
அத்தியாயம் – 19
“நீ என்னை கல்யாணம் கூட பண்ணிக்க வேணாம், என்கூடவே இருந்தா மட்டும் போதும், உன்னை நான் மனைவி ஸ்தானத்துல நிறுத்த மாட்டேன், கணவனா மனைவிக்கிட்டருந்து எதிர்பார்க்கிற எந்த ஒரு விஷயத்தையும் எதிர்பார்க்க மாட்டேன், நீ நீயாவே இருக்கலாம், உன்னை பத்திரமா பார்த்துகிறேன், ப்ளீஸ் ஸ்ரீ, என்கூடவே இருக்கேன்னு சொல்லு, என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லு” என்று சட்டென்று அவளது கரம் பற்றி கெஞ்ச துவங்கினான்,….
நித்யாவால் சட்டென்று அவனை தள்ளி விட்டு பின்நகர முடியவில்லை, அவன் கோபத்தை காட்டிருந்தால் எப்படியாவது முயன்று அவனிடமிருந்து விலகி போயிருப்பாள், ஆனால் அவனது கெஞ்சல் அவன் மீது பரிதாபபட தான் வைத்தது,… ஆறடி ஆண்மகன், உடலில் அதிக வலு கொண்டவன், தன்னிடம் கெஞ்சுகிறான், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று, அவனது கெஞ்சலுக்காக அவனுடனே இருந்து விடலாம் என்ற முடிவையும் சர்வ சாதாரணமாக எடுக்க முடியவில்லை, சிலை போல் நின்றாள்,….
எத்தனை நேரம் நின்றிருப்பாளோ,… “ஸ்ரீ” என்ற அவனது அழைப்பில் தான் சுயநினைவுக்கு வந்தாள், விழிகளில் ஏக்க பார்கை கொண்டு பார்த்தான் அவளை, அவளுக்கு மனது நெருடியது, ‘என் வாழ்க்கையில என்ன நடந்துகிட்டு இருக்கு, நான் பாட்டுக்கு ஜாலியா தோழிங்களோட ஊரை சுத்திக்கிட்டு இருந்தேன், யாரோ ஒரு பொண்ணு கடத்தப்படுறதுக்கு பதில் நான் கடத்தபட்டேன், இப்போ கடத்தியவனே என் கூட நிரந்தரமா இருன்னு சொல்றான், இதை எப்படி என்னால ஏத்துக்க முடியும், நானே ஏத்துகிட்டாலும் என் அம்மாவும் அண்ணாவும் இதை எப்படி ஏத்துப்பாங்க, கடவுளே இதென்ன விளையாட்டு’ என மானசீகமாக புலம்பினாள் கடவுளிடம்,…
“என்ன ஸ்ரீ யோசிச்சு முடிச்சிட்டியா? என்ன முடிவு பண்ணிருக்க?” என்றான் யோசனையில் உழன்று கொண்டிருந்தவளிடம்…
பார்வையை அவன் பக்கம் திரும்பியவள்,….”நான் என் அம்மாகிட்டயும் அண்ணா கிட்டயும் பேசிட்டு சொல்லட்டுமா?” அப்போதைக்கு அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள் அவள்……
“நான் உன் அம்மாவையோ உன் அண்ணாவையோ என் கூட இருக்க சொல்லி கேட்கல, உன்னை தானே கேட்கிறேன், அதனால நீ தான் அதுக்கான பதில் சொல்லணும்” என தெளிவாக நின்றான் அவன்,……
‘விட மாட்டான் போலயே, கடவுளே இப்போ நான் என்ன பண்ணுறது’ விட்டத்தை பார்த்து புலம்பியவளை, “நான் உன்னை கட்டாயப்படுத்தல, உனக்கு விருப்பம் இல்லனா என்கூட இருக்க வேணாம்” அவன் கூறியதும், கொஞ்சம் நிம்மதி கொண்டவள்.. “சரி நான்” என ஏதோ சொல்ல வர, அதற்குள் அவன் முந்திக்கொண்டு “ஆனா இங்கிருந்து போகும் போது நீயே உன் கையால என்னை கொன்னு போட்டுட்டு போயிடு” என அவன் துப்பாக்கியை அவள் கையில் வைத்தான்,…
மிரண்டு போய் பார்த்தாள் அவனையும் அவள் கையிலிருந்து துப்பாக்கியையும், “ஏன் ஏன் என்னை இப்படி சாகடிக்கிற” என்றாள் ஆற்றாமையுடன்,…
