
விக்ரம வேந்தனின் கைகளுக்கு பிசியோ குடுக்கத் தொடங்க, ஆரம்பத்தில் கையைத் தூக்கக் கூட நடுக்கம் இருந்தது.
“தினமும் ட்ரை பண்ணுங்க விக்ரம். நரம்புல ஏற்பட்ட அதிர்வுனால, சில மாசமா வேலை நிறுத்தம் செஞ்சுருக்கு. இப்ப மறுபடியும் அதை சுறுசுறுப்பாக்க, நாம தான் ட்ரை பண்ணியாகணும்” என மருத்துவர் அறிவுரை கூற,
“ரொம்ப நடுங்குது டாக்டர்…” என்றவனுக்கு ஆயாசமாக இருந்தது.
அக்னி வேந்தன் தான், “ஸ்டார்டிங்ல நடுங்குனாலும் பரவாயில்ல விக்ராண்ணா. போக போக சரியாகிடும்” என்றான் அவனது வேதனையை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு.
“ம்ம் திலோ இன்னும் வரலையா?” தானாய் அவனது மனம் அவளை கேட்கத் தொடங்கியது.
சரியாக திலோத்தமா அங்கு வர, “என்னாச்சு விக்ரம். பிசியோ ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா?” எனக் கேட்டாள்.
அக்னி, “ஸ்டார்ட் பண்ணியாச்சு. ஆனா அவன் பண்ணணுமே. கை நடுங்குதுன்னு தூக்கவே மாட்டுறான்… நீயே என்னன்னு கேளு” என்று மாட்டி விட, அவள் அருகிலேயே நின்ற பிசியோ மருத்துவரைப் பார்த்தாள்.
“இனிஷியலா என்ன மாதிரி பண்ணனும்னு சொல்லுங்க டாக்டர். நான் பண்ண வச்சுக்குறேன்” என்றவள், ஆரம்ப கட்ட அசைவுகளை மட்டும் கேட்டுக்கொண்டாள்.
“டாக்டர் சொல்லியே ஒழுங்கா பண்ண மாட்டுறான் திலோ” அக்னி முறைக்க,
“நீ வெளில போ அகி. நான் இவரை பண்ண வச்சுக்குறேன்” என்றதில் இன்னும் கொஞ்சம் முறைத்தான்.
“இல்ல… பிசியோ பண்ண தான். நான் மட்டும் இருந்தா பண்ணிடுவாருன்னு தான்” என்றவளுக்கு ஐயோ என்றிருந்தது.
விக்ரம் அவளது புரிதலில் மெலிதாய் நகைக்க, அக்னி “என்னை வெளில போடான்னு சொல்ற?” என்றான் கடுப்பாக.
திலோத்தமா பதறியதில், “இதுக்கு மேல எப்படிடா டைரக்டர் சொல்றது. என்னையும் என் பொண்டாட்டியையும் தனியா பேச விடுங்கடா…” என்று விக்ரமே கிண்டலடிக்க,
“நீ சரியாகி வா. உன்னைப் பார்த்துக்கிறேன்…” என கண்ணில் தீயை காட்டி மிரட்டினாலும் அக்னி வேந்தனின் முகத்தில் சுவாரஸ்யம் மின்னியது.
அவன் வெளியில் சென்றதும், “ஐயோ விக்ரம்… இப்ப தான் அவனே மலை இறங்கி இருக்கான்” என்றதில், “என் கையாக்குப் பிடி திலோ” என்றான் கொஞ்சலாக.
அதில் வேகமாக அவனது கரத்தைப் பற்றிக்கொண்டவளிடம்,
“பிசியோ பண்ணணும்ல அதான் போக சொன்னேன். அப்படியே கொஞ்சம் முத்தமும்” என உதட்டைக் குவித்து அவள் இதழ்களை ரசனையாக பார்த்தபடி அமர்ந்திருக்க, அவளுக்கோ மேனி சிவந்தது.
