Loading

நினைவுகளில் மூழ்கிக் கிடந்தவளை கதவு தட்டப்படும் சத்தம் மீட்டெடுத்தது.

“யுவனிம்மா… கொஞ்சம் கதவ திறமா..” என வசந்தி வெளியிலிருந்து அழைக்க,

“இதோ வரேன்மா..” என்ற படி நித்யா சென்று கதவைத் திறந்தாள்.

வசந்தி, “தூங்கிட்டு இருந்தியாம்மா..” என்றவாறு அவள் தலையை வருட நித்யா,

“ஆமாம்மா.. லேசா தலைவலி.. அதான் தூங்கிட்டேன்..” என்க,

“சரிடா அப்பா உன்ன ரொம்ப நேரமா கூப்ட்டாரு.. நீ போய் என்னன்னு கேளு.. நான் உன் தலைவலிக்கு சூடா காபி எடுத்துட்டு வரேன்..” என்று விட்டு கீழே செல்ல நித்யாவும் முகம் கழுவி உடை மாற்றி விட்டு தந்தையைக் காண கீழே சென்றாள்.

ராஜாராம் சோஃபாவில் இருந்து பத்திரிகை படித்த படி இருக்க நித்யா சென்று அவர் பக்கத்தில் அமர்ந்து அவர் தோளில் தலை சாய்த்த படி, “என்னப்பா கூப்டீங்கலாம்..” என்க,

ராஜாராம், “ஆமாம்மா.. அம்மா சொன்னாங்க ஜனனி எதுக்கோ கூப்பிட்டு நீ போய்ட்டு வந்தன்னு.. என்னம்மா ஆச்சி.. ஜனனி என்ன சொல்றா.. புகுந்த வீட்டுல எல்லாரும் நல்லா பழகுறாங்கலாமா..” எனக் கேட்க,

“ப்ரென்ட்ஸ் எல்லாருக்கும் ஜெனியும் ப்ரேம்ணாவும் பார்ட்டி வெச்சாங்க.. அதுக்கு தான்ப்பா சித்து கூட போனேன்.. அப்புறம் ப்ரேம்ணா வீட்டுல ஜெனிய ரொம்ப நல்லா பாத்துக்குறாங்கலாம்.. அதுலயும் ஜானகிம்மா ஜெனிய சொந்தப் பொண்ணு போல பாத்துக்குறாங்கலாம்.. அவ ரொம்ப ஹேப்பியா இருக்காப்பா..” என தன் உயிர்த்தோழியின் வாழ்வை எண்ணி புன்னகைத்தபடி கூறினாள் நித்யா.

ராஜாராம்,”ரொம்ப சந்தோஷம்மா.. அதே போல நல்ல குடும்பம் ஒன்னு என் பொண்ணுக்கும் சீக்கிரம் கெடச்சிட்டா நல்லா இருக்கும்…” என அவள் தலையை வருட நித்யா வெறும் புன்னகையை உதிர்த்தாள்.

” பேசிட்டு இருந்தத்துல உன்ன எதுக்கு கூப்டேன்னும் மறந்துட்டுமா.. உனக்கு ஏதோ லெட்டர் வந்திருக்கு யுவனிம்மா.. படிச்சி பாரு என்னன்னு..” என அவள் கைகளில் கொடுக்க வாசித்துக் பார்த்தவள் கண்களில் ஆச்சர்யம், மகிழ்ச்சி பின் சோகம் என பலவித உணர்ச்சிகள்.

