விழி வழியே சரணடைந்தேன் -31

Loading

அத்தியாயம் 31

 

காலையில் எழுந்த அருண் தன் அருகே மனைவி இல்லாததை கண்டு குளியலறை பக்கம் திரும்பி பார்த்தான். அங்கு இருந்து வந்த சத்தத்தில் புரிந்துகொண்டவன் வெளியே இருந்த பாத்ரூமில் சுத்தப்படுத்தி கொண்டவன் சமையலறைக்கு சென்று தனக்கும் அம்ருதாவுக்கும் சேர்த்து காபி போட்டவன் இரு டம்ளரில் ஊற்றி வெளியில் எடுத்து வர அம்ருதா அங்கு வந்தாள். 

 

“காபி எடுத்துகோமா..” என்றவன் ஒரு டம்ளரை அவளிடம் நீட்டிவிட்டு தனக்கான காபியை பருகினான். அவள் எதுவும் சொல்லாமல் குடித்துவிட்டு அவன் அருகில் வந்தமர “நாளைக்கு சென்னை போயிட்டு வந்துடலாமா அம்ரு.. கீதன் வீட்டுக்கு வந்துட்டாராம்” என்றான். 

 

“தாராளமா போயிட்டு வரலாம்ங்க.. உங்களுக்கும் ஷாரவி பார்க்காம கஷ்டமா இருக்கும்ல” 

 

“ஆமாடா.. பிறந்ததில் இருந்து பக்கத்துல இருந்து வளர்ந்தவ தான்.. ஆனா இப்போ அவளோட அப்பா கிட்ட அட்டேச் ஆகுறது தான் சரி.. கீதனுக்கு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்.. அவரோட வாழ்க்கையை கொஞ்ச வருஷம் என் நன்மைக்காக விட்டு கொடுத்திருக்கிறாரே..” என்று சிலாகிக்க அவளுக்கும் புரிந்தது. 

 

“நாளைக்கு போயிட்டு வந்துடலாம்ங்க..” என்று சமையல் வேலையை பார்க்க செல்ல அருண் அலுவலகம் கிளம்பினான். அவள் செய்து கொடுத்த டிபனை சாப்பிட்டவன் மதிய சாப்பாடு விஷ்வாவுக்கும் சேர்த்தே எடுத்து சென்றான். 

 

அவனை அலுவலகத்தில் பார்த்த பலரும் கல்யாணம் ஆகி ஒரே நாளில் வந்துட்டான் என்று ஆச்சரியபட விஷ்வாவும் அதே கேள்வியை தான் கேட்டான். 

 

“என்னடா இன்னைக்கே ஆபீஸ் வந்திருக்க? எதுவும் பிரச்சனை இல்லையே?” 

 

“ஒன்னும் இல்ல.. நாளைக்கு சென்னை போக போறோம்.. நீயும் கூடவா..” 

 

“கண்டிப்பா வரேன்.. இன்னைக்கு ஆபீஸ் வரதுல அம்ருதாவுக்கு எதுவும் மனகஷ்டம் இல்லல?” விஷ்வா கேட்க “நான் அங்கே இருந்தா வேலை செய்ய விடமாட்டேன்னு என்னை துரத்தி அனுப்புனதே அவ தான்டா.. நீங்க அமைச்சு குடுத்த வாழ்க்கைய எப்பவும் விட்டு போக மாட்டேன்.. அவ எனக்கு மனைவிடா.. கண்டிப்பாக நல்லா வாழுவோம்” என்றான். 

 

அவன் பதிலிலேயே அவனின் வாழ்க்கை புரிந்துவிட விஷ்வாவுக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது. தன் நண்பனின் வாழ்வு இனி சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் வந்தது. அந்த நம்பிக்கையில் ஈஸ்வரனிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டவன் தன் வேலையை பார்க்க சென்று விட்டான். 

 

மதியம் வீட்டுக்கு வந்த கீதன் ஷாரவியை அனுவிடம் விட்டு விட்டு மனைவியுடன் மருத்துவமனை சென்றான். அறுவை சிகிச்சை முடிந்தாலும் அதன்பிறகு சில மருத்துவ சோதனைகள் இருந்ததால் அதற்காக வர சொல்லியிருந்தார் மருத்துவர். பெங்களூரில் அவனுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கிரண் தன் நண்பனை சென்னையில் சந்திக்க சொல்லி விட்டதால் மீதமுள்ள பரிசோதனைகள் சென்னையில் பண்ணினார்கள். 

