Loading

#இவன்_என்_தோழன்
(#காதலன்_அல்ல)

பத்து மாதங்கள்
என்னை சுமக்கவில்லை,,,,
பிரசவ வலியில்
துடிக்கவும் இல்லை,,,,
இருந்தும் என்னை
அன்போடு பாதுகாத்தான்.
#இவன்.:-)

எனக்கு நடக்க
கற்றுக்கொடுத்தது இல்லை,,,,
இருந்தும்,,,, எனக்கான வாழ்க்கையை
வாழ கற்றுக்கொடுத்தான்
#இவன்:-)

போடீ…. வாடீ,,,
என உரிமையோடு அழைப்பான்
#இவன்:-)

கோபம் வந்தால் #இவன்
அடிக்கவும் செய்தான்…..
தவறு செய்தால்
தலையில் குட்டு வைத்து
தவறை உணர்த்துவான் #இவன்:-

வெற்றி பெற்றால்
”இது என்ன பெரிதா????”’
என்று கூறி என் அடுத்த வெற்றிக்கு
அடிக்கல் நாட்டுவான் #இவன்:-)

உண்ணாமல் இருந்தால்
உரிமையோடு உணவை
ஊட்டி விடுவான் #இவன்…

உறங்க கூட மறந்து
அரட்டை அடித்து இருக்கிறோம்
அலைபேசியில்,,,,

”என்னால் முடியாது மச்சி”
என்ற பொழுதில்
”உன்னால் மட்டுமே முடியும்”
என்று அறிவுரை கூறுவான்
#இவன்:-)

பத்து மாதம் அல்ல
நட்பு என்னும் கருவறையில்
பல வருடங்களாய்
என்னை காத்தவனே….

ஒன்று மட்டும் கூறு!!!!
இத்தனையும் செய்தாய்,,,

நீ எனக்கு
அன்னையா????

தந்தையா?????

உடன்பிறப்பா?????

ஆசானா?????

புரிந்துவிட்டது….
இத்தனைக்கும் மேலாக
இவன் என் தோழன்….

எனக்கு அனைத்துமாய்
நிற்பவனே,,,,,
இந்த பிறவி மட்டுமல்ல
என் அடுத்தடுத்த
எல்லா பிறவியிலும்
#இவன்_என்_தோழன்
என்று பெருமையாய் சொல்ல
உன் #தோழியாகவே
பிறக்க ஆசை எனக்கு,,..

கற்பனைகளின் இளவரசி

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    7 Comments

    1. சில்வியா மனோகரன்

      கவிதை அருமை அக்கா 🤩
      தோழனுக்கும் காதலனுக்கும் நூலளவு வித்தியாசம் தான் . அதை இந்த உலகம் தான் புரிந்து கொள்வதில்லை . 👏👏👏

    2. அழகான கவிதை. அருமையான வரிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

    3. அழகான கவிதை. அருமையான வரிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்