Loading

சஜித் படுத்ததும் உறங்கி இருக்க, அவனருகில் காலை நீட்டி அமர்ந்த ஸ்வரூப் அவ்தேஷ், ஜெயராமனின் வீட்டில் இருந்து எடுத்து வந்த புத்தகத்தைப் பிரித்தான்.

மனநிலை சம்பந்தமான பல விஷயங்கள் அதில் கூறி இருந்தாலும், தங்களது இன்வெஸ்டிகேஷனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லாதது போலத் தான் தோன்றியது. மனநிலையைக் குழப்பி ஏன் சாக வைக்க வேண்டும் இதனால் யாருக்கு என்ன இலாபம்?

மனநிலையைக் குழப்பினால், அவர்கள் பித்து பிடித்தவர்கள் போலல்லவா இருக்க வேண்டும்… எப்படித் தெளிவாக பேச இயலும்! அனைத்துமே ஒன்றுக்கொன்று முரணாக இருக்க, புத்தகத்தைத் தூக்கி எறிந்தவனுக்கு, தங்களை சுத்தலில் விடுபவனின் மீது சினம் பெருகியது.

அவன் புத்தகத்தைத் தூக்கி எறியும் போது, மெல்ல கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த உத்ஷவியின் காலடியில் அது வந்து விழுக, அதனைக் குனிந்து எடுத்தவள், “இன்னும் நீ தூங்கலையா? பெயின்கில்லரோட ஸ்லீப்பிங் டேப்ளட்டும் போட சொன்னேனே. போட்டியா இல்லையா.” என்றவள், முதலுதவிப் பெட்டியை சரி பார்த்து, மாத்திரை குறைந்திருக்கிறதா என்று பார்த்தாள்.

கொடுத்த மாத்திரை அப்படியே இருப்பதைக் கண்டு, “டேப்ளட் போடாம வலி குறையாது டைனோசர். இந்நேரத்துக்கு ரெஸ்ட் எடுக்காம, இதை உட்காந்து பொரட்டிட்டு இருக்க. நான் சொன்ன புக் இது இல்லை.” என்று கண்டித்தவள், வலுக்கட்டாயமாக மாத்திரியைப் போட வைத்தாள்.

“ப்ச், தெரியும்டி. ஏதாச்சு சிக்குதான்னு படிச்சுப் பார்த்தேன். பெருசா எதுவும் இல்ல.” எனக் கழுத்தை சோர்வுடன் தேய்த்தபடி கூற, இருவருமே முன் நிகழ்ந்த வாக்குவாதத்தை சுத்தமாக மறந்து விட்டனர்.

“அதான் நாளைக்கு விஜயவாடா போய் பத்ரியைப் பிடிச்சுடலாம்ன்னு சொன்னியே. அப்பறம் என்ன?” என்றவள், அவனது காலை எடுத்து அவள் மடி மீது வைத்து, கையோடு கொண்டு வந்த ரத்தக்கட்டு பேண்ட் எய்டை ஒட்ட விழைந்தாள்.

“இது எங்க இருந்துடி கிடைச்சுது இந்த நேரத்துல?” என அவனும் தயக்கமே இன்றி, காலைக் கொடுக்க, “ரிஷப்ஷன்ல அப்பவே சொல்லிருந்தேன். பக்கத்துல மெடிக்கல் எதுவும் இல்ல. இங்க ஸ்டே பண்ணிருக்குற ஆளுங்க யாராவது வச்சிருந்தா விசாரிச்சு வாங்கிக் குடுக்கச் சொன்னேன்.” என்றதும்,

“ஹோட்டல்ல இவ்ளோ ஃபெசிலிட்டீஸ்லாம் பண்றங்களா என்ன?” எனக் கேட்டான் புருவம் சுருக்கி.

“அதெல்லாம் செய்ய முடியாதுன்னு தான் சொன்னாங்க. அப்பறம் உன் ஃபேமிலி பேக் கிரவுண்ட் பத்தி சொல்லி, இந்தத் துப்பாக்கியை காட்டினேன் பயந்துட்டாங்க. என்று அவனது துப்பாக்கியை எடுத்து அவனிடமே நீட்ட, அதனை வெடுக்கெனப் பிடுங்கியவன், “இதை எப்ப டி எடுத்த? இடியட்.” என்று பல்லைக்கடித்தான்.

“நீ எனக்கு குடை பிடிச்சு சேவை செஞ்சுட்டு வந்தியே அப்ப தான்…” என்று இளித்து வைத்தவளை, “இந்த மாதிரி பெர்சனல் யூஸ்க்கு என் பதவியை நான் பயன்படுத்திக்க மாட்டேன் விஷா. அது எனக்குப் பிடிக்காது. இன்னொரு தடவை இப்படி செஞ்ச, அடிச்சுருவேன்.” என்றான் அதட்டலாக.

