Loading

அவளைக் கவனித்து சட்டென பிடித்து விட்ட ஸ்வரூப், “விஹா இவளை உள்ள கூட்டிட்டு போ. நீ போடி. நான் வந்து எல்லாம் விளக்கமா சொல்றேன்” என்றிட, அவளுக்கோ உண்மை தெரிந்தே ஆக வேண்டும் போல இருந்ததில், “பரவாயில்ல இருக்கேன்” என்றாள் நெற்றியைப் பிடித்தபடி.

அவள் முன் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடாது என்று தீர்மானித்தவன், உடனடியாக அவனுக்கு கட்டுப்போட மருத்துவரை பணித்தான்.

விக்னேஷ், வலியில் கத்தியது கூட அவளை பாதிக்க, அவன் வாயில் துணியை வைத்து அடைத்த ஸ்வரூப், “மூச்… சத்தம் வந்துச்சு. மொத்தமா மூச்சு அடங்கிடும்” என்று அவன் காதிற்கு மட்டும் கேட்கும் படி உறும, அவன் மூச்சிரைத்து வலியை அடக்கினான்.

கட்டிட்டு முடித்ததும், அவன் வாயில் இருந்த துணியை எடுத்த ஜோஷித், “இப்ப சொல்றியா? இல்ல இன்னொரு விரலும்…” என ஆரம்பிக்க சொல்றேன் என்றான் அவன் வேகமாக.

“எனக்கு படிச்சு முடிச்சதுல இருந்தே பெரிய பணக்காரனாகணும்ன்னு ஆசை. ஆனா, நான் கல்யாணம் பண்ணுனது சாதாரண வீட்டுப் பொண்ணை தான். என் வீட்லயும் வசதி இல்லை. வேலைல இருந்து பெருசா காசு வரல. இப்படி எல்லாம் வேலை பார்த்தா பணத்தை சேர்க்க முடியாதுன்னு, ஊர் தலைவன் ரங்கனோட சேர்ந்து கோவில் திருட்டுல ஈடுபட்டேன். உள்ள இறங்கி திருடுறது நான். அதை பெரிய விஷயமாக்காம, மக்கள் கிட்ட இருந்து மறைக்க செய்றது அவனோட வேலை. கூலிக்கு அவனோட ஆளுங்களை ஏற்பாடு பண்ணி, அன்னைக்கு கோவில்ல திருட ஒரு மாசத்துக்கு முன்னாடியே திட்டம் போட்டுட்டேன். ஆனா, நாங்க எதிர்பார்க்காத விதமா, சவியோ அம்மா இறந்து, அங்க பிரச்சனை ஆகி, இவள் கோவில்ல வந்து அன்னைக்கு இருந்துட்டா.

என்னை கட்டுன பைத்தியம், ஒரு நாளைக்கு இவளை வீட்டுக்குள்ள விடுன்னு சொன்னதுக்கு, என் பேச்சைக் கேட்கவே மாட்டேன்னு சதி பண்ணிட்டா.

சரி சின்ன பொண்ணு தான, எதையும் கவனிக்க மாட்டான்னு நினைச்சு, எங்க திட்டத்தை நடத்தினோம். ஆனா, இந்த பிசாசு உள்ள வரை வந்து எல்லாத்தையும் பார்த்துடுச்சு. ரங்கனோட முகத்தையும் சேர்த்து. இதுல ஒரே நல்ல விஷயம், நான் அன்னைக்கு பிளானை சின்னதா மாத்தி, நான் மட்டும் உள்ள வரல. ரங்கன் வேற வழியில்லாம, இவள் மேல பழி போட, நான் வெளில இருந்து கடத்துன முக்கால்வாசி நகையை எடுத்துட்டுப் போயிட்டேன்.” என்றதும், உத்ஷவி உறைந்து விட்டாள்.

“மேல சொல்லு!” ஸ்வரூப் கையை முறுக்கிக்கொண்டு கேட்க, அவன் விழித்தான்.

“டாக்டரோட வீட்ல இவள் உன்னை பார்த்து எனக்கு சந்தேகம் வந்ததுமே, உன்னைப் பத்தி அக்கு வேரா ஆணி வேரா விசாரிச்சுட்டேன். இது ஜஸ்ட் வாக்குமூலம் தான்” என்றான் இகழ்ச்சியாக.

அதில் கோபம் எழுந்தாலும், அதனைக் காட்ட இயலவில்லை விக்னேஷிற்கு.

