
அத்தியாயம்:13
“வாட் பார்ட்டியா.?”என்று அதிர்ந்து விழித்தாள் ஆரா.
“உனக்குப் பிடிக்கலைன்னா.? வர வேண்டாம்” என்றவன் தன் அலைப்பேசியை எடுத்து எதையோ அவள் எண்ணுக்கு அனுப்பி வைத்தவன்.
“உனக்கு லோகேஷன் பின் பண்ணிருக்கேன், விருப்பம் இருந்தால் நீ வரலாம்” எனப் பேசியவனின் விழிகளில் ஒரு நொடி விழுந்து எழுந்தவள் தட்டுதடுமாறி, “நான் வரமாட்டேன் க்ரிஷ்” எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
அவள் அவனைக் கடந்து செல்வதைப் பார்த்தவன் “நீ என்னை ஃப்ரெண்டா நினைச்சனா வா ஆரா.!” என்றவனின் குரல் கேட்டு அவள் நடை தடைபட்டது அவன் சொன்னதின் உள் அர்த்தம் புரிந்து போகத் தன் இடையில் கைவத்து,
“என்ன சொன்ன க்ரிஷ்.?” நிதானமாய்க் கேட்டாள்.
“நீ வரலைன்னா என்னைக் காதலிக்கிறன்னு அர்த்தம்” அவன் கத்தி சொன்னனான் அவர்கள் இடையே சில மீட்டர் இடைவெளி இருந்தது, அவள் அவனை நெருங்கினாள் இடைவெளி குறைந்தது, ஆதித் கிருஷ்ணாவின் மனதில் படபடப்பு எழுந்தது.
“நீங்க பண்ணுறதுக்கு பேர் நிர்பந்தம்” எனக் கேட்டவள் அவனருகே நெருங்கி கொண்டிருந்தாள்.
“மை டியர் ஸ்மைலி நீ என்னைக் காதலித்தே தீர வேண்டும், என்கிற நிர்பந்தம் விதிக்கவில்லை, காதலித்தால் நல்லா இருக்கும் என்று தான் சொல்கிறேன்” அவன் சொன்னதைப் கேட்டு பட்டெனச் சிரித்துவிட்டாள்.
“ஹே ஸ்மைலி நான் ப்ரொப்போஸ் பண்ணுறேன், நீ எதுக்கு சிரிக்கிற.?” கேள்வியாய் பார்த்தான்.
“க்ரிஷ் என்னைப் பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாது, நான் யார்ன்னு தெரியுமா.? ஆனால் உங்களைப் பத்தி எனக்குத் தெரியும் உங்களுடைய பின்புலம் தெரியும், உங்களுக்கு நான் பார்த்த வரன்களின் பின்புலமும் தெரியும், சோ உங்க ஸ்டேடஸ் வேற நான் வேற, என்னோட கனவை நோக்கி நன் பயணிச்சிட்டு இருக்கேன்” என அவள் இடைநிறுத்தி அவள் விழியைப் பார்த்தாள்.
“ஹே ஸ்மைலி” அவள் முகம் நிமிர்த்தி அவள் விழிகளுக்குத் தன் காதலை கடத்தினான்.
“ஸ்டேடஸ் பத்திலாம் பேசுற ஆரா.! நான் உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன், மிட்நைட்ல செல்ஃப் கான்பிடன்ட்டா, உன்னோட சுயமரியாதைக்காக என்னை உதாசீனம் செஞ்சிட்டு போன உன் மேல் தான் எனக்குக் காதல் வந்திச்சு,ஆமா உன்னோட பேக்கிரவுண்ட் எனக்குத் தெரியாது பட் உன்னை எனக்குத் தெரியும், உன்னோட கட்ஸ் எனக்கு தெரியும், உன்னோட அசட்டு தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு ஆரா, என்னோட பேக்கிரவுண்ட் தெரிஞ்சும் என்ன சராசரி மனுசனை போல் நடத்துற இக்குவாலிட்டி பிடிச்சிருக்கு. என்னை பார்த்து என் பணத்துகாக என்கிட்ட பழக நினைக்கிற பொண்ணுங்க மத்தியில நீ எனக்கு வித்தியாசமா தெரியுற ஆரா, அப்படி இருக்கிற உன்கூட என்னோட எதிர்காலத்தை ஷேர் பண்ணிக்க நினைக்கிறது தப்பில்லையே ஆரா. உனக்கு விருப்பம் இல்லாத போது நான் உன்னே வற்புறுத்த மாட்டேன் ஆரா” என அவன் தெளிவாய் சொன்ன போதும் அவனை எதிர்கொள்ள முடியாமல் அவனைக் கடந்து சென்றாள்.
