Loading

அத்தியாயம் 42

“எதுக்குடா என்னைக் கட்டிப் போட்டு வச்சிருக்கீங்க.” என்று கயிறை விடுவிடுக்க முயன்றவாறே ப்ரீத்தன் கத்தினான்.

ஸ்வரூப் அவன் முன் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்து, அவனுக்குத் தேவையான டாக்குமெண்ட்டை அவன் முன் நீட்டினான். “இங்க பாரு, நான் நேரடியா கேக்குறேன். உன்னோட பிளான் தான் என்ன? வெறும் அபார்ட்மெண்ட் கட்டுறது தானா? இல்ல வேற எதுவுமா?” எனக் கேட்டான் கூர்மையுடன்.

ப்ரீத்தனுக்கு அந்த டாக்குமெண்ட்டைக் கண்டதும் கண்கள் மின்னியது. அதனைக் குறித்துக் கொண்ட ஸ்வரூப் அவ்தேஷ், “பதில் சொல்லிட்டு இந்த டாக்குமெண்ட்டை வாங்கிட்டு கிளம்பு. இனி உனக்கும் எனக்கும் இடைல எந்தப் பிரச்னையும் வேணாம்.” என்றான் இலகுவாக.

விஹானா, “என்னடி இவன் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டான்.” என்று ஏமாற்றமாக உணர,

உத்ஷவி ஸ்வரூப்பையே ஆராய்ந்து விட்டு, “இந்த டைனோசர் சரியான ஆளுடி. நாய்க்கு ஆசைகாட்டி பிரெட் துண்டை போட்டுப் பிடிக்கிற மாதிரி, இவனை ட்ரீட் பண்றான்.” என்றவளின் குரலில் ரசனையும் மிகுந்தது.

அக்ஷிதாவோ, “எனக்கு இப்போலாம் நாய்ன்ற வார்தையைக் கேட்டாலே அலர்ஜியா இருக்கு டார்ல்ஸ்” எனத் தோளை உதறிக்கொண்டாள்.

ப்ரீத்தனுக்கோ, பல கோடி செலவு செய்து உருவாக்கிய திட்டம், மீண்டும் தன் கையில் கிடைக்கப்போகும் ஆவல் தோன்ற, ஆசை கண்ணையும் புத்தியையும் மறைத்தது.

“என்னோட கனவே இங்க லக்ச்சுவரி அப்பார்மெண்ட்ஸ் கட்டுறது தான். இதோட வேல்யூ தெரியுமா உனக்கு? இந்த சித்தூரை சுத்தியும் இருக்குற மலையும் வளமும் பணத்தை அள்ளிக் குடுக்குற தங்க முட்டை போடுற வாத்து.” என்றவனின் விழிகளில் பேராசை தோன்றியது.

ஜோஷித் எழுந்த சினத்தை அடக்கியபடி, “இந்த மலையும் வளமும் இருக்குற வரை தான் இது தங்க முட்டை போடுற வாத்து. அதை மொத்தமா எடுக்கணும்ன்னு நினைச்சா, வாத்து செத்துரும்.” என்றதில்,

“அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை. இந்த பதவிலையும் சொத்துலயும் எனக்கும் சரிபாதி உரிமை இருக்குல்ல. அதை என் இஷ்டத்துக்கு நான் என்ன வேணாலும் செய்வேன்.” என்றான் எகிறளாக.

“எதை வேணாலும் செஞ்சுத் தொலை. ஆனா, இதை எல்லாம் வேற எங்கயாவது செய்ய வேண்டியது தான. மக்களை அழிச்சு அவங்களோட அடையாளத்தை அழிச்சு தான் செய்யணுமா?” என எரிச்சலுடன் கேட்ட சஜித், “சரி என்னமும் பண்ணித் தொலைஞ்சுக்க. ஆனா, ட்ரக் கிரியேட் பண்ணி, ஊரை சுடுகாடாக்கப் பாக்குறியே. உனக்கு வெட்கமா இல்லை.” எனக் கடிந்தான்.

“ட்ரக்கா?” என விழித்த ப்ரீத்தன், “என்னங்கடா… என் மேல பழியைப் போட்டு தீர்த்துக்கட்ட பாக்குறீங்களா? நீ பதவிசா பேசும் போதே நினைச்சேன்டா. டாக்குமெண்ட்டை குடுக்குற மாதிரி குடுத்து என்னை வேற எதுலயோ மாட்ட வைக்க பாக்குறியா நீ” என்று ஸ்வரூப்பிடம் காய்ந்தான்.

அவனை ஒரு முழு நிமிடம் அமைதியாகப் பார்த்த ஸ்வரூப், “உன் வீட்ல இருந்து எடுத்த சிப் ராகேஷ் குடுத்தது தான?” என கேட்க, “ஆமா” என்றான் ப்ரீத்தன்.

