
அத்தியாயம் 29
புதிய ஊரில் குடித்தனம் ஆரம்பித்து எட்டு மாதங்கள் முடிந்திருந்தது. இதுவரை இரண்டு முறை இவர்கள் சென்னைக்கு சென்று வந்திருந்தார்கள். ஒரு முறை அவர்களும் மகன், மருமகள், பேரனைத் தேடி வந்து பார்த்துச் சென்றார்கள்.
வசந்தராவுக்கு தற்போதெல்லாம் ஒரே அலுப்பாக இருந்தது. ரொட்டீனாகச் செல்லும் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லாமல் மிகவும் சோர்ந்து தெரிந்தாள். போன முறை இவர்களைப் பார்க்க வந்திருந்த அனுபமா கூடக் கேட்டிருந்தார், “என்னாச்சு.? ஏன் ரொம்ப டல்லா தெரியுற.?” என்று. ஒன்றுமில்லை தான் நன்றாக இருப்பதாகக் கூறி அவரைச் சமாளித்திருந்தாள் இவள்.
யாரிடம் சொல்லுவது என்ன என்று தெரியாமல் ஒரே தவிப்பாக இருந்தது. சொன்னாலும் எப்படி எடுப்பார்களோ என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. பேசுவதற்கோ பழகுவதற்கோ பெரிதாக நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் அதுவும் அவளின் வேதனையைக் கூட்டியது.
கணவனின் அன்பு தற்போது வெகுவாகக் குறைந்து விட்டதாக எண்ணம் தோன்றி கொண்டிருந்தது. அதற்கேற்றது போல் அவனுக்கும் வேலையில் நிறைய டென்ஷன். போட்டிகள் அதிகரித்திருக்க என்ன ஏது என்று சொல்லப்படாமலேயே சிலர் வேலையிலிருந்து நீக்கப்பட்டு இருந்தார்கள். இது போன்ற பெரிய எம்என்சி கம்பெனிகளில் எவ்வளவு சலுகைகள் இருக்குமோ அவ்வளவு ஆபத்தும் வேளையில் உண்டு. எப்போது வேண்டுமானாலும் உனக்கு வேலை இல்லை வீட்டிற்கு கிளம்பலாம் என்று அவர்கள் சொல்லும் நிலைதான் இருந்தது. அதற்காகவே வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.
காலையில் எழுவதும் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பி செல்வதும். உடலில் உள்ள சாரு முழுவதையும் பிழிந்து. சக்கையை போல் வீட்டுக்கு வருவதும்.அலுவலக யோசனைலேயே என்ன உண்கிறோம் என்பது கூடத் தெரியாமல் உண்டு விட்டு அலுப்பில் உறங்கி விடுவதும் தொடர்கதை ஆகிக்கொண்டிருந்தது. சுமார் மூன்று மாதமாக எங்கும் வெளியில் செல்லாமல் அலுவலகம் விட்டால் வீடு. வீடு விட்டால் அலுவலகம் என்று மாறி இருந்தான் சஞ்சய். விடுமுறை தினத்திலும் ஏதேனும் வேலை இருக்கும்.அல்லது ஒரு வார அலுப்பில் உடல் அசதியில் நாள் முழுவதும் உறக்கம் இருக்கும்.
இடை இடையாக மனைவியையும் நாடிக் கொள்வான். அதுவும் ஒரு இயந்திர கதியில்தான் நடந்தேறிக் கொண்டிருந்தது.
அவனாவது வேலைக்கென்று வெளியில் சென்று நான்கு பேரைப் பார்க்கிறான். அதிகபட்ச ஸ்ட்ரெஸ் வேளையில் இருந்தாலும், ஒரு காபி குடிக்கும் நேரம் ஆவது கூட வேலை செய்யும் நபர்களோடு சற்று பேசவோ சிரிக்கவோ முடிகிறது. ஆண் அவனால். ஆனால் பெண் இவளுக்கோ அதற்குக் கூட வழி இல்லாத நிலை தான். அதற்கு மேல் அவள் உடல் நிலையில் மாற்றம் வேறு அவளைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. கணவன் அவளை ஆசையாகவோ வேட்கை கொண்டோ நெருங்கும்போது பெண்ணாக அதை உணர்ந்து அனுபவிக்க தயாராக இருக்கும்போது சில நிமிடங்களில் அனைத்தும் முடிந்து அவன், அவளை விட்டு நீங்கிச் செல்கிறான். அவனுக்கு வேண்டியது கிடைத்து விடுகிறது ஆனால் பெண் அவளுக்கோ வலிகள் நீங்கி இன்பம் தொடங்கும் வேலை அவனுக்கு முடியும் நேரமாக இருக்க. உச்சம் செல்ல முடியாத நிலை கோபத்தை ஏற்படுத்தியது. இதுவே தொடரும்போது ஆத்திரமும் ஆக்ரோஷமும் இணைந்து வெளிப்பட, அதைக் காட்டும் வழியும் அறியாமல் பெண் அவளை, நீரில் அமுங்கிய பந்துபோல் வெளியே வெடிக்க முடியாமலும் உள்ளே அமுங்க முடியாமலும் நிலை கொள்ள முடியாமல் தடுமாறச் செய்தது.
மகனையும் இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்த்திருந்தார்கள். தந்தை செல்லும் நேரத்திலேயே இவனும் கிளம்பி விடுவான். இவனுக்கும் பள்ளி வாகனம் வந்துவிடும். இவன் வீடு வந்து சேரவும் மாலை நான்கு மணிபோல ஆகிவிடும். கணவனும் மகனும் சென்றபிறகு மெது மெதுவாக வேலைகளைப் பார்த்தாலும் இரண்டு மணி நேரத்தில் அனைத்து வேலைகளும் முடிந்து அதற்குப் பின் தேவையில்லாத சிந்தனைகளும் நினைவுகளும் வந்து இவளைப் பாடாய்படுத்தியது.
உடலில் ஹார்மோன் மாற்றம் ஏதேனும் ஆரம்பித்திருக்குமா என்பதும் தெரியவில்லை பெண்ணவளுக்கு. அவளும் முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தாள். இயற்கையாக எழும் உணர்ச்சிகளை அடக்க முடியாமல், அது கேட்கும் தீர்வையும் கொடுக்க முடியாமல் திணறினாள் பெண்.
திருமணமான புதிதில் இதைப் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. கணவன் காதலோடு கூடும்போது அதிகபட்ச வலியை மட்டுமே அனுபவிப்பதால் அதன் இன்பம் என்ன என்பது தெரியாமலே இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு அதன் சுவையை அறிந்தாலும். அது எப்போதும் தொடர்வதில்லை. அத்தி பூத்தார் போல் என்றோ ஒருநாள் மட்டுமே கிட்டும் அந்த இன்பம். அதன்பின், அதைப் பற்றிச் சிந்திக்க கூட நேரம் இல்லாமல் குழந்தை வரவு. கர்ப்பகால பிரச்சனைகள், அதற்குப் பின் பேரு கால பிரச்சனைகள். பின், குழந்தை வளர்ப்பு. என நாட்கள் பறந்து விடும்.இடை இடையே கணவனின் அண்மை கிடைத்தாலும், வேண்டும் இன்பம் கிடைக்காததால் ஏமாற்றமே மிஞ்சும். ஏன் இப்படி என்று.?
இதைப் பற்றிச் சிந்திக்கவோ கணவனிடம் பேசவோ முடியாமல் கூச்சமும் தடை செய்ய. யாரிடமும் கேட்டுத் தெளிவு பெற முடியாத சூழ்நிலைதான்.
மேலும் ஒரு மாதம் கடந்திருந்தது. பத்து நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறையெனக் கணவன் அவளை நாடுவது மட்டும் நிற்கவில்லை. ஆனால் அதில் இவளுக்குச் சுகம் கிடைத்ததா என்றால் அது கேள்வி குறிதான். அவனுக்கு வேண்டியது கிடைத்து, அனுபவித்த இன்பத்திலும், சோர்விலும் அவன் நிம்மதியாகத் தூக்கத்தை தழுவ. பெண் இவள் தான் ஆரம்பித்தது பாதியில் நிற்க. அதை எப்படி முழுமை பெறச் செய்ய வேண்டும் என்பது தெரியாமல், அது கிடைக்காததால் ஒரு விதமான வலியையும் அதனால் உண்டாகும் எரிச்சலையும், கோபத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள்.