அங்கு வந்த வசந்தி அவள் கைகளில் காபியை கொடுத்து விட்டு, “என்ன லெட்டர் யுவனிம்மா..” என்க,

நித்யா, “ஒன்னுமில்லம்மா.. யூ.எஸ் ல ஏதோ மெடிக்கல் கேம்ப் இருக்காம்.. இந்தியால இருந்து ஒரு வருஷத்துல ஒரு ஹாஸ்பிட்டல் செலக்ட் பண்ணி அதுல ரெண்டு டாக்டர்ஸ செலெக்ட் பண்ணுவாங்க.. இந்த தடவ பேங்களூர்ல எங்க ஹாஸ்பிட்டல்ல இருந்து என்னையும் இன்னொருத்தங்களையும் செலெக்ட் பண்ணிருக்காங்க..” என ஆர்வமில்லாமல் கூற,

“இது ரொம்ப நல்ல விஷயமாச்சேம்மா.. உனக்கு கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்பும்மா.. இதை ஏன் நீ இவ்வளவு சோகமா சொல்றாய்… எப்போ கிளம்பனும்..” என வசந்தி கேட்க,

“அது இல்லம்மா.. ரொம்ப வருஷம் கழிச்சி உங்க கூட இருக்கேன்.. இப்போ இதை எக்சப்ட் பண்ணினா திரும்ப வர டூ ஆர் த்ரீ மன்த்ஸ் ஆகும்.. ஒரு வாரத்துல பதில் அனுப்ப சொல்லி இருக்காங்க.. பாக்கலாம் யோசிச்சி..” என நித்யா கூறும் போதே அவள் மொபைல் அடித்தது.

சித்தார்த் தான் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்று காதில் வைத்து,

“சொல்லு சித்து.. என்ன இந்த டைம் கால் பண்ணி இருக்காய்..” என்க சித்தார்த் மறுமுனையிலிருந்து,

“நிது ஒரு குட் நியுஸ் சொல்ல தான் எடுத்தேன்.. என்ன யூ.எஸ் மெடிக்கல் கேம்ப் போக செலெக்ட் பண்ணிருக்காங்க..” என சந்தோஷமாக கூற நித்யா,”என்னையும் தான் சித்து.. பட் நான் இன்னும் முடிவு பண்ணல…” என்க சித்தார்த்,

“என்ன நிது இப்படி சொல்றாய்.. எவ்வளவு பெரிய ஆப்பர்ச்சுனிட்டி தெரியுமா.. அவ்வளவு ஈசியா யாருக்கும் கிடைக்காது.. நீ ஆன்ட்டி பக்கத்துல இருந்தா மொபைல குடு நான் அவங்க கூட பேசிக்குறேன்…” என்க மொபைலை வசந்தியிடம் கொடுக்க அவர் சிறிது நேரம் பேசி விட்டு சித்தார்த்தை வாழ்த்தி விட்டு அழைப்பைத் துண்டித்தார்.

பின் வசந்தி, “யுவனிம்மா.. சித்தார்த்தையும் செலெக்ட் பண்ணி இருக்காங்கலாம்.. நீ போய்ட்டு வாடா.. நல்லா இருக்கும்..” எனக் கூற,

“சரிம்மா.. நான் யோசிச்சி பாக்குறேன்.. எனக்கு பசிக்கல… நான் போய் தூங்குறேன்.. ரொம்ப டையர்டா இருக்கு.. குட் நைட்மா.. குட் நைட்பா..” என்று விட்டு மாடி ஏறி தன் அறைக்குச் சென்றாள் நித்யா.

கதிரவன் தன் பொற் கதிர்களை பூமித்தாய் மீது வீச அதன் பார்வை வீச்சு தாங்காது வெண்மதி ஒழிந்து கொள்ள அன்றைய நாள் அழகாய் விடிந்தது.

தன்னவள் கண்களில் கண்ணீருடன் தன்னை விட்டு சென்று கொண்டிருக்க அவள் கை பிடித்து தடுக்க நினைத்தால் அவனால் காற்றைத் தான் பிடிக்க முடிந்தது.

தான் ஆசையாய் அழைக்கும் பெயர் கூறி தடுக்க நினைத்தால் தொலைவிலுள்ளவளுக்கு அவன் குரல் எட்டவில்லையோ என்னவோ.