அவள் செல்வதைப் புன்னகைத்துப் பார்த்தான். அப்போது விக்கியும் ஆதித் கிருஷ்ணா அருகே வந்து சேர்ந்தான்.
“விக்கி பார்ட்டிக்கான அரெஞ்ஜ்மென்ட்ஸ் சீக்கிரம் பண்ணு” என உத்தரவாய் ஒலித்தது ஆதித்தின் குரல்.
“எப்போ பாஸா இருக்கான், எப்போ ப்ரெண்டா இருக்கான்னு யூகிக்கவே முடியல” எனப் புலம்பியவன்,
“பாஸ் மேடம் கோவிச்சிட்டு போறாங்க, பார்ட்டி கண்டிப்பா ஏற்பாடு பண்ணணுமா.?” என விக்கி கேட்ட போது.
“என் ஆரா வருவாள் ராதையைப்போல் இந்தக் கிருஷ்ணனை பார்க்க வருவாள்” எனச் சொல்லி புன்னகைத்தான்.
************************
பாண்டிச்சேரி கடற்கரையில் முகம் முழுக்கக் கோபம் பூசிக்கொண்டு சுதாவை முறைத்தபடி அமர்ந்திருந்தாள் ஆரா.
“ஹே சாரி ஆரா”
“என்னடி சாரி, நீ லவ் பண்ணக் கூடாதுன்னு நான் சொல்வேனாடி.? ஏன் என்கிட்ட மறைச்ச” முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“சாரி ஆரா.! உன்கிட்ட சர்ப்ரைஸா விக்கியை இன்ட்ரோ கொடுக்கலாம்ன்னு நினைச்சேன்”
“இதில் என்னடி சர்ப்ரைஸ்”
“விக்கியும் நானும் எதிரும் புதிருமா தான் இருந்தோம் ஆனால் நான் சென்னையில் இருந்து பாண்டி வந்ததுக்கு அப்பறம் அவர் காட்டுற அக்கறை என்னை அவர் பக்கம் இழுத்திருச்சு, தினமும் அர்த்தம் புரியாமல் பேசிக்கிட்டோம் எப்போ அந்த நட்பு காதலா மாறுச்சுன்னு தெரியலை, அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாதுன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு, நீ வந்ததுக்கு அப்பறம் பொறுமையாய் சொல்லாம்ன்னு நினைச்சிட்டு இருந்தேன் அதற்குள் இவ்வளவும் நடந்திருச்சு” எனத் தன் காதல் கதையைச் சொல்லி முடித்தாள்.
“சுதா உங்க வீட்டில் சம்மதிப்பாங்களா.?”
“இனி தான் பேசணும் ஆரா, ஆனால் இரண்டு வருசம் காதலர்களாக இருக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்” எனச் சொல்லி தன் தோழியின் தோள் சாய்ந்தாள் சுதா.
“உனக்குப் பிடிச்சிருக்குன்னா எனக்குச் சந்தோசம் தான்டி” எனத் தலையாட்டி புன்னகைத்தாள் ஆரா.
“ஆரா நான் ஒண்ணு கேட்டால் கோவிச்சிக்க மாட்டியே”
“நீ க்ரிஷ் தவிர யாரை பத்தி பேசினாலும், எதைப் பத்தி கேட்டாலும் கோவிச்சிக் மாட்டேன் சொல்லு” என்றாள்,
“மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா, இப்போ க்ரிஷ் ஆகிட்டாங்க” அவள் தோளில் சாய்ந்திருந்தவள் எழுந்து அவளைப் பார்த்து சிரித்தாள்.