பின் இதற்குத் தீர்வாக மருத்துவரான மாமியாரை அணுகுவது என்று முடிவு முடிவெடுத்த பின்பே சற்று நிம்மதி ஏற்பட்டது. அவருக்குமே இவளிடம் ஏதோ மாற்றம் இருப்பது புரிந்து தான் இருந்தது அதனாலேயே அவ்வப்போது
“என்ன ஆச்சு.? உடம்பு சரியில்லையா.?” என்று கேட்டுக்கொண்டே இருப்பார். இவர்களை ஒரு முறையேனும் வந்து செல்லுங்கள் என அழைத்தாலும் சஞ்சயின் வேலை, வருணனின் பள்ளிக்கூடம் இவர்களைப் போகவிடாமல் தடுத்திருந்தது. அவர்களுக்கும் வர முடியாமல், மழைக்காலம் ஆதலால் நோயாளிகளின் வருகையும் அதிகமாக இருந்தது.
அத்தையோடு பேச வேண்டும் என முடிவெடுத்தவளுக்கு எப்படி ஆரம்பிப்பது என்பதில் தான் பெரிய குழப்பமும், தயக்கமும். தாயை விட அதிக பாசம் கொண்டு தன்னை பார்த்துக் கொள்ளும் மாமியார் தான். தாய் பாசத்தை கூட இவரிடம் தான் அனுபவித்தாள் அவள். ஆனாலும் அவரிடம் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பது தெரியாமல் குழம்பி தவித்துக்கொண்டிருந்தாள்.
இவள் மனநிலை புரிந்தது போல எப்போதும் அந்நேரத்தில் இவளுக்கு அழைக்காத அனுபமா அன்று அலைபேசி அழைப்பு விடுத்தார். நேரத்தைப் பார்த்துவிட்டு மிகுந்த ஆச்சரியத்துடன் அலைபேசியை எடுத்தவள்,
“என்ன அத்தை.? இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கீங்க. கிளினிக் போகலையா நீங்க.?” என்று கேட்டாள் ஆச்சரிய குரலில்.
“நீ தான் சொல்லணும் என்னன்னு.?” என்றார் இவரும்.
“என்ன அத்தை புரியல.?” என்றாள் ஒன்றும் புரியாமல்.
“உனக்கு என்ன ஆச்சுன்னு நீ தான் சொல்லணும். கொஞ்ச நாளா நீ சரியில்லன்னு எனக்குத் தோனி கிட்டே இருக்கு. நானும் அப்பப்போ உன்கிட்ட கேட்டுகிட்டு தான் இருக்கேன். உடம்பு சரியில்லையான்னு. ஆனா நீ அதுக்கு எந்தப் பதிலும் சொல்ல மாட்டேங்குற. கேட்கும் போதெல்லாம் நான் நல்லா இருக்கேன்னு சொல்ற. ஆனா உன் குரலில் ஒரு வித்தியாசம் இருக்கு. நீ நல்லா இல்லைன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. என்ன உன்னைப் போட்டுத் தின்னுதுன்னு சொல்லு. என்னால முடிஞ்ச உதவியைக் கண்டிப்பா நான் உனக்குச் செய்வேன். சஞ்சய் ஏதாவது பிரச்சனை பண்றானா.? உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா.? மனஸ்தாபமா.?மாமியாரா நினைக்காத அம்மாவா என்னை நெனச்சு சொல்லு.” எனப் பரிவாக அவர் கேட்க. மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்தவளுக்குத்தான் கண்ணீர் கண்களை நிறைத்தது.
அந்தப் பக்கம் இருந்து எந்தச் சத்தமும் இல்லாமல் இருக்க
“வசுந்தரா.” என அழைத்தார் ஆழ்ந்த குரலில்.
“ம்ம்.” என்றவளின் குரலிலேயே அவள் அழுகிறாள் என்பதை தெரிந்து கொண்ட அனுபமா.
“என்னம்மா.? என்ன பிரச்சனை.? சொன்னா தானே எனக்குத் தெரியும். வீடியோ கால் வரவா.?” எனப் பாசத்தை குரலில் தேக்கி கேட்க.
“வேண்டாம் அத்தை.”
“சரி வீடியோ கால் வேண்டாம். என்ன பிரச்சனை அதையாவது சொல்றியா.?”
“ம்ம்.” என்று மெதுவாக முனங்கியவள். வெகுநேர தயக்கத்திற்கு பிறகு,
“எனக்கு ஏதாவது ஹார்மோனல் பிரச்சனை இருக்குமா அத்தை.?” என்று கேட்டாள்.
“ஏன் உனக்குத் திடீர்னு இப்படியொரு சந்தேகம். மென்சுரல் சைக்கிள் எப்படி இருக்கு உனக்கு. மாதம் மாதம் சரியா தலைக்கு ஊத்திக்கிறியா.?”
“ஹான். அதெல்லாம் சரியா தான் இருக்கு. யார் எப்படி போனாலும் இருபத்தி எட்டாவது நாள், நான் வந்துட்டேன்னு வந்துரும்…”என்றாள் சலிப்பான குரலில்.
“உனக்குச் சலிப்பா இருக்கா.? எவ்வளவு பேர் இந்தப் பிரச்சனையால கஷ்டப்படுறாங்க. என் கிளினிக்குகே எத்தனை பேர் வராங்க தெரியுமா? சின்னப் பொண்ணுங்க கூட வராங்க. உனக்கு அப்படி இல்லன்னு சந்தோஷப்படு.”
பின் யோசித்தவராக
“இது சரியா இருந்தாலே முக்காவாசி பிரச்சனை இல்லன்னு அர்த்தம். அதுவும் நீ சொல்ற நாள் கணக்கு ரொம்ப பர்ஃபெக்ட். இது இல்லாம வேற என்ன ஹார்மோன் பிரச்சனை.? எங்கேயாவது வலி இருக்கா என்ன…?” என மருத்துவராக ஒவ்வொன்றையும் அவர் கேட்க.
“வலியெல்லாம் எதுவும் இல்ல அத்தை.” என்றவள். வெகுவாகத் தயங்க
“இங்கே பார் வசுந்தரா. நான் இப்போ உன்னோட மாமியார் கிடையாது. ஒரு டாக்டர். என்கிட்ட எதையும் மறைக்காமல் என்ன பிரச்சனைன்னு சொல்லு.”
“அது வந்து, எனக்குச் செக்ஸுவல் டிசையர்(உடலுறவு ஆசை) அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன்.”
“எத வச்சு அப்படி சொல்ற.?”
“எனக். எனக்குத் திருப்தியாகவே முடியல. அதனால ரொம்ப கோவம் வருது யாரைப் பார்த்தாலும் எரிச்சலா இருக்கு. எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியல…”
“எவ்வளவு நாளைக்கு ஒரு முறை.?” என்ற மாமியாரின் கேள்வியைப் புரிந்து கொண்டவள்
“பத்து நாள். இல்லனா ரெண்டு, மூணு வாரம் கூட ஆகிடும்.”
“ம்ம். இத பத்தி சஞ்சய் கிட்ட பேசுனியா…?”
“இத பத்தியா.? சீச்சீ.! இல்லை, இல்லை.” என்றாள் வேகமாக.
“என்ன சீச்சீ.?” இதுபற்றி உன்னுடைய பார்ட்னர் கிட்ட பேசாம யார்கிட்ட பேசுவ. இதுல எல்லாம் வெட்கப்படவே கூடாது. இது உன்னுடைய உரிமை. சரி உனக்கு வலி இருக்குமா.?”
“ஆமா, ஆரம்பத்துல இருக்கும் அதுக்கப்புறம் இருக்காது.”