“அதுக்கு அப்பறம் ஒருநாள், வீட்ல பதுக்கி வச்சிருந்த கோவில் நகையை இவளோட அக்கா பார்த்துட்டா. பார்த்ததும் அழுது புலம்பி ஊரைக் கூட்ட பார்த்தா. நான் திருடுனதுக்கு என் தங்கச்சி மேல பழி போட்டுட்டேன். அவளை நானும் நம்பாம போய்ட்டேன், உன்னை இப்பவே போலீஸ்ல புடிச்சு குடுக்குறேன்னு என்னையவே மிரட்டுனா. நானும் என்னன்னமோ ஆசைக் காட்டினேன். ஆனா அவள் மசியல. அதான், நானே அவளைக் கொன்னுட்டு, விபத்து மாதிரி ஏற்பாடு பண்ணிட்டேன். என்கொயரிக்கு வந்த போலீசுக்கு ரங்கனே செட்டில் பண்ணி அமைதியாக்கிட்டான்.” என்றதில், உத்ஷவி அவனை பளாரென அறைந்தாள்.

“பாவி… உன்னை கட்டுன பாவத்துக்கும், உனக்குப் பிறந்த பாவத்துக்கும் அவங்க என்னடா செஞ்சாங்க. இவ்ளவும் பண்ணிட்டு என்கிட்ட எப்படி எல்லாம் நடிச்ச நீ. நீ எல்லாம் மனுஷன் தானா. அந்த சைக்கோக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. இவன்… இவன்லாம் இருந்து என்ன சாதிக்கப் போறான். கொன்னுடு ஸ்வரூ. இவனைப் பாத்தாலே பத்திகிட்டு வருது.” என்று ஸ்வரூப்பின் கையைப் பற்றிக்கொள்ள, “ரிலாக்ஸ்டி. ரிலாக்ஸ். இவனை யாரு இப்ப உயிரோட விடப் போறா. நமக்குத் தேவையானது கிடைக்குற வரை தான் இவனுக்கு உயிர் பிச்சை.”” என்றான் தீப்பார்வையுடன்.

“இதெல்லாம் உனக்கு முன்னாடியே தெரியுமா? அப்பறம் ஏன் இவன் அன்னைக்கு பச்சையா பொய் சொன்னப்ப பேசாம இருந்த…” எனக் கேட்டதில்,

சஜித் தான் பதிலளித்தான். “இவனுக்கும் அந்த சைக்கோவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு ஷவி. உடனே வெளில காட்டிக்கிட்டா, இவன் உஷார் ஆகிடுவான். அதான், அன்னைக்கு இவன் சொன்னதை நம்புன மாதிரி இருந்துக்கிட்டோம்.” என்றதில்,

“இதுல மட்டும் மூணு பேரும் கூட்டுக்களவாணிங்களா இருங்க” என்று விஹானா முறைக்க, “அதை இன்னொரு களவாணி சொல்லுது பார்த்தியா…” என்று ஜோஷித் வாரினான்.

“சரி அது இருக்கட்டும். இப்போ இவனுக்கும் அந்த சைக்கோக்கும் என்ன சம்பந்தம்? முதல்ல யார் அந்த சைக்கோ?” எனக் கேட்க, ஸ்வரூப் “நீயே கெஸ் பண்ணேன்.” என்றான் கேலியாக.

“நானே மூளை சூடாகி போயிருக்கேன். என்னை விட்டுடுங்கடா சாமிங்களா.” என்று கையெடுத்துக் கும்பிட, விஹானாவோ, “இங்க இருக்கிறது ராகேஷ்ஷோட பாடி இல்லை தான. அப்போ அவன் எங்க போனான்?” எனக் கேட்டாள்.

“சொல்றேன். சொல்றேன்…” என்ற ஸ்வரூப், உத்ஷவியிடம் “உன்னை நர்சிங்ல சேர்த்தது பரிமளா தான” எனக் கேட்டான்.

அவளோ யோசித்தபடி “ம்ம் ஆமா ஸ்வரூ. நான் பாதில நின்னதுல அவங்களுக்கு கோபம் வேற.” என்றாள்.

“நீ பாதில நிக்கலைன்னா, இந்நேரம் எப்பவோ அவங்களோட அடியாளா மாறி இருப்ப” என்று ஜோஷித் கூறியதில் எதுவோ புரியத் தொடங்கியது.

“கைஸ்… ஆர் யூ சீரியஸ்?” என திகைப்புடன் கேட்டவள், “ஓ மை காட்!” என தலையில் கை வைத்து, “இதை எப்படி நான் மறந்தேன். பரிமளா மேம்க்கு ஒரு பையன் இருந்தான். அவனை அடிக்கடி ஜுவனைல்க்கு கூட்டிட்டு வருவாங்க. ஆனா, என்கிட்ட அவன் அவ்வளவா பேசுனது இல்ல. பசங்க கூட மட்டும் தான் பேசுவான். நானும் கண்டுக்கிட்டது இல்ல. சோ?” என்று நிறுத்தினாள்.

