Loading

அத்தியாயம் 70

ஜெயராமனின் மூலம் தமனைப் பிடிக்கும் வேகம் அதிகரித்தது. அரண்மனையில் சுரங்கப் பாதை இருப்பதாகவும், அது மற்றவர்கள் கண்ணிற்கு புலப்படாதபடி அரண்மனைக்கு அடித்தளத்தில் பெரிய சுவற்றினால் ஆன கதவினைத் திறந்தால் மட்டுமே வெளிப்படும் எனவும் தெரிய வந்தது.

இங்கு தமனின் முகம் சீற்றத்தில் சிவந்தது.

‘உத்ஷவிக்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சியில், அவள் மீண்டும் இங்கு வந்திருக்க வேண்டுமே! இந்த ஆடியோவைக் கேளாமல் அவளால் எப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது. எப்படி வராமல் போயிருப்பாள்?’ என்று எண்ணி எண்ணி அவனது மனநிலைக் குலைந்தது.

இங்கு ஜெயராமனோ, “அவன் அவ்ளோ சீக்கிரம் அந்த கதவை திறக்க மாட்டான். நான் வந்தா கூட. அவனுக்கா தோணுனா தான் திறப்பான். இல்லன்னா, அதுக்குள்ளே போகவே முடியாது” என்றிட,

உத்ஷவி அப்போது தான் உறக்கத்தில் இருந்து விழித்து அங்கு வந்தாள். கூடவே ஒரு யோசனையும்.

ஸ்வரூப், “இப்ப ஓகே வா டி” எனக் கேட்க, தலையசைத்தவள், “ஸ்வரூ, அவனை சீக்கிரமா பிடிச்சாகணும்” என்றிட, “ம்ம் பிடிச்சுடலாம். உள்ள தடாலடியா நுழைஞ்சுடலாம்.” என்றான்.

“வேணாம். அப்படி நுழைஞ்சு அவன் தப்பிச்சுட்டா, மறுபடியும் பிடிக்கிறது கஷ்டம்.” என்றதும், “வேற என்ன பண்ண சொல்ற?” என்றான் சஜித்.

“நான் போறேன்” என அவள் உறுதியுடன் கூற, ஸ்வரூப் அவளை முறைத்தான்.

“என்கிட்ட அடி வாங்கிட்டு போயிடாத…” என ரௌத்திரத்துடன் கூற,

“அவன் கடைசியா என்கிட்ட ‘நீயே என்னை தேடி வருவ’ன்னு சொன்னான் ஸ்வரூ. அதுக்கு என்ன அர்த்தம்? அந்த ஆடியோவை கேட்டே ஆகணும்ன்னு என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாம, திணறி அங்க வருவேன்னு தான… அப்போ அவன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான். இந்த சான்சை விட்டா, ஈஸியா அவனைப் பிடிக்க முடியாது” என்றாள் தீவிரமாக.

“அடி அறிவு கெட்டவளே அதுக்காக திரும்ப நீ அங்க போய் சிக்கப் போறியா. அதெல்லாம் வேணாம். அப்படி போகணும்ன்னா நான் போறேன்” என்று விஹானா மூக்கு விடைக்க முறைத்தாள்.

அக்ஷிதாவும் “ஆமா, நானும் வரேன்.” என்று உடன் சேர, ஜோஷித் “நீங்க என்ன டூருக்காடி போறீங்க. ஆள் ஆளுக்கு கிளம்பிட்டு இருக்கீங்க. யாரும் போக வேணாம். அவனை வேற மாதிரி ஹேண்டில் பண்ணிக்கலாம்” என்றான்.

உத்ஷவியோ, “நீங்க கொஞ்சம் சும்மா இருங்க டார்ல்ஸ்” என்று விட்டு, “ஜோ… இப்ப நான் போனா, அவனாவே அவனோட முயற்சி சக்ஸஸ் ஆகிடுச்சுன்னு என்னை உள்ள விடுவான். அதை யூஸ் பண்ணி நீங்களும் வந்துடுங்க.” என்றதும், சஜித் மறுப்பாக தலையாட்டினான்.

ஸ்வரூப்போ கடினத்துடன் நிற்க, அவன் கையைப் பற்றிகொண்டவள் “டைனோசர்… நீயாவது புருஞ்சுக்கோ. இந்த ஐடியா கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும். நான் ஒண்ணும் உயிர்த்தியாகம் செய்யலாம் போகல. நீ என்னை காப்பாத்திடுவன்ற நம்பிக்கைல தான் சொல்றேன்.” என்றாள் அவனை சம்மதிக்க வைக்கும் பொருட்டு.

“அதுக்காக உன்னை பணயம் வைக்க சொல்றியாடி?” குரல் தழுதழுக்க அவன் கேட்க, “இல்ல… நம்மளோட இத்தனை நாள் உழைப்பை பணயம் வைக்க சொல்றேன். இவ்ளோ கஷ்டப்பட்டு, எல்லாமே வேஸ்ட் ஆகிட கூடாது டைனசோர். நீ தான சொல்லிருக்க, நம்ம குடும்பம் ஊர் மக்கள்ன்னு வரும் போது நம்மளோட விருப்பு வெறுப்புக்கு இடம் இல்லைன்னு… நம்மளோட கடைசி வாய்ப்பு, அவன் தப்பிக்கக்கூடாது. அவ்ளோ தான்.” என்றதும், அவளை ஒருகணம் சலனமற்றுப் பார்த்தான்.

