Loading

அத்தியாயம்:14

“டியர் ஸ்மைலி நான் சொல்றதைக்கேட்டு நீ கவலை படக் கூடாது, உன்னோட அடையாளத்தை உனக்கு தெரியபடுத்தணும்னு நான் நினைச்சேன் அதுக்காக மட்டுமே இந்த முயற்சி” என்றவன் அவள் விழி பார்த்து சொல்ல ஆரம்பித்தான்.

கடந்த ஒரு மாத காலம் அவன் ஆராவை சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை அவன் காதலை சொன்னால் என்னை பற்றி என்ன உனக்கு தெரியும் என்று கேட்பாள், ஆராவை எந்த சூழ்நிலையிலும் இழந்து விடக்கூடாதென்று மனம் படபடத்தது. அந்த படபடப்பே அவளின் கடந்த காலத்தை கிளிர்ந்தெடுக்க காரணமாகி போனது.

“நீ வரும்போது ஒரு வீடு பார்த்தியே”

“ம்ம்ம்” என்ற பதில் மட்டுமே அவளிடம் இருந்து

“அதுதான் நீ உங்க அம்மா அப்பவோட மூணு வயசு வரைக்கும் உன்னோட குழந்தை பருவத்தை அனுபவிச்ச மாளிகை” என்ற போது அவனின் கரம் பற்றியவள்.

“என்னை அங்கே கூட்டிட்டு போறீயா க்ரிஷ்”

“இல்லை ஸ்மைலி நான் அதை செய்யவே மாட்டேன், அதை பார்த்தால் நீ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிடுவ, அதை மட்டும் என்கிட்ட கேட்காதே” என அவன் மறுத்தவுடன் அவனை புரிந்துக்கொண்டாள் ஆரா, தன்னை காயப்படுத்தி விடக் கூடாது என்று நினைக்கும் அன்பு அவளை திணற செய்தது.

“உன்னோட அம்மாவும் அப்பாவும் இந்த கடலில் தான் தற்கொலை பண்ணிகிட்டாங்க. ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு என்னால காரணம் கண்டு பிடிக்க முடியலை. இந்த கடலோட கடலாய் சங்கமிச்சிட்டாங்க. மூணு வயசில இருந்த நீ மட்டும் இந்த கடற்கரையில் நிண்ணு ரொம்ப நேரம் அழுதிருக்க ஸ்மைலி, இந்த ஊரை சேர்ந்த ஒருத்தர் உன்னை நேத்ரா இல்லத்தில் விட்டிருக்காங்க, அந்த வீடு ரொம்ப நாளா பாழடைஞ்சு போயிருக்கு, அந்த வீட்டுக்கு இது வரைக்கும் யாரும் உரிமை கொண்டாட வரலை, டாக்குமெண்ட யார் பேரில் இருக்குன்னு விசாரிக்க சொல்லியிருக்கேன் ஆரா.” என அவன் சொன்னபோது அவன் அணிவித்து விட்ட ப்ளாட்டினம் ப்ரேஸ்லெட்டை வருடினாள். டாட்டர் ஆஃப் சமுத்ரா (daughter of samudra) கடல் தாயின் மகள் என்பதை வருடினாள் இந்த முறை அவளுக்கு கண்ணீர் வரவில்லை. விழி இமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள்.

“நீ சந்தேகபடுவன்னு எனக்கு தெரியும் உன்னை பத்தின டாக்குமென்ட்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி தான் வச்சிருக்கேன், அதிலும் உன்னோட ப்ர்த் சர்டிபிகேட் பத்திரமாக இந்த ஃபைலில் இருக்கு” என்று ஒரு கோப்பை அவளிடம் கொடுத்தான். ஆர்வத்துடன் அதை வாங்கி தன் கைப்பையில் பத்திரபடுத்தி வைத்துக்கொண்டாள்.

“க்ரிஷ்! நீ என்னை ரொம்ப நெருங்கிட்ட”

“ஓ சாரி தள்ளி உட்கார்ந்துகிறேன்” என அவன் நகர்ந்து அமர்ந்து கடலை வெறித்தான்.

