கிருஷ்ணாரத்யா 10

Loading

அத்தியாயம்: 10

 

தன் மீது மோதி நின்ற பருவ பெண்ணைப் பார்த்து எந்தச் சலனமுமின்றி அவளை விலக்கி நிறுத்தியவன் யார் அவள் என்பதைப் போல் பார்த்தான்.

 

“ஆதித் என்னை ஞாபகம் இருக்கிறதா.?” மெலிதாய் ஒலித்தது அவளின் குரல்.

 

“இடியட் யார் நீ கண்ணை எங்கே வச்சிட்டு வந்த இப்படி தான் மோதி நிற்பியா?? சீ தள்ளி நில்லு.?” கோபமாய்ச் சாடினான் ஆதித் கிருஷ்ணா.

 

“ஆதித்.! நான் தெரிஞ்சே தான் உன்னை ஹக் பண்ணினேன்”

 

“யூ ப்ளடி நான்சென்ஸ், தெரிஞ்சே ஹக் பண்ணினேன்னு சொல்லுற? சென்ஸ் கொஞ்சம் கூட இல்லையா?” அவளை நோக்கி அவன் கை உயர்த்திய போது விரைந்து வந்து தடுத்திருந்தார் யசோதா.

 

“ஆதித் நம்ம மஹதிடா. நீ சின்ன வயதில் அவள் கூடத் தானே விளையாடுவ. ஜெகன் அங்கிளோட பொண்ணுடா” என அவர் சொன்ன போது பட்டென அவன் நினைவடுக்கில் தேடலை தொடங்கினான். அவன் மனதில் நிலைத்திருக்கும் அளவிற்கு எதுவும் செய்து விடவில்லை அவள். சிறு வயதிலே ஆதித்தின் விளையாட்டுப் பொருள்களை மறைத்து வைத்து விளையாடுவதோடு அவனை அடித்தும் வைத்து ஓடி விடுவாள் அவனைத் திருப்பி அடிக்கும் அளவில் அவன் ரக்கட் பாய் இல்லை தன் தாயிடம் முறையிடும் சாக்கோ பாய் தான் நம்ம ஹீரோ. ஆனால் இப்போது கொஞ்சம் ரக்கட் பாயும் சாக்கோ பாயும் கலந்து கொஞ்சம் மாறி போயிருந்தான் ஆதித். அவன் நினைவடுக்கில் இருந்த கசப்பான சம்பவங்கள் அவனுக்குத் தோன்றிய உடன்.

 

“ஏய் அராத்து நீ என்ன இந்தப் பக்கம்” என ஆதித் கேட்டவுடன் கோப முகம் காட்டினாள் மஹதி.

 

“ஆதித் என்னை அப்படிக் கூப்பிடாதே ஐ ஹேட் தெட் வொர்ட்”என உதட்டை பிதுக்கினாள் மஹதி.

 

“அராத்தை அராத்துனு தான் சொல்வாங்க, வேற என்ன சொல்வாங்களாம்? ஆமா உங்க டாட் க்ரெட் ஜெகன்நாதன் எங்கே வரலையா?? அப்பாகிட்டலாம் இன்னும் டச்ல தான் இருக்காரு நீ எங்கே போயிட்டே.?” என ஆதித் விசாரிக்க,

 

“ஆமா மஹதி நீ இருக்கிறதையே மறக்கிற அளவுக்கு எங்கம்மா போன.?” யசோதாவும் அவர் பங்குக்குக் கேட்டபடி அனைவருக்கும் காபி கொடுத்தார்.

 

“நான் டெல்லில எம்பிஏ முடிச்சிட்டு வந்திருக்கேன் ஆதித், திரும்பி வந்து டான்ஸ் க்ளாஸ் ஜாயின் பண்ணினேன் அப்போ தான் லாவாவை பார்த்தேன், அவளை நான் தான் முதலில் அடையாளம் கண்டுபிடிச்சேன்” என மஹதி பேசிக்கொண்டிருந்த போதே சலிப்படைந்தவன்.

 

“ஓகே கேரி ஆன்.” எனத் தன் அறையை நோக்கி நடந்தான்.

 

“அண்ணா.!” லாவண்யாவின் குரல் அவனை நடையைத் தடைசெய்தது.

 

“சொல்லு லாவ்” என்றான். ஆதித்.