“நீ தான் என்னை சாகடிக்கிற, ஏன் என்கூட இருக்க யோசிக்கிற, உனக்காக நான் எல்லாத்தையும் விட்டுடுறேன்னு சொல்றேன், அப்போவும் உன்மனசு இறங்கலயா? ஏன் என்னை மாதிரி ரவுடிங்க சந்தோசமா இருக்கணும்னு ஆசை பட கூடாதா? எங்களுக்கும் மனசு இருக்க கூடாதா? நான் இதுவரைக்கும் எதுக்கும் ஆசை பட்டதில்லை, ஆசை படவும் விரும்பல உன்னை பார்க்கும் வரைக்கும், ஏதோ ஒரு வகையில நீ எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்திட்ட, எனக்கு உன்கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு, உன்னை உள்ளங்கையில வச்சு தாங்கணும், உனக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து பண்ணனும், நீ எனக்காக எதுவும் செய்ய வேணாம், உன்னோட அன்பு அதை மட்டும் கொடுத்தா போதும், எப்படியிருந்தாலும் உன்னை உன் அம்மா யாருக்காவது கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்க தானே போறாங்க, யாரோ ஒருத்தன் கூட போறதுக்கு நீ ஏன் என் கூடவே இருந்திட கூடாது” என்றான், அவன் பேச பேச நித்யா விழித்து போய் நின்றாள், அவளுக்கு என்ன பேசுவதென்று கூட தெரியவில்லை, சில நிமிடங்கள் அமைதி காத்தவள்,…”உன் பேரன்ன?” என்றாள், ஐந்து நாட்கள் அவனுடனுடனிருந்திருக்கிறாள், இப்போது தான் அவன் பெயரை தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் பிறந்தது போல,…
“கருணா,… கருணாகரன்” மிடுக்கான குரலில் கூறினான்,…
“கருணா” வாய்விட்டே சொல்லி பார்த்தவள்,…”உனக்கு அம்மா அப்பாலாம் இருக்காங்களா? கண்டிப்பா இருக்க மாட்டாங்கன்னு தான் தோணுது, இருந்திருந்தா நீ ஏன் ரவுடியாகிருக்க போற” அவள் சொல்லின் அர்த்தம் சரி என்பது போல் அவனும் மௌனமாக நின்றான்,…..
“எப்போதுல இருந்துடா உனக்குள்ள நான் தாக்கத்தை ஏற்படுத்தினேன், ஐந்து நாள் இந்த ஐந்து நாள்ல உனக்கு நான் எதுவுமே செய்திடலேயே, நீயாச்சும் எனக்கு சாப்பாடு ட்ரஸ் எல்லாம் வாங்கி தந்த, நான் உனக்கு என்ன பண்ணிட்டேன்னு என்னை உனக்கு பிடிச்சிருக்கு” காரணம் தெரியாமல் தான் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் அவனிடம் கேட்டாள்,…
“நீ தானே சொன்ன கடத்தல் வேலையைஎல்லாம் விட்டுட்டு நல்ல வேலையில சேர்ந்தா பொண்ணுங்க என்னை கட்டிக்க போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கனு, நீ சொல்றதுக்கு முன்னாடி வரைக்கும் பொண்ணுங்களை பத்தி யோசிச்சி பார்த்ததில்லை, உன்னை கடத்தியதற்கு முன்னாடி வரைக்கும் நிறைய பொண்ணுங்களை கடத்தியிருக்கேன், அவங்கள்லாம் என்கிட்ட ஒரு வார்த்தை பேசவே பயப்படுவாங்க, ஆனா நீ தைரியமா என்கிட்ட பேசுன, அறிவுரை சொன்ன, எனக்கும் பிடிச்சது, நீ சொன்னதையெல்லாம் யோசிச்சு பார்த்தேன், யாரோ ஒரு பொண்ணை கட்டிக்கிறத்திக்கு பதில் ஏன் உன்னையவே கட்டிக்கிற கூடாதுனு தோணுச்சு, நீ அக்கறையா என் கை பிடிச்சு மருந்து போட்டு விட்டது உள்ளுக்குள்ள ஒரு மாதிரி சந்தோசத்தை கொடுத்தது, ஒரு நாள் ஒரு முறை உன்கிட்டருந்து வெளிப்பட்ட அந்த அக்கறை, வாழ்க்கை முழுக்க கிடைச்சா? எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன், மனசு இது வரை அடைந்திராத சந்தோசத்தை அடைந்தது யோசிச்சு பார்த்ததுக்கே, சத்தியமா இது வரை எந்த பெண்ணையும் தொட்டது கிடையாது, தவறான கண்ணோட்டத்துல பார்த்தது கிடையாது, இப்போ உன்கிட்ட மட்டும் தான் மனசு தடுமாறி நிற்கிது, இதுக்கு பெயர் என்னனுலாம் எனக்கு தெரியாது, தெரிஞ்சிக்கவும் விரும்பல, நீ என் கூட இருந்தா அதுவே போதும் எனக்கு” என்று முடித்தான் கருணா,….
