Loading

அத்தியாயம் 8

“என்னடி செஞ்சு வச்சுருக்க?” அகமொழி திகைப்பாகக் கேட்டாள்.

“நீ தான உண்மையான விஷயத்தை ரிவியூவா போடணும்னு சொன்ன… அதான் உண்மையாவே போட்டிருக்கேன்…” ரூஹி சொன்னதில்,

“நான் பிசினஸ் ரிலேட்டடானது மட்டும் தான போடணும்னு சொன்னேன். இப்படி பெர்சனல் விஷயத்தை இழுத்து விட்டிருக்க…” என்றாள் காட்டமாக.

“ரிசார்ட் ஒர்க்கர்ஸ்கிட்ட அத்து மீறுறது நாட் பெர்சனல் அகா…”

“ப்ச், இது நமக்குத் தேவையில்லாத வேலை. அவன் சும்மாவே மலைல இருந்து தூக்கிப் போடுவான். இப்ப மட்டும் நீ தான் இதை ரிலீஸ் பண்ணுனன்னு தெரிஞ்சுச்சு, உன்னைக் கரும்பு மிஷினுக்குள்ள போட்டுப் புழிஞ்சுடுவான்…”

ரூஹி சற்றே அரண்டு, “என்னடி பயமுறுத்துற? அவனுங்க மட்டும் நம்மளைப் பத்திக் கண்டதைப் போடலாம். நம்ம போடக் கூடாதா?” என்றதில் அகமொழி நொந்து போனாள்.

“சரி விடு… இன்னும் பெருசா வியூஸ் போகல. அவன் இதைப் பார்த்திருக்க மாட்டான். நான் வீடியோவை டெலிட் பண்ணச் சொல்றேன்.”

“தயவு செஞ்சு அதைப் பண்ணு…” என்றதும் இதனை வெளியிட்ட இன்ஸ்டா செலிபிரிட்டிக்கு ரூஹி அழைக்க, அவனோ அழைப்பை ஏற்கவே இல்லை.

“இவன் ஹேங்கவுட் போலடி!” பரிதாபமாக உரைத்தவளைத் தீயாக முறைத்த அகமொழி, “மவளே! அந்தப் பைத்தியக்காரன் மட்டும் இங்க வந்து பிரச்சினை பண்ணட்டும். உன்னை நேரா அவன்கிட்ட தத்து குடுத்துட்டுப் போயிடுவேன்…” என்றதில்,

“ரிவென்ச் எடுத்தாலும் திட்டுறீங்க, எடுக்கலைன்னாலும் திட்டுறீங்க…” எனப் புலம்பிய ரூஹி மீண்டும் அலைபேசியுடன் வெளியில் சென்றாள்.

‘ஹையோ’ தலையில் கை வைத்துக் கொண்ட அகமொழிக்கு அலைபேசி அழைப்பு வர அதில் வந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து விட்டாள்.

“ரூஹி, ரூஹி…” பதறியபடி அலுவல் அறையை விட்டு வெளியில் வர, அவளோ அந்த செலிப்ரிட்டியுடன் பேசி விட்டுத் திரும்பினாள்.

“நல்லவேளை! அவன் வீடியோவை டெலிட் பண்றேன்னு சொல்லிட்டான். 100 வியூஸ் தான் போயிருக்கு.” என்றதும் தலையாட்டிய அகமொழி கையைப் பிசைந்தாள்.

“நீ முதல்ல ஊட்டிக்குக் கிளம்பு!”

“என்னடி ஆச்சு? அந்தக் கேரளாக்காரனுக்குத் தெரிஞ்சுடுச்சா. பரவாயில்ல. வந்தா நான் தான் பண்ணேன்னு சொல்லி அவன்ட்ட நாலு அடி வாங்கிக்கிறேன்.” என்றிட,

“ப்ச் இல்லடி…” எனத் தயங்கிய அகமொழி, “அங்கிள்க்கு சடன் அட்டாக்காம். ஹாஸ்பிடல்ல இருந்து எனக்கு கால் பண்ணாங்க. உன் நம்பர் ரீச் ஆகலைனு, எமெர்ஜென்சி கான்டாக்ட்ல இருந்த என் நம்பருக்குப் பண்ணிச் சொன்னாங்க. நீ முதல்ல ஊட்டிக்குக் கிளம்பு!” என்றதும் ரூஹி அதிர்ந்து பதறி விட்டாள்.

“என்ன சொல்ற அகா…” என்றவளுக்கு ஒரு கணம் மூளையே வேலை நிறுத்தம் செய்தது.