“இதுல என்ன இருந்துச்சுன்னு உனக்குத் தெரியுமா?” என மீண்டும் ஸ்வரூப் கேட்க,

“தெரியுமே. அபார்ட்மெண்ட் கட்டுறது பத்தின ‘லே அவுட்’, மத்த டீட்டெய்ல்ஸ் இருக்கு.” என்றான் அசட்டையாக.

“என்கிட்ட பொய் சொன்னா என்ன நடக்கும்ன்னு தெரியும்ல?” ஸ்வரூப் கண்டனக் குரலில் கேட்க, “நீ வேணும்னா அதை செக் பண்ணிப் பார்த்துக்க.” என்று எரிச்சலடைந்தான்.

மற்றவர்களோ ‘என்னடா இது?’ எனக் குழம்பி நிற்க,

நாற்காலியின் கைப்பிடியில் விரல்களால் தாளமிட்ட ஸ்வரூப், “சரி அதை விடு. உன்னையும் ராகேஷையும் தவிர உங்க கூட இன்னொருத்தன் இருக்கான் ரைட்?” எனக் கேட்டதில், ப்ரீத்தனின் விழிகள் ஒரு நொடி அதிர்ந்து பின் இயல்பானது.

“அவன் யாரு? இப்ப எங்க இருப்பான்? அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்விகளை அடுக்கினான்.

“அவனைப் பத்தி தெரிஞ்சு நீ என்ன செய்யப் போற?” திமிருடன் ப்ரீத்தன் கேட்க, “கேட்ட கேள்விக்கு பதில் குடுத்தா, இந்த டாக்குமெண்ட் தீக்கு இறையாகாம உங்கிட்ட வந்து சேரும்.” என்று லைட்டரை பற்ற வைத்தான் ஜோஷித்.

“டேய் டேய்… அதை ரெடி பண்ண கிட்டத்தட்ட 20 கோடி செலவு பண்ணிருக்கேன்.” என்று கத்திய ப்ரீத்தன், “அவன் ஜஸ்ட் என் பிசினஸ் பார்ட்னர் அவ்ளோ தான்.” என்றான்.

“பிசினஸ் பார்ட்னரைப் பத்தின தகவலை சொல்லிட்டுக் கிளம்புடா” என சஜித் முறைக்க, “அவனைப் பத்தி தெரிஞ்சுக்குறது உங்களுக்கு நல்லது இல்ல.” என்றான் மிரட்டலாக.

ஸ்வரூப் அவ்தேஷ், இதழ்களில் பூத்த நக்கல் புன்னகையுடன், “அவன் பேர் பத்ரி ரைட்? ஜுவனைல்ல பல குற்றம் பண்ணிட்டு உள்ள இருந்தவன். அதே குற்றத்தை பிசினஸ்மேன்ற போலி முகமூடியோட பண்ணிட்டு இருக்கான்.” எனக் கூறியதும், ப்ரீத்தன் திகைத்தான். உடன் இருந்த பெண்களும் தான்.

‘இந்த டீடெய்ல இவன் எப்படி கலெக்ட் பண்ணுனான். நம்மளும் கூடவே தான இருந்தோம்’ என்று மூவரும் திருதிருவென விழித்தனர்.

ப்ரீத்தன் பதில் கூறாமல் அமைதியாக இருக்க, “சே எஸ் ஆர் நோ!” என தனது நீண்ட கால்களால் ப்ரீத்தனின் சேரை எட்டி உதைக்க, அவன் தூரத்தில் சென்று விழுந்தான்.

ஸ்வரூப் மேலும் மிதிக்க காலை தூக்கப் போக, “ஆமா… அது பத்ரி தான்.” என்றான் மூச்சிரைக்க.

“சோ, வாட்ஸ் த பிளான்?” ஒற்றைப் புருவம் உயர்த்தி ஸ்வரூப் வினவ,

“பிளான்லாம் எதுவும் இல்ல ஸ்வரூப். அவனும் ஒன் ஆஃப் தி பார்ட்னர் அவ்ளோ தான்.” என்றதில்,

“அப்போ ஊருக்குள்ள ஆம்பளைங்க காணாம போறதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல அப்படி தான?” எனக் கேட்டு ஜோஷித் அவன் கையை முறிக்க,

“என்னடா வேணும் உங்களுக்கு? முதல்ல ட்ரக்ன்னு சொன்னீங்க, இப்ப கடத்தல் பழியைப் போடுறீங்க.” எனக் கேட்டதில், ஜோஷித் அவன் கால் மீது ஏறி மிதித்தான்.

“உன்னை முன்னாடியே பிரிச்சு மேஞ்சு விசாரிச்சு இருக்கணும்டா. இப்ப தான் வசமா ஆதாரத்தோட சிக்கி இருக்க. இந்த சிப்பை ஆதாரமா வச்சு, உன் சொத்தை எல்லாம் அபகரிச்சு, உன்னை ஜெயில்ல தள்ள முடியும் தெரியுமா?” என வெகு எகத்தாளத்துடன் கேட்டான்.

அதில் ப்ரீத்தன் அதிர்ந்து பார்க்க, ஸ்வரூப் மடிக்கணினியில் அந்த ஃபார்முலா சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்டை காட்டினான்.

“இது என்னது?” என்று ப்ரீத்தன் புரியாமல் விழித்ததில்,

ஸ்வரூப் “நீ தப்பான மருந்த பயன்படுத்தி மக்களைக் கொல்ல பாக்குறதுக்கான ஆதாரம். உன் வீட்ல உன் ரூம்ல இருந்து எடுத்ததுன்னு நீயே ஒத்துக்கிட்ட. இந்நேரம் மாமாவும் சைலண்ட்டா கம்பளைண்ட் ஃபைல் பண்ணிருப்பாருல…” என போலி வருத்தத்துடன் கேட்டு எதிரில் இருந்தவனை உறைய வைத்தான்.

“டேய்! டேய்! நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. மருந்து மண்ணாங்கட்டி பத்தி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது. ராகேஷ் இதுல கன்ஸ்ட்ரக்ஷன் சம்பந்தப்பட்ட டீடெய்ல் இருக்குன்னு தான் குடுத்தான். இதை வாங்கி வச்சதோட இதுக்குள்ள என்ன இருந்துச்சுன்னு கூட நான் பார்க்கல. முதல்ல உங்ககிட்ட இருந்து டாக்குமெண்ட்டை எடுத்துட்டு மத்ததை ப்ரொசீட் பண்ணலாம்ன்ன்னு நினைச்சேன்…” என்று பதறி பேசிட, அவர்களோ அசையாமல் நின்றனர்.

எச்சிலை விழுங்கிய ப்ரீத்தன், “சரி… நான் ஒ ஒத்துக்குறேன். இங்க காணாமப் போற ஆம்பளைப்பசங்களை எல்லாம் பத்ரி தான் கடத்துறான்.” என்றதும்,

“இது ஆல்ரெடி தெரிஞ்ச தகவல். அவங்களை விஜயவாடா பக்கத்துல ரிசர்வ்ட் ஏரியால வச்சிருக்கான். அது எங்க இருக்கு? இதை ஏன் பண்றீங்கன்னு முழுசா சொல்லிடு பாப்போம்” என ஒற்றைக் காலை மடக்கி அத்தை மகனின் முன்பு அமர்ந்து கொண்டான் ஸ்வரூப்.

“உனக்கு எப்படித் தெரியும்…” என அரண்ட ப்ரீத்தன், “இதை நான் பண்ணல. பத்ரி தான் ஐடியா குடுத்தான். ஆனா, எங்க கடத்தி வச்சுருக்கான்னுலாம் எனக்குத் தெரியாது. ஊருக்குள்ள ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டா, கவர்ன்மெண்ட்டே இந்தப் பதிவியை உங்ககிட்ட இருந்து பறிச்சுடும். அப்பறம் நம்ம இடைல புகுந்து அப்பார்ட்மெண்ட் கட்டுற வேலையைப் பார்க்கலாம்ன்னு…” என சொல்லும்போதே, ப்ரீத்தனின் கன்னம் பழுத்தது.

“அதாவது, நம்ம மக்களை நீயே அடமானம் வச்சுருக்க. கடத்துனது அவனா இருந்தாலும் அதுக்கு பாலமா இருந்தது நீ தான்டா. உன்னை யூஸ் பண்ணி அவன் பசங்களை கடத்தி ஏதோ செய்றான். அது மட்டும் என்னன்னு முழுசா தெரியட்டும். உன்னையும் அவனையும் சேர்த்தே பெட்ரோல் ஊத்தி எரிக்கிறேன்…” எனக் கண்களில் தீப்பிழம்புடன் உறுமிய ஸ்வரூப்,

“சஜி… இவனுக்கு சோறு தண்ணி எதுவும் கொடுக்கக்கூடாது. இருட்டு ரூம்ல அடைச்சு போட்டு, காவலுக்கு ஆளுங்களை வச்சுடு.” என உத்தரவிட்டவன், ப்ரீத்தனிடம் திரும்பி, “இதுக்கு இடையில ஏதாவது உண்மையை மறைச்சுருந்தா சமத்தா நீயே சொல்லிடு. அப்பறம் செத்ததுக்கு அப்பறம் வருத்தப்படக் கூடாது…” என்று முடிக்க, ப்ரீத்தனுக்கு உயிரே இல்லை.

“ஸ்… ஸ்வரூ… நான் உன் அத்தைப் பையன். என்னை ஏதாவது செஞ்சா அம்மாவுக்கு நீ தான் பதில் சொல்லணும்…” என்று சென்டிமெண்டாக திசை திருப்ப முயல,

“நான் ஏன் பதில் சொல்லப் போறேன். உன்னை யார் கடத்திக் கொலை பண்ணிப் போட்டான்னு தெரியலைன்னு நீலிக்கண்ணீர் வடிச்சு, உன்னை ஊர் முழுக்க தேடுற மாதிரி நடிச்சுடுவேன். அத்தையும் என்னை நம்பிடுவாங்கடா.” என கண்ணோரம் சுருக்க நகைத்த ஸ்வரூப் சஜித்திடம் கண்ணைக் காட்டி விட்டு வெளியில் செல்ல, சஜித் ப்ரீத்தனை ஓங்கி அடித்து மயங்கச் செய்தான்.

‘ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டுடான்ற மாதிரி அடிச்சு மயங்க வச்சுட்டான்…’ என அக்ஷிதா மலங்க மலங்க விழித்தபடி வெளியில் ஓடி விட, உத்ஷவி தான் ஆர்வமாக, “அவங்க கூட இருந்தது பத்ரின்னு உனக்கு எப்படி தெரியும் டைனோசர்?” எனக் கேட்டாள்.

“எப்படி கண்டுபிடிச்ச?” என்று விஹானாவும் அவனை சூழ்ந்து விட்டாள்.

ஜோஷித் தான் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “யாரு கண்டுபிடிச்சா, ஒரு கெஸ்ஸிங்ல அடிச்சு விட்டான். கடைசில அதுவே உண்மையாகிடுச்சு…” என்றதில், ஸ்வரூப்பின் இதழ்களிலும் சிறு கசந்த புன்னகை.

“அடப்பாவிங்களா…” என மூவரும் வாயில் கை வைக்க, உத்ஷவி “இதுக்கு பேர் தான் கிவ் அண்ட் டேக் பாலிசியா?” என கேலியாய் புன்னகைக்க,

ஸ்வரூப்பும், “மேகனாவோட பின்னங்கழுத்தில நீ ஒரு அடையாளம் இருக்கும்னு சொன்னீல. அதே மாதிரி தான் விஹாவும் ராகேஷ் ஆபிஸில வர்றவனோட கழுத்துல இருக்குற அடையாளத்தை சொன்னா. அதை வச்சு லிங்க் பண்ணி பார்த்தப்ப, இவங்கல்லாம் ஏன் ஒரே கேங்கா இருக்கக் கூடாதுன்னு தோணுச்சு. நிகிலன் சொன்ன தகவல் எல்லாத்தையும் வச்சு பாக்கும் போது, கெஸ்ஸிங்ல அது பத்ரி தானான்னு கேட்டேன். ப்ரீத்தனும் ஒத்துக்கிட்டான். ஆளுங்களை வச்சு, விஜயவாடா முழுக்க விசாரிச்சுட்டு தான் இருக்கோம். இன்னும் பசங்களை பத்தின தகவல் வரல.” என்றவன் பின்னங்கழுத்தை தேய்த்துக் கொண்டான்.

“சரி அடுத்த மூவ் என்ன?” என உத்ஷவி யோசனையுடன் கேட்க,

ஜோஷித், “சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட போறோம். இந்த மருந்து வெளில வந்துடுச்சா. அப்படி வந்தா இதோட சைட் எஃபக்ட் எந்த அளவு எக்ஸ்டரீமா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணும். அண்ட், இறந்தவங்க பாடில இருந்து இந்த மருந்தை குடுத்து இருக்காங்களான்னு எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு தெரியணும். காடனோட பாடியையும் ராகேஷோட பாடியையும் திரும்ப போஸ்ட் மார்ட்டம் பண்ண சொல்லிருக்கோம்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சஜித் வேலையை முடித்துக்கொண்டு வந்து விட, அந்நேரம் அமுதனிடம் இருந்து ஸ்வரூப்பிற்கு போன் வந்தது.

அதை பேசி முடித்து விட்டு, உத்ஷவியை தீப்பார்வைப் பார்த்தவன், “அவன் ஆபிஸ்ல இருந்து என்னத்தடி திருடிட்டு வந்த?” எனக் கேட்க, உத்ஷவி திருதிருவென விழித்தாள்.

அத்தியாயம் 43

பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்துக் கொண்டவள், “ஒண்ணுமே திருடலையே.” என்று மறைக்க, அவள் கையை எடுத்து விட்டவன், சற்றுப் பொறுத்து, “நீயா வெளில எடுக்குறியா? இல்ல நானே எடுக்கட்டுமா?” என்று விஷமத்துடன் கேட்க, அவன் கையை தட்டி விட்டாள்.

“நீ திருட சொன்னா சரி. அதே நானா திருடுனா அது தப்பா?” என்று சண்டைக்கு நிற்க,

“நான் சொல்லலாம். நான் செஞ்சது க்ரைம கண்டுபிடிக்கிறதுக்காக.” என்றான் திமிருடன்.

“நானும் செய்யலாம். நான் செய்றது என் சந்தோஷத்துக்காக.” என அவளும் மல்லுக்கு நின்றாள்.

பற்களை நறநறவெனக் கடித்தவன், “திருடுனதை வெளில எடுடி முதல்ல.” என்று அதட்ட,

முகத்தைச் சுருக்கியபடி பேண்ட் பாக்கெட்டில் இருந்து கண்ணாடி போல இருக்கும் பேப்பர் வெய்ட், இன்னும் சில பொருட்களை எடுக்க, “என்ன பேங்க் லாக்கர் மாதிரி எடுக்க எடுக்க வந்துக்கிட்டே இருக்கு.” என சஜித் கிண்டலடித்தான்.

அதனைப் பிடுங்கி கார் டேஷ்போர்டில் போட்ட ஸ்வரூப் ஒன்றும் பேசாமல் காரை எடுக்க, “உன் உடன்பிறப்பு ஓவரா போறான்.” என்று சஜித்திடம் குமுறினாள்.

ஜோஷித்தோ, “உன்னை விடவா…” என வாரி விட்டு, “இப்ப போற இடத்துலயாவது கையை காலை வச்சுட்டு சும்மா வா தாயே.” என்றதில், உத்ஷவி நொடித்துக்கொண்டாள்.

விஹானா தான், முகம் வாடி இருந்தாள். அதனைக் கவனித்து விட்ட ஜோஷித், காரில் அவளருகிலேயே அமர்ந்து கொண்டு, “என்ன சீட்டர்… டீப் திங்கிங்.” எனக் கேட்டதில்,

அவள் கலங்கிய கண்களுடன், “என் தம்பிக்கு இந்த மருந்தைக் குடுத்து இருக்க மாட்டாங்க தான.” எனப் பரிதாகமாகக் கேட்க, ஸ்வரூப் சடன் பிரேக் அடித்து காரை நிறுத்தி விட்டான்.

ஜோஷித் திகைத்து, “ஏய் லூசு மாதிரி யோசிக்காத. அப்படி எதுவும் ஆகி இருக்காது. அவன் ஹெல்தியா தான இருக்கான்.” என்று மென்மையுடன் சமன்செய்ய, “எனக்கு ஒரு தடவை அவனைப் பார்க்கணும் ஜோஷ்.” என்றாள் கெஞ்சலாக.

“நாளைக்கு அவனைப் பார்க்க ஏற்பாடு பண்றேன் போதுமாடி.” எனத் தலை சாய்த்துக் கூறியதும் தான், அவள் முகம் சற்று தெளிவு பெற்றது. அதன் பிறகே அவள் மீதிருந்த பார்வையை அகற்றினான் ஜோஷித்.

இருந்தாலும், அப்படி எதுவும் மருந்து கொடுத்து இருப்பார்களோ என்ற அச்சம் ஆடவர்களுக்குள்ளும் பரவ, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அக்ஷிதாவோ வேறொரு யோசனையில் இருந்தாள்.

“ராகேஷ் தான் இந்த மருந்தை தயாரிக்கிறான்னே வச்சுக்கலாம். அப்போ அவனும் ஏன் நாய் மாதிரி மாறி செத்துப்போனான். அப்படி அவன் பிஹேவ் பண்ணுனதுக்கும் இந்த மருந்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?” எனக் கேட்க,

அதற்கும் யாரிடமும் பதில் இல்லை. சஜித், “அப்படி சம்பந்தம் இருக்குமா இல்லையான்னு விசாரிக்க தான் இப்போ போயிட்டு இருக்கோம் கேடி. நம்ம பார்க்க போற சைக்கியாட்ரிஸ்ட் ரொம்ப பிரபலம். அமெரிக்கா, சைனான்னு பல நாடுகள்ல ரிசர்ச் பண்ணி, நிறைய படிச்சு இருக்காரு. கண்டிப்பா அவர்கிட்ட நமக்கு தேவையான விடை கிடைக்கும்ன்னு நம்பலாம்.” என்றான் பெருமூச்சுடன்.

உத்ஷவி தான் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாகி விட்டாள். அமுதன் கம்பெனியில் இருந்த ஃபார்முலாவை ஏற்கனவே பல முறை திருட ராகேஷ் முயன்றிருக்கிறான். அது முடியாமல் தான் உத்ஷவியைத் திருட அனுப்பினான். அங்கிருந்த அத்தனைப் பாதுகாப்பு அரண்களையும் மீறி, திட்டமிட்டு, அழகாக திருடிக்கொண்டு வந்து விட்டாள்.

எப்போதும், இந்தத் திருட்டுத்தொழிலில் அவளுக்குக் குற்ற உணர்வு வந்ததே கிடையாது. இப்போது தோழியின் கண்ணீரைக் கண்டு முதன் முறை ஒரு வித குற்ற உணர்வு தாக்கியது. இதழ்களைக் கடித்து அந்த உணர்விலிருந்து விடுபட இயலாமல் நிமிர்ந்தவள், கண்ணாடி வழியே ஸ்வரூப் அவளை சலனமின்றி பார்ப்பது கண்டு அப்பார்வையை ஏறிட இயலாமல் கண்ணைத் திருப்பிக் கொண்டாள்.

அவன் வேறு, இருக்கும் குற்ற உணர்ச்சியை குத்திப் பேசி நோண்டி விடுவானே என்ற தவிப்பு அவளுக்கு.

ஆனால், அவன் விழிகளால் கூட அப்படி ஒரு பாவனையைக் கொடுக்காது, நேராக சைக்கியாட்ரிஸ்ட் ஜெயராமனின் வீட்டின் முன்பு காரை நிறுத்தினான். ஏற்கனவே அலைபேசி மூலம் அவரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி விட்டதில், அவரது பி. ஏ விக்னேஷ் அவர்களை உள்ளே அழைக்க, உத்ஷவி அவனைக் கண்டு ஒரு கணம் திகைத்தாள்.

வீட்டைப் பார்வையால் அளந்தாலும், உத்ஷவியின் முகமாற்றத்தையும் கண்டுகொண்ட ஸ்வரூப், கண்களாலேயே என்ன என வினவ, அவள் ஒன்றுமில்லை என மறுப்பாக தலையசைத்தாள்.

அதற்கு மேல் அவர்களை சிந்திக்க விடாமல், ஜெயராமன் அவர்களின் எண்ணங்களை ஆக்கிரமித்தார்.

“ஹெலோ யங்ஸ்டர்ஸ்… ப்ளீஸ் பீ சீட்டட்.” என தனது அலுவல் அறையில் சூழல் நாற்காலியில் அமர்ந்து கொண்ட ஜெயராமனுக்கு வயது 55 ஐ கடந்தது.

வெளிர் நிற சட்டையும் கருப்பு பேண்டுமாக அணிந்திருந்தவரின் உடல்வாகு பிட் ஆக இருக்க, அவரது பேச்சும் குரலும் இளைஞனைப் போல துள்ளலுடன் இருந்தது.

அவரிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட ஸ்வரூப் அவரிடம் விஷயத்தைக் கூறி அந்த பார்முலாவையும் காட்ட, அதனை யோசனையுடன் பார்த்தார் ஜெயராமன்.

“மிஸ்டர் ஸ்வரூப், இது பயம் அண்ட் டிப்ரெஷனை அதிகப்படுத்துற பார்முலா தான். ஆனா, இதை வச்சு மெடிசின் எதுவும் மார்க்கெட்டுக்கு வரல. அப்படியே வந்துருந்தா கூட, இது ஒன்னும் அந்த அளவு மனுஷனோட மனநிலையைக் கெடுக்காது.” என சப்பென முடித்து விட, “ம்ம்க்கும்” என விஹானா சலித்துக் கொண்டாள்.

“ஆர் யூ சியூர்?” என ஸ்வரூப் கேட்டதில், “எஸ் ஸ்வரூப். இதை வச்சு, லேடீஸ்க்கான ஹார்மோனல் இம்பேலன்ஸ்க்கான டேப்லட் கூட தயாரிக்கலாம். சிலருக்கு சைட் எபக்ட்டா ஆங்சைட்டி, மூட் சுவிங்ஸ் வர்றதில்லையா. அது போல தான் இதுவும். தட்ஸ் இட்.” என இயல்பாகக் கூற, ஆடவர்களுக்கு எங்காவது முட்டலாம் போல இருந்தது.

இதற்கிடையில், ஜெயராமனின் கூற்றில் பல்பு வாங்கியது போல உணர்ந்த உத்ஷவிக்கு, அவர் டேபிள் மீது வைத்திருந்த டிஷ்ஷியூ பாக்ஸ் கண்ணைக் கவர, கரங்கள் அதனை எடுக்கப் பரபரத்தது.

அவள் நைசாக கையை அங்கு கொண்டு செல்லும் போதே, ஸ்வரூப் அவள் கையைப் பிடித்து தனது கைக்குள் அடக்கிக்கொண்டான் இறுக்கமாக.

“கையை விடு…” அவன் காதினுள் கிசுகிசுக்க, திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்ததில் அவள் உர்ரென்று அமர்ந்திருந்தாள். சஜித்தும் ஜோஷித்தும் மேலும் சில கேள்வி கேட்டு ஜெயராமனிடம் பேசிக்கொண்டிருக்க,

அக்ஷிதா தான், “வந்த வேலை இவ்ளோ சீக்கிரம் முடியும்ன்னு நினைக்கல. இஃப் யூ டோன்ட் மைண்ட், இங்க ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு சார்” எனக் கேட்டாள்.

அனைவரும் அவளை முறைத்துப் பார்க்க, “ஹி ஹி… வரும் போது ஜுஸை நிறைய குடிச்சுட்டேன் போல” என நெளிந்தாள்.

இத்தனை கலவரத்தில் அவள் தான், பழச்சாறு வேண்டுமென அடம்பிடித்தது.

ஜெயராமன், “உள்ள லெப்ட் சைட் போனதும் ரெஸ்ட் ரூம் இருக்கும் டியர். யூ கேன் யூஸ் இட்.” என்று மென்மையுடன் பேச,

“இவரு எவ்ளோ கனிவா பேசுறாரு… இவனுங்களும் தான் இருக்கானுங்களே எப்ப பார்த்தாலும் வள்ளு வள்ளுன்னு விழுந்துகிட்டு…” என முணுமுணுத்தபடி, “டார்ல்ஸ் நீயும் வா…” என உத்ஷவியின் மற்றொரு கையைப் பற்றி இழுக்க, “எனக்கு வரலடி” எனக் கடுப்புடன் மறுத்தாள்.

“பரவாயில்ல துணைக்கு வா!” என்று அவள் இழுத்ததில், அக்ஷிதாவை முறைத்தபடி அவளது கைக்கு விடுதலை கொடுத்தான் ஸ்வரூப்.

“தலையெழுத்து…” என உத்ஷவி அவளுடன் சென்று விட்டு சில நொடிகளில் திரும்பி வந்தாள்.

அவர்கள் வந்ததும், ஜெயராமனிடம் இருந்து விடைபெற்று அவர்கள் கிளம்பி விட, அங்கு எதுவும் பேசாமல் நேராக காட்டேஜுக்கே சென்று விட்டனர்.

உள்ளே நுழைந்ததுமே, விஹானா, “இது என்னடா அந்த ஆளு சப்புன்னு முடிச்சுட்டாரு” என்று தலையில் கை வைக்க,

உத்ஷவி தான், “ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு ஏண்டி என்னை திருட அனுப்புனான் அந்த ராகேஷ். அதுவும் அந்த பார்முலாவை திருட எனக்கு நிறைய ‘பே’ பண்ணிருக்கான். அது மட்டுமில்ல அதை பத்திரப்படுத்த ப்ரீத்தனை சூஸ் பண்ணிருக்கான். பிகாஸ், ப்ரீத்தனோட வீட்டுக்குள்ள யாரும் நுழைய முடியாதுன்ற நம்பிக்கையில.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூற,

அக்ஷிதாவோ, “ஆனா அந்த டாக்டர் தான் இந்த பார்முலாவே ஒரு செல்லாக்காசுன்னு சொல்றாரே டார்ல்ஸ்” என்றாள் குழப்பமாக.

சஜித் யோசனையுடன் “அதுவே பொய்யா இருந்தா?” எனக் கேள்வி எழுப்ப, உத்ஷவி “இருக்கலாம் சஜி. ஒன்னு அந்த ஆளு சொன்னது பொய்யா இருக்கணும், இல்லன்னா இதோட சீரியஸ்னெஸ் தெரியாம இருக்கணும்” என உறுதியாகக் கூறினாள்.

ஜோஷித்தோ, “ஆனா மார்க்கெட்ல இந்த ட்ரக் வந்ததுக்கான அறிகுறியே இல்லையே ஷவி” எனக் குழம்ப, ஸ்வரூப் தான், “நம்ம இப்ப தேடுறது மார்க்கெட்க்கு வந்த ட்ரக்கை இல்ல ஜோ. இதை இல்லீகளா கூட யூஸ் பண்ணலாம்ல.” என்றவன், “ஆனா எனக்கு என்னவோ, இந்த ட்ரக்னால மட்டுமே வியர்டா பிஹேவ் பண்ணி செத்துப்போறாங்கன்றதுல நம்பிக்கை இல்ல. இன்னும் என்னவோ இருக்கு.” என்றான் சிந்தனையுடன்.

“எனக்கும் அதே சந்தேகம் தான் ஸ்வரூ” என உத்ஷவி ஆமோதிக்க, அக்ஷிதா “ஒருவேளை நாய் குணம் வர்ற மாதிரி ட்ரக் யூஸ் பண்ணிருப்பாங்களோ?” எனக் கேட்க, விஹானாவோ, “கடத்தப்பட்டவங்களோட உடம்புல சிப் இன்சர்ட் பண்ணிருந்தா கூட, அவங்களை கண்ட்ரோல் பண்ணலாமில்ல.” என்று தன் சந்தேகத்தை முன் வைத்தாள்.

சஜித், “ப்ச், ஆனா காடனோட உடம்புல எந்த சிப்புமே இல்லையே விஹா.” என்றதில், ஸ்வரூப், “எல்லாத்துக்கும் மேல இன்னொரு லாஜிக் பாயிண்ட் இருக்கு” என்று ஆரம்பித்தான்.

“நம்ம ஆர்கியூ படி, இந்த ட்ரக் பயத்தையும் டிப்ரஷனையும் உண்டு பண்ற ட்ரக்காவே இருக்கட்டும். அப்போ இதை யூஸ் பண்ணிருந்தா, காடனோட மெண்டல் ஹெல்த் பாதிக்கப்பட்டு இருக்கும் தான. அவன் டிப் டாப்பா மாறி தான் திரும்பி வந்தான். ஹொவ் இட் குட் பீ பாசிபிள்.” எனக் கேள்வி எழுப்ப,

உத்ஷவி “முதல்ல காடன் உண்மையாவே கோச்சுக்கிட்டு தான் போனான்னு ஏதாவது ஆதாரம் இருக்கா ஸ்வரூ. ஏன், அவன அந்த மாதிரி பொய் சொல்ல வச்சுருக்கக்கூடாது.” எனக் கேட்க,

ஜோஷித், “அவன் அங்க வேலை பார்த்ததுக்கான வீடியோ ஆதாரமே இருக்கு ஷவி” என்றதில், “ப்ச்…” எனப் பின்னந்தலையைக் கோதிக் கொண்டாள்.

ஸ்வரூப் தான், “ஒன்னுக்கொன்னு எல்லாமே முரணா இருக்கு. ஆனா என் இன்டியூஷன் எல்லாமே லிங்க்ல தான் இருக்குன்னு அடிச்சு சொல்லுது… முக்கால்வாசி கிணறை தாண்டிட்டோம். இந்த உண்மையும் வெளில வராமலா போய்ட போகுது. வரும்…!” என்றான் கண்ணில் தீவிரத்துடன்.

“எதுக்கும் இந்த சைக்கியாட்ரிஸ்ட் மேல ஒரு கண்ணு இருக்கட்டும் டைனோசர்.” என உத்ஷவி கூறியதும், “அந்த ஆளே, இன்னைக்கு நைட்டு யூஎஸ் கிளம்புறான்டி.” என்றான் தாடையை தடவியபடி.

அக்ஷிதாவோ, “எனக்கு என்னவோ இதெல்லாம் நான் முன்னாடி சொன்ன மாதிரி நோக்கு வர்மமா தான் இருக்கும் பாருங்க.” என்றதில்,

ஜோஷித் “இவ ஒருத்தி, நோக்கு வர்மம்ன்னா அப்போ காடன் எப்படி செத்துப்போனான். நிகிலன் அவனை நோக்கு வர்மம் பண்ணி, சாக வச்சானா?” எனக் கேட்டான் நக்கலாக.

ஸ்வரூப் தான், “ஏதோ ஒன்னு, ஆனா மனுஷங்களை எப்படியோ கண்ட்ரோல் பண்ண நினைக்கிறாங்க ஜோ. சிப் இல்ல, லேட்டஸ்ட் டெக்னாலஜி இல்ல, இந்த ட்ரக் கூட முழு காரணமில்லை. அப்போ எதை வச்சு கண்ட்ரோல் பண்ண முடியும்…” என்னும் போதே

விஹானா “அந்த நாய் கான்சப்ட்” என ஆரம்பிக்க, “ம்ம்ஹும் அதை விடு விஹா. நம்ம நாய் மாதிரி பிஹேவ் பண்றான்னு ஒரே பாத்ல யோசிக்கிறோம். ஆனா இப்ப யோசிச்சு பார்த்தா ராகேஷோட இறப்பு, அவனை மைண்ட்ல யாரோ கண்ட்ரோல் பண்ற பீல். ஆனா அது எப்படி? ஏன்?” என பெருமூச்சு விட்டான்.

உத்ஷவி சில நிமிட யோசனைக்குப் பிறகு, “ஸ்வரூ, இந்த சிப் கான்செப்ட், டெக்னாலஜி, ட்ரக் இதெல்லாம் இல்லாம கூட மனுஷங்களை கண்ட்ரோல் பண்