Loading

தன் முன்னே இருந்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சிதாரா.

“என்ன கண்ணு இப்படி பாக்குற… மாப்பிள்ளைய அவ்வளவு பிடிச்சிருக்கா என்ன…” என சிதாராவைப் பார்த்துக் கண்ணடித்துக் கேட்டது சாக்ஷாத் ஆர்யான் தான்.

ஆர்யான் தான் தன் பெற்றோருடன் சிதாராவைப் பெண் கேட்டு வந்திருந்தான்.

ஆர்யானின் கேள்வியில் தன்னால் இயன்ற மட்டும் அவனை முறைத்த சிதாரா,

காஃபியை அவனிடம் கொடுக்காமல், “மா… இவருக்கு எதுவும் வேணாமாம் மா… வயிரு சரி இல்லயாம்…” என்று விட்டு ட்ரேயுடன் எடுத்து சென்றாள்.

ஆர்யானோ கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போனதே என வருத்தப்பட்டான்.

அன்று சிதாராவை அவள் வீட்டில் விட்டவன் சொன்னபடியே தன் நண்பன் ஒருவனை சந்திக்க சென்றான்.

அன்று இரவு நண்பனின் வீட்டில் தங்கியவன் ரஞ்சித்துக்கு கால் செய்து விடிந்தவுடன் அகிலாவையும் அழைத்துக் கொண்டு கோயம்புத்தூர் வரக் கூறினான்.

மறுநாள் காலை சங்கர் வேலை செய்யும் பேங்கிற்கு சென்று அவரை சந்தித்தான்.

சங்கர், “யாருப்பா நீ… ஏதாவது லோன் விஷயமா வந்திருக்கியா…” என்க,

“இல்ல அங்கிள்… பர்சனல் விஷயமா தான் உங்கள பார்க்க வந்திருக்கேன்…” என ஆர்யான் கூறவும் புருவ முடிச்சுடன் அவனை ஏறிட்டான் சங்கர்.

ஆர்யான், “அங்கிள் என் பேரு ஆர்யான்… நானும் ஃபோர்தம் யுனிவர்சிட்டில தான் படிச்சேன்… உங்க பொண்ணு சிதாராவோட சீனியர்… இப்போ அங்கயே ஒரு கம்பனில வர்க் பண்ணுறேன். எங்க அப்பா ரஞ்சித். AR GROUPS OF COMPANIES எம்.டி.” என்று நிறுத்த,

சங்கர், “இதெல்லாம் எதுக்குப்பா என் கிட்ட சொல்லிட்டு இருக்க..” என்றார்.

“அங்கிள் நான் இப்போ சொல்ல போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம்.. ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க…” என்ற ஆர்யான் சிதாரா பிரணவ்வைக் காதலித்தது முதல் தற்போது அவளின் உடல்நிலை வரை கூற சங்கர் அதிர்ந்தார்.

சங்கர், “என்ன தம்பி சொல்றீங்க… என் பொண்ணுக்கு இவ்வளவு பிரச்சினை இருக்கா… அவ எங்க கிட்ட கூட இதை பத்தி சொல்லல… எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை… யாராவது பெரிய டாக்டர் கிட்ட காட்டி எப்படியாவது என் பொண்ண நான் குணப்படுத்துவேன்…” என பதட்டத்துடன் கூற,

“அங்கிள் டென்ஷனாக வேணாம்… முதல்ல இந்த தண்ணிய குடிங்க…” என்ற ஆர்யான்,

“இங்க செலவ பத்தி பிரச்சினை இல்ல அங்கிள்…. பட் இது உங்க பொண்ணோட மனசு சம்பந்தப்பட்டது… எந்த ட்ரீட்மெண்ட் பண்ணினாலும் பர்மனன்ட்டா அதை கியுர் பண்ண முடியாது…” என்றான்.

