
சில சமயங்களில் என்னதான் பெண்களுக்கு தன் பிறந்த வீட்டு நிலை தெரிந்திருந்தாலும் கூட மற்றவர்களுடன் ஒப்பிட்டோ,இல்லை தான் வருங்காலத்தில் அவர்கள் (புகுந்த)வீட்டில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று யோசித்தோ பெற்றவர்களை இவர்களே கூட நிறைய செய்ய வேண்டும் என்று வற்புறுத்தும் நிகழ்வுகள் கூட இந்த சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
எதை எப்படிப் பார்த்தாலும் பெண்ணை பெற்றவர்கள் ஏதாவது ஒரு வழியில் முடிகிறதோ முடியவில்லையோ மனநிறைவுடன் அளவுக்கு அதிகமாகவே சீர் செய்ய வேண்டி உள்ளது.
சங்கரனுக்கு இவற்றை பற்றி பெரியதாக ஒன்றும் தெரியாது.ரத்னா உலகம் தெரியா சிறு குழந்தை.
ஆனால் விவரங்கள் புரிந்த உமாவுக்கு உள்ளே விக்கித்து போயிற்று.
என்னதான் குரு வீட்டில் நம்பிக்கை கொடுத்திருந்தாலும் ஏறத்தாழ பத்து லகரங்கள்(1990 களில் என்று யோசித்தால் )… அம்மாடியோவ்!
அப்பாவால் எப்படி முடியும் என்று கலங்கினாள்.
அவளை, முன்னிறுத்தி பெறப்படும் தொகை. அவள் வாழ்நாள் முழுவதும் அங்கு அடிமைதான். மீட்சி பெற வழி இல்லை. பெற்றவர் அவளை விற்றுவிட்டார். அவளால் துக்கம் தாங்க இயலவில்லை.
யோசித்து சொல்வதாக சிவன் சொல்ல, தன் கணவரை தனியே கூட்டி சென்ற பாறு’ இதுல யோசிக்க என்ன இருக்கு அதுதான் அன்னபூரணி அம்மா எல்லாத்தையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்காங்களே… சரினு ஒத்துக்கோங்க’ என்று இதோபதேசம் செய்ய அத்தனை பேரும் வெளியே வந்த சிவன் இவர்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் சரிதான் என்று சொல்லிவிட்டார்.
அன்று இரவே அருணாசலத்திற்கு சிவன் போன் செய்ய, என்னய்யா நிச்சயம் எல்லாம் எப்படி நடந்தது … மூத்த சம்பந்திக்கும் மரியாதை செய்யணுமின்னு தெரியாம போச்சு உமக்கு என்று நக்கல் அடித்தார். இப்படி பேசுபவரிடம் நகை கல்யாண செலவு என்று எவ்வாறு பேச முடியும் என்ற மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தார் சிவன்.
வேறு வழியே இல்லை இவரிடம் பேசித்தான் ஆகவேண்டும் என்று முடிவு செய்தவராக சங்கரன் வீட்டில் கேட்டவற்றை பட்டியலிட,’’பரவாயில்லைய்யா, உம்ம ஒரு பொண்ணை காட்டி மூணு பொண்ணுகளுக்கும் வழிய பண்ணிட்ட… சரி எப்ப வர்ரியோ வந்து வாங்கிக்கோ எல்லாத்தையும் என்று முடித்துவிட்டார்” அருணாச்சலம். கேட்ட சிவனுக்கு ‘பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா’ என்று ஒரு கணம் தோன்றியது. பிறகு பெண்ணை பெற்றுவிட்டு மானம் மரியாதை என்று பேசிக்கொண்டு வெட்டியாய் திரிவதில் என்ன பயன் என்று தன்னையே தேற்றிக் கொண்டார்.
அருணாச்சலம் சிவனிடம் தொலைபேசியில் பேசியதை தன் அறையில் இருந்து கொண்டே கேட்டுக் கொண்டிருந்த குருபரன் முகம் சடுதியில் விகாரத்தில் மாறியது. அலட்சிய முறுவல் ஒன்று அவன் இதழ் கோடியில்.