திடீரென ஒரு ஒளி பரவ கண்களை இறுக மூடி விட்டு திறக்க,

“என்னண்ணா? பத்து மணி ஆகிடுச்சி.. இன்னும் தூங்கிட்டு இருக்காய்.. அதனால தான் வின்டோவ ஓபன் பண்ணேன் உன்ன எழுப்பலாம்னு..” என்க,

“நீ இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுற ஜீவி..” என சர்வேஷ் கேட்க, கையில் காபியுடன் வந்த ஈஷ்வரி அதை அவனிடம் கொடுத்து விட்டு,

“மாப்பிள்ளைக்கு ஏதோ அவசர வேலை ஒன்னு வந்துட்டுப்பா.. உனக்கு இன்னெக்கி ஆபீஸ் லீவ் தானே.. ஜீவிக்கு இன்னெக்கி டாக்டர் கிட்ட அப்பாய்ன்மன்ட் போட்டு இருக்குப்பா.. கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆக போகுது.. இன்னும் இவ வயித்துல ஒரு புழு பூச்சி கூட தங்கல.. ஏதோ சம்பந்தி நல்லவங்களா இருக்க போய் எதுவும் சொல்லல.. அதுக்காக நாம அமைதியா இருக்க முடியுமா.. நீ கொஞ்சம் அவ கூட ஹாஸ்பிட்டல் வரைக்கும் போய்ட்டு வாப்பா..” என ஈஷ்வரி கேட்க சஜீவ் மனதில்,”யுவிய எப்படி சரி மீட் பண்ணி பேசனும்னு நினைச்சேனே.. என்ன பண்ணலாம்..” என யோசிக்க தன் தாயின் பேச்சில் தங்கையின் முகத்தில் படர்ந்த வேதனையைக் கண்டவன், “ஹ்ம்ம் சரிம்மா.. நான் போய் குளிச்சிட்டு வரேன்.. ஜீவி நீ கீழ வெய்ட் பண்ணு…” என்று விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான் சஜீவ்.

SATHYAM FERTILITY & RESEARCH CENTER என்ற வாசகத்தைப் பார்த்தபடியே காரை நிறுத்தினான் சஜீவ்.

ரிசப்ஷனிஸ்ட்டிடம் சென்றவன், “இன்னெக்கி கைனகாலஜிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தர் வரதா சொன்னாங்க.. அப்பாய்ன்மன்ட் ஆல்ரெடி போட்டு இருந்தோம்…” என்க,

“ஹால் நம்பர் த்ரீல வெய்ட் பண்ணுங்க சேர்.‌. உங்க நம்பர் வரும் போது கூப்பிடுவாங்க..” என ரிசப்ஷனிஸ்ட் பதிலளிக்க ஜீவிகாவுடன் சென்று வைத்தியரின் அழைப்புக்காக காத்திருந்தான்.

சற்று நேரத்தில் அவர்கள் அருகில் வந்த தாதி ஒருவர், “நீங்க உள்ள போலாம்…” என்க இருவரும் வைத்தியரின் அறைக்குச் செல்ல, ஒரு நிமிடம் அதிர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கினர்.

அதற்குள், “டேக் யுவர் சீட் மிசிஸ்.வீராஜ்.. சொல்லுங்க உங்க ப்ராப்ளம் என்ன..” என்றது சாக்ஷாத் நித்ய யுவனியே தான்.

“அதுவந்து அண்… சாரி டாக்டர்.. எனக்கு மேரேஜ் ஆகி ஆல்மோஸ்ட் டூ இயர்ஸ் ஆக போகுது.. பட் இன்னும் குழந்தை….” என ஜீவிகா இழுக்க,

நித்ய யுவனி வைத்தியர் மேசையிலிருந்த அழைப்பு மணியைத் தட்ட உடனே தாதியொருவர் அறைக்குள் நுழைய அவரிடம்,

” சிஸ்டர் இவங்கள கூட்டிட்டுப் போய் செக்கப் பண்ணுங்க.. நீங்க இவங்க கூட போங்க..” என்றதும் ஜீவிகா அத் தாதியுடன் வெளியேற அதுவரையில் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்த சஜீவ்,

“யுவி நான் உன் கூட கொஞ்சம் பேசனும் ப்ளீஸ்..” என்க அதுவரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்து கடமையே கண்ணாக இருந்த நித்ய யுவனி தலை நிமிர்த்தி அவனைக் கூர்ந்து நோக்கினாள்.