நித்யாவால் அவனை தவறாக பார்க்க முடியவில்லை, கோபமாகவும் முறைக்க முடியவில்லை, அவன் அன்பிற்காக ஏங்கி போயிருக்கிறான், அதனால் தான் தன்னுடைய சின்னதான அக்கறையான செயல் கூட அவன் மனதை அதிகமாய் பாதித்திருக்கு என்பது புரிந்தது, அதற்காக அவனுடன் இருந்துவிடலாம் என்றெல்லாம் அவள் முடிவெடுக்கவில்லை, அவள் முடிவெடுக்க தெரியாமலும் நிற்கவில்லை, அவனுடன் வாழ்வதை பற்றி அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை, ஒருவித நெருடல் இருந்து கொண்டே இருந்தது, அவன் நாடகமாடவில்லை உண்மையான வார்த்தைகளை தான் வெளிப்படுத்துகிறான் என்று அவனது விழிகள் கூறினாலும் அவளால் அவனுடன் இருக்க முடியாதே,……
அவனிடம் பேச்சு கொடுத்தாள்…. “நீ ஏன் ரவுயான, எப்படி எப்போதுல இருந்து இந்த வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பிச்ச, உன் அம்மா அப்பா எப்போ உன்னை விட்டு போனாங்க” அவனது கதையை தெரிந்து கொள்ளணுமென்ற ஆர்வத்தில், அவனை பற்றி விசாரித்தாள்,…
“சின்ன வயசுலயிருந்தே இதே வேலையை தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றான் விரக்தியாய்…
‘சின்ன வயசிலருந்தேவா?’ என திகைத்தவள்,…”சின்ன வயசுனா? எத்தனை வயசுலருந்து” என்றாள் கொஞ்சம் மிரண்ட விழிகளுடன்,…
“ஒரு பத்து பன்னிரெண்டு வயசுலருந்து” அவன் கூறவும், அதிர்ச்சியில் விழிகளை விரித்தவள்,… “இந்த வயசுல விவரம் கூட முழுசா தெரிஞ்சிருக்காதே, நீ எப்படி இப்படி ஒரு வேலையில இறங்குன, உன் அம்மா அப்பா என்னானாங்க, தாய் தகப்பன் இல்லன்னா பிள்ளைங்க வழி தவறி போவாங்க அப்டிங்கிறது உன் விஷயதத்துல உண்மையாகிடுச்சு இல்ல” என்றாள் வருத்தத்துடன்….
“அம்மா அப்பா இல்லனா பிள்ளைங்க வழி தவறி போவாங்க அப்டிங்கிறது எந்தளவு உண்மையோ, தாய் தகப்பன் இருந்தும் அவங்க குணம் சரியில்லாம பிள்ளைங்க வழி தவறி போவாங்க அப்டிங்கிறதும் ஆணித்தரமான உண்மை, என்னை பெத்தவங்களால தான் நான் இப்போ இப்படி ஒரு நிலமையில இருக்கேன், என் தங்கச்சி சின்ன பிள்ளையிலேயே துடி துடிச்சி இறந்து போனா, எல்லாம் அவனால அவங்களால தான்” என்றவனின் விழிகளில் கோபம் வெறியாய் மாறி பிரதிபலித்தது….