என்னிக்குமே அன்ன காவடி… அன்னகாவடி தாண்டி என்று காற்றில் கூறிக் கொண்டிருந்தான்.
யாரிடம்?
**********************************************************
சாதுர்யா இன்றுடன் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீரங்கம் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவளின் சந்தோஷம் கரையை உடைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மா பக்கத்தில் இல்லை என்பது பெரிய வருத்தமாக இருந்தாலும் கூட கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுக்குட்டி தான் அவள்.
யாராலும் அவளை கையில் பிடிக்க முடியவில்லை. முதலில் வந்த பொழுது தோழர்கள் யாரும் இல்லை என்ற வருத்தம் அவளுக்கு இருந்தது.. ஆனால் இப்பொழுது பழைய தோழமைகள் ஒன்றுகூட தன்னை ஒதுக்காமல் சேர்த்துக்கொள்ள ஜோதியில் ஐக்கியமாகி விட்டாள் அவள். சதாசர்வகாலமும் கையில் மட்டையை பிடித்துக்கொண்டு ஓட்டம்தான்.
ரங்கனும் வந்து சேர்ந்துவிட சொல்லவா வேண்டும் நிலையை.
தன் அம்மா மற்றும் பாட்டி தாத்தாவுடன் வயலூரில் விடுப்பின் முதல்வாரத்தில் இருந்துவிட்டு தான் ஸ்ரீரங்கம் கிளம்பி வந்தான் ரங்கன்.முதலில் தன்னைப் பார்க்க வரவில்லை என்று கோபப்பட்ட சாதுர்யா கூட தன் கோபத்தை மறந்துவிட்டு ரங்கனுடன் இணைந்து கொண்டு விட்டாள் .
இரண்டு மூன்று நாட்கள் ஸ்ரீரங்கத்தில் கழித்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டு சாதுர்யாவையும் அழைத்துக்கொண்டு வயலூருக்கு பிரயாணம். தாமோதரன் இருவர் முகத்திலும் ஏதோ ஒரு அர்த்தம் உடைய புன்னகை.
லட்சுமியின் மனம் முழுவதும் தனது மருமகள் மாலதி, பேத்தி சாதுர்யா பற்றி சொன்னவைகளே ஓடிக்கொண்டிருந்தது. ஏனோ அவற்றை தாமோதரனுடன் பகிர்ந்துகொள்ள லக்ஷ்மிக்கு வாய் வரவில்லை.
சாதுர்யா கிளம்பிப் போய் மூன்று நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் லக்ஷ்மி தங்கம் இவற்றையெல்லாம் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.. லக்ஷ்மியின் மனம் முழுவதும் ஏதோ சந்தோஷ அலை. மாட்டுக் கொட்டகையில் அமர்ந்துகொண்டு அங்கு சாதுர்யா செய்த குறும்புகள் எல்லாம் ஞாபகம் வந்தது லக்ஷ்மிக்கு.
அன்று மதிய வேளையில் அவர்கள் வீட்டுப் பசு மகாலட்சுமி கன்று ஈன சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் லக்ஷ்மி அம்மாள். வீட்டின் பசுக்கள் குட்டி ஈனும் பொழுது ஒவ்வொரு சமயமும் தனக்கு குழந்தை பிறந்தது போன்ற குதூகலம். அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விடாதே!
வயலூரில்,
தனது மாமியார் மாமனாரை வருடாந்திர பரிசோதனை செய்யவென கூட்டிக்கொண்டு வழக்கமாக செல்லும் சென்னையில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தாள் ரேணு. வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகிவிடும். இருவரும் ஸ்ரீரங்கத்திற்கு செல்வதாக இருந்தால் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள் ரேணு.
ஆனால், இளம்பிராயத்தினர் இருவருக்கும் ஸ்ரீரங்கம் செல்ல மனது இல்லை. ரங்கன் எனக்கு சமைக்க தெரியும் என்று சொல்லிவிட, சமையல் தவிர வேறு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்று இருவரும் முடிவு செய்து வயலூரிலேயே தங்கி விட்டார்கள்.
