Loading

அத்தியாயம்: 11

 அவனுடைய கறுஞ்சிறுத்தையில் ஏறி அமர்ந்திருந்தவளுக்கு அவனுடன் செல்லவே விருப்பம் இல்லை. அவளுடைய பணத்தேவைக்காக இவை எல்லாம் செய்ய வேண்டியதாக இருப்பதாய் அவள் மீது அவளுக்கே கோபம் வந்தது. அருகில் இருந்தவனோ அமைதியாய் அமர்ந்தபடி பாடலை ஒலிக்க விட்டான்.

மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே என்ற மதுஶ்ரீயின் ரம்மியமான குரலும் ஏஆர் ராஹூமானின் இசையும் காரை நிரப்பியருக்க. தன்னை மறந்து இமை மூடி பாடத் துவங்கினாள்.

“மச்சான் எப்போ வரப் போற.?

மச்சான் எப்போ வரப் போற.?

பத்து தலைப் பாம்பா வந்து முத்தம் தரப்போற” எனத் துவங்கி பாடல் முழுவதையும் அவள் பாடி முடித்து விழி திறந்த போது காரை நிறுத்தியிருந்தவன் அவளின் குரலில் மயங்கி போய் அவளையே பார்த்திருந்தான். ஏற்கனவே அவள் குரலுக்குத் தாளமிட்டு ரசித்தவன் ஆயிற்றே

“அய்யோ.! சாரி” எனத் தன் தலையில் தட்டி நாக்கை கடித்துக்கொண்டாள் ஆரா.

“நைஸ் வாய்ஸ் ஆரா.! லவ்லி சிங்கிங்”என ஆதித் அவளைப் பாரட்டினான்,

“தேங்க்யூ சார்” என்றாள், தன் பெயரை சொல்லி இவள் என்று தான் அழைப்பாள் என்ற கோபம் எட்டி பார்த்தது. இந்தக் காதலை மனதில் வைத்துக்கொண்டு அவளிடம் வதைபடுவதையும் ஆனந்தமாய் ஏற்றுக்கொண்டான் இந்த ஒரு தலைக் காதலன்.

 இப்போது கூட இவளுடன் நேரம் செலவழிக்க ஆவல் கொண்டு தான் இந்தப் பெண் பார்க்கும் நாடகம் எல்லாம். அவளின் அழகில் அவன் மயங்கி விடவில்லை, நடு இரவிலும் தன்மானத்துடன் அவனைக் கடந்து சென்ற புயல் அவனை அறியாமலே அவன் மனதில் மையல் கொண்டு விட்டது. அவளிடம் எப்படித் தன் காதலை சொல்வது என்று தவித்துப் போனான்.

அவளுடைய திமிரான பேச்சை அவன் ரசித்தாலும் எங்கே தன்னை வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என்ற அச்சத்தில் மனதில் இருப்பதை மறைத்திருந்தான்.

‘ஹே ஸ்மைலி தினமும் என்னை இம்பெரஸ் பண்ணிகிட்டே இருக்கீயே.? சச் எ டேலண்டட் க்ர்ள்’ எனத் தன் அகத்தோடு பேசிக்கொண்டான்.

“சார்.! டூ த்ர்ட்டிக்கு தான் ஷோ இப்போவே எங்கே போறோம்.?”

“அந்தப் பொண்ணு வீட்டுக்கு தான் மனோகிட்ட அட்ரெஸ் வாங்கிட்டேன்” எனப் பேசியபடி மீண்டும் காரை இயக்க ஆரம்பித்தான்.

“இந்த மண்டகசாயம் பண்ணுற வேலை இருக்கே மேட்ரிமோனி தானே நடத்துறார் எதுக்கு இந்த டிடெக்டீவ் வேலையெல்லாம்.?” வாய் விட்டு புலம்பினாள் ஆரா.

“நான் சொல்லி தான் மனோகர் இதெல்லாம் பண்ணுறார்” என்றவன் அந்தப் பெண்ணின் வீடு இருக்கும் பகுதியில் தன்னுடைய கருஞ்சிறுத்தையை ஓரமாக நிறுத்தினான்.