“உனக்கு தங்கச்சி இருந்துச்சா, என்னாச்சு அவளுக்கு, உன் அப்பாவும் அம்மாவும் அவளை என்ன பண்ணாங்க” குலை நடுங்க கேட்டாள் நித்யா,…
அவன் பதில் கூறவில்லை, விழிகள் இரண்டும் ரத்தமாய் சிவந்திருந்தது, முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது, அவனது நிலையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது, அவள் எதிர்பார்த்ததை விட அவன் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான் என்பது புரிந்தது, ஆதரவாக அவனது கரம் பற்றினாள், அவளது ஆறுதலான இந்த பற்றுதல் அவன் மனதை சாந்தப்படுத்தியது, விழிகளை மூடிக் கொண்டவனின் விழிகளிருந்து விழிநீர் வடிந்தது, பல வருடங்களுக்கு பிறகு வருகிற கண்ணீர் அவனது தங்கையின் இறப்பை நினைத்து, இத்தனை வருடங்கள் இரும்பு மனிதனாக வாழ்ந்து வந்தவனுக்கு கண்ணீர் கண்ணுக்குள்லேயே வற்றி போயிருந்தது, இப்போது எங்கிருந்து எப்படி வந்ததோ நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது, அவன் முகத்தை பார்க்க பார்க்க மனம் குமுறியது அவளுக்கு, தானாக அவள் கரம் உயர்ந்து அவன் கண்ணீரை துடைத்து விட்டது, “அழாத கருணா, நான் இருக்கேன் உனக்கு” அவள் அந்த நொடி இந்த வார்த்தைகளை வெளியிடாமல் இருந்திருக்கலாம், அவனுக்கு ஆறுதல் கூறும் பொருட்டாய் இவ்வார்தையை வெளியிட்டவள், பின்னாளில் அந்த வார்த்தைகளை காப்பாற்ற போவதில்லை என்பதை அறிந்திருக்க மாட்டாள், அறிந்திருந்தால் சொல்லிருக்கவும் மாட்டாளோ,….
அச்சயம் அவனது மனதை அமைதி படுத்தவே அவ்வார்தைகளை உபயோகித்தாள், தன் வார்த்தையால் அவன் மனம் ஆறுத்தலடையாதா என்ற எண்ணத்தில் மட்டுமே கூறினாள், சிறு வயதிலேயே தாய் தந்தையோடு சேர்த்து, கோழி குஞ்சாய் பொத்தி பொத்தி வைத்திருந்த தங்கையையும் இழந்து, சூழ்நிலை கைதியாய் ரவுடியாய் மாறி போனவனின் மனது, நித்யாவின் வார்த்தைகளால் சலனப்பட்டது, தனக்கும் ஒரு உறவு வந்து விட்டது அன்பை வாரி வழங்க என்று மனம் துள்ளாட்டம் போட்டது, அவளை அணைத்துக் கொண்டான் சந்தோச மிகுதியில், அந்த அணைப்பில் காதலும் இல்லை காமமும் இல்லை, மகன் தாயை அணைக்கும் அணைப்பு, அண்ணன் தங்கையை அணைக்கும் அணைப்பு, பல வருடங்களாய் அன்புக்காக ஏங்கி போயிருந்தவனுக்கு தாயாய், தங்கையாய், அக்காவாய், தோழியாய் பாசம் காட்ட ஒருவள் வந்து விட்டாள் என்ற சந்தோசத்துடன் அளவில்லா மகிழ்ச்சியுடன் மனம் முழுக்க பூரிப்புடன் உள்ளம் பட்டாம் பூச்சியாய் சிறக்கடிக்க அவளை அணைத்துக் கொண்டிருந்தான் கருணா….