பின் தன் அடையாள அட்டையை அவன் முன் நீட்டி,

“நித்ய யுவனி… அன்அஃபீசியலா யாரு கூடவும் பேசி டைம் வேஸ்ட் பண்ண என்னால முடியாது.. வெளிய இன்னும் நெறய பேஷன்ட்ஸ் வெய்ட் பண்ணுறாங்க..” என்க,

“யுவி ப்ளீஸ்.. என்ன ரீசன்னு சரி கேளுடி..” என சஜீவ் கூற அவனைப் பார்த்து வரட்டுப் புன்னகை ஒன்றை உதிர்த்த நித்யா,

“ஏன் சேர் ஒவ்வொரு தடவையும் விட்டுட்டு போக கிட்டயும் ரீசன் சொல்லிட்டா போனீங்க.. இப்போ மட்டும் என்ன வந்தது.. எனக்கு உங்க எந்த ரீசனும் கேக்கனும்னு அவசியமில்ல… ஜஸ்ட் ஸ்டே அவே ஃப்ரம் மீ..” என்க,

“அன்னெக்கி நான் ஏன் அப்படி….” என சஜீவ் ஆரம்பிக்கும் போதே ஜீவிகா வர அவன் அமைதியாகினான்.

நித்யா, “ஓக்கே மிசிஸ்.ஜீவிகா இன்னும் டூ டேய்ஸ்ல உங்க ரிப்போர்ட் வந்துரும்.. சோ நீங்க கண்டிப்பா டூ டேய்ஸ்ல உங்க ஹஸ்பனையும் கூட்டிட்டு வாங்க.. பிகோஸ் இந்த மாதிரி டெஸ்ட் எல்லாம் ஹஸ்பன்ட்  என்ட் வைஃப் ரெண்டு பேரும் எடுக்கனும்.. அப்போ தான் என்ன பிரச்சினைனு எங்களால சொல்ல முடியும்.. எல்லாத்துக்கும் மேல இந்த காலத்துல இந்த பிரச்சினை எல்லாம் சாதாரணம்.. கல்யாணம் ஆகி பல வருஷம் கழிச்சி குழந்தை பெத்துக்கிட்டவங்களும் இருக்காங்க… சோ இதை பத்தி எல்லாம் ரொம்ப டீப்பா திங்க் பண்ணி நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக வேணாம்.. அது கூட ஒரு ரீசன் தான்.. ஃபீல் ஃப்ரீ…” என்று விட்டு வேறு சாதாரண கேள்விகள் கேட்ட பின், “யூ மே லீவ் நவ்.. கம் பெக் ஆஃப்டர் டூ டேய்ஸ்…” என்க,

பின் இருவரும் விடை பெற்று செல்ல சஜீவ் ஒரு நிமிடம் நின்று நித்யாவின் முகம் நோக்க அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சஜீவ் மனதில், “இனி என்ன நடந்தாலும் பரவால்ல யுவி.. நான் உன்ன என் கிட்ட திரும்ப வர வைப்பேன்.. இந்த தடவை உன்ன அவ்வளவு ஈசியா இழக்க மாட்டேன்…” என நினைத்து அவளைப் பார்த்து சிரிக்க விதியோ, “அவ்வளவு சீக்கிரம் நான் அதை நடக்க விடடுருவேனா..” என சஜீவ்வைப் பார்த்து சிரித்தது.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.