அவளுக்கு இருக்கும் ஒற்றைச் சொந்தம் அவர்.

குளம் கட்டிய கண்ணீருடன் அசையாது நின்றவளை உலுக்கி, உடனடியாக வாடகைக் கார் எடுத்துக் கொடுத்து அவளை ஏற்றினாள். இந்நிலையில் பேருந்தில் அவள் அலைவதெல்லாம் ஆகாத காரியம்.

“ரூஹி, பணம் தேவைப்பட்டுச்சுன்னா ஒரு மெசேஜ் மட்டும் பண்ணு! அங்கிள்க்கு சரியாகிடும். நீ பேனிக் ஆகாத…” எனப் பல அறிவுரை கூறிட, அவளோ கண்ணில் நீர் தளும்பத் தலையாட்டினாள்.

“ஹே! நானும் உன் கூட வரவா?” அவளைத் தனியே அனுப்ப மனம் வரவில்லை அகமொழிக்கு.

அதில் தான் சற்றே தெளிவு பெற்றவள், “சண்டே எங்கேஜ்மெண்ட்டை வச்சுட்டுக் கூட வரேன்னு சொல்ற. நான் பார்த்துக்கறேன். அப்பாக்கு எதுவும் ஆகாது.” எனத் தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு காரை எடுக்கச் சொல்லியவளைப் பாவமாகப் பார்த்தாள்.

பெருமூச்சுடன் மீண்டும் தனது வேலையில் மூழ்கிப் போனாள் அகமொழி.

அன்று இரவு, ரிஷான் அகமொழிக்கு அழைக்கப் புன்னகையுடன் அழைப்பை ஏற்றாள்.

“என்னடா ஊருக்குப் போயிட்டியா?”

“ம்ம் வந்துட்டேன்டி. ரூஹி அப்பாக்கு என்ன ஆச்சு? அவரை ஒழுங்கா இங்க வாங்கன்னு சொன்னதுக்குக் கேட்கவே மாட்டேன்டாரு.” எனச் சலித்தான்.

“நானும் ஹாஸ்பிடல்க்கு கால் பண்ணி பாலோ பண்ணிட்டுத் தான் இருக்கேன் ரிஷு. இன்னும் ஐசியூல தான் இருக்காரு. வால்வுல அடைப்பு இருக்குன்னு சொல்றாங்க. ஆஞ்சியோ பண்ணிட்டுத் தான் சர்ஜரி பண்ணனுமா, இல்ல டேப்லட்ல சரி பண்ணலாமான்னு சொல்லுவாங்களாம், ப்ச்…” வெகுவாய் வருந்தினாள் அகமொழி.

“ம்ம், நிச்சயத்துக்கு அவள் இருக்க மாட்டான்னு நினைக்கிறப்ப கொஞ்சம் கஷ்டமா இருக்குடி.”

“எனக்கும் தான். ஆனா இப்ப போஸ்ட்போன்ட் பண்ண முடியாதுல. உன் வீட்ல தப்பா நினைப்பாங்க…”

“ஆமா… சரி கல்யாணத்துக்கு அவளைப் பிடிச்சுடலாம்.” எனப் பேச்சை மாற்றி, சிறிது நேரம் இருவரும் சுவீட் நத்திங்ஸ் உரையாடி விட்டு உறங்கினர்.

மறுநாள் வெள்ளிக் கிழமையாக இருக்க, வழமை போல கோவிலுக்குச் சென்று விட்டே அகவனா ஸ்டேக்குச் சென்றாள்.

அங்கோ ஜேசிபி ஒன்று தயார் நிலையில் நிற்க, அகமொழி புருவம் சுருக்கினாள்.

“அண்ணா, இங்க வந்து ஏன் நிறுத்தி இருக்கீங்க. விசிட்டர்ஸ் கார் நிறுத்துற இடம்…” என ஓட்டுநரிடம் கூற,

“நியாயமா உன் மேல நிறுத்திருக்கணும்…” அழுத்தமும் ஆத்திரமும் மிக்க குரலிலேயே அவளுக்கு விழி பிதுங்கி விட்டது.

ஸ்லோமோஷனில் பக்கவாட்டுப் புறம் திரும்ப, அங்கு காரின் மீது ஸ்டைலாகச் சாய்ந்தபடி நின்றிருந்தான் அர்ஜித் அகன்.

அவன் விழிகளில் வழிந்த அலட்டலில் அவளுள் அபாயமணி அடித்தது.

“என்…என்ன பிரச்சினை உனக்கு?” தட்டுத் தடுமாறியவளை எப்போதும் போல மேலிருந்து கீழ் வரை லேசர் பார்வை ஒன்றைப் பார்த்தான்.

