

முகம் 13
அதிகாலை மூன்று மணி இருக்கும் தங்கள் அறையில் தூக்கத்தில் இருந்த துவாரகாவோ திரும்பிப் படுக்க முயன்றதில் கணவன் அருகில் இல்லை என்பது உணர முடிந்தது.
முயன்று கண்களைத் திறந்தவளுக்கு கணவன் மெத்தையில் இல்லை என்பது உறுதியாக, ‘எங்கே’ என விழிகளைச் சுழல விட்டவளின் கண்களில், மேசை அருகே தொலைபேசியை வெறித்தபடி அமர்ந்திருந்த சித்தார்த் விழுந்தான்.
கண்ணை கசக்கி தூக்கம் கலைந்து நன்றாக எழுந்தமர்ந்தவளோ “இந்நேரம் தூங்காம என்ன பண்ணுறீங்க மாமா? தூக்கம் கலைஞ்சிடிச்சா?” என்று கேட்க,
அவள் குரலில் திரும்பியவன் “ம்ம்ம், தூக்கம் வரல துவா, அப்போவே எழுந்துட்டேன். அதான் உன் மாமா போய்ட்டு கால் பண்ணுவான்னு பார்த்துட்டு இருக்கேன்” என்றவனது கவனம் மீண்டும் தொலைபேசியில் மூழ்கியது.
“இந்நேரத்துக்கு போயிருக்கணுமே மாமா, கால் பண்ணி பேசி பார்க்கலாமே!” என்றவள் அவனருகில் வர, அவனுக்கும் அதுவே தோன்றியது.
“துவா, இஃப் யூ டோன்ட் மைண்ட், தலை வலியா இருக்கு, ஒரு காஃபி கொடுத்துட்டு தூங்குறியா?” என்று அவன் கேட்க,
அவனை முறைத்தவள் “வேணும் தாடின்னு கேக்காம என்ன மாமா இது?” என்று கேட்டு, வெளியேறி இருந்தாள்.
அவள் செல்லும் வரை பார்த்திருந்தவன், ஒரு ஆழ்ந்த மூச்சை வெளிவிட்டபடி மயல்மொழியின் எண்ணுக்கு அழைப்பு விடுக்க,
ஒரு நீண்ட அழைப்பு சென்று அதன் உயிரை விடும் முன் அந்த அழைப்பு உயிர்பிக்கப்பட்டது.
“சொல்லு சித்து, இந்நேரத்துக்கு கால் பண்ணிருக்கியே என்ன விஷயம்?” என்றாள் தூக்க கலக்கத்தில்.
அவனோ கோபத்தை எதிர்பார்த்திருக்க, அவளது சாதாரண பேச்சு அவனை குழப்பவே செய்தது.
“என் ஃபிரண்ட் வந்தாச்சான்னு கேட்க கூப்பிட்டேன் மொழி” என்றான் தடுமாறிய குரலில்…
“ஓ, அதுவா சொல்ல மறந்துட்டேன் சித்து, நைட்டே வந்துட்டாங்கடா. பக்கத்து ரூம்ல தான் தங்கி இருக்காங்க, ஒன்னும் ப்ரோப்லம் இல்ல. நீ டென்ஷன் ஆகாத நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.
இங்கே இருப்பவனுக்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
‘ஒருவேளை அதிக கோபத்தில் இப்படியெல்லாம் தெரியாததைப் போல் பேசுகிறாளோ?’ என்று தான் அவனுக்குத் தோன்றியது.
அவள் அப்படித்தானே அதிக கோபமோ பாசமோ அதனை சட்டென்று காட்டியதில்லையே!
யோசனையில் சுழன்றவனுக்கு இடையில் துவாரகா வந்தது காஃபியை வைத்து மீண்டும் தூங்கச் சென்றது எதுவும் அவன் மூளையில் பதியவில்லை…
“ஹெலோ, சித்து இருக்கியா? என்ன லைன்லயே தூக்கமா?” என்று கேட்க,
“உனக்கொன்னும் கோபம் இல்லையே மொழி” என்றவனிடம் சிறு அமைதி.