சங்கர், “அப்போ இதுக்கு வேற என்னப்பா வழி..” எனக் கேட்க சற்று அமைதி காத்த ஆர்யான்,

“எனக்கு மினிய கல்யாணம் பண்ணி கொடுங்க அங்கிள்… எப்படியும் அவ யாரையாவது கல்யாணம் பண்ணி தான் ஆகனும்… பட் அவ இருக்குற நிலமைல யாராலையும் அவள ஸ்மூத்தா ஹேன்டில் பண்ண முடியாது… அது மினிய தான் பாதிக்கும்… அவள் என்னோட க்ளோஸ் ஃப்ரென்ட்… எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்… நிச்சயமா அவ மனசுல இருக்குற எல்லா பிரச்சினையையும் நான் சரி பண்ணுவேன்… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு அங்கிள்… ஆனா இதை பண்ண நான் அவ கூட இருக்கனும்… திரும்ப அந்த பிரணவ்வால மினிக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாது… என்ன நம்புங்க அங்கிள்…” என்றான்.

ஆர்யான் கூறியதைக் கேட்டு யோசித்த சங்கர், 

“ஆனா தம்பி… உங்க பேரன்ட்ஸ் இதுக்கு ஒத்துக்குவாங்களா… சித்துக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சா அவங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா…” என்க,

“அதப் பத்தி நீங்க கவல பட வேணாம் அங்கிள்… அப்பா அம்மாக்கு ஆல்ரெடி மினிய தெரியும்… அவங்களுக்கும் இந்த சம்பந்தத்துல இஷ்டம்… அவங்க இன்னைக்கே இங்க வருவாங்க… நான் நாளைக்கு அவங்கள கூட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு வரேன் அங்கிள்…” என ஆர்யான் கூறவும் சங்கர் சம்மதித்தார்.

அதன் பின் அகிலா ரஞ்சித் இருவரும் கோயம்புத்தூர் வர அவர்களிடம் விஷயத்தைக் கூறி மறுநாளே சிதாராவின் வீட்டுக்கு பெண் கேட்டு வந்தனர்.

சிதாரா கையிலிருந்த ட்ரேயை சமையலறை மேடையில் வைத்தவள் கோவமாக அங்கிருந்து மாடிக்கு சென்றாள்.

சங்கர், தேவி இருவரிடமும் அனுமதி பெற்றுக் கொண்டு ஆர்யானும் அவளைப் பின் தொடர்ந்தான்.

மாடிக்குச் சென்ற சிதாரா கோவமாக அங்குமிங்கும் நடந்தவள் ஆர்யான் வரவும்,

“என்ன எனக்கு வாழ்க்கை பிச்ச போடுறியா…” எனக் கோவமாகக் கேட்க,

“ச்சீச்சீ… எனக்கென்ன லூசா…” என ஆர்யான் கலாய்க்க,

அவனை முறைத்த சிதாரா, “ஏன் ஜிராஃபி இப்படி பண்ணுற…. என் ஒருத்தியால வீணா எதுக்கு உன் வாழ்க்கையையும் பாழாக்குற…” என வேதனையுடன் கேட்டாள்.

அவள் அருகில் வந்த ஆர்யான் அவள் இரு தோளையும் பற்றி,

“என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல மினி… நான் எது பண்ணாலும் அது உன் நல்லதுக்கு தான்னு நம்புறல்ல… நிச்சயம் நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த பிரணவ்வால ஏதாவது பிரச்சினை வரும்… என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா எந்த பிரச்சினையும் இல்லல்ல..” என்க,

சிதாரா, “அதெல்லாம் சரிடா… பட் அதுக்கும் உன்ன கல்யாணம் பண்ணுறதுக்கும் என்ன சம்பந்தம்..” எனக் கேட்டாள்.

ஆர்யான், “சம்பந்தம் இருக்கு மினி… அந்த பிரணவ்வால இதுக்கு மேலயும் உனக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாது… அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்…” என ஏதோ மனதில் வைத்துக் கொண்டு தீவிரமாகக் கூற அவனைப் புரியாமல் நோக்கினாள் சிதாரா.