வெறும் குர்தியும் ஜீன்சுமாக அணிந்திருப்பவள், அன்று அகன்ற பார்டர் வைத்த காட்டன் புடவை கட்டி இருந்தாள்.

போனிடெயிலில் அடங்கி இருக்கும் கூந்தல் இன்று தளர்ந்து அவளது தோள்களில் உறவாடியது. முன்நெற்றியைத் தீண்டிய குட்டி முடிகள், அங்கும் இங்கும் அலைபாய்ந்து பார்ப்பவரை அலைபாயச் செய்யும் வித்தை செய்தது.

அவனது பார்வை அவளைச் சுட்டிருக்க வேண்டும்.

“உனக்கு என்ன பிரச்சினைன்னு கேட்டேன்…” என்றாள் அழுத்தமாக.

“நீ எந்து செய்தென்னு நினக்கு அறயில்லே?” இரு புருவமும் மேலேறக் கூர்ந்து கேட்டவனைக் கண்டு திருதிருவென விழித்தவள் அவசரமாக அலைபேசியை எடுத்துப் பார்க்க, அங்கோ அவனைப் பற்றிய வீடியோ நீக்கப்படாமல் பத்தாயிரத்திற்கும் மேல் வியூஸ் சென்றிருந்ததில் திகைத்தாள்.

‘காலையில் கூட ரூஹி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாளே… வீடியோ டெலிட் செய்யப்பட்டதாய்!’

ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. ஆனால் இன்று இந்த மலைக்கு இரையாகப் போவது மட்டும் நன்கு புரிந்து மனநடுக்கத்தைக் கொடுத்தது.

இருந்தும் தைரியத்தை மீட்டுக்கொண்டு பேச வரும்போதே, அவன் கிளாம்பிங்கை இடிக்க உத்தரவிட, “இதோ பாரு… தேவையில்லாம பண்ணாத… உண்மையைத் தான சொல்லிருக்கு. நீ தப்புப் பண்ணலாம், அதை மத்தவங்க கேட்கக் கூடாதா?” என வாய்க்கு வந்ததை உளறினாள்.

அவனோ காதைக் குடைந்து கொண்டு நிற்க, அவளது முதல் கிளாம்பிங் அருகில் ஜேசிபி வந்ததும், “நான் வீடியோ டெலிட் பண்ணச் சொல்றேன். ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்” என்றாள் பதற்றமாக.

“எந்தினு வீடியோ டெலிட் செய்யனம் காந்தாரி… இரிக்கட்டே! இது சத்யமானோ நுனயானோன்னு அறயான்” என அவன் பேசிக்கொண்டே செல்ல,

“ஹான் என்ன சொல்ற?” எனப் புரியாது விழித்தாள்.

“ஐ மீன் அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க நிறைய செலிபிரிட்டி இப்போ மறுபடியும் ரிசார்ட்ல குவிஞ்சுட்டு இருக்காங்க. உன்னால எனிக்கு ப்ரீ மார்க்கெட்டிங் தான். அண்ட் மோர் ஓவர், எனிக்கும் கூட வெறும் ஒர்க்கர்ஸ் கூட இருந்து போரிங் ஆவுந்து. ஒரு சேஞ்சுக்கு நிண்டெ கூடே ஒன் நைட் ஸ்டே செய்யாமென்னு ஒரு ஐடியா. வந்த வீடியோக்கு நியாயம் செய்யணுமல்லோ…” என்றான் அமர்த்தலாக. அவனது இறுதி வரியை அவளும் கவனிக்கவில்லை.

எப்போதும் காச் மூச்சென்று கத்துபவனின் நிதானமான கோபம் அவளது வயிற்றில் புளியைக் கரைத்தது.

அவள் மீதும் சிறு பிழை இருப்பதாலும், சின்னப் பதற்றம் தொற்றிக் கொண்டதாலும் அவளுக்குக் கண்ணை இருட்டிய நிலை.

“உனக்கு சென்ஸ் இல்ல. இன்னொருத்தி கூட நிச்சயம் வச்சுட்டு எங்கிட்ட இப்படிப் பேசிட்டு இருக்க” அகமொழியின் முகம் அருவருப்பில் சுருங்கியது.

“லன்ச் கிடைச்சதுன்னு வேண்டி ஸ்னேக்ஸ் வேணாம்னு சொல்ல முடியாதே காந்தாரி…” என்றவனின் ஒற்றைப் புருவம் நெற்றி வரை வில்லாய் வளைய, அவளுக்கோ மெல்ல மெல்லச் சினம் மேலேறியது. அவளுக்கு புரிவதற்காய் உடைந்த தமிழில் பேசினான். ஆகினும் ப்ரணீத்துடன் நட்பு புரிவதால், அவனுக்கு தமிழ் நன்றாகவே புரியும்.