“நான் பிறந்தது ஒரு கிராமத்துல தான், என்னை பெத்தவன் என் தங்கச்சி கண்மணி பிறக்கும் வரைக்கும் நல்லா தான் இருந்தான், கூலி தொழில் செய்து எங்களை நல்லா தான் பார்த்துகிட்டான், ரெண்டாவது பொண்ணா பொறந்தது அவனுக்கு பிடிக்கலயாம், கண்மணி பிறந்ததுல இருந்தே குடிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தான், என்னை பெத்தவவள குடிச்சிட்டு வந்து தினமும் அடிப்பான் உதைப்பான், அப்போ என்னை பெத்தவ மேல நானும் அதிகளவு பாசம் வச்சிருந்தேன், அவளும் நல்லா தான் பாசமா பார்த்துகிட்டா, அவன் அவளை அடிக்கும் போதெல்லாம் பல முறை தடுத்திருக்கேன், அடியை நான் வாங்கியிருக்கேன், கண்மணிக்கு மூணு வயசு ஆரம்பத்துல எங்களை பெத்தவ காணாம போயிட்டா, எங்கெங்கேயோ தேடினாங்க அக்கம் பக்கத்துல உள்ளவங்க, ஆனா கிடைக்கல, ஓடிபோய்ட்டானு முடிவு பண்ணாங்க, அவ உண்மையாவே புருஷன் தொல்லை தாங்காம எவன் கூடவோ ஓடி போயிட்டான்னு ஒருமுறை அவளை நேரில் பார்த்த போது நானும் தெரிஞ்சிக்கிட்டேன்,…
அவ போன பிறகு கண்மணி முழுசா என் பொறுப்புக்கு வந்துட்டா, அவளை குளிக்க வைக்கிறதுல இருந்து, உடை மாற்றி, சாப்பாட்டு ஊட்டி தூங்க வைக்கிறது வரைக்கும் நான் தான் பார்த்துகிட்டேடேன், எங்களை பெத்தவன் குடிச்சிட்டு வந்து அவன் பொண்டாட்டிக்கு தண்டனை கொடுகிறதா நினைச்சு எனக்கு கொடுத்தான், இத்தனை வருடம் அவளுக்கு கொடுத்த அடி உதை எல்லாம் என்னை நோக்கி திரும்பியது, நானும் தாங்கிக்கிட்டேன், அந்த வயசுல என்னால வேற என்ன பண்ண முடியும்,…
ஒரு முறை கண்மணிக்கு அதிகமான ஜுரம், எங்களை பெத்தவன் கிட்ட சொன்னேன், அவன் செத்து தொலையட்டும்னு சொன்னான், கோபம் வந்தது, கோபத்தை காட்ட முடியாத சூழ்நிலையில அப்போ நான் நின்னேன், என் தங்கச்சியை தோள்ல தூக்கி போட்டுட்டு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு ஓடினேன், என்கிட்ட காசு இல்ல, பக்கத்து வீட்டு அக்கா தான் அந்த ஆஸ்பத்திரி பத்தி சொன்னாங்க, எங்க கிராமத்துலருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவுல இருக்கு, பஸ்ல தான் போனேன் தனியா என் தோள்ல கண்மணியோட, தங்கச்சிக்கு சிகிச்சை பார்த்தாங்க, மருந்து கொடுத்தாங்க, வாங்கிட்டு வரும் வழியில தான் அவளை நான் பார்த்தேன்,…
யாரோ ஒருத்தன் கூட சிரிச்சு பேசி கைகோர்த்துட்டு போனா, “அம்மா”னு கத்திக்கிட்டு ஓடினேன், ஆனா அவ என்னை துட்சமா பார்த்து நான் பிடிச்ச என்னோட கையை உதறிவிட்டா, யார் நீ னு என்னை அந்நியமா பார்த்தா, நான் தான் மா உங்க பையன், தங்கச்சிக்கு உடம்பு சரியில்லமான்னு சொல்லி அழுதேன், ஆனா அவ அத காதுல வாங்கல, ச்சீ போன்னு தள்ளி விட்டா, நானும் தங்கச்சியும் ரோட்டுல போய் விழுந்தோம், கண்மணி விழுந்ததுல வீல்னு அழுத்துச்சு, ஆனா அவ அதை கண்டுக்கவே இல்லை, எங்களை தாண்டி போயிட்டா எவன் கூடவோ” இதை சொல்லும் போது அவன் கண்ணிலிருந்த கோபம் மறைந்து கண்ணீர் அருவியாய் வெளியேறியது,…. ‘இப்படியும் ஒரு தாய் இருப்பாளா’ நித்யாவிற்கு முகம் தெரியா கருணாவின் தாய் மீது கொலைவெறியே உண்டானது,….