“ஹ்ம்ம். அதுக்குள்ள அங்க முடிஞ்சிடும். இது பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் ஒரு விஷயம்தான். இதைப் பற்றி வெட்கப்படவோ, கூச்சப்படவோ ஒண்ணுமே இல்ல. சில விஷயங்கள் நமக்குக் கிடைக்கலன்னா அதைக் கேட்டுப் பெறுவதில் தப்பே இல்ல. ஆவலும், ஆசையும் அடங்காததால் தான் உனக்குப் ஃபிரஸ்ட்ரேஷன் ஆகுது. கோவம் வருது, எரிச்சல் வருது.” என்றவர்,
“இதைத்தான் ஹார்மோனல் பிரச்சனைன்னு சொன்னியா. சரி, இத நான் என்னன்னு பாக்குறேன்.”
“என்ன பண்ணப் போறீங்க.?”என்று சந்தேகமாக அவள் கேட்க,
“சஞ்சய் கிட்ட பேசப் போறேன்.” என்றார்.
“ஐயையோ…! அத்தை, அது எல்லாம் வேண்டாம்.”என்றாள் பதறியவளாக.
“வேண்டாம்னா. சரி, என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு.?”
“இந்த ஆசை அடங்கிப் போய், மறுபடியும் வராத மாதிரி ஏதாவது மாத்திரை இருந்தா குடுங்க.”
“ஹேய்.! பைத்தியமா நீ.? இருபத்தி ஒன்பது வயசுல இதெல்லாம் வரலனா தான் மாத்திரை மருந்து எடுத்துக்கணும். வர்றதுக்கு எடுக்கக் கூடாது…”என்று கண்டிப்புடன் கூறியவர்.
“நீ வை, இதை என்னன்னு நான் பாக்குறேன்.”என்றபடி அலைபேசி அழைப்பை அனைத்தார்.
சொல்லிவிட்டவளுக்குத்தான் என்ன ஆகுமோ எனப் பயந்து வந்தது.
மருமகளிடம் வாக்கு கொடுத்தபடி அன்றே சஞ்சையை அழைத்துப் பேசினார் அனுபமா.
அலுவலகத்தில் வேலையில் இருந்தவனுக்கு இந்த நேரத்தில் எப்போதும் அழைக்காத அன்னை அழைத்திருப்பதை பார்த்து உடனே அட்டென்ட் செய்து காதில் வைத்தவன்
“அம்மா என்ன ஆச்சு.? எல்லாம் ஓகே தானே.அப்பா எப்படி இருக்காரு.?” என வேகமாகக் கேட்டான்.
“டேய் பொறுமையா. இப்ப என்ன அவசரம்.? மெதுவா பேசு.” என்றார் இவர் சாவதானமாக. அவரின் இயல்பான பேச்சில் மூச்சை இழுத்து விட்டவன்
“ஹ்ம்ம், இந்த டைம்ல பண்ண மாட்டீங்களே அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.” என்றவன் ஆசுவாசத்துடன்,
“சொல்லுங்க என்ன போன் பண்ணி இருக்கீங்க.?” எனக் கேட்க
“நான் உனக்கு வாட்ஸ்ஆப்ல ஒரு ஆர்டிகிள் அனுப்பி இருக்கேன் பாரு.” எனக் கூற எடுத்துப் பார்த்தவன், அது சற்று பெரியதாக இருக்க படித்துப் பார்க்க நேரம் இல்லாமல்
“என்னதுமா.?” எனக் கேட்டான் அன்னையிடமே.
“நீ படிச்சு பாக்க தான் அத அனுப்பி இருக்கேன். ஒரு வரி விடாம முழுசா படி.”
“எதுக்குமா இப்போ.?” என்றான் ‘இருக்கும் வேலையில் இது வேறா.’ என்று மனதில் நினைத்துக் கொண்டு.
“உன் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது. நீ கண்டிப்பா படிக்கணும்.” என்றவர் அலைபேசியை அணைத்து விட. லஞ்ச் பிரேக்கில் படித்துப் பார்க்கலாம்.என அவனும் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான்.
சொன்னது போல லஞ்ச் பிரேக்கில் அன்னை அனுப்பியதை எடுத்துப் படித்துப் பார்த்தான்.
அதில் முழுவதுமாகத் தன்னை நம்பி வரும் மனைவியை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி சமாளிக்க வேண்டும். மனைவியுடன் எப்படி நெருக்கமாக இருக்க வேண்டும்.அந்தரங்கத்தை எப்படி கையாள வேண்டும். அதை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்.
ஆணாகத் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், சாப்பிட வேண்டும். போன்றவைகள் அதில் நிறைந்திருந்தன.
படித்தவனுக்கு பெரும் குழப்பமே.
‘இந்த அம்மா எதுக்கு இப்படி அனுப்பி வச்சிருக்காங்க.? கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையும் பெத்துட்டேன். இப்போ எதுக்கு எனக்கு இது.?
ரெண்டு பேருக்கும் உள்ள அந்தரங்க நெருக்கம் இப்போ கொஞ்ச நாளா குறைவா தான் இருக்கு. மத்தபடி இருக்க தானே செய்யுது.’ என்று யோசித்தவன் ஒருவேளை வசுந்தரா இதைப் பற்றி ஏதேனும் அன்னையிடம் கூறியிருப்பாளோ.? என்று தோன்றியது.
‘ஆனா அம்மா கிட்ட சொல்ற அளவுக்கு அப்படி எதுவும் இருக்கிற மாதிரி தெரியலையே.’ என்ற யோசனையும் தோன்ற. இதை மனைவியிடமே கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். என்று முடிவெடுத்தவனாக. இன்னும் நீண்டு இருந்த கட்டுரையை முழுவதுமாகப் படிக்காமல் மீதமுள்ள வேலைகளைப் பார்த்துவிட்டு அன்று சற்று விரைவாகவே வீடு சென்றான்.
அன்று விரைவாக மாலையிலேயே தந்தை வந்ததில் வருணனுக்கு தான் மிகுந்த மகிழ்வு. தன் பள்ளி கதைகளைக் கூறுவதற்கு அவ்வளவு இருந்தது. இதுவரை அன்னையிடம் மட்டுமே கூறியதை இன்று தந்தையோடு கதை கதையாகச் சொல்வதில் அவ்வளவு ஆனந்தம் அந்தச் சின்ன மனிதனுக்கு.
அவன் சொல்லிய அனைத்தையும் காது கொடுத்து ரசித்துக் கேட்டவன் இப்படி வாரத்தில் ஒருமுறையேனும் விரைவாக வீட்டிற்கு வந்து மகனோடு நேரம் செலவழிக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டான். இரவு உணவு முடிந்து சிறிது நேரம் அவனைச் சிறுவர் பூங்காவிற்கு அழைத்துச் சென்று சற்று நேரம் அவனோடு ஒரு சுற்று நடை நடந்து பின் வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டிற்கு வந்த வருணன் விரைவாகவே உறங்கிவிட. வெகுநாட்களுக்குப் பிறகு பால்கனியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து மனைவியின் வருகைக்காகக் காத்திருந்தான் சஞ்சய்.
அனைத்து வேலைகளையும் முடித்து வந்தவள் சஞ்சய் பால்கனியில் வெகுநாட்களுக்குப் பிறகு அமர்ந்திருப்பதை பார்த்தவளுக்கு வெகுவான தவிப்பு. கட்டாயமாக அத்தை இவரிடம் பேசி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டாள்
திருமணம் முடிந்த ஆறு வருடங்கள் ஆகி இருந்தாலும் இன்னும் சரிக்கு சமமாகக் கணவனிடம் பேச முடியவில்லை அவளுக்கு. அவன் எவ்வளவு தான் காதல் கொண்டு அன்பாகப் பாசமாக இருந்தாலும் இவளுக்கு ஒரு விதமான தயக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது. கூட்டுக் குடும்பமாகச் சென்னையில் ஒன்றாக வாழும்போது இவள் அதிகமாக அத்தையுடனேயே நேரம் செலவழித்து அவருடனே சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு கணவனோடு தனித்திருக்கும் நேரங்கள் சொற்பமே. அதிலும் அவனே இவளிடம் ஏதாவது வம்பு வளர்த்து வெட்கப்பட செய்து சில நேரங்களில் பேசவும் வைப்பான். பின், குழந்தையென ஆன பிறகு மூவரும் ஒன்றாக நேரம் செலவழித்தாலும் ஆரம்ப கட்டத்தில் இருந்த தயக்கம் மட்டும் அவளை விட்டுச் செல்லவே இல்லை. குறிப்பாகக் கணவனிடம்.