“நீ ஸ்ட்ராங்கா இருக்கியா?” அவன் அழுத்தமாகக் கேட்க, அவள் உடனடியாக, “நீ என் கூட இருக்கும் போது ஸ்ட்ராங்கா இல்லாம எப்படி இருப்பேன். வெரி ஸ்ட்ராங்” என்றாள் கையை மடக்கிக்காட்டி.

“ஒருவேளை உன்னைக் காப்பாத்த முடியலைன்னா…?” ஸ்வரூப் அவளை சுவாரஸ்யத்துடன் பார்க்க,

“உன்மேல இருக்குற நம்பிக்கையை நீ என்னைக்கும் உடைக்க மாட்ட டைனோசர்.” என்றாள் தலையை சாய்த்து.

அதில் ஒற்றைப் புருவம் உயர்த்தியவன், “லெட்ஸ் ப்ரொசீட்” என்றிட, “என்னடா நீயும்…” என்று ஜோஷித் கடுகடுத்தான்.

“ஆமா இதுங்க நம்பிக்கையை வச்சு விளையாட அந்த சைக்கோ தான் கிடைச்சான்…” என அக்ஷிதா தலையில் அடித்துக் கொண்டாள்.

திட்டமிட்டபடி, உத்ஷவி மட்டும் அரண்மனைக்குச் சென்றாள். இதயம் படபடவெனத் துடித்தாலும், தன்னவன் மீதிருந்த நம்பிக்கை துளியும் குறையவில்லை.

உத்ஷவியை சிசிடிவி மூலம் கண்டதும், தமனின் விழிகள் சந்தோஷத்தில் மிதந்தது.

அதீத சந்தோசம் அவனது கவனத்தை சிதற வைக்க, அவளை உள்ளே அழைத்து வர, ஆள்களை அனுப்பினான்.

எங்கிருந்தோ வந்த இருவர், அவளை அரண்மனைக்கு அடியில் இருக்கும் மர்மப் பாதைக்கு இட்டுச் செல்ல, அந்த மிகப்பெரிய சுவர் திறந்தது. உள்ளே கும்மிருட்டு. அதன் வழியே தான் அவர்கள் வந்தாக வேண்டும். அந்த இருட்டு அவளை அழைத்துச் செல்ல வந்த இருவருக்கும் பழகிப் போனது போல.

ஆனால், உள்ளே நுழைந்த கணம் சுவர் தானாக மூடிக்கொள்ள முனைய அதன் வழியே புகுந்த ஸ்வரூப் உத்ஷவியின் வாயை மூடி வெளியில் தள்ளி விட்டு, அந்த ஆட்களுக்கு இடையில் அவன் நின்று கொண்டான்.

உத்ஷவிக்கு ஒரு கணம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகே கைகளில் கொடுத்த அழுத்தம் தன்னுடையவனது என்று புரிய அதிர்ந்து போனாள்.

—-

திட்டமிட்டபடி விஹானாவும் அக்ஷிதாவும் வந்து உத்ஷவியை அழைத்துக்கொள்ள, “இது உங்க பிளான் தானா” என்றாள் விழி சிவக்க.

“ஆமாடி. ஸ்வரூப் என்ன ஆனாலும் உன்னை திரும்ப உள்ள அனுப்ப முடியாதுன்னு முடிவா இருந்தான். அதான்…” என விஹானா கூறியதில், “அவனுக்கு என்ன ஆகுமோ” என்ற பயம் அவளை பிய்த்துத் தின்றது.

உள்ளே சென்றதும், ஸ்வரூப்பைக் கண்ட தமனின் கண்களில் அதிர்ச்சியும் ஆத்திரமும் வழிந்தது.

“டேய்… என்னையவே ஏமாத்துறீங்களா?” என எகிறியவனின் மாஸ்க்கை கழற்றிய ஸ்வரூப், “உன்னை ஏமாத்துறது கஷ்டமாடா.” என இழிவாய் இதழ் விரித்தான்.

கூடவே, பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்திட, தமன் மற்றவர்களுக்கு கண் காட்டியதில், அவனது ஆட்கள் நாயாய் மாறி அங்கும் இங்கும் திரிந்து மூர்க்கத்தனமாய் ஸ்வரூப்பை தாக்க முயன்றனர்.

அனைவரும் இளைஞர்கள். அவர்களில் ஒருவனை அடக்குவதே பெரும் கடினம். அத்தனை பேரையும் நோக்கி சுட்டுத் தள்ளியவன், சிலரை அடித்து தள்ளி விட, அவர்களும் இவன் மீது விழுந்து பிராண்டி, தாக்கினர். அதற்குள், படபடவென சுட்டபடி ஜோஷித்தும் சஜித்தும் வந்து விட, அவர்களைக் கண்டதும் ஸ்வரூப் முறைத்தான்.