“ஏய் சுதா.!” போலியாய் கோபம் எட்டி பார்த்தது ஆராவுக்கு
“ஆரா உனக்கு க்ரிஷை பிடிச்சிருக்கு தானே”
“ஒரு அழகான ரயில் பயணத்தில் யாருனே தெரியாத குழந்தை நம்மளை பத்து சிரிக்கும் அதோட சிரிப்பை ரசிச்சிட்டு நாம அங்கிருந்து நகர்ந்திடுவோம், அதைத் தூக்கி கொஞ்சணும்னு தோணும் நம்ம தயங்கி நிற்ப்போம், அப்படித் தான் க்ரிஷ் என்னோட வாழ்க்கையில், என் வாழ்க்கை பயணத்தில் நான் முதலில் பார்த்த அழகான குழந்தை” என அவள் மன ஓட்டத்தைத் தன் தோழிக்கு தெளிவுபடுத்தினாள் ஆரா.
“நீ நினைத்தால் க்ரிஷ்ன்ற குழந்தையை எடுத்துக் கொஞ்சலாம் ஆரா, அதை உனக்கே உனக்குன்னு பத்திரபடுத்தி உன் கூடவே வச்சிகலாம்”
“இந்த குழந்தை ஹை க்ளாஸ் குழந்தை, நம்மகிட்ட வந்தாலும் வேற யாரையாவது புதுசா பார்த்தால் தாவிடும்” என்றாள் ஆரா.
“அந்த ஹை க்ளாஸ் குழந்தைக்கும் உன்னை தான் பிடிச்சிருக்காமே, கேள்விபட்டேன்” என்றாள் நக்கலாய் சுதா,
“ஏய் என்னடி கலாய்க்கிறியா.? நான் உதாரணத்துக்குச் சொன்னால், குழந்தையைத் தூக்கி கொஞ்ச சொல்ற” எனச் சிரித்தாள் ஆரா.
“சரி ஈவ்னிங் பார்ட்டிக்கு போகலாமா.?”
“பார்ட்டிக்கா.? நான் வரலை”
“என்னை விக்கி இன்வெய்ட் பண்ணியிருக்காரு, எனக்கெல்லாம் சனி ஞாயிறு லீஞவே இல்லை உனக்காக நான் லீவ் போட்டிருக்கேன், எனக்காக நீ பார்ட்டி வர மாட்டியா.? என் காதலுக்கு உதவ மாட்டியா ஆரா.?”
“சரி வர்றேன் புராணத்தை ஆரம்பிச்சிடாதே” பதில் கொடுத்தாள் ஆரா.
“ஆமா என்ன பார்ட்டி.?” கேள்வியாய் தோழியை நோக்கினாள் ஆரா
“போனால் தான் தெரியும் முன்னாடியே தெரிஞ்சிக்கணும்னா உங்க ஆள்கிட்ட போன் பண்ணி கேளுங்க” நக்கலாய் பேசியவள் கடற்கரை மணலை தன் உடையில் இருந்து தட்டியபடி எழுந்தாள்.
“க்ரிஷ் என்னோட ஃப்ரெண்ட்” உதட்டை சுளித்தவள், தன் தோழியின் கைபிடித்து எழுந்து நின்றாள்.
“ஓஓஓ ஃப்ரெண்டா.?”
“ஆமா ஃப்ரெண்ட், ஃப்ரெண்டா நினைச்சால் பார்ட்டிக்கு வரச் சொன்னான் அதான் வர்றேன்” எனச் சொன்னவளை பார்த்து புன்னகைத்தாள் சுதா.
*********************************
“ஹே லேட் ஆகுது சுதா சீக்கிரம் கிளம்பு” எனத் துரிதபடுத்தியபடி ப்ரேஸ்லெட் போல் இருந்த கைகடிகாரத்தை மாட்டிக்கொண்டிருந்தாள்.
“ஆரா வெயிட் பண்ணு இந்த ஹெர் ஸ்ட்ரைட்டே ஆக மாட்டேன்து பார்” எனப் பேசிய சுதா ஸ்ரெயிட்னிங் மெசினை தன் கூந்தலில் பயன்படுத்திக்கொண்டிருந்தாள்,
“ஸ்விட்ச் ஆஃப்ல இருந்தால் எப்படி டீ வேலை செய்யும்” எனச் சொன்னவள் ஸ்ட்ரெயிட்னிங் மெசினை வாங்கி ஐந்து நிமிடத்தில் நேர்த்தியான சிகை அலங்காரத்தை அவளுக்குச் செய்து விட்டிருத்தாள் ஆரா.
