Loading

குமரி – 15

யாரோ ஒருவனின் தேவைகளுக்கு நாம் தான் பலி ஆகிறோம் என்பது போல் பிரிட்டனியர்களின் தேவைகளுக்கு நம்மளை வைத்தே நம்மை கொன்று விட்டனர்.

கொஞ்சம் சிந்தித்து செயல்பட்டிருந்தாலும், இங்கு இவ்வளவு சேதாரம் அமைந்திருந்து இருக்காது. அவர்கள் செய்தமைக்கு இவர்கள் பழி வாங்கும் படலத்தை வளர்த்துக் கொண்டனர்.

சிறு வயதிலிருந்து மாறன் தன்னை முழு நேர யோகியாகி மாந்தரிகம்  முதற்கொண்டு கற்றுக் கொண்டு இர ஆன்மாக்களை வரவைத்தார்.  அந்த இரு ஆன்மாக்களும் வேறு யாரும் இல்லை. இன்பனும், இன்பனின் மனைவியும். தனது தமையனின் மகனையே தனது பிள்ளையாக பாவித்து சந்ததிகளை பெருக்கிக் கொண்டார்.அவரின் தயவால் தான் தருமபுரியின் மத்தக்கிரியில் வந்து தங்கினர்.

🌿🌿🌿🌿🌿இன்றைய நாள்

மயங்கிய முல்லை கண் விழித்து பார்க்கும் பொழுது  அங்கே நாச்சியாரும் , சென்மொழியும் மற்றும் குடிலில் இருந்த பெண் ஒருத்தியும் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் நின்றாலும் , அவள் தேடியது என்னவோ அவளின் மனம் கவர்ந்தவனே.

அதை புரிந்து கொண்ட சென்மொழி தான் முல்லையின் கையில் கிள்ளினாள். துடித்த முல்லை சென்மொழியை காண அவள் தான் கோபக் கனல்களை தூவிக் கொண்டிருந்தாள்.

பின்பு, வழக்கம் போல் நாச்சியார் புலம்ப ஆரம்பிக்க , இருக்கும் கோபத்தில் சென்மொழி தன் அன்னையைத் திட்டி விட்டு வெளியேறும் நேரம் ராகவ் உள்ளே நுழைந்தான். வந்தவன் சென்மொழி மேல் மோதி நின்றான். “யோவ் பாத்து வர மாட்டா ? ” என்று குனிந்து கொண்டு தலையைத் தேய்த்துக் கொண்டே கூறினாள்.

ராகவ்”யோவ்வா …….”

சென்மொழி “சினீயர் நீங்களா ? ஸாரி ! இருந்தாலும் கவனிச்சு வந்திருக்கணும். அதுனால, நீங்களும் ஸாரி கேளுங்க “

சென்மொழி சீனியர் என்று கூறுவதை காதில் வாங்கவில்லை முல்லை. இவள் பேச போய் தான் இவ்வளவு பிரச்சனையும். மறுபடியும் தனது குடும்பத்தை இழக்க நேரிடுமோ என்கின்ற பயத்தில் அவள் உடல் வேர்த்து விட்டது. அன்றும் அவர்கள் பெரிய அரச வீட்டு பிள்ளை. இன்னும் இவர்கள் பெரிய பணக்காரர்கள். அவர்கள் நினைத்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்கின்ற பயத்தில் “சென்மொழி ” என்று கத்தி விட்டாள்.

இருவரோடு மற்றவரும் அவளைப் பார்க்க “பொறுமை , அடக்கம் இது எதுவுமே உனக்கு தெரியாதா ? ” என்று சரமாரியாக கேள்வி கேட்டு கொண்டே இருந்தாள் முல்லை.

ராகவ் தான் “சிஸ்டர் ரிலாக்ஸ், மொத மூச்சு விடுங்க. எதுக்கு இவ்வளவு திட்டுறீங்க. என் மேல தான் தப்பு. நானும் தெரிஞ்ச பொண்ணு தானேனு பேசினேன். அதுக்கு ஏன் இவ்வளவு டென்சன் ? “

முல்லை”தெரிஞ்ச பொண்ணா? “

ராகவ் “கிழிஞ்சது போங்க  ! அதுதான் சொன்னால சினீயருனு “

முல்லை ” அய்யோ சாரி, நான் கவனிக்கல ” என்று ராகவிடமும், “சாரி ” என்று சென்மொழியிடமும் கூறினாள்.