“ஆரா.! இறங்கி வாங்க”

“எங்கே.?”

“அந்தப் பொண்ணைப் பலோ பண்ணணும்”

“அய்யோ இதென்னடா பொழப்பு” தலையில் அடித்துக்கொண்டு இறங்கினாள் ஆரா.

“சார்.! நான் ஒரு ஐடியா சொல்லவா.?”

“ம்ம் சொல்லு இப்படி அவங்களை ரகசியமாய் ஃபலோ பண்ணுறதுக்கு நேரடியாய் போய்ப் பேசிடலாமே”

“ஏய் இடியட்!! அந்தப் பொண்ணு இந்தக் கல்யாணத்துக்கு விரும்பி தான் சம்மதிச்சிருக்கா இல்லை யாரவது ஃபோர்ஸ் பண்ணி இருக்காங்ளான்னு தெரி்ஞ்சுக்க வேண்டாமா.? எனக்கு மட்டும் பிடிச்சு அந்தப் பொண்ணுக்கு என்னைப் பிடிக்காமல் சம்மதம் சொல்லியிருந்தால் வாழ்க்கை முழுக்க நரகம் தானே.?”

“நல்லவனா இருப்பானோ.?” எனப் புலம்பிய படி அவனைப் பார்த்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கிறே.?” அதட்டலாய் ஒலித்தது ஆதித்தின் குரல்.

“இல்லை உங்களைப் பார்த்தால் ஆன்ட்டி ஹீரோ மாதிரி இருந்துச்சு அதான்.?”

“ஆன்ட்டி ஹீரோவா.?” புரியாது விழித்தான்

“ஆன்ட்டி இந்தியன் மாதிரி, இது ஒரு ரகம். தான் காதலிக்கிற பொண்ணோட அனுமதி இல்லாமல் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறவன் தான் ஆன்ட்டி ஹீரோ, இதில் நிறைய வெரைட்டீஸ் கூட இருக்கு” என வாய்மூடி புன்னகைத்தாள் ஆரா. அவளின் விளையாட்டான பேச்சை ரசித்திருந்தவன்.

“எனக்கு ஒண்ணும் புரியலை”

“சிம்பிளா சொல்லணும்னா இப்போ இருக்க ரக்கட் பாய் தான் ஆன்ட்டி ஹீரோ”

“இப்படியே போயிக்கிட்டு இருந்தால் ரக்கட் பாயாய் மாறி விட வேண்டியது தான்” எனப் புன்னகைத்துச் சொன்னான். அவன் சொன்னதின் அர்த்தம் பாவம் ஆராவுக்கு தான் புரியாமல் போனது.

அந்தப் பெண்ணின் வீட்டு வாயிலில் இருவரும் நின்றுக்கொண்டிருந்தனர்.

“பொண்ணு பேர் என்ன ஆரா.?”

“காயத்ரி” என அவள் சொன்னாள்.

“இப்படியே வாசலில் நின்னுகிட்டு என்ன பண்ணப்போறீங்க, இப்போ என்ன காயத்ரி மனசுல வேற யாரவது இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கணும் அவ்வளவு தானே நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்” என அவள் களத்தில் இறங்கினாள்.

“ஆர் யூ ஷ்யர்”

“வேலைன்னு வந்துட்டால் இந்த ஆரா வேற மாதிரி” என்றவள் நீங்க போய்க் கார்ல இருங்க எனச் சொல்லி ஆதித்தை அனுப்பி வைத்துவிட்டு அந்தப் பெண்ணின் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியிருந்தாள்.

அவள் அழைப்பு மணியை அழுத்திய நொடியில் அவள் வாய்பொத்தி தன் கரத்தோடு ஏந்தியவன், கார் அருகே கொண்டு வந்து விடுதலை செய்தான்.

“சார் என்ன பண்ணுறீங்க.? இப்படித் தூக்கிட்டு வந்துட்டீங்க முதல்ல இறக்கி விடுங்க”

“ஆரா.! சைலண்ட்” என்றவன் அவள் இதழில் தன் ஒற்றை விரலை வைத்து அவள் பேசுவதைத் தடுத்திருந்தான்.

