Loading

அத்தியாயம்: 26

 

மஹதியிடம் பேசிக் கொண்டிருந்தவன் நிச்சயமாக இதைப் பார்த்திருக்கவில்லை. அவன் பின்னே ஆரா வந்து நின்றிருப்பாள் என்பதை, ஏற்கனவே அவனின் குழப்பமான முகம் கண்டு ஆயிரம் கேள்விகளைக் கேட்டு குடைந்தவள் இப்போது என்ன கேட்க போகிறாள் என்ற அச்சத்துடன்.

 

“சொல்லு ஆரா!” என்றவன் முதலில் கையில் இருந்த அலைப்பேசியைச் சட்டை பையில் போட்டான்.

 

“யார்கிட்ட பேசிட்டு இருந்த?” பட்டெனக் கேட்டாள் பெண்.

 

“ராங்க் நம்பர் ஆரா” என அவன் சமாளிக்க முயன்ற போது.

 

“ராங்க் நம்பர்கிட்ட தான் இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருந்தீயா? உன் போனை கொடு” என அவள் கேட்ட போது . மகேஷின் உடல் முழுக்க வியர்த்துக்கொட்ட ஆரம்பித்தது.

 

“ஏய் என்னடா ஆச்சு? ஏன் இவ்வளவு பயப்படுற” என மகேஷின் கைபிடித்து அவள் வினவினாள்.

 

“ஒன்னும் இல்லை ஆரா, வா முதலில் இங்கே இருந்து கிளம்புவோம்” என அங்கும் இங்கும் தலை திருப்பிப் பார்த்தபடி அவளை அழைத்துச் சென்றான்.

 

“என்ன பார்க்கிற மகேஷ். யாரை தேடுற” என அவளும் அங்கும் இங்கும் தலையைத் திருப்பிய போது,

 

“ஆரா, நீ என்னை நம்புறல்ல வா” என்றான்.

 

“என்ன பைத்தியம் மாதிரி உளறிக்கிட்டு இருக்க”

 

“சொல்றதை புரிஞ்சுக்கோ ஆரா, நம்ம முதலில் இங்கே இருந்து கிளம்பணும் அவ்வளவு தான்” எனச் சொல்லியவன் அவளைப் பைக்கில் ஏற்றிக்கொண்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டவன் நீண்ட பெருமூச்சொன்றை விட்டான். அவனுடைய விழிகளில் இருந்த பயம் நீங்கி இருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் துளியும் அறியாமல் சென்னை. மாநகரின் வாகன நெரிசல்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பெண்.

 

 

 

“க்ரிஷ்! க்ரிஷ்! என்ன தான் பண்ணிட்டு இருக்க? பேசு” ஐந்து முறைக்கு மேலாவது கத்தியிருப்பாள் ஆரா.

 

“ஆரா ஏன் கத்துற, ப்ரெஷ் பண்ணிட்டு இருந்தேன் வெயிட்” அவனின் குரல் ஆழமான கிணத்தில் இருந்து பேசுவது போல் கேட்டது.

 

“என்ன சொல்ற ஒன்னும் புரியலை, கொஞ்சம் சத்தமா தான் பேசேன்” சலித்துக்கொண்டாள் பெண். பல மையில் தூரம் அவன் கடந்து இருந்தாலும். சென்னைக்கும், டெல்லிக்கும் இருக்கும் இடைவெளியை காதல் கொண்டு இரு நெஞ்சமும் நிரப்புக்கொண்டிருந்தது.

 

“ஹே ஸ்மைலி உனக்குப் பொறுமையே இல்லை தெரியுமா? நான் ப்ரெஷ் பண்ணிட்டு இருந்தேன் அப்போ கால் பண்ணிட்ட” அவனும் பொறுமையிழந்து கத்தியிருந்தான்.

 

“க்ரிஷ்! நான் அனுப்புற ஆடியோலாம் நீ கேட்குறீயா?” எனக் கேட்டாள்.

 

“கேட்குறேனே, ஏன் ஆரா அப்படிக் கேட்கிற?”

 

“நிஜமா கேட்குறீயா?”

 

“கேட்டேன்”

 

“அப்பறம் ஏன் அதுக்கெல்லாம் ரிப்ளை பண்ணலை?” கோபம் போல் காட்டிக்கொண்டாள்.