மதியம்வரை பம்புசெட்டில் ஆட்டம் போட்டுவிட்டு, வீட்டிற்கு வந்த சாதுர்யா, ரங்கன் வீட்டு மாட்டு கொட்டகை அருகே வரும்போது, கீழே இருக்கும் சாணியை கவனிக்காமல் ஓடிவர, கால் வழுக்கி விட்டது. அந்த சமயம் தனது தலை துவட்டிய துவாலையை பின்கட்டில் உலர்த்தவென அந்த பக்கம் வந்த ரங்கன் அவள் கீழே விழுந்துவிடாமல் இருக்க அவள் இடுப்பை வலுவாக பற்றி இழுக்க, சுரீர் என்று அடிவயிறு கவ்வி பிடிக்க, வலி தாங்கமுடியாமல் முனகிக்கொண்டே தன் அறைக்கு செல்ல எத்தனி த்தவளால் சுத்தமாய் முடியவில்லை. பற்களை கடித்து பொறுத்துக்கொள்ள முயன்றவளால் முடியாமல் போக ரங்கானே அவளை உள்ளே சென்று கொண்டு விட்டான். வலியில் அவள் கண்கள் nerr பொழிய தவித்து போனான் ரங்கன். வலியின் தாக்கத்தில் வாந்தியும் மயக்கமுமாய் அவள் தவிக்க,என்ன செய்வதென்று புரியாமல் தன் அம்மாவுக்கு ரங்கன் போன் செய்தால், அவள் எடுக்கவில்லை.
அதற்குள் சாதுர்யா குளியலறை சென்று வந்தவள் முகம் எங்கும் புரியா உணர்வு குழப்பம்.ரங்கனை வெளியே இருக்க சொல்லிவிட்டு
தன்னிடம் தன் அம்மா கொடுத்து வைத்திருக்கும் நாப்கின் எடுத்துகொண்டு மீண்டும் டாய்லெட் சென்று வந்தவள், பாட்டி சொன்னபடி நேரத்தை தனது டைரியில் எழுதி வைத்துகொண்டு கதவு தாழ்ப்பாளை திறந்தவள் ரன்கனிடம் எப்படி சொல்வது என்று தயங்க, அவனோ ‘குட் நியூசா சாது…’நீ வயிறு வலின்னு அழுத உடனே அப்படி இருக்குமோன்னு தோணிச்சு என்றான்.
பிறகு லட்சுமி பாட்டிக்கு அழைத்து விஷயத்தை சொன்னவன், வடித்திருந்த சாதத்தில் கொஞ்சம் எடுத்து பாயசம் செய்து, அம்மா அரைத்து வைத்து சென்ற உளுந்து மாவில் வடை பொரித்து சதுர்யா தட்டில் வைத்து அவள் அறைக்கு கொண்டு சென்றான்.
உணவு வேண்டாம்.. பிடிக்கல என்று அழுதவளை தேற்றி ஊட்டியும் விட்டான்.
வயிறு வலிக்கிறது என்பவளுக்கு எதை கொடுத்தால் வலி குறையும் என்றுதான் அவனுக்கு புரியவில்லை.
வேலை செய்யும் பெண்களை கேட்கலாம் என்றால், வீட்டுக்கு பெரியவர்கள் வராமல் விஷயம் வெளி செல்வது சரி இல்லை என்று யோசித்து தன் தோழிக்கு அழைத்து கேட்டு வெள்ளை வெங்காயம் எடுத்து நீரில் வேக வைத்து சாதுவுக்கு கொடுத்தான் ரங்கன்.