 

கீதனுக்கான முறை வர மருத்துவரின் முன்னே சென்றவர்களை “ஹி இஸ் பெர்பெக்லி ஆல்ரைட் மிசஸ்.கீதன்.. நாங்கள் கொடுக்குற மருந்துகளை பாலோ பண்ணுனா போதும்.. அவருக்கு ஆயுசு கெட்டி” என்றவர் கீதனை பார்க்க அவன் முகத்திலும் தெளிவு இருந்தது. 

 

தொடர்ந்த மருத்துவர் “ப்ரைன் டியூமர் அவ்ளோ ஈஸி இல்ல.. பட் உங்க கணவர் அதை பல வருசமா போராடி ஜெயிச்சிருக்கார்.. கொஞ்ச வருஷத்துக்கு தொடர்ந்து மருந்து எடுத்தால் போதும்.. கட்டியை மொத்தமா அகற்றிட்டாலும் இனியும் வளராம இருக்கதான் இந்த முயற்சி” என்றுகூறி சிகிச்சைகளையும் மருந்து முறைகளையும் சொல்ல கேட்டு கொண்டவர்கள் அவருக்கு நன்றி உரைத்துவிட்டு வெளியே வந்தனர். 

 

“இப்போ தான் மனசு ரொம்ப நிம்மதியா இருக்குங்க..” என்றவள் அவனின் மார்பில் சாய அவளை தன்னோடு அணைத்து கொண்டவனுக்கும் ஆனந்த கண்ணீர் வந்தது. அடுத்தநாள் அருண் மனைவியுடன் வருவதாக அலைபேசியில் அழைத்து சொல்ல அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். 

 

கனிமொழி டாக்டர் கிரணுக்கு அழைத்து மருத்துவ விவரங்களை சொல்ல “உங்களை அவ்ளோ சீக்கிரம் கடவுள் பிரிக்கமாட்டார் கனி.. அத்தனை வலியிலும் கீதன் மனசுல இருந்தது உங்களை பற்றிய எண்ணங்கள் மட்டும் தான்.. உங்க காதல் தான் அவரை திரும்ப கொடுத்திருக்கு” என்றவர் பின் சித்தார்த் பேசுவதாக சொல்லி கான்பெரன்ஸில் போட்டார். அந்தபக்கம் அவன் சொல்லிய செய்தியில் கனிக்கு மிகுந்த மகிழ்ச்சியே. இப்போது அவர்களும் நல்ல நண்பர்கள். கண்டிப்பாக ஒருமுறை கனிஷ்காவை இந்தியா அழைத்துவர சொல்லியவள் அருணின் திருமண விஷயத்தையும் பகிர்ந்து கொண்டாள். 

 

“ஐ அம் சோ ஹேப்பி கனி.. கியூட்டியை நினச்சு அவன் வாழ்க்கையை பாழாக்கிக்குவான்னு ஒரு பயம் இருந்துச்சு.. இப்போதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு” என்று சித்தார்த் கூற கனியும் ஆமோதித்தாள். அந்த பக்கம் கனிஷ்கா அவனை அழைக்க “டேட் கியூட்டி காலிங்.. அப்புறம் பேசுறேன்.. பை கனி” என்று அழைப்பை துண்டிக்க கனியும் கிரணிடம் சொல்லி விட்டு துண்டித்தாள். 

 

அடுத்தநாள் கீதனின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. அவனின் உடல்நலம் பெற்று வந்தது ஒருபக்கம் என்றால் அவனின் தங்கை அனு கருவுற்றிக்கும் நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டாள். இத்தனை வருடங்கள் கழித்து அவள் நல்லவிஷயம் சொல்லியிருந்ததால் அதிரன் மனைவியை தூக்கி வைத்து கொண்டாடினான். கூடவே அருண், அம்ருதா மற்றும் விஷ்வா அவர்களுடன் இணைந்திருந்தனர். 

 

அருணை கண்டதும் “ப்பா…” என்று ஷாரவி அவனிடம் தாவ அருண் சங்கடமாக நெளிந்தான். 