 

“அண்ணா நானும் மஹதியும் ஃப்ரெண்டோட மேரேஜ் பங்க்சனுக்குப் போகணும். நீ கூட்டிட்டு போறியா.?”

 

“நானா.? இல்லை லாவ் நீ போயிட்டு வா”

 

“ஆமா லாவண்யா, அண்ணா இப்போ தானே வேலை முடிஞ்சு வந்திருக்கான் அவன் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார் யசோதா.

 

“அண்ணா ப்ளீஸ்”என அவள் கெஞ்சலில் சம்மதிருந்தான் ஆதித். இது போன்ற விசேசங்களில் அவன் கலந்து கொள்ள விரும்பவே மாட்டான். ஆனால் தங்கையின் கெஞ்சல் அவனைச் சம்மதிக்க வைத்தது.

 

“சரி ஓகே லாவ்.! நான் உங்களை ட்ராப் பண்ணிட்டு வெளியே வெயிட் பண்ணுறேன் சீக்கிரம் வந்துடணும்”

 

“ம்ம் சரி அண்ணா” என உற்சாகமாய்த் தலையாட்டினாள் லாவண்யா. அனைவரும் பேசிக்கொண்டிருப்பதை அமைதியாய் பார்த்தபடி காபி பருகிக்கொண்டிருந்த மஹதியின் முகத்தில் ஆதித் கிருஷ்ணாவை பார்த்து சிறிய பளிச்சிடல்.

 

அவனைச் சிறு வயதில் இருந்தே அவளுக்குத் தெரியும் ஆனால் இன்று அவனைப் பல வருடங்கள் கழித்துப் பார்த்திருக்கிறாள். சிறு வயதில் அவனை மிரட்டி வைத்து பழக்க பட்டவள் இன்று அவன் அழகிலும் அவனின் தொழில் வளர்ச்சியையும் கண்டு மிரண்டு போயிருந்தாள். 

 

******

சுதாவின் இருசக்கர வாகனத்தை இயக்கி கொண்டிருந்தாள் ஆரத்யா, அவள் மேடையில் பாட்டு பாட போவதால் இளஞ்சிவப்பு நிற பட்டுபாவடையும் அதற்கேற்றார் போல் ஆகாய நீல நிற தாவணியும் உடுத்தியிருந்தாள், அடர்ந்த கார்குழலை வரித்துவிட்டு பட்டர்ப்ளை கிளிப் போட்டிருந்தாள். கார்குழல் காற்றில் நாட்டியமாடியது. அவள் சூடியிருந்த மல்லியும் அவள் கூந்தலில் உயிர்பெற்று மொட்டவிழ்த்து நறுமணத்தைப் படரவிட்டது, அந்தி மாலைப்பொழுதில் நவயுக நங்கை தாவணி உடுத்தியதில் அந்த வானமும் நாணம் கொண்டு மேகத்தால் முகத்தை மூடிக்கொண்டது.

 

“ஏய் ஆரா.! இந்த ஹாஃப் செரி உனக்கு அழகா இருக்குடி” சுதா பின்னே அமர்ந்தபடி சொன்னாள்.

 

“ஏய் தேங்க்ஸ் டி சுதா” ஆரா வாகனத்தை இயக்கிய படி மொழிந்தாள்.

 

“தேங்க்ஸ் சொல்லிக்கிற அளவுக்கா டி நம்ம ப்ரெண்ட்ஷிப் இருக்கு லூசு”

 

“அதுக்கு இல்லைடி நைட் லேட் ஆகும்னு தெரிஞ்சும் எனக்காக வர்றல அதுக்காகத் தான்டி சொன்னேன்”

 

“கோபுரத்தில் தூக்கி வைக்கும் சொந்தம் இதுதானா.

தீப்பொறிக்கே தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா.

ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா

பிரச்சனை பறக்கும் தானா

தேடி வந்த சாமிதானா

ஜிகிரி தோஸ்து, ஜிகிரி தோஸ்து

கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

ஜிகிரி தோஸ்து, ஜிகிரி தோஸ்து

கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து” எனப் பாடிய சுதா

 

“என் ஜிகிரி தோஸ்த்துடி நீ” எனப் பின்னே இருந்து ஆராவை கட்டிக்கொண்டாள் சுதா. அவள் பாடிய போதே விழிகளில் நீர் கோர்க்க புன்னகைத்தாள் ஆரா.