 

“உன்னோட அந்த அழகான குரலை கேட்டு, ஒலிக்கிறது என் ஆராவோட குரலை இல்லை புல்லாங்குழல் இசையான்ற டவுட்ல , அதை ஒரு தாலாட்டு மாதிரியே கேட்டுட்டுத் துங்கிட்டேன் ஆரா” என அவன் சொன்னவுடன் அவளின் முத்து முரல்கள் தெரிய புன்னகைத்தாள். ஆதித் கிருஷ்ணாவால் அதைப் பார்க்க மட்டும் தான் முடியவில்லை அவளின் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை அறிந்திருந்தவன் மென்மையாய் சிரித்தான்.

 

“சும்மா கதை விடாதே க்ரிஷ், தூங்கிட்டன்னு சொல்லு நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன், முக்கியமான விசயம் அனுப்பியிருந்தேன் நீ தான் கேட்கவே இல்லையே” எனச் சலித்துக்கொண்டாள் ஆரா.

 

“என்ன முக்கியமான விசயம்?” அவனும் தெரியாதது போல் தன் காதலிக்கு இணையாய் நடித்தான்.

 

“சர்ப்ரைஸ்ன்னு சொல்லியிருந்தேன்”

 

“அப்படியா சொல்லியிருந்த ஆரா?” கேள்வியைப் போல் அவன் கேட்க,

 

“போ க்ரிஷ், நீ ரொம்ப மோசம் உனக்கு நான் முக்கியமே இல்லை, உனக்கு உன்னோட மீட்டிங்ஸ் ப்ளா ப்ளா தான் முக்கியம், எனக்காகக் குட்டியா கூட நேரத்தை ஒதுக்க மாட்டேன்ற. பாரு நீ தேடினா கூடக் கிடைக்காத தூரத்துக்குக் காணாமல் போயிடுறேன்”

 

“ஏய் ஸ்மைலி, நீ எவ்வளவு தூரம் என்னை விட்டு விலகினாலும், நான் உன்னைத் தேடி துரத்தி வருவேன்”

 

“உன் கண்ணுக்கே தெரியாமல் மறைஞ்சு போயிடுவேன்”

 

“சரி கோப படாதே, எப்படி இருக்கான் அவன்?” எனக் கேட்டான் ஆதித் கிருஷ்ணா

 

“அவனா? யாரை கேட்கிற க்ரிஷ்?”

 

“அதான் நான் இருக்க வேண்டிய இடத்தில அவன் இருந்துக்கிட்டு எல்லாச் சேட்டையும் பண்ணிட்டு அலையுறானே அவன் தான், அவனுக்குப் பெட்ரூம் வரைக்கும் இடம் கொடுத்து வச்சிருக்கப் போல?”

 

“நீ யாரை சொல்ற க்ரிஷ்?”

 

“அவன் தான் ஸ்கூபி” எனச் சொல்லி அவன் அவளில் குரல்பதிவை கேட்டிருக்கிறான் என்பதை உறுதி செய்ய. சத்தமாய்ச் சிரித்தாள் ஆரா.

 

“அய்யோ க்ரிஷ் என்னால முடியலை” அவள் சிரித்தபடி பேச,

 

“ஹே ஸ்மைலி நீ சிரிச்சா அழகா தான் இருப்ப, ஆனால் இப்போ கொஞ்சம் சிரிக்காமல் பேசுறீயா?” கெஞ்சலாய் அவன் கேட்க,

 

“அது அவன் இல்லை அவள்” என்றாள் ஆரா, இப்போது அவன் சிரிக்கும் முறையானது.

 

“நிஜமாவா சொல்லுற” என அவனும் சிரித்துக்கொண்டே கேட்க,

 

“ஏய் ஸ்கூபி இங்கே வாடி, என் ஆளுக்கு ஹாய் சொல்லு” என மொசு மொசுவெனத் தன் அறையைச் சுற்றிக்கொண்டிருந்த ஸ்கூபியை மடியில் தூக்கி சொல்ல,

 

ஸ்கூபியும் “லொள் லொள்” எனக் குரைக்க.

 

“பார்த்தியா க்ரிஷ் உனக்கு ஹாய் சொல்லுறா” என்றாள் ஆரா.