 

அதை கண்ட கீதன் “பரவாயில்லை அருண்.. அவளை இத்தனை வருஷம் வளர்த்தவன் நீ தானே.. கூப்பிடுறதில் தப்பில்லை” என்று கூற அப்போதுதான் அவனுக்கு மூச்சு வந்தது. ஷாரவியை வைத்து அவன் கொஞ்ச அம்ருதா “சாரி சார்.. அவரால் தான் நீங்க உங்க மனைவியை பிரிஞ்சு இருக்க வேண்டியதா போச்சு.. இப்போ அதை நினைச்சு அவர் வருந்தாத நாளில்லை” என்று மன்னிப்பு வேண்ட “தேவையில்லைமா.. அவனை நான் புரிஞ்சிகிட்டேன்.. அவன் எந்த தப்பும் பண்ணல” என்று சொல்லிவிட கீதனின் மனதை புரிந்து கொண்டவர்களுக்கு அவன் மீது இன்னும் மதிப்பு கூடியது. 

 

————————————–

 

கலிபோர்னியாவில் நடக்கும் மாநாட்டிற்காக தன் மனைவியுடன் வந்திருந்தான் சித்தார்த். அவளை பென் அருகில் அமர்த்திவிட்டு மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டான். இயற்கை வள பாதுகாப்புதுறை மூலம் பழங்குடியினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்று ரிச்சர்டால் பாதிக்கபட்ட மூன்றுபேரின் உடல்நிலை முன்னேற தேவையான மருத்துவ உதவிகளையும் செய்ய முடிவு செய்யபட்டது. பொதுவாகவே பல போதை மருந்துகள் அமெரிக்காவில் தடை செய்யபட்டவை தான். ஆனால் பலரும் அரசுக்கு விரோதமாக முயற்சி எடுப்பது அவ்வளவு சுலபமாக தடுக்க முடியாதது. எனவே அதற்கு என்ன பண்ணலாம் என்று விவாதித்தனர். 

 

“ஒவ்வொரு ஆராய்ச்சி பண்ணனும்னாலும் அரசிடம் அனுமதி வாங்கிட்டு தான் பண்ணனும்” என்று ஒருவர் சொல்ல சிலர் ஆமோதிக்க சிலர் எதிர்த்தனர். 

 

“அது எப்படி சரியா வரும்? அது அவரவர் சிந்தனை.. அதை வெளிப்படுத்த அனுமதி வாங்கணும்னா அவர்களோட திறமையை நாம் கட்டுப்படுத்துறதுக்கு சமம்” என்று மற்றோருவர் கூற அதையும் ஆமோதிக்க வேண்டியிருந்தது. 

 

சலசலப்பை குறைக்க நினைத்த சித்தார்த் “நான் பேசலாமா?” என்று எழுந்தான். 

 

“சுயர் சித்தார்த்..” 

 

“நான் இதுக்கு முன்னாடி ஆராய்ச்சி பண்ணி கொண்டிருந்தேன் தான்.. ஆனால் அதை முடித்த பிறகு அரசு அனுமதியோட வெளில கொண்டுவருவேன்.. அதனால் வந்த நன்மைகளும் தீமைகளும் நீங்க கேள்விபட்டிருப்பீங்க.. என் மனைவி கனிஷ்கா ஒரு இந்தியபெண்.. அவளை நான் இங்கே அழைச்சிட்டு வந்ததும் ஒரு ஆராய்ச்சிக்காக தான்.. வெற்றிகரமான ஆராய்ச்சி.. அவளின் மூளையில் சிப் பொருத்தி அவளை தன்வசப்படுத்துதலும் அவளின் பழைய நினைவுகளை அழிப்பதும் அவ்ளோ சின்ன விஷயம் இல்லை.. பட் நான் பண்ணிட்டு அரசு அனுமதியோடு வெளிகொண்டு வந்தேன்.. உங்களுக்கு வில்சனை பற்றியும் தெரிந்திருக்கலாம்.. அவனின் மாத்திரை போதை கலந்து இருக்கும்.. அதை சாப்பிட்டவர்களுக்கு இரண்டு நிமிடம் கூட தேவையில்லை.. தானாக போதை ஏறி விடும்.. அதற்கான அனுமதி கேட்டும் நம்ம அரசு கொடுக்கல.. அவன் முடிவு தெரிந்தது தான்.. இப்போ அவனோட அலுவலகம், வீடு எல்லாம் அரசின் கீழ் வந்தாச்சு.. அரசுக்கு தெரிந்து அனுமதி வாங்கி ஒரு விஷயம் செய்யுறது தப்பு இல்லன்னு தான் என் அபிப்பிராயம்.. ஒருத்தரோட திறமையை அழிப்பதற்கு பதில் அதைபற்றி தெரிந்தபின் அமல்படுத்துவது நல்ல விஷயம் தானே” என்றுகூற அவன் சொல்வதும் யோசிக்க வேண்டியது தானே என நினைத்தனர். 