 

கேபிஎன் திருமண மண்டபம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது அவ்வளவு நேரம் பொறுமையாக வந்துக்கொண்டிருந்த ஆரா வண்டியை உரிய இடத்தில் நிறுத்திவிட்டுப் பதற்றமாக ஆரம்பித்தாள்.

 

“ஏய் ஆரா.! ஏன்டி டென்சன் ஆகுற.? அதான் டைம்முக்கு வந்திட்டோமே.?” குழப்பமாய்க் கேட்டாள் சுதா.

 

“சுதா.! உன் காதில் விழலையா அங்கே ராககீதம் கச்சேரி ஆரம்பிச்சிடுச்சு பாட்டுப் பாடுறது கேட்கலையா.?”

 

“அய்யோ.! ஆமா, வா வா சீக்கிரம் போகலாம்” எனப் பதறியபடி இருவரும் உள்ளே நுழைந்தனர்.

 

பாட்டு கச்சேரிக்கென்றே தனியாய் மேடை அமைக்கபட்டிருந்தது அங்கே கிட்டாரை கையில் வைத்து இசைத்துக்கொண்டிருந்தான் மகேஷ் மெல்லிய இசையில் அங்குள்ளவர்களை நனைத்துக் கொண்டிருப்பதாய், நினைத்துக் கொண்டிருந்தான் அவன். ஆனால் அங்குக் கூடியிருந்த திருமண வீட்டார்கள் பெண்ணையும் மாப்பிளையும் பார்ப்பதிலே குறியாய் இருந்தனர்.

 

“இதென்னடி பொண்ணுக்கு புடவையே சரியில்லை” ஒரு பெண் குறைப்பட்டுக்கொண்டார்.

 

“நகையே கம்மியாகத் தான் போட்டிருப்பாங்க போல” இன்னொருத்தி மேலும் கத்தினாள்.

 

“ஏன்டி கத்துற.? மெதுவா பேசு” இன்னொரு பெண் அதட்ட,

 

“இந்தப் பாட்டுக் கச்சேரிலாம் யார் வைக்கச் சொன்னது ஒரு பழக்கம் பேச முடியுதா.?” என இன்னொரு பெண் பேச இவற்றைக் கவனித்தபடி மேடை ஏறினாள் ஆரத்யா அவளின் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்துக்கொண்டிருந்த மகேஷின் முகம் கோபத்தைப் பிரதிபலித்தது. ஆரா பாடப்போவதை பார்ப்பதற்காக முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள் சுதா.

 

மகேஷ் கிட்டாரை இசைத்து முடித்துவிட்டு ஆராவை நெருங்கியிருந்தான்.

 

“வந்ததே லேட்டு என்ன பல்லைக் காட்டிட்டு வர்ற.?” கோபம் கலந்து அவன் பேசினான்.

 

“இல்லை யாரும் இல்லாத கடைக்கு யாருக்கு டீ ஆத்துரன்னு பார்த்தேன்”

 

“என்னது.? யாருமில்லாத கடையா.? ஆயிரத்துக்கு மேல ஆள் இருக்காங்க உன் கண்ணுக்கு தெரியலையா.?”

 

“ஆயிரம் பேருக்கு மேல இருக்காங்க ஆனால் ஒருத்தர் கூட உன் பாட்டைக் கவனிக்கலையே” அவள் சொன்னவுடன் அங்கும் இங்கும் தலையைத் திருப்பிப் பார்த்தவன் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த சுதாவை பார்த்து உற்சாகமாகினான்.

 

“பார்த்தியா.? நம்மைப் பாட்டைக் கேட்க ஒரு பொண்ணு உட்கார்ந்திருக்கு, இந்த ஒரு பொண்ணுக்காக ஆயிரம் பாட்டு கூடப் பாடலாம் இசை மழையில் நனைய வந்திருக்கு” என உற்சாகமாய் ஒலித்தது மகேஷின் குரல்.

