
மாயோன் 6
ரத்தத்தில் திளைத்து தன் மடியின் மீது விழுந்தவனை… ஏந்தி கொண்டவள்… ” மா…மா… ” என்று காற்றுக்கு கூட கேட்டகாத குரலில் அவனது கன்னம் தட்டி அழைத்து பார்த்தாள்…
அதனை சலிப்பாக பார்த்த விக்ரமன் ” இவன் ஏன்டா இடையில் வந்து விழுந்தான் ” என்று சத்யனிடம் கேட்டான்.
” அவனுக்கு அவள் மேல அன்பு அதிகம் சார். அது தான்… இப்படி எல்லாம் கிறுக்கு தனம் பண்ணிட்டு இருக்கான்” என்று கூறி சிரித்தான் சத்யன்…
மகிழனோ ரத்தம் நிறைந்த தன் கரத்தினால் அவளது கன்னம் தொட முயற்சிக்க… அதற்கு கூட அவன் உடல் உத்துழைக்கவில்லை… அவனது தவிப்பை உணர்ந்து தானே அவனது கரத்தை எடுத்து தனது கன்னத்தில் வைத்து அழுத்தி கொண்டவள்… ” மாமா…மாமா… என்கிட்ட பேசு மாமா…உனக்கு ஒன்னும் ஆகாது… என்னை பாரு மாமா” என்றவள் அவனை எழுப்ப முற்பட்டாள்..
” வேணாம் ” என்று தலையாட்டிய மகிழனுக்கு கண்கள் எல்லாம் இருள் சூழ்ந்து.. ” க…ண்ணம்மா…. ” என்று அவளை அழைக்க… நந்தினியின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வடிந்தது…
” மாமா… என்ன மன்னிச்சிடு மாமா… நான் பண்ண பாவம் இப்படி உன் உயிரை குடிக்கும்ன்னு நான் கனவில கூட நினைச்சு பார்க்கல மாமா…கடைசிவரை உன்னை நான் புரிஞ்சிக்கவே இல்லையே மாமா… ” என்றவள் அவன் மார்பில் விழுந்து கதறி அழுதாள்… இது எல்லாம் கீர்த்தியின் காதில் கேட்டு கொண்டு தான் இருந்தது…
அங்கு கீர்த்தியோ என்ன செய்வது என்று புரியாமல் சிலையென கலங்கி நின்றாள்…
மகிழனிடத்தில் இருந்து சிறு புன்னகை மட்டுமே வெளிவந்தது ” கண்ணம்மா… ” என்றவன் தனது மார்பின் மீதிருந்த அவளது தலையை வருடி கொடுக்க… அவனை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தாள் நந்தினி…
” கண்ணம்மா….” என்று அவன் தடுமாறி அழைக்க…
“சொ… சொல்லு… மாமா.. ” என்று அவள் தவிப்புடன் அவன் முகம் தாங்கினாள்…
” பாப்பாவயும்… அத்தயையும் பார்த்துக்கோ… கண்…ண..ம்மா ” என்று கூறியவனின் கண்கள் அவள் முகம் பார்த்தவாறே மூடிக்கொண்டது…
அதனை கண்டு அவனை உலுக்கிய நந்தினி… ” மாமா… மாமா… எழுந்திரு… என்னை பாரு… மாமா… ” என்று அவனை எழுப்ப முயல.. அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை… அவன் அமைதியை உணர்ந்தவள்… ” மாமா… ” என்று அந்த கானகமே அதிரும்படி கதறினாள்…
அந்த சத்தம் விக்ரமனின் செவியை அடைய… சுண்டு விரல் கொண்டு தன் காதை குடைந்தவன் ” ரொம்ப கத்துறாடா இவள்… ” என்று பக்கத்தில் இருந்த சத்யனிடம் கூற… ” அப்போ சத்தத்தை அடக்கிடுவோமா சார் ” என்று கேட்டான் அவன்…