“வாவ் அழகா இருக்குடி ஆரா” எனத் தன் தோழியின் கன்னத்தைப் பிடித்துகிள்ளியவள் கருப்பு நிற பார்ட்டி கெவுன் போட்டிருந்தாள். அவளைப் போலவே கருப்பு நிற லாங் ப்ராக் அணிந்திருந்தாள் ஆரா, உடைக்கு ஏற்ற ஒப்பனை செய்து விட்டு இருவரும் கால் டாக்ஸி பிடித்துக் கிளம்பினர். குறைந்த நேர பயணத்தில் அந்த இடத்திற்க்கும் போய்ச் சேர்ந்திருந்தனர்,
கடற்கரையை ஒட்டியிருந்த பீச் ரிசார்ட் அது, வெல்கம் ஸ்மைலி என மின் விளக்குகள் மின்னி ஒளிர்ந்ததைப் பிரமிப்பாய் பார்த்தபடி நடக்க ஆரம்பித்தாள் ஆரா.
“மிஸ் ஆரா.!” என அங்கிருந்த பணிப்பெண் அவளை நெருங்கி முத்தினால் ஆன மாலையை அணிவித்தவள் கையில் ஒரு பூங் கொத்தையும் கொடுத்தாள்
“ஹே சுதா என்னடி நடக்குது இங்கே” என்று கம்மிய குரலில் கேட்டாள் ஆரா.
“எனக்கே தெரியலைடி நானே யார் அந்த ஸ்மைலின்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என நக்கலாய் பேசினாள் சுதா.
“நான் தான்டி அது, க்ரிஷ் அப்படித் தான் கூப்பிடுவார்”
“ஓஓஓ” என்று தெரியாதது போல் தலையாட்டிணாள் சுதா.
“அப்போ உனக்குத் தான் வரவேற்ப்பா இருக்கும், உன் ஆள் செஞ்சிருக்க வேலை தான் எல்லாமே” வாய்பொத்தி சிரித்தாள் சுதா.
“மேம் திஸ் வே” என்ற திசையைக் காட்டினாள் அந்தப் பணிப்பெண். அவள் காட்டிய பாதை முழுக்கச் சிவப்புக் கம்பளம் விரிக்கபட்டு வழி எங்கும் அலங்கார விளக்குகள் மின்னி மின்னி மறைந்தது, ஓங்கி உயர்ந்து நின்ற தென்னை மரங்களைப் பாம்பை போல் சுற்றி வளைத்திருந்தது வண்ண விளக்குகள். பிரமிப்பாய் பார்த்தபடி முன்னேறி நடந்தாள் ஆரா.
“ஆரா போயிக்கிட்டே இரு நான் வந்திடுறேன்” எனச் சொல்லி அங்கிருந்து போயிருந்தாள் சுதா. அவளிடம் இருந்து விலகிய சுதாவை கைப்பிடித்து இழுத்தான் விக்கி.
“நீயும் பின்னாடி போயிருந்த, பாஸ் என்னை பால் மாதிரி காய்ச்சிருப்பாரு” என கலங்கியபடி சொன்னான் விக்கி.
“அதான் வந்துட்டேன்ல, போயா” என்றாள் சுதா. அவள் சொல்லிய விதம் கேட்டு சிரித்தான் விவேக்.
சிவப்புக் கம்பளம் முடிவுற்ற இடத்தில் பாதையும் முடிவுற்றிருந்தது.
அங்கிருந்த ஒளிப்பலகையில் சிவப்பு நிற விளக்குள் மின்னி மின்னி மறைந்தது பொறுமையாய் வாசித்தாள் ஆரா.
“டெர்ன் ரைட் டூ சி யுவர் லைஃப்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது அதில் சொல்லியிருந்தது போல் வலது பக்கம் அவள் திரும்பியபோது, கரங்களில் ரோஜா கூட்டத்தையே ஏந்தி நின்றருந்தான் ஆதித் கிருஷ்ணா.
