Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 17

வந்திதாவிடம் பொய் சொல்வதை நினைத்து தன்னை தானே நொந்து கொண்ட அமுதன் , ” வந்தி செல்லம் , சாரி டி , உன் கிட்ட உண்மைய சொல்ற நிலமைல நா இல்லடி. ப்ளீஸ்டி என்னை மன்னிச்சுரு ” என்று மானசீகமாக அவளிடம் மன்னிப்பு வேண்டியவன் , ரூபன் இன்ஸ்டிடியூட்டில் தன் வண்டியை நிறுத்திவிட்டு , கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு, வந்தியின் நினைவுகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு தன் வேலையில் முழு கவனம் செலுத்த துவங்கினான்.

சிசிடிவி கேமரா வழியாக அமுதனை கண்காணித்து கொண்டிருந்த அந்நிறுவனத்தின் துணை இயக்குனர் வெங்கடராம சேஷாத்ரி , அவனது பாடவேலை முடிந்ததும் தன்னை வந்து பார்க்குமாறு கட்டளையிட்டவர் தன் வேலையில் மூழ்கிப்போனார்.

அமுதனும் அவரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை கவனித்தவன் , தன் வகுப்பை முடித்து கொண்டு காலை ஓர் ஒன்பதரை மணி வாக்கில் அவரை காண சென்றான். அமுதனின் வரவிற்காகவே காத்திருந்த வெங்கடராம சேஷாத்ரி , அவன் அறைக்குள் நுழைந்த மறுநொடி 

” என்ன வோய் புது மாப்பிள்ளை கலை முகத்துல நன்னா தெரியுறது ,  ரெண்டு வாரமா ஆத்துக்காரியோட ஆத்துல ஒரே கலகலப்பா இருந்தியோன்னோ ? ” என்று தன் பூணூலை அமுதனுக்கு நன்றாக  தெரிவது போல் வெளியில் எடுத்து போட்டார் அந்த ஐம்பது வயது ஐயங்கார் வெங்கட ராம சேஷாத்ரி.  

வெங்கட ராமனின் பேச்சில் கோவம் கொண்ட அமுதன் , 

“அத்திம்பேர் , நேக்கு நாழி ஆகறது… இப்போ கிளம்பினா தான் , நா நேரத்துக்கு ப்ரொடக்ஷன் ஆபீஸ் போக முடியும். அதுனாலே நீர் எது சொல்றதா இருந்தாலும் செத்த வேகமா சொல்றேளா ? நேக்கு நாழியாகறது ?”என்ற அமுதனை பார்த்து ஓர் ஆழ்ந்த பெரு மூச்சு விட்ட வெங்கட ராமன் , 

” டேய் அம்பி செத்த பொறு டா. நேக்கு உன் கிட்ட சொல்றத விட , கேக்குறதுக்கு தான் நிறையா கேள்வி இருக்கு…. ” என்றவர் பீடிகையுடன் துவங்க , 

” ஐயோ அத்திம்பேர் , நீர் என்ன கேக்க வரேல்னு நேக்கு நன்னா தெரியும். என் கொழுந்தியா நம்ம இன்ஸ்டிடியூட் மேல போட்ட கேஸ் பத்தி நேக்கு ஏதாச்சும் தெரியுமான்னு தானே கேக்க வரேல். நம்ம இன்ஸ்டிடியூட் மேல சத்தியமா நேக்கு ஒன்னும் தெரியாது அத்திம்பேர். ” என்ற அமுதனை வெங்கட ராமன் சந்தேக பார்வை பார்க்க , அவர் பார்வையின் அர்த்தம் புரிந்த அமுதனோ , 

” என்ன அத்திம்பேர் நீரு ? நா நம்மவாக்கு போய் துரோகம் பண்ணுவேனா ?அதுவும் நீரும் நானும் ஒரே கோத்திரம். அப்படி இருக்கச்ச  நா எப்படி அத்திம்பேர் உங்ககிட்ட பொய் சொல்லுவேன் ? ” என்று அமுதன் சரியாக அவரது ஜாதி பெருமை என்னும் பலவீனத்தில் அடிக்க , , வெங்கடராமனும் அவன் கூறியதை உண்மையென்றெண்ணி அமைதியானார்.

பின் அமுதனே அவரிடம்  போட்டு வாங்க முயன்றவன் , அவரை நெருங்கி 

” ஏன் அத்திம்பேர் … நம்ம பெரிய அத்திம்பேர் பையன் அதிரூபன் பொம்பநாட்டி விஷயத்துல ரொம்ப வீக்காமே. அப்படியா ? ” என்று வினவ , அதில் கோவம் கொண்ட வெங்கடராமர் ” ஏன்டா நோக்கு எவ்ளோ தைரியமிருந்தா , என் அண்ணன் பசங்கள என் முன்னாடியே இப்படி பேசுவ ? என் அண்ணன் பசங்க ரெண்டும் பத்திரமாத்து தங்கங்கடா… ” என்று அமுதனிடம் சண்டைக்கு செல்ல , 