” ம்ம்ம் ” என்ற விக்ரமன்… துப்பாக்கியால் நந்தினிக்கு குறிவைக்க… துப்பாக்கியை பிடித்து கொண்டான் சத்யன்… விக்ரமனோ அவனை கேள்வியாக பார்க்க…
” அவள் கிட்ட எனக்கு பேசி தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்னும் இருக்கு சார்… இவள் அவ்ளோ சீக்கிரம் சாக கூடாது… ” என்ற சத்யனின் கண்களில் வலியும் , வன்மமும் சமமாக நிறைந்திருந்தது…
” புரியுது சத்யா ஓகே… ஆனால் டைம் வேஸ்ட் பண்ணாமல் முடிச்சிடு ” என்று கூறிய விக்ரமன் தோள்களை உலுக்கியபடி தன் காரில் ஏறி அமர்ந்துகொண்டு அங்கிருந்து சென்றவன்… தன்னுடைய அடியாட்களுக்கு அழைத்து நந்தினியின் வீட்டிற்கு சென்று பைல்களை தேட சொன்னான்…
விக்ரமன் அங்கிருந்து செல்லவும்… அவன் அருகில் இருந்த அடியாட்களை நோக்கி ” அவளை இழுத்துட்டு வாங்கடா ” என்று கூறினான் சத்யன்…
அவன் கூறியதை போல் அடியாட்களும் அவளை இழுத்துவருவதற்கு அவள் அருகில் வந்தனர்… அருகில் வந்து அவளது தோளில் கை வைத்த அடியாள் ஒருவன், அவளை பிடித்து இழுக்க… நொடியில் பக்கவாட்டாக திரும்பி பார்த்த நந்தினி.. தீயென எதிரில் இருந்தவனை முறைத்தாள்…
” என்னடி…பாக்குற வா.. *** ” என்று அவன் தகாத வார்த்தை சொல்லி அவளது உச்சி முடி பிடித்து இழுக்க… நந்தினியின் மடியில் இருந்த மகிழனின் தலை… தரை சாய்ந்தது… அதனை வேதனையுடன் பார்த்தாள்…
அந்த அடியாள் நந்தினியின் முடியை பிடித்து தர தரவென இழுத்து வர… கண்கள் சிவந்து ரத்தமான விழிகளுடன்… அங்கே நின்றிந்த சத்யனை பார்த்தாள் நந்தினி… அந்த பார்வை!!! அனலை வெளிப்படுத்தியது…
சத்யனோ அவளை திமிராக பார்த்தவாறே கைகளை கட்டியபடி நின்றுகொண்டிருக்க … அவனை அனல் தெறிக்க பார்த்த நந்தினி… தன்னுடைய ஒரு கரம் கொண்டு கூந்தலை பற்றி இருந்த அடியாளின் கரத்தை அழுந்த பற்றி அவன் இயக்கத்தை நிறுத்தினாள்…
அடியாளோ அவளை குனிந்து பார்க்கும் முன்… அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து அவன் முகத்தில் ஓங்கி அடித்தாள் நந்தினி…
அடியாள் அந்த தாக்குதலை சிறிதும் எதிர்பாராமல் இருக்க… நந்தினியின் தலை முடியில் இருந்து தனது கையை எடுத்தவன் அப்படியே நிலைகுலைந்து பின்னே நகர்ந்தான்…
அவள் அடித்தத்தில் அவனது மூக்கில் இருந்து ரத்தம் வர… அதனை துடைத்த படி அவளை கோப பார்வை பார்த்தவன்… மீண்டும் அவளை நெருங்கி வர பார்க்க… கீழே கிடந்த மண்ணை அள்ளி தன்னை நெருங்கி வந்தவர்களின் முகத்தில் வீசியவள்… அந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு அங்கிருந்து ஓட துடங்கினாள்…