“உன்னை தனியாலாம் விட முடியாது” என்று ஜோஷித்தும் முறைக்க, மூவரும் முடிந்த மட்டும் சுட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் ஆள் குறைந்தபாடில்லை. இத்தனை பேரையும் எப்படி தான் அடைத்து வைத்திருக்கிறான் என்ற ஆச்சர்யமே எழுந்தது.

வெளியில் ஸ்வரூப்பின் ஆட்கள் சுவரை ட்ரில் செய்து உடைக்க முயன்றனர். “சீக்கிரம் உடைங்க” என்று பெண்கள் மூவரும் அவசரப்படுத்த, அதற்குள் காவலர்களும் ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது.

உள்ளே இருந்தவர்களை அடக்குவதற்குள் மூவருமே இரத்தக்களரி ஆகி விட்டனர்.

தமன் கோபத்துடன் அங்கிருந்து நகரப்போக, ஸ்வரூப் அவனை வளைத்துப் பிடித்துக் கொண்டான். “எங்கடா எஸ்கேப் ஆகுற நாயே…” என அவனை இறுக்கிப் பிடிக்க, “என்னைப் பகைச்சுக்காத அது உனக்கு நல்லது இல்ல” என்று அந்நிலையிலும் மிரட்டினான்.

“எங்களைப் பகைச்சுக்கிட்டா உனக்கு எவ்ளோ கெட்டதுன்னு தெரியாம போய்டுச்சு ராசா.” என சஜித் நக்கலுடன், அவனைப் பிடித்திட, வெளிச்சுவர் உடைக்கப்பட்டு அனைவரும் உள்ளே வந்தனர்.

தத்தம் மனம் கவர்ந்தவர்களின் காயத்தைக் கண்டு மனம் கலங்கிப் போனது பாவைகளுக்கு.

ஆனால், உள்ளே நுழைந்த மூவருமே அதிர்ச்சி மறையாமல் நின்றனர்.

அங்கு நின்றது ராகேஷ் ஆகிற்றே! தமன் என்ற பெயரில் இத்தனை நாட்களும் சைக்கோ வேலையில் ஈடுபட்டது ராகேஷா? என முற்றும் குழம்பி விஹானா, “டேய் பாஸ்… நீயாடா சைக்கோ…” என மிரண்டவள், நல்லவேளை வெறும் அடியோட விட்டான் என கன்னத்தில் கை வைத்துக்கொண்டவளுக்கு திகைப்பு இன்னும் மறையவில்லை.

உத்ஷவியோ, “என்னடா நடக்குது இங்க? இவன் ராகேஷ் தான?” எனக் கேட்க,

“சாட்சாத் ராகேஷே தான். ராகேஷ் தமன் இவன் முழுப்பெயர். வெளி உலகத்துக்கு வெறும் ராகேஷ் தான். இவனுக்கு ட்வின் ஒருத்தன் இருக்கான். அவன் பேர் சுமன் ராகேஷ். ஆனா, அவனை பரிமளாவோட தங்கச்சி தானே வளர்த்துக்குறதா வெளிநாட்டுக்குக் கூட்டிட்டு போக, சமீபத்துல அவங்க இறந்துட்டாங்க. சோ, சுமன் இங்க வந்துட்டான். அவனையும் இந்த நாய் சோதனை எலியா யூஸ் பண்ணி, அடிமையாக்கி இருக்கு. என் ஆளுங்க இது தெரியாம ராகேஷ்க்கு பதிலா இவனோட டிவின்ன கடத்திட்டு வந்துட்டாங்க. ரிமெய்னிங் உங்களுக்கே தெரியும்.” என்றான் ஸ்வரூப் அவ்தேஷ்.

“யப்பா போதும்டா. ஒவ்வொரு விளக்கமும் கேட்க கேட்க மயக்கம் வருது” என உத்ஷவி நொந்து கொள்ள, அக்ஷிதாவிற்கோ “எவ்ளோ தைரியம் இருந்தா சைக்கோ கொலைகாரனோட நீ திருட்டு வேலை பார்த்துருப்ப” என்று தன்னை தானே அறைந்து கொண்டாள்.

ஜோஷித், ராகேஷை பாவம் பாராமல் வெளுத்து வாங்கினான்.

அவன் கன்னம் தேய்ந்து சிவந்து போகும் அளவு அடித்துக் கொண்டே இருக்க, அக்ஷிதாவை விட்டு உத்ஷவியை வெளியில் அழைத்துச் செல்ல உத்தரவிட்டான் ஸ்வரூப்.

அவளும் தனது மனநிலைக்கு பயந்து வெளியில் சென்று விட, விஹானா தான், “ஐயோ ஜோஷ். ஏன் அவனை இந்த அடி அடிக்கிற. சுட்டுத்தள்ளிடுங்க ஒரே வேலையா முடிஞ்சுடும்…” என்றவள்,

“அய்யயோ நான் பாட்டுக்கு திருட்டிட்டு மட்டும் தான் இருந்தேன். இப்போ என்னை கொலை பண்ண சொல்ற அளவு ஸ்லீப்பர் செல்லா கொண்டு வந்துடீங்களே டா” என அங்கலாய்த்தாள்.