“டேய்… உன் கால் எப்படி வீங்கி இருக்கு பாரு. காலைல வரை எப்படிடா வலியை தாங்கிட்டு இருப்ப. நமக்கு போக தான் தானமும் தர்மமும். நம்ம வலில இருக்கும் போது, மத்தவங்களுக்கு உதவி செய்யணும்ன்னு அவசியம் இல்ல ஸ்வரூப்.” என்றாள் அழுத்தமாக.

அதனை மறுத்து அவன் பேச வரும் போது, அவனைக் கரம் நீட்டித் தடுத்தவள்,

“நீ வேணும்ன்னா பரம்பரைப் பணக்காரனா இருக்கலாம். மக்களை ஆளுற அதிகாரத்துல இருக்கலாம். இதெல்லாம் இருக்குறனால எல்லாரும் உன்னை மதிக்கலாம். தலைல தூக்கி வச்சு கூட ஆடலாம்.

ஆனா, இதெல்லாம் இல்லன்னா, உன்னை யாரும் புழுவா கூட மதிக்க மாட்டாங்க. அப்படிபட்ட உலகத்துக்கு, நீ ஒன்னும் உசுர குடுத்து சோசியல் சர்விஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. இந்த டேஞ்சரான இன்வெஸ்டிகேஷன்ல நீ செத்துப்போனா உன்னை நினைச்சு மூணு நாளைக்கு மேல அழுக கூட யாருக்கும் நேரம் இருக்காது. நமக்குத் தேவையான நேரத்துல பயன்படாத பதவியும் அதிகாரமும் இருந்தா என்ன இல்லன்னா என்ன? உன் ஊர் மக்களையும் சேர்த்து தான் சொல்றேன். இது உன் தம்பிங்களுக்கும் பொருந்தும்!” என்று திட்டவட்டமாக உரைத்திட, மறுபுறம் இவர்களது பேச்சில் உறக்கம் கலைந்த சஜித் “செருப்புப் பிஞ்சுடும்” என்றான் தலையை நிமிர்த்தி.

‘இவன் இன்னும் தூங்கலையா?’ என முணுமுணுத்தவள், “சரி சரி… உன் தம்பிங்க எக்செப்ஷன். அவனுங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன். ஏதோ ஒன்னு மண்ணுமா பழகிட்டீங்களேன்னு ராத்திரி தூங்கமா ப்ரீயா அட்வைஸ் பண்ணிட்டு இருக்கேன். கேட்டா கேளுங்க கேட்காட்டி போங்க.” என்று தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

சஜித்திற்கு அவள் பேசியது எரிச்சலைக் கொடுத்தாலும், ஒரு வகையில் சரியாகத் தான் தோன்றியது. சட்டென தலையை உலுக்கி எழுந்து கொண்டவன், “உங்கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா, நீ என்னை ப்ரெய்ன் வாஷ் பண்ணி, மனித வெடிகுண்டா மாத்துனாலும் மாத்துவடி. நான் பக்கத்துக்கு ரூம்க்கு போய் விட்ட தூக்கத்தை கன்டினியூ பண்றேன்.” என்று விருட்டென எழுந்து கொண்டான்.

அவனது கூற்றில் சத்தமின்றி சிரித்தவள், “டேய் அங்க உன் அசிஸ்டன்ட் தூங்குறா” எனக் கத்திட, “நான் கவுச்ல தூங்கிக்கிறேன்” என்றபடி வெளியில் சென்று விட்டான். அவர்கள் நேரத்திற்கு இரண்டு அறையே ‘வேகண்ட்’ இருந்தது.

பெண்ணவளின் முகத்தையே சலனமின்றி பார்த்திருந்த ஸ்வரூப் அவ்தேஷ் நிதானமாக அவளது கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டு,

“இங்க நாங்க செய்றது எதையும் எதிர்பார்த்து இல்ல விஷா. நாங்க செத்ததும், எங்களைக் கடவுளா நினைச்சு கும்பிடணும்ன்னு நினைச்சு இப்படி ஓடல. இதெல்லாம் எங்க முன்னோர்கள் விட்டுட்டுப் போன கடமை.