இதனை சற்றும் எதிர்பாராத சத்யன் ” ஏய் ” என்று அழைத்தவாறே அவளை நெருங்கி வர… அவளோ இவர்களிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் அந்த கானகத்தின் நடுவே புகுந்து ஓட துவங்கினாள்…
கண்களை கசக்கியபடி நின்ற அடியாட்களை அடித்த சத்யன்… ” என்னடா இன்னும் இங்க நின்னுட்டு இருக்கீங்க ? அவளை போய் பிடிங்கடா ” என்று கூறிய சத்யனும் நந்தினியை பின் தொடர்ந்து தேடி ஓடினான்…
இங்கு கீர்த்திக்கு போன் கனேக்சன் கட் ஆகி போனது… ” அக்கா… அக்கா.. பேசு அக்கா… நான் பேசுறது கேக்குதா… ஹெலோ ..ஹெலோ ” என்று பதட்டத்தில் கதறியவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள்…
நந்தினி பேசியதை வைத்து ‘விக்ரமன்’ என்ற ஒருவன்… தங்களை கொல்ல பார்க்கிறான்… அவன் தான் அக்காவையும், மாமாவையும் ஏதோ செய்து விட்டான் என்று எண்ணியவள்… அடுத்த என்ன செய்வது என்று புரியாமல் நந்தினி கூறியபடி அந்த பேக்கை எடுத்து தன் தோளில் மாட்டி கொண்டவள்… நேராக அவள் தாய் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்…
” இப்போ என்ன பண்ணுறது… அம்மாவை இப்படியே விட்டுட்டு எப்படி இங்க இருந்து போக முடியும் அவங்க வந்து அம்மாவை ஏதாவது பண்ணிட்டால் என்ன பண்ணுறது ” என்று புலம்பியவள்… தூங்கி கொண்டிருந்த அம்பிகாவிடம் ” அம்மா … அம்மா ” என்று அவரை எழுப்ப முயன்றாள்… கண் விழித்த அம்பிகா… ஏதோ பேச முயல…கீர்த்திக்கு தான் ஒன்றும் புரியவே இல்லை…
” அம்மா… நீ சொல்ல வருவது எனக்கு ஒன்னும் புரியல..ஆனால் நம்மல சுத்தி ஏதோ தப்பு நடக்குதுமா… வா…நம்ம இங்க இருந்து போய்டுவோம்… ” என்றவள் அம்பிகாவை கைதாங்களாக தூக்க பார்த்தாள்… ஆனால் மலர் மேனி கொண்டவளால் அவரை கட்டிலில் இருந்து அசைக்க கூட முடியவில்லை…
தன் இயலாமையை எண்ணி முதல் முறை கண்ணீர் வடித்தாள் கீர்த்தி… ” அம்மா எனக்கு பயமா இருக்குமா… என்ன பண்ணுறதுன்னே தெரியலமா ” என்ற கீர்த்தி அவரது காலடியில் அமர… அப்போது திபு திபு வென விக்ரமன் அனுப்பிய அடி ஆட்கள் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தனர்…
வெளியே ஏதோ சத்தம் கேட்க… மிரண்டு முழித்த கீர்த்தி அம்பிகாவை பார்க்க… அவரோ எதிரில் இருந்த நந்தினியின் புகைப்படத்தை கையால் காட்டி காட்டி ஏதோ கூற வந்தார்…
” அம்மா… ” என்று கீர்த்தி அவர் அருகில் செல்ல… ஹாலில் இருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழும் சத்தம் கேட்டது…
அந்த சத்தம் கேட்டு கீர்த்தி வெளியே வர… அதற்குள் விக்ரமனின் ஆட்கள்… வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் புரட்டி போட்டு பைலை தேட தொடங்கினர்…