ஜோஷித், “ஆமா எல்லாத்தையும் இப்ப வந்து சொல்லு.” என்று முறைத்திட, “நான் என்ன கனவா கண்டேன்… இப்படி எல்லாம் நடக்கும்ன்னு” என்றதில்,

ஸ்வரூப், “எஸ் விஷா. ஹீ இஸ் த மேன். அந்த மிஸ்டர் எக்ஸ் தமன். பரிமளாவோட ஒரே பையன்.”” என்றான் உள்ளுக்குள் கனன்ற வெறியோடு.

“வாவ்… எப்படி அவன் தான்னு கண்டுபிடிச்சீங்க. டாக்டர் எந்த டீடெயிலும் குடுக்கலையே” என விஹானா கேட்டதில்,

“எனக்கு ஆரம்பத்துல இருந்தே, இதுவரை நம்ம சந்திச்ச ஆளுங்கள்ள ஒருத்தன் தான் கள்ப்ரிட்டா இருக்க முடியும்னு ஒரு இன்டியூஷன் இருந்துச்சு விஹா. எல்லாமே அந்த ஜுவனைல சம்பந்தப்படுத்தி தான் வந்துச்சு. சோ, ஜுவனைல்ல சம்பந்தப்பட்ட எல்லாரைப் பத்தியும் அலசும் போது, பரிமளாவும் அவன் பையனும் சிக்குனாங்க. நாட் ஒன்லி தெம். அவனோட அப்பாவும் இதுக்கு கூட்டு தான்.”

“அன்னைக்கு நம்ம வீட்டுக்குப் போகும் போது கூட அந்த ஆளு அவனோட பையன் வெளில போயிருக்கான்னு சொன்னாரே…” என அக்ஷிதா யோசனையுடன் கூற,

“ம்ம் அவன் வெளில போகல. நம்ம வந்ததுனால அங்க இருக்க கூடாதுன்னு போயிருக்கான். அது மட்டுமில்ல, எந்த தகவல் கேட்டாலும் சொல்ல சொல்லிருக்கான். அதனால தான் அவனோட அப்பா பரிமளா வச்சிருந்த போட்டோஸ் டீடெய்ல்ஸ் எல்லாம் காட்டுனான்.” என்று ஸ்வரூப் கூறும் போதே,

சஜித் “பட் அப்பவே எங்களுக்கு இன்னொரு சந்தேகம் வந்துச்சு…”

“ஒரு வார்டனா இருக்குறவங்க எதுக்காக அங்க வர்ற பசங்களோட லிஸ்ட் அண்ட் போட்டோஸ் எல்லாம் எடுத்து வைக்கணும்? அதோட இன்டென்ஷன் என்னன்னு தெரிஞ்சுக்க, அன்பார்ச்சுனேட்லி அவங்க உயிரோட இல்ல. பட் அதுக்கான ரீசனும் எங்களோட சந்தேக வட்டத்துல தான் இருந்துச்சு” என்றான்.

ஜோஷித்தும், “அது மட்டுமில்ல, என்ன தான் டாக்டர்கிட்ட பேக் தகவல் குடுத்து இருந்தாலும், அவங்களே அறியாமை ஏதாவது ஒரு க்ளூவை விட்டு இருக்கலாம்ன்னு தான் அன்னைக்கு ஸ்வரா அவங்களோட வேலைய பத்தி கேட்டான். அவனோட அப்பா ஹாஸ்பிடல்ல வேலை பார்த்ததா டாக்டர் சொன்னாரு. எஸ், அன்னைக்கு தமனோட அப்பாவும் இதே தான் சொன்னாரு ஞாபகம் இருக்கா. சித்தூர்ல இருக்குற ஒரு ஹாஸ்பிடல்ல கம்பௌண்டரா சில காலம் வேலை பார்த்து இருக்காரு. சோ ஆப்வியஸ்லி அவருக்கு எங்க அப்பாவை தெரிஞ்சு இருக்கு. சித்தூரை பத்தி நல்லாவே தெரிஞ்சு இருக்கு. அண்ட் அவனோட அம்மா கவர்மெண்ட்ல வேலை பார்த்ததா சொன்னாரு. அஃப்கோர்ஸ் ஷீ வாஸ்.” என்று தோளைக் குலுக்கினான்.