 

“அது ஹாய் சொல்லை லவ் யூ சொல்லுது, நீ தான் எனக்குச் சொல்ல மாட்டேன்றல அதான் ஸ்கூபி சொல்லுது” என ஆதித் கிருஷ்ணா சொன்னவுடன். ஆராவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

 

“ஏய் ஸ்கூபி போடி அந்தப் பக்கம், என் ஆளை நீ கரெக்ட் பண்ண பார்க்குறீயா?”அவளின் குழந்தை தனமான பேச்சை ரசித்துக்கொண்டிருந்தான் அந்தக் காதலன். காதல் என்றவுடன் தன்னை விலகி ஓடியவள் இப்போது அவனே போகச் சொன்னாலும் அவள் அவனை விட்டு விலகமாட்டாள் என்ற நம்பிக்கையும். அந்த ஆழமான நேசமும் அவளை மேலும் காதலிக்க வைத்தது.

 

நேசம் கொண்ட நெஞ்சங்கள் விலகி இருந்தாலும் தினமும் அந்த அரைமணி நேர உரையாடல் இருவரின் காதலையும் உயிர்ப்புடன் வைத்தது.

 

“க்ரிஷ்!! நீ திரும்பி வரும் போது நிறையச் சர்ப்ரைஸ் இருக்கு”

 

“என்ன சர்ப்ரைஸ்” என அவன் ஆர்வமான போது.

 

“சஸ்பன்ஸ்” எனச் சொல்லி அவன் வாயை அடைத்திருந்தாள் அவள். அப்போது சொல்லியிருந்தால் கூட இப்படி ஒரு நிலையை ஆராவுக்கு அவன் வரவிட்டிருக்கமாட்டான்.

 

 

 

இரவு நேரங்களில் கூட அவளின் தெருமுனையில் அமர்ந்திருப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தான் மகேஷ். இன்னும் இரண்டே நாட்கள் தான் இருக்கிறது ஆரா இந்தியாவில் இருந்து நார்வே நோக்கி பயணம் செல்ல, நார்வே செல்வதற்கான ஏற்பாடுகள் அத்தனையும் கச்சிதமாய்ச் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மகேஷோ தெருமுனையில் அமர்ந்தபடி ஆராவின் வீட்டை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். அவள் வெளியே செல்லும் நேரமமும், அந்தப் பகுதியில் ஆட்கள் நடமாட்டமில்லாத நேரங்களையும் அவன் நன்கு அறிந்தே வைத்திருந்தான்.

 

மஹதியிடம் கைநீட்டி வாங்கிய பணத்திற்கு அவன் ஆராவை கொலை செய்ய ஆயத்தமாகிறானா? ஆதித் கிருஷ்ணா வருவதற்குள் ஆராவை தீர்த்துக் கட்ட முடிவு செய்து விட்டானா என்பதெல்லாம் அவன் மட்டுமே அறிந்த ரகசியம். அவன் கையில் வைத்திருந்த நீளமான கத்தியை பார்த்தான். நன்கு தீட்டபட்ட கத்தி இரண்டடி உயரம் இருக்கும் மரத்திலான கைப்பிடி. அதை எடுத்து பார்த்தவன் சட்டையின் பின் வைத்து மறைத்துக்கொண்டான். தனது அலைப்பேசியில் இருந்த ஆராவின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனின் விழிகளில் கண்ணீர் விழிந்தது. அவன் அவள் மீது வைத்திருக்கும் ஒரு தலைக் காதலுக்குச் சாட்சி இந்தக் கண்ணீர் துளிகள்.

 

அப்போது அவனின் அலைப்பேசி இசைந்து, மாலதி காலிங் என மிண்ணி மறைந்தது. கண்ணீரை துடைத்தெறிந்தான்.

 

“மகேஷ்” அவளின் குரலில் அப்படி ஒரு பயம்,

 

“சொல்லு மாலதி” என இவன் மிகவும் சாதாரணமாகப் பேசினான். எப்போதும் இவன் இப்படிப் பேசியதே இல்லை.

 

“அன்னைக்கி பாட்டு பாடிட்டு வந்துட்டேன், பேமெண்ட் இன்னும் வரலை” தயங்கிய படி கேட்டாள்.

 

“என்னை மன்னிச்சிடு மாலதி, உன்னை ரொம்பக் கஸ்டபடுத்திட்டேன்” என்றான் பகீரங்கமாக.

 

“மகேஷ் நீ தான் பேசுறீயா?” அதிர்வுடனே கேட்டாள் மாலதி.