 

சித்தார்த்தின் சோதனைகள் முதலில் சுயநலமாக இருந்தாலும் பின் அதனால் அரசுக்கு கிடைத்த நன்மைகள் பெரிய லிஸ்ட் போடலாம். எனவே அவனின் கூற்றுபடி இனிமேல் அரசின் அனுமதி பெற்றே எதையும் அமல்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கபட்டது. 

 

அவன் வெளியே வரவும் அவனை எதிர்கொண்டான் வில்லியம். ரிச்சர்ட் வழக்கில் அவனுக்கு உதவி புரிந்தவன். 

 

“சாரி வில்லியம்.. உனக்கு வேலையில் இருந்து இடைக்கால நீக்கம்னு கேள்விபட்டேன்.. ஐ அம் ரியலி சாரி” என்றான் சித்தார்த். 

 

“அவனை கொன்னதுல எனக்கு கொஞ்சமும் வருத்தம் இல்ல சித்.. அவனைபற்றி விசாரிக்கும்போது தான் இன்னும் எத்தனைபேர் வாழ்க்கை நாசமா போயிருக்குன்னு தெரிஞ்சுது.. ஆராய்ச்சி எனும் பேர்ல பல பெண்கள் நாசமாக்கிருக்கான்.. கேதின்னு ஒருபெண் வில்சன் யூஸ் பண்ணிட்டு ரிச்சர்ட் கிட்ட அனுப்பிருக்கான்.. கொடுமையா கற்பழிச்சு கொன்னுருக்கான்.. அப்புறமும் விடாம அவளோட உடலில் பாகங்கள் எடுத்து வித்துருக்கான்.. பணம் மட்டுமே அவனோட பிரதானம்.. அப்படி பட்டவனை கொன்னதுக்கு தண்டனை தரல.. அவனை கொல்ல அப்ரூவ் வாங்கலன்னு தான் இந்த சஸ்பென்ஷன்.. இதை யூஸ் பண்ணி பேமிலி கூட ஸ்பெண்ட் பண்ணலாம்” என்றவன் அவனை கட்டி அணைத்து விடைபெற்று சென்றான். 

 

அவன் சென்றதும் பின்னால் இருந்து அவனை கட்டி கொண்டாள் கனிஷ்கா. “ஹே கியூட்டி.. உனக்கு தான் பப்ளிக்ல கட்டி புடிக்குறது பிடிக்காதே” என்று அவளை முன்னே இழுத்தான். 

 

“இப்போ பிடிக்கும்..” என்றவள் எம்பி அவன் கன்னத்தை கடித்து வைக்க அவன் தன் உணர்வுகளை அடக்க பெரும்பாடு பட வேண்டியிருந்தது. 

 

“வீட்டுக்கு போகலாம்.. கிளம்பு” என்றவன் பென்னை அழைத்து கொண்டு தன் ஆய்வுகூடத்திற்கு கிளம்பினான். அங்கு மருத்துவர் ஒருவர் அவளுக்கு பரிசோதனை செய்ய காத்திருக்க அவளோ முடியாது என்று முரண்டு பிடித்தாள். 

 

“கனி நீ எதுக்காக பேச்சு வர கூடாதுன்னு நினைக்குற? நீ இப்படியே இருந்தாலும் என்னால் உன்னை புரிஞ்சிக்க முடியும்.. ஆனால் வருங்காலத்தில் நீ அதையே கஷ்டமா நினைக்க கூடாது” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். 