“ஏய்…” என ஸ்வரூப் பல்லைக்கடித்து முறைக்க, ஜோஷித்தோ “உன்னை அடிச்சு கஷ்டப்படுத்துவன் செத்துப் போய்ட்டானேன்னு நானே பீலிங்க்ல இருந்தேன். நல்லவேளை சாகல. அதான் இப்ப ஆசை தீர அடிச்சுட்டு இருக்கேன்” என்றவனின் காதலில் மெய்யுருகிப் போனாலும்,

“ஏண்டா பணங்கா மண்டையா நானே சைக்கோக்கு கைப்பிள்ளை வேலை பார்த்து இருக்கேன்ற மிரட்சில இருக்கேன். உனக்கு இப்போ பழி வாங்குறது முக்கியமா?” என இடுப்பில் கை வைத்துக் கேட்டதில், சஜித் “குட் பாயிண்ட்” என்று அவளுக்கு ஹைஃபை கொடுத்துக் கொண்டான்.

“ப்ச் போதும் பேசுனது. இவனை வெளில விடுறது வெரி டேஞ்சரஸ். ஆனாலும் சட்டுன்னு கொல்ல மனசு வரல. என்ன பண்ணலாம்?” என யோசித்திட, அங்கு விக்னேஷும் ஜெயராமனும் அழைத்து வரப்பட்டனர்.

மூவரையும் உத்ஷவிக்கு நேர்ந்தது போலவே அனைத்தையும் செய்து, தமன் மற்றவர்களை அடிக்க உபயோகித்த பிரம்பை வைத்து, அவர்கள் மூவரையும் உயிர் போகும் அளவு அடித்து வெறியை தீர்த்துக் கொண்டான் ஸ்வரூப் அவ்தேஷ்.

இறுதியில் உயிர் தொக்கி நின்ற நேரத்தில், சஜித் அவர்களை படபடவென சுட்டு தள்ளினான்.

“போதும் டா… உனக்கு பிபி ஏறிட போகுது. வா…” என்று ஸ்வரூப்பை அடக்கி வெளியில் அழைத்து வந்தனர். மீதி பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மிகப்பெரிய சுமையை இறக்கி வைத்தது போல அப்போது தான் ஆசுவாசமாக மூச்சு விட்டனர் ஆறு பேரும்.

“ஹ்ம்ம்… சிங்கிள்ஸ் ஆ ஆரம்பிச்ச இன்வெஸ்டிகேஷன கபிள்ஸா முடிச்சு வச்சிருக்கோம்” என்று சஜித் சிலாகித்துக் கொள்ள, இதுல பெருமை வேற என உத்ஷவி முணுமுணுத்தாள்.

அவளே ஸ்வரூப்பின் மீது கோபத்தில் இருந்தாள். அவன் வந்ததுமே படபடவென அடித்தவள், “ஏன்டா இப்படி போய் மாட்டுன. அவன் ஏதாச்சு செஞ்சுருந்தா… அறிவு இருக்காடா உங்க மூணு பேருக்கும்.” என்று மூவரையும் சேர்த்தே திட்ட,

ஜோஷித் “உனக்கு மட்டும் பொங்குது பாரு. தெரிஞ்சே உன்னை ஆபத்துல எப்படி தள்ளி விடுவோம். அவனே ஒத்துக்கிட்டு இருந்தாலும் நாங்க ஒத்திருக்க மாட்டோம்” என்றான் முறைப்பாக.

எப்போதும் போல் அவர்களது அன்பு இப்போதும் வியப்பையே கொடுத்தது.

“ஓகே ஒரு மிஷன் கம்ப்ளீட்டட். இன்னொரு மிஷனையும் முடிச்சுடுவோமா?” எனக் கேட்ட சஜித்தை உத்ஷவி புரியாமல் பார்த்தாள்.

இறுதி பாகம்

விஹானாவிற்கும் அக்ஷிதாவிற்கும் புரிந்து விட, “அதை முதல்ல செய்ங்க. நான் ரொம்ப வெய்ட் பண்றேன்” என்றதும், உத்ஷவி கேட்டும் பதில் சொல்லவில்லை.

“என்னங்கடி உங்க ஆளு சொன்னதும் என்கிட்டயே சஸ்பென்ஸ் வைக்கிறீங்க.” என்று சிலுப்பிக்கொண்டு, “நான் என் சைட்டு கிட்ட கேட்டுக்குறேன்” என்று ஸ்வரூப்பிடம் கேட்க, அவனோ அமைதி காத்தான்.

“போடா…” என முறுக்கிக்கொண்டவள், ஜெட்டில் பயணித்தபோதும் உர்ரென வந்தாள். அவன் அதற்கு சமாதானம் செய்யாததால் இன்னும் கொஞ்சம் கோபம் வந்தது.

நேராக ஆடவர்களின் வீட்டிற்கு தான் அழைத்துச் சென்றனர். ஒரு கணம் மூவரில் உத்ஷவி அதிகமாகத் தயங்க, அவர்களைக் கண்டதும் தான் வீட்டினருக்கு நிம்மதி பிறந்தது.