 

“நான் தான் பேசுறேன், என்கிட்ட உன்னோட எந்தப் போட்டோஸூம் இல்லை, என்னோட தேவைக்காக, உன்னைப் பயன்படுத்திகிறதுக்காக உன்னை ஏமாத்தினேன் நீ நம்பிட்ட. இனிமேல் அப்படிப் பண்ண மாட்டேன். என்ன மன்னிச்சிரு. உன்னோட பேமெண்ட் நாளைக்குக் கிரேடிட் ஆகிடும்” என்றான். அவன் பேசுவதை மாலதியால் நம்ப முடியவில்லை.

 

“நிஜமாதான் சொல்லுறீயா மகேஷ்” என்றாள் மாலதி.

 

“நிஜம் தான் மாலதி. ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறேன்” என்றவன் அவளிடம் பேச திராணியற்று அழைப்பை துண்டித்திருந்தான். மாலதியை அவனின் இச்சைக்கு இணங்க வைப்பதற்காக. அவளின் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகச் சொல்லி மிரட்டிக்கொண்டிருந்தான். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவன் இப்படித் தான் செய்து கொண்டிருந்தான். ஆனால்,

 

ஆராவின் மீது இருப்பது ஈர்ப்போ, அவளை அடைய வேண்டும் என்ற ஆசையோ இல்லை என்பதை அவன் இப்போது தான் உணர்ந்திருக்கிறான். அது தூய்மையான காதல் ஆனால் அதற்கு அவன் தகுதியற்றவன் என்பதையும் உணர்ந்திருந்தான்.

 

வீல் எனக் கேட் திறக்கும் சத்தத்தைக் கேட்டுத் திரும்பினான். இருள் சூழ்ந்திருந்த அந்த நிசப்தம் நிறைந்த அந்த இரவு, அவன் செய்யப் போகும் காரியத்திற்கு உறுதுணையாய் இருந்தது. ஆராவோ இரவு உடையில் கையில் குப்பை பையைத் தூக்கி கொண்டு வெளியே வந்தாள். வழக்கமாக இந்த நேரத்தில் தான் குப்பையைப் போட வெளியே வருவாள் என்பதை அவளுக்கே தெரியாமல் கண்காணித்து வைத்திருந்தான். குப்பை தொட்டி இருக்கும் இடத்தை அவள் அடைந்தாள். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை கையில் எடுத்துக்கொண்டே அவளை மெல்ல தொடர்ந்தான். அவன் பின்னே வருவதை அறியாதோ பெண்ணோ குப்பை தொட்டியில் குப்பையைக் கொட்டினாள்.

 

அவளை மெல்ல நெருங்கிக்கொண்டிருந்தவன் இப்போது இரண்டடி இடைவெளியில் நின்றிருந்தான். அவளின் பின்னால் இருந்து அவளைத் தன்னோடு இழுத்தவன், அவனுடைய கத்தியை அவளின் கழுத்தில் வைத்திருந்தான்.

 

“யாரது??” எனப் பயத்தில் அவள் கேட்க,

 

“எதுவும் பேசாமல் வீட்டுக்குள்ள போ” என்றான் அவன்.

 

“மகேஷ் நீயா?” அவன் முகத்தைப் பார்க்கவில்லை என்றாலும் அவனுடைய குரலை வைத்தே அவனை அடையாளம் கண்டுக்கொண்டாள் பெண்.

 

“மகேஷ் உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா? ஏன் இப்படிப் பண்ணுற?”

 

“என்ன மிருகமா மாத்தாதே ஆரா சொல்றதை செய்” எனக் கட்டளையாய் வெளி வந்தது அவனின் வார்த்தைகள்.ஆனால் அவனின் கரங்கள் நடுங்கியது.

 

“மகேஷ்!! நீ என்னடா பண்ணிட்டு இருக்க? உன்னோட கை ஷிவர் ஆகுது பாரு” அவள் இன்னும் நண்பனிடம் பேசுவதைப் போல் தான் பேசினாள்.

 

“ஆரா! சொல்றதை செய்யப்போறீயா இல்லையா? எதாவது பண்ணி தப்பிச்சடலாம்ன்னு மட்டும் யோசிக்காதே, அது உன்னால முடியாது” என மிரட்டலாய்ச் சொன்னான் அவன்.