“அன்றைய நாளிலிருந்து நான் அவளை அடியோடு வெறுத்தேன், என் தங்கச்சியை தாய்க்கு தாயா தந்தைக்கு தந்தையா இருந்து வளர்த்தேன், அவளோட உலகமே நானா மாறினேன், என்னோட உலகமாவும் அவ தான் இருந்தா, எங்களை பெத்தவனோட அடி உதையையெல்லாம் சமாளிச்சி ஆறு வருசத்தை கடத்திட்டேன், பள்ளிகூடத்துக்கு போகல, மத்த பசங்களை போல விளையாட வெளியே போனதில்ல, என் தங்கச்சியோட மட்டுமே நேரத்தை கடத்துனேன் அத்தனை வருடங்களும்,
என் தங்கச்சிக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சது, அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைங்க பள்ளி கூடத்துக்கு போறதை பார்த்து, நானும் போகட்டுமா அண்ணானு கேட்டா, என்னால அவ ஆசையை தட்டி கழிக்க முடியல, சரின்னு சொன்னேன், என் தங்கச்சி படிச்சி பெரியாளாகனும்னு ஆசை வந்தது, பக்கத்து வீட்டு அக்கா கிட்ட விசாரிச்சேன், அவங்க என்கிட்ட கொஞ்சம் நல்லா பழகுவாங்க, எதுவா இருந்தாலும் நான் அவங்க கிட்ட தான் கேட்பேன், அவங்களும் உதவி பண்ணுவாங்க, நாங்க ரேஷன் கடையில தரதை வச்சு தான் வயித்தை நிரப்பிட்டிருந்தோம், அப்பப்போ அவங்க நல்ல உணவுலாம் தருவாங்க, அந்தளவுக்கு அவங்க நல்லமனசு படைத்தவங்க,…
பள்ளிக்கூடத்துல போய் பேச சொன்னாங்க, அவங்களும் கூட வருவதா சொன்னாங்க, அன்னைக்கு என் கண்மனியை வீட்ல விட்டுட்டு போனேன், அவளை விட்டுட்டு போனது தான் அப்போ நான் செய்த மிகப்பெரிய தவறு, அன்னைக்கு தான் என் தங்கச்சி துடித்துடிச்சி இறந்து போனா…” இதை சொல்லும் போது அவன் விழிகளில் விவரிக்க முடியாதவிற்கு வலி தெரிந்தது…
“பள்ளி கூடத்துக்கு போன விஷயம் நல்லதாகவே முடிந்தது, சந்தோசமா அதை கண்மணிக்கிட்ட பகிர்ந்துக்க ஓடி வந்தேன், வந்த எனக்கு…அதை…அதை… என்னால சொல்ல முடியல ஸ்ரீ, அன்னைக்கு நான் பார்த்தது” என்று கூற முடியாமல் வெடித்து அழுதான் கருணா,,… அவனது அழுகை நித்யாவை ஆட்டம் காண வைத்தது, அவள் கண்களிலிருந்தும் கண்ணீர்,.. ‘அப்படி அவன் தங்கச்சிக்கு என்ன நடந்தது, அவளை துடிதுடிக்க கொன்னது யாரு’ மனம் படபடத்தது, ஏதோ அவளது சொந்தத்துக்கே நடந்தது போல் நாடிநரம்பெல்லாம் சிலிர்க்க தொடங்கியது,…
“கண்மணிக்கு என்னாச்சு” மனம் பதைபதைத்தாலும் அவள் அதை கேட்டாள், அவன் சொன்னதை கேட்ட பிறகு ஏன்டா கேட்டோம் என்று கதறி அழுதாள்,…
“கண்மணி.. வெறும் ஐந்து வயதேயான என் கண்மணியை அவன்… அவன் சிதைச்சுக்கிட்டிருந்தான், அவ.. அவ உடம்புல ஒட்டு துணி இல்ல, அவளோட அந்தரங்க உறுப்புலருந்து ரத்தம்… ரத்தம் கொட்டிக்கிட்டிருந்துச்சி, அதையும் மீறி அவன் அந்த ****** உச்சத்தை அடைந்து சுகம் கண்டுகிட்டு இருந்தான்” இதை கேட்ட நித்யாவிற்கு ஹாட் அட்டாகே வந்துவிடும் போல் இருந்தது, நெஞ்சை கரத்தினால் அழுத்தி பிடித்துக் கொண்டு பொத்தென்று அமர்ந்து விட்டாள், மூச்சு ஒரு மாதிரி முட்டியது, இதயம் தன் வேலையை நிறுத்த போவது போல் ஏதோ ஒன்று வந்து அடைத்தது, அழுகை கூட வெளிவரவில்லை, ஒரு மாதிரி மறத்து போய் அமர்ந்திருந்தாள்,…
தன்னாலேயே இதை கேட்க முடியவில்லையே, இவன் நேரில் பார்த்திருக்கிறான், கடவுளே இவன் எப்படி உயிரோடு இருக்கிறான், இத்தனை வருடங்கள் அவனால் எப்படி மனிதனாய் நடமாட முடிந்தது, இவனுக்கு ஏன் இப்படியொரு தண்டனை? அந்த சிறு பெண் என்ன தவறு செய்தாளென்று அவளுக்கு அப்படியொரு கொடுமையான தண்டனையை கொடுத்தாய்? என்று இறைவனின் மீது ஆத்திரமாக வந்தது,….