அவர்களின் காயம் கண்டு வருந்தினாலும், இந்த அளவு இப்பிரச்சனை முடிந்ததே நிம்மதியாக இருக்க, சஜித் ஹஸ்கி குரலில், “ஏய் அரைவேக்காடுங்களா… உங்களை தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்ன்னு வீட்ல சொல்லியாச்சு. கொஞ்சம் சமத்தா, போய் சாஸ்டாங்கமா அவ அவ மாமனார் மாமியார் கால்ல விழுந்து கரெக்ட் பண்ணிடுங்க” என்று மூவருக்கும் அறிவுரை கொடுக்க, அவர்களோ விழித்தனர்.

ஜோஷித் விஹானாவை பிடித்து தனது தாய் தந்தையிடம் ஆசி பெறும் பொருட்டு காலில் விழுந்து விட, சஜித்தும் அதனைப் பின் பற்றினான்.

அக்ஷிதா, “எனக்கு ஒண்ணுமே புரியல சஜூ. நாளைல இருந்து தினமும் இதை பாலோ பண்ணிடுறேன்.” என்று பாவமாகக் கூறிட, “தினமுமா?” என சிரித்து விட்டான்.

உத்ஷவியும் காலில் விழ வேண்டுமோ என ஸ்வரூப்பைப் பார்க்க அவனோ உள்ளே வந்ததுமே “எங்க அந்த ஆளு?” எனக் கேட்டான்.

சாணக்கியர் உள்ளே கண்ணைக் காட்ட, சஜித் உடனடியாக உள்ளே சென்று அறையில் அடைத்து வைத்திருந்த பூமிநாதனை கிழிந்த நாராக வெளியில் இழுத்து வந்தான்.

அவரைக் கண்டதும் உத்ஷவி அதிர, ஸ்வரூப் அவளை காட்டத்துடன் பார்த்தான்.

“கடைசி வரை சொல்லுவன்னு எதிர்பார்த்தேன்” என்றவனின் கூற்றில் சிறிதான ஆதங்கம்!

“உனக்கு எப்படி?” உத்ஷவி பேச இயலாமல் தடுமாற,

“விக்னேஷ் உன் அத்தான்னு உன் பார்வையிலயே கண்டுபிடிச்ச நான், இந்த ஆளு உன் அப்பான்னு கண்டுபிடிக்க மாட்டேனாடி.” எனக் கோபத்துடன் கேட்க, அவள் இதழ் கடித்து நின்றாள்.

இவர்கள் வரவை அறிந்து யசோதாவும் வந்து விட, அவருக்கு மனதே இடிந்திருந்தது.

தகப்பனின் குணத்தைக் கண்டு பெண்கள் இருவரும் அங்கு இருக்க இயலாமல் அவர்கள் வீட்டிற்கு சென்று விட, இஷானாவிற்கு ஸ்வரூப்பைப் பார்க்க பயமாக இருந்தது. ப்ரீத்தன் வாடி வதங்கிய நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டான். அந்த டாக்குமெண்ட்டும் அழிக்கப்பட்டதில், அவன் தளர்ந்து விட்டான்.

அவர்களிடம் இருந்து அவ்தேஷ குடும்பத்தின் பட்டமும், சொத்துக்களும், மரியாதையும் பறிக்கப்பட்டது.

ராகேஷின் தந்தையையும் சுட்டுக் கொன்றனர்.
இத்தனையும் செய்தபிறகே வீட்டிற்கு வந்திருந்தனர்.

ஸ்வரூப், உத்ஷவியை முறைத்து “உன் செருப்பை எடுத்துட்டு வா” என்றிட,

அவள் புரியாமல் பார்த்தாள்.

“உன் செருப்பை எடுத்துட்டு வாடி!” ஸ்வரூப் கடுமையுடன் கூற, அதில் வாசலில் கழற்றிய ஒரு செருப்பை எடுத்து வந்தவளிடம், “அடி!” என பூமிநாதனைக் கண் காட்டினான்.

“ஸ்வரூ?” உத்ஷவி கண்களால் மறுக்க, “நீ தான சொன்ன, உன் அப்பனை தேடிக் கண்டுபிடிச்சா செருப்பால அடிக்கணும்ன்னு. ம்ம் கமான் அடி.” என்றான்.

“ஐயோ வேணாம்…” அவள் மீண்டும் மறுத்ததில், அவன் கோபமுற்றான்.

“இது வெளில தெரிஞ்சா உனக்கும் இங்க இருக்குற எல்லாருக்கும் அசிங்கம். இவர் செஞ்ச தப்புக்கு எல்லாரும் ஏன் தலை குனியனும் ஸ்வரூ. நான் திருடியாக் கூட இருந்துட்டு போறேன். இந்த ஆளோட பொண்ணுன்ற அடையாளம் எனக்கு வேணாம்” என்றாள் விறைப்பாக.

