Loading

நிலவின் ஒளியில் இரவு முழுவதும் தன்னவனின் அணைப்பில் சுகமாய் உறங்கிக் கொண்டு இருந்தாள். விடியல் பூமியை தொடும் முன்னரே அவளை விட்டு பிரிந்தவன் “அவளின் நெற்றியில் காதலோடு முத்தம் வைத்து விட்டு சென்றான் “. அவள் எழும் போது அவன் அங்கு இல்லை’ அவனின் வாசம் மட்டுமே இருந்தது. பெட்டில் இருந்து எழுந்து தன்னுடைய காலை கடன்களை முடித்துக்கொண்டு அவனை தேட அவனோ யாருக்கும் சொல்லாமலே காலையிலேயே சென்று இருந்தான். 

          உதிரன் , யாரும் வெளி ஆட்கள் வருவதற்கு முன்னரே அறைக்கு சென்று இருந்தான். சூரியன் பூமியை தொட்டதும் “அப்பொழுது தான் எழுந்து வெளியே வருவது போல வெளியே வந்து சோம்பலை முறித்தான் “. அங்கு வேலை செய்துக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் ” இவனை ஒரு வேடிக்கை பொருள் போல பார்த்து விட்டு தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்”.

        ஹாலோ சார்! ஐ அம் குமரன் . அமைச்சர் நீதிமானின் பி.ஏ. நீங்க தானே கர்னல் உதிரன்?

           ஆமாம் .

     உங்களை பற்றி சார் நிறையவே சொல்லி இருக்காரு . உங்களுக்கு எதாவது உதவி வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள் நான் உடனே உங்க தேவையை பூர்த்தி செய்கின்றேன். 

நீ ரொம்ப திறமையான வீரர் என்று கேள்விபட்டு இருக்கேன். உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி சார். 

            “ம்” என்ற ஒரு வார்த்தையுடன் மட்டும் தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டான் உதி.

       சிங், சார் எங்க அறையில் பாத்ரூம் சுத்தமாக இல்லை . நீங்க வந்து அதை பூர்த்தி செய்யுறீங்களா?

        குமரன், என்னது நானா? ஐ அம் அமைச்சர் பி.ஏ .

           சிங், அப்பறம் என்ன மண்டைக்கு இங்கு வந்து கேட்டுக்கொண்டு இருக்கீங்க சார்? உங்க ஆட்கள் அங்க மேடையை ஒழுங்கா கட்டாமல் நம்மையே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காங்க ?அவங்களையாவது என்னனு மட்டும் கேட்காமல் , அவர்களுக்கு உதவி பண்ணுங்கள் சார்.

 மறுபடியும் உங்க மண்டையை இந்த பக்கம் கொண்டு வந்து காட்டாதீர்கள்’ ராக் கெட் விட்டுடு வேன் .

         உதி, முந்திக்கொண்டு நீங்க எதுவும் தவறாக நினைக்காதீர்கள்? அவனுக்கு மொழி கொஞ்சம் பிராப்ளம்.” உங்களை மண்டை என்றாலும் மயிரு என்றாலும் கோவப்படாதீர்கள்” இந்த வார்த்தைகள் எல்லாம் தமிழின் சரியான வார்த்தைகள்.

       குமரன், இட்ஸ் ஓகே கர்னல் .நான் எதுவும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை ‘ தன்னில் எழுந்த கோவத்தை அப்படியே வைத்துக்கொண்டான் ‘.

      சிங், சரியாக சொன்னீங்க சார்! உங்களுக்கு தான் எதுவுமே இருக்காதே! எல்லாத்தையும் துறந்து விட்டு தானே அரசியலுக்கு வந்து இருக்கீர்கள் ? நீங்க பி.ஏ வாக இருக்க என்னென்ன துறந்து விட்டு வந்தீர்கள்? நான் தெரிந்துக் கொள்ளலாமா? சொல்லுங்க … சீக்கிரம் சொல்லுங்கள். 

         குமரன், என்னது ? அதிர்ச்சியாகி பார்க்க.

      உதி, நான் தான் சொன்னேனே அவனுக்கு தமிழ் மொழி புதியது . நீங்க போய் உங்க வேலையை பாருங்கள். நீங்க என்ன துறந்து விட்டு வந்தீர்கள் என கேட்டது ” பொறுமை, கோவம், பிடிவாதம் ” இந்த மாதிரி தான். அவனுக்கு அதை எப்படி சரியாக பேசுவது என்று தெரியவில்லை சார்.