சித்தூர்ல இருக்குற ஒவ்வொரு மலைக்கிராமத்தையும் எங்க சொந்த மண்ணாவும், அங்க இருக்குற அத்தனை மக்களையும் எங்க குடும்பமாவுமா தான் பாக்குறோம். வழி வழியா வர்ற பொறுப்புகளையும், நடைமுறைகளையும், பழக்க வழக்கங்களையும், அதிகாரத்தையும், எங்க மக்களுக்கு நாங்க செய்ற சேவையையும் தட்டி விட்டுட்டு போற பழக்கம் எங்களுக்கு இல்ல. எங்க தாத்தா, குடும்ப நெறிகளை எங்களுக்குள்ள ஆழமா திணிச்சுட்டாரு. அதைப் பிடுங்கி வெளில எறியிறது கஷ்டம். அதை செய்யவும் மாட்டோம். உலகத்துல இருக்குற எல்லாருமே சுயநலமானவங்க தான் விஷா. அவங்களுக்காக ஏன் செய்யணும்ன்னு, எப்படி வேணாலும் வாழலாம். ஆனா, இப்படித் தான் வாழணும்ன்னு ஒரு நெறி இருக்குல்ல?” என நிறுத்திப் பொறுமையாக விளக்கம் சொன்னவனைக் கண்ணிமைக்காமல் பார்த்தாள்.

தான் பேசியதற்கு அவன் கோபத்தின் உச்சிக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்? அவனது இயல்பு அது தானே! என வியப்புப் பரவ விழித்தவளுக்கு வேறொன்று உறுத்தியதில் பேச வாய் எடுக்கும் முன், ஒற்றை விரலால் அவள் இதழ்களை மூடினான்.

“இவ்ளோ பேசுறவன், ஏன் மத்தவனைக் கொல்லுறன்னு தான கேட்குற?” என அவளது எண்ணத்தை அறிந்து அவனே கேள்வியாகக் கேட்க, அவள் மேலும் கீழும் வேகமாகத் தலையாட்டினாள்.

மெல்லப் புன்னகைத்தவன், “எங்க இடத்துல நாங்க தான் போலீஸ், கவர்மெண்ட் எல்லாம். போலீஸ் ஸ்டேஷன் எல்லாமே சித்தூர்லையும் இருக்கு தான். ஆனா, அதையும் நாங்க தான் வழிநடத்துறோம். இது காலம் காலமா வர்ற நடைமுறை உனக்கு புரிஞ்சுக்க கொஞ்ச நாள் ஆகும்

விஷா. தப்பு பண்ணுனவனைப் பிடிச்சு, தண்டனைக் குடுத்து டைம் வேஸ்ட் பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல. தண்டனைக் கொடுக்குறது தேவை இல்லன்னு தோணுச்சுன்னா, சுட்டுடுவேன். அது அவன் அவன் செய்ற தப்பைப் பொறுத்து.” என்றான் தீர்க்கமாக.

இப்போது அவனது புன்னகைக் கண்டு, அவளது விழிகள் வியப்பில் விரிந்தன.

சட்டென எழுந்தவள், கட்டிலுக்கு அடியிலும் சுற்றலும் என்னவோ தேட ஆரம்பிக்க, அவளது செய்கையில் குழம்பியவன், “என்னடி செய்ற?” எனக் கேட்டான்.

“இந்த ரூம்ல போதி மரம் எதுவும் இருக்கான்னு தேடுறேன் டைனோசர். அதிசயமா நீ இவ்ளோ பொறுமையா பேசுறியே. இந்நேரம் உன் தம்பிங்களைக் குறை சொன்னதுக்கும், உன் துப்பாக்கியை அடிச்சதுக்கும் என் கன்னம் பழுக்கும்ன்னுல நினைச்சுட்டு இருந்தேன்” என்றாள் கன்னத்தில் கை வைத்து.

அதற்கும் புன்னகையைப் பரிசளித்தவன், “அந்த போதி மரமே நீ தான திருடி” என்றான் தலையை சாய்த்து.

“பாருடா… உனக்கு தூக்க மாத்திரை வேலை செய்யுதுன்னு நினைக்கிறேன். அதான் தூக்கத்துல ஏதேதோ உளறுற.” என குறும்பாய் நகைத்தவளை, ஆழ்ந்து பார்த்தவன், “நீ சொன்னதுல ஒரு விஷயம் மட்டும் சரி. இப்போ கொஞ்சம் எனக்காகவும் வாழனும்ன்னு தோணுது. அதுக்காக, சில கஷ்டமான முடிவையும் எடுக்க வேண்டியது இருக்கு. லெட்ஸ் ஸீ!” எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டவனின் வார்த்தைகளில் ஒரு வித கவலையும் தோன்றியது.