 

நண்பன் என்று நம்பிக் கொண்டிருந்தவனின் சாயம் வெளுத்து போவதை அவளால் உணர முடிந்தது. ஆனால் எதற்காக இதைச் செய்கிறான் என்பதை மட்டும் அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் அமைதியாய் அவன் சொன்னதைக் கேட்டாள். அவன் சொன்னது போல் வீட்டிற்க்குள் நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து அவனும் சென்றான். வீட்டிற்க்குள் நுழைந்தவுடன்,

 

“உன்னோட போன் எங்கே?” என்பது அவனின் முதல் கேள்வியாய் இருந்தது. கத்திமுனையில் மிரட்டி அவளின் அலைப்பேசியை அவளிடம் இருந்து பறிக்க முற்பட்ட, அதே சமயம் ஆதித் கிருஷ்ணாவின் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. வெடுக்கென அவள் கைகளில் இருந்து அந்தச் செல்போனை பறித்தவன். கத்தியை வைத்து அவளின் கழுத்தில் மேலும் அழுத்தம் கொடுத்தான்.

 

இத்தனை நேரம் அவள் பிடித்து வைத்திருந்த ஒட்டு மொத்த தைரியமும் உடைந்து போனது. தன்னவனின் பெயரைக் கண்டதும் அவனிடம் பேசி விட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. எப்படியும் மரணிக்கப் போவது உறுதியாகிவிட்டது. அவனிடம் ஒருமுறையேனும் பேசி விட வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற ஏக்கத்துடன்.

 

“மகேஷ்! ஒரு முறை மட்டும் பேசிக்கிறேன் ப்ளீஸ்” கெஞ்சலாய் ஒலித்தது ஆராவின் குரல். நிசப்தம் நிறைந்த அந்த வீட்டில் முதல் முறை அவள் கண்ணீரின் முதல் துளி அவளின் கன்னம் நழுவி கீழே விழுந்தது.

 

“முடியாது,பேசினால் நீ இங்கே நடக்குறதை சொல்லிடுவ” என்றான் அவன்.

 

“ப்ளீஸ் சொல்ல மாட்டேன்” என அவள் கதறி அழுதாள். மரணத்தைத் தழுவ

 

இருக்கும் கைதியின் கடைசி ஆசைப்போல் அவள் தன்னவனிடம் பேசியே ஆக வேண்டும். என்ற கோரிக்கையை மகேஷிடம் விடுத்தாள். அவளின் கண்ணீருக்கு விடையாய் மகேஷிடம் இருந்து அவளுக்கு அனுமதி கிடைத்தது.

 

அவளை அழைத்து அழைத்துக் களைத்துப் போய் அழைப்பை துண்டிக்கச் சென்ற ஆதித் கிருஷ்ணாவிற்கு, இறுதியாய் ஒலித்த ரிங்கின் முடிவில் ஆராவின் குரல் அவன் செவிகளில் தெள்ள தெளிவாய் வந்து விழுந்தது.

 

“க்ரிஷ்!!” குரலில் இருக்கும் நடுக்கத்தை மறைத்தபடி பேசினாள் பெண்.

 

“ஹே ஸ்மைலி! எத்தனை முறை கூப்பிடுறது? ஏன் போன் எடுக்கலை” அவள் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் அவன் பயந்து போய்விட்டான் என்பது தான் நிதர்சனமான உண்மை.

 

“சாரி க்ரிஷ், குளிச்சிட்டு இருந்தேன்” எனச் சமாளிப்பாய் சொன்னவளின் செவியில் “சீக்கிரம் பேசிட்டு வை” அதட்டலாய் ஒலித்தது மகேஷின் குரல்.

 

“ஹே ஆரா!! என்ன சத்தம் அது? யாரோட குரல்” எனத் துரிதமாய்க் கேட்டான் ஆதித் கிருஷ்ணா.

 

“க்ரிஷ்! அது வந்து” என அவள் தடுமாறிய போது இரண்டடி கத்தியை அவள் கழுத்தில் அழுத்தி அழுத்தம் கொடுத்தான்.

 

“ஆரா! ஆர் யூ ஓகே?” எனச் சற்று பதற்றத்துடன் கேட்டான். எதோ தவறாய் இருப்பதை அவனால் உணர முடிந்தது. அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

 

“ஆரா! ஆர் யூ தேர்? ஆரா???” தொடர்ந்து அவன் கேட்ட போது.