“ஹப்பிப் பர்த்டே மை டியர் ஸ்மைலி” எனப் பூங்கொத்தை கொடுத்தவன் அவளைக் கட்டியணைத்து உடனே விடுவித்தான். அவன் திடீரெனச் செய்த செயலில் அதிர்ந்து நின்றவள் புரியாது விழித்தாள்.
“எனக்கு ப்ர்த் டே வா.? இல்லையே” எனச் சொல்லிய போது கண்ணீர் அவள் கன்னம் தாண்டி இறங்கியது.
“ஆமா இன்னைக்கி உன்னோட ப்ர்த் டே ஸ்மைலி”
“எனக்கு ப்ரத்டேன்னு ஒண்ணு இல்லவே இல்லை” எனச் சொல்லி அங்கிருந்து நகர முற்பட்டாள். அவள் கரம் பிடித்துத் தடுத்து நிறுத்தியதோடு பார்ட்டி ஹாலுக்குள் அழைத்துச் சென்றான் அவள் பிறந்தநாளை கொண்டாடுவதற்காகப் பிறந்த நாள் கேக் காத்துக்கொண்டிருந்தது அந்தப் பார்ட்டி ஹாலில்.
“ஸ்மைலி நீ நேத்ரா ஆசிரமத்தில் வளர்ந்திருக்க, ஆனால் நீ மூணு வயசு குழந்தையாக இருக்குப் போதே அங்கே யாரோ வந்து விட்டிருக்காங்க, உனக்கு உன்னோட பிறந்த நாள் தெரியாது. அங்கிருப்பவர்களுக்கும் தெரியாது” என அவளைக் கேள்வியாய் பார்த்தான் மௌனித்துப் போனாள் பெண்ணவள்.
“சரி இதெல்லாம் இப்போ எதுக்கு என்கிட்ட சொல்றன்னு கேட்கிறீயா.? வா கேக் கட் பண்ணிட்டுப் பேசலாம்” என்றவன் அந்த ஹாலில் நீல நிற சின்ரல்லா கேக்கை காட்டினான்.
“க்ரிஷ் இதுக்கெல்லாம் நான் தகுதியான ஆளே இல்லை, உங்களோட அன்பு என்னைப் பயமுறுத்தது, உங்களோட ஆடம்பரம் என்னை மிரட்டுது” எனச் சொன்னவளின் கரங்கள் நடுங்க ஆரம்பித்தது. அவள் கரம் பற்றிக் கேக் வெட்டும் கத்தியை கொடுத்தவன்.
“முதலில் கேக் கட் பண்ணு ஆரா.!” தன்மையாய் அவள் விழி பார்த்துச் சொன்னான்.
“நான் ஒரு அநாதை, அநாதைக்கு ஏது பிறந்தநாள் நீங்களா ஒரு தேதியை சொல்லி என்னை இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணாதீங்க க்ரிஷ்.” எனச் சொல்லியவளின் விழிகளில் அடை மழைக்காலம் துவங்கியிருந்தது.
“ஹே ஸ்மைலி பர்த் டே டைம்லையா அழுவாங்க”
“பிறந்த உடனே குழந்தைங்க அழ தானே செய்யும் க்ரிஷ், நான் பிறந்தப்போ அழுதேனான்னு சொல்லறதுக்குக் கூட ஒரு உறவுன்னு எனக்கில்லை, அப்படி இருக்கும் போது இது தான் உன்னோட பிறந்த நாள்ன்னு என்னைக் கேக் கட் பண்ண சொல்றீங்க.? என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்” எனக் கேட்டவள் தன் கண்ணீரை துடைத்தெறிந்தாள்.
“நீ சொன்ன கேட்கமாட்ட ஸ்மைலி” என்றவன் அவளின் கரம் பற்றிக் கேக்கை வெட்ட செய்தவன் ஒரு துண்டு கேக்க்கை அவளுக்கு ஊட்டி விட்டான்.