சென்மொழி கோபத்தோடு வெளியில் செல்ல ” இவர்கள் சண்டை நமக்கு தேவையில்லை ” என்று மனதிற்குள் நினைத்து கொண்டு ஒரு பெரு மூச்சு விட்டான். பின்பு, முல்லையிடம் நல விசாரிப்புகள் கேட்டு விட்டு இவன் சென்று விட்டான்.

இரவானதும் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்று கூறியவுடன், சென்மொழி தங்குவதாக கூறி தன் அன்னையை குவார்டஸிற்கு அனுப்பி வைத்தாள்.

இரவு ஒன்பது மணி போல் இந்திராணி உள்ளே வந்தார். சென்மொழி எழுந்து நிற்க, முல்லைக்கு படபடவென இருந்தது.

முல்லையின் படுக்கைக்கு பக்கத்தில் அமர்ந்து , சென்மொழியையும் முன் நிறுத்தி ” என்ன மொழியாள் நலமா? ” என்று கேட்ட நொடி இருவருக்கும் அதிர்ச்சி. “என்ன அதிர்ச்சி ஆகுறீர்கள் இருவரும் ? “என்று கேட்விட்டு சிரித்தார்.

“உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும் ? நீங்கள எங்களை பார்த்ததே கிடையாதே? ” என்று அங்கை குழம்பி போய் கேட்டாள் .இந்திராணி ” ஏன் பார்த்ததில்லை , வேலு நாச்சியாரிடம் பயில வந்தவர்கள் ஆயிற்றே ? “

சென்மொழி ” அத்தனை பேரில் எங்களை மட்டும் ஏன் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் ? “

இந்திராணி ” அதற்கான பதில் உன் தமக்கை கூறுவாள் “

முல்லையை ஏறிட்டு பார்த்தாள் . அவள் தலையை குனிந்தாள். சென்மொழி” கூறும் ” என்று பொறுமை இழந்து கேட்டாள். முல்லை ” நான் வேந்தரை பயிற்சி காலத்திலேயே கண்டு விட்டேன். அப்பொழுது இருந்தே காதல் கொண்டுள்ளோம். “

சென்மொழிக்கு இன்னும் புரியவில்லை. “ஆனால், மைக்கேல் தான அவர்களை அழைத்து வந்தது”

இந்திராணி”ஹா ஹா , கேப்டன் மைக்கேல் அணுகியது ரவி வேந்தரை அல்ல. என் கணவர் அகவனை”

சென்மொழி “என்ன? “

இந்திராணி “ஆம், அவருக்கு பெற்றோர் இல்லாததால், என்னை மணம் புரிந்தவுடன் கேட்டார் என்னை அன்னை என்று கூப்பிட. நானும் சரி என்று கூறியவுடன்  . கடைசி வரை என்னை அன்னை என்று தான் அழைப்பார்”

சென்மொழியோடு முல்லைக்கும் அதிர்ச்சி தான். முல்லை ” என்ன கூறுகிறீர்கள்?”

“முழுதாக கூறுகிறேன் கேள்” என்று கூற ஆரம்பித்தார் .என்னை விடுத்து என் தங்கையை ராணியாக்க நினைத்ததை இப்பொழுது நினைத்தாலும் என்னால் ஏற்க முடியவில்லை. இதில் அவள் வளரும் வரை மட்டும் ராணியாக இருக்க சொல்லும் பொழுது உடம்பெல்லாம் தீயாய் எரிந்தது.

அதை என் கணவரிடம் புலம்பி கொண்டே இருப்பேன். அமைதியாக கேட்டுக் கொண்டே இருப்பவர் ஒரு நாள் வேலு படை திரட்டுவதை பற்றி கூறினார். நானும் அதை ஆமோதிக்கிறேன். துரைகளை விரட்ட வேண்டும் என்று கூறியதற்கு

இல்லை ராணி இதுவே சந்தர்ப்பம். வேலுவை கொன்று விடலாம். நீ ராணியாகி விடலாம் என்று எனக்கு பல ஆலோசனைகள் கூறி இறுதியில் என்னையும் சரி என்று கூற வைத்து விட்டார்.