அவள் வாழ்ந்த, வளர்ந்த சூழலும் எவ்வளவுதான் தயக்கம் மீறிக் கணவனிடம் செல்ல வேண்டும் என்று தோன்றினாலும் இயல்பான குணம் அவளைத் தடுத்தது. அதை மீற வேண்டும் எனப் பலமுறை முயற்சியும் செய்து இருக்கிறாள். சில நேரம் அதில் வெற்றியும் பெற்று இருக்கிறாள் அது மாதிரியான நேரங்களில் கணவனோடு நேரம் செலவழிப்பதில் மிகுந்த மகிழ்வும் மன நிம்மதியும் அடைந்திருக்கிறாள். பின்வரும் நாட்களில் அவன் வேலையில் பிஸியாகி விட இவளும் மறுபடியும் கூட்டுக்குள் சென்று பதுங்கிக் கொள்வாள். இப்படியாகத்தான் இவர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது தற்போது ஒன்றும் அறியாதது போல அவனிடம் பேசலாமென முடிவு செய்தவள் பால்கனிக்கு சென்று
“என்ன இங்க வந்து உட்கார்ந்துட்டீங்க.? தூங்க போகலையா.?” எனக் கேட்டபடி அவன் அருகில் நிற்க. டக்கென்று அவள் கைகளில் பிடித்து இழுத்தவன் அவன் மடியில் அமர்த்திக் கொண்டான். வெகுநாட்களுக்குப் பிறகு நிகழ்ந்த நிகழ்வு இது. திருமணமான புதிதில் அடிக்கடி இப்படி மடியில் அமர்த்திக் கொள்வான். பின், படிப்படியாகக் குறைந்து மறைந்தே போனது. தற்போது இப்படி நடக்கவும் ஜில் என்ற உணர்வு அவள் மேனியை தாக்கி வயிற்றில் ஏதோ பிறழ்வது போல மின்சார சிலிர்ப்பு ஏற்பட்டது. உடல் முழுவதும். வெகுநாட்களுக்குப் பிறகு அவள் காது மாடலில் முத்தமிட்டவன்.
“அம்மா பேசினாங்களா.?” எனக் கேட்க. “இல்லையே.” என்றாள் வேகமாக.
“ம்ம்.” என்றவன் பின், தன் வேலையில் கவனமானான்.
அன்னை அனுப்பி இருந்த கட்டுரையைப் படித்தவனுக்கு சிலது புரிந்தும் புரியாத நிலைதான்.
அவசரகதியில் இல்லாமல் ஆற அமர ரசித்து ஒரு கூடல். அவனுக்கு முழு திருப்தி. இவளுக்கு அது கிடைத்ததா என்றால் மறுபடியும் கேள்வி குறி தான். ஆனாலும் வேகம் இல்லாத கணவனின் இறுகிய அணைப்பும், ஆழ்ந்த நெடு நேர முத்தமும் அவளுக்கு ஒரு வித அமைதியையும் மகிழ்வையும் சேர்த்தே கொடுத்திருந்தது.
இப்படி சின்ன சின்ன விஷயங்களில் திருப்திப்பட்டு மகிழ்ந்து கொள்வது தானே பெண்களின் வழமை. (எழுத்தாளரான என் கருத்து)
மகனுக்கு அனுப்பிய கட்டுரையை அவன் படித்தானா என்றும் அனுபமா கேட்கவில்லை. மருமகளிடமும் இப்போது மகனின் அணுகுமுறை எப்படி உள்ளது என்று கேட்கவில்லை. இருவருக்குமே அவர்களுக்கான நேரத்தைக் கொடுத்தவர் சில நாட்களுக்குப் பிறகு தெரிந்து கொள்ளலாம் மருமகளிடம் பேசியென முடிவு செய்து கொண்டார்.
இங்குச் சஞ்சய் மற்றும் வசுந்தராவின் வாழ்க்கையில் எந்தச் சலசலப்பும் இல்லாமல். தெளிந்த நீரோடை போலத் தான் பயணித்துக் கொண்டிருந்தது. வசந்தராவுக்கும் சில நாட்கள் தொடர்ந்த கணவனின் அனுசரிப்பில் மகிழ்வுடன் தான் இருந்தாள். வேண்டியது முழுவதுமாகக் கிடைக்காவிட்டாலும் இவளின் மேல் உண்டான சிறு கவனமும் சற்று நிம்மதியை தந்தது. இரு வாரங்களுக்கு இந்த நிலை நீடித்திருந்தது. பின்பு மறுபடியும் அவனுக்கு வேலையில் அழுத்தம் கூடப் பழைய குருடி கதவைத் திறடி என்ற சொற்றொடர்க்கு ஏற்ப மறுபடியும் அதே நிலை ஆரம்பித்தது.
பத்து நாட்களுக்குப் பிறகு வசுந்தராவிற்கு அழைத்தார் அனுபமா. அவள் குரலில் எந்தத் துள்ளும் இல்லை. அதே சலிப்பும் சடவும் தான்.
“எப்படி இருக்கீங்க எல்லோரும்.?” “இருக்கோம் அத்தை.” என்றாள் விட்டேற்றியாக.
“என்னாச்சு.?எந்த முன்னேற்றமும் இல்லையா.?”எனக் கேட்டார் அவளைப் புரிந்தவராக.
“நீங்கப் பேசுனதுக்கு அப்புறம் ஒரு நாலஞ்சு நாள் நல்லா தான் இருந்தது. நல்லா இருந்ததுனா எல்லாமேன்னும் சொல்ல முடியாது. ஆனாலும் மனதுக்கு இதமா மகிழ்வாய் இருந்தது.”
“இப்ப என்ன ஆச்சு.?”
“என்ன ஆகணும்.? அதே கதை தான்.”
“நான் பேசினேன்னு அவன் சொன்னானா.?”
“இல்ல, இல்ல நான் உங்ககிட்ட பேசினேனான்னு கேட்டாரு. இல்லவே இல்லைன்னு சொல்லிட்டேன்.ஆனா அவர் நடந்து கிட்ட விதத்துல நீங்க அவர்கிட்ட பேசி இருப்பீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடிந்தது. சரிதானே.” எனக் கேட்க.
“ஒரு அம்மாவா எதையும் அவன்கிட்ட நான் பேசல. ஒரு டாக்டரா என்ன அட்வைஸ் கொடுக்கணுமோ அதைக் கொடுத்தேன். சரி பார்க்கலாம்…”
“அட போங்க அத்தை. இனி என்ன பார்க்கிறது.? தயவு செஞ்சு கேட்கிறேன். எனக்கு இந்தப் பீலிங்கே வரக் கூடாது. அதுக்கு ஏதாவது மாத்திரை இருந்தா தாங்க.நிஜமாவே ரொம்ப கொடுமையா இருக்கு. நீங்கச் சொன்ன மாதிரி உங்களை நானும் டாக்டராவே நினைச்சு பேசுறேன். ரொம்ப வலிக்குது. சில நேரம் நான் ஆழ்ந்த தூக்கத்துல இருக்கும்போது திடீர்னு நடக்கும். முதல்ல எனக்கு ஒண்ணுமே புரியாது. புரிஞ்சி நானும் ஒன்றலாம்னு நினைக்கும்போது எல்லாமே முடிஞ்சிருக்கும். அப்ப வரும் பாருங்க ஒரு ஆத்திரம். நான் பாட்டுக்குத் தூங்கிட்டு தானே இருந்தேன் அப்படின்னு கேட்கத் தோணும். ஆனா கேட்க முடியல…”
“அதுதான் ஏன் முடியலைன்னு நானும் கேட்கிறேன்…? உன் புருஷன் தானே. கேட்க வேண்டியதுதானே.”
“அந்த அளவுக்கு எல்லாம் கேட்க முடியல அத்தை என்னால.”
“அப்ப என்கிட்ட மட்டும் பேச முடியுது.”
“நீங்க வேற.” என்றாள் இழுவையாக.
“இது என்னடி அநியாயமா இருக்கு. கட்டின புருஷன் கிட்ட சொல்ல முடியல. ஆனா மாமியார் காரி கிட்ட சொல்ல முடியாது…”
“நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே. நீங்க எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவர்னு. அதுவும் இல்லாம இப்ப நீங்க டாக்டரா தான என்கிட்ட பேசுறீங்க. நானும் ஒரு டாக்டர் கிட்ட சொல்றதா நினைச்சு தான் உங்ககிட்ட சொல்றேன்.”