” யாரு நீங்க எல்லாம் எங்க வீட்டுல என்ன பண்ணுறீங்க…எல்லாரும் வெளியே போங்க ” என்றவள்… சிறுபிள்ளை கோபத்துடன் பேச… அவர்கள் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல்… வீட்டில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பைலை தேட தொடங்கினர்…
அவர்களை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தவித்து போன கீர்த்தி வெளியே வந்து உதவிக்கு அருகில் உள்ள ஆட்களை அழைக்க… அவர்கள் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை… ” அண்ணா வீட்டிக்குள்ள வந்து பிரச்சனை பண்ணுறாங்க கொஞ்சம் என்னனு கேளுங்க ? ” என்று அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் உதவி கேட்ட கீர்த்தி ” அய்யோ ப்ளீஸ் யாராவது உதவி பண்ணுங்களேன்” என்று கெஞ்சினாள்.. ஆனால் அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவர் கூட என்ன? ஏது? என்று கேட்கவில்லை…
அவர்களது அலட்சியத்தை கண்டு முகம் சுளித்தாள்… ” பேசாமல் போலீஸ் கிட்ட போய் கப்லைன்ட் பண்ணிடுவோம் அது தான் ஒரே வழி ” என்று எண்ணியவள் நேராக.. போலீஸ் ஸ்டேஷன் நோக்கி தனது வண்டியை எடுத்து கொண்டு சென்றாள்…
இங்கு கீர்த்தியின் வீட்டில் இருந்தபடி அடியாள் ஒருவன் விக்ரமனிடம் பேசிக்கொண்டு இருந்தான்… ” சார் இங்க ஒரு ரூம் முழுக்க பைல் தான் இருக்கு… என்ன பண்ணுறது சார் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திடவா? ” என்று அவன் கேட்க…
” வேண்டாம்டா… பிளான் சேன்ஞ்… எல்லாத்தையும் வீட்டோட வச்சி கொழுத்திடு… ” என்றான் விக்ரமன்.
” சார் என்ன சொல்லுறீங்க? ”
” சொன்னதை செய்…”
” ஆனால் சார் இங்க ஒரு அம்மா படுத்த படுக்கையா இருக்காங்க… ஒரு பொண்ணு கூட இங்க தான் இருந்தது… ” என்று அவன் கூற…
“ம்ம். அந்த பொண்ணை விட்டுட்டு… அந்த அம்மாவை அப்படியே வீட்டுக்குள்ளேயே வச்சி கொழுத்திடு… அந்த பைல் இருக்க ரூம் எல்லாம் பெட்ரோல் ஊத்தி… கேஸ் ஓபன் பண்ணி விட்டுட்டு கொழுத்திவிடு, அப்போ தான் விபத்து மாதிரி இருக்கும்… ”
” ஆனால் சார்… நாங்க இங்க வந்ததை வெளியே நிறைய பேர் பார்த்தாங்க சார் ? ஏதாவது போலீஸ் கேஸ் ஆகிட்டா? ”
” ஏய்… சொல்லுறதை செய்… வேடிக்கை பார்க்குற எவனும் வந்து சாட்சி சொல்ல மாட்டான்… முதுகெலும்பு இல்லாதவனுங்க… கொழுத்தி விடு… அப்படியே கேஸ் ஆனால் நான் பார்த்துகிறேன் ” என்றவன் ” அந்த பொண்ணு எங்க ? ” என்று கேட்க… அவனும் அங்கு கீர்த்தியை தேடினான்..