அப்போது அவள் அழைப்பு மணி அழுத்திய வீட்டின் கேட்டை திறந்துக்கொண்டு ஒரு பெண் வந்தாள் நீல நிற சுடிதார் அணிந்திருந்தவள், அங்கும் இங்கும் தலையைத் திருப்பிப் பார்க்க,

“ஆரா கெட் இன் டூ தி கார்” எனக் கட்டளையாய் சொல்லி ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர்ந்து கொண்டான் அவன் சொன்னதைத் தட்டாமல் அவளும் கருஞ்சிறுத்தையினுள் ஏறி இருக்கையில் அமர்ந்தாள் ஆரா.

“இவங்க காயத்ரி தான்” என அவள் சொல்லும் போது காயத்ரியோ யாருக்கோ அழைப்பு விடுத்து பேசிக்கொண்டிருந்தாள், அதன் பின் அவள் உள்ளே சென்று விட.

“சார் நான் ஃப்ரண்டா பேசி அவங்க மனசுல வேற யாரவது யாருக்காங்களான்னு உடனே கண்டுபிடிச்சிருப்பேன், ஏன் சார் இப்படிப் பண்ணீங்க” எனக் கேள்வி கேட்க,

“நீ வேலைய உடனே முடிச்சுட்டா நம்ம எப்படி மீட் பண்ணுறது” வாய்க்குள் முனுமுனுத்தான்.

“என்ன சார் சொன்னீங்க.?”

“ஆரா.! நீ போய்க் கேட்டதும் அந்தப் பொண்ணு உண்மையைச் சொல்லிருவாங்கன்னு நினைக்கிறியா.? தன்னோட மனசில் இருக்கிறவங்களை அவ்வளவு சீக்கிரம் வெளிய சொல்லிட மாட்டாங்க, ஏன்னா காதல் ஆடும் கண்ணாமூச்சி அப்படி, அதைச் சம்பந்தபட்டவரிடமே சொல்ல விடாது” அவன் சொன்ன நொடியில் பட்டென அவனைத் திரும்பி பார்த்தாள் ஆரா.

 அவளின் விழியின் வீச்சில் இருந்து தப்பித்துக்கொள்ள அவளைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தவன் தன் முகத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டான்.

“உங்களுக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கா சார்.?”

‘இவளிடம் எவ்வாறு சொல்லி புரிய வைப்பது சொல்லாமல் இந்தக் காதல் தான் அவளுக்குப் புரியாதோ.? அடிப்பெண்ணே என் ஆழ்மனதில் நிறைந்திருப்பவள் நீ தானடி எனச் சொல்ல ஏன் தயங்குகிறேன்’ எனத் தன் மனதோடு பேசிக்கொண்டான் ஆதித்.

அன்று மீரா கிருஷ்ணனின் காதலுக்காகக் காத்திருந்தாள், இன்று நம் கலியுக கிருஷ்ணனோ இந்த ஆராவின் காதலுக்காகக் காத்திருக்கிறான்.

“இல்லை ஆரா.! அந்தப் பொண்ணு மனசில் யாரும் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் தான் நான் அடுத்த முடிவை எடுக்க முடியும்” எனச் சொல்லி அவள் விழியை எதிர்கொண்டான்.

“அடுத்து என்ன ப்ளான் சார்.? பலோ பண்ணுறது தானே”

“ஆமாம், அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும் ஆரா”

“என்கிட்டையா.?”

“ஆமாம்”

“அது வந்து. நீ இன்னும் நான் திட்டினதையே நினைச்சிட்டு இருக்கியா.?”

“ச்சா ச்சா அப்படிலாம் இல்லை சார், நீங்க சாரி சொன்ன போதே மறந்துட்டேன் சார்”

“நான் உன்னோட க்ளையண்ட் என்னை நீ சார்ன்னு கூப்பிடணும்னு அவசியம் இல்லை, நானும் இதைச் சொல்லிக்கிட்டே இருக்கேன் , பட் யு ஆர் ரீப்பீட்டிங் தி சேம்”

“அப்படியே எல்லாரையும் கூப்பிட்டு பழகிடுச்சு, இது நான் வொர்க் பண்ணுற இடத்தில் இருக்கும் ரூல்ஸ். மரியாதை இல்லாம பேசினால் மண்ட கசாயம் என் மண்டைய பொளந்திரும்”

“ஓகே அதை இப்போ மாத்திக்கலாமா.?”