அதில் மெச்சுதலாகப் பார்த்தவன், “உனக்கு என் பொண்டாட்டின்ற அடையாளம் இருந்தா போதும். அசிங்கத்தைப் பார்த்தா தண்டனை குடுக்க முடியாது. இந்த ஆளுக்கு உன் கையால் தண்டனை குடுக்க வைக்க தான் இன்னும் உயிரோட விட்டு வச்சுருக்கேன். ம்ம்…” என கண்ணசைத்தான்.

“ப்ச்…” என நொந்தவள், தனது தாய்க்கு நியாயம் செய்யும் பொருட்டு, பூமிநாதனின் கன்னத்தில் மாறி மாறி செருப்பால் அறைந்தாள்.

யசோதாவிற்கு மனம் கனத்துப் போனது. இருந்தும், அதனைப் பார்த்தார். உத்ஷவி செருப்பு பிய்யும் வரை அடித்து தீர்த்தவள், அதை கீழே போட்டு விட்டு ஸ்வரூப்பின் மார்பில் முகம் புதைத்து தேம்பிட, அவளை வாகாக அணைத்துக் கொண்டவன், “தட்ஸ் குட்!” என்றான் உச்சந்தலையில் முத்தமிட்டு.

அதன் பிறகே, பெரியவர்களிடம் தன்னவளுடன் சேர்ந்து ஆசி பெற்றான். யசோதாவிடமும். அவளுக்கு அவரைக் காண என்னவோ போல இருக்க, அவருக்கும் அவளைப் பார்க்க இயலவில்லை.

சாணக்கியருக்கு அவள் பூமிநாதனை தண்டிக்காமல் தனது குடும்பத்திற்காக யோசித்தது பிடித்து விட, மகனின் தேர்வு சரிதானென மெச்சிக் கொண்டார்.

ஏற்பட்ட காயங்களின் தாக்கத்தில், ஆடவர்கள் மூவரும் அவரவர் அறைக்குச் சென்று உறங்கி விட்டனர்.

அதன் பிறகு, நடந்த கலவரங்களை உணர்ச்சி பொங்க, உமையாள் செய்த பலகாரங்களை சுவைத்தபடி அக்ஷிதா சுவைபடக் கூற, விஹானா அதனை நக்கலடிக்க, உத்ஷவி இருவரையும் கேலி செய்ய என சிறிது நேரத்திலேயே பெரியவர்களின் செல்லப்பெண்கள் ஆகி விட்டனர்.

மனம் ஒன்றாமல் சம்மதித்த நந்தகோபாலனுக்கும், பாரிராமருக்கும் கூட இப்போது அந்த எண்ணமே இல்லை.

அவர்களையும் சேர்த்து வைத்து, கிண்டலடித்து பெரியவர்களையும் பேச வைத்திருந்தனர் மூவரும்.

ஜோஷித் தான் முதலில் எழுந்து வந்து திகைத்தான்.

“ஏய்… நீங்க தூங்கவே இல்லையா. நான் தூங்க போறப்ப என்ன பொசிஷன்ல உட்காந்து இருக்கீங்களோ அதே பொசிஷன்ல உட்காந்துருக்கீங்க.” என்று வார, கனகரூபிணி ஜோஷித்தை முறைத்து “நீ சிகரெட் குடிச்சியா ஜோ” என்றார்.

அவனோ பேந்த பேந்த விழித்தான். “கிராதகி உன் வேலை தானா?” என்று பல்லைக்கடிக்க, விஹானா வாயை மூடி சிரித்தாள்.

ஒரு பக்கம் அக்ஷிதா சஜித்தின் மானத்தை வாங்க, மறு பக்கம் உத்ஷவி ஸ்வரூப்பின் மானத்தை வாங்கினாள்.

இருவருக்கும் கான்பெரன்ஸில் அழைத்த ஜோஷித், “அடேய் உங்க மானம் கப்பலேறுது. சீக்கிரம் வாங்க” என்றதில், இருவரும் அடித்து பிடித்து கீழே வந்தனர்.

அதற்குள் ஜோஷித் விஹானாவை தனியாக தள்ளிச் சென்றான்.

“அடியேய் நான் தம் அடிச்சதை எல்லாம் உன்னை சொல்ல சொன்னேனா?” என முறைக்க,

“நான் என்ன செய்ய ஜோஷ். தாரா அத்தை கிட்ட நீ நான் என்ன சொன்னாலும் கேட்பன்னு சொன்னேன். அதுக்கு யாழ் அத்தை இல்லவே இல்லைன்னு சொல்ல, நானும் விடல… அதுக்கு அப்பறம் கனா அத்தை ஒரு எக்ஸ்சாம்பில் கேட்டதுல நான் இந்த சிகரெட் மேட்டரை எடுத்து விட்டேன்.”என்றாள் உதட்டைக் குவித்து.

“இரு.. இரு.. இரு… அதென்ன தாரா அத்த யாழ் அத்த கனா அத்தை” எனக் குழம்பிக் கேட்டதில்,

“அட நம்ம சித்தாரா அத்தை, கனகரூபிணி அத்தை, உமையாள் அத்தை அவங்களை தான் ஷார்ட்டா கூப்பிட்டேன். வந்ததுமே உங்களுக்கு வச்ச மாதிரியே அவங்களுக்கும் பேர் வச்சுட்டோம்” என்றாள் நெளிந்து.