“சேட்டை பண்ணாதீங்க விக்ரம். முதல்ல பிசியோ அப்பறம் தான் முத்தமெல்லாம்.”
“இது போங்கு திலோ. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”
“அகி வந்துடப்போறான்” திலோத்தமா நெளிய,
“அவன் நம்ம சொல்லி வெளில போனான்னு நினைச்சுட்டு இருக்கியா. வெளிய என் மச்சினிச்சி இருக்கா. அதுனால இப்பதைக்கு அவன் வரமாட்டான்” என்றான் கேலியாக.
அதில் முகம் மாறிய திலோத்தமா, “அவன் பவியை விரும்புறானா?” தட்டு தடுமாறி கேட்டாள்.
“அறிகுறிகளை எல்லாம் பார்க்கும்போது அப்படி தான் தெரியுது. இல்லைன்னா என் தம்பியாவது இன்னொருத்தரோட இலைல சாப்புட்றதாவது. நான் டேஸ்ட் பண்ணி குடுத்த ஸ்பூன்ல கூட அவன் சாப்பிட மாட்டான். ஹைஜீனிக்ல புரண்ட மாதிரி பேசுவான்” எனச் சிரிக்க, அவன் சொன்னது போன்றே அறைக்கு வெளியில் அமர்ந்திருந்த பவித்ராத்யாவின் அருகில் அவனும் அமர்ந்தான்.
“இன்னும் கொஞ்சம் சாப்பிடு பாப்பா. நீ கேட்டதுனால தான வாங்குனேன்…” பிரௌனியை அக்னிலாவிற்கு கொடுத்துக் கொண்டிருந்த பவித்ராத்யா, தன்னருகில் அமர்ந்த ஆடவனின் புறம் திரும்பி புன்னகைத்தாள்.
“நீ சாப்பிடு சித்தி… போதும்” என்று அவள் விக்ரமின் அறைக்குள் ஓடிவிட, “பாருங்க இவளை இதை வாங்கி வச்சுட்டு ஓடிட்டா!” எனச் செல்லமாக கடிந்து கொண்டவள், வீணாகி விடுமே என்ற எண்ணத்தில் அக்னிலா உண்ட ஸ்பூனிலேயே பிரௌனியை சாப்பிட போக, அதனைப் பிடுங்கினான் அக்னி.
“உங்களுக்கு வேணுமா?” இமைகள் கொட்ட கேட்டவளிடம்,
“சாப்பிடணும்னா புதுசா வாங்கி சாப்டு. எச்சிலை எல்லாம் எதுக்கு சாப்புடுற?” என்று புருவம் சுருக்கி அதட்டினான்.
“பாப்பா வச்சது தான?” என்றவளின் கூற்றை காதில் வாங்காதவன் அதனை குப்பையில் போட்டு விட்டு, புது பிரௌனியை வாங்கி வந்து கொடுக்க, அவள் விழித்தாள்.
“நானே மிச்சமாகிடுச்சுன்னு தான் சாப்பிட போனேன். எதுக்கு புதுசா வாங்குனீங்க. என்னால இவ்ளோ சாப்பிட முடியாது”
“நம்ம ஷேர் பண்ணி சாப்பிடலாம்” கண் சிமிட்டியவன், அவளையும் உண்ண வைத்து தானும் அவளது ஸ்பூனில் உண்ண, ‘இது மட்டும் எச்சில் இல்லையாக்கும்’ என வாய்க்குள் முணுமுணுத்தாள்.
அவள் புறம் மெல்லச் சரிந்தவன், “என்னோடது நீயும் உன்னோடது நானும் சாப்பிடலாம். இது எச்சில் இல்ல…” என்று கிசுகிசுப்பாகக் கூறியதில் செங்கொழுந்தாய் சிவந்தாள்.
‘அப்போ வேணும்னே தான் ஒரே மீல்ஸ் வாங்கி என்னோடது சாப்பிட்டாரா?’ எண்ணும்போதே அடிவயிற்றில் பெரும் பிரளயமே நிகழ்ந்தது.