” சார் இங்க தான் சார் இருந்தாள் ஆனால் இப்போ காணோம் சார்! ” என்று அவன் கூற … தன் லேப்டாவை எடுத்து அவள் இருக்கும் லொகேசனை ஆராய்ந்தான் விக்ரமன்… அவன் கீர்த்தியின் கழுத்தில் போட்டு விட்டு ” v ” செயினில் மைக்ரோ ஜிபிஎஸ் ட்ராக்கிங் சிப் பொருத்தி இருந்தான் அவன். அவள் தன்னை விட்டு எங்கும் சென்று விட கூடாது என்பதற்காகவும், அவள் செயல்களை கண்காணிக்கவும் அவன் இதை செய்தான்… ( காதலுக்காக அப்படின்னு நினைச்சிங்களா? அது தான் இல்லை அவர் வில்லனாக்கும் )
” ம்ம்ம் அவளை நான் பார்த்துகிறேன்… நீ வீட்டை கொழுத்திவிட்டுட்டு… உடனே அங்க இருந்து கிளம்ப வேண்டாம்… அங்க மறைவா ஏதாவது இடத்தில் நில்லுங்க… அப்ரோம் என்ன பண்ணுறதுன்னு நான் சொல்லுறேன்” என்றவன் கீர்த்தியை கண்காணிக்க தொடங்கி இருந்தான்…
இருபது நிமிடத்திற்கு பிறகு காவல் நிலையத்தை அடைந்திருந்தாள் கீர்த்தி… அவளுடைய இருக்கும் லொகேசனை இதழில் சிறு புன்னகையுடன் பார்த்த விக்ரமன்… அவள் செல்லும் காவல் நிலையத்தில் இருக்கும் தனக்கு வேண்டபட்டவர்களுக்கு அழைத்து என்ன செய்யவேண்டும் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டான்…
இதுவரை கற்பனையில் கூட காவல் நிலையத்தை எட்டி பார்க்காத ஒரு சிறு பெண்… இன்று குடும்பத்திற்காக தன் பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு காவல் நிலையத்திற்குள் நுழைந்தாள்…
அங்கு சென்றவளுக்கு என்ன செய்வது… எங்கு போவது யாரை கேட்பது என்று எதுவும் விளங்கவில்லை… பயத்திலும் பதட்டத்திலும் முகம் வியர்த்து வடிந்தது… அவளது இதயம் அவளுக்கே கேட்க்கும் அளவுக்கு வேகமாக துடித்தது… ஒருகணம் அந்த காவல் நிலையத்தை சுற்றி பார்வையை சுழல விட்டவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது…
‘ ஏன் எங்களுக்கு இந்த நிலைமை… ‘என்று மனதுக்குள் நொந்து கொண்டாள்…
” யாருமா நீ என்ன வேணும் ” என்று அங்கிருந்த கான்ஸ்டெபில் ஒருவர் கேட்க… அப்போது தான் நிதானத்திற்கு வந்தாள் கீர்த்தி…
” அது சார்… எங்க அம்மா… இல்லை… எங்க அக்கா .. எங்க மாமா.. எல்லாரையும் யாரோ கொல்ல பார்க்குறாங்க சார்… இல்லை … இல்லை என் அக்காவுக்கு ஏதோ ஆகிட்டு… என் மாமாவை கூட அவங்க சுட்டுடாங்க… இப்போ கூட… இதோ… எங்க வீட்டுக்குள்ள வந்து பொருள் எல்லாம் போட்டு உடைக்குறாங்க…” என்றவள் அந்த போலீசாரின் கரத்தை பற்றி ” வாங்க சார் வந்து என்னனு கேளுங்க ” என்று கூறினாள்… அங்கிருந்த அனைவரும் அவளை ஏதோ பைத்தியத்தை பார்ப்பது போல பார்த்து வைத்தனர்…
தலையெல்லாம் கலைந்து, சால் கூட அணியாமல்! தோளில் ஒரு பையையும் மாட்டி கொண்டு… அவசரத்தில் ஒவ்வொரு காலிலும் வேறு வேறு இணை செருப்புகளை அணிந்து கொண்டு தலை விரி கோலாமாக அங்கு நின்றாள் கீர்த்தி… (இது என்ன சீரியலா? எங்கு சென்றாலும் அதீத ஒப்பனையுடன் ,தலை கலையாமல் செல்வதற்கு…) பதட்டத்தில் நம் மூளை சில சமயம் வேலை நிறுத்தம் செய்துவிடும் என்பது கீர்த்தி விஷயத்தில் சரியாக இருந்தது… தன் தோற்றத்தை கவனிக்க முடியாத அளவுக்கு விதி அவளை விரட்டியது…