        குமரன், இருவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு , அந்த தொழிற்சாலையை சுற்றி பார்க்க சென்றுவிட்டான். 

        குமரன் சென்றதும் ,”ஏன்டா இப்படி வந்து அவனை காலையிலே கலாய்த்த?” 

அவன் மூஞ்சியை பாரு நம்பலாமா? நம்ம வேண்டாமா ? என்ற ரீதியில் போறான். நம்ம பிளான் சரியாக செயல்படும் வரைக்கும் யாருக்கும் எந்த வித சந்தேகமும் வரகூடாது டா. 

        சிங், “சாரி டா மாப்பிள்ளை ” எனக்கு அவனுடைய மூஞ்சியை பார்த்தாலே கலாய்க்க வேண்டும் என்று எண்ணமே தோன்றுகிறது .

          சரி… சரி போய் ரெடி ஆகு நமக்கு இன்னும் வேலை நிறைய இருக்கு டா. நான் ஊரில் இருந்த பொழுது ஒரு தொழில் அதிபர் வீட்டில் கூர்க்கா வா நிக்கும் போது ஒரு வீடியோ எடுத்தாயே அதை பத்திரமாக இருக்கா? அந்த வீடியோவை என்னுடைய போனுக்கு அனுப்பு டா.

         ஏன்டா ? ஏன்? நீயும் அந்த சம்பவத்தை நியாபகபடுத்தி என்னை அதை எல்லாம் நினைக்க வைக்கிற? அந்த வீடியோ தானே அனுப்புறேன் அதன் கூட ஒரு நம்ம நீதி விளையாடிய ஒரு வீடியோவும் அனுப்புறேன் பார்த்து எஞ்சாய் பண்ணு டா . என்னை இன்னொரு முறை கூர்க்கா என்று சொல்லாத டா? எனக்கு ஆத்திரம் … ஆத்திரமாக வருது அந்த மேத்தா மேல. எனக்கு இருக்க கோவத்தில் அந்த மேத்தா மட்டும் கையில் சிக்கினான் சட்னி தான். 

          உனக்கு ஏன்டா அந்தாள் மேல் இவ்வளவு காண்டு ?

           அவன் தான் டா என்னை அந்த தொழில் அதிபர் வீட்டுக்கு போய் காவல் காக்க வெச்சான். இந்த மாதிரி சில கர்னல் இருக்கும் வரை இராணுவ வீரனுக்கு மரியாதையே இருக்காது டா. அன்னைக்கு நான் எவ்வளவு ஃபீல் பண்ணேன் தெரியுமா டா? முதன் முதலாக அன்னைக்கு தான் நான் ஒரு இராணுவ வீரனாக இருப்பதற்கு ரொம்ப வருத்தப்பட்ட நாள் டா. எமோஸ்னலாக பேசிக்கொண்டே இருக்கும் தன்னுடைய நண்பனை கட்டி அணைத்துக் கொண்டான் உதிரன். 

            உதி, சீக்கிரம் போய் ரெடி ஆகு இன்னைக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து” அந்த தொழிற்சாலை உள்ளே போன போறோம் “. 

         ஓகே மாப்பிள்ளை’ நான் போன் எடுத்துக்கொண்டு வரேன் “அங்கு இருக்கும் எல்லா ஆதாரங்களையும் சேகரித்து எல்லோரையும் ஒரு வழி பண்ண வேண்டும் “.

           உன்னுடைய கடமை உணர்ச்சியை நினைத்து நான் ரொம்ப பெருமை படுகின்றேன். நீ எதுவும் பண்ண வேண்டாம் என் கூட வந்தால் மட்டும் போதும். இப்ப போய் ரெடியாகு நாம எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம் ” வீட்டில் இருந்து சாப்பாடு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் “.

          மாப்பிள்ளை நாம இத்தனை பேருக்கும் சமைத்து கொடுப்பது அம்மாவுக்கு கஷ்டமான வேலை டா. நாம ஓட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடலாம்.