“எப்படி.?”

“நீ என்னை க்ளையண்டா நினைக்கிறதால தானே சார்ன்னு சொல்லுற, நம்ம ஏன் ஃப்ரெண்ட்ஸா இருக்கக் கூடாது”

“அய்யோ வேண்டாம், ஃப்ரெண்டாகிட்டால் வாடா போடாலாம் வரும் பரவாயில்லையா??”அவள் சொன்னதைக் கேட்டு அழகாய் இதழ் மலர்ந்தான்.

“இந்த நிமிசத்தில் இருந்து நீயும் நானும் நண்பர்கள், நீ வாடா போடா என்ன வேணும்னாலும் சொல்லலாம்”

“ஃப்ரெண்ட்ஸா??”

“ஆமா ப்ரெண்ட்ஸ்!!”

“அப்போ நான் உங்களை திட்டலாமா??”

“தாரளமா திட்டலாம்”

“ஆ!! அடிக்கலாம்”

“அடிக்கலாமே இதில் எந்த தப்பும் இல்லையே”

“சரிடா க்ரிஷ்!! அப்போ இந்த நிமிஷத்துல இருந்து நீயும் எனக்கு தோஸ்த்து!!” என அவள் சொன்ன நொடியில் அவன் மனம் இறக்கையுடன் வானில் பறப்பதாய் போல் உணர்ந்தான். அவள் இதழ்கடையோரம் தவழ்ந்த புன்னகையைப் பார்த்து.

“தெட்ஸ் குட் ஸ்மைலி”

“ஸ்மைலியா.?” அவள் விழி அகல அவனைப் பார்த்து கேட்க,

“ம்ம் ஆமா இதோ இந்த ஸ்மைலி மாதிரி” என அவனிடம் இருந்த ஸ்மைலி பந்தை தூக்கி அவள் மீது வீச,

“ஹே க்ரிஷ் நீங்க ரொம்ப நாட்டி” என இன்னும் அழகாய் புன்னகைத்தாள் ஆரா. அவனும் பதிலுக்குப் புன்னகைத்தான், அவள் ஒவ்வொரு முறை க்ரிஷ் என்று அழைக்கும் போது அதைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது, காதலைச் சொன்னால் நட்பும் போய்விடுமோ என்ற பயமும் ஏற்பட்டது.

“க்ரிஷ்.! க்ரிஷ்.! காயத்ரி வீட்டை விட்டு வெளிய வர்றா பாருடா” காயத்ரியோ அலைப்பேசியில் யாரிடமோ பேசியபடி நடக்கத் துவங்கினாள் அவள் தெருமுனை செல்லும் வரை காத்திருந்தவன் அதன் பின் வாகனத்தை இயக்க ஆரம்பித்தான்.

அவள் தெருமுனையை அடைந்தவுடன் உயர் ரக இருசக்கர வாகனத்தில் கருப்பு நிற ஹெல்மெட் அணிந்திருந்த ஒருவன் அவள் முன் வந்து நிற்க, அவன் இருசக்கர வாகனத்தின் பின்னே காயத்ரி அமர, அதி வேகத்தில் அந்த வாகனம் புறப்பட ஆரம்பித்தது.

“ஓ மை காட் க்ரிஷ் இவ்வளவு வேகமா போறாங்க பாரு. ஃபலோ பண்ணுடா” என ஆரா துரிதபடுத்தினாலும் சற்றும் விருப்பம் இன்றி மிகவும் குறைவான வேகத்தில் உருட்ட ஆரம்பித்தான்.

