Loading

வேலை முடித்து வீட்டிற்கு வந்த நித்யாவும் பழைய நினைவுகளிலே மூழ்கி இருந்தாள். 

 

அங்கு வீட்டிலிருந்த சஜீவ்விற்கு நித்யாவை எவ்வாறாவது சமாதானப்படுத்த வேண்டும் என எண்ணியவனாய் முதலில் ப்ரேமிடமிருந்து அவள் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டான். 

 

ஐந்து வருடங்களுக்கு முன் இரவு பகலாக எந்த அழைப்பு வராதா என காத்திருந்தவளுக்கு அலைபேசி திரையில் சஜீவ்வின் எண்ணைப் பார்த்ததும் முகத்தில் புன்னகை பூத்தது. 

 

ஆனால் இடையில் நடந்த சம்பவங்கள் ஞாபகம் வந்ததும் அப் புன்னகை வந்த சுவடே தெரியாமல் மறைந்தது. 

 

கோபமாக அழைப்பைத் துண்டித்தாள். 

 

சஜீவ் இதை ஏற்கனவே எதிர்ப்பார்த்ததால் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தான். 

 

இறுதியில் வெறுப்புடன் நித்யா அழைப்பை ஏற்று, “உன் கூட பேச பிடிக்கலன்னு தானே கால கட் பண்றேன்.. பின்ன எதுக்கு திரும்ப திரும்ப கால் பண்ணி டிஷ்டர்ப் பண்றாய்..” என கோபமாக பேசி விட்டு அழைப்பைத் துண்டிக்கச் செல்ல, 

 

“யுவி… யுவி… ப்ளீஸ் கால கட் பண்ணிறாதே.. நான் சொல்லுறத கொஞ்சம் கேளு.. நான் எதனால அப்படி நடந்துக்கிட்டேன்னா…” சஜீவ் பேசிக் கொண்டு செல்ல இடையில் நித்யா, 

 

“எனக்கு உன்னோட எந்த ரீசனும் கேக்கனும்னு அவசியமில்ல.. முதல்ல யுவின்னு கூப்பிட்ரத்த நிறுத்து.. கேக்கவே வெறுப்பா இருக்கு.. எனக்கு இனி கால் பண்ணாதே.. ஐ ஹேட் யூ…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தாள். 

 

சஜீவ் அழைப்பு துண்டிக்கப்பட்டதைக் கண்டதும், 

 

“இன்னெக்கி என்ன வெறுத்து நீ ஐ ஹேட் யூ சொல்லி இருக்கலாம் யுவி.. பட் இதே ஐ ஹேட் யூவ கூடிய சீக்கிரம் நீயா விருப்பப்பட்டு சந்தோஷமா சொல்ல வைக்கிறேன்..” என மனதில் நினைத்துக் கொண்டு பழைய சம்பவமொன்றை நினைத்து சிரித்துக் கொண்டான். 

 

இவ்வாறே நாட்கள் வேகமாக நகர சஜீவ்வும் நித்யாவை நேரில் சந்தித்து பேச பல முறை முயற்சி செய்தும் எதுவும் சரி வரவில்லை. 

 

ஜனனி ப்ரேம் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்த நிலையில் ஜனனி கருவுற்ற செய்தியை கேட்ட நண்பர்கள் அனைவரும் ஜனனி ப்ரேமுக்கு அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

 

நித்ய யுவனியும் ஜனனிக்கு அழைத்து, “ஹேய் ஜெனி… காங்கிராட்ஸ் டி… நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. சீக்கிரம் குழந்தையை பெத்து என் கைல குடுத்துடு.. நான் நல்ல படியா அவன வளத்து எடுக்குறேன்..” என்க, 

 

“போடி இவளே.. அது என் ப்ரேமோட உயிர்.. உன் கிட்ட எல்லாம் தர முடியாது.. சரி அதை விடு.. வசு அம்மா பேசினப்போ சொன்னாங்க உனக்கு யூ.எஸ் போக ஆஃபர் கிடைச்சி இருக்குன்னு.. அது விஷயம் என்னாச்சி..” என கேட்க நித்யாவோ சலித்துக் கொண்டு, 

 

“ப்ச்ச்.. எனக்கு பிடிக்கல.. ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப தான் அம்மா அப்பா கூட கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன்.. யூ.எஸ் போய்ட்டன்னா எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. சோ இங்கே ட்ரான்ஸ்ஃபர் வாங்கலான்னு இருக்கேன்..” என்க,

 

“ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்.. நீ இங்க இருந்தா எனக்கும் நல்லது.. தெரியாதவங்க கிட்ட செக்கப் போறதுக்கு உன் கிட்டே வர முடியும்..” என ஜனனி கூற பின் சிறிது நேரம் இருவரும் அரட்டை அடித்து விட்டு வைத்தனர். 