பின்பு, அவர் தான் மைக்கேலை சந்தித்து திட்டங்களை திட்டியது. சென்மொழி ” அதற்காக பெற்ற பிள்ளைகளை பகடை காயாக உபயோகிப்பீரா ? ” என்று பொங்கி கொண்டு கூறினாள்.

இந்திராணி”என் பிள்ளைகளா ? “என்று கூறி சிரித்து விட்டார். சென்மொழிக்கு தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. “இவர்கள் இருவரும் வேலு நாச்சியார் அம்மையின் பிள்ளைகள் ” என்று முல்லை கண்கள் கலங்கி கூறினாள்.

“இவர் தான் கூறினார். அவர்கள் இருவருக்கும் தெரியாது” என்று முல்லை கூறியவுடன்,

இந்திராணி”அவள் அரச சபை, மக்கள், போராட்டம் என்று திரிந்ததால் , நான் தான் இவர்களை வளர்த்தேன். எனக்கும் பிள்ளைகள் இல்லை. அதனால், இவர்களை வளர்க்கும் பொழுது, அவளின் அன்னையை மீது வஞ்சத்தையும் சேர்த்தே வளர்த்தேன். அதோடு, அவர்கள் இருவருக்கும் தானே அன்னை என்றும், அவள் உன் சிற்றன்னை என்றும் கூறி வளர்த்தேன். அவளும் வெளியிலேயே சுற்றுவதால் இதனை கவனிக்கவும் இல்லை.”

முல்லை ” அப்படி தங்கள் பிள்ளைகள் போல் வளர்த்தவர்களை எப்படி கொல்ல தோன்றும் ? “

” வளர்த்ததே அவர்களை கொல்வதற்கு தானே.வேலு வருவாள் பின்பு அவள் வம்சம் என்று அவர்களே இருப்பர். அதனால் தான் , அவர்களை கொல்ல நினைத்தேன். ஆனால், பிறந்த பொழுது இவர்களுக்கு ஜாதகம் பார்க்கும் பொழுது ரவியின் ஜாதகப்படி சாதாரண பெண்னை மணப்பான். அவளும் நாடு ஆள அனைத்து திறமையும் இருக்கும் என்று கூறி விட்டார். அதனால், ரவியிடம் தான் அதிக அன்பைப் பகிர்ந்து வேலுவிற்கு எதிராக திருப்பி விட்டேன். ஆனால், அவனின் விதிப்படி உன்னை சந்தித்து காதல் வயப்பட்டு விட்டான். பின்பு, நீயும் நுழைந்து விடுவாயே. அதனால் தான் மைக்கேல் உதவி கோரும் பொழுது உன்னை பற்றியும், உன் இனத்தை பற்றியும் கூறி ஆசையை வளர்த்தேன் “

பின்பு, நான் தான் ரவி வேந்தரிடம் அழுது புலம்பி மைக்கேலை சந்திக்க வைத்தேன். திட்டம் தீட்டியது போல் மைக்கேலும் வேலுவை கொல்வதற்கு உதவ வேண்டுமென்றால் உங்கள் இனத்தை கொல்வதற்கு உதவ கோரினார். என்னிடம் வந்து புலம்பிய ரவி வேந்தரை நான் தான் அழுது கரைந்து சாகப் போவது போல் நடித்து ஏமாற்றினேன். அதன் பிறகு  தான் காதலித்தவளை விட காத்தவளே முக்கியம் என்று நினைத்து மைக்கேலுடன் வந்தான்.

அவனும் அங்கு வந்து அங்குலம் அங்குலமாக அனைத்தையும் கவனித்தான். பின்பு, அவனுக்கே மலர்கள் மீது மோகம் வந்து விட்டது. நிறைய விஷயங்கள் அதில் கற்றுக் கொண்டான். ஆனால், கடைசியாக ராகவ வேந்தரை வைத்து ரவி வேந்தரை அழைக்க கூறியதற்கு காரணமே மைக்கேல் தான். அவனின் திட்டம் படி அனைத்தும் நடந்தேறியது. ஆனால், என்னால் தான் ராணியாக முடியவில்லை. வேலு மைக்கேலை வென்று விட்டாள்.