          நீ ரொம்ப ஃபீல் பண்ணாதே டா ! நாம எத்தனை நாட்கள் இங்க இருக்கோமோ அத்தனை நாட்களும் நமக்காக சமைக்க ஆட்கள் இருக்காங்க. உன்னுடைய தங்கச்சி வீட்டில் இருந்து தான் ஆட்கள் வந்து இருக்காங்க. நாம் எல்லோரும் எத்தனை நாட்கள் இங்க இருக்கோமோ அத்தனை நாட்களும் அவங்க நமக்கு சமைத்து கொடுப்பாங்க ஆனா ஓட்டல் பெயர் சொல்லிதான் நமக்கு உணவை கொடுத்துவிட்டு செல்வார்கள். ஏனென்றால் யாருக்கும் எந்த சந்தேகமும் வர கூடாது. நம்மளால மற்றவர்கள் எப்பொழுதும் கஷ்டப்பட கூடாது. 

        சரி மச்சான்! நாம சிறப்பாக செய்துவிடுவோம் அந்த நீதியை. இருவரும் சேர்ந்து ஒரு வில்லத்தனமான சிரிப்பை சிரித்தார். அனைத்து வீரர்களும் ரெடியாகி இருக்க , அந்நேரம் சாப்பிடும் உணவு வந்துவிட்டது. சிறிது நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவை இரண்டு மணி நேரமாக கலாட்டா செய்துக்கொண்டு சாப்பிட்டனர். அந்த கலாட்டாவில் சிங்கின் மீது குழம்பு ஊற்றப்பட்டு மறுபடியும் குளிக்கும் படி ஆனது. ஒருவழியாக அந்த அறையை விட்டு வெளியே வந்தவர்கள் அவரகளுக்கு என்று கூறப்பட்ட வேலையை பார்க்க சென்றுவிட்டனர். 

        சிங், அந்த தொழிற்சாலையின் முன் இருவரும் நின்றுக்கொண்டு இருந்தனர். ‘ மாப்பிள்ளை ‘ இது என்னடா பேய் பங்களா மாதிரி இருக்கு? இந்த நீதி மேடைக்கே பல பேரை பலிவாங்க வேண்டும் என்கிறான். இதில் இந்த பேய் பங்களாவுக்கு எத்தனை பேரை பலிவாங்க போறானோ தெரியவில்லை?

சரி வா டா போகலாம். இருவரும் உள்ளே செல்ல , அங்கு இருந்த அனைத்து ஆட்களும் வேலை செய்வது போன்று காட்டிக்கொண்டு இவர்கள் இருவரையும் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். வேடிக்கை பார்ப்பது போல எல்லா இடத்தையும் சுற்றி பார்த்தவர்கள் அங்கிருந்து சில மணி நேரத்தில் வெளியே வந்து விட்டனர். சிங், என்னடா ஒரு முறை இந்த தொழிற்சாலையை சுற்றி பார்த்துவிட்டு வருவதற்கு இத்தனை மணி நேரம் ஆகுது? எவ்வளவு பெரிய இடத்தை வளைத்து போட்டு இந்த தொழிற்சாலையை கட்டி இருக்கான்? “எல்லாம் அரசியல் மூளை டா சாமி அவனுக்கு “. அங்கு கட்டப்பட்டு இருந்த மேடையும் வேக வேகமாக கட்டப்பட்டு கொண்டு இருந்தது. இன்றைய பொழுது அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்தே போனது இருவருக்கும். இரவாகி விட உதிரன் கிளம்பி விட்டான். அங்கு இருந்த நாட்களில் இரவில் மட்டும் வீட்டிற்கு சென்று பொழுது விடியும் முன் மீண்டும் இங்கு வந்துவிடுவான். 

           நாளை தொழிற்சாலை திறக்க போகிறார்கள் ” இன்றே அந்த ஊர் முழுவதும் நீதிமானின் புகைப்படங்கள் தான் சுவற்றில் ஓட்டப் பட்டு இருந்தது” . நீதியும் அந்த ஊருக்கு மாலையே வந்து தன்னுடைய வீட்டில் இருந்தான். தன்னுடைய திட்டப்படியே வேலை போய்க்கொண்டு இருக்கிறது என நினைத்தான் .ஆனாலும் உதிரனின் மீது ஒரு கண்ணை வைக்க சொன்னான் தன்னுடைய ஆட்களிடம். இன்று இரவு மேடையின் முன் மண்ணில் கன்னி வெடிகளை புதைக்க சொன்னான். 