அவளது தோற்றத்தை பார்த்தவர்கள்… ஒருகணம் தங்களுக்குளேயே சிரித்து கொண்டவர்கள்… ” போமா… சும்மா வந்து எதுவும் ஒளறிட்டு இருக்காதா… எங்க நேரத்தை வீணடிக்காமல் இங்கேயிருந்து கிளம்பு… அப்ரோம் உன் மேல தான் கேஸ் போட வேண்டி வரும் ” என்று அங்கிருந்த ஒரு காவலர் கூற. கீர்த்திக்கு பயத்தில் மூச்சே நின்று விடும் போல இருந்தது… பதில் பேச வார்த்தைகள் கூட வரவில்லை… தடுமாறி தவித்து நிற்பவளுக்கு கண்ணீர் மட்டுமே துணையாக இருந்தது…
அப்போது ” என்ன இங்க சத்தம்? ” என்றவாறு… உள்ளே நுழைந்தான்… இன்ஸ்பெக்டர் பரதன். அவன் வருகையை உணர்ந்து அனைவரும் அமைதி காக்க… உடனே அவனிடம் வந்து நின்ற கீர்த்தி… அதே கதையை கூற… அவனும் அவளை ஏதோ போல பார்த்துவைத்தான்…
அப்படியே அங்கிருந்த மேசையில் சாய்ந்து நின்றவன் ” ம்ம்ம் அவங்களை கொலை பண்ணியதை நீ பார்த்தியா? ” என்று கேட்டான்…
” இல்லை… நான் பார்க்கல… ஆனால் அக்கா என்கூட போன்ல பேசிட்டு இருந்தாங்க… அப்ரோம் யாரோ அவங்களை கொல்ல பாக்குறதா சொன்னாங்க??? அப்ரோம் துப்பாக்கி சத்தம் கூட கேட்டுச்சு…அப்ரோம் அப்டியே போன் கட் ஆகிடுச்சு ” என்று அவள் கூறிய விதத்தை பார்த்து பரதனுக்கு மெல்லிய சிரிப்பு அரும்பியது…
உடனே அருகில் இருந்த காவலாளி ” சார்… இந்த பொண்ணு ஏதோ மனவளர்ச்சி இல்லாத பொண்ணு போல… வந்ததில் இருந்து இப்படி தான் ஒளறிட்டு இருக்கு ” என்று கூற பரதன் அவரை முறைத்து பார்த்த பார்வையில் அவரின் வாய் மூடி கொண்டது…
” சார் என்னை நம்புங்க.. நான் பொய் சொல்லல..இவங்க எல்லாரும் சொல்லுற மாதிரி நான் பைத்தியமும் இல்லை…நான் ரொம்ப ஹெல்தியா தான் இருக்கேன்… என் பேரு கீர்த்தி…நான் பிஎஸ்சி படிக்கிறேன், உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா ஏதாவது கேள்வி கேளுங்க நான் சரியா பதில் சொல்லுறேன்… ஆனால் இப்போ ப்ளீஸ் எங்க வீட்டுக்கு வாங்க… அங்க ரௌடி பசங்க எங்க வீட்டு பொருளை எல்லாம் போட்டு உடைக்கிறாங்க… எங்க அம்மாவை ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு ” என்று அவள் கலங்கிய கண்களுடன் கூற… நம்பினான் பரதன்…
” சரி வாங்க போய் பார்க்கலாம் ” என்றவர்கள் அவளுடன் கிளம்பி வந்து பார்க்கும் போது… அந்த வீட்டில் அடியாட்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது… பொருட்கள் கூட கலையாமல் வீடே அமைதியாக இருந்தது… விக்ரமன் அவள் காவல் நிலையம் செல்லும் போதே அனைத்தையும் எடுத்த இடத்தில் வைத்து விட்டு ‘ பிறகு பார்க்கலாம் ‘ என்று அவர்களிடம் சொல்லி, வெளியே வர சொல்லி இருந்தான்…
” இது எப்படி? இல்லை சார்… உண்மையா இங்க அடியாள் இருந்தாங்க… சுத்தி எல்லாரும் வேடிக்கை கூட பார்த்தாங்க… ” என்றவள்… ” அம்மா ” என்றபடி அம்பிகாவின் அறைக்குள் செல்ல…அவரோ அங்கு அமைதியாக படுத்து கிடந்தார்…