அதே போல் அந்த ஆசனும். அவன் இவ்வாறு முளைப்பான் என்று தெரியாது. அவனைப் பார்த்த பின்பு தான் அனைத்தும் எனக்கு ஞாபகம் வந்தது. அந்த குடில்களில் யாரேனும் தவம் செய்தால் அவை வெற்றியடையாதவாறு நானும் தவம் செய்வேன்.

அன்றும் அதே போல் அங்கு நடப்பதை பார்க்கும் பொழுது தான் உங்கள் இருவரையும் கண்டு அதிர்ந்து விட்டேன்.
அதனால் தான் அங்கையை ரவியிடம் அனுப்பி விட்டேன். ஒரு வேளை உங்களுக்கு ஞாபகம் வந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான் என்று .

முல்லை  அதிர்ச்சியாக பார்க்க, சென்மொழி முறைக்க, மறுபடியும் சிரித்துக் கொண்டே “ஆம், ரவிக்கும் முன் ஜென்மம் ஞாபகம் உள்ளது “என்று சிரிக்கும் பொழுது , முல்லையின் கண்களில் கண்ணீர் கொட்டியது. அவனுக்கும் அவளுக்குமான ஞாபகங்கள் நினைவில் வந்தது.

குடிலில் மொழியாளை சந்தித்ததும் அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தாலும் , அவளின் வதனத்தை கண்டு மேலும் மேலும் காதல் வயப்பட வைத்தது. அதனால் , தன் காதலியையும் சமாளித்து விட்டு, அன்னையிடம் பேசி இந்த பழிவாங்கும் படலத்தையும் நிறுத்தி விடலாம் இவனாக ஒரு முடிவுக்கு வந்தவன். உடனே, அதை செயலில் இறக்க மொழியாளை தனியாக சந்தித்தான். ஆனால், அவள் பதில் கூறாமல் செல்ல, அவளின் குழல்களை தனது வாளினால் அவிழ்த்து விட்டான்.

இவளும் கோபம் கொண்டு அவளது வாளை உருவினாள். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கும் நிலையில் நின்றனர். அவள் கோபமாகவும், இவன் காதலாகவும் பார்த்துக் கொண்டான். அவள் அவனை தாக்க முற்பட, அதை லாவகமாக மடக்கி அவளை அருகில் இழுத்தான். “என்னை விடுங்கள். சண்டையின் விதிப்படி நடந்து கொள்ளுங்கள் ” என்று கூறி அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.

ஆனால், அவன் விடவில்லை.அவளின் இடையை இன்னும் இறுக்கி அவளின்  விழிகளில் ஊடுருவி அவளை வெட்கமடைய வைத்து அவளின்  இதழ்களை கவ்வி தேனை எடுத்த பின்பே அவளை விடுத்தான். இதற்கு மேல் சமாதானம் ஆகாமல் இருக்க அவள் என்ன முட்டாளா? அவள் சமாதானம் ஆகிவிட்டாள். பின்பு, அனைத்தையும் கூறி அன்னையை சரி செய்வதாகவும் கூறி இவர்கள் கிடைக்கும்  நேரங்களில் எல்லாம் இனிமையாக காதலில் மூழ்கினர்.

இதை நினைக்க நினைக்க இனிப்பாக இருந்தாலும், சில சம்பவங்களும் கசப்பையும் கொடுத்து கோபத்தையும் தூண்டியது. ஆனாலும், இந்திராணி பேசுவதற்கு ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாள். இந்திராணி வெளியே செல்லும் நேரம் மருத்துவரை அழைத்து முல்லையை கொன்று விடுவதற்கு பணத்தை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

அதை சந்தோஷத்துடன் வாங்கி விட்டு , டிரிபின் மூலம்  மருந்தை கலந்து விடலாம் என்று மருத்துவர் அறையினுள் நுழைய வெறும் அறையே வரவேற்றது. அதிர்ந்து அவர் வெளியில் தேட சென்று விட்டார்.