“க்ரிஷ்!! இப்படி உருட்டுகிட்டு இருந்தன்னு வையேன் நீ தேறமாட்ட”

“அவங்க போகட்டும் ஸ்மைலி அவங்க எங்கே போறாங்கன்னு நமக்குத் தெரியும்ல”

“அந்தப் பையனோட இந்தப் பொண்ணைப் பார்த்ததும் நீங்க இப்படிப் பேசுறீங்க, ஒருவேளை இரண்டு பேரும் ஃப்ரண்ட்ஸா கூட இருக்கலாம்ல நம்மளை மாதிரி”என ஆரா சொன்ன போது அவன் அடி நெஞ்சில் இனித்தது.தன்னை நண்பனாய் ஏற்றுக்கொண்டாள் என்ற உற்சாகத்தில் அவனுடைய வாகனத்தின் வேகத்தைக் கூட்டினான்.

“ஹே ஸ்மைலி தேங்க்யூ” என்று புன்னகைத்தான் ஆனால் ஆராவோ அந்தப் பெண்ணுக்கு அவன் நண்பனாய் இருப்பானோ என்று சொன்னதில் தான் க்ரிஷிடம் இவ்வளவு உற்சாகம் பிறந்ததாய் புரிந்துக்கொண்டாள்.

“தேங்கஸ்லாம் எதுக்கு க்ரிஷ் பேக்ட்டை சொன்னேன்” எனப் பேசியபடி அவள் சாலையைப் பார்த்திருந்தாள்.

*************************

“ராஜேஷ்.!” பைக் ஓட்டிக்கொண்டிருந்தவனை அழைத்தாள் காயத்ரி.

“சொல்லு காயூ”

“எனக்கு நம்மளை யாரோ ஃபலோ பண்ணுற மாதிரி தோணுது”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை காயூ, நீ ஏற்கனவே குழப்பத்தில் இருக்க அதான் அப்படித் தோணுது”

“நமக்குப் பின்னாடி வர்ற ஜாக்குவாரை எங்க வீட்டுகிட்டையே பார்த்தான்” என்று காயத்ரி சொன்ன போது,

“நீ ரொம்பக் குழப்பிக்காதே காயூ, நம்ம இப்போ சோழிங்கநல்லூர் சிக்னல்ல ட்ர்ன் ஆகிடுவோம் அப்போ பார்த்துக்கலாம், அந்தக் கார் நம்மளை ஃபலோ பண்ணுதான்னு” எனச் சொல்லியபடித் தன் இருசக்கர வாகனத்தை இயக்கினான் ராஜேஷ்.

அவன் சொன்னதைப் போல் சோழிங்கநல்லூர் சிக்னலில் இடதுபக்கம் திரும்பி கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி பயணித்தபோது ஆதித் கிருஷ்ணாவின் கருஞ்சிறுத்தையுத் மெதுவாய் திரும்பியது.

“ஏய் ராஜேஷ் அந்தக் காரும் திரும்புது பாரு பாரு”

“ஏய் காயூ கொஞ்சம் அமைதியா வா, நான் முன்னாடி பார்த்து வண்டி ஓட்டுவேனா.? பின்னாடி பார்ப்பேனா.? ஏன் இப்படிப் பயந்து சாவுற.?”

“எங்க வீட்டில் வேற ஒருத்தனை பார்த்து கட்டி வைக்க முடிவு பண்ணிட்டாங்க, இந்தச் சமயத்துல ஒரு கார் நம்ம இரண்டு பேரையும் ஃபலோ பண்ணுது எனக்குப் பயமா இருக்காதா ராஜேஷ்.?”

“பயந்து சாவதே காயூ இரு வண்டியை நிறுத்துறேன்” எனக் கத்திக்கொண்டே சாலையின் ஓரத்தில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது அதி வேகமாய் இவர்களைக் கடந்து சென்றது அந்தக் கருஞ்சிறுத்தை.

“க்ரிஷ் நான் தான் சொன்னேன்ல அவங்களுக்கு நம்ம காரை பார்த்து டவுட் வந்திடுச்சு, அவங்க பயந்துட்டாங்க போல, வா நம்ம போய் இதான் உண்மைன்னு சொல்லிடலாம்” என ஆரா ஆதித் கிருஷ்ணாவுடன் பேசிய போது,

“அது என்னோட வேலை இல்லை ஆரா” கடுகடுத்தான் ஆதித் கிருஷ்ணா.