“பதிலே காணோம்?” அவள் புறம் இன்னுமாக குனிந்தவனின் லாவண்டர் பெர்பியூம் மணம் அவளது உணர்வுகளை அதிகமாக சோதித்தது.
எப்படி? எந்த நொடியில் அவனிடம் மனம் மொத்தமும் வீழ்ந்து போனதென்று தெரியவில்லை. அதனை எழுப்பி நிறுத்தும் வழி தெரியாது, ஆடவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் மீண்டும் மீண்டும் வீழ்ந்து சிதைகிறாள்.
காதல் ஓர் புதர்குழி அல்லவா? ஆழம் பார்க்க காலை விட்டால், அது மொத்தமாக தனக்குள் புதைத்துக்கொள்ளுமே.
“ஆத்யா…” அவன் மென்மையாக அழைத்ததில், அவனை ஏறிட இயலாது இன்னுமாக குனிந்தாள்.
தான் முத்தமிடும்போது பெண்ணின் சிலிர்த்த வதனமும், தனது கண்ணீர் கண்டு தானும் கண்ணீர் விட்டபோதும், உரிமையாய் ‘வேந்தா’ என அழைத்த போதுமே, அவள் மனம் அவனுக்கு அத்துப்படி தான்.
ஆகினும் விழிமொழிகள் கூறும் காதலை விட வாய்மொழியாகக் கேட்பது தித்திக்குமே!
“என்னை பாரு ஆத்யா!”
“ம்ம்ஹும்” செவ்விதழ்கள் வெட்கச் சிரிப்பில் நனைந்தது.
அதனைத் தனது அழுத்த விழிகளால் ரசித்தவன், “என்னைக் கட்டிக்கிற முறையுள்ளவ முகத்தைக் காட்டாம சோதிச்சா, எப்படி காதலிக்கிறதாம்?” குறும்பாக சீண்டினான்.
“பவி பேபி…” உள்ளிருந்து திலோத்தமாவின் குரல் கேட்டதில், “அக்கா கூப்புடுறா” என எழுந்து ஓட முற்பட, அவள் கையைப் பிடித்து தன்னருகில் இழுத்த வேகத்தில் மொத்தமாக அவன் மீது சரிந்திருந்தாள்.
அவர்களது அறை சற்றே ஒதுக்குப்புறமாக இருந்ததனாலும், ஆள்நடமாட்டம் இல்லாததுனாலும் யாரும் பார்க்கவில்லை.
ஆனால் பவித்ராத்யா பதறி விட்டாள்.
“விடுங்க அகி… இது ஹாஸ்பிடல்” என்று அவன் மடியில் இருந்து எழ முயற்சிக்க,
“நான் ஃபீல் பண்ணும்போது இந்த லிப்ஸ் என்னை எப்படி கூப்பிட்டுச்சு?” என இரு விரலால் அவள் இதழ்களை பிடிக்க எத்தனித்தான் அக்னி.
அவன் கையை பிடித்தவள், “அச்சோ ப்ளீஸ் அகி விடுங்களேன்…” கண்ணைச் சுருக்கி நாணம் மிக கெஞ்சினாள்.
“ம்ம்ஹும்…” இதழ் மடித்து இடவலமாய் தலையாட்டியவனின் குறும்பு புன்னகை அத்தனை ரசிக்கத்தக்கதாய்!
எப்போதும் போல அவனது அடர்ந்த மீசையில் சிக்கிக்கொண்ட விழிகளை இடம் மாற்றுவது அவளுக்கும் கடினமானதாய்!
“பவி!” திலோத்தமா மீண்டும் அழைத்தாள்.
“அவள் வந்துட போறாங்க” பவித்ராத்யா அவனிடம் இருந்து விடுபடும் வழி தெரியாமல் தவித்தாள்.