       அறையில் ஜாலியாக பாட்டுக் கேட்டுக் கொண்டு ஆப்பிளை சாப்பிட்டுக்கொண்டு இருந்த உதிரனை பார்க்கும் போது சிங்கிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன்டா மாப்பிள்ளை’ வெளியே அவ்வளவு பெரிய அமளி துமளியே நடக்கிறது நீ என்னடா இப்படி ஜாலியாக உட்கார்ந்து ஆப்பிளை சாப்பிட்டுக்கொண்டு இருக்க ?

        உனக்கும் வேண்டும் என்றால் நீயும் போய் சாப்பிடு டா. கூலாக பதிலை சொன்னான்.

        உன்கிட்ட போய் கேட்டேன் பாரு என்னை சொல்லனும் என்று நினைத்தவன் தானும் ஒரு ஆப்பிளை எடுத்து கடித்துக் கொண்டே ,”டேய் மாப்பிள்ளை” எதுக்கு டா சர்மா சார் போன் பண்ணிக் கொண்டே இருக்காரு நீயும் அட்டன் பண்ணாமலே இருக்க? அந்த மனுசனும் விடாம போனை அடித்துக்கொண்டே இருக்காரு ? ஆமாம் டா இது யாரு உன்னுடைய பக்கத்தில் முகத்தை மூடிக் கொண்டு படுத்து இருக்காங்க?

              அவரு எதுக்கு எனக்கு கால் பண்றாரு என்றால் ” நம்ம கர்னல் மேத்தாவின் துப்பாக்கி காணாமல் போய் இருக்கும் அதை கேட்க”, இவன் தான் டா என்னுடைய மச்சான் அப்புறம் என்னுடைய நண்பன் டா.

         அப்போ அந்த ஆளு துப்பாக்கியை நீ தான் தூக்கி விட்டாயா? சூப்பர் டா சூப்பர் என்று குதித்தவன் சில நொடிகளிலே அப்போ நான் யாரு டா உனக்கு? சிறு பொறாமை அவனின் உள்ளே இருந்து எட்டிப்பார்த்தது.

          உதி, எனக்கு இருவருமே ஒன்று தான் டா. “டேய் ராம் எழுந்திரு டா ” இவன் தான் மன்வேந்திர சிங் ,சிங் இவன் தான் ராம் . இருவருமே காதல் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள் இன்னும் கல்யாணம் ஆகாமல் , “இனிமே நீங்களே பேசிக் கொள்ளுங்கள் “. டேய்! “ராம் சீக்கிரமாக இங்க இருந்து போ சுமதி தேடிக்கொண்டு இருப்பாள் ” நான் போய் சர்மா சார் கிட்ட பேசிவிட்டு வரேன் என்று கூறிவிட்டு பக்கத்து அறைக்கு வந்து சர்மா சாருக்கு போன் செய்து சொல்லுங்க பா ?

        அடேய் எரும மாடு, ஏன்டா போன் பண்ணா அட்டன் செய்து பேச என்னடா உனக்கு? ஏன்டா மேத்தாவின் துப்பாக்கியை எடுத்த ? அந்த மேத்தா ரொம்ப கெஞ்சுறான் டா.

          விடுங்க பா ‘ அவனை வச்சுத்தான் ஒரு வேலை செய்யனும் . அதற்காக அவருடைய துப்பாக்கி எனக்கு வேண்டும் . ‘ நீங்க எதற்கும் கவலை படாதீர்கள்! இங்க வேலை எல்லாம் முடித்துவிட்டு நான் நேரில் வந்து உங்ககிட்ட பேசுறேன் பா ‘. போனை கட் செய்து விட்டு மீண்டும் ராமிடம் வர சிங்கும் ராமும் ஒன்றுக்குள் ஒன்றாக கதை பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்து சிரித்தவன் , என்னே! இருவரும் சகோதரர்களாக ஆகிவிட்டீர்களா? 

        ஆமாம் டா. ஒரு சேர இருவரும் சொன்னார்கள். இரவு பூமியை படற ஆரம்பித்து இருந்தது , ராம் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டான்.