 

“மகேஷ்.! ரொம்ப எக்ஸைட் ஆகதே, அவ என்னோட ஃப்ரெண்ட் சுதா என் கூடதான் வந்தாள்”

 

“அப்போ அவ ஆடியன்ஸ் இல்லையா.?” முகம் வாடினான் மகேஷ். மகேஷ் ஆராவுக்குச் சிறந்த நண்பன் அவளின் கிட்டார் வகுப்பில் பழக்கமானவன், ஆரத்யாவின் குரலின் இனிமையைக் கண்டு பாடும் ட்ருப்பில் சேர்த்துவிட்டான். அதற்கு உரிய தொகையையும் வாங்கிக் கொடுத்துவிடுவன். அவளின் கனவை அடைய அவளுக்குப் பணம் தேவைப்படுகிறது அதனால் அவளுக்குக் கிடைக்கும் வேலையைச் சிறப்பாய்ச் செய்து கொடுத்துவிடுவாள்.

 

“சோக கீதம் வாசிச்சால் யாருடா நம்மளை பார்ப்பாங்க இப்போ பாரு” என மைக்கை தன் கையில் வாங்கியவள் ஆர் ஜே வை பார்த்து கண்ணசைத்து எதோ பாட்டைச் சொல்ல அதற்கான கரோக்கியை அவர் ஒலிக்க விட்டார். அந்தப் பாட்டின் இசையைக் கேட்டதும் கூட்டத்திற்க்குள் சலசலப்பு

 

“மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே.!” என அவள் பாட்டைத் துவங்கி விட்டு நிறுத்தி கூட்டத்தைப் பார்த்தாள்.

 

“ஏய்.!” என்ற கூச்சலுடன் இளவட்டங்கள் மேடையை நெருங்கியிருக்க,

 

“பாடுங்க பாடுங்க.!” என்று கூச்சல் போட தொடங்க ஆரத்யா அவளுடைய மெல்லிய குரலில் பாட துவங்கினாள்.

 

ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே.!

அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே.!

மச்சான் எப்போ வர போற.!

மச்சான் எப்போ வர போற.!

 

அவளைத் தொடர்ந்து ஆண் குரல் பாட வேண்டிய இடத்தில் மகேஷூடன் சேர்ந்து குழுவினரும் சேர்ந்த பாட திருமண மண்டபத்தில் மணப்பெண்ணும் மாப்பிளையும் சேர்ந்து ஆட ஆரம்பித்தனர். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை உற்சாகமாகி போயிருந்தனர். அவர்கள் இருவரை தவிர, 

 

“ஹே லாவா!! என்னது இது நான்சென்ஸ் இவ்வளவு சத்தமா பாட்டு பாடிட்டு இருக்காங்க, இங்கே ரொம்ப ஹாட்டா வேற இருக்கு வா போகலாம்” என லாவண்யாவின் கைப்பிடித்து அழைத்தாள் மஹதி. 

 

“மஹதி கிஃப்ட் கொடுக்கணுமே, வா க்யூல நிற்ப்போம்” 

 

“அய்யோ இது வேறயா??” நீ கொடுத்திட்டு வா நான் ஆதித் கூட கார்ல இருக்கேன் என அவள் மண்டபத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது, அவளின் கைப்பிடித்து தடுத்து தன்னோடு க்யூவில் நிறுத்தியிருந்தாள் லாவண்யா.

 

“மஹதி!! ஃப்ரெண்ட்ஸ் மேரெஜ்ல ப்ரஸடீஜ் பார்க்க கூடாது. நம்ம ஆடம்பரத்தை இங்கே வந்துக் காட்ட கூடாது” என மஹதியின் காதில் கிசுகிசுப்பாய் லாவண்யா சொல்ல, மஹதியோ சலிப்பாய் நின்றிருந்தாள்.

 

அவளின் பாடலின் இனிமையை அதே மண்டபத்தின் வெளிய தன் காரில் அமர்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தவனின் கரங்கள் தானாய் தாளம் தட்ட ஆரம்பித்தது. அந்தக் குரலில் காதலின் ஏக்கம் அவனுக்குத் தெரிந்தது, ராதையைக் கிருஷ்ணனை நோக்கி பாடுவதைப் போல் அவனுக்குத் தோன்றியது அந்தக் குரலுக்குச் சொந்தகாரியை பார்க்க வேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தோன்ற தான் செய்தது. உள்ளே சென்றாள் மஹதியிடம் பேச வேண்டும் என்பதற்காக உள்ளே செல்வதைத் தவிர்த்தான் ஆதித் கிருஷ்ணா. 