“ஹப்பிப் பர்த்டே ஸ்மைலி” என்றான் புன்னகையுடன், மறுக்க இயலாமல் ஊட்டி விட்ட கேக்கை உண்டபடி,
“தேங்க்யூ க்ரிஷ்” எனச் சொல்லி அவனைப் பார்த்தாள்.
“என்ன பார்க்கிற ஆரா.?”
“இதெல்லாம் எதுக்காகச் செய்ற க்ரிஷ்”
“எல்லாம் உன் மேல் இருக்கிற காதல்ல செய்யுறது ஸ்மைலி”
“காதலா.? என் மேலா.? உன்னோட தகுதிக்கேற்ற பொண்ணைப் பாரு க்ரிஷ் ஒரு நல்ல ஃப்ரெண்டா சொல்றேன்”
“காதல் தான் உன் மேல் தான். என் தகுதிக்குகேற்ற நீ இங்கிருக்கும் போது நான் எதுக்கு வேற யாரையாவது தேடணும் ஆரா.?”
“என்னைப் பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது க்ரிஷ். ப்ளீஸ் விடுங்க”
“உன்னைப் பத்தி உனக்கே தெரியாதது எனக்குத் தெரியும் ஆரா, நீ முதலில் இந்தக் கேள்வி கேட்கிறதை நிறுத்து. என்னைப் பத்தி என்ன தெரியும் என்ன தெரியும்ன்னு”
“நான் தான் சொல்றேன்ல என்னோட பிறந்தநாள் எனக்கே தெரியாது அப்பறம் எப்படி உங்களுக்குத் தெரியும்.? இல்லாத பிறந்தநாளை கொண்டாட சொல்றீங்க” சற்று கோபமாகவே கேட்டாள்
“நான் உன்கிட்ட காதல் சொன்னப்ப நீ கேட்ட கேள்வியும் இது தான், என்னைப் பத்தி என்ன தெரியும்ன்னு காதலிக்கறீங்கன்னு கேட்ட.? அந்தக் கேள்வி உன்னைப் பத்தி தெரிஞ்சிக்கிற ஆர்வத்தைத் தூண்டுச்சி ஒரு டிடெக்டீவ் ஏஜென்ஸியை கன்செல்ட் பண்ணினேன் அவங்களை வச்சி உன்னோட கடந்த காலத்தைத் தாண்டியும் ஒன்ன கண்டுபிடிச்சேன் அது உனக்கே தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை ஆரா. உன்னைப் பத்தி தெரியுறதுக்கு முன்னாடி என்ன காதல் இருந்திச்சோ அதே காதலோட உன் முன்னாடி நிக்கிறேன்” என அவன் சொன்னதில் விதர்த்து போய் நின்றாள்.
“என்னோட கடந்த காலமா.? அதுவும் எனக்கே தெரியாத கடந்த காலம் நம்புற மாதிரி எதாவது சொல்லு க்ரிஷ்”
“எனக்குத் தெரியும் ஆரா நீ நம்பமாட்டன்னு, என்னோட வா” என அழைத்தான்.
“எங்கே.?”
“உன்னோட அம்மா அப்பாவை பார்க்க” என்ற அவன் சொன்ன வார்த்தையில் இருந்த ஒற்றை நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு அவனுடன் பயணிக்கத் துவங்கினாள், அவளை இத்தனை நாள் வதைத்துக்கொண்டிருந்த கேள்வியும் இது தான்.
“என்னுடைய அம்மா அப்பா யார்.? என்னை ஏன் ஆதரவில்லாத இல்லத்தில் சேர்த்து விட்டார்கள் நான் இப்படி அநாதையாகி போனதற்குக் காரணம் யார்” என்ற கேள்விகளுக்கு அவளுக்கு எப்போதும் பதில் கிடைத்ததே இல்லை. இன்று அதற்கு விடை என்னிடம் இருக்கிறது என்கிறான் அதன் மீதிருந்த ஆர்வ மிகுதியில் அவனின் கருஞ்சிறுத்தையின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள் ஆரா.
“நிஜாமாவே என்னோட அப்பா அம்மா எங்கே இருக்கிறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா.?”
“ம்ம்” என்ற சின்னத் தலையசைப்பு அவனிடமிருந்து.