 

“ஒன்னுமில்லை ஒன்னுமில்லை க்ரிஷ். நான் ஓகே தான். டிவி சத்தம் அதான் ஆஃப் பண்ணிட்டு வந்தேன்” என அவள் இயல்பாய் பேசிய பின் நிம்மதி பெருமூச்சை விட்டான் ஆதித் கிருஷ்ணா.

 

“நான் ரொம்பப் பயந்துட்டேன் ஆரா”

 

“பயப்படுற அளவுக்கு எதுவுமில்லை க்ரிஷ்” என்றாள் அவள்.

 

“ஹே ஸ்மைலி மிஸ் யூ டி?” என்றான் அவன்.

 

“நானும் தான் க்ரிஷ் ரொம்ப” என அவளிடம் இருந்து பதில் வந்தது.

 

“இனி மேல் என்னோட ஸ்மைலி பேபி டால் என்னை மிஸ் பண்ணணும்னு எந்த அவசியமும் இல்லை. ஜெஸ்ட் டூ டேஸ். உன் கண்ணு முன்னாடி இந்த க்ரிஷ் வந்து நிக்கப் போறேன். மனசு நிறைஞ்சிருக்கும் காதலோட, அண்ட ஐ ஹவ் எ சர்ப்ரைஸ் ஃபார் யூ மை டியர் ஸ்மைலி” என்க,

 

“நானும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன் க்ரிஷ். அதே காதலோட, இத்தனை நாள் பிரிவுக்கு அப்பறம் மீட் பண்ணப் போறோம்ன்ற ஏக்கத்தோட” என்றாள் அவள்.

 

“என்ன சர்ப்ரைஸ்ன்னு கேட்கவே இல்லையே” எனக் கேட்டான் அவன்.

 

“எப்படியும் நீ வந்து சொல்லுவல்ல க்ரிஷ், நான் இப்போ அவசரமா வெளிய கிளம்பிட்டு இருக்கேன் அப்பறம் பேசவா?” என்றாள் சற்று பதற்றதுடன்.

 

“சரி சரி பிஸியா இருக்கீயா? கேரி ஆன் மை டியர் ஸ்மைலி” என்றான்.

 

“க்ரிஷ்” என அவள் மீண்டும் அழைத்தாள்.

 

“ம்ம்ம் சொல்லு ஆரா” அவன் ஆர்வமாய்க் கேட்டான்.

 

“லவ் யூ க்ரிஷ் டில் மை லாஸ்ட் ப்ரீத்” தன் கடைசி மூச்சு இருக்கும் வரை அவனைக் காதலிப்பதாய் அவள் சொன்னாலும். இது வரை ஆரா இப்படிப் பேசியதில்லை என்பதை உணர்ந்தாலும்.

 

“மீ டூ ஸ்மைலி” எனச் சொன்னவுடன்.

 

“அப்போ நான் வைக்கிறேன் க்ரிஷ் பை” என்றாள்.

 

“ம்ம்ம்” என அவன் குரல் கேட்ட நொடியில் அழைப்பை பட்டெனத் துண்டித்திருந்தாள் ஆரா. இதற்கு முன் ஆரா இப்படி அழைப்பை துண்டித்ததில்லை. காதல் மொழிகள் பல பேசிவிட்டு தான் அழைப்பை துண்டிப்பாள். அதோடு அவன் சாப்பிட்டானா இல்லையா என்பதைக் கேட்டு தெரிந்துக்கொள்வாள் ஆனால் இன்று நடந்ததே வேறு. நடந்தேறிய விசயங்கள் ஆதித் கிருஷ்ணாவிற்க்குள் சிறிய சந்தேகத்தைக் கொடுத்தாலும். அடுத்ததாக அவனுக்கு இருந்த வேலையில் இதை மறந்தோ போனான்.

 

அதே சமயம் ஆராவின் வீட்டில்.

 

“குட் ஜாப் ஆரா!!” என மகேஷ் பல்லைக் காட்டினான். எதிரில் இருந்த கண்ணாடியில் மகேஷின் பிம்பம் தெரிய, தனக்குப் பின்னால் கத்தி வைத்து மிரட்டிக்கொண்டிருக்கும் அந்தக் குரூரமான முகத்தைப் பார்த்து நடு நடுங்கி போனாள் ஆரா.

Click on a star to rate it!

Rating 3 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்