இனிமே இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நாம கேர்புல்லாக கண்காணித்து கொண்டு இருந்தனர். மணி பனிரெண்டு ஆனது “அந்த மேடையின் கீழே ஆங்காங்கே கன்னி வெடிகளை மண்ணில் புதைத்துக் கொண்டு இருந்தனர் ” . சிலர் யாராவது வருகிறார்களா ? என்று காவல் காத்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் வெற்றிகரமாக கன்னி வெடிகளை புதைத்ததை தன்னுடைய போனில் வீடியோ எடுத்துக்கொண்டான் சிங். அவர்கள் சென்றதும் வேக வேகமாக ராணுவ வீரர்கள் சென்று “அந்த கன்னி வெடிகளை செயலிழக்கச் செய்தனர் “.  

அன்று இரவு முழுவதும் அனைவரும் தூங்காமல் தொலைவாக நின்றுக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அனைவரையும் கண்காணித்து கொண்டு இருந்தனர்.

            காலையில் ஊர் மக்கள் அனைவரும் அங்கு கூடி இருக்க ,”அந்த மேடையில் வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டு அதில் நீதி மான் போன்ற ஆட்கள் உட்கார்த்து கொண்டு இருந்தனர்”. அந்த மேடையில் இருந்தவர்கள் ஒவ்வொருத்தராக பேச கடைசியில் நீதிமான் பேசத் தொடங்கினான் . என்னுடைய பாசத்திற்கு பெருமைக்கும் உரிய எனது நாட்டு மக்களே! உங்களைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த பூவலம் கிராமத்தை சிட்டியாக மாற்றும் பொறுப்பை அரசு என்னிடம் கொடுத்ததை நினைத்து பெருமை படுகின்றேன். உங்களுக்காக தான் இந்த தொழிற்சாலை , இதில் இந்த ஊர் மக்களுக்கே முதலில் வேலை வழங்கப்படும் “அனைவரும் கைகட்டி கரகோசம் எழுப்ப ” தன்னுடைய ஆள் ஒருவனுக்கு கண்காட்டி கன்னி வெடியை வெடிக்க சொன்னான். அந்த நேரத்தில் அங்கு இருந்த ஸ்கிரீனில் நேற்று இரவு கன்னி வெடி வைத்ததும் , நீதிமானின் வீட்டில் எடுத்த ஆதாரங்களும் வந்தது. நீதிமான் உட்பட அனைவருக்குமே அதிர்ச்சி தான். அந்த தொழிற்சாலையை பற்றியும் தெளிவாக நிறை, குறைகளை அதில் சொல்லி இருந்தான் உதிரன். உதிரனின் முகம் தெரியவில்லை குரல் மட்டுமே அந்த ஸ்கிரீனில் ஒலித்தது. சில மக்கள் தங்கள் காலுக்கு கீழே இருந்த கன்னி வெடியை எடுத்து ” நீதி மானின் மேலே வீசினார்கள் ” பலர் கல்லைக் கொண்டு அடித்தார்கள். அந்த ஊரை விட்டு சிறிது காயத்துடன் காரில் தப்பித்து சென்று கொண்டு இருந்தான் நீதிமான். அந்த நொடியில் இருந்து அனைத்து ஊடகங்களும் இந்த விசயத்தையே ஒலி பரப்பாக்கி கொண்டு இருந்தனர். நீதிமானின் பி.ஏ இதுதான் சமயம் என்று கிடைத்தது வரைக்கும் போதும் என்று சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டான். உதிரனின் நெருங்கியவர்கள் மட்டும் “இது உதிரனின் குரல் தான் என்று கண்டு பிடித்து விட்டனர்”. சர்மா, இந்த செய்தியை பார்த்துவிட்டு தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டார்” இவன் எங்க போனாலும் சும்மா இருக்க மாட்டான் போலயே ?” என நினைத்தவர் அவன் வந்த பிறகு மீதியை அவனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். அங்கு ஒரு மணி நேரத்திற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. யாரும் இப்பொழுது அங்கு இல்லை” அறையில் அனைத்து ராணுவ வீரர்களும் கட்டி அணைத்துக்கொண்டு தங்களின் வெற்றியை பகிர்ந்துக் கொண்டனர் “. அனைவரும் கிளம்பி உதிரனின் வீட்டிற்கு அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். ராமு , அனைவரையும் புன்னகையுடன் அணைத்துக்கொண்டு பத்திரமாக போய் வர சொன்னான்.

தன்னுடைய மனைவியின் நெற்றியில் தன்னுடைய இதழ் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு , அவளிடம் இருந்து ஒரு முத்தத்தை வாங்கிக் கொண்டு சென்றான். அவர்களின் கடைசி முத்தம் இதுவோ! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்