” என்ன அத்திம்பேர் சொன்னேல் ? அண்ணண் பசங்களா ? பெரிய அத்திம்பேருக்கு ஒரே ஒரு பையன் , பேரு கூட  அதி ரூபன் தான ? ” என்று அமுதன் குழம்பி போய் வினவ ,

வெங்கட ராமன் அப்போது தான் , தான் வாய் தவறி உளறியதை உணர்ந்தவர் ” அது … அ … அது ஒன்னுமில்ல டா அம்பி …. அது …. ” என்று உண்மையை மென்னு முழுங்க , அவரது நல்ல நேரமா , அல்ல அமுதனின் கெட்ட நேரமா என்று தெரியவில்லை , சரியாக அந்நேரம் பார்த்து அமுதனுக்கு என்.கே ப்ரொடக்ஷன் ஆபிஸிலிருந்து அழைப்பு வர , வெங்கட் ராமன் தான் தப்பிக்க இது தான் சாக்கென்று , 

” அமுதா , நீ முதல்ல அந்த ப்ரொடக்ஷன் ஆஃபீஸ்க்கு போய் , ப்ரொட்யூசர் கிட்ட உன் கதைய சொல்லிண்டு வாடா அம்பி. நேக்கும் தலை பாரமா இருக்கு , செத்த நேரம் ஓய்வெடுத்தாதான் தலவலி நிக்கும். நீ போய் உன் வேலைய பாரு. நாழி ஆகிண்டே இருக்கு ” என்று அமுதனை கிளப்ப பார்க்க , அமுதனும் இதற்கு மேல் தோண்டி துருவி கேட்டால் , எங்கே தன் மேல் சந்தேகம் வந்து விடுமோ என்று பயந்தவன் , இப்போதைக்கு சற்று அடக்கி வாசிக்கலாம் என்றெண்ணி அவ்விடத்தை விட்டு நகர ஆயத்தமானான்.

” சரி அத்திம்பேர் , நேக்கும் நாழியாகறது. நாளைக்கு பாக்கலாம் ” என்று அமுதன் அவரிடம் விடைபெற்றான்.

 அமுதன் வெளியேறிய மறுநொடி , தன் அண்ணாவிற்கு அழைத்து , அமுதனிடம் தான் வாய் தவறி உளறி கொட்டியதை பகிர்ந்து கொண்ட வெங்கட ராமன் , அவன் ” நம்மவா ” என்றும் , அவனை தனக்கு நன்றாக தெரியுமென்றும் கூறி ,  அதற்கு பரிசாய் அவர் அண்ணனிடம் சில பல வசவுகளையும் வாங்கி கட்டி கொண்டவர் , உடனே அமுதனை ஒரு இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் கண்காணிக்க ஆள் அனுப்புமாறு அவரது அண்ணன் கட்டளையிட்டு அழைப்பை துண்டித்தார் .

தன் அண்ணன் தனக்கு கட்டளையிட்டது  போல் , ரங்கனுக்கு  அழைத்து , அமுதனை பின் தொடருமாறு வெங்கட ராமன் கட்டளையிட , அவனும் அமுதனை பின் தொடர்ந்து என்.கே ப்ரொடக்ஷன் அலுவலகம் சென்றவன் , அங்கே அமுதன் , அவனது கதை குறித்து அங்கிருந்த சினிமா தயாரிப்பாளரிடம் அமுதன் உரையாடிக்கொண்டிருப்பதை தன் அலைபேசியில் பதிவு செய்து , அதை வெங்கடராமனுக்கு அனுப்பி விட்டு , அவருக்கு அழைத்து அவன் வேறெங்கும் செல்லவில்லை என்று கூடுதல் தகவலையும் அளித்துவிட்டு தன் வீடு நோக்கி திரும்பினான்.

இங்கே அமுதனோ கண்ணாடி திரைவழியாக அவன் திரும்பி சென்றதை உறுதி செய்துக்கொண்டவன் , அங்கிருந்த தயாரிப்பாளரிடம் விடைபெற்று கொண்டு தன் இல்லம் திரும்ப தயாரானான்.

சரியாக அந்நேரம் பார்த்து அமுதனுக்கு அழைத்த சரண் ….

” சார் நம்ம தாய் குளத்தை எல்லாம் யாரோ கடத்திட்டாங்க சார் …. வந்திதா அத்தாச்சி , கௌரி , பத்மா அத்தை , வல்லி பாட்டின்னு எல்லாரையும் யாரோ கடத்திட்டாங்க சார் …. ” என்ற தகவலை கூற , அச்செய்தியை கேட்ட மறுநொடி , அமுதனின் மனம் தன் வீட்டு தாய்மார்களை எண்ணி பதற துவங்க , அவன் கண்களோ தன்னவளின் நிலையை எண்ணி கண்ணீரை கொட்டி தீர்த்தது.

தொடரும் …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      என்னடா பென்ஜில் இவ்வளவு ப்ளான் போட்டுருக்காங்க😱😱😱😱 பாவம் நம்ம ரூபி, ரூபன் அம்மா பண்ண ஒரே நல்ல காரியம் அந்த சத்தியம் தான்.