“சரி பொறுமையா இரு.என்னனு பார்க்கலாம்.”
“அய்யய்யோ.! அத்தை, இதுக்கு மேல கட்டாயமா எனக்குப் பொறுமை இல்லை. போதும் போதும் என்கிற அளவுக்கு வலியையும் கோபத்தையும் அனுபவிச்சதுதான் மிச்சம். இந்தப் பீலிங் எனக்கு வரக் கூடாது. அதுக்கு ஏதாவது பண்ணுங்க. இத அடியோடு குறைக்கிற மாதிரி வீரியமா ஏதாவது மாத்திரை குடுங்க…”
“என்னடி பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க. கோவம் வந்துரும் எனக்குச் சொல்லிட்டேன். இப்பதான் உனக்கு முப்பது வயசு ஆகப்போகுது இன்னும் கேட்டா, முப்பது வயசுக்கு மேல தான் இந்த உணர்வுகள் அதிகமா வரும். குறிப்பா பெண்களுக்கு. ஆனா முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல் சில ஆண்களுக்குக் குறைய ஆரம்பிச்சிடும். சிலருக்கு இல்லாமலே கூடப் போயிடும். அது அவங்க, அவங்க டென்ஷன் குடும்ப சூழ்நிலை பொருத்து. சஞ்சய் இப்ப இப்படியான ஒரு மனநிலை தான் இருக்கான்னு நினைக்கிறேன். நான் அவன்கிட்ட பேசி இதுக்கு என்ன பண்றதுன்னு பார்க்கிறேன்.”
“ஐயோ.! அத்தை ப்ளீஸ். புண்ணியமா போகும்.நீங்க எதுவுமே பேச வேண்டாம். இதுக்கு ஒரு தீர்வு இருக்கா.? இல்லையா.? அத மட்டும் சொல்லுங்க? இந்தப் பீலிங்ஸ். வராமல் தடுக்கிற மாதிரி ஏதாவது மருந்து குடுங்க. இல்லனா நானே கூகுள்ல இதுக்கு ஏதாவது மருந்து இருக்கான்னு பாத்து போட்டுக்குவேன்…”
“ஹேய் லூசாடி நீ. கூகுள்ல பார்த்து யாராவது மருந்து சாப்பிடுவாங்களா.? அதையும் ஒரு டாக்டர் கிட்டயே சொல்ற.ஹ்ம்ம்.” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.
“நான் அப்புறம் பேசுறேன் நீ ஃபோன வை.” என்று அலைபேசியை துண்டித்தவர். கணவனுக்கு அழைத்து இன்னும் இரு நாட்களில் மகன் வீட்டிற்கு செல்ல வேண்டும். அதற்கு விமான சீட்டை உடனே பாருங்கள். என உத்தரவாகக் கூறிவிட்டு கோபத்துடன் அமர்ந்திருந்தார்.
ஒருவிதமான சஞ்சலத்துடன் இருந்தது மனது வசந்தராவிற்கு. ஒரு மருத்துவராகக் கருதி அத்தையிடம் தன் மனக் குமுறல்களை கொட்டி விட்டாலும், என்னதான் இருந்தாலும் அவர் தன் கணவனின் அம்மா. தனக்கு மாமியார். அவருடன் அவளுக்கு இருந்த ஒட்டுதல் அதிகம் என்றாலும் யோசித்து பேசி இருக்கலாமோ என்ற சிந்தனை.
வீட்டிலேயே அடைந்து கிடந்தால் இன்னும் தேவையில்லாதவைகளை யோசிக்க தோன்றும் என நினைத்தவளாகச் சற்று நேரம் நடந்து வரலாம் என்று நினைத்தவள், வீட்டிற்கு தேவையான சில பொருட்களையும் வாங்க வேண்டி இருப்பதால் அதற்கான பைகளை எடுத்துக்கொண்டு நடந்தவள் தங்களின் கட்டிட வளாகத்தைத் தாண்டி வெளியில் வந்திருந்தாள். சமீபமாகத் தான் இவர்கள் வளாகத்தின் அருகில் ஒரு ஐந்து மாடி டிபார்ட்மென்டல் ஸ்டோர் திறந்திருந்தார்கள். அதைச் சென்று பார்க்க வேண்டும் என நினைத்தவளுக்கு தற்போது இதையே ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு அங்குச் சுற்றிவர முடிவெடுத்தவள் அதை நோக்கி நடந்து சென்றாள்.சற்று தூரம் தான் இருந்தாலும் மனதிலிருந்து சிந்தனைகள் அவளின் நடையை நிறுத்தவில்லை. பல்வேறு குழப்பங்களுடன் நடந்தவளுக்கு தூரமும் தெரியவில்லை.
உள்ளே சென்றுவள் ஒவ்வொரு மாடியாகச் சுற்றிக் கொண்டிருந்தாள். இதுவரை ஒரு பொருளையும் வாங்கவில்லை. ஆனாலும் ஒவ்வொரு பொருளாக எடுத்துப் பார்த்துக் கொண்டு நகர்ந்தவளை திடீரென,
“ஹேய் வசுந்தரா.” என அழைக்கும் குரல் கேட்டு, ‘யாரது இங்குத் தன்னை அழைப்பது.?’ என்ற சிந்தனையுடன் திரும்பிப் பார்த்தவள் சற்று தொலைவிலிருந்து ஒரு பெண் வேகமாக வருவதை பார்த்தாள். அவள் கிட்ட நெருங்க, நெருங்க எங்கோ இவளைப் பார்த்தது போல் இருந்தது அவளுக்கு.
“வசுந்தரா எப்படி டீ இருக்க.?” என அருகில் வந்து தன் கைகளைப் பிடித்து முகம் முகம் கொள்ளா புன்னகையுடன் கேட்ட பிறகே யார் என்ற அடையாளம் தெரிந்தது அவளுக்கு. யார் என்று தெரிந்த பிறகு அவளின் ஆரவாரம் இவளையும் தொற்ற,
“ஹேய் கவல் எப்படி இருக்க.?” என்றாள் இவளும் புன்னகையில் முகம் விகாசிக்க.
“நீ எங்கடி இங்க.? சென்னைய விட்டு இவ்வளவு தூரத்தில.?” எனக் கேட்க “ஹஸ்பண்டுக்கு மாற்றல் ஆயிடுச்சு.”
“ஓஹ் கல்யாணம் ஆயிடுச்சா.?”
“அஞ்சரை வயசுல ஒரு பையன் இருக்கான.” என்றாள் புன்னகை மாறாமல்.
“ஓஹ்.” என்று கேட்டுக் கொண்டாள் அவளும். அவள் கவல் ப்ரீத். பஞ்சாபி. வசந்தராவுடன் ஐந்தாம் வகுப்பில் வந்து இணைந்து கொண்டவள். அவள் தந்தைக்கு இந்தியன் ரயில்வேயில் வேலை. அதனால் ஊர் மாறிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இவள் வந்து சேர்ந்தது தான். வகுப்பறையில் தனியே அமர்ந்திருந்த வசுந்தராவின் பக்கத்தில் வந்து அமர்ந்தவள். அன்றிலிருந்து அவளோடு நட்பாகி கொண்டாள். அனைவரோடு ஒதுங்கியே பழகும் வசுந்தராவுக்கு இவளை விட்டு ஏனோ ஒதுங்கத் தோன்றவில்லை. அதிலிருந்து இருவருமே இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள். பத்தாம் வகுப்புவரை இவர்களின் நட்பு தொடர்ந்தது. பின் கவல் பிரீத்தின் தந்தைக்கு மாற்றல் ஆகிவிட வேறொரு ஊருக்குச் சென்று விட்டார்கள். அத்துடன் இவர்களின் நட்பும் முடிவுக்கு வந்திருந்தது. ஆனால் ஒன்றாக இருந்த அந்த ஐந்து வருடமும் உற்ற தோழியராக இருந்தனர். வீட்டில் தன்னை ஒதுக்கி வைப்பதை பற்றி மனம் தாளாமல் அந்தச் சின்ன வயதில் இவளோடு பகிர்ந்திருக்கிறாள் வசுந்தரா. அப்போதெல்லாம் இவளுக்குத் தைரியம் சொல்லி எதிர்த்துப் பேசு என்ற கோபத்துடன் வாதாடச் சொல்லிக் கொடுப்பாள். சரி என்ற தலையாட்டிக் கேட்டுக் கொள்பவள் வீட்டு வாசலை மிதிக்கும் போதே அதை மறந்து விடுவாள். மறுநாள் அதற்காகத் திட்டும் வாங்கிக் கொள்வாள் வசுந்தரா.