 

அவனை புரிந்து கொண்டவளும் மருத்துவர் சொன்னபடி சிகிச்சைகளை செய்ய உள்ளே வந்த சித்தார்த்திற்கு சீக்கிரம் அவளுக்கு பேச்சு வரும் என்ற நம்பிக்கை வந்தது. அவன் பென்னை அழைத்து கென்யா எனும் மனித ரோபோர்ட்டை அழைத்து வரசொல்ல அவன் அழைத்து வந்தான். 

 

கால் மேல் கால் போட்டு இருக்கையில் அமர்ந்திருந்தவனை பார்த்து “குட் ஈவினிங் சார்..” என்றாள் கென்யா. 

 

ஒரு தலைஅசைப்புடன் ஏற்று கொண்டவன் தன் அருகில் அமர்ந்திருந்த கனிஷ்காவிடம் “கனி இவ பெயர் கென்யா.. உன்னோட ஹெல்ப்க்கு கூடவே வச்சிக்கோ” என்று சொல்ல “எதுக்கு? நீ எங்கே போற?” என்று சைகையில் கேட்டாள். 

 

“நான் எங்கேயும் போகல.. நீ உதட்டை அசைச்சாலே அவ புரிஞ்சிப்பா.. சோ உனக்கு உதவியா இருக்கும்.. நீ எப்போ கூப்பிட்டாலும் நானும் ஓடி வருவேன்” என்று சிரிக்க சித்து என அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். 

 

கென்யா அவன் முதன்முதலில் சிப்பின் உதவியால் உருவாக்கிய பெண். அப்போது அவளுக்கு இன்னும் அதிக ப்ரோக்ராம் தேவைபட்டதால் கிடப்பில் போட்டிருந்தான். அடுத்து கனி இல்லாத நேரம் தான் அவளை சரி செய்ய முடிந்தது. இப்போது அவளை அனுப்பி வைத்தவன் கனியை அழைத்துகொண்டு தன் அறைக்கு வந்தான். அறைக்குள் வந்ததும் குளியலறைக்குள் நுழைந்தவனை விசித்திரமாக பார்த்து கொண்டிருந்தாள் கனிஷ்கா. அவள் அறிந்த சித்து அவன் அல்லவே. 

 

குளித்து முடித்து வெளியே வந்தவன் “சாப்பிட போகலாமாடா?” என்று கேட்க “நீ ஏன் இப்படி இருக்க சித்து?” என்று சைகை செய்ய “நீ ரொம்ப கஷ்டபட வேண்டாம்.. இப்போ உன் உடல்நிலை இதுக்கு எல்லாம் சரிவராது.. கொஞ்சநாள் போகட்டும்” என்று கூறிவிட்டு செல்ல புரியாமல் அவனை பின்தொடர்ந்தாள் அவள். 

 

ஆனால் இன்று அவளின் கன்னத்து கடியிலேயே அவளை நெருங்க அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை. அவளை நெருங்கவே அவனுக்கு தயக்கமாக இருந்தது. ஏதோ ஒருவேகத்தில் அவளை வைத்து என்ன என்னவோ செய்துவிட்டான். அவனின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவளை களவாடி விட்டான். அனைத்தும் அவளின் நினைவுகளை அழித்துவிட்டு செய்ததை இப்போது அவனால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை. அப்போது சரியாக தெரிந்த அனைத்தும் அன்று அவள் சொன்ன “ச்சி” என்ற வார்த்தையில் மடிந்து போய்விட்டது. 

 

அவளுக்கு உண்மையை சொல்லாமல் மறைத்தவன் அன்று உண்மை சொல்லும்போதே மனம் படபடத்தது. அவள் ஒருநொடி அவனை கேவலமாக பார்த்துவிட்டு அடுத்தநொடி ஏற்றுகொண்டாலும் அவளை தொட அவனுக்கு மனம் வரவில்லை. எனவேதான் தன் உணர்ச்சிகளுக்கு கடிவாளம் இட்டு அமைதியாக இருந்தான். இருக்க முயற்சிக்கிறான் அவ்வளவே. அது கட்டவிழும் நாள் கனிஷ்கா பாவம் தான். 