அவளோ ஒன்றும் புரியாமல், “ரஸ்க் சாப்பிடணும்ன்னா ரிஸ்க் எடுத்து தான் ஆகணும் டைனோசர்.” என தத்துவம் கூறிட, “ப்ச்” என்று உச்சுக் கொட்டி முறைத்தான்.

அதில் அசடு வழிந்தவள், “ஆமா, விஹாவும் ஜோவும் எங்க?” எனக் கேட்க, அவன் விவரம் கூறியதும், “அப்டியா? சொல்லிருந்தா நாங்களும் போய் அவள் தம்பியை பார்த்துருப்போம்ல” எனக் குறைபட்டுக் கொண்டவள், அங்கிருந்த கவுச்சிலேயே படுத்து விட்டு,

“நான் இங்கயே தூங்குறேன். அங்க அக்ஷி தூக்கத்துல உளறிக்கிட்டே இருக்கா.” என்று புலம்பியபடி சில நொடிகளில் உறங்கியும் விட்டாள்.

அவளையே சிறிது நேரம் பார்த்திருந்தவன், இரு கைகளாலும் தனது தலையை அழுந்தப் பற்றிக்கொண்டான்.

அந்நேரம் அவனது அலைபேசி ஒலிக்க, அவள் உறக்கம் கலையும் முன் விருட்டென அழைப்பை ஏற்றான்.

எதிர்முனையில் ஒரு ஆடவனின் குரல் ஏளனமாக ஒலித்தது.

“என்ன மிஸ்டர் ஸ்வரூப், என்னைப் பிடிச்சு உன் ஊர் பசங்களைக் காப்பாத்திடுவன்ற திணக்கம் அதிகமா தெரியுதே உங்கிட்ட. நீ நினைக்கிறது கனவுல கூட நடக்காதுன்னு புரிஞ்சுக்க ஸ்வரூப்” என்ற நக்கல் பேச்சில், “பத்ரி” என்று கடுகடுத்தான் ஸ்வரூப்.

“என் பேர், விவரம் எல்லாத்தையும் அந்தத் திருட்டு நாய் சொல்லிடுச்சா. அவளே ஒண்ணா நம்பர் 420 அவள் சொல்றதை நம்பி, என்னை நெருங்க நினைக்கிறியே… இதோட பின்விளைவுகளை பத்தி தெரியாம…” என பாவம் போல பேசினான்.

உத்ஷவியைப் பற்றி பேசியதும் கோபம் கொழுந்து விட்டு எரிய, “நீயும் பின் விளைவுகளைப் பத்தி தெரியாம என் ஊருக்குள்ள நுழைஞ்சுட்ட பத்ரி. என் துப்பாக்கில உனக்காக ஒரு குண்டு ரொம்ப ஆசையா காத்துட்டு இருக்கு! உன்னையும் மேகனாவையும் பார்த்த இடத்துலயே சுட்டுத் தள்ளாம விட மாட்டேன். கடவுள் நம்பிக்கை இருந்தா, என் கண்ணுல அவ்ளோ சீக்கிரம் பட்டுடக் கூடாதுன்னு வேண்டிக்க.” என்று திமிர் தொனியில் பேசிட,

உறங்கிக்கொண்டிருந்த உத்ஷவி தான், “எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்ல. இப்போதைக்கு உன்னை மட்டும் தான் டைனோசர் நம்புறேன்.” எனத் தூக்கத்திலேயே அவளிடம் பேசுவதாக எண்ணி பதில் அளித்திட, அத்தனை ஆத்திரமும் மொத்தமாக வடிந்த ஆடவனின் முகத்தில் மலர்ந்த புன்னகை.

அவளை ரசித்துக் கொண்டிருந்தவன், “டேய்… போனை வைடா. இப்போ உங்கிட்ட சவால் விடுற மூட்ல நான் இல்ல. நாளைக்கு நேர்ல மீட் பண்ணுவோம். ஹேப்பி லாஸ்ட் நைட்!” என்று அழைப்பைத் துண்டித்தான்.

அடுத்தடுத்து செய்யப்போகும் காரியங்களைத் திட்டமிட்டவன், இழிவாய் இதழ் விரித்துக் கொள்ள, மறுநாள் காலையிலேயே விஜயவாடாவில் ஆண்களைக் கடத்தி வைத்திருக்கும் இடம் அறிந்து அங்கு விரைந்தனர்.

ஆனால், அங்கு வாயும் கையும் கட்டப்பட்ட நிலையில் மயங்கி இருந்தது நாகவல்லி!

முதலும் முடிவும் நீ!

மேகா

இன்னைக்கும் சின்ன எபி தான் டியர்ஸ்… நாளைக்கு ரெண்டு போடுறேன். குட் நைட்!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
85
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.