 

ஜனனியுடன் பேசி விட்டு வைக்கவும் ஜீவிகாவும் வீரும் அனுமதி கேட்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது. 

 

நித்யாவின் பார்வையோ அவர்களை தாண்டி சென்றது. 

 

இருந்தும் அவளின் தேடலுக்கு ஏமாற்றமே கிடைத்தது. 

 

நித்யா, “மிஸ்டர்.வீராஜ்.. உங்க ரிப்போர்ட்ஸ் வந்து இருக்கு.. மிஸ்டர்.வீராஜ் நீங்க ட்ரீட்மன்ட்ட ரொம்ப நல்லாவே ஃபலோ பண்ணி இருக்கீங்க.. நல்ல இம்ப்ரூவ்மன்ட் இருக்கு.. ஃபிப்டி பர்சன்ட்டேஜ் யூ ஆர் ஓக்கே நவ்.. இருந்தாலும் கன்ட்டினியுவா ட்ரீட்மன்ட்ட ஃபலோ பண்ணுங்க.. கூடிய சீக்கிரம் உங்க ரெண்டு பேருக்கும் நல்ல செய்தி கிடைக்கும்.. யூ மே லீவ் நவ்..” என்க 

 

இருவரும், “தேங்க்ஸ் டாக்டர். ” என்று விட்டு பின் வீர் ஏதோ கேட்க நினைத்து விட்டு கேட்காமல் பின்வாங்கி வெளியேறினர். 

 

அவர்கள் சென்றதும் இதுவரை தன் உணர்வுகளை அடக்கி இறுகிய முகத்துடன் காணப்பட்டவள் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள். 

 

ஆனால் அவளின் நிம்மதியோ வெகுநேரம் நீடிக்கவில்லை. 

 

அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வீடு செல்ல ஆயத்தமாகி எழுந்தவளை கதவை வேகமாக திறந்து கொண்டு நுழைந்தவன் அவளது தோள்களை அழுத்திப் பிடித்து சுவற்றில் சாய்த்து, 

 

“ஏன் டி இப்படி பண்றாய்.. நான் பண்ணது தப்பு தான்.. இல்லன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா நான் எதுக்காக அப்படி பண்ணினேன்னு ஒரே ஒரு தடவை கூட உன்னால காது கொடுத்து கேட்க முடியலயா? எத்தனை தடவை உன் கூட பேச ட்ரை பண்றேன்.. கொஞ்சம் கூட என் மேல உனக்கு காதலே கிடையாதா.. ஏன் டி ஏன்..” என இன்னும் அழுத்தத்தை அதிகரிக்க, 

 

வலியில் முகம் சுருக்கிய நித்யா, “வலிக்கிது சர்வேஷ்.. ப்ளீஸ் விடு..” என்றாள். 

 

“எனக்கு அத விட வலிக்குதுடி இங்க..” என நெஞ்சைத் தொட்டுக் காட்டியவன்,

 

“முடியாது டி… நீ எனக்கு இப்பவே பதில் சொல்லியே ஆகனும்..” என்க, 

 

“என்ன சொல்லனும்னு எதிர்ப்பாக்குறாய் சர்வேஷ்… உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா.. எனக்கு உன்ன பாக்கவோ பேசவோ பிடிக்கல.. எனக்கு உன் மேல காதலோ எதுவுமே கிடையாது.. நான் உன்ன மொத்தமா வெறுக்குறேன்..” என ஆவேசமாக கத்தியவளின் முடியை ஒரு கையால் பிடித்து தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்தவன் அவள் இதழ்களை வன்மையாக சிறை பிடித்து தன் காதலை அவளுக்கு உணர்த்த முயன்றான். 

 

நித்யா தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ள முயன்று தோற்றாள். 

 

சஜீவ்வோ இப்போதே தன் காதலை அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில் தன் இதழ் கொண்டு அவள் இதழ்களில் ஆட்சி நடத்தினான். 

 

ஏனோ அவனுக்கு அவளை விட்டு பிரிய மனமே இல்லை. 