“என்ன சொல்ற க்ரிஷ் அவங்களை இவ்வளவு நேரம் ஃபலோ பண்ணிட்டு அது உங்களோட வேலை இல்லைன்னு சொன்னால் என்ன அர்த்தம் க்ரிஷ்” தெளிவாய் கேட்டாள். அவள் இப்படிக் கேட்டவுடன் வேகத்தைக் கூட்டி வாகனத்தை இயக்கினான் அவன் ஒவ்வொரு முறை கியரை போட்ட போதும் பதறினாள் ஆரா.

“என்ன பண்ணுற க்ரிஷ் எதற்காக இவ்வளவு வேகமாகப் போற?”

“ஆரா.! நான் அந்தப் பொண்ணே ஃபலோ பண்ணுறதுக்காக வரலை, அப்படி ஒரு வேலை பண்ணுறதாக இருந்தால் நான் இப்படி நேரில் வந்திருக்க மாட்டேன் டிடேக்ட்டிவ் ஏஜன்ஸிக்கிட்ட கொடுத்திருப்பேன்”

“அப்போ எதுக்காக என்னை வர வச்ச க்ரிஷ்.?” அவன் பதிலேதும் பேசமால் சாலையைப் பார்த்தபடி அவன் கருஞ்சிறுத்தையின் வேகத்தைக் குறைத்தான். ஏங்கே எதாவது சொன்னால் அவன் காரில் மட்டுமின்றி அவனுடைய வாழ்வில் இருந்து ஒட்டுமொத்தமாய் விலகி சென்று விடுவாளோ என்ற பயம் அவனை ஆட்கொண்டது, அவனுக்கு வரும் பிரச்சனைகளை எளிதில் கையாள்பவன் இன்று இவள் முன் திணறி போய் நிற்கிறான்.

“க்ரிஷ் சொல்லு.? என்ன தான் நினைச்சிட்டு இருக்க” என்க,

‘உன்னைதான் நினைச்சிட்டு இருக்கேன்னு சொல்ல ஆசை தான் ஸ்மைலி’ என மனதுக்குள் நினைத்தான்.

“எனக்கு இந்தப் பொண்ணைப் பிடிக்கலை அதான்”பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லி வைத்தான்.

“அப்போ வேற ஃபரொஃபைல் கேட்டிருந்தால் காட்டியிருப்பேன் க்ரிஷ்.?” எனப் புரியாது விழித்தாள்.

“நீங்க வச்சிருக்க எந்த ஃப்ரொஃபைலும் எனக்குப் பிடிக்கலை ஆரா”

“நீயூவா இன்றைக்கி ஃப்ரொஃபைல் அப்லோட் ஆகியிருக்கும் எடுத்து அனுப்ப சொல்லவா.? சுதா ஆபிஸ்ல தான் இருப்பாள்” ஆரா விளக்கி கொண்டிருக்கும் போதே.

“இல்லை வேண்டாம், அங்கே ஒரு காஃபி ஷாப் தெரியுது போலாமா.?”

“வாட் நான் என்ன பேசிகிட்டு இருக்கேன் நீ என்ன பேசுற க்ரிஷ்.? அஸ் எ ஃப்ரெண்டா கேட்கிறேன் சொல்லு, உங்களோட எக்ஸ்பேக்டேசன் சொல்லுங்க நான் பார்த்து தர்றேன் என்னோட இரண்டு மாச சம்பளம் நீங்க சொல்லுற வார்த்தையில் தான் இருக்கு” எனக் கெஞ்சலாய் கேட்டாள் ஆரா.

“என்னோட எக்ஸ்பெக்டேசனை காஃபி சாப்பிட்டுகிட்டே சொல்லாம்ல”

“ம்ம்” என்ற தலையசைப்பு மட்டுமே ஆராவிடமிருந்து. காரை விட்டு இறங்கி காபி ஷாப்பினுள் நுழைந்தனர் இருவரும். ஆர்டர் செய்யப் போவதென்னவோ காஃபி ஷேக் என்றாலும் மெனுவை புரட்டி புரட்டி பார்த்துக்கொண்டிருந்தாள் ஆரா.