அவன் தொடர்ந்தான், வார்த்தையில் உயிர் இல்லை, வாய் பாட்டிற்கு சொல்லிக் கொண்டே போனது,…. “என் தங்கச்சிகிட்ட ஓடினேன், அவளிடமிருடத்து அவனை தள்ளி விட்டேன், துணியை எடுத்து போர்த்தினேன், அவள் கன்னத்தை பற்றி எழுப்பினேன், ஆனா அவ கண்ணை திறக்கல, நெஞ்சிலடிச்சிகிட்டு கத்தினேன் கதறினேன், அவளை எழுந்து வர சொன்னேன், ஆனா அவ செவிசாய்க்கல, அவ தலையிலிருந்து என் கைக்கு வந்த ரத்தம் அவள் தலையிலும் ஆழமான காயம் பட்டிருப்பதை எடுத்து காட்டுச்சு, “டேய் அவனை பிடிடா” அழுது அழுது ஓய்ந்து போய் ஒரு குரல் கேட்டு நிமிர்ந்தேன், அவன் தான், என் தங்கச்சியை நாசம் செய்தவன், அவனோட பொண்ணு வயசுல இருக்கும் என் தங்கச்சியை துடிக்க வச்சவனை பார்க்க பார்க்க என் ரத்தமெல்லாம் சூடாச்சு, அவன் கூட தான் எங்களை பெத்தவனும் இருந்தான், அவனும் இதுக்கு உடந்தைன்னு புரிஞ்சது, பெத்தமகளை ஒன்னும் தெரியாத அந்த பிஞ்சை கதற கதற கற்பழிக்க விட்டு பார்த்திருக்கான் அந்த அரக்கன், ரெண்டு பேரும் என்னை பிடிக்க வந்தானுங்க, அப்போ எனக்குள்ள ஆயிரம் பேரை வீழ்க்கும் சக்தி வந்தது போல இருந்தது, ஓரமா கிடந்த அரிவாள்மனையை கையில எடுத்தேன், ஆட்டை அறுக்கிற மாதிரி அவன் கழுத்தை அழுத்தேன், என் தங்கச்சியை தொட்டவனோட ஆணுறுப்பை முதல்ல அறுத்து எறிஞ்சிட்டு அவனையும் கழுத்து துண்டாகும் வரைக்கும் அறுத்து கிழித்தேன்,….
சத்தம் கேட்டு எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க, என்னை பிடிக்க வந்தாங்க, என் தங்கச்சியை தோள்ல தூக்கி போட்டுட்டு ஓடினேன் அவங்களையெலாளம் தள்ளி விட்டுட்டு, கால்ல வலி எடுத்த போது தான் ஓடுறதை நிறுத்தினேன், இருட்டிய அவ்விடத்துலருந்த ஒரு மரத்தடிக்கு கீழ உட்கார்ந்து மறுபடியும் கண்மணியை எழுப்பினேன், அவ செத்து போயிட்டான்னு புரிஞ்சது, கத்தினேன் பெருங்குரலெடுத்து கதறினேன், அழுது அழுது சோர்ந்து போய் படுத்துட்டேன், “யார்ப்பா அது” ஒரு குரல் கேட்கவும் பயந்து போய் எழுந்தேன், ஒரு வயசாவரு நின்னுகிட்டு இருந்தாரு, எனக்கு அப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியாம அவர் கிட்ட என் கஷ்டத்தை சொல்லி அழுதேன்,….