 

அதே குரலில் இரண்டு மூன்று பாடல்களைக் காரில் அமர்ந்தபடி கேட்டு ரசித்தான். அப்போது தான் அவன் எதிர்பாரா ஒன்றை அங்குப் பார்த்தான். சில நிமிடங்களில் இசை நின்று போனது.

 

ஆரத்யாவும் சுதாவும் அந்த மண்டபத்தில் இருந்து ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு வருவதைப் பார்த்தான். தாமதிக்காமல் அவள் முன் நின்றிருந்தான் பனிக்கூழுக்கு ஏங்கி நிற்கும் சிறுவன் போல். அவளைத் தாவணியில் பார்த்து கிறக்கத்துடன் நின்றிருந்தான்.

 

“ஆரா” அவனழைக்க,

 

“அய்யோ.!” என்றபடி திரும்பி பார்த்தாள் ஆரத்யா. அவனின் குரல் அவளுக்குப் பரீட்சியமானதாக இருந்தது.

 

“சொல்லுங்க மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா”

 

“இங்கே என்ன பண்ணுறீங்க.?” என ஆதித் கேட்க,

 

“உங்களுக்குப் பொண்ணு பார்க்க வந்திருக்கோம், நீங்க தானே வேவு பார்த்து தர சொன்னீங்க” நக்கலாய் சொன்னாள் ஆரத்யா.

 

“அய்யோ இல்லை சார் இங்கே கச்சேரிக்கு வந்தோம்” சுதா முந்திக்கொண்டு சொல்ல, அவள் கையைப் பிடித்து அழுத்தம் கொடுத்து தடுத்திருந்தாள் ஆரத்யா.

 

“சார்.! நாளைக்கு மீட் பண்ணலாம் டா டா” எனச் சொல்லி அவனை எளிதாகக் கடந்து சென்ற பெண்ணை அவனால் தான் எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை, அவனிடம் பேச மறுக்கும் அவளின் விழிகளுடன் ஆயுள் முழுதும் கதைப் பேச வேண்டும் என்ற ஆசை எழும்பியது ஆதித் கிருஷ்ணாவுக்கு. அவளின் ஸ்கூட்டி மறையும் வரை அவள் சென்ற திசையைப் பார்த்து நின்றிருந்தான் ஆதித்.

 

*******************

மறுநாள்.

 

இன்றோடு இந்த வேலையில் இருந்து விலகி ஆக வேண்டும் என்ற முடிவோடு மேனேஜர் மனோகரின் இருக்கையின் முன் நின்றிருந்தவள் மௌனித்திருந்தாள்.

 

“என்னமா.? காலையிலையே ரிசைன் பண்ணுறேன்னு சொல்லிட்டு வந்து நின்னிட்டு இருக்க.?”

 

“சார் சாரி டூ சே திஸ், என்னோட வேலை போன்ல பேசுறது மட்டும் தான் க்ளையண்ட்டை போய்ப் பார்த்து அவரைச் சம்மதிக்க வைக்கிறது என்னோட வேலையில்லை” திமிராகவே பதில் கொடுத்தாள் ஆரத்யா.

 

“நான் என்ன சொல்றேனோ அதைச் செய்யுறதும் உன்னோட வேலை தான்ம்மா, போய் வேலைய பாரு அந்த ஆதித் கிருஷ்ணா ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வா” கட்டளையாய் சொன்னார் மனோகரன்.

 

“சார் இது என்னோட வேலை இல்லை நான் ஒன்னும் டிடெக்ட்டீவும் இல்லை” ஆதித் கிருஷ்ணாவுடன் வேலை செய்ய அவளுக்கு விருப்பம் இல்லை அதனால் தான் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறாள்.

 

“சரிம்மா உனக்கு என்ன தோணுதோ செய் ஆனால் இரண்டு மாச சம்பள பாக்கியை கேட்காதே” அவளுக்கு எங்கு வலிக்குமோ அங்குச் சரியாய் அடித்தார் மனோகர்.

 

“சார்.!” அதிர்ந்தாள் ஆரா.