“எங்ககூடவே தானடா இருந்தீங்க?” அக்ஷிதா வாயில் கை வைக்க,

உத்ஷவி “எனக்குப் புரியல. இதெல்லாம் ஏன் செய்யணும்?” எனக் கேட்டதில், மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஸ்வரூப் அவ்தேஷ் தாடையை தடவியபடி அதற்கு விளக்கம் கொடுத்தான்.

“இது எங்களோட தியரி மட்டும் தான். தமனைப் பிடிச்சா தான் முழு விவரம் நமக்குத் தெரியும். தமன் சின்ன வயசுல இருந்தே போன் கேம்ஸ்ல அடிக்ஷனா இருந்து இருக்கான். ரொம்ப வயலண்ட்டான கேமை தொடர்ந்து விளையாடுறது, அதுல அடிக்ட் ஆகுறதுன்னு ரொம்ப மூழ்கிட்டான்.
அவனை அதுல இருந்து வெளில வரைக்க தான் மே பி பரிமளா அவனை ஜுவனைல்க்கு அப்போ அப்போ கூட்டிட்டு வந்துருக்கணும். திடீர்னு அவனை விளையாடக்கூடாதுன்னு அதட்டி இருக்கணும். அது அவனை பாதிச்சும் இருக்கணும். சின்ன வயசுலயே அவனுக்கு கொஞ்சம் மெண்டல் இசியூஸ் இருந்து இருக்கு. லைக், யார் கூடவும் பேச மாட்டான். விளையாட வர்ற பசங்களை கூட அடிச்சு அழ வைச்சுடுவான். ஸ்கூல்லயும் பசங்களோட சண்டை போடுறதுன்னு அவன் செய்றது எல்லாம் கொஞ்சம் வயலண்டா இருந்து இருக்கு.

அஃப்கோர்ஸ் சின்ன பசங்கன்னா இதெல்லாம் பண்ண தான் செய்வாங்க. ஆனா, அவங்க பேரண்ட்ஸ் ஒரே பையன்னு செல்லம் குடுத்ததுல, அவன் தப்பு செஞ்சா கூட அதை அவன் முன்னாடி பெருமையா பேசி, அவன் செய்றது சரி தான்னு பீல் பண்ண வச்சுட்டாங்க.

அது போக, அன்லிமிட்ட கேம்ஸ். அதை தடுக்க ஆள் இல்ல. கடைசியா பத்தாவது பரிட்சைன்னு அவனுக்கு திடீர்ன்னு வந்து ப்ரெஷர் குடுத்து இருக்காங்க. அவன் ஓரளவு ஆவெரேஜா படிப்பான்னாலும் பத்தாவதுல நிறைய மார்க் எடுக்கணும்ன்னு செல்போனை வாங்கி வச்சுருக்காங்க. அது அவனை ரொம்ப அட்டாக் பண்ணிடுச்சு. சோ கேம்ஸ்ல இருக்குற கேரக்டர்ஸ் மாதிரி ரியல் லைப்ல தான் சொல்றதை செய்ற ஆட்கள் வேணும்ன்னு அவனுக்கு தோனிருக்கு.

அதுவே அவன் ப்ரெண்ட்ஸ்கிட்ட ஓவர் வன்முறையா நடந்துக்க வச்சு இருக்கு. அதை வச்சு நிறைய ரிசர்ச் பண்ணி இருக்கான். அப்பவே அவனுக்கு லேப்டாப் ப்ரீ இன்டர்நெட்ன்னு வீட்ல எல்லாம் இருக்க, சொல்லவா வேணும். அதுலயே மூழ்கிப் போனவனைப் பார்த்து பயம் வந்து தான் டாக்டர் கிட்ட கூட்டிட்டு வந்துருக்காங்க. ஆனா, வெளில தெரிஞ்சா தன்னோட பையனைப் பத்தி தப்பா பேசுவாங்கன்னு தப்பான அட்ரஸ் குடுத்து இருக்காங்க. அதுக்கு அப்பறம் டாக்டர்கிட்ட வரமாட்டேன்னு அவன் அடம்பிடிச்சு இருக்கணும்.” என நீண்டதொரு உரையாடலை முடிக்க, பெண்கள் மூவருக்கும் மூச்சு வாங்கியது.

“வாவ்…” என விஹானா வியக்க, அக்ஷிதாவோ முதல் வேலையாக போனில் இருந்த கேண்டி க்ரஷ் கேமை டெலிட் செய்தாள்.