“க்ரிஷ்” அவளின் அழைப்பு அவனுக்குள் ஜில் உணர்வை ஏற்படுத்தியது.

“நான் இங்கே சொன்னேன்” என்று இதயத்தை சுட்டிகாட்டி புன்னகைத்தாள். அவன் அவள் இதயத்தை நெருங்கிவிட்டாதாய் அவள் சொல்லியிருந்தாள்.

“ஓ மை காட்” என்றவன் அவளருகே நெருங்கி அமர்ந்தான்.

“என்ன பத்தி இவ்வளவு விசயம் தேடி கண்டுபிடிச்சு என் கிட்டையே சொல்லியிருக்க க்ரிஷ், எனக்காக யாரும் இவ்வளவு செஞ்சதில்லை, என்னை பார்த்து பரிதாப படுவாங்க, அப்பா அம்மா இல்லாதவன்னு கேலி கிண்டல் பண்ணுவாங்க இவங்களுக்கு மத்தியில் நீ ஜெம்மா தெரியுற க்ரிஷ். தேங்க்ஸ் ஃபார் கம்மிங் இன் மை லைஃப் க்ரிஷ். என்னை எனக்கே அடையாளபடுத்திட்ட, இதுக்கெல்லாம் நான் என்ன செய்யப்போறேன்னு தெரியலை க்ரிஷ்”

“லவ் பண்ணலாமே ஆரா”என தலைக்கவிழ்ந்து சொன்னான்.

“பண்ணலாமே” என்று அங்கிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

“ஆரா.! என்ன சொல்ற தெளிவா சொல்லிட்டுப்போ” பெருங்குரலெடுத்து அவளை அழைத்தான்.

“அதான் சொன்னேன்ல பண்ணலாம்ன்னு” விரைந்து அவளை நோக்கி ஓடி வந்தான் கடல் மணலில் கொஞ்சம் ஓடுவது சிரமமாக தான் இருந்தது நடந்து சென்றவளை ஓடிச்சென்று இடைமறித்தான்.

“என்ன சொன்ன ஆரா.?”

“உன் ஸ்மைலிக்கு இந்த க்ரிஷை பிடிச்சிருக்குன்னு சொன்னாள் புரியலையா.?” கோபம் போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.

“அதை தெளிவா சொன்னால் நல்லா இருக்குமே”என்று வசீகரமாய் பார்த்தான்.

“நையன்ட்டீஸ் கிட்டுன்றது சரியா தான் இருக்கு” என அங்கிருந்து நகர்ந்து சென்றவளை கரம் பிடித்து தன்புறம் இழுக்க, தடுமாறி அவன் மேல் மோதி நின்றாள் ஆரா. அவன் இதயத்தின் படபடப்பை அருகில் நின்று உணர்ந்தவள். அவனிடம் இருந்து விலக முயன்றபோது தன்னோடு சேர்த்து அணைத்தவன்.

“ஹப்பி பர்த்டே ஆரா” கிசுகிசுப்பாய் அவளின் செவியோரம் சொன்னான்.

“மை ஹார்ட் இஸ் யுவர்ஸ் ஃபார்எவர்” என்று தன் காதலை அவனிடம் வெளிப்படையாக சொல்லி அவன் மார்பில் சாய்ந்தாள் கிருஷ்ணின் ஆரா.

********************************************************

இருவரும் காதலை பகிர்ந்து சில நாட்கள் கடந்திருந்தது ஆதித் கிருஷ்ணாவுக்கு இருந்த வேலை பளூவால் ஆராவை சந்திக்க நேரமே கிடைக்காமல் போக, அவர்களின் காதல் செல்பேசி மூலம் வளர துவங்கியது குறுஞ்செய்திகளிலும், போன் பேச்சிலும் வலுபெற்றது காதல்.

“க்ரிஷ் இப்போ மட்டும் நீ கால் அட்டன் பண்ணலை நானே அங்கே வந்திடுவேன்” என்ற குரல் பதிவை ஏர் பட் வழியே கேட்டு மெலிதாய் புன்னகைத்தான் ஆதித் கிருஷ்ணா.

“வில் கால் யூ” என்ற குறுஞ்செய்தியை தட்டிவிட்டவன், அங்கு நடந்துக்கொண்டிருந்த மீட்ங்கை சிறப்பாக முடித்தான். தொழில் ரீதியான முடிவுகளை எடுத்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தான்.

“க்ரிஷ் இன்னும் நீ கால் பண்ணவே இல்லை போ” மீண்டும் ஒரு குரல் பதிவு ஆராவிடம் இருந்து மீண்டும் புன்னகை சிந்தி அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

“ஸ்மைலி.!” மெல்லிய குரலில் அழைத்தான்

“உன்னோட ஸ்மைலி இப்போ ஸ்மைல் பண்ணலை கோபமாக இருக்கிறாள்” போலியாய் கோபம் கொண்டாள்.

“ஹே வொர்க் ஆரா அதனால் தான், கால் பண்ண முடியலை”

“க்ரிஷ் என்ன லவ் பண்ண வைக்கிற வரைக்கும் பின்னாடியே சுத்தின, இப்போ பார்க்கணும் போல இருக்குன்னு கூப்பிட்டால் கூட வர மாட்டேன்ற”

“சரி சொல்லு இப்போ எங்கே வர.?”

“நீ ஒண்ணும் வர தேவையில்லை”

“ஹே சாரி ஆரா.! சொல்லு எங்கே வரணும்”

“அதான் சொல்லிட்டேன்ல நீ வரவேண்டாம்ன்னு”

“ஸ்மைலி ஏன் கோப்படுற .?”

“நான் அப்பறம் பேசுறேன், நானும் பிசி ரொம்ப பிசி” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தாள். அவளை போய் பார்த்தால் தான் அவளின் கோபம் குறையும் என்று நினைத்து அவளை பார்க்க விரைந்தான். அவன் காரில் ஏறும் முன்,

“ஹே க்ரிஷ்” என்ற ஆராவின் குரல் அவன் செவிகளை தீண்டியது. அவன் திரும்பி பார்த்த திசையில் மார்பின் குறுக்கே கைக்கட்டி அவனை முறைத்தபடி நின்றிருந்தாள் ஆரா.

“என்ன மேடம் பிசின்னு சொன்னீங்க”

“ஆமாம் பிசி தான், என் ஆளை மீட் பண்ண வந்திருக்கேன்ல அப்போ பிசி தானே”என புன்னகைத்து அவனை கட்டிக்கொண்டாள்.

“ஏய் ஆரா என்ன பண்ணுற.?”

“ஏன் நான் ஹக் பண்ணக் கூடாதா.? நீ ரொம்ப மோசம் க்ரிஷ் போன் பண்ணின பேச மாட்டேன்ற, பைத்தியகாரி மாதிரி நான் தான் உனக்கு வாய்ஸ் மெசேஜஸ் போட்டுகிட்டே இருக்கேன் நீ ரிப்ளை கூட பண்ண மாட்டேன்ற, தொட்டக் கூட சிணுங்குற” என்றவள் அவன் காரினுள் ஏறி அமர்ந்தாள். அவள் தன்னிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையின் பூரிப்பில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து அவளை பார்வையால் வருடினான்.

“சரி சொல்லு எங்க போகலாம்.?”

“மெரீனா போகலாமா.?”

“மெரீனாவா அங்கே க்ரவுட்டா இருக்கும்”

“அதனால் என்ன அங்கே தான் பஞ்சு மிட்டாய்ல இருந்து மல்லி பூ வரைக்கும் கிடைக்கும்” என சொன்னாள் ஆரா.

“உனக்கென்ன பஞ்சு மிட்டாயும், மல்லிப்பூவும் வேணும் அவ்வளவு தானே நான் வாங்கி தரேன்”

“நான் அப்படி சொல்லையே”

“ஸ்மைலி.! எத்தனை நாள் கழிச்சு பார்க்கிறோம் சண்டை போட்டுகிட்டே இருக்க.?”

“ஆமா நான் தான் சண்டை போடுறேன் ஆசையாய் கட்டிக்கிட்டா விலகி நிக்க சொல்லிட்டு இப்போ சண்டை போடுறேனாம்”

அவர்கள் பேசிய படியே கிழக்குகடற்கரை சாலையில் இருக்கும் ஒரு ரிசார்ட்டுக்கு வந்திருந்தனர், எழில் கொஞ்சும் கடலை பார்த்தபடியே அவர்களின் மதிய உணவை உண்டு முடித்தனர், அதன் பின் அந்த ரிசார்ட் போட்டு வைத்திருந்த ஓலையால் வேயப்பட்ட குடையின் நிழலில் இருந்த கல்மேடையில் அமர்ந்தபடி கடலை வெறித்து பார்த்திருந்தனர் இருவரும்.

“நீ ஏன் க்ரிஷ் பப்ளிக் ப்ளேஸஸ்கு என் கூட வர மாட்டேன்ற.?, எப்போ பார்த்தாலும் ஆள் இல்லாத கூட்டம் இல்லாத ரெஸ்டாரண்ட், இல்லலைன்னா ரிசார்ட்”

“உன்னையும் என்னையும் யாரும் சேர்த்து பார்த்திட கூடாதுன்னு நினைக்கிறேன், வீட்டில் உன்னை பத்தி நான் பொறுமையாய் சொல்லணும், நம்ம கல்யாணத்தை பத்தி நான் அவங்க கிட்ட பேசணும் நினைக்கிறேன். யாரோ பார்த்திட்டு போய் நம்மளை பத்தி சொல்றதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆரா” என தெளிவாய் அவளிடம் எடுத்துரைத்தான்.

“என்னை பத்தி உங்க வீட்டில் பேச தயக்கமா இருக்கிறதா க்ரிஷ்.?”

“அப்படியெல்லாம் இல்லை ஸ்மைலி, வெயிட்டிங் ஃபார் தி ரைட் டைம்”

“என்னை பத்தி உங்க வீட்டில சொல்லு ஆனால், கல்யாணம் இப்போ வேண்டாம் க்ரிஷ்”

“ஏன்??”

“உன்னை நிறைய காதலிக்கணும், அதுக்கு கொஞ்சம் டைம் வேணும், அதோட என்னோட ட்ரீம்ஸ்” என இடைநிறுத்தினாள்,

“என்ன ட்ரீம்ஸ் ஸ்மைலி”

“அதெல்லாம் சொன்னால் சில்லியா இருக்கும்” எனச் சொல்லி சிரித்தாள் ஆரா.

“சரி நம்ம காதலின் முதல் நிலையை தொடரலாமா ஸ்மைலி.?”

“க்ரிஷ்.! காதலுக்கு எல்லையே இல்லை,பரந்து விரிந்து இருக்குற கடலை பாரேன், உன் கண்ணுக்கு எல்லை தெரியுதா.? அப்படித் தான் நம்ம காதலும் அதுக்கு எல்லைன்னு ஒண்ணு இல்லைவே இல்லை, இந்தக் கடலைப்போல நம்ம காதலும் ஆழமானது அந்த ஆழம் யாரோட கண்ணுக்கும் புலப்படாது, இதில் எங்கு இருந்து வந்திச்சு முதல் நிலை இரண்டாம் நிலைனுட்டு காதல்ன எப்போதும் அன்லிமிடட் அன்பு தான். இது எந்த நிலைக்குள்ளும் அடங்காது”

“ஆனால் என் கண்ணுக்கு உன்னோட காதல் தெரியுதே ஸ்மைலி”

“எங்கே தெரியுது”

“இதோ இந்த கண்ணுல தான்” என அவள் விழியை சுட்டி காட்டினான். அவனருகே நெருங்கி அமர்ந்தவள் அவன் தோள் சாய்ந்து கடலை வெறித்தாள் கிருஷ்ணின் ஆரா.

************************************************************************

மஹதியும் லாவண்யாவும் நடன வகுப்பை முடித்து விட்டு பேசிய படி நடந்துக்கொண்டிருந்தனர்.

“லாவா.!”

“சொல்லு மஹதி” என்றாள் லாவண்யா.

“நான் ஒண்ணு சொன்னால் கோவிச்சிக்க மாட்டியே”

“நான் ஏன் மஹதி கோபபட போறேன், நீ சொல்லு” என தண்ணீர் பாட்டிலில் இருந்த  தண்ணீரை பருக துவங்கினாள் லாவண்யா.

“லாவா.! இதை யார்க்கிட்ட ஷேர் பண்ணுறதுன்னே தெரியலை, நீ தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் அதான் உன்கிட்ட சொல்லலாமேன்னு”

“நீ ஏன் மஹதி இவ்ளோ தயங்குற.? மனசில் என்ன நினைக்கிறீயோ சொல்லு அதைக் கேட்க தானே நான் இருக்கேன்” என்றாள் லாவண்யா இருவரும் அந்த நடன பள்ளியின் வளாகத்தில் நடை பயில ஆரம்பித்தனர்.

“வா.! கேண்டீன் போய் சாப்பிட்டுகிட்டே பேசலாம்” என லாவண்யா மஹதியை அழைத்துச் சென்றாள். சூடான காபியுடன் அவர்களின் பேச்சும் துவங்கியது.

“நான் ஒருத்தரை லவ் பண்ணுறேன் லாவா” தயங்கி தயங்கி ஒரு வழியாய் சொல்லி முடித்தாள் மஹதி.

“வாவ் மஹதி.! யார் அந்த லக்கி ஃபெல்லோ” கேலியாய் கேட்டாள் லாவண்யா.

“அவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் தான் லக்கி லாவா”

“ஓஹோ கதை அப்படி போகுதா.? என் கூடவே தானே இருக்கிற எப்போ உன் லவ்வரை மீட் பண்ணுற.? எப்போ லவ் சொன்னீங்க.? யார் ஃப்ர்ஸ்ட் லவ்வை சொன்னது.? ஓ மை காட் எவ்வளவு கொஸ்டீன்ஸ்”

“நீ மனசு வச்சால் தான் நான் அவரை பார்க்கவே முடியும், இது ஒரு ஒன் சைட் லவ். நான் இன்னும் அவர்கிட்டையே சொல்லலை” என சொன்னவுடன் அதிர்ந்து விழித்தாள் லாவண்யா.

“நீ என்ன மஹதி இவ்வளவு தத்தியா இருக்கிற.? உன் காதலை முதலில் உன் ஆள்கிட்ட சொல்லு அப்பறம் என்கிட்ட சொல்லு”

“எனக்கு நீ ஹெல்ப் பண்ணுறீயா லாவா.?”

“நான் இதில் ஹெல்ப் பண்ண இருக்கு மஹதி.?” புரியாது விழித்த லாவண்யாவின் கரம் பற்றிய மஹதி.

“நான் உன்னோட அண்ணன் ஆதித்தை தான் லவ் பண்ணுறேன், ஆனால் அவர்கிட்ட இதை பத்தி பேச பயமாக இருக்கு லாவா. நீ தான் எப்படியாவது எங்களை சேர்த்து வைக்கணும் ப்ளீஸ்.”என்றவள் மர்ம்மாய் புன்னகைத்தாள்.

“என்ன சொல்ற மஹதி.!” அதிர்ந்து விழித்தாள் லாவண்யா. அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்தவள் மஹதியை தன் வீட்டிற்கு அழைத்து வந்து தாய் தந்தையின் முன் நிறுத்தியிருந்தாள் லாவண்யா, படபடப்பும் பரிதவிப்புடனும் நின்றிருந்தாள் மஹதி.

“சொல்லும்மா மஹதி.! எதோ முக்கியமான விசயம் சொல்லணும்னு சொன்னனீயாமே.?” சோபாவில் அமர்ந்த படி கேட்டார் யசோதா.

“ஆன்ட்டி அது வந்து.” வார்த்தைகளை நாடி நின்றாள் இப்படி குடும்பத்தின் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டாளே இந்த லாவண்யா, என மனதில் கறுவிய படி நின்றாள் மஹதி, ஆனால் முகத்தை அப்பாவி போல் வைத்துக்கொண்டாள். பிறரை நம்ப வைத்து ஏமாற்றுவதில் புகழ் பெற்றவள் தான் மஹதி.அப்பாவி போல் முகத்தை வைத்துகொண்டு அனைத்தையும் தன் வசமாக்கும் யுக்தியை அறிந்திருந்தாள் அவள்.

“அங்கிள் ஆன்ட்டி சேர்ந்து நில்லுங்க” யசோதா கோதண்டம் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டாள்.

“அங்கிள் ஆன்ட்டி.! நான் இந்த வீட்டுக்கு மருமகளாக வரணும்னு ஆசைப்படுறேன், இதை பத்தி நான் அவர்கிட்ட கூட பேசலை, முதலில் லாவாவிடம் சொன்னேன் அவள் என்னை உங்கள் முன் நிறுத்தி விட்டாள்”

“எங்க கிட்ட சொல்றது இருக்கட்டும்மா, இந்த விசயம் உன் அப்பன் ஜெகனுக்கு தெரியுமா.?” என கேட்டார் கோதண்டம்.

“இல்லை அங்கிள். அப்பாகிட்ட சொல்லலை. நான் சொல்லி ஆதித்க்கு விருப்பம் இல்லாமல் போயிட்டா அப்பா வருத்தப்படுவாங்க, ஆதித்கிட்ட பேச பயமா இருந்திச்சு அங்கிள்”

“நீ இங்கே வாம்மா” என பூஜை அறைக்கு அழைத்து சென்றார் கோதண்டம்.

“யசோதா அந்த குங்குமத்தை எடுத்து மஹதிக்கு வச்சி விடு” என கோதண்டம் சொல்ல அவர் மனைவி யசோதாவும் அவர் சொல்லை தட்டாமல் குங்குமத்தை அவள் நெற்றியில் பூசி விட்டார்.

“நீ எங்க கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே ஜெகன் என்கிட்ட பேசிட்டான்ம்மா, நீ கவலை படாதே ஆதித்கிட்ட நாங்க பேசுறோம்” புன்னகை முகமாய் சொன்னார் கோதண்டம்.

“என்ன மஹதி ட்ரீட் வச்சிடு” என சிரித்தபடி மஹதியை நெருங்கிய லாவண்யாவின் தலையில் குட்டு வைத்த யசோதா,

“உன்னோட அண்ணனை கட்டிக்க போறவளை பேர் சொல்லி கூப்பிடுற.? அண்ணின்னு கூப்பிடுடி” என அதட்டினார்.

“மஹதி அண்ணி சாரி.!” என லாவண்யா மன்னிப்பு வேண்ட முகத்தில் நாணம் பூசியவள்,

“ஹேய் லாவா போ.!” என்று ஓடியவள் அப்போது பிருந்தாவனம் பேலஸினுள் நுழைந்த ஆதித் கிருஷ்ணா மீது மோதி நின்றாள்.

“ஏய் அராத்து, என் மேல வந்து மோதுரதே உனக்கு வேலையா போச்சு வழியை விடு” என்று நகர்ந்தவனின் முகத்தில் புன்னகை அரும்பியிருந்து, ஆராவை சந்தித்து வந்ததால் அவன் முகம் பொழிவாய் வேறு இருந்தது.

“சாரி ஆதித்” என்றவள் அவனை எதிர்கொள்ள முடியாமல் மாடிபடிகளில் ஏறி லாவண்யாவின் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

“ஏய் மஹதி இரு நானும் வர்றேன்” என்று லாவண்யாவும் அறையை நோக்கி ஓட.

“ஆதித்.!” அழைத்தார் கோதண்டம்.

“சொல்லுங்கப்பா”

“இங்கே வா உன்கிட்ட ஒரு விசயம் பேசணும்” அவர் அழைத்தவுடன் நீள் சோபாவில் அமர்ந்தான், அவனருகே கோதண்டம் அமர, அவனின் எதிரே இருந்த சோபாவில் யசோதா அமர்ந்தார்.

“சொல்லுங்க என்ன விசயம் பேசணும்.?”