இப்படி கடந்த கால நினைவுகளை நினைத்துக் கொண்டே இருவரும் ஐந்தாம் தளத்தில் இருந்த ஃபுட் கோர்ட்டுக்கு வந்திருந்தார்கள்.
“நீ இந்தக் கடைக்கு அடிக்கடி வருவியா.?” என்ற கவலின் கேள்விக்கு.
“இன்னைக்கு தான் முதல் முறை வரேன். இப்ப சமீபமா தானே ஆரம்பிச்சாங்க.”
“ஆரம்பிச்சு மூணு மாசம் ஆகுது டி. நான் இதுவரைக்கும் மூணு முறை இங்க வந்துட்டேன். இங்கே இருந்து கொஞ்ச தூரத்தில் தான் என் வீடு இருக்கு. அலுவலகம் முடிந்து இந்த வழியா தான் போவேன். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு போயிடுவேன். நீ எங்க இருக்க.?” எனக் கேட்க. அவர்கள் கட்டிட வளாகத்தின் பெயரைக் கூற
“ஓ.! அங்கையா சரி, சரி.” எனக் கேட்டுக் கொண்டாள் இவளும்.
“நீ வேலை பாக்குறியா.?” என்ற வசுந்தராவின் கேள்விக்கு
“ஆமா, வேல பாக்கலனா பூவாக்கு என்ன செய்யறது.” என்றுசிரிப்புடன் கூற,
“ஏன் உன் புருஷன் இல்லையா.?”
“புருஷனா.? அவன் எதுக்கு.? ஓஹ் சோறு போடவா.? அவன்லாம் இல்ல. ஏன்னு கேட்காத அது ஒரு பெரிய கதை இன்னொரு நாள் பொறுமையா சொல்றேன்.”என்றாள் வேகமாக அவள் கேட்பதற்கு முன்பே.
“சரி, நீ என்ன செய்ற.” எனக் கேட்க “வீட்ல தாண்டி இருக்கேன். பையனையும், புருஷனையும், வீட்டு வேலையும் பார்க்கவே சரியா இருக்கு. ஆனா இப்போ கொஞ்ச நாளா மனசு எதிலுமே போக மாட்டேங்குது.” எனத் தன் நீண்ட கால நட்பைப் பார்த்ததும், தன்னையும் அறியாமல் மனதில் இருப்பதை கூற தொடங்கினாள்.
“ஏன்.? என்னாச்சு.?” என்ற அவளின் கேள்வியில் சற்று தெளிந்தவள். “ஒன்றும் இல்லை. ஹஸ்பண்டும், பையனும் காலையில கிளம்பி போயிடுவாங்க. அதுக்கப்புறம் ஒன் அவர்ல வேலை எல்லாம் முடிச்சிடுவேன். அதுக்கப்புறம் பெருசா செய்ய எதுவும் இருக்காது எனக்கு.”
“அது சரி, நீ சந்தோஷமா இருக்க இல்ல.? உன் ஹஸ்பண்ட் எப்படி.? உன்ன ஹேப்பியா வச்சிருக்காரா.?”
“என் ஹஸ்பண்ட் ரொம்ப ரொம்ப நல்ல டைப். என்னை ரொம்ப ஹேப்பியா வச்சிருக்கார்.” என்றாள் உணர்ந்து.
“ஆமா நீ என்ன படிச்சிருக்க.? எனக் கேட்டாள் கவல்.
“பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி. .”
“வாவ் டீ, சூப்பர். நானும் அதே தான்.” என்று அவளோடு கைதட்டி கொண்டாள்.
“அப்ப நீ வேலை பார்க்கலாமே. எங்க கம்பெனியிலேயே வேக்கன்சி இருக்கு. வேணும்னா சொல்லு நான் பேசுறேன்…” எனக் கேட்க
“வேலையா.? ஐயையோ.! அதெல்லாம் சரி வராது டி.” என்றாள் வேகமாக
“ஏன் சரி வராது.? வீட்டில் போரடிக்குதுன்னு சொல்ற இல்ல. நேரமும் உனக்கு நிறைய இருக்கு.
அப்புறம் என்ன.”என்றாள் இவளும் விடாமல்.
“இல்லடி அதெல்லாம் சரி வராது.” என்றவள், பின் வெகுநேரமாகியதை உணர்ந்து
“சரி டி. நான் கிளம்புறேன். உன்னைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். கட்டாயமாக நீ எங்க வீட்டுக்கு வரணும்.” என்று அவள் வீட்டின் எண் மற்றும் பிளாக்கை கூறிவிட்டு. இருவரும் அலைபேசி எண்களையும் மாற்றிக்கொண்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
வரும்போது இருந்த மனநிலைக்கு மனம் இப்போது சற்று தெளிந்து, நிம்மதியுடன் லேசாகவும் இருந்தது வசுந்தராவிற்கு.
மகன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் உடனே டிக்கெட் பாருங்கள் என்று அனுபமா கூறி விட, பேரனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் மறுநாள் நள்ளிரவில் இருந்த விமானத்திற்கு பயணச்சீட்டை எடுத்து இருந்தார் பிரபு.
பள்ளிக்கால நெருங்கிய தோழியைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த வசுந்தராவிற்கு மனம் மகிழ்வாக இருந்தது. வெகுவருடங்களுக்குப் பிறகு அவளைச் சந்தித்து பேசியதில் மனதில் இருந்த சஞ்சலங்கள் மறைய இலகுவாகவே சுற்றிக் கொண்டிருந்தாள். இந்த இதமான மனநிலை மறுநாளும் நீடித்தது.
எப்பொழுது போலக் காலை ஐந்து மணிக்கு அடித்த அலாரத்தில் எழுந்த வசந்தரா வேகமாகக் காலை உணவையும் மதிய உணவையும் சமைக்க ஆரம்பித்தாள். காலை உணவாக இட்லியும் புதினா சட்னியும் செய்தவள் மதிய உணவிற்கு மகன் விரும்பிக் கேட்ட வெஜிடபிள் புலவை தாளித்துக் கொண்டிருக்கும்போது வீட்டின் அழைப்பு மணி அடித்தது. கணவன் குளியல் அறையில் இருக்க, அப்போதுதான் மகனை எழுப்பி விட்டு வந்திருந்தாள். அழைப்பு மணியின் சத்தத்தில்
‘இந்நேரத்துக்கு யாரு.?’ என யோசித்தபடி கதவைத் திறக்க. ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் அப்படியே நின்று விட்டாள் சில நொடிகள்.
“வழிவிடுறியா மா.?” என மாமனார் கேட்ட பிறகே சுயத்துக்கு வந்தவள்.
“வாங்க மாமா.” என்று வேகமாக அவரை வரவேற்று விட்டு. அனுபமாவை கட்டி அணைத்தவள்.
“அத்தை, முந்தா நாள் பேசும்போது கூட வரேன்னு சொல்லவே இல்ல. செம ஷாக் குடுக்குறீங்க. ஆனா ஸ்வீட் சர்ப்ரைஸ்.” என்றாள் உளமாற.
“நீ பேசின பேச்சுக்கு நேத்தே வந்து இருப்பேன். டிக்கெட் கிடைக்கல. அதான் இன்னைக்கு விடிஞ்சும் விடியாமல் வந்து நிற்கிறோம்.” என்றார் அவளை விலக்கியபடி.
“ஏன் அத்தை கோவமா.?”
“பின்ன, நீ பேசுனதுக்கு கொஞ்சம்வாங்களா.!”