அதனை பார்த்தவளுக்கு என்ன சொல்லுவது என்று கூட தெரியவில்லை… ” இல்லை சார்… நான் பொய் சொல்லல… வேணும்னா என் கூட வாங்க ” என்றவள் வேகமாக வெளியே ஓட… பரதனும் சலிப்பாக அவளை பின் தொடர்ந்து சென்றான்…
கீர்த்தியோ பக்கத்து வீட்டில் வேடிக்கை பார்த்தவர்களிடம் ஏதோ கேட்க… அவர்கள் அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று கூறி விட்டனர்…( நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு, நமக்கு எதுக்கு வம்பு என்று அமைதியாக இருக்கும் கூட்டம் அது! அப்படி தான் பதில் கூறும் )
அவர்கள் கூறியதை கேட்டு கீர்த்தியை இம்சையாக பார்த்த பரதன் தன் ஜீப் நோக்கி சென்றான்…
” சார் எங்க போறீங்க? நான் சொல்லுறது எல்லாம் உண்மை ” என்று அவள் கண்ணீருடன் அவன் முன் நிற்க…
” எங்க நேரத்தை வீணாக்காதா? இன்னொரு முறை இந்த மாதிரி சொல்லிட்டு ஸ்டேஷன் பக்கம் வராத புரியுதா? ” என்று கூறி அங்கிருந்து ஜீப்பை எடுத்து சென்றவன் அடுத்து அழைத்தது என்னவோ விக்ரமனுக்கு தான் ” ம்ம்ம் நீங்க சொன்ன மாதிரியே பண்ணி ஆச்சு… ஆனால் அந்த பொண்ணை பார்க்க பாவமா இருக்கு … நீங்க ஏன் இப்படி எல்லாம் பண்ணுறீங்க ? ” என்று கேட்டான்…
” இதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது பரத்… ஆமா தேவா எப்படி இருக்காள்?” என்று கேட்டான் விக்ரமன் ஒரு வித வலி நிறைந்த குரலில்…
” ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை அண்ணா… நாளுக்கு நாள் அவள் நிலைமை மோசமாகிட்டு தான் இருக்கு ” என்று கூறியவனின் கண்கள் மட்டும் அல்ல… விக்ரமனின் கண்களும் கலங்கி போனது…
” ம்ம்ம் கவனமா பார்த்துக்கோ ”
” நீங்க இந்த வீக் அவளை பார்க்க வரேன்னு சொன்னீங்க ஆனால் வரவே இல்லையே அண்ணா… என்ன ஆச்சு ? ”
” வரமுடியலடா? சாரி நாளைக்கு சென்னை போகணும்… நெஸ்ட் மந்த் வரேன்”
” ம்ம்ம்.. ஆனால் இன்னிக்கு அந்த பொண்ணு கீர்த்தி நடந்துகிட்டது… பேசினது எல்லாமே நம்ம தேவா மாதிரியே இருந்தது இல்லைணா … அவளும் இப்படி தானே ஏதாவது குழந்தை மாதிரி பேசிக்கிட்டே இருப்பாள்… ” என்று சிரித்தபடியே கூறிய பரதனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது… அது அதீத வலியின் வெளிப்பாடு…
” ம்ம்ம் ” என்ற விக்ரமனுக்கு அதற்கு பதில் கூற முடியாமல்.. அழைப்பை துண்டித்தான் …
இங்கு நடப்பது எதுவும் புரியாமல் அப்படியே சாலையிலேயே அமர்ந்த கீர்த்தி கண்களில் இருள் சூழ நிமிர்ந்து பார்க்க… ” டோம் ” என்ற சத்தத்துடன் கேஸ் வெடித்து அவளது வீடு எரிந்து கொண்டு இருந்தது…
அதனை பார்த்த கீர்த்தி ” அம்மா ” என்று கதறி அழுதபடி வீட்டை நோக்கி செல்ல முற்பட… பின்னால் இருந்து வந்த இருவர் அவளது வாயை பொத்தி தூக்கி சென்று தங்களது காருக்குள் தள்ளினார்கள்…