“வந்தா என்ன?” ஒற்றைப்புருவம் உயர்த்தியவனின் நெருக்கத்தில் கரைந்த மனதை மீட்டு, “விடுங்க வேந்தா… ப்ளீஸ்ஸ்” எனக் கொஞ்சலாக தலைசாய்த்து கேட்டதில், கரையுமுள்ளம் அவனதானது.
பச்சென அவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு கையை விட்டதில், கன்னத்தில் கை வைத்து திகைத்து நின்றவள், அவனது கண் சிமிட்டலில் வெட்கம் தாளாது விக்ரமின் அறைக்கு திடுதிடுவென ஓடி விட்டாள்.
கரைபுரண்டோடிய காதலில் இருவரும் ஒன்றாகவே கரைந்தனர்.
திலோத்தமா விக்ரமின் கையைப் பற்றி பிசியோ சொல்லிக் கொடுத்த பிறகே விக்ரம் நடுங்கிய கரத்தை பொருட்படுத்தாது, முயற்சித்தான். அதற்கு முன்னே, அவளிடம் இருந்து இதழ் முத்தத்தை கடனாக பெற்றுக்கொண்டான்.
“இதை டாக்டர் சொன்னப்பவே செஞ்சா என்ன?” திலோத்தமா முறைக்க,
“ஆனா டாக்டர் லிப் டு லிப் எல்லாம் குடுக்க மாட்டாங்க தான?” விக்ரமின் கேலி குரலில் ஒரு நொடி புரியாமல் விழித்தவள் புரிந்தபின்னே, “ஐயோ விக்ரம் உங்களை…” என்று அவன் முதுகில் லேசாய் அடித்தாள்.
“அப்பா” என்றபடி உள்ளே வந்த அக்னிலா விக்ரமின் மடியில் அமர்ந்து கொள்ள, இப்போது அவனால் மகளின் கன்னத்தைப் பற்றி முத்தமிட முடிந்தது. எத்தனை நாள்கள் ஏங்கி இருக்கிறான், மகளை அரவணைக்க!
திலோத்தமா இருவரையும் சலனமின்றி பார்த்துவிட்டு, “சித்தி எங்க நிலா?” என வினவினாள்.
“சித்தப்பா கூட” மகளின் பதிலில் விக்ரமிற்கு நக்கல் நகை பொங்கியது.
கூடவே, அவனுக்குப் பிடித்த பவித்ராத்யாவிற்கு தனது உயிரான தம்பியே மணமகனாகி விட்டால்? அதனை நினைக்கவே அத்தனை இன்பமாக இருந்தது.
திலோத்தமா தான் வாசலையே பார்த்திருந்தாள்.
சடுதியில் எதையோ சிந்தித்து, தங்கையை அழைத்துக்கொண்டே இருந்தவள், பவித்ராத்யா அங்கு வந்ததும், “பேபி… நிலாவுக்கு நாளைக்கு ஸ்கூல்ல ஏதோ ப்ரோக்ராமம். ஏதாவது அனிமல் சூஸ் பண்ணி அதை பத்தி ரெண்டு வார்த்தை சொல்லணுமாம். நீ அவளை வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் பிராக்டிஸ் குடு…” என்றாள்.
“எதை பத்தி பேச போறீங்க குட்டிமா விக்ரம்” கேட்டதும்
“அதை ரெண்டு பேரும் வீட்டுக்குப் போய் முடிவு பண்ணட்டும்… நீங்க பிசியோவை கன்டின்யூ பண்ணுங்க. இப்படியே எஸ்கேப் ஆகிடலாம்னு நினைப்பா?” என இடுப்பில் கையூன்றி முறைப்பது போல இருவரையும் அனுப்பி வைத்தாள்.
அதன்பிறகு வந்த நாள்கள் முழுதும் முடிந்த மட்டும் பவித்ராத்யாவை வீட்டிலேயே இருக்க வைத்தாள்.
அதற்கும் மேல் அவள் அக்ரம் இல்லத்திற்குச் செல்வதைத் தடுக்க இயலவில்லை.