உலகத்துல நல்லவர்களும் இருக்க தான் செய்றாங்க, அதுல அவரும் ஒருத்தர் போல, என் தங்கச்சி உடலை தகனம் பண்ண உதவி பண்ணாரு, அவருக்கு தெரிஞ்ச தகனம் செய்பவரை வரவழைச்சு தங்கச்சி உடலை தகனம் செய்தோம், என் தங்கச்சியோட உடலுக்கு நான் தான் என் கையால நெருப்பு வச்சேன், நெருப்பு முழுசா அணையுற வரை அங்கேயே நின்னேன், உதவி செய்தவரு கிளம்பி போயிட்டாரு, நெருப்பு அணையை அணையை என் மனசுல இருக்க வலி வேதனை எல்லாம் நெருப்பாய் கொழுந்துவிட்டு எரிந்தது, அவனுங்களை கொன்னும் என் ஆத்திரம் அடங்கல, என் தங்கச்சி எனக்கு வேணும்னு மனம் கூப்பாடு போட்டது, மறுபடியும் கொல்லணும்னு கையெல்லாம் பரபரத்தது, கோபம் வெறுப்பு எல்லாம் எங்களை பெத்தவ மேல வந்து நின்னது, அவ அன்னைக்கு கண்மணியை மட்டுமாவது கூட கூட்டிட்டு போயிருந்தா அவளுக்கு இந்த நிலை வந்திருக்காதுலனு ஆவேசப்பட்டேன், மனசு மிருகமானது, அவளை தேடி அழைஞ்சேன், அவளையும் கதற கதற கொன்னேன், அந்த ஊர் ஆளுங்க என்னை விரட்டி விரட்டி துரத்துனானுங்க, ஓடினேன் ஓடினேன், தப்பிக்கும் நோக்கத்தோடு ஓடினேன், ஒரு புதருக்குள்ள மறைஞ்சுகிட்டேன், வந்தவனுங்க என்னை காணாம வேற பக்கம் தேடி ஓடினாங்க, அப்போ தான் கொஞ்சம் தொலைவுல யாரோ கத்தற சத்தம், ஓடி போய் என்னனு பார்த்தேன், ஒருத்தன் கையில அரிவாளோட நின்னான், இன்னொருத்தன் மண்ணுல கிடந்தான் தோள்ல ரத்தம் கசிய,…
“வேணாம்டா, எனக்கு ஏதாவது ஆச்சு என் ஆளுங்க உன்னை சும்மா விடமாட்டாங்க” கீழே கிடந்தவன் அந்த நிலமையிலும் கண்களில் கொஞ்சமும் பயம் இல்லாமல் தன்னை வெட்ட துணிந்து நிற்பவனை மிரட்ட,… “இப்போவும் உன் ஆணவம் குறையலல பாஸ்கர், உன் சாவு என் கையால தான்டா” என்ற உறுமலுடன் அவன் கழுத்தை நோக்கி அரிவாளால் வீச வர, அந்த நேரம் கருணா என்ன நினைத்தானோ வேகமாக உள்ளே நுழைந்து தாக்க வந்தவனின் வயிற்றை பிடித்து தள்ளி விட்டான், இதை எதிர்பார்க்காதவன் தடுமாறி கீழே போய் விழுந்தான், கையிலிருந்த அரிவாளும் ஒரு பக்கம் போய் விழுந்தது,…
“எட்றா எட்றா அரிவாளை கையில எடுடா” பாஸ்கர் என்பவன், ஏதோ கருணா இதற்கு முன்பு பழக்கப்பட்டவன் போல அவனை உரிமையுடன் துரிதப்படுத்த, அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டவன் போல கருணாவும் கையில் அரிவாளை எடுத்தான்,….
“வீசுடா” பாஸ்கர் கீழே கிடந்தவனை நோக்கி துட்சமாய் பார்த்து, உதட்டை மடித்து கட்டளையிட, ஏற்கனவே ரத்த வெறிக்காக காத்து கொண்டிருந்த கருணாவும், அவன் கழுத்தில் அரிவாளால் வீச, அவன் தலை தனியாக கழன்று விழுந்தது,… விழிகளில் பரவசத்துடன் கருணாவின் கரம் பிடித்து எழுந்த பாஸ்கர்,… “இந்த பாஸ்கர் உயிரை காப்பற்றின உனக்கு பெரிய விழாவே ஏற்பாடு பண்ணுறேன், வாடா இனி நீ என் விசுவாசி இந்த பாஸ்கரின் விசுவாசி” என தோளோடு அவனை அழைத்து சென்றான் பாஸ்கர், யாரும் இல்லா நிற்கதியில் நின்ற கருணாவும் அவன் பின்னால் சென்றான், அன்றிலிருந்து அவன் வாழ்க்கை புதுவிதமாக ஆரம்பமாகியது,….