இங்கு சஜித்தும் அதே முறைப்புடன் அக்ஷிதாவை பார்த்தான்.  தனக்கு சுட சுட உணவு வாங்கி கொடுப்பதில் அவனை மிஞ்ச ஆள் இல்லை என பெருமை பீத்திக் கொண்டிருந்தவளை தலையில் தட்டி மொட்டை மாடிக்கு கடத்தி இருந்தான். 

“அம்மாக்களுக்கு மட்டும் தான் இந்த பேரா இல்ல அப்பாவுக்குமா?” என சஜித் கடுப்பாய் கேட்க,

“அதெப்படி காட்ஸில்லா வைக்காம இருப்போம்… சானு மாமா, பாலு மாமா, ராமு மாமா எப்படி எங்க ரைமிங்?” என காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள, “ஐயோ” என தலையில் அடித்துக் கொண்டவன், அவளது பாவனையில் தன்னை தொலைத்து ரசித்தான்.

அவளை தன்னருகில் இழுத்தவன், “இப்போ காதலைப் பத்தி பேசலாமா கேடி?” என குறும்பாய் கேட்க, “பேசலாமே…!” என்றவளுக்கு அத்தனை நேரம் இருந்த குறும்பு மறைந்தது வெட்கம் மினுமினுத்தது.

“அப்போ கேட்டுக்கோ… ஐ ட்ரூலி லவ் யூ கேடி. இந்த கேடிக்கு காட்ஸில்லாவை கல்யாணம் பண்ணிக்க ஓகே வா?” என்று தலை சாய்த்துக் கேட்டதில், மனதில் பொங்கும் மகிழ்ச்சியுடன், தலையாட்டப் போனவள், “ஆனால் ஒரு கண்டிஷன் காட்ஸில்லா. கல்யாணத்துக்கு அப்பறம் சிப்சால குளிக்கக் கூடாது.” என்று கருவிழிகளை உருட்ட,

“ப்ச் ப்ச்… நான் உன் கூட தான் குளிப்பேன்.” என்று கண்ணடித்தவன், அவளை இழுத்து அணைத்து முத்தமிட தொடங்க, நாணி சிவந்தாள் பாவை.

—–

“பாவம்டி எங்க அப்பாக்களை கூட விட்டு வைக்கலையா நீங்க ஜோஷித் நொந்து கொள்ள, நோ வே.” என்றாள் தலையை ஆட்டி.

அதில் இருவருமே சிரித்துக்கொள்ள, விஹானா மெல்ல “என் மேல கோபம் போய்டுச்சு தான ஜோஷ்?” எனக் கேட்டாள் பரிதவிப்புடன்.

“ம்ம். இனிமே தியாக செம்மலா மாறிடாதீங்க மேடம். என்னை விட்டுப் போகணும்ன்னு நினைச்சு பாரு… அப்பறம் இருக்கு உனக்கு” என்று கடிந்தான்.

“நான் ஏன் போக போறேன்…” என்றவள் சட்டென முகம் மாறி, “நீ என் கூட இனி இருக்க மாட்டன்னு நினைச்சு எவ்ளோ அழுதேன் தெரியுமா. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஜோஷ். ஐ… ஐ லவ் யூ!” என்றவளின் விழிகள் கலங்கி விட்டது.

“ஐ லவ் யூ டூ சீட்டர்.” என அவள் கன்னம் தாங்கிட, அவள் உணர்ச்சி பெருக்கில் விழிகள் நனைந்தாள்.

அந்த சூழ்நிலையை மாற்றும் பொருட்டு, “செம்ம டென்ஷனா இருக்குடி. ஒரு தம் அடிச்சா நல்லா இருக்கும்” என்று அவளை ஓரக்கண்ணில் பார்த்தபடி கூற, விஹானா முறைத்தாள்.

“அட்லீஸ்ட் ஒரு ஹாட் கிஸ்?” என கேலி கூத்தாட, கண்ணில் காதல் வழிய அவன் கேட்க, அவள் வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.

முகத்தை மூடிய கையை எடுத்து விட்டவன், அவள் இதழ்களுடன் தன்னிதழ்களை கலந்தான் இம்முறை வெளிக்காட்டி விட்ட நேசத்துடன். 

____

“உங்க பையன் ஒரு ரக்கட் பாய் அத்தை… சும்மா சும்மா அடிச்சுக்கிட்டே இருப்பான்…” என சித்தாராவிடம் குறை சொல்லிக் கொண்டிருந்த உத்ஷவியை குண்டு கட்டாகத் தூக்கிக்கொண்டு அறைக்கு வந்தான்.

“அடேய்… என்னடா செய்ய?” என அவள் துள்ள, “நீ என்னடி செஞ்சுட்டு இருக்க” எனக் கேட்டு முறைத்தவன், வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்கள் வைத்த பெயரைக் கேட்டு தன்னை நொந்தான்.