விக்ரமின் கரங்கள் நன்றாக வேலை செய்யத் தொடங்கியதும், அவனை டிஸ்சார்ஜ் செய்ய ஆயத்தமாகினர்.
மறுநாள் வீட்டிற்கு கிளம்புவதாக இருக்க, விக்ரமின் முகமே பளிச்சென இருந்தது. இழந்தவை எல்லாம் கிடைத்த திருப்தி. அதே போல பவித்ராத்யாவிற்கும் நல்ல வாழ்க்கை அமைந்து விடுமென்ற நிம்மதியும் தானாக எழுந்தது.
திலோத்தமாவின் சுடிதார் ஒன்று சோபாவில் இருக்க, அதனை எடுத்து மடித்து வைத்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
அவளுக்கு உதவி கூட செய்ய இயலாத நிலையில் இத்தனை நாள்கள் ஏங்கியவனுக்கு அவளது உடைகளை மடித்து வைக்க அத்தனை பேராவல்.
தமையனின் செயலை சுவாரஸ்யமாகப் பார்த்தபடி அங்கு வந்த அக்னி வேந்தன்,
“எங்கண்ணா உன் தர்மபத்தினி?” எனக் கேட்டவாறு, கட்டிலில் அமர்ந்தான்.
“வீட்டுக்குப் போயிருக்கா. எனக்கும் போகணும்…” எனப் பாவமாகக் கேட்டவனைக் கண்டு முறுவலித்தவன்,
“நான் கேக்குறதுக்கு சமாளிக்காம, கட் அண்ட் ரைட்டா ஒரு பதில் சொல்லணும் விக்ரா” என்று கட்டளையாக கேட்டான்.
விக்ரம் என்னவென பார்க்க,
“திலோவை நீ சிச்சுவேஷன்காக தான் மேரேஜ் பண்ணிக்கிட்டியா?” என்றான் கையைக் கட்டிக்கொண்டு.
ஒரு கணம் அமைதி காத்த விக்ரம், “இல்ல” என மறுப்பாக தலையசைக்க, அக்னியின் ஒற்றைப்புருவம் உயர்ந்தது.
“அதுசரி மனசுல அவள் மேல எந்த பீலிங்க்ஸும் இல்லாமலா, படபடன்னு கூட்டிட்டுப் போய் தாலி கட்டி குட்டி திலோ வேற வந்துருக்கா…”
தம்பியின் குறும்பு பேச்சில் ஆண்மகனுக்கும் வெட்கம் நிறைந்தது.
“நான் அவளை லவ் பண்ணேன் அகி…” நகத்தை சுரண்டியபடி உண்மையை உரைத்தவனிடம், “ஏன் சொல்லல என்கிட்ட?” என்றான் முறைப்பாக.
“சொல்ல வேணாம்னுலாம் இல்லடா. உனக்கே நம்ம வீட்டைப் பத்தி தெரியுமே. இன்னொரு நிவேதா அங்க வேணாம்னு தான்… அவளும் அம்மா மாதிரி சைலன்ட் டைப். சொல்லப்போனா, அவள்கிட்ட மனசுல இருந்ததை சொல்ல அப்போ எனக்கு தைரியமும் இல்ல.”
“சரி அப்போ தைரியம் இல்ல… இப்ப சொன்னியா? கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை லவ் பண்ணேன்னு…” கண்ணை உருட்டிக் கேட்டான்.
கேசத்தை அழகாய் கோதி கொண்ட விக்ரம், “இதுவரை சொல்லணும்னு தோணல. ஆனா, கொஞ்ச நாளாவே அந்தக் காதலை சொல்லணும்னு மனசு அடிச்சுக்குதுடா. அவளுக்கு நிறைய தடவை உணர்த்தி இருக்கேன். ஆனா வாய் வார்த்தையா சொன்னதில்லை. பட் ஷீ நோ தட் ஐ லவ் ஹர் வெரி மச்” என்றான் நேசத்துடன்.