“எல்லாம் உன் கல்யாணத்தை பத்தி தான்ப்பா” கோதண்டம் துவங்கும் போதே,

“நானும் இதை பத்தி உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்”

“அப்படியா.?” ஆச்சரியமாக மகனை பார்த்தார் யசோதா.

“ஆமாம்மா, என் வாழ்க்கையில் அவ வந்து கொஞ்ச நாள் தான் இருக்கும், ஆனால் அவ இல்லாமல் நான் இருக்க முடியாதுன்ற நிலைமைக்கு தள்ளிட்ட” என அவன் ஆராவை பற்றி சொல்லிக்கொண்டிருக்க, இவர்கள் மஹதியை பற்றி பேசுவதாய் நினைத்துக்கொண்டார்கள்.

“சந்தோசம்ப்பா, நாங்களும் அதை பத்தி தான் பேசலாம்ன்னு நினைச்சோம், உனக்கு சம்மதம் தானே நிச்சயதார்த்தம் முதலில் வச்சிக்கலாமா.?” எனக் கோதண்டம் கேட்டார்.

“இருங்க ஒரு நிமிசம் ஜாதக பொருத்தம் பார்க்க வேண்டாமா.?”

“ம்ம்மா அதெல்லாம் வேண்டாம் எங்களுக்குள்ள நல்ல மனசு பொருத்தம் இருக்கு அதுவே போதும்” என உரைத்த போது,

“அப்போ நாள் குறிச்சிடலாமா.?”

“நான் முதலில் அவகிட்ட பேசணும்மா பேசிட்டு சொல்றேன். உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம் தானேம்மா”என எழுந்தவன் மாடியை நோக்கி நடந்தான்.

“உன் விருப்பம் தான் எங்களோட விருப்பமும் ஆதித்” இருவரும் ஒரே குரலாய் சொன்னார்கள். அதே சந்தோசத்தில் தன்னுடைய அறைக்கு சென்று தன்னவளுக்கு அழைப்பு விடுத்தான்.

“ஸ்மைலி.!” புன்னகைத்தான் அவன்,

“என்ன க்ரிஷ் குரலில் எதோ சந்தோசம் எட்டி பார்க்குது.?” அவன் குரலை வைத்தே அவனின் உணர்வுகளை அறிந்து வைத்திருந்தாள் ஆரா.

“தெட்ஸ் மை ஸ்மைலி.! வீட்டில் உன்னை பத்தி பேசிட்டேன்”

“ஹே க்ரிஷ் விளையாடதே”

“நிஜாமாதான் ஸ்மைலி.! நம்ம காதல் கெட்டிமேளத்தில் முடியுற நாள் பக்கத்தில் வந்திடுச்சு. எப்போ என்கேஜ்மெண்ட் வச்சிக்கலாம்” அவன் ஆர்வமாய் கேட்ட போது,

“வாட்.? என்ன க்ரிஷ் பேசுற நீ.?”

“என்ன ஆச்சு ஆரா.?”

“எனக்கு நான் தான் சொன்னேன்ல எனக்குன்னு சில ட்ரீம்ஸ் இருக்குன்னு” என அவள் உதிர்த்த வார்த்தைகளில் அவன் தடுமாறினான். காதலிப்பது திருமணம் செய்துக் கொள்ள தானே இவள் ஏன் இப்படி பேசுகிறாள். என்ற குழப்பத்துடன்.

“ஆரா.! நீ என்ன சொல்ற எனக்கு புரியலை”

“இதெல்லாம் போன்ல சொல்லிட்டு இருக்க முடியாது க்ரிஷ், உன்னாலே இப்போ வர முடியுமா மீட் பண்ண.?”

“வை வர்றேன்” என்று கோபத்தில் அழைப்பை துண்டித்தான். சில நேரங்களில் காதல் மொழிகளில் கொஞ்சி பேசுபவள், இப்போது விருப்பம் இல்லாதது போல் பேசுகிறாளே, என்ற கோபமும் அவனுக்கு எழதான் செய்தது.ஆனால் ஆரா ட்ரீம் என்று எதைச் சொல்கிறாள்? அதை பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வமும் அவனுள் எழுந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்