“இதான் லிமிட் உனக்கு. என்கிட்ட இப்படிப் பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத…” என்று விரல் நீட்டி மிரட்ட,

ஜேசிபி மேலும் சீறிப்பாய்ந்து முன்னேறி கிளாம்பிங்கை அடைந்திட, அவளுக்குக் கண்ணைக் கரித்தது.

“டேய்! முதல்ல இதை நிறுத்தப் போறியா இல்லையா?” எனக் கத்தினாள்.

அவன் பெயர் வேறு தெரியவில்லை அவளுக்கு. வீடியோவில் கேட்ட பெயரும் மனதில் பதியவில்லை.

அர்ஜித்தோ அசையவே இல்லை. “ஒன் நைட் ஸ்டேக்கு ஓகே பர… நான் ஸ்டாப் செய்யான் பரயாம்…” எனக் கையைக் கட்டிக்கொண்டு நின்றவனைக் கண்டு நெருப்பை உமிழ்ந்தாள்.

சில நொடிகள் கண்ணை இறுக்கி மூடித் திறந்தவள், “ஒரு நிமிஷம் இரு. கெஸ்ட்டோட லக்கேஜ் உள்ள இருக்கு. அதெல்லாம் எடுத்து வெளில வச்சதுக்கு அப்புறம் இடிச்சுக்கோ…” என இறுகிய முகத்துடன் கூறிட, இம்முறை அவனே அறியாத சிறு ரசனை அவன் விழிகளில்.

அங்கு வேலை செய்தவர்களிடம் மிகவும் அக்கறையாக, அறையை புக் செய்து விட்டு வெளியில் சென்றிருந்த விருந்தாளிகளின் பொருள்களை எடுத்து வெளியில் வைத்தவள், கீழுதட்டைக் கடித்தபடி நின்றாள் அழுத்தமாக.

அவ்வழுத்தம் ஆடவனின் ஈகோவைத் தீண்டியிருக்க வேண்டும்.

“உன் மனசுல என்ன பெரிய உலக அழகின்னு நினைப்பாடி காந்தாரி!” அவள் பின்னால் நெருங்கி நின்று அவள் தோள்பட்டையின் மிக அருகில் நாடியைக் கொண்டு வந்து, “நிண்டெகூடே நைட் ஸ்டே செய்யன அவ்ளோ நீ ஒர்த் இல்ல.” என்றான் சீண்டலாக.

“ரொம்ப சந்தோசம் மிஸ்டர் மலையாளி!”

ஓரடி முன்னால் நகர்ந்து நின்றவளின் பின்னால் தானும் ஓரடி எடுத்து வைத்தவன், “நிண்டெகூடே கொஞ்சிக் குழாவ ஒந்தும் நின்னை வரான் பரஞ்சில்லா!” என்றதில் லேசாய் பின்புறம் திரும்பியவள் அவனது கன்னம் தன் கன்னத்தோடு உரசியதில் எரிச்சலடைந்து மீண்டும் முன்னால் நகர முற்பட்டாள்.

இம்முறை அவள் நகராத வண்ணம், வயிற்றுடன் பிடித்துத் தன்னில் மோத விட்டவன், “ரொம்ப திமிர் காட்டாதே. பின்னே ஒரு திவசம் நைட்டு நின்னை ஞானும் என்னை நீயும் சகிக்க வேண்டி வரும். மைண்ட் இட்!” என்றவனின் மூச்சில் கூட அளவு கடந்த சினம்.

“கையை எடு!” என்று அவனை உதறி விட்டுத் தள்ளி நின்றவள், “என்னைத் தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத!” என மிரட்டினாள்.

“நின்னைத் தொடணம்னு எனிக்கு ஆசை இல்லடி. நின்னை விடப் பல சுந்தரிகளைக் கண்டிட்டுண்டு…” என்றான் ஏளனமாக.

“போய் அந்த சுந்தரிகளையே பாரு ராசா!” எனக் கையெடுத்துக் கும்பிட்டவளிடம், “நின்டெ ப்ரெண்ட் தான டைரக்டா ஆ செலிபிரிட்டியை கான்டாக்ட் செஞ்சது. அவள் கால் செய்ததுக்கான வாய்ஸ் ஆடியோவே இருக்கு. கிளாம்பிங்கை இடிக்கனதோடே அவளையும் இடிச்சுத் தள்ளிட்டா எந்தா?” என்றான் தாடையைத் தடவி.