“இந்த காத்துல படம் வரையிறதுலாம் வேணாம். வாயைத் திறந்து சொல்லுடா அவகிட்ட…”
“வீட்டுக்குப் போய் சொல்லிடணும்னு தான் இருக்கேன். சரி… அங்க என்ன கதை? என் மச்சினிச்சி ஓகே சொல்லியாச்சா” விக்ரமின் கண்களில் குறும்பு மின்ன, இப்போது வெட்கம் கொள்வது அக்னி வேந்தனின் முறையானது.
“உனக்கு எப்படி தெரியும்?”
“ம்ம்ம்… ஒரே காபியை நீ அவள்கூட ஷேர் பண்ணும்போதே”
அரிசிப்பல் மினுக்க நளினமாக புன்னகைத்த அக்னி வேந்தன், “லைஃப் ஷேர் பண்ண போறவ கூட காபி ஷேர் பண்ண கூடாதா விக்ரா… “எனக் கண்சிமிட்ட,
“பண்ணலாம் பண்ணலாம்… அப்படியே எங்ககிட்டயும் சொல்லிட்டுப் பண்ணலாம்…” என்றான் முறைப்பாக.
“நீ வீட்டுக்கு வந்ததும் சொல்லலாம்னு இருந்தேன்டா. அதுக்குள்ள உன்ன யாரு மோப்பம் புடிக்க சொன்னது”
“ஹலோ மிஸ்டர் அக்னி வேந்தன், நாங்க எதுக்கு மோப்பம் புடிக்கணும்… நீங்க தான் மகுடிக்கு மயங்குன பாம்பு மாதிரி பவியை பார்த்ததும் ஒரு டன் ஜொள்ளை வழிய விடுறீங்களே.”
“அவ்ளோ வெளிப்படையாவா தெரியுது?”
“வெளிய பார்க்க விறைப்பா தான் தெரியுது. ஆனா உன் முகத்துல போட்ட தவுசண்ட் வால்ட் லைட்டை என் கண்ணு மட்டும் கண்டுபிடிக்கும்” என நாக்கை துருக்கினான்.
“ரொம்ப சந்தோஷப்படாதண்ணா. உனக்கு முன்னாடி நம்ம தாத்தா பாட்டி அம்மா எல்லாம் கண்டுபிடிச்சாச்சு” என்றான் நக்கலாக.
“நீ அம்மாவே டவுட் ஆகுற அளவுக்கு சைட் அடிச்சுருக்கடாவ். சரி, நம்ம பாட்டி இன்னுமா கண்டுபிடிக்கல…”
“பாட்டி எனக்கு தீவிரமா பொண்ணு பாக்குறாங்க. இன்னைக்கு கூட பொண்ணு பார்க்க போகணும்னு கூப்பிட்டு இருக்காங்க.”
“அய்யயோ”
“நீயும் வாடா. மாப்பிள்ளையோட அண்ணன்னு எக்ஸ்டரா நாலு பஜ்ஜி வாங்கித் தரேன்” அக்னி கிண்டலடித்தான்.
“டேய் பார்த்துடா ஏதாச்சு டிவிஸ்ட் பண்ணி விட்டுட போறாங்க” விக்ரம் பதறிட,
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்” என்றவனின் திட்டம் புரியாது நின்றான் விக்ரம வேந்தன்.
—-
குளித்து தலையைத் துவட்டிக்கொண்டிருந்த பவித்ராத்யாவின் இதழ்கள் ஏனோ மலர்ந்தே இருந்தது.
கண்ணாடி முன் நின்றவளுக்கு முழுக்க முழுக்க அக்னி வேந்தனின் வதனமே கண்முன் தோன்றி இம்சை செய்தது.
கூந்தலை காய வைத்து சீப்பால் சீவியவள், எப்போதும் போல பின்னலிட எத்தனித்து நிறுத்தினாள்.
ஆண்மகனின் காந்தக்குரல் காதருகில் ஒலித்தது.
“முடியை விரிச்சு விட்டா அழகா இருக்கும் ஆத்யா…”
தானாய் குறுநகை படர, அவனது ஆசையைப்போலவே சென்டர் கிளிப் மட்டும் குத்தி முடியை விரித்து விட்டாள்.
பொதுவாக அவளது தாய் முடியை விரித்துப் போட விட மாட்டார்.
‘யார் கண்ணும் பட்டுடும். தலையைக் கட்டு’ என படபடப்பார்.
இன்று, அடர்ந்த கூந்தலின் கனத்தினுள் அவனைத் தொலைய வைக்க விழைந்தாள். ஏற்கனவே தொலைந்தவன் தானே… மீண்டும் தொலைய அனுமதி கேட்டானே! எத்தனை முறை தான் கன்னக்கதுப்புகள் சிவந்து நிறம் மாறுவதாம்?
அவனை எண்ணினாலே வதனத்தின் பொலிவு கூடிவிடுகிறதே!
‘அச்சோ போதும்… ஹாஸ்பிடல் போறவரைக்கும் என் நெனப்புல வரக்கூடாது வேந்தா’ என மானசீகமாக அதட்டியவள், சிறிய வட்டப்பொட்டை வைத்துக்கொண்டு கிளம்ப முற்பட, அந்நேரம் உள்ளே வந்தாள் திலோத்தமா.
தங்கையின் அழகை எப்போதும் ரசிப்பவள் தான். இன்றும் அவளது புத்துணர்ச்சியை ரசித்தவளுக்கு அதில் இலயிக்க இயலவில்லை.
“ஹோம்கு போறியா பேபி?”
“ஆமாக்கா… ஹாஸ்பிடல்க்கு அகி வர சொன்னாரு. அங்க இருந்து தான் ரெண்டு பேரும் போறோம்”
“ஓ!”
“பாப்பா ஸ்கூலுக்குப் போய்ட்டாளா?” பவித்ராத்யா வினவ, “ம்ம்” என்றவள், அவளது கையைப் பற்றிக்கொண்டாள்.
“பவி பேபி நா… நான் ஒன்னு சொன்னா நீ தப்பா எடுத்துக்க கூடாது” பீடிகையுடன் ஆரம்பித்தவளிடம்,
“நீ சொல்லி நான் தப்பா எடுத்துப்பேனா. என்ன திலோ?” என முறைத்தாள் பவித்ராத்யா.
ஆழ்மூச்சை எடுத்து தன்னை சமன்படுத்தியவள், “நீ ஒரு ஸ்கூல்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுனியே என்னாச்சு பவிமா?” என வினவினாள்.
“அங்க வேலைக்கு வர சொன்னாங்க தான். இங்க யோகா கிளாசுக்கு போனதுனால போகலைக்கா”
“திரும்ப அங்க ஜாயின் பண்ண முடியுமா?” கேட்ட தமக்கையை குழப்பமாகப் பார்த்தாள்.
“ஹோம்ல க்ளாஸ் எடுத்துட்டு இருக்கேனேக்கா?” தயங்கியவளிடம்,
“இனி நீ அங்க போக வேணாம் பவி” என்றாள்.
“திலோ?”
“ப்ளீஸ் பவி… எனக்கும் நீயும் அகியும் எந்தப் பிரச்சினையும் இல்லாம நல்லாருக்கணும். அவனுக்கு உன்மேல இன்டரஸ்ட் இருக்குன்னு நினைக்கிறேன். உங்கிட்ட சொல்லிருக்கானா?” தமக்கையின் கேள்வியில் திகைத்தாள்.
“நீ… நீ அவனை விரும்புறியா பேபி?” திலோத்தமாவின் குரலில் நிறைந்திருந்த தவிப்பில் என்ன கண்டாளோ மறுப்பாக தலையசைத்தாள்.
அதில் நிம்மதி பெருமூச்சு விட்ட திலோத்தமா, “உன் மனசுல எந்த எண்ணமும் இல்ல தான பேபி” மீண்டுமொரு முறை உறுதிப்படுத்திக்கொண்டதில், பொங்கிய கேவலை உள்ளேயே அமிழ்த்திக்கொண்ட பவித்ராத்யா வெளியில் சிரித்து வைத்தாள்.
“இந்தக் கொம்பு உள்ள மனுஷங்க மேல எல்லாம் லவ் வருமா என்ன…” நெஞ்சை அடைத்தது.
விரக்தி முறுவல் பூத்த திலோத்தமா, “வர வேணாம்டா. அது நம்மளை மட்டும் இல்லாம, அவங்களையும் சேர்த்தே காயப்படுத்தும்” என்றாள் வேறெங்கோ வெறித்தபடி.
“அகி உன்னை விரும்புறான்னு தோணுது பவி… அவன் கேட்டா…”
“சரியா வராதுன்னு சொல்லிடுறேன்” பவித்ராத்யா சட்டென உரைத்தாள்.
தங்கையின் கன்னத்தைப் பற்றிக்கொண்ட திலோத்தமா, “உன் லைஃப் அவனால கண்டிப்பா நல்லாருக்கும் பவி… ஆனா, நடக்க விட மாட்டாங்க. என்னைத் தப்பா நினைக்கலை தான? நான் ஏன் சொல்றேன்னா” என தடுமாற்றத்துடன் தொடங்கும்போதே அவளை நிறுத்திய பவித்ராத்யா,
“உன் விளக்கமெல்லாம் எதுக்கு திலோ. உனக்கு வேணாம்னு தோணுனா எனக்கும் வேணாம். இன்னைக்கே இங்க இருந்து கிளம்பட்டா” என தனது சொல்லுக்கு உடனே கட்டுப்பட்டவளை தாவி அணைத்துக்கொண்டவளுக்கு தேம்பலே மிச்சம்.
ஒருமுறை கூட அவனைக் காதலிக்கவில்லை என வாய்வார்த்தையாக கூற மறுத்த தங்கையின் ஆழ்மனதை அந்நேரம் உணராது போனாள் திலோத்தமா.
பவித்ராத்யாவிற்கு முணுக் முணுக்கென இதயத்தில் வலி. இன்னும் சொல்லப்படாத காதல். சொல்லும்முன்னே சிதறடிக்கப்பட்டுவிட்டது.
அவளது பயமும் சரிதானே! இவ்வீட்டினர், திலோத்தமாவை ஏற்றுக்கொள்வதே அரிது. இதில் தானும் இடையிட்டு இன்னும் பிரச்சினையை தீவிரப்படுத்தி விடக்கூடாது. நாக்கில் நஞ்சுள்ளவர்கள். செயலிலும் கூடத் தான்.
“நாளைக்கு விக்ரம் வரும்போது நீ கிளம்பிடு பவி. நானே உன்னை விட்டுடுறேன். விக்ரமுக்கு நான் சொல்லிப் புரிய வைக்கிறேன்…” என்றதும் அனைத்திற்கும் தலையசைத்தாள்.
வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்ட திலோத்தமா, “கொஞ்ச நாள் தான். அப்பறம் உன்னை நான் கூப்பிட்டுக்குறேன்” என்ற தமக்கையின் கூற்றை புரிந்து கொள்ள அவளுக்கு நிதானமில்லை.
காதல் இத்தனை வலிக்குமா? இதுவரை இத்தனை ஆழமாய் இதயம் துன்பம் கொண்டதில்லையே!
“ஏன் இப்படி முடிய விரிச்சு போட்டுருக்க. திரும்பு பின்னி விடுறேன்…” திலோத்தமை கண்ணீரை துடைத்தவண்ணம் இருந்தாள்.
தங்கைக்கு அதனைக் காட்ட விருப்பமற்று அவளது கூந்தலில் கவனத்தை செலுத்த முயல, பவித்ராத்யாவின் அடர்ந்த கூந்தல் அவளை ஏளனமாகப் பார்த்தது.
போதை தெளியும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
18
+1
+1