அவளோ ஈஈ என இளித்து வைக்க, அவன் முறைப்பு மாறாமல், “உனக்கு எப்போ தெரியும்? தெரிஞ்சு தான் திருட வந்தியா?” என கூர்மையாய் கேட்க, அவன் எதை பற்றி கேட்கிறான் என புரிந்தவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“இல்ல… திருட வர்றப்ப எனக்கு தெரியாது. ஆனா, உன்கிட்ட மாட்டுனதும் என்னை ஒரு ஸ்டோர் ரூம்ல அடைச்சு வச்சல்ல. அங்க நிறைய பழைய போட்டோஸ் இருந்துச்சு.

என்கிட்ட என் அம்மாவும் இந்த ஆளும் சேர்ந்து ஒரே ஒரு போட்டோ ஒன்னு இருந்துச்சு. அதுவும் என் அம்மா இறந்து கடன்காரங்க வீட்டுல இருக்குற பொருளை எல்லாம் வெளில போடும் போது தான் கைல கிடைச்சுது. அதை வச்சு யாருன்னு கண்டுபிடிக்க முடியலைனாலும், அம்மாவோட ஞாபகமா வச்சு இருந்தேன். அதே உருவத்தை உன் வீட்டு ஸ்டோர் ரூம்ல பார்த்ததும் உண்மையா எனக்கு செம்ம கோபம்.

என்ன சொந்தம்ன்னு தெரியல, ஆனா நீங்க மூணு பேரும் அந்த ஆளோட உறவா இருப்பீங்கன்னு புரிஞ்சதும் உங்களுக்கு எந்த விதத்துலயும் ஹெல்ப் பண்ண கூடாதுனு ஸ்ட்ராங்கா இருந்தேன். ஆனா, நான் திருடி இருக்க மாட்டேன்னு என்னை நம்புனீங்கள்ல… அப்போ தான் எனக்கு உங்களை ஏமாத்தவோ பழி வாங்கவோ மனசு வரல. அந்த ஆளு செஞ்ச தப்புக்கு, நீங்க என்ன செய்வீங்க.” என்றவளை அள்ளி அணைத்துக் கொண்டான் ஸ்வரூப் அவ்தேஷ்.

“ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாம்லடி” என ஆயாசத்துடன் கேட்டவனிடம், “எனக்கு சொல்ல தோணல. வெளில தெரிஞ்சா எல்லாருக்கும் கஷ்டம். அதான் அப்படியே விட்டுட்டேன். ஆனா இங்க வந்ததும் அந்த ஆளு நான் அம்மா மாறி இருக்கிறதை வச்சு என்னை பத்தி விசாரிச்சாரு. நானும் எதுக்கு மறைக்கணும்ன்னு போட்டோவை காட்டி சொல்லிட்டேன். அந்த பைத்தியம், அந்த போட்டோவை வாங்கி எரிச்சுருச்சு. இருந்த ஒரே எவிடன்ஸ் அது தான். அதுவும் இல்லன்னு ஆனதுக்கு அப்பறம் நான் சொல்லி, நீ அதை நம்பாம போய்ட்டா…” என தயக்கத்துடன் அவன் முகம் பார்க்க, அதுவோ கோபத்தில் சிவந்தது.

தன்னவளை காயப்படுத்திய ஒருவரை கூட விடும் எண்ணம் இல்லை அவனுக்கு. ரங்கன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், தப்பித்து விட்டான்.

“உனக்கு மட்டும் எப்படிடா கோபம் வந்தா முகம் சிவக்குது.” என வெகு முக்கியமான ஆராய்ச்சியில் அவள் புகுந்து விட, அதில் பட்டென புன்னகைத்தவன், “உனக்கும் சிவக்குதான்னு ஆராய்ச்சி செஞ்சுடலாமா திருடி?” என குறும்பாகக் கேட்டிட,

“டைனோசர்…” என வெட்கம் தாங்காமல் காலை உதறியவளை, அப்படியே கையில் தூக்கிக்கொண்டவன், அவளை சிவக்க வைக்கும் பணியில் ஈடுபட்டான்.

முற்றும்
மேகா

எபிலாக் இருக்கு டியர்ஸ். இந்த கதைக்கு நீங்க குடுத்த பெரிய ஆதரவு தான், ரெண்டே நாள்ல பத்தாயிரம் வார்த்தைக்கு மேல எழுதி என்னை முடிக்க வச்சுருக்கு. ஆல்வேஸ் யுவர் சப்போர்ட் இஸ் அ பிக் என்கரேஜ் டூ மீ! மனமார்ந்த நன்றிகள். இதுவரை வந்த கமெண்ட்ஸ் எதுக்கும் என்னால் சரியா ரிப்ளை பண்ண முடியல. ரொம்ப சாரி டியர்ஸ். இனி எல்லாருக்கும் ரிப்ளை பண்றேன். முழு மூச்சா கதையை போட்டிக்கு முடிச்சே ஆகணும்ன்னு டைப் பண்ணேன். சோ எதுக்குமே ரியாக்ட் பண்ண முடியல. ஒன்ஸ் அகைன் தேங்க் யூ சோ மச்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
153
+1
8
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    10 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.