 

“உனக்கு ரெண்டு சாய்ஸ் தர்றேன் ஒண்ணு இரண்டு மாச சம்பளம் வாங்கமலே ரிலிவ் ஆகிக்கோ இல்லையா.? ஆதித் கிருஷ்ணா கேஸை முடிச்சிட்டு உன்னோட டார்கெட்டை அச்சீவ் பண்ணிட்டு அவர் கொடுக்கிற கமிசனோட சேர்த்து இந்த இரண்டு மாச சம்பளத்தையும் வாங்கிட்டு போ” என அவர் சொல்லி முடித்து அறையை விட்டு அவர் வெளியே செல்ல, அவரைத் தொடர்ந்து வெளியே வந்த ஆரத்யா வேறு வழியின்றி ஆதித் கிருஷ்ணாவின் கம்பெனியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள்.

 

அவனின் அலுவலக அறையில் அரைமணி நேரத்திற்கு மேல் காத்திருக்கிறாள் .

 

அவன் எதோ மீட்டிங்கில் இருப்பதாய்ச் சொல்லபட்டது. அவனின் அலுவலக அறையைச் சுற்றி நோட்டம் விட்டுக்கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் சுவற்றையே பார்த்துக்கொண்டிருப்பது என்பது போல் அறையில் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தாள் பின் மறுபடியும் இருக்கையில் வந்து அமர்ந்திருந்தாள்.

 

“ஹே ஆரா குட் மார்னிங்” என்ற உற்சாகக் குரலுடன் அறைக்குள் நுழைந்தான் ஆதித் கிருஷ்ணா.

 

“குட் மார்னிங் சார்”

 

“சாரை கட் பண்ணிக்கோ ஆரா ஜஸ்ட் கால் மீ க்ரிஷ் தெட் சௌண்டஸ் பெட்டர்” என அழகாய் மொழிந்தான். ஆனால் ஆராவுக்கு அப்படிக் கூப்பிட சங்கடமாய் இருந்தது.

 

“இப்போ அந்தப் பொண்ணைப் பார்க்க போறோம் ரைட்.?”

 

“ஆமா சார்.! மனோ சார் சொன்னாங்க அந்தப் பொண்ணு தியேட்டர்க்கு போகிறதாய் சொல்லியிருக்காங்க” என மனோ சொல்லிவிட்ட தகவலை ஆதித்திடம் சொன்னாள் ஆரா.

 

“ஓகே.! எந்த தியெட்டர்??”

 

“சார் மாயாஜால்ல ஸ்க்ரீன் நம்பர் ஃபைவ், ”

 

“தெட்ஸ் குட் கேட்காமலே ஸ்க்ரீன் நம்பர் வரைக்கும் சொல்லுறீயே” என அவளைப் பாராட்டிய போது கூட அதை ஏற்றுக்கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை.

 

அவன் அறையில் இருந்த இன்டர்காம் மூலம் விக்கியை வரவழைத்தான்.

 

“சார்.!” என நின்றவனைப் பார்த்து,

 

“மாயாஜால் ஸ்க்ரீன் நம்பர் ஃபைவ் இரண்டு டிக்கெட்” என்றான் ஆதித்.

 

“சார் உங்களுக்கும் எனக்குமா.?” ஆவலுடன் கேட்டான் விக்கி.

 

“இடியட் சொல்றதை மட்டும் செய்”

 

“ஓகே சார் டைமிங்.?”

 

“ஆரா எந்த ஷோ.?” விழிஉயர்த்திக் கேட்டான்

 

“டூ தெர்ட்டி” எனச் சொன்னவுடன்.

 

“கேட்டுச்சா புக் பண்ணிடு” எனச் சொல்லியவன்,

 

“கம் லெட்ஸ் கோ ஆரா” என அவளை அழைத்தான்.

 

“சார் நான் வரலை, டீடெயில்ஸ் கொடுக்கத் தான் வந்தேன்”

 

“வாட்.? நீ கொடுத்த டீடெயில்ஸை மனோ ஏற்கனவே கொடுத்திட்டார் அந்தப் பொண்ணை வேவு பார்க்கதான் உனக்கும் சேர்த்து டிக்கெட் போட்டிருக்கேன் லெட்ஸ் கோ”

 

“சார்.”

 

“கால் மீ க்ரிஷ்”

 

“மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா.! இப்போ டைம் டென் தான் ஆகுது ஆனால் டூ தெர்ட்டிக்கு தான் ஷோ ஸ்டார்ட் ஆகும்”

 

“அது எங்களுக்குத் தெரியும், டூ வாட் ஐ சே” என அதட்டலாய் சொன்னவுடன் எதுவும் பேசவும் முடியாமல் அவனைத் தொடர்ந்து சென்றாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்