சிதாரா, “அவனால எனக்கு என்ன பிரச்சினை வர போகுது… அதான் அவன் கிட்ட தெளிவா சொல்லிட்டேனே…” என்க,

“ஏதோ ஒன்னு… ஏன் இவ்வளவு கேள்வி கேக்குற… நான் உனக்கு செட் ஆக மாட்டேன்னு நினைக்குறியா… இல்லாட்டி என்ன உனக்கு பிடிக்கலயா…” என ஆர்யான் கோவமாகக் கேட்டான்.

“போடா கிறுக்கா… சும்மா கண்டதையும் பேசிக்கிட்டு…. கல்யாணம் பண்ணியும் வாழ்க்கை பூரா பிரமச்சாரியாவே இருக்கனும்னு முடிவு பண்ணிட்ட… இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்… உன் இஷ்டம்…” எனக் கூறிய சிதாரா கீழே சென்றாள்.

அவள் பின்னே பார்த்தவாறு, “அதையும் பார்க்கலாம் மிசிஸ்.ஆர்யான்…” எனக் கத்தியவன் புன்னகைத்துக் கொண்டே கீழே சென்றான்.

இருவரும் புன்னகையுடன் கீழே வர இருவரின் பெற்றோருக்கும் அதைக் காண திருப்தியாக இருந்தது.

சிதாரா கீழே வரவும் அவளை தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்ட அகிலா,

“சித்தும்மா… இந்த சேரில நீ ரொம்ப அழகா இருக்க… உனக்குன்னே சொல்லி நெய்ஞ்சது போல இருக்கு… நீ எங்க வீட்டுக்கு மருமகளா வர நாங்க ரொம்ப குடுத்து வெச்சி இருக்கனும்…” என்கவும்,

ரஞ்சித், “அகி… பாவம் என் மருமக… ஒரேயடியா இவ்வளவு ஐஸ் வைக்காதே…” என அவரைக் கேலி செய்யவும் ரஞ்சித்தை முறைத்தார் அகிலா.

பின் அகிலா சிதாராவிடம் திரும்பியவர், “அவர் கெடக்குறார்… என் மருமகளுக்கு தெரியும் என்னை பத்தி…” எனக் கூறியவர் சிதாராவின் தலையை வருடினார்.

சங்கர், தேவி இருவருக்குமே ஆர்யானின் பெற்றோர் சிதாரா மீது வைத்துள்ள பாசத்தைப் பார்த்து சந்தோஷத்தில் கண்கள் கலங்கின.

அகிலா, ரஞ்சித் இருவரையும் பார்த்து புன்னகைத்தாள் சிதாரா.

அவளுக்கு அந்த சூழ்நிலை மிகவும் சங்கடமாக இருந்தது.

பெற்றோரின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியும் ஆர்யான் கூறிய காரணமும் அவளை திருமணத்தை மறுக்க முடியாமல் செய்தது.

ரஞ்சித், “அப்புறம் சம்பந்தி… எல்லாருக்கும் ஓக்கேன்னா மிச்ச விஷயத்த பத்தி பேசலாமே…” என்க சரி என சம்மதித்தார் சங்கர்.

ரஞ்சித் அவ்வாறு கூறியதும் சிதாராவின் முகம் வாடியது.

அவளுக்கு இதனை ஏற்றுக் கொள்ள இன்னும் நேரம் தேவைப்பட்டது.

சிதாராவின் முக மாற்றத்தை ஆர்யானும் அவதானித்துக் கொண்டு தான் இருந்தான்.

ரஞ்சித் ஏதோ கூற வரவும் ஆர்யான் அவசரமாக,

“டேட் ஒரு நிமிஷம்..” என்க அனைவரும் அவன் முகம் நோக்கினர்.

ஆர்யான், “அங்கிள்… அப்பா… நிச்சயத்த மட்டும் சீக்கிரம் வெச்சிக்கலாம்… கல்யாணம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்… மினிக்கும் கொஞ்சம் டைம் வேணும்ல…” என்க அவனை நன்றிப் பார்வை பார்த்தாள் சிதாரா.