 

இன்றும் ஏதோ யோசனையில் சாப்பிட்டு கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு ஒரு விஷயம் புரிய சட்டென அவனின் கன்னத்தில் முத்தம் பதித்தாள். அவள் அப்படி செய்ததும் எழுந்துவிட்டான் சித்தார்த். கைகள் நடுங்க அவனால் தன்னை கட்டுபடுத்தவே முடியவில்லை. அவனையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு இப்போது அவனின் நிலை நன்றாக புரிந்தது. என்ன செய்யலாம் என யோசித்தவளுக்கு நாளை அவனின் பிறந்தநாள் என்பது நியாபகம் வர இதைவிட சிறந்த பிறந்தநாள் அவனுக்கு இருந்திடாது என்ற முடிவுடன் தூங்க சென்றாள். 

 

தன் அறைக்குள் வந்த சித்தார்த் குறுக்கும் நெடுக்கும் நடந்து தன்னையே நிதானித்து கொண்டிருந்தான். அப்போது அறைக்குள் நுழைந்த கனிஷ்காவை பார்த்ததும் உணர்வுகள் பேயாட்டம் போட அவளைவிட்டு பார்வையை திருப்பியவன் கட்டிலில் போய் படுத்து கொண்டான். அவனின் நிலை புரிந்தவளும் ஒன்றும் பேசாமல் மறுபக்கம் படுத்து கொண்டாள். 

 

நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு தன் கன்னத்தில் மேல் படிந்த விரல்களை தனக்குள் எடுத்து பொத்திவைத்து கொண்டான் சித்தார்த். “ஹேப்பி பர்த்டே சித்து..” அவள் கைப்பட எழுதிய வாசகம் அவனின் கண்முன்னே தெரிய சட்டென எழுந்தவன் அவளை பார்க்க சிறுபுன்னகையுடன் அவனை தன்னுள் அணைத்து கொண்டாள் அவள். 

 

“கியூட்டி..” அவனின் கண்கள் கலங்கி விட்டன. “வேண்டாம்டா..” அவன் மறுக்க அவனை நிமிர்த்தியவள் “என் முதல் கல்யாணத்தில் நடந்த எல்லாத்தையும் நீ உணர்ந்ததா சொன்னியே.. அதை சொல்லு” என்றாள். 

 

அவளின் பார்வையில் இருந்த தீர்க்கத்தில் அவளின் உடலில் இருந்த தழும்புகளை பற்றி சொல்ல “அந்த வாழ்க்கை எனக்கு முடிந்துபோன அத்தியாயம்னு நீயே சொல்லுற.. அப்புறம் எதுக்காக அதை நினச்சு என்னை தள்ளிவைக்குற? அதில் ஒரு சின்னவிஷயம் கூட எனக்கு நினைவில் இல்லை.. இங்க இருக்குறது எல்லாம் நீ மட்டும்தான்” என்றவள் தன் நெஞ்சை தொட்டு காட்ட “உன்னை நான் உன்விருப்பம் இல்லாம தொட்டுட்டேன்டா” என்றான். 

 

“சரி.. ஆனால் என்னை விட்டு போகணும்னு ஒருபோதும் நினைச்சது இல்லையே.. உன் மனைவின்னு அங்கீகாரம் தான் கொடுத்திருக்க” என்று சைகையில் சொன்னவளை அள்ளி எடுத்தவன் “வலிக்கும்டா..” என்றான். 

 

“உனக்காக இந்த சுகமான வலியை தாங்கிக்குறேன்” என்று அவனின் இதழில் ஆரம்பித்து வைக்க அதன்பிறகு அவன் அவளைவிட்டு விலகவே இல்லை. இத்தனை நாட்கள் பிரிந்திருந்த எல்லாவற்றிற்கும் சேர்த்து அவளை எடுத்து கொண்டான். 

 

காதல் இல்லாமல் உன்னை தொட்டேன் என்று கூறியவன் மனம் முழுவதும் காதலுடன் அவளை நெருங்கினான். அவளின் புரிதலும் ஒருகாரணமாக அமைய தன் கடந்த காலத்தில் அனுபவித்த அனைத்து வேதனைகளுக்கும் பதிலாக சந்தோஷ கடலில் மூழ்கியிருந்தாள் கனிஷ்கா. ஒவ்வொரு நாளும் விடியாதா என்று எதிர்பார்த்தவர்களுக்கு இன்று சூரியன் வராமல் இருக்காதா என்று தோன்றியது. அவர்களின் காதலைவிட ஒரு பெண்ணின் புரிதல் அங்கு ஒரு உறவை உருவாக்கியிருந்தது. 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்