அந்நேரம், வீட்டினுள் நுழைந்த இந்திராணி கண்டது ஊஞ்சலில் தலையில் ஒரு கை வைத்து விட்டத்தை பார்க்கும் மகனை தான். முன் ஜென்மத்தில் ஈன்று எடுக்கவில்லை. ஆனால், இப்பொழுது  தன் வயிற்றில் சுமந்து  பெற்றவன் ஆயிற்றே. அதனால், அவனின் அருகில் சென்று தலையை நீவி விட்டு “எப்போ கண்ணா வீட்டுக்கு வந்த ? “

ரவி ” இப்போ தான் மா”

இந்திரா “காபி தரவா? “

ரவி” வேணாம்மா, ரெஸ்ட் எடுத்தால் சரியாயிடும் .நீங்க எங்க போனீங்க? “

இந்திரா ” அது தான் அந்த முல்லை மயங்கிருச்சே . அதான் பாக்க போனேன் “

ரவி ஆர்வத்துடன் “அவளுக்கு  எதுவும் ஞாபகம் இருக்காமா ? “

இந்திராவிற்கு எரிச்சல் வந்தது. இருந்தும் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு ” இல்லைப்பா, நான் பேசின வரைக்கும் எந்த மாற்றமும் தெரியல “

“எப்படி தெரியும்? அது தான் உங்க பையனுக்கு மந்திரிச்சு விட்ட மாறி நீங்க என்ன சொன்னாலும் கேக்குறாரே. தெரியலைன்னு சொன்னா தெரியல. தெரிஞ்சுச்சுனு சொன்னா தெரிஞ்சுச்சு அவ்ளோதான் “என்று சென்மொழி கோபத்துடன் ஆனால் நக்கலாக கூறினாள்.

“நீங்க எப்படி உள்ள வந்திங்க? செக்யூரிட்டி, செக்யூரிட்டி ” என்று இந்திரா கத்த,  ஆசன், இன்பன் மற்றும் வேலன் காதை குடைந்து கொண்டு இருந்தனர். மருத்துவமனையில் மருத்துவரும், இந்திராவும் பேசியதை இன்பா கேட்ட பிறகே அவர்களை காப்பாற்றி கூட்டி வந்தனர்.

“ஏன்? கொல்லுறதுக்கு காசு கொடுத்தது என்னாச்சுனு பாக்குறியா? ” என்று எகத்தாளமாக இன்பா கேட்க,

வேகமாக பதறிக் கொண்டு “யாரு யாரை கொல்லப் பாத்தா, கண்ணா இவன் பொய் சொல்லுறான் ” என்று கூறி ரவியைப் பார்க்க , ரவி முல்லையை தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை. ஆனால், முல்லை அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

அந்த நேரத்தை உபயோகித்து இந்திராணியை பிடித்து விட்டனர் இன்பன் மற்றும் மாறனின் அண்ணன் கபிலனின் மறுபிறவி வேலனும். இந்திராக தன் மகனிடம் காப்பாற்ற சொல்லி கத்த, அப்பொழுது தான் திரும்பி தன் அன்னையைப் பார்த்து ஓடிவர, கருணாகரன், தலைவன் மற்றும் அவனது குழுவும் உள்ளே வருகின்றது.

தலைவன் மற்றும் அவனது குழு இந்திராவை காப்பாற்ற முயன்றனர். அதனைக் கண்டு அதிர்ந்து நின்றான் ரவி. வேலனையும், இன்பாவையும் தள்ளி விட்டு இந்திராவின் பின்னால் நிற்பதை வைத்தே தெரிந்தது இவர்கள் அவரின் ஆட்கள் என்று.

வேண்டுமென்றே செழியனை மாட்டி விட்டிருக்கின்றனர் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், உண்மையில் செழியன் இவர்களிடம் அவன் பணம் வாங்கவே இல்லை. இவனுக்கு அனைத்தும் ஞாபகம் வந்து பதுங்கி கொள்ளவே ஓடி ஒழிந்தான். முதலில் செழியனை கொல்லத் தான் முடிவு செய்திருந்தனர்.