“சரி, சரி கொஞ்சனுமோ.?திட்டனுமோ.? அதெல்லாம் அப்புறம். இப்ப உள்ள வாங்க.”என்றபடி அவரை உள்ளே அழைத்துச் செல்ல. இவர்களின் சத்தத்தில் சஞ்சையும் வெளியில் வந்திருந்தான்.
“வாங்க மா வாங்கப்பா.” என்றவன் அன்னையை லேசாக அனைத்து விடுவித்து.
“என்ன சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க.” எனக் கேட்டான்.
“உங்க அம்மா டிக்கெட் பாருங்க போகணும்னு ஆர்டர் போட்டா. எனக்கும் வருணனை பார்க்கணும் போல இருந்துச்சு. நீங்களும் வந்து கிட்டத்தட்ட அஞ்சு மாசத்துக்கு மேல் ஆகுது. லீவு எல்லாம் நமக்குக் கிடைக்காது. நாமளா எடுத்துக்கிட்டா தான் உண்டுன்னு அர்த்த ராத்திரியில் கிளம்பின விமானத்துல டிக்கெட் போட்டு வந்து சேர்ந்துட்டோம்.” என்றவர்
“எங்க என் பேரனை.?”என்று கேட்டபடி அவன் தூங்கும் அறைக்குள் நுழைய “தாத்தா.” என்ற சத்தம் சத்தமாகக் கேட்டது. அத்துடன்
“அம்மா நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவு.” என்ற சத்தமும் சேர்த்து கேட்டது.
சந்தோஷ மிகுதியில் கூச்சலிட்டபடி தாத்தனின் முதுகில் தொங்கிக் கொண்டு வந்தவன் அனுபமாவை பார்த்தவுடன்
“பாட்டி.” என்று மற்றொரு கூக்குரலோடு அவரிடம் தாவினான்.
சில நிமிடங்கள் அவர்களோடு அமர்ந்திருக்க அனுமதித்த வசுந்தரா பின்
“வரு குட்டி. கிளம்பு, ஸ்கூலுக்கு நேரமாச்சு. தாத்தா, பாட்டி இங்க தான் இருப்பாங்க. சாய்ந்திரம் வந்து விளையாடலாம்.” எனக் கண்டிப்புடன் கூற, பாவமாகத் தனக்கு உதவ யாரும் வரமாட்டார்களா.? எனத் தந்தை, தாத்தா, பாட்டியைப் பார்த்தவனை பார்த்த பெரியவர்களுக்கும் பாவமாகத்தான் இருந்தது.
ஆனால், அனைவரும் படிப்பின் முக்கியத்துவத்தை புரிந்தவர்களாக இருக்க. அனாவசியமான விடுமுறைகள் நல்லதல்ல என அவனுக்கு விளக்கி விடும் நோக்கத்தில் அவனைத் தூக்கி பிரபு.
“இங்க பாரு சின்னக் குட்டி. தேவையில்லாம ஸ்கூல் லீவ் போடக் கூடாது சரியா.? விடுமுறைகளையெல்லாம் எப்பவுமே சேமிச்சு வைக்கணும். அப்பொழுது தான் நமக்குத் தேவைப்படும்போது எடுக்க முடியும். நீ ஸ்கூலுக்கு போயிட்டு வா. நீ வந்தபிறகு நம்ம ஜாலியா விளையாடலாம். வெளியில ஒரு ரவுண்டு போகலாம். பாட்டியும் தாத்தாவும் இங்க தான் இருப்போம். டென் டேஸ் இருப்போம்.” என அவனைச் சமாதானம் செய்தபடி கூற. எப்போதும் வளாகத்திற்குள் விளையாடும் பிள்ளைக்கு இன்று வெளியில் செல்வோம் என்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.
“ஹய் ஜாலி.! நான் சீக்கிரம் போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன்.” என்று, குதித்தபடி கூறியவன். கிளம்பி வர ஓடினான் அன்னையோடு.
பத்து நாட்கள் இங்கு இருப்பதாக மகனிடம் கூறிய தந்தையை யோசனையுடன் புருவம் தூக்கி பார்த்தான் சஞ்சய். கிளினிக் இருப்பதாலும் இருவரும் ஒன்றாகவே வந்து விடுவதாலும் அதிகப்பட்சம் நான்கு நாட்களுக்கு மேல் தாங்காதவர்கள் இன்று பத்து நாட்கள் தங்கப் போவதாகக் கூறியது அதிசயமாக இருந்தது அவனுக்கு. அதே பார்வையுடன் அன்னையை பார்க்க இவனுக்கு மேலாக ஏதோ பலமான யோசனையில் அமர்ந்திருந்தார் அவர்.
அன்னையின் அருகில் அமர்ந்தவன்,
“என்னம்மா பலமான யோசனை.?”எனக் கேட்க
“ஒன்னும் இல்ல. நீ ஆபீஸ் போயிட்டு வா. வந்து பேசலாம்.”என்றார் அவனின் கேள்விக்குப் பதிலாக. சில நாட்களுக்கு முன்பு தாய் தனக்கு அனுப்பிய கட்டுரை ஞாபகம் வர அது தொடர்பாக ஏதேனும் பேச வந்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது சஞ்சய்க்கு. ஆனால் அதில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பதுதான் புரியவில்லை அவனுக்கு. மகன் கிளம்பி வர அனைவருக்கும் டாடா காட்டிவிட்டு கிளம்பினார்கள் இருவரும்.
தாய் தந்தை வந்திருப்பதால் அன்று நேரமாகவே வீட்டிற்கு வந்திருந்தான் சஞ்சய். இரவு உணவிற்கு பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.
“ஏன் சஞ்சய்.? வசுந்தரா வேலைக்குப் போகலாமா.” என அனுபமா கேட்க “ஏன் திடீர்னு இப்படியொரு கேள்வி.?” எனப் புரியாமல் கேட்டான் சஞ்சய். விளையாடிக்கொண்டே இவர்கள் பேசுவதையும் கவனித்து கொண்டு இருந்த வருணனும்
“ஆமாம்பா. அம்மா வேலைக்குப் போனா சூப்பரா இருக்கும். என் பிரண்ட்ஸோட அம்மா எல்லாம் போறாங்க.” எனக் குதித்தபடி கூற,
“நீ இன்னும் பதில் சொல்லலையே.?” எனக் கேட்ட தாயைப் பார்த்தவன். “இதுல நான் பதில் சொல்ல என்னம்மா இருக்கு. அவளுக்கு வேலைக்குப் போக விருப்பமா இருந்தா தாராளமா போகட்டும்.ஆனா இதுவரைக்கும் ஒரு முறை கூட என்கிட்ட அப்படி சொன்னதில்லையே. இப்ப என்ன திடீர்னு.?” எனக் கேட்டபடி மனைவியைப் பார்த்தான்.
“இப்போதான் அவளுடைய பள்ளி கால தோழியைச் சந்திச்சிருக்கா. அவதான் இவ படிச்ச படிப்பைக் கேட்டுட்டு அவ வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே வேலை காலி இருப்பதாகச் சொல்லி இருக்கா. நீங்க ரெண்டு பேரும் கிளம்பி போனபிறகு அவ தனியா தான இருக்கா. வேலைக்காவது போயிட்டு வா என்று நான் தான் சொன்னேன். ஆனா அவ உங்க ரெண்டு பேரையும் நினைச்சு ரொம்ப தயங்குறா. உன் புள்ள சந்தோஷமா அனுமதி கொடுத்துட்டான் இனி நீ தான் சொல்லணும்.”
“இத சொல்றதுக்காகத் தான் நீங்க ஊர்ல இருந்து வந்தீங்களா…?” எனத் தாயைப் பார்த்துக் கேட்டவன். பின், மனைவியை முறைத்தபடி.
“ஏன் என்கிட்ட எதையுமே சொல்லமாட்டாளா.? உங்க மூலமா தான் எல்லாம் எனக்குத் தெரிய வரணுமா…? இங்க ஸ்கூல் ஃப்ரெண்ட பார்த்திருக்கா, பேசி இருக்கா அதைப் பற்றி என்கிட்ட சொல்லல. அவங்க வேலைக்குக் கூப்பிட்டு இருக்காங்க.அதைப் பற்றியும் என்கிட்ட சொல்லல. எல்லாமே உங்ககிட்ட தான் சொல்லுவானா அப்ப நான் யார் அவளுக்கு.” எனக் கோபத்தை அடக்கிய குரலில் கேட்கப் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவிற்கு தான் நடுங்கியது.
“டேய் எனக்கு இங்க வந்தபிறகு தான் தெரியும். உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்னா அதுக்கான நேரத்தை அவளுக்கு நீ குடுக்கணும். குடுத்தியா.? முந்தா நாள் தான் அந்தப் பிரண்டை மீட் பண்ணி இருக்கா. ஆபீஸ்ல இருந்து வந்தபிறகு அவளோட நீ டைம் ஸ்பென்ட் பண்ணி இருந்தினா கட்டாயமா இது எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லி இருப்பா. ஆனா நீ தான் லேட்டா வீட்டுக்கு வர. வந்த அலுப்புல தூங்கிடுற. அப்புறம் எப்படி அவ உங்ககிட்ட சொல்ல முடியும். இதுல அவ எதுவும் சொல்றதில்லைன்னு கோவம் வேற படுற. அவ சொல்றதுக்கான வாய்ப்பை அவளுக்குக் கொடு. வேலை முக்கியம் தான். அதோட குடும்பமும் ரொம்ப முக்கியம்.”என்ற அன்னையின் சரமாரி கேள்வியில்.
“இப்ப நான் என்னம்மா குடும்பத்தைப் பாக்காம போயிட்டேன்.” என்றான் இவனும் கோபத்துடன்.
“என்ன வேணா செஞ்சுக்கலாம்னு அவளுக்கான சுதந்திரத்தை கொடுத்து இருக்கேன். மாசம், மாசம் அவ அக்கவுண்ட்ல பணம் போடுறேன். இதுவரைக்கும் அந்தப் பணத்தை என்ன செஞ்சிருப்பானு கேள்வி கூடக் கேட்டதில்லை.”என்றான் அவளைப் பார்த்தபடி.
“டேய் பணம் கொடுக்கிறதும் கேள்வி கேட்காமல் இருப்பதும் மட்டும் போதுமா.? குடும்பம் நடத்த…? ரெண்டு பேருக்கும் புரிதல் இருக்கணும். அன்னியோன்யம் இருக்கணும். அது இருக்கா உங்க ரெண்டு பேர் கிட்டயும்.” என்றவரின் கேள்வியில் சஞ்சய் அமைதியாக வசந்தராவிற்கு அங்கு நிற்க முடியவில்லை, மாமனாரின் முன்பு. சூழ்நிலையை இலகுவாக்க பிரபு, வருணனிடம்.
“சின்னக் குட்டி. இவங்க எல்லாம் ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்காங்க. வா, நம்ம கீழ போய் விளையாடுவோம்.” என அவனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
“நீ உன் மனைவிக்குச் சுதந்திரம் கொடுக்கிற, அவள் தேவைக்கு அவ கேட்காமலேயே பணம் கொடுக்கிற, பாசமா தான் இருக்க. அதெல்லாம் குறைவில்லை. ஆனால் தாம்பத்தியம்.” என அனுபமா ஆரம்பிக்கும்போதே தன் அறைக்குள் சென்று மறைந்திருந்தாள் வசுந்தரா.
தங்களின் அந்தரங்கத்தை பற்றி அன்னை பேசவும், ஒரு மாதிரி கூச்சமாக இருந்தது அவனுக்கு. அவன் கூச்சத்தை புரிந்து கொண்ட அனுபமா.
“அம்மாவா என்னைப் பாக்காத. ஒரு டாக்டரா பாரு. நானும் ஒரு மருத்துவராகத் தான் உன்கிட்ட பேசுறேன். நான் சொன்ன எல்லாத்தையும் நானோ உன் மகனோ உன் மனைவிக்குக் கொடுத்திட முடியும். ஆனால் தாம்பத்தியம் நீ மட்டும்தான் கொடுக்க முடியும்.”
“அதைக் கொடுத்துவிட்டு தான் இருக்கேன் அதுல என்ன இப்ப குறை வந்துருச்சு.”என்று அன்னையை நிமிர்ந்து பார்க்காமல் கேட்டவனை பார்த்தவர்,
“குறை தான் வந்துடுச்சு. அதனாலதான் என்கிட்ட வந்து இருக்கு.”
“உங்ககிட்ட சொன்னாளா.?”
“அவளா சொல்லல நானா தெரிஞ்சுகிட்டேன்.உனக்கு மட்டும் திருப்தி கிடைச்சா போதாது.நம்ம பார்ட்னருக்கும் அது கிடைத்திருக்கான்னு பாக்கணும். அப்படி கவனித்தாலே குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.” என்ற அன்னையிடம்.
“இனி முயற்சி செய்கிறேன்.” என்றபடி தன் அறையை நோக்கிச் சென்றான்.
அறைக்குள் நுழைந்தவன் அலமாரியை திறந்து வைத்து ஏதோ செய்து கொண்டிருந்த வசுந்தராவின் அருகில் சென்று, அவள் கைப்பிடித்து இழுத்து தன்னை நோக்கித் திருப்பினான்.
“ஏன்.? எதையும் என்கிட்ட சொல்ல மாட்டியா நீ.?” என்று வெளியில் கேட்டதையே மறுபடியும் கேட்டவன்.
“நீ எங்கடா எனக்கு நேரம் கொடுத்தன்னு.? எங்க அம்மா கேட்ட அதே கேள்வியைக் கேட்கப் போறியா.?” என்று சேர்த்து கேட்டான்.
இல்லை என்பதாக வெல்வேகமாகத் தலையசைக்க,
“நமக்குக் கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட ஏழு வருஷம் ஆகப்போகுது. இன்னும் தயக்கம் மீறி உன்னால பேச முடியல என்கிட்ட. ம்ம். எப்பதான் நீ மாறப் போறேன்னு நானும் பாக்குறேன்.” என்றவன்
“வேலைக்குப் போறியா.?” என்று கேட்டவனை பார்த்தவள், தயக்கம் மீறி இயல்பாகப் பேசச் சொல்பவனை பார்த்தபடியே,
“போறேன்.” என்றாள்.
அவளை இழுத்து பக்கபாட்டாக அணைத்தவன்
“இப்படி உன் மனசுல நினைக்கிறத என்கிட்ட சொல்லு. அப்பதான் எனக்கும் தெரியும். புரியுதா.?” எனக் கேட்க. ஆம் எனத் தலையசைத்துக் கொண்டாள்.
“நானும் இனி வீட்டுக்குச் சீக்கிரம் வரப் பார்க்கிறேன் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்றேன்.” என்றவன் கூடுதலாக,
“எங்க அம்மா சொன்னதையும் ஞாபகம் வச்சிக்கிறேன்.” என்றபடி அணைப்பை இருக்கிறான். பின்,
“உன்ன சரியா கவனிக்கிறது இல்லையா.? இனி நல்லாவே கவனிச்சுடறேன்.”என்றபடி மேலிருந்து கீழாகப் பார்வையை நகர்த்த, அவன் பார்வையில் இவள் தான் குப்பெனச் சிவந்தாள். அவன் சொன்னதின் ஆரம்பமாக அவள் இதழ்களில் ஆழ்ந்து, நீண்ட முத்தமிட்டு விலக. மயங்கி நின்ற பெண்ணவளுக்குத்தான் கண்களைத் திறக்க முடியவில்லை.
அவள் நெற்றி முட்டி, மூச்சு வாங்கியவன்.
“உன் பிரண்டு கிட்ட பேசி டிடைல்ஸ் வாங்கு. அந்த வேல உனக்குச் செட்டாகுமானு பாரு. இல்ல வேற ஏதாவது வேலை கூடப் பார்க்கலாம். சரியா.? இனி எதுவா இருந்தாலும் என் கிட்டயே சொல்லு எங்க அம்மா கிட்ட சொல்லி என்னை அடி வாங்க வைக்காத. கொஞ்சம் கூட யோசிக்காமல் அவ்வளவு தூரத்திலிருந்து கிளம்பி வந்துடுவாங்க. என்னை லெஃப்ட் ரைட் வாங்க” என்று இலகுவாகக் கூற, கேட்டவளுக்கும் புன்னகையில் உதடு துடித்தது.
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
+1