“உனக்குத் தேவை இங்க நான் பிசினஸ் பண்ணக் கூடாது அவ்ளோ தான… இடிச்சுத் தள்ளிட்டுக் கிளம்பு. அதை விட்டுட்டு அவள் மேல கை வைக்கிற வேலை எல்லாம் வச்சுக்காத மிஸ்டர்!”

“ஹா, வெலிய அம்பானி… பிசினஸ் பண்றா… இதோ நோக்கு. டோன்ட் வேஸ்ட் மை டைம். டுடே ஒரு நைட் நீ என்டெ கூடே ஸ்டே பண்ற. பண்ணனும்! பட் டோன்ட் வொரி, எங்கனே வந்தோ, அப்படியே தான் நின்னை அனுப்புவேன்.” என்றான் வெகு தீவிரமாக.

“உனக்கென்ன பைத்தியமாடா பைத்தியக்காரா…”

“நிண்டடுத்து குறச்சு பிராந்துக்காரனா இருந்தாலும் தப்பில்ல காந்தாரி! சாய்ஸ் இஸ் யுவர்ஸ்… நின் கிளாம்பிங்க இடிச்சா திரும்பிக் கட்ட இந்த இடம் நினக்கு இருக்காது. அதே மாதிரி தன்னே நின் ப்ரெண்டும். பரலோகத்துக்குப் போனா திரும்பி வரில்லா!” எனச் சிவந்த உதட்டைச் சுளித்திட,

அவளுக்கு எங்கு சென்று முட்டுவதென்றே தெரியவில்லை. இதில் மொத்தப் பிரச்சினைக்கும் காரணம் அவளென்று தெரிந்தால், தனக்கு வாய்ப்புக் கூடக் கொடுக்க மாட்டானோ என்ற பயம் அப்பியது.

எச்சிலை விழுங்கியபடி நின்றவளின் மீது கருவிழிகளை அழுத்தமாகப் படர விட்டவன், “கமான் மிஸ் காந்தாரி… நின்னே ஒண்ணுமே பண்ண மாட்டேன்னு பரஞ்சில்லே…” என்றான்.

“உன்னை எப்படி நான் நம்புறது?” உள்ளே சென்ற குரலில் கேட்டாள்.

“ஸ்ஸீ, எனிக்கும் நினக்கும் சண்டே ரொம்ப இம்பார்ட்டண்ட் டே. இந்த நேரத்துல நின்டெ கூடே கூத்தடிக்க எனக்கு ஆசையில்லை. ஜஸ்ட் என்டெ ரூம்ல ஸ்டே பண்ணிட்டுப் போ. தட்ஸ் இட்! அதுக்கு மேல நிண்டெ மேல கையை வச்சா, நீ எந்தா வெறும் வேடிக்கையா பார்ப்ப?” அவன் தோளைக் குலுக்கிட,

“கையை உடைச்சுடுவேன்டா!” என்றாள் மிரட்டலாக.

“ஆஸ் யுவர் விஷ்… எனிவேஸ் நைட் மீட் செய்யாம்!” என நக்கல் சிரிப்பொன்றைப் படர விட்டுச் சென்றவனைத் திகிலுடன் ஏறிட்டாள் அகமொழி.

இரவு வரையிலும் பேயறைந்தது போலவே அமர்ந்திருந்தாள். ஜேசிபி எல்லாம் திரும்பச் சென்றிருந்தது.

தன் மீது உரிமை எடுத்துக் கொள்ள மாட்டான் என ஆணித்தரமாக உரைக்கிறான் தான். ஆனாலும் உள்ளுணர்வு அவளை எச்சரித்தது.

அந்த மலையாளியை நம்பாதே! மூளை பயமுறுத்த, தலையைப் பிடித்துக் கொண்டாள்.

சரியாக எட்டு மணியளவில் அர்ஜித் அகனின் கருப்பு நிற கார் அவளது ஸ்டேவை அடைந்தது.

“ரெடியா?” எனக் கேட்க, “இப்பவா?” என விழித்தாள்.

“நைட்டுக்கு இன்னும் குரே சமயம் இருக்கோ?”

“நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்… வீட்டுக்குப் போகணும்.”

“ஒய்? இந்த சேரி ஓகே தான். நாட் பேட்.”

“எனக்கு சேரி கம்ஃபர்ட்டபிளா இருக்காது.”

