரு வாரத்திற்கு பிறகு அன்று தான் வேலைக்கு கிளம்பினான் ரிஷி, இரண்டு நாட்களிலேயே அவன் காயத்தின் வலி அறவே குறைந்திருந்தாலும் பாட்டி தாத்தாவின் கண்டிப்பில் தான் ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்தான்,,… நித்யாவிற்கு அவனை அனுப்பவே மனதில்லை, மனம் ஒரு மாதிரி படபடப்பாகவே இருந்தது,…
தன் தயக்கத்தை எல்லாம் புறம் தள்ளி விட்டு,… “நீங்க போய் தான் ஆகனுமா?” என்று கேட்டே விட்டாள் மெல்லிய குரலில்,….

யூனிஃபார்மை டக்இன் செய்து கொண்டிருந்தவன் புருவத்தை உயர்த்தி அவளை கேள்வியாய் பார்க்க,.. “இல்ல,… அது” என இழுத்தவள்,…. “நீங்க ஏன் இந்த போலீஸ் வேலையை விட்டுட கூடாது” என்று சட்டென்று கேட்டவள், அவனது முறைப்பை வாங்கி கட்டிக் கொண்டாள்,…

“போலீஸா ஆகணுங்கிறது என்னோட பலநாள் கனவு, ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன், ஆனா நீ எவ்ளோ அசால்டா வேலையை விட்டுட சொல்லி சொல்லுற” என்றான் கொஞ்சம் அதட்டலான குரலில், அவள் தன் நலன் கருதி தான் இப்படி கூறினால் என்று புரிந்தாலுமே, அவனால் தன் வேலையை அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுத்து விட முடியாது, இதில் கடந்த ஒரு வாரமாக அவள் தன்னை நெஞ்சில் தாங்காத குறையாக கவனித்துக் கொண்டாலும், தான் தன்னை பிடித்திருக்கா என்று கேட்ட சிறு கேள்விக்கு கூட அவள் பதில் அளிக்காமல் போனது அவனை கோபத்தில் தள்ளி விட்டிருந்தது….
நேரடியாக அவளிடம் கோபம் கொள்ளவில்லையென்றாலும், உள்ளுக்குள் கோபத்தோடு சேர்த்து வருத்தமும் இருக்க தான் செய்தது, அதனால் தான் கொஞ்சம் முறைத்துக் கொண்டே பதில் கூறினான்….

“எனக்கு புரியுதுங்க, ஆனா ரிஸ்க்கான வேலை அவசியம் இல்லன்னு தோணுது, பாட்டி கூட இது தான் சொல்றாங்க, பேசாம விட்டுடுங்களேன் இந்த வேலையை” என்றாள் மீண்டும்,…

“என்ன நித்து, என் மேல உனக்கு அவ்வளவு அக்கறையா? பட் ஏன்?” அவன் புருவம் உயர்த்தி வினவ,… “உங்க மேல எனக்கு அக்கறை இல்லாம இருக்குமா? நீங்க என்னோட கணவனாச்சே, எப்படி கவலை படாம இருக்க முடியும்” என்றாள்,…

அவள் வார்த்தைகளால் அவன் மனது குளிர்ந்து போனது உண்மை, ஆனாலும்,… “இந்த அக்கறை, கவலை எல்லாம் எவ்வளவு நாளைக்கு நித்து, நாளைக்கே உன் லவ்வர் வந்து கூப்பிட்டா அவன் பின்னாடியே போயிடுவ, உன் பேச்சை கேட்டு நான் வேலையையும் இழந்துட்டு பைத்தியகாரனா சுத்த வேண்டியது தான்” என்றதும் அவள் முகம் சிறுத்து விட்டது,…

“நித்து நீ எனக்கு நிரந்தரம் இல்ல, அதை என் மைண்ட்ல ரொம்ப அழுத்தமாவே பதிய வச்சுகிட்டேன், ஸோ நீயும் இனி என் கரியர் லைஃப்ல மூக்கை நுழைக்காதே, உங்களை மாதிரி பொண்ணுங்களால தான் ஆண்கள் எங்க வாழ்க்கை நிம்மதியற்றதாகவே போயிட்டு இருக்கு,” என கடுமையான முகத்துடன் கூறியவன், வெளியே நடந்து விட்டான்,….

ரிஷியிடமிருந்து ஒரு நாளும் இது போல் இவ்வளவு பெரிய பெரிய வார்த்தைகளை கேட்டிடாத நித்யா, உருக்குலைந்து போனாள், கண்ணீர் அதுபாட்டிற்கு கட்டுப்பாட்டை மீறி ஓட, சமைந்து போய் அமர்ந்து விட்டாள், “ஏன்,… ஏன் கருணா? எதுக்காக என் வாழ்கைக்குள்ள வந்த நீ? உன்னை நான் பார்க்காமலேயே இருந்திருக்கலாம்னு தோணுது, உன்னால உனக்கு செஞ்சி கொடுத்த சத்தியத்துக்காக தான் என் மித்துகிட்ட ஆசையா ரெண்டு வார்த்தை கூட உட்கார்ந்து பேச முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கேன், ‘உங்களை பிடிச்சிருக்கு’ங்கிற சின்ன வார்த்தை அவருக்கு எவ்வளவு சந்தோசத்தை கொடுக்கும்னு எனக்கு தெரியும், தெரிஞ்சும் நான் அதை சொல்லல, என்னால சொல்ல முடியல, மனசு முழுக்க அவர் தான் நிறைஞ்சு போயிருக்காரு, ஆனா வாய்விட்டு அதை என்னால சொல்ல முடியல, காரணம் நீ.. நீ மட்டும் தான் கருணா,…

நான் உன்னை லவ் பண்ணலடா, என் மித்துவை தான் லவ் பண்ணுறேன், அதை நான் எப்போவோ புரிஞ்சிக்கிட்டேன், ஆனா என்னால உன் மனசை நோகடிக்க விரும்பல, உன் கிட்ட பேசணும், உனக்கு புரிய வைக்கணும், நீ புரிஞ்சிக்கிட்ட பிறகு தான் என் மித்து கிட்ட என் மனசுல உள்ளதை பத்தி சொல்லணும்னு உறுதியா இருக்கேன், எப்போ வருவ, சீக்கிரம் வா கருணா, என்னால என் மித்து கஷ்டப்படுறத்தை பார்க்க முடியல” எனறு மடிந்து போய் அழுது கரைந்தவளின் நினைவலைகள் கடந்த நாட்களை நோக்கி சென்றது,…

சரியாக ரிஷி நித்யாவின் திருமண நாள்க்கு மூன்று வாரத்திற்கு முன்பு,….

“அண்ணா,…. அண்ணா” என்று டீவியின் முன்பு காமெடி காட்சிகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த வருணேஷின் அருகில் அமர்ந்து அவனது மணிக்கட்டின் பகுதியினை சுரண்டி கொண்டிருந்தாள் நித்யா,…

“சொல்லு ஸ்ரீ” என்று தங்கையிடம் எதிர்வினையாக கூறினானே தவிர, அவனது மொத்த கண்ணும் டீவியில் தான் நிலைத்து நின்றது….

“அண்ணா… இன்னைக்கு மதியம் நீ சாப்பிட்ட இறால் குழம்பும், இறால் வருவலும் நான் சமைச்சது, அதுவும் உனக்காக பார்த்து பார்த்து ருசியா பண்ணேன்” அவள் எதற்கோ ரூட் போட்டு, அவன் தலையில் ஐஸ் கட்டியை தூக்கி வைக்க,… ஏற்கனவே மதியம் சாப்பிட்ட இறால் குழம்பின் ருசி இன்னமும் நாக்கை விட்டு அழியாமல் இருந்தவன்,… “நிஜமாவா ஸ்ரீ” என்றான் இப்போது தங்கையை ஆச்சரியமாக ஏறிட்டு,…

“நிஜமா தான் அண்ணா” அவள் சமத்து பிள்ளையாக இமைகள் படபடக்க கூறவும்,… “நல்லதுடா,… இனி நீயே சமையல் பண்ணு, அண்ணனுக்கு உன் கைப்பக்குவம் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான்,…

“கண்டிப்பா அண்ணா,… உனக்காக நான் இது கூட பண்ணமாட்டேனா” என்றவள்,… “அண்ணா…. நான் ஒன்னு கேட்கவா” என்றாள் தயங்கி கொண்டே,…

“கேளுடா” என்றவன் டீவியின் பக்கம் பார்வையை திருப்பிக் கொள்ள,… “அண்ணா,… எனக்கு உன் ஸ்கூட்டி வேணுமே” என்றாள்,….

சட்டென்று அவள் புறம் திரும்பி அவளை ஏற இறங்க பார்த்தவன்,… ‘ஒஹ்… இதுக்கு தான் இந்த உருட்டா’ என எண்ணியவன்,… “எதுக்கு” என்றான் பார்வையை கூர்மையாக்கி,…

“நாளைக்கு சவிதா ரோஜா வாசுகி இவளுங்கள்லாம் பக்கத்து ஊர்ல புதுசா தொறந்திருக்க சூப்பர் மார்கெட் போறாங்களாம், அதான் நானும் போயிட்டு வரலாம்னு” அவள் இழுக்க,… “எங்க வீட்டு மகாராணி ஸ்கூட்டில தான் போவீங்களோ, பஸ்ல போக வேண்டியது தானே” என்றான்

“அவளுங்க மூணு பேரும் ஸ்கூட்டியில தான் வராளுங்க, எனக்கு தான் ஸ்கூட்டி வாங்கி தரல, பரவால்ல, உன்கிட்ட இருக்கிறதயாச்சும் தரலாம்ல ஒரே ஒரு நாளைக்கு” என்றாள் சிறு கெஞ்சலுடன்….

“நீ இப்படியெல்லாம் கேட்பேன்னு தெரிஞ்சிருந்தா, ஸ்கூட்டிக்கு பதிலா முரட்டு பைக்கா வாங்கிருப்பேனே” அவன் புலம்ப,… “நீ எவ்வளவு பெரிய முரட்டு பைக்கா வாங்கினாலும் அதையும் நான் சுலபமா ஓட்ட பழகிப்பேன்” என்று கெத்தாக கூறியவளை,… “முதல்ல உனக்கு ஸ்கூட்டி ஓட்ட தெரியுமா?” என்று சந்தேகத்தோடு பார்த்தான் வருணேஷ்,…

“அதெல்லாம் உன்னை விட சூப்பரா ஓட்டுவேன், ரோஜா எனக்கு பழகி கொடுத்திருக்கா” அவள் பெருமையாக கூற,… “லைசன்ஸ் இருக்கா?” என்றான் கூரிய விழிகளால்…

“பக்கத்துல இருக்க ஊருக்கு போக எதுக்கு லைசன்ஸ், போலீஸ்காரங்களாம் இருக்க மாட்டாங்கண்ணா, சும்மா கேள்வி மேல கேள்வி கேட்டு குடையாம இந்த ஒருவாட்டி மட்டும் தான்ண்ணா” என்றாள் இறைஞ்சும் குரலில்,…

சில நொடிகள் யோசித்தவன்,… “உனக்கு சூப்பர் மார்கெட் போகணும் அவ்வளவு தானே, சரி நானே உன்னை கூட்டிட்டு போறேன்” அவன் கூற,… “அதெல்லாம் வேணாம், நான் என் தோழிங்களோட தான் போவேன், உன்கூட எனக்கு போரடிக்கும், ப்ளீஸ் அண்ணா, என் செல்ல அண்ணால்ல, அம்மா கிட்ட கூட அனுமதி வாங்கிட்டேன், உன் அண்ணன் கிட்ட கேட்டுக்கோனு சொல்லிருச்சி, ப்ளீஸ் அண்ணா” அவள் கெஞ்சலை நீட்டிக் கொண்டே போக, ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க முடியாதவன்,… “சரி போயிட்டு வா அதுக்கு முன்னாடி நீ எப்படி ஸ்கூட்டி ஓட்டுறனு நான் பார்க்கணும்” என்றவுடன் அவளும் வேகமாக அவனை வாசலுக்கு அழைத்து சென்று, வெளியே நின்ற அண்ணனின் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து ஓட்டிக் காட்ட தொடங்கிவிட்டாள்….

அவள் நேர்த்தியாக ஸ்கூட்டி ஓட்டியத்தை கண்டு, நிம்மதியடைந்தவன், “போலீஸ்கிட்ட மாட்டிக்காம சீக்கிரமே வீட்டுக்கு வந்து சேரு, மாட்டிக்கிட்டா ஃபைன் கட்டுற பணத்தையும் என்கிட்ட தானே வந்து கறப்ப” என்றவன் அவளுக்கு மேலும் சில பல அறிவுரைகளை வழங்கிவிட்ட பிறகே முழு அனுமதி தந்தான், சந்தோசத்தில் துள்ளிகுதித்த நித்யா… “நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்திடுறேன்” என்று ஓடினாள் தன் தோழிகளை காண,…

நித்யாவிற்கு தோழிகள் என்றால் சவிதா, ரோஜா, வாசுகி இம்மூவரும் தான், சின்ன பிள்ளையிலிருந்தே நெருங்கிய தோழிகள், அவர்கள் வசிக்கும் ஒவ்வொருவரின் வீடும் இரண்டு மூன்று வீடு தள்ளி இருக்கும் என்பதால் நால்வரும் எந்நேரமும் ஒன்றாக தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள், நித்யா பெண்பிள்ளை என்பதால் அவள் அண்ணன் வருணேஷை போல் வெளியூர் சென்றல்லாம் அவள் படிக்கவில்லை, உள்ளூரிலேயே தான் தன் படிப்பை முடித்தாள், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறாள், அதற்கு மேல் படிக்க அவளுக்கும் விருப்பமில்லை, பெண்பிள்ளையை வெளியூர் அனுப்பி படிக்க வைக்க அவளின் தாய் தமையனுக்கும் விருப்பம் இல்லை என்பதால் அதோடு தன் படிப்பை நிறுத்தியிருந்தாள்…

அவள் தோழிகளுக்கும் படிப்பில் அவ்வளவு சூட்டிகை இல்லாததால் அவர்களும் படிப்பை தொடரவில்லை, வீட்டு வேலை செய்கிறேன் பேர்வழி என்று தாய்க்கு தொந்திரவு கொடுப்பது, ஊர் மேய்வது, யாரிடமாவது வேண்டுமென்றே போய் வம்புக்கு நிற்பது இப்படி தான் சென்று கொண்டிருந்ததது அத்தோழிகளின் வாழ்க்கை,……

இதனிடையே தான் “என் அப்பா எனக்கு ஸ்கூட்டி வாங்கி தந்திருக்கார்” என்று அலட்டிக் கொண்டு வந்து நின்றாள் வாசுகி, அவளை தொடர்ந்து தன் வீட்டினரையும் நச்சரித்து சவிதாவும் செகேண்டில் ஒரு ஸ்கூட்டி வாங்கி விட, ரோஜா தன் தமக்கையின் ஸ்கூட்டியை கைப்பற்றி மூவரும் ஸ்கூட்டி பழக ஆரம்பித்தனர்,…

நித்யாவிற்கு தன் வீட்டின் நபர்களை பற்றி தெரியும், அண்ணன் தற்போது கைநிறைய சம்பாத்தித்தாலும் தனக்கு ஸ்கூட்டி வாங்கி தர மாட்டான், தெருவை விட்டே தாண்ட விடாதவர்கள் தனக்கா ஸ்கூட்டி வாங்கி தர போகிறார்கள் என்று வாங்கி கேட்டு மூக்கை உடைத்துக் கொள்ள விரும்பாமல் தோழியின் வண்டியை வைத்தே அவளிடமே கற்றுக் கொண்டாள்,…

இப்படி போய் கொண்டிருந்த நாட்களில் தான், பக்கத்து ஊரில் புதியதாக சூப்பர் மார்கெட் ஒன்று திறந்திருப்பதாக விஷயம் வெளிவர, தோழிகள் அங்கு செல்வதற்காக பிளான் போட்டனர்,… வீட்டிற்கு தெரியாமல் கொஞ்சம் தொலைவான இடத்திற்கு போயிருக்கிறாள் தான், ஆனால் இந்த முறை அவளே ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை,… தோழிகளிடம் கேட்டால் தருவார்கள் தான், ஆனால் அவர்களை தொந்திரவு செய்யாமல், தன் வீட்டு வண்டியில் சென்று வரலாமே என்று அண்ணனிடம் ஐஸ் வைத்து, எப்படியோ சம்மதமும் வாங்கி விட்டாள், தோழிகளிடம் சந்தோஷமாக கூறி குதூகளித்தாள்,.. அடுத்த நாள் தோழிகளுடன் சேர்ந்து அந்த டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்க்கு கிளம்புவதற்காக ஆயத்தமானாள் விதி அன்றிலிருந்து அவள் வாழ்வில் விளையாட ஆரம்பித்து விட்டது தெரியாமல்,…

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்