அவன் கேட்பதும் அபத்தம் என்பது அவனுக்கே தெரியுமே! அவன் செய்து வைத்திருக்கும் வேலைக்கு கோபம் என்ற வார்த்தை எல்லாம் குறைவு தானே!
“எனக்கென்ன கோபம் சித்து, இருந்தாலும் நீ உண்மையையே சொல்லி இருக்கலாம். இது உன் வீடு யாரை நீ இருக்க வைக்க நினைச்சாலும் வைக்கலாமே! அதுக்கு ஏன் என்கிட்ட மறைக்கணும்” என்று கேட்டதும் பக்கென்றானது அவனுக்கு…
“மொழி, என்னடி உன் வீடு என் வீடுங்கிற? உன்னோட நல்லதுக்காகத்தான் சொல்லல” என்க,
“ஏன்டா டேய் அவங்க ஹஸ்பண்ட் வைஃப் ஒன்னா இருக்குறத மறைக்கிறதுல எனக்கு என்னடா நல்லது?” என்று கேட்டதில் இங்கே அவன் முழித்தான்.
அது தெரியாதவளோ மீண்டும் “உன் ஃபிரண்ட் அவ ஹஸ்பண்ட்ட கூட கூட்டிட்டு வந்ததுல எனக்கு எந்த சங்கடமும் இல்ல, இன்பாக்ட் எனக்கு அவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க ரொம்ப லவ்வபிள் கப்பிள். எவ்வளவு லவ், பார்த்த கொஞ்ச நேரத்துலேயே அவங்க லவ் மேல நான் அட்மயர் ஆகிட்டேன்னு சொல்லலாம்” என்றதில் குழம்பியவன்,
“சரி மொழி நீ தூங்கு காலைல நான் பேசிக்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அவனுக்கு இது தீரனுடைய வேலை தான் என்பதில் சர்வ நிச்சயம்.
“தீராஆஆ” என்ப் பல்லைக் கடித்தவனது கோபத்தை தாங்கிய அழைப்பு அவனது நண்பனை நோக்கி விரைந்தது.
“அடடே மாப்பிள்ளை ரொம்ப கூலா இருக்க போலையே! தூக்கம் வரலையா ராசா? நான் வேணா தாலாட்டுப் பாடி தூங்க வைக்கட்டா” என்று எடுத்ததும் அவன் ஆரம்பிக்க,
பல்லைக் கடித்தவனோ “ஏன் தீரா வீட்டுக்குப் போகல நீ? யாரை அங்க அனுப்பி வெச்சிருக்க?” என்று கேட்டான்.
தீரனோ “உன் பருப்பு வேகலன்னு இன்னுமா புரியல?” என்றவன்,
“ஏன்டா டேய், அவ யாருன்னும் தெரியும், நான் யாருன்னும் உனக்கு தெரியும். அப்பறம் எதுக்கு இந்த வேண்டாத வேலை? நீ என்ன நினைச்ச ‘ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன. மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே!’ அப்படின்னு உணர்ச்சி வசப்படுவோம்னா, ஆனா நான் அப்படி இல்லடி” என்று ஏற்ற இரக்கத்துடன் நிறுத்தியவன்,
“அவ மட்டும் என் கண்ணுல பட்டான்னு வெச்சிக்கோயேன், இருக்குற கோபத்துக்குக் ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டுத் தான் சாகனும். நீ என்னடான்னா அது தெரியாத மாதிரி ரெண்டு பேரையும் ஒரே வீட்டுல இருக்க வைக்கப் பார்க்குற” என்றான்..
அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாய் இருந்த சித்தார்த்தோ “தீரா உனக்கு…” என்றான் தயங்கியபடி
“தெரியும் தெரியும் உன் முழில இதக் கூடக் கண்டு பிடிக்கலைன்னா நான் எல்லாம் என்னடா போலீஸ். அதுலயும் வீட்டுக்குப் போயே ஆகணும்னு நீ அடம்பிடிச்சதுலையே புரிஞ்சிது” என்றவன்,
“வேணான்னு முடிவு எடுத்தது வேணான்னே இருக்கட்டும் மச்சான். எனக்கும் சரி இணருக்கும் சரி அவ வேண்டாம்” என்ற அவன் குரலில் தெரிந்த உறுதியில் சித்தார்த் மனமோ கலங்கியது.