“ஒரு கேம் விளையாடுனதுக்கு எல்லாம் சைக்கோ அளவுக்கு கொண்டு வந்துட்டானுங்க.” எனப் புலம்பியதில் சஜித் நமுட்டுப் புன்னகை பூத்தான்.

உத்ஷவி புருவத்தை உயர்த்தி, “செம்ம டைனோசர். ஆனா எனக்கு இப்போ தான் ஒரு பெரிய டவுட்டே வந்து இருக்கு” என்றாள் யோசித்தவாறு.

“உங்களுக்குலாம் சந்தேகம் எங்க இருந்து தான் வருதோ. இன்னும் என்னடி?” என அக்ஷிதா நொந்து கொள்ள,

மெல்ல சிரித்தவள், “அவனுக்கு அப்போ பதினஞ்சு வயசு தான். என்ன தான் ரிசர்ச் பண்ணுனாலும் இதெல்லாம் நடைமுறைப்படுத்த குறைஞ்சது பத்து வருஷம் ஆகும். ஆனா, அப்பவே எப்படி அங்க இருந்த வார்டன் சூசைட் பண்ணிக்கிட்டாரு.” என்று கேட்க,

“ஸ்மார்ட்!” என அவள் தலையை செல்லமாக கலைத்து விட்ட ஸ்வரூப், “அதான எப்படி பண்ணிக்கிட்டாரு?” என தீவிரமாக யோசித்தபடி நடந்து ஜெயராமனின் பக்கம் நிற்க, “அவரும் அதான… எ… எப்படி?” எனக் கேட்டார்.

சஜித் அவர் தோள் மீது கை போட்டு “அதை நீங்களே சொன்னா நல்லா இருக்குமே டாக்… சாரி சாரி டாக்… டர்…” என்று இழுத்துக் கேலி போல கேட்க, ஜோஷித்தோ, “ப்ச்… டேய் என்னடா நீங்க… அவரைப் போய் கார்னர் பண்ணிக்கிட்டு…” என்று போலியாய் அதட்டினான்.

விஹானாவோ, “யூ டூ ப்ரூட்டஸ்” என ஜெயராமனைப் பார்த்துக் கேட்க, அவருக்கு முத்து முத்தாக வியர்க்கத் தொடங்கியது.

அத்தியாயம் 70

சில நிமிடங்களிலேயே ஜெயராமனின் உதடு வீங்கி, இரத்தம் தெறித்தது. அது உத்ஷவியைப் பாதிக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தன்னை அடக்கிக் கொண்ட ஸ்வரூப் அவ்தேஷ், “பேசி பேசி வாய் வலிக்குது ஜெயராமன் சார். கொஞ்சம் நீங்களும் வாயைத் திறந்தா, நான் ரெஸ்ட் எடுப்போம்ல” என்றான் துப்பாக்கியை அவர் வயிற்றில் அழுத்தியபடி.

“இப்படி இக்கட்டில் மாட்டிக்கொள்வோம்” என்று அறியாதவர் தமனை மனதினுள் திட்டித் தீர்த்தார்.

இவர்களுடன் இருந்து, தன்னைப் பற்றிக் கூறி, ஹைப் உருவாக்கச் செய்து, முழு உண்மை தெரியாமல், தன்னைப் பற்றியும் தெரியாமல் பித்துப் பிடித்தது போல அலைய வேண்டும் என்ற ஆசையில் இவர்களிடம் சிறு சிறு உண்மையைகளைக் கூறியது இத்தனை வருட ஆராய்ச்சி வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது பாவம்!

அதிலும், பூமிநாதன் பத்ரியை வைத்து உத்ஷவியைக் கடத்தி கொலை செய்ய எத்தனிக்க, தமனோ அவளை அவர்களுக்கே எதிரான ஆயுதமாய் மாற்ற முயற்சிக்க, அந்த முயற்சியையும் பாதியிலேயே முறியடித்தது இந்த கூட்டணி.

ஆக, மொத்தத்துக்கும் சேர்த்து, வேட்டைக்கு காத்திருக்கும் சிங்கத்தின் தோரணையில் எமனாய் நின்றிருந்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

“தமன் என்கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வந்தது உண்மை தான். அதுக்கு அப்பறம் அவன் என்னைப் பார்க்க வரலைன்னாலும், நான் அவனைப் பார்க்க போனேன். அவங்க குடுத்தது உண்மையான அட்ரஸ் தான்.

நான் அப்பவே, ஹிப்னாடிசம் பத்தியும், மனுஷனை ரோபோவா மாத்தி, அவனுக்குள்ள அவனுக்கே தெரியாம என்னோட எண்ணத்தை விதைக்கிறதுல அதிக ஆர்வம் எனக்கு. எனக்கு வந்த சில பேஷண்ட்ஸ்கிட்ட இதை நடைமுறைப் படுத்தி இருக்கேன்.