“எனிக்கு சேரி தான் கம்ஃபர்ட்டபிள்!” விஷமம் மின்னும் குரலில் உரைத்தவனை நிமிர்ந்து முறைத்தவள்,

“உன் சுண்டு விரல் என் மேல பட்டாலும் உன்னைக் கொன்னுடுவேன் மிஸ்டர் மலையாளி!” என எச்சரித்தாள்.

“சுண்டு விரல் கூடப் படாம வருந்ததினு ஏன் ட்ரெஸ் சேஞ்ச் செய்யனம்?” அசட்டையாகத் தோளைக் குலுக்கினான்.

தான் வராமல் செல்ல மாட்டான் எனப் புரிய எரிச்சலுற்றவள், “நான் வீட்டுக்கு கால் பண்ணனும்…” என முணுமுணுத்தாள்.

“காரில் வெய்ட் செய்யாம், வா!” என்று விட்டு அவன் காருக்குச் சென்றான்.

‘ஹையோ ஹையோ’ என டேபிளின் மீது முட்டிக் கொண்டவள், பெற்றோரிடம் பார்த்துக் கொள்ள ஆள் இல்லையென அன்றிரவு கிளாம்பிங்கில் தங்குவதாகச் சமாளித்து விட்டு வெளியில் சென்றாள்.

கார் கதவைத் திறந்து விட்ட அர்ஜித்திடம், “என் வண்டில தான் வருவேன்…” என அவள் தீர்க்கமாகக் கூற, அவளை உச்சி முதல் பாதம் வரை அலட்சியமாக நோக்கியவன், “நின் இஷ்டம்!” என்று விட்டு காரில் ஏறிச் சென்றான்.

அவன் பின்னாலேயே வந்து கொண்டிருந்தவளுக்கு, குளிர் வேறு உடலை ஊடுருவிச் சென்றது.

இதில் முந்தைய நாள் பெய்த மழையில் சாலையில் நீரும் தேங்கி நிற்க, எதிரில் வந்த கார் ஒன்று அவள் மீது சேறை வாரி இறைத்து விட்டுச் சென்றதில், “டேய் லூசு… கண்ணு தெரியல!” என்று வண்டியை நிறுத்திக் கத்தினாள், அந்தக் கார் கண்ணை விட்டு மறைந்தும்.

அவள் வண்டியை நிறுத்தியதைப் பார்த்து விட்ட அர்ஜித் அகனும், காரை ஓரங்கட்டி விட்டு இறங்கிச் சென்றான்.

“என்னாச்சு?” அவள் மீது படிந்த சேறை ஆராய்ந்தபடி கேட்டான்.

அவள் விவரம் கூறியதும், “அதானு காரில் வரச்சொல்லி பரஞ்சது. திமிரைக் கொஞ்சமாய் காட்டு!” என நக்கல் நகை மின்ன அவன் பயணத்தைத் தொடர, ‘ச்சை… இவனைப் பார்த்ததுல இருந்தே எனக்கு நேரம் சரியில்ல.’ எனத் திட்டியபடி ரிசார்ட்டை அடைந்தாள்.

நெஞ்சில் சிறு பயம். இவனை நம்பி இத்தனைத் தூரம் வந்திருக்கக் கூடாதோ!

ஆகினும், அவனது குடும்பத்தினருடன் ஓர் முறை பழகியதால், ஒரு சின்ன அசட்டைத்தனம் இருந்தது. அப்படி இவன் மட்டும் தன்னை ஏதேனும் செய்ய நினைத்தால், ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்தி விட வேண்டும் என்ற முடிவுடன் தான் வந்தாள்.

கைப்பையில் பெப்பர் ஸ்ப்ரே, பாக்கெட் கத்தி என அனைத்தும் கை வசம் இருந்தது.

ரிசார்ட்டில் தன்னுடைய அறைக்குள் நுழைந்ததும், கடிகாரத்தைக் கழற்றி மேஜையில் வைத்தான்.

அவளுக்கோ ஒரு ஆடவனுடன் அறைக்குள் நிற்பதே அருவருப்பாக இருந்தது.

வாசல் கதவிடமே நின்று விட்டவளைத் திரும்பிப் பார்த்தவன், “விடிய விடிய அவிடயே நிற்கான் போவுகயானோ?” என்றான்.

“அதான் உன் ரூம்க்கு வந்துட்டேன்ல, நான் எங்க நின்னா உனக்கு என்ன?”

“சரி நிக்கு!” என சட்டையுடன் கூறி விட்டுக் குளியலறைக்குச் சென்றான்.

அவளுக்கோ நேரம் செல்லச் செல்லக் குளிர் ஏறியதுடன் சேற்றுடன் நிற்பது முகத்தைச் சுருக்கச் செய்தது.

ஈரம் பட்டதால், மடிப்புகள் வேறு கலைந்து செல்ல முயல புடவையைப் பிடித்து வைப்பதே அவளுக்குப் பெரும்பாடாக இருந்தது.

அவன் குளியலறையில் இருந்து முகத்தில் ஈரம் படர வெளியில் வரும் நேரம் காலிங் பெல் சத்தமும் கேட்க, “செவி கேட்டில்லே கதவைத் திறடி!” என்றான் கட்டளையாக.

‘என்னவோ இவன் பொண்டாட்டி மாதிரி அதிகாரம் பண்றான்’ நொடித்து விட்டுக் கதவைத் திறக்க, எதிரில் நயனா நின்றிருந்தாள். அவள் முகத்தில் சிறு அதிர்ச்சி.

“என்ன வேணும்?”

“சார் கொண்டு வரச் சொன்னாரு.” என ஒரு கவரைக் கொடுக்க, அகமொழியும் வாங்கிக் கொண்டு கதவை அடைத்தாள்.

“பிடி!” கவரை அவனிடம் நீட்ட,

“அது நினக்கு தன்னே. ட்ரெஸ் மாத்திக்கோ…” என்றான் முகம் துடைத்தபடி.

“இல்ல வேணாம். நான் இப்படியே இருந்துக்குறேன்…” என்றவளுக்கு நெஞ்சம் பதறியது.

“எந்தே?” அவன் புருவம் சுருக்கிக் கேட்க,

“தெரியாத இடத்துல எல்லாம் நான் ட்ரெஸ் மாத்துறது இல்ல” என்றாள் அவன் முகம் பாராமல்.

ஓர் கணம் குழம்பிப் பின் முறைத்தவன், “நினக்கு ஓவர் காண்பிடன்ஸ் ஜாஸ்திடி காந்தாரி!” என்றான் நக்கலாக.

“அகமொழி… அதான் என் பேர் மிஸ்டர் மலையாளி!” அவள் பல்லைக் கடித்துக் கூறினாள்.

“அகன்!” அவன் உரைத்ததும் “ம்ம்?” எனக் கேள்வியாய் நிமிர, “மைசெல்ஃப். அர்ஜித் அகன்!” என்றான்.

“உன் பேரை ஞாபகம் வச்சுக்குற அளவு நீ ஒர்த் இல்ல மிஸ்டர் மலையாளி!” அவனைப் போல அலட்சியமாக உரைத்தவளை ஓர் நொடிக்கும் அதிகமாய் ஊடுருவியது ஆடவனின் பார்வை.

“பை தி வே… நீ இங்க நம்பி ட்ரெஸ் மாத்த மாட்ட?” அவன் நக்கலாகக் கேட்க, “மாட்டேன்!” என்றாள் வீம்பாக.

“சரி ஓகே… நான் ஃப்ரீ ஷோ பார்த்துக்கிறேன்.” என அவளது இடை நோக்கிப் பார்வையைப் படர விட, வேகமாக இடுப்பு மடிப்பை எடுத்து விட்டவள், “கண்ணை நோண்டிடுவேன்! அப்புறம் கண்டவ கூடக் கூத்தடிக்க குருடா தான் இருக்கணும்…” என்றாள் எகிறலுடன்.

“கூத்தடிக்க எந்தினு கண்ணு காந்தாரி… இருட்டே மதியல்லோ. ரெஸ்ட் ரூம் அங்க!” அவளை வேண்டுமட்டும் கோபப்படுத்தி விட, சீறலை அடக்கியபடி குளியலறைக்குச் சென்றாள்.

நவீனத்தின் உச்சமாகத் திகழ்ந்த குளியலறையை ஓர் முறை சுற்றிப் பார்வையிட்டவள், உடையைக் கழற்றாமல் ஜாக்கெட்டின் மீதே குர்தியை அணிந்து, வெகு கவனமாய் உடை மாற்றினாள்.

‘வீடியோ எடுத்தா கூட பிரயோஜனம் இல்லை மிஸ்டர் மலையாளி!’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டு வெளியில் வரும் நேரம், அவன் சட்டையின்றி முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான்.

“டேய்… ஷர்ட்டை ஏன்டா கழட்டுன?” வேகமாய் கண்ணை மூடிக்கொண்டாலும், முதுகுக்குக் கீழே சற்றே தடிமனாக இருந்த மச்சம் அவள் மூளையில் பதிவாகி விட்டது.

‘வர வர உனக்கு எதை எல்லாம் கேப்சர் பண்ணனும்னு அறிவே இல்ல’ என மூளையைத் திட்டிக் கொண்டாள்.

அங்கிருந்த டீ-ஷர்ட்டை மாற்றியவன், “நான் ட்ரெஸ் சேஞ்ச் செய்யும்போல் நீ தன்னே நோக்கியது…” அவள் மீதே பழி போட்டதில், ‘இவர் பெரிய மன்மதரு…’ என முணுமுணுத்துக் கொண்டாள்.

அவனோ பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர, “இந்தப் பழக்கம் வேறயா?” என நொந்து கொண்டவள், மீண்டும் வாசல் கதவின் பக்கமே நின்று கொண்டாள். கையில் கைப்பையை வேறு விடாமல் பிடித்திருக்க,

அவளை ஒரு பொருட்டாகவே மதியாதவன் லேசாகக் குடித்து விட்டு, “லவ் மேரேஜோ?” என வினவினான்.

“ம்ம்!”

“பாவம்…”

“யாரு?”

“அந்தப் பையன் தான். நின்னை மாதிரி உடம்பு முழுக்கத் திமிர் இருக்கனவளைக் கல்யாணம் செய்தால், அவன் வாழ்க்கை எங்கனே இரிக்கும்?” அதீத நக்கலுடன் கூற, “அதைப் பத்தி நீ கவலைப்படத் தேவை இல்ல…” எனச் சிலுப்பினாள்.

பின் அவளே, “நீ லவ் மேரேஜா?” என வினவ, அவன் மறுப்பாகத் தலையாட்டினான்.

“அதான… லவ் எல்லாம் ஒருத்தி மேல வரணும். ஊர்ல இருக்குறவ மேல எல்லாம் வந்தா… அதுவும் இல்லாம, அந்தப் பொண்ணு உன்னைக் கல்யாணம் பண்ணாலும் ஏதோ கடமைக்காக வாழுமே தவிர, உன்னை மாதிரி ஹெட் வெய்ட் பிடிச்சவனை எல்லாம் காதலிக்கவே முடியாது…” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.

“காதல் யாருக்கு வேணம்?” அசட்டையாகத் தோள் குலுக்கி விட்டு கட்டிலில் விழுந்து உறங்கியே விட்டான்.

எத்தனை நேரம் தான் நிற்பது? ஒரு கட்டத்தில் கால் வலிக்க, அங்கு போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

அவனிடம் இருந்து வந்த சீரான மூச்சு அவன் உண்மையாகவே உறங்கி விட்டதைக் கூற, ‘இவன் என்ன பைத்தியமா? என்னை விட்டிருந்தா நான் என் வீட்ல நிம்மதியா தூங்கிருப்பேன்ல’ எனத் தலையைச் சொரிந்தாள்.

விடியும் வேளை அவளை மீறியும் உறக்கம் சொக்கியது.

அமர்ந்தபடியே காலைக் குறுக்கி, சோபாவின் மீது சாய்ந்து கண்ணயர்ந்தாள்.

ஆறு மணிக்கெல்லாம் அர்ஜித்தின் அலைபேசியில் அலாரம் அடிக்க, அதில் வழமை போல விழித்துக் கொண்டவன் அலாரத்தை ஆஃப் செய்யும் முன், அடித்துப் பிடித்து எழுந்தாள் அகமொழி.

அதன்பிறகே சற்று ஆசுவாசமானவள், “காலங்காத்தால ஏன்டா அலாரம் வைக்கிற…” எனப் பாதி உறக்கத்தில் கடுப்படித்தாள்.

அவனோ கலைந்த கேசத்தை வாரிக்கொண்டு அவளை உறுத்து விழித்தபடி எழ, “நான் வீட்டுக்குப் போகட்டா, உன் வெஞ்சன்ஸ் முடிஞ்சுடுச்சா?” என வினவியதில், அவன் வாசல்புறம் கண்ணைக் காட்ட கையெடுத்துக் கும்பிட்டவள், “இனி என் பக்கம் நீ வராத… உன் பக்கம் நான் வரல!” என்று கூறிவிட்டுத் தனது வீட்டிற்குப் பறந்து விட்டாள்.

“இன்னும் ஞான் ரிவெஞ்சே எடுத்தில்லல்லோ காந்தாரி!” எனக் கொப்பளித்த கோபத்துடன் அவள் சென்ற திசையை வெறித்திருந்த அர்ஜித் அகனுக்கு அவள் செய்த வேலையை மன்னிக்கும் அளவு பரந்த மனதில்லை என அகமொழிக்குப் புரியவில்லை பாவம்!

அகன் வசமாவாள்!
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்