அபியை பற்றி உண்மையை சொல்ல அவன் வாய் பரபரத்தாலும் செய்து கொடுத்த சத்தியம் அவன் வாயைக் கட்டிப்போட்டது.
‘இவர்களை மீண்டும் இணைக்கவே முடியாதா?’ என்ற கேள்வி விருட்சமாக, கவலை தொற்றிகொண்டது அவனை…
“உனக்கு பயம்னு சொல்லு தீரா, எங்க அவளை பார்த்தா உன் உறுதி எல்லாம் உண்டஞ்சிடும்னு உள்ளுக்குள்ள ஒரு பயம் உனக்கு. அத மறைக்க வெறுப்பக் காரணம் காட்டுற” என்க,
“நீ என்ன ட்ரை பண்றன்னு நல்லாவே புரியுது. பட் அது என்கிட்ட நடக்காது. இங்க காதலே செத்துப்போய் கிடக்குனு சொல்லுறேன், நீ என்னடான்னா அதுல உயிர் வரும்னு காத்திட்டு இருக்க. வீணா உன் டைம் வேஸ்ட் பண்ணாம போய் என் தங்கச்சியப் பாரு. வந்துட்டான் பயமாம் பயம், அவ என்ன அவ்வளவு பெரிய ஆளா” என்றவன் மனதோ,
‘நானா தூக்கிக்கிட்டாளே என் உயரத்துக்கு வரமட்டா” என்று எடுத்துக்கொடுக்க, ஒரு நிமிட தடுமாற்றம் அவனுள்…
அதனைப் புறம் தள்ளியவனோ “டிபார்மென்ட்ல வேலை பார்க்குற அரவிந்த் அன்ட் அவன் வைஃப் ரெண்டு பேரையும் தான் அங்க அனுப்பி வெச்சிருக்கேன். பயப்பட ஒன்னுமில்ல, நீ ரிலாக்ஸா உன் வேலைய முடிச்சிட்டு வா” என்றான்.
“இதோ இந்த அக்கறை சக்கரை எல்லாம் இருக்குல அப்பறம் என்ன டேஷுக்கு உங்களுக்கு வீம்பு?” என்று வெடித்தவன்,
“புரிஞ்சிக்க ட்ரை பண்ணு தீரா ஒரே ஒரு தடவ அவளை பாரேன் நான் ஏன் சொல்லுறேன்னு அப்போ தெரியும்” என்றான்.
“உனக்கு சொன்னா புரியாது மச்சான். நான் ஒன்னும் அவளுக்காக அனுப்பல, இங்க வேற குவார்டஸ் அவைலபில் இல்ல. சோ அதான் அவங்கள அங்க அனுப்பிட்டு நான் இங்க இருக்கேன். நீ வீணா கனவு காணாத. எத்தனைதடவ இதப்பத்தி பேசினாலும் என் முடிவு இதுதான்.” என்றவன்,
“நீ நினைக்குற மாதிரி அவளை நான் இப்போ பார்த்தாக் கூட, என்னால சாதாரணமா கடந்து போய்ட முடியும் எங்குற அளவுக்கு ரொம்ப தூரம் வாழ்க்கைல கடந்து வந்துட்டேன் மச்சான். என் நம்பிக்கையை உடச்ச அன்னைக்கே என் காதலையும் சேர்த்து சுக்கு நூறா உடைசிட்டாடா அவ, அது உனக்கு தான் புரியாமாட்டேங்கிது” என்றவன் சித்தார்த்தை அடுத்துப் பேச அனுமதிக்காமல் அழைப்பை துண்டித்திருந்தான்.
________________
காலை ஐ.ஜி அலுவலகம், வரதராஜன் முன்னே ஜெயதீரனும், விக்ரமனும் அமர்ந்திருந்தனர்.