 

அவன் கன்னத்தில் அவள் கண்ணீர் பட்டதும் தான் தன்னிலை உணர்ந்து அவளை விடுவித்தான். 

 

அவன் விட்டதும் அவள் பூவிரல்கள் ஐந்தும் அவன் கன்னத்தைப் பதம் பார்த்தது.  

 

கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வடிந்தது நித்யாவிற்கு. 

 

சஜீவ்விற்கு அவளை ஏறெடுத்துப் பார்க்கவும் தயக்கமாக இருந்தது. 

 

ஏதோ ஒரு வேகத்தில் தன் காதலை அவளுக்கு உணர்த்தும் நோக்கில் செய்து விட்டான். 

 

இப்போது தன்னை நினைத்தே அவனுக்கு வெறுப்பாக இருந்தது. 

 

நித்யா எதுவும் பேசவில்லை. தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள். 

 

சஜீவ்வும் அவளைத் தடுக்க முயற்சிக்கவில்லை. நித்யா சென்று சிறிது நேரத்தில் அவனும் சென்றான்.

 

வீடு வந்தவளின் மனமோ உலைக்கலமாய் கொதித்தது. 

 

இரவு உணவையும் தவிர்த்து விட்டு அறையிலேயே அடைந்து கிடந்தாள். 

 

பலமுறை உறங்க முயன்றும் நித்ராதேவியும் அவளை அணைக்கவில்லை. 

 

இன்று நடந்த சம்பவமே அவளைத் தூங்க விடாது இம்சித்தது. 

 

இறுதியில் ஏதோ முடிவு எடுத்தவளாய் யாருக்கோ அழைத்து பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தாள். 

 

இரவு முழுவதும் தலையணை நனையுமளவுக்கு அழுது கரைந்தாள். 

 

உணவையும் தவிர்த்து வெகு நேரம் விடாது அழுததால் காய்ச்சல் பிடித்துக் கொண்டது அவளை. 

 

இங்கு சஜீவ்வின் நிலையோ பரிதாபம்.

 

நித்யாவை சமாதானப்படுத்த நினைத்து சென்றவன் இறுதியில் அவளை மேலும் வருத்தி விட்டு வந்ததை எண்ணிக் கலங்கினான். 

 

அவனுக்கும் அன்று தூங்கா இரவாகவே கழிந்தது. 

 

மறுநாள் விடிந்ததும் வாசலில் கோலம் போட்டு சமையல் வேலைகளை முடித்த வசந்தி ராஜாராமிற்கு காபியை வழங்கி விட்டு, 

 

“என்னங்க விடிஞ்சி இவ்வளவு நேரமாச்சி இந்த பொண்ணு இன்னும் எந்திரிச்சி வரல.. இவ ஒரு நாளும் இப்படி தூங்க மாட்டாளே.. நைட்டு சாப்பிட கூட இல்ல..” என கவலையாய் கூற,

 

“விடு வசு.. ரொம்ப வேலைன்னு ட்டையர்ட் ஆகி தூங்குறாளா இருக்கும்.. நீ வேணா மேல போய் பார்த்துட்டு வா..” என ராஜாராம் கூறவும் நித்யாவை அழைக்க வசந்தி மாடிக்குச் சென்று போன வேகத்தில் திரும்பி வந்து, 

 

“என்னங்க யுவனிய அவளோட ரூம்ல காணோம்ங்க..” என பதறியவாறு கூற ராஜாராம், 

 

“எதுக்கு வசு இப்போ தேவையில்லாம டென்ஷன் ஆகுறாய்.. ஏதாச்சும் இமர்ஜன்சின்னு கால் வந்து இருக்கும்… அதான் சொல்லாம கொல்லாம போய்ட்டா.. அவ வேலை முடிஞ்சதும் உனக்கு கால் பண்ணி பேசுவா.. நீ பதட்டப்படாம இரு..” என்றார். 

 

“நீங்க சொல்லுறீங்க.. எனக்கு என்னவோ மனசு திக்கு திக்குன்னு அடிக்கிதுங்க.. என் பொண்ண அந்த கடவுள் தான் காப்பாத்தனும்..” என்று விட்டு பூஜையறையை நோக்கிச் சென்றார். 

 

வசந்தி அவ்வாறு கூறியதும் ராஜாராமையும் லேசாக பதற்றம் தொற்றிக் கொண்டது.

 

❤️❤️❤️❤️❤️

 

– Nuha Maryam –

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்