ஆர்யான் கூறுவது அனைவருக்கும் சரி எனப்பட இரு வாரத்தில் நிச்சயத்தை நடத்த முடிவு செய்தனர்.

அனைவரும் கிளம்ப ஆர்யானிடம் வந்த சிதாரா,

“தேங்க்ஸ் ஜிராஃபி… அப்பா அம்மாக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருந்தாலும் எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் தேவைபட்டுச்சி… நான் சொல்லாமலே நீ அத புரிஞ்சிக்கிட்ட…” என்க அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான்,

“என்ன மினி நீ… புருஷன் கிட்ட தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு… பொண்டாட்டிக்காக இதை கூட பண்ணலனா எப்படி…” எனக் கூறி கண்ணடித்தான்.

ஆர்யானை முறைத்த சிதாரா, 

“மவனே இந்த புருஷன் பொண்டாட்டின்னு சொல்லிக்கிட்டு வந்தா சாவடிப்பேன்… தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசே மேல்னு தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன்… ஆனாலும் நீ ஏதோ என் கிட்ட பெரிசா மறைக்குறன்னு மட்டும் தெளிவா புரியிது… மாட்டுவேல்ல ஒருநாள்… அப்போ பாத்துக்குறேன் ஜிராஃபி உன்ன…” என்க,

அவளைப் பார்த்து கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்தான் ஆர்யான்.

அவர்கள் சென்றதும் தன் அறைக்கு வந்த சிதாரா அன்று திடீர் திடீரென நடந்த அதிர்ச்சிகளை நினைத்து பெருமூச்சு விட்டாள்.

லாவண்யாவுக்கு அழைத்தவள் அவள் அழைப்பை ஏற்றதும், “வனி…” என்று விட்டு அமைதி ஆகினாள்.

லாவண்யா, “என்னாச்சு சித்து… ஏதாவது ப்ராப்ளமா..‌” என்க,

“நான் ரொம்ப குழப்பமா இருக்கேன் வனி… என்ன பண்ணனும்னு கூட புரிய மாட்டேங்குது..‌. நான் எடுத்த முடிவு சரியா தப்பான்னு தெரியல…” என்றாள் சிதாரா.

சிதாராவின் குரலில் இழையோடிய அமைதியிலே அவள் வேதனையில் இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டாள் லாவண்யா.

“எதனால இப்படி திங்க் பண்ற சித்து… பிரணவ் அண்ணா திரும்ப ஏதாவது பிரச்சினை பண்ணிட்டாரா… எதப்பத்தி முடிவெடுத்து இருக்குற நீ..” என லாவண்யா கேட்க,

பெருமூச்சு விட்ட சிதாரா, “ப்ச்ச்… இந்த தடவ அவன் ஏதும் பண்ணல… ” என்க,

“அப்போ என்ன தான்டி நடந்துச்சி… தெளிவா சொல்லேன்…” என லாவண்யா கேட்டாள்.

“என்ன இன்னெக்கி பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க… ரெண்டு வாரத்துல நிச்சயம்…” என சிதாரா கூறவும் அதிர்ந்த லாவண்யா,

“என்ன சொல்ற சித்து… நைட் பேசினப்போ கூட பொண்ணு பாக்க வரதா நீ எங்க கிட்ட சொல்லவே இல்லயே… எது எப்படியோ சந்தோஷமான விஷயம் தான் சொல்லிருக்க… மாப்பிள்ளை யாரு… என்ன பண்றாரு…” எனக் கேள்விக்கு மேல் கேள்வி தொடுக்கவும்,

சிதாரா, “ஆர்யான் தான் மாப்பிள்ளை…” என்றதும் அமைதியாகினாள் லாவண்யா.

“எனக்கே இன்னெக்கி காலைல தான் தெரியும்… அதுவும் மாப்பிள்ளை யார்னு கூட சொல்லல…” என்ற சிதாரா காலை முதல் நடந்தவற்றை கூறினாள்.