வரதராஜனோ “என்ன பண்ணப்போற தீரா? இந்தவாட்டி இருபது பேர். எல்லாக் குழந்தைகளும் அஞ்சு வயசுக்குள்ள தான் இருப்பாங்க. இமீடியட்டா இந்த கேஸ் முடிவுக்கு வந்தாகணும். மேலிடத்துல இருந்தும் பயங்கர பிரசர். மீடியா பழசு எல்லாத்தையும் கிளற ஆரம்பிக்கவும் மேல் அதிகாரிங்க, அரசியவாதிங்கனு கொஞ்சம் அலெர்ட் ஆகி இருக்கானுங்க” என்றார்.
“ஓஓ ஐ சீ, உங்க மேல் அதிகாரிங்க தப்பு பண்ணும் போது வராத பயம் இப்போ வருதாமா? மிஸ்டர் ராம் பிரசாத் கிட்ட பணம் வாங்கிட்டு அவரைக் காப்பதும் போது தெரியலையாமா?” என்றான் அங்கிருந்த காகித அழுத்தியை சுழற்றியபடி…
அவன் ஆதங்கம் அவர் அறிந்ததே! அவனையும் எதுவும் சொல்ல முடியவில்லை அவரால்…
“தீரா, உன் கோபம் எனக்குப் புரியுது. ஆனா இது அதுக்கான நேரம் இல்லை, நாம இந்த இடத்துல பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் அவங்க பேரண்ட்ஸ் பத்தியும் தான் யோசிக்கணும்” என்றார்
அவனும் கோபத்தை கை விட்டவன் “சார், இந்த கேஸ் நான் பழையபடி விட்ட இடத்துல இருந்து ஸ்டார்ட் பண்ணனும்னு நினைக்கிறேன். எனக்கு அப்போ கிடைக்காம போன ஆதரத்தை நிச்சயம் இந்த முறை கண்டுபிடிச்சே ஆகணும். சோ அதுக்கான முதல் வழி அந்த ராம்பிரசாத்தோட கற்பகம் ஹாஸ்பிடல்” என்றவன்,
விக்ரமனிடம் “விக்ரம் நான் கடத்தப்பட்ட குழந்தைங்களோட பேரன்ட்ஸ மீட் பண்ணனும், வித் இன் டென் மினிட்ஸ். உங்களால அரேன்ஞ் பண்ண முடியுமா?” என்று கேட்க, அவனோ வரதராஜனைத் தான் பார்த்தான்.
அவர் சம்மதமாய் கண்களை மூடித்திறந்ததும்.
“ஏற்பாடு பண்ணுறேன் தீரன்” என்று எழுந்தவன் வராதராஜனுக்கு சல்யூட் வைத்துக் அங்கிருந்து கிளம்ப,
அவர் முன்னே ஒரு கோப்பை வைத்தவன் “இந்த அஞ்சு வருஷமா நான் கலெக்ட் பண்ண டீடெயில்ஸ் இது” என்க, அவரும் ஒரு யோசனையுடனே அதனைப் பார்வையிட்டார்.
“தீரா, இது…” என்று அவர் இழுக்க,
“தப்புத்தான் சார், ஆனா என்னால நிம்மதியா தூங்க முடியல. பிடிப்பட்டவன் தப்பான ஒருத்தன்னு தெரிஞ்சும் பார்த்துட்டு சும்மா இருக்குறத்துக்காக ஒன்னும் நான் படிச்சு இந்த வேலைக்கு வரல சார். அதுக்காக இங்கயே இருந்தும் அத பண்ணவும் என்னால அப்போ முடியல, வேலைய விட்டிருந்தாலும் நிச்சயம் இதை செஞ்சிருப்பேன் தான். இது என்னோட மனசாட்சிக்காக…” என்றான்.
அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘அவனே பேசட்டும்’ என மௌனம் காத்தார்.