“அய்யோ சுதாகிட்ட சொல்லாமல் வந்துட்டேன்” தலையில் அடித்துக்கொண்டு அவளுக்கு அழைப்பெடுக்க முயற்சித்தாள் ஆரா.
“அவசியம் இல்லை ஸ்மைலி நான் விக்கி கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டேன்”
“எங்க அம்மா அப்பா இந்த ஊர்லையா இருக்கிறாங்க.?”
“ஆமா.!”
“நீங்க அவங்களைப் பார்த்து பேசினிங்களா.?”
“இல்லை”
“ஏன் இப்படி ஒரு வார்த்தையில் பதில் சொல்றீங்க.?” அவள் கேட்கும் போது பாண்டிச்சேரியில் கடற்கரையை ஒட்டியிருந்த ஒரு பகுதிக்குள் கருஞ்சிறுத்தை ஊர்ந்து சென்றது. அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஒரு இடத்தில் காரை நிறுத்தினான்.
அந்த இடத்தைப் பார்த்து மிரண்டு போய் நின்றாள் ஆரா.
“என்ன க்ரிஷ் இங்கே கூட்டிட்டு வந்துருக்கீங்க”
“உங்க அப்பா அம்மாவை பார்க்க வேண்டாமா ஆரா.?”
“அதுக்கு இங்கேயே.?” பயத்துடன் அவள் கரம் பற்றினாள் ஆரா. அவள் எதிரே நின்றிருந்த அந்தக் கட்டடிம் அவளை மிரட்டியது, அது பாழடைந்த நிலையில் இருந்தது. எதோ அமானுஷ்யம் நிறைந்த வீடு போல் காட்சி தந்தது அந்த வீடு.
“க்ரிஷ் இது தான் என்னோட வீடுன்னு சொல்லிடாதே” பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
“ஆமாம்ன்னு சொன்னால் என்ன பண்ணுவ ஸ்மைலி.?”
“க்ரிஷ்”
“ஏய் பயப்படாதே ஆரா இங்கே இருந்து நடந்து போகலாம் வா”
அந்த மீனவ கிராமத்தின் கடற்கரைக்கு அவளை நடக்க வைத்து அழைத்துச்சென்றான் பிறை நிலவு என்று முழுநிலவாகும் என்ற ஏக்கத்தில் வானம் பார்த்திருந்த கடல் தன் கொந்தளிப்பாய் அலைகளாய் வெளிபடுத்தியது,
“அம்மா அப்பாவை காட்டுறேன்னு இங்கே கூட்டிட்டு வந்திட்டு இங்கே கூட்டிட்டு வந்திருக்க க்ரிஷ்.?”
“இனி உன்னோட அப்பாவும் நான் தான், உன்னோட அம்மாவும் நான் தான், எல்லாத்தையும் விட உன் கணவனும் நான் தான்” எனச் சொன்னவன் அவள் வலது கையில் ப்ளாட்டிணம் ப்ரேஸ்லெட்டை அணிவித்தான்.
“என்ன க்ரிஷ் இதெல்லாம்”
“பிடிச்சிருக்கா பாரு”
“க்ரிஷ்.! நான் என்ன கேட்டேன் நீ என்ன பண்ணிட்டு இருக்க”
“நீ கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் இந்த ப்ரெஸ்லெட் பதிலாய் இருக்கும்” என அவன் சொல்ல, இருளில் ஒன்றும் தெரியாததால் தன் செல்பேசியை எடுத்து டார்ச்சை ஆன் செய்தாள்.
சில எழுத்துக்கள் அதில் பொறிக்கப்பட்டிருந்தது அதை வாசிக்க ஆரம்பித்தவளின் விழிகளில் கண்ணீர் கசிய துவங்கியது. அமைதியாய் அவளையே பார்த்திருந்தவன்.
“ஆரா அழாதே அம்மா அப்பா பார்த்திட்டு இருப்பாங்க” எனச் சொன்னவுடன் அங்கும் இங்கும் தலையைத் திருப்பிப் பார்த்தாள்.
“எங்கேயும் இல்லை உன் எதிரில் தான் இருக்காங்க” என்றவன் பொங்கி எழும் அலைக் கடலைக் காட்டினான்.