இதனை அனைவரின் முன்பும் போட்டு உடைத்தான் அத்தலைவன். அதில் நொந்த ரவி அக்குழுவோடு சண்டையிட்டான். அவர்களை வீழ்த்தினர் ரவி, இன்பா மற்றும் வேலன். அதற்கிடையில் இந்திரா ஏதோ ஏதோ ஸ்லோகங்களை கூறி முல்லை மற்றும் அங்கையை நகர விடாமல் செய்ய முனைந்தாள்.

அதைப் புரிந்துக் கொண்ட ஆசன் அவர் அதற்கு எதிர்மாறான ஸ்லோகங்களை உள்நாக்கில் உச்சரித்தும் கொண்டிருந்தார். அச்சமயம் முல்லையிடம் ஒரு பூவையும், வாளையும் கொடுத்து இந்திராவை கொல்ல சொன்னார் ஆசன். அதன்படி  செய்கையில், அவளின் நினைவில் தோன்றியது அவள் அண்ணன் செழியன் ரத்த வெள்ளத்தில் இருக்கும் பொழுது அடுத்த ஜென்மத்தில் இவர்களை அழிப்பதற்கு “உன்னுடைய வாளும், உந்தூழ் பூவோடு, அந்த இடத்தில் நீ , அங்கை மற்றும் நானும் மனைவியும் இன்பனின் மனைவியை என் பிள்ளையாக ஈன்று எடுப்பேன். அவளின் பார்வையும் சேர்த்து பார்த்தாலே அவளின் தைரியம் வடியும். பின், நீ எளிதாக கொன்று விடலாம்” என்று அவர் சொன்னது நாபகம் வந்தது.

இவளை கத்தியால் குத்தினாலும் கொன்று விடலாம். மன் ஜென்ம பழி மறையாது. என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.இவ்விஷயம் இந்திராவிற்கு தெரியாது. அடுத்த ஜென்மத்தில் இவர்களை கொன்று விடலாம் என்று நினைக்கும் சமயம், மஞ்சுளாவோடு பெரியன் உள்ளே நுழைந்தான்.

” மொழியாள், என் மனைவி  கர்ப்பமாக உள்ளாள் ” என்று சத்தமிட்டவுடன் அனைவரும் அதிர்ந்து பார்க்க , இன்பா அழுது விட்டான். அந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி அங்கை இந்திராவை கத்தியால் குத்தி விட்டாள். குத்தியவுடன் அவளின் ஆன்மா பொங்கி கொண்டு வெளியேறியது. இவரை மருத்துவமனைக்கு அழைக்க முற்பட்டனர்.

அனைவரும் செல்வதை பார்த்த முல்லை யாரும் அறிவதற்கு முன்பு, ரவியை தனது கைகளாலேயே குத்தி கொன்று விட்டாள். ஆசன் வந்து தடுப்பதற்குள் அவளையும் குத்திக் கொண்டாள்.

அங்கை அழுது கொண்டே அவளை அணைக்க” அன்று  அவர் என்னை மற்றும் கொல்லவில்லை. என் சிசுவையும் சேர்த்தே கொன்று விட்டார். அதற்கான தண்டனை தான் இது . ராகவா நீ தான் என் அன்னை மற்றும் தங்கையை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். செழியா நீ உன் குடும்பத்தை பார்த்துக் கொள் . இன்பா உனக்கு ஒரு குடும்பத்தை தேடிக் கொள் அங்கை ராகவ் உனக்கு தமையன் போல். அவன் சொல்வதைக் கேள். அன்னையைப் பார்க்கர் கொள் ” என்று கூறி ஆசனின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து இறந்து விட்டாள்.

தன் கணவன் சென்ற பாதையையே தேர்ந்து எடுத்தாள்  தீயோர்களையும், தனக்கு பாதகம் வளர்த்தவர்களையும் அழித்து விட்டு .

அங்கை ஆசனோடு அக்குடிலுக்கே சென்று விட்டார். நாச்சியாரை பிடிவாதமாக இன்பனுடன் வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டாள். செழியனும் ஒசுருக்கு சென்று விட்டான். இப்பொழுது இக்குடி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய ராகவின் உதவியோடு இவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றி கொண்டிருக்கிறாள்.

கீர்த்தி ☘️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்