அவர் அமைதியில் சம்மதத்தை உணர்ந்து “கடந்த அஞ்சு வருசமும் குழந்தைங்க கடத்தப்படவே இல்லைனு நாம நினைச்சா அது முட்டாள் தனம் சார். அந்த ஹாஸ்பிடலோட ஒரிஜினல் டீடெயில்ஸ்படி ஒரு வருசத்துக்கு குறைஞ்சது ரெண்டு குழந்தைங்கள்ல தொடங்கி அதிக பட்சமா ஆறுகுழந்தைங்க வர இறந்து போயிருக்காங்க வித்தவுட் எனி காம்ப்ளிகேஷன்ஸ். இயற்கையான மரணம் என்கிறதுக்கு ரிப்போர்ட் இருந்தாலும் அந்தத் திடீர் மரணம் கொஞ்சம் மிஸ்ட்ரி தான். இது பெரிய க்ளூ இல்லனாலும், நமக்கு யூஸ் ஆகலாம்” என்றவன்,
“பட் இதுல என்னோட கெஸ் தப்பா கூட இருக்கலாம். அன்ட் மோர் ஓவர் இதுக்கு முதல் கடத்தப்பட்ட குழந்தைங்க இறந்து தான் போயிருக்காங்கனு எந்த தகவலுமே கிடைக்கல. சோ அவங்க உயிரோட இருக்கவும் ஓரளவுக்கு வாய்ப்பிருக்கு” என்றான்.
வரதராஜனோ அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் “எல்லாம் சரி தீரா, அன்னைக்கு நாம என்ன நிலைல இருந்தோமோ அதே நிலைல தான் இன்னைக்கும் இருக்கோம். இந்த அஞ்சு வருசத்துல கூட எந்த முன்னேற்றமும் இல்லயே” என்றார் கவலையாக…
அவனோ “என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லா வழிலயும் இந்த அஞ்சு வருஷமா போராடிட்டு தான் இருக்கேன் சார்” என்றான் அவன்.
“எனக்கு உன்ன தெரியாதா தீரா. உன்மேல எனக்கு எப்போவும் நம்பிக்கை இருக்கு. அதுனால தான் யாரும் உன்ன நம்பாதப்போ கூட நான் உன் பக்கம் நின்னேன். இப்போ உன்னோட இந்த அஞ்சு வருஷத் தேடல்ல கூட எந்த முன்னேற்றமும் கிடைக்கலன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு” என்றார்.
அவனோ “எஸ் சார் எனக்குமே இது நம்ப முடியல தான். எதுக்காக கடத்தல் எங்குறதே இங்க கேள்வி குறியா இருக்கும் போது, எங்க ஆரம்பிச்சு எங்கன்னு முடிக்க? ஆக்கியூஸ்ட் ரொம்ப ரொம்ப கிளவர் இத நாம ஒத்துகிட்டே ஆகணும். மோரோவர் இங்க விடை தெரிஞ்சும் அதுக்கான கேள்விய தேடிட்டு இருக்கோம் எங்குறது தான் உண்மை” என்றவனிடம் சிறு அமைதி.
“உன்னால முடியும் தீரா, நீயா இது தான்னு முடிவு பண்ணாம வேற கோணத்துல முதல்ல இருந்து பாரு” என்றார் அனுபவம் நிறைந்த மனிதனாய்…
“ஸ்யோர் சார், ஒரு முறை சறுக்கிட்டேன் மறுபடியும் அப்படி நடக்காது. தப்புப் பண்ணியும் மாட்டிக்காம என்னை கை கட்டி வேடிக்கை பார்க்க வெச்சிவன நான் காலம் முழுக்க கம்பி என்ன வைக்க வேணாமா?” என்க,
“உன்மேல் நம்பிக்கை இருக்கு தீரா, சீக்கிரமே உலகத்தோட பார்வைல தன்னை மறைஞ்சி இருக்குற அந்தக் கொடூரன வெளிய கொண்டு வந்தே ஆகணும். உன்னால அது முடியும்” என்றார்.
“நிச்சயமா சார், அந்தக் குற்றவாளி வெளில சுதந்திரமா நடமாடுற காலம் சீக்கிரத்துல முடியும்” என்றவன் சல்யூட் வைத்து வெளியேறி இருந்தான்.
ஈர்க்கும்…