இருவர் மனங்களிலும் பெயர் சொல்ல முடியா விளங்கா உணர்வு. ரங்கன் சொன்ன விஷயம் கேட்டு, முதலில் அதிர்ச்சி அடைந்த லட்சுமி அம்மாள் பிறகு தன்னை சுதாரித்தவராக, முதலில் ரங்கனை பெண்ணை கூட்டிக்கொண்டு ஸ்ரீரங்கம் வரச்சொல்லி, தானே அனைத்தையும் பார்க்கலாம் என்று நினைத்தவர், பின்னர் இந்த நிலையில் துணைக்கு வேறு பெரியவர்களும் யாருமில்லா சமயத்தில் பூப்பெய்தியிருக்கும் சாதுர்யாவை கூட்டிக் கொண்டு வருவது சாத்தியப்படாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவர், ரங்கனிடம் பெண்ணவள் என்ன சாப்பிட்டாள், அவள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்றெல்லாம் கேட்டு அறிந்து கொண்டார்.
ரங்கனின் பதில்களில் சற்றே அமைதியுற்றவர், மேலும் சில விஷயங்களை அரங்கனிடம் சொல்லிவிட்டு, எப்படியும் இங்கு ஏற்பாடுகளை பண்ணிவிட்டு மாலைக்குள் வயலூர் வந்துவிடுகிறோம் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார்.
வயலுக்கு சென்றிருந்த தாமோதரன் வீட்டிற்குள் அப்பொழுதுதான் நுழைய கையில் இனிப்பை வைத்துக்கொண்டு தாமுவிடம் வேக வேகமாய் ஓடி வரும் அந்த எழுபது வயது பாட்டி அங்கு நின்று வேலை செய்துகொண்டிருந்த எல்லோருக்குமே புதியவர் தான். பாட்டியின் நடையில் கூட இன்று ஒரு துள்ளல்.
இனிப்பை கணவரிடம் கொடுத்துவிட்டு, கணவர் உண்ணுவதை பார்த்து சந்தோஷப்பட்டவளாக மெல்ல தாமுவிடம் சாதுர்யாவின் விஷயத்தைச் சொல்ல கிழவருக்கும் மனைவிடம் இருந்து சந்தோசம் தொற்றிக்கொண்டது.
லட்சுமி பாட்டி தனது மருமகள் மாலதிக்கும் அழைத்து தகவலை சொல்ல மாலதிகோ கண்களில் இருந்து நீர் கோர்த்துக் கொண்டது.
வெகு காலமாய் மாலதி கவலைப்பட்டுக் கொண்டிருந்த விஷயம் இது. தன் வீட்டில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நல்ல விஷயம், இன்றோ தன் பெற்றோர்கள் வீட்டில் நடக்காமல், தன் புகுந்த வீட்டிலும் நடக்காமல், நாத்தனார் வீட்டிற்கு சென்று இருக்கும்பொழுது அதுவும் பெரியவர்கள் கூட யாரும் இல்லாத நிலையில் நடந்திருக்கிறது என்றால் அந்த அம்மாவின் உணர்வுகள் எப்படி இருக்கும்? இன்னொரு பக்கம் இத்தனையையும் தனியாய் சமாளித்துக் கொண்டிருக்கும் ரங்கனை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருந்தது மாலதிக்கு.
கணவர் வெங்கடேசன் அடிக்கடி ரங்கனை பற்றிய உயர்ந்து புகழ்ந்து பேசும்போது சற்று மாலதிக்கு பொறாமை ஏறும். தன் நாத்தனார் மகனைப் போல தன் மகளும் தேர்ந்தவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளூர மாலதிக்கு உண்டு.
அதனால் தான் ரங்கனை தூர நிறுத்தும் நோக்கில் அவனிடமே சாதுர்யாவின் வருங்கால முன்னேற்றம் பற்றி பேசியது. ஆனால் ரங்கன் எவ்வளவு பொறுப்பானவன் என்பது இந்த நிமிடம் மாலதிக்கு புரிந்து போயிற்று. அலுவலகத்தில் இருக்கும்
தன் கணவருக்கு அலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னவளுக்கு, இந்த நொடி ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்று பரபரத்தது. லட்சுமி அம்மாள் மாலதியின் பெற்றவர்களுக்கும் சொல்ல அவர்கள் திருநெல்வேலியிலிருந்து தலைக்கு தண்ணீர் ஊற்றும் போது சீருடன் வருவதாக சொல்லிவிட்டார்கள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