பின், “அவன கல்யாணம் பண்ணிக்குறதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல… நிச்சயமா யாரோ தெரியாத ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிற நிலமைல நான் இல்ல… அதனால ஆர்யான கல்யாணம் பண்ணுறது பிரச்சினை இல்ல… பட் என்னால அவன் லைஃப் ஸ்பாய்ல் ஆகிடுமோன்னு பயமா இருக்கு வனி… அவன் என்னன்னா ரொம்ப ஜாலியா பேசிட்டு போறான்… அவன் ஏதோ என் கிட்ட மறைக்கிறான்னு தோணுது வனி…” என தன் மனதிலுள்ள குழப்பங்களை லாவண்யாவிடம் தெரிவித்தாள் சிதாரா.

லாவண்யா, “நீ இதுல ஃபீல் பண்ண எதுவுமே இல்ல சித்து… உண்மைய சொன்னா ஆர்யான் அண்ணன கல்யாணம் பண்ணிக்க நீ ரொம்ப குடுத்து வெச்சிருக்கனும்… ஜஸ்ட் ஃப்ரென்டா இருக்கும் போதே உன்ன அவ்வளவு கேரிங்கா பார்த்துக்கிட்டாரு… இதே அவர் உன் வாழ்க்கைத் துணையா வந்தாருன்னா கடைசி வர உன்ன ரொம்ப சந்தோஷமா பார்த்துப்பாரு…” என்றவள்,

“அதனால…. இப்போ எங்க கல்யாணப் பொண்ணு எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம சந்தோஷமா இரு… அச்சு கிட்டயும் நான் சொல்றேன்… இந்த வாரமே நானும் அச்சுயும் கிளம்பி அங்க வரோம்… என்ஜாய் பண்றோம்….” என மகிழ்ச்சியாக கூறினாள்.

சிதாரா, “உன் கூட பேசினதுக்கு அப்புறம் தான் மனசுக்கு ரிலேக்ஸா இருக்கு வனி… அபி அண்ணாக்கும் ஆதர்ஷ் அண்ணாக்கும் சொல்லிடு…. கட்டாயம் இந்த வாரமே ரெண்டு பேரும் வந்துடுங்க…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

லாவண்யா அழைப்பைத் துண்டித்ததுமே சிதாராவின் மொபைலுக்கு மெசேஜ் ஒன்று வந்தது.

ஆர்யான், “குட் நைட் மிசிஸ்.ஆர்யான்😜” என அனுப்பி இருந்தான்.

அதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட சிதாரா,

“இவன் ஒருத்தன்… லூசு மாதிரி பண்ணிக்கிட்டு…” என அவனைத் திட்டினாலும் அவள் முகத்தில் புன்னகையொன்று வந்து மறைந்தது.

இங்கு லாவண்யா மொபைலை வைத்தவள்,

“ஆர்யான் அண்ணன் என்ன காரணத்தால உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னார்னு தெரியல சித்து… ஆனா நீ ஹாஸ்பிடல்ல சுய நினைவில்லாம கிடந்தப்போ அவர் உனக்காக துடிச்சத கண்கூடா பார்த்தேன்… நிச்சயம் அவர் உன்ன நல்லா பார்த்துப்பாரு..” எனத் தனக்கே சொல்லிக் கொண்டவள் அக்ஷராவிற்கும் ஆதர்ஷுக்கும் அழைத்து தகவல் கூறினாள்.

லாவண்யா கூறிய செய்தியில் மகிழ்ந்த ஆதர்ஷ் உடனே ஆர்யானுக்கும் சிதாராவுக்கும் வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பினான்.

ஆதர்ஷ் அபினவ்விற்கு அழைத்துக் கூற,

அபினவ்வின் அருகில் இருந்த பிரணவ்வும் கேட்டுக் கொண்டிருந்தான்.

பிரணவ் மனதில், “உன்னால அவ்வளவு சீக்கிரம் தாராவ என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது ஆர்யான்… குறுக்கு வழிலயாவது நான் அவள அடஞ்சே தீருவேன்…” என நினைத்துக் கொண்டான்.

இவர்களில் யார் நினைப்பது நடக்கும்????

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.