“டிசைட் பண்ணியாச்சா.?” ஆதித் கிருஷ்ணாவின் குரல் கேட்டு தலை உயர்த்திப் பார்த்தாள்.

“காஃபி ஷேக்” என அவள் பதில் கொடுத்துவிட்டு மீண்டும் மெனு கார்டினுள் தலையைப் புதைத்தாள்.

“வேற எதாவது பார்க்கிறாயா ஸ்மைலி.?”

“காஃபி ஷேக் போதும்” எனச் சொன்ன பிறகு.

“ப்ரோ இரண்டு காபி ஷேக்” என்று ஆர்டர் கொடுத்தான். தயாராகும் போதே நறுமணம் வீச துவங்கிய காஃபி வாசனையை உள் இழுத்து.

“ஸ்மெல் நல்லா இருக்குல க்ரிஷ்”

“ம்ம்ம்” என்ற தலையசைப்பு அவனிடமிருந்து.

“சொல்லு உன்னோட எக்ஸ்பெக்டேசன் என்ன.? காஃபி வர்றதுகுள்ள பேசி முடிச்சிடலாம்”

“என்னோட எக்ஸ்பெக்டேசன்ல இருக்க ப்ரொஃபலைஸ் நீங்க தேடினாலும் கிடைக்காது ஆரா”

“அப்படியா.? உங்களை மாதிரி மல்ட்டி மில்லினர் பேமிலியா இருக்கணுமா.? அதெல்லாம் மண்டகசாயத்துகிட்ட சொன்னால், அய்யோ சாரி மனோகர் சார்கிட்ட சொன்னால் முடிச்சு கொடுத்திடுவார்”

“என்னைப் பார்த்தால் அப்படியா தெரியுது ஆரா.? நோ எனக்கு ரிச் க்ர்ள் வேணும்னு சொல்லலையே”

“இல்லை உங்களுடைய ஸ்டேடஸ்க்கு எதிர்பார்க்கிறிங்களோன்னு நினைச்சேன்”

“எனக்கு வேண்டிய பொண்ணோட ப்ரொஃபைல் உங்களால கொண்டு வரவே முடியாது, ஷி இஸ் நாட் எ ப்ரொஃபைல்” எனத் தெளிவாய்ச் சொன்னான்.

“அப்போ லவ்வா க்ரிஷ்.?”

“ஆமாம்”

“வீட்டில் சொல்லலையா.?”

“அவளிடமே சொல்லலை”

“ஏன் சொல்லாமல் இருக்கீங்க பிடிச்சிருந்தால் சொல்றது ஒண்ணும் தப்பே கிடையாது”

“அப்போ சொல்லிடவா ஸ்மைலி” குறுநகையுடன் கேட்டான்.

“ம்ம் சொல்லுங்க இப்போவே கூடக் கால் பண்ணி சொல்லுங்க, நான் மனோகர்கிட்ட சொல்லிடுறேன் அவரோட லவ்வர் கூட நான் தான் சேர்த்து வச்சேன்னு”

“இல்லை ஆரா.! அப்படிச் சொல்லாதே நெக்ஸ்ட் டைம் வரும் போது உன்னோட ப்ரொஃப்லை அட் பண்ணி அனுப்ப சொல்லு நான் கண்டிப்பா ஓகே பண்ணிடுவேன்னு சேர்த்து சொல்லு”

“வாட்.?” அதிர்ந்து விழித்தாள் அவனின் ஸ்மைலி. அவனோ குறுநகையுடன் அவள் விழிபார்த்து அமர்ந்திருந்தான்.

காதல் சொன்ன கணமே

அது கடவுளை கண்ட கணமே

காற்றாய் பறக்குது மணமே

ஓஓஓஓஓ

எகிறிக் குதித்தேன்

ஆம் நம் நாயகனின் மனம் எகிறிக் குதித்தது, அவன் மனதில் சுமந்திருந்த காதலை இன்று அவளிடம் இறக்கி வைத்துவிட்டான் அவன் காதலை ஏற்பாளா ஆரா.?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்