இதுக்கு இடைல, தமனோட பார்வை எனக்குப் புதுசா இருந்துச்சு. என்னோட ஆராய்ச்சிக்கு தீனி போடுற விதமா இருந்துச்சு. அவனோட பார்முலா படி, பயத்தை கொண்டு வர்றதுக்கான வழிமுறையை தேடுனப்ப தான், அவன் அடிச்சாலே பயந்துருவாங்கன்னு சொன்னான்.

ஜுவனைல்ல, பசங்களை பிரம்பால் அடிக்கிறதை பார்த்து பார்த்து ரசிக்கிறவன், என்கிட்டயும் அதே மாதிரி அடிச்சு பார்க்குறவங்களை ரசிக்க வைக்கணும். அவங்களும் அந்த அடியை ரசிச்சு, நம்ம யாரை சொல்றோமோ அவங்களை அடிக்கணும்ன்னு சொல்லுவான். ஆனா, அது மட்டும் போதாது. வேறு சில விஷயங்களும் வேணும். அதுக்கு உருவாக்குனது தான், மெஸ்மரைசிங் ஆடியோ. வடநாட்டுல, சில பப்ல வர்ற பொண்ணுங்களுக்கு சில இசையை போட்டு வசியப்படுத்துவங்க. அந்த இசையைக் கேட்டு மயங்கி, வசியமாகுற பொண்ணுங்களை பாலியல் வன்கொடுமை செஞ்சு அதை வீடியோ எடுத்து வச்சு மிரட்டி காசு பறிப்பாங்க. அதை தான் இங்க இன்பியூஸ் பண்ண நினைச்சேன்.

இசைக்கு பதிலா, இங்க நான் உபயோகிச்சது ஓலக்குரல்களும் சில சத்தங்களும் அதுலயே தமனோட குரலும் இருக்கு. அவன் அவங்களை கட்டுப்படுத்துற குரல். அதை தான் தினமும் கேட்டு, அது படி நடக்குறாங்க. கொஞ்ச நாள்ல எந்த கட்டளை கொடுத்தாலும் செய்வாங்க. சுயமா சிந்திக்க மாட்டாங்க.

இதை நான் பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே இந்த பொண்ணு சொன்ன வார்டன்கிட்ட தமன் மூலமா ட்ரை பண்ணுனேன். ஆனா, அது பெயிலியர் ஆகி, அவன் சூசைட் பண்ணிக்கிட்டான். அதுக்கு அப்பறம் நிறைய ஆராய்ச்சி. இதுல தமனைப் பத்தி தெரிஞ்சு, அவனைத் தடுக்க முயற்சி செஞ்சாங்க அவனோட பேரண்ட்ஸ். ஆனா அப்படி தடுத்தா அவன் உயிருக்கே ஆபத்து ஏற்படும்ன்னு சொன்னதுல, பயந்த பரிமளாவும் அவ புருஷனும் பையனுக்காக எல்லா வேலையும் பார்க்க ஆரம்பிச்சாங்க.

விக்னேஷ் எனக்கு பி. ஏ வா சேர்ந்ததுல இருந்தே அவன் நான் சொன்னதை செய்வான். அது போக, பரிமளா உத்ஷவியை நர்சிங் சேர்த்ததுக்கு காரணமே, இவள் அவங்ககிட்ட விசுவாசமா இருப்பா. சோ, ஏதாவது ட்ரக்ஸ் வேணும்ன்னா, அங்க இருந்து இல்லீகலா எடுக்கலாம். எங்களுக்கும் ஹெல்ப்பா இருப்பான்னு தான்.” என்று எச்சிலை விழுங்கிட, ஆறு பேரும் கொலைவெறியுடன் நின்றனர்.

உத்ஷவி அவர் முகத்தில் குத்தி, “நிறுத்தாம சொல்லுய்யா. என்ன டீ பிரேக்கா விடுற” என்று மூச்சிரைக்க, அவர் வலியுடன் மீண்டும் தொடர்ந்தார்.

“முதல்ல, ஜுவனைல்ல வந்த பசங்க கிட்ட இருந்து தான் எங்களோட ஆராய்ச்சியை ஆரம்பிச்சோம் அதுல நிறைய பேர் செத்துப் போய் இருக்காங்க. நிறைய பேர் எங்களுக்கு அடிமையா மாறி இப்ப உலாவிட்டு இருக்காங்க. அதுக்கு அப்பறம் இதை பொது மக்கள்கிட்ட கொண்டு போக நினைச்சோம். அப்போ தான், தமனோட அப்பா சித்தூர் பத்தி சொன்னாரு. ப்ரீத்தன் பத்தியும். அவன் அந்த ஊரை அழிச்சு கார்ப்பரேட் ஆக்க நினைக்கிறான்னு தெரிய வந்தப்ப, அவன் மூலமா அந்த ஊருக்கு நெருக்கம் ஆனோம். அவன் மூலமா பூமிநாதனுக்கும் நெருக்கமாகி, அவர் சொல்ற சில பல வேலைகளை பத்ரி செய்வான். ஆனா, அவருக்கு இதை தான் நாங்க செய்றோம்ன்னுதெரியாது.

ஊர்ல இருந்து சிலரை கடத்தி வச்சா, உங்க மூணு பேருக்கும் அவப்பெயர் வரும். அதை வச்சு பெரிய பிரச்சனை வரும். அப்படியே அவங்களோட பதவியும் பறிக்கப்படும்ன்னு ஆசை காட்டி, பசங்களை கடத்த சம்மதிக்க வச்சோம். அவரும் அவரோட பையனும் அதுக்கு சம்மதிச்சாங்க. ஆனா, தமனுக்கு ஒரு யோசனை. அவரோட பொண்ணுங்க உங்களை கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம், அவரு மாறிட்டா பிரச்சனை ஆகிடும்ன்னு, உங்க அப்பா மூணு பேரையும் தாக்க ஆள் அனுப்புனான். இதுக்கு இடையில இந்த பொண்ணுங்களை வேற இஷானாவோட கம்பல்ஷன்ல டாக்குமெண்ட்டை திருட அனுப்ப, நீங்கல்லாம் கூட்டா சேர்ந்துட்டீங்க…” எனக் கூறி முடித்திட,

அக்ஷிதா தனது வாயில் அடித்துக் கொண்டு, “ஆத்தாடி ஆத்தா! தலை கிண்ணுன்னு இருக்குடா டேய்… ஹியூமன்ஸாடா நீங்கள்லாம்” என்று கடிந்தாள்.

“மனிதப் பிறவியே இல்லடி” என விஹானா எரிச்சலுற,

உத்ஷவி, “இந்த நாயை சும்மாவே விடாதீங்கடா. நாய் மாதிரி அலைய விடுங்க.” என கோபத்தில் கொந்தளிக்க, மீண்டும் அவளுக்கு பிபி ஏறியது. ஹாலுசினேஷன் வரத் தொடங்க, அந்த ஆடியோவைக் கேட்க வேண்டும் போல அத்தனை செல்களும் அரித்தது.

“அப்படியே செஞ்சுடுவோம்” என்று ஜோஷித் கூறும் போதே, ஸ்வரூப் அவளது மாற்றம் உணர்ந்து, “விஷா… என்னடி ஆச்சு?” எனக் கேட்க, அவளோ நடுங்கினாள்.

அவளைக் கையில் அள்ளிக்கொண்டவன், தம்பிகளை ஒரு பார்வை பார்க்க, சஜித் அவ்தேஷ், “இவனைப் பிரிச்சு மேஞ்சு இதுக்கு சொலியூஷன் தெரிஞ்சுக்குறோம்டா. நீ அவளைப் பாரு.” என்றிட, ஸ்வரூப்பின் கவனம் இப்போது தன்னவளின் மீதே முழுதும் இருந்தது.

அக்ஷிதா, கையை பாக்சிங் செய்வது போல வைத்துக் கொண்டு, “நான் ஒரு தடவை அடிக்கிறேன்டா” என அவரை பன்ச் செய்ய, விஹானா “நானு நானு…” என பங்கிற்கு வந்தாள்.

அவரோ ஹிப்னோடைஸ் செய்வது போல அவள் கண்களை உற்றுப் பார்க்க, ஜோஷித் அவர் கண்களை குத்தினான்.

“இவரு பெரிய போதி தர்மர்… பார்த்தே பணிய வைக்கிறாரு. இதுக்கு மாத்து மருந்து ஏதாவது சொல்லிடு. இல்லன்னா, நாள் பூரா நீ அந்த ஆடியோவைக் கேட்டு மயக்கத்திலேயே தான் இருக்கணும். வயசான காலத்துல பிபி வந்து ஹார்ட் அட்டாக் ஆகி சாவ.” என்று மிரட்டினான்.

கண்களை தேய்த்துக் கொண்ட ஜெயராமன், “இதுக்கு மாத்து மருந்து எல்லாம் இல்ல. கொஞ்ச கொஞ்சமா அவங்களை டிஸ்ட்ராக்ட் பண்ணி, அந்த பாதிப்புல இருந்து வெளில கொண்டு வரணும். இந்த பொண்ணு நாலு நாள் தான இருந்துச்சு… ஒரு ரெண்டு மூணு மாசத்துல சரி ஆகிடும். அது அவங்க மன தைரியத்தையும், கூட இருக்குறவங்களோட சப்போர்ட்டைப் பொறுத்து.” என்றதில்,

நால்வருக்கும் ஆதங்கமாக இருந்தது. இப்படி வேதனைப்படுகிறாளே… என வருத்தம் எழுந்ததில், சஜித்தும் ஜோஷித்தும் அவரை அடித்து நார் நாராகக் கிழித்தனர்.

—-

உத்ஷவியை அள்ளிக்கொண்டு அறைக்குச் சென்றவன், பிபியை குறைக்கும் மாத்திரையைக் கொடுத்து, தனக்குள்ளேயே அடைகாத்துக் கொள்ள, அவளோ “ஆடியோ கேட்கணும். அந்த ஆடியோ…” எனப் பிதற்றினாள்.

அவள் எதைக் கேட்கிறாள் என உணர்ந்து கொண்டவன், “எந்த ஆடியோ விஷாம்மா. ம்ம்? ஹே… முதல் முதல்ல இங்க தான நீ திருட வந்த.” என பேச்சை மாற்ற, அவளோ தனக்கருகில் மனித உடல் பாகங்கள் இருப்பது போல எண்ணிக் குறுகினாள்.

அவனோ அவளது தவிப்பில் அவனும் தவித்து, அதனை வெளிக்காட்டாமல் இன்னும் மிருதுவாய் பேசத் தொடங்கினான்.

“இங்க திருட வந்து மாட்டிக்கிட்டதும் இல்லாம, என்கிட்டயே தைரியமா பேசுன உனக்கு எவ்ளோ ஏத்தம் இருக்கணும். ஹோட்டல்ல இருந்தும் தப்ப்பிச்சு போக பார்த்த ராஸ்கல்.

உன்மேல எனக்கு செம்மயா கோபம் வரும். ஆனா, உன்னைப் பார்த்ததும் அதெல்லாம் எங்க தான் போகுமோ. அப்படியும் கோபப்பட்டே ஆகணும்ன்னு வீம்புக்கு கோபப்பட்டு கத்துவேன். நீ என்னமோ செஞ்சுட்டடி ராட்சசி.” என என்னன்னவோ பேசினான். தனக்குள் இருந்த காதல் அத்தனையையும் கொட்டினான்.

அவள் பேச்சைக் கவனியாமல் அங்கும் இங்கும் பார்த்து பயத்தில் நடுங்கினாலும், பேசி பேசி அவன் பேசுவதைக் கேட்க செய்தான். அவ்வப்பொழுது அழுந்த முத்தமிட்டான். அவள் கழுத்தினுள் முகம் புதைத்து, வெட்ப மூச்சை உணர வைத்தான்.

மெல்ல மெல்ல, அவனது முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவனது நெருக்கமும் பேச்சும் அவளை சற்று சமநிலைக்கு கொண்டு வந்தது.

இரத்த அழுத்தமும் மெதுவாய் இயல்புக்குத் திரும்பியது. மார்புச் சூட்டில் அவள் முகத்தை அழுத்தியவன், நிஜம் எது நிழல் எது என்று புரிய வைக்க அரும்பாடுபட்டான். ஆதங்கம் நிறைந்த விழிகளில் அவ்வப்பொழுது கோர்த்த நீரை வெளியில் விடாமல் உள்ளிழுத்துக்கொண்டான்.

ஆண்மகன் தன்னவள் படும் பாட்டைக் கண்டு உள்ளுக்குள் கதறினான். சில நிமிடங்களில் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட, இன்னும் எத்தனை நாட்கள் இந்த துயரம் நீளுமென்ற விடை தெரியாமல், மலர் கன்னத்தில் முத்தமிட்டவன், “ஐ லவ் யூ விஷா. ஐ லவ் யூ சோ மச். உனக்கு என் குரல் மட்டும் தான் கேட்டுக்கிட்டே இருக்கணும். வேற எதையும் யோசிக்காத. நான் இருக்கேன் திருடி. என்று அவள் உறங்கிய பின்னும் உளறித் தீர்த்தான்.

பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா

இருளில் கண்ணீரும்
எதற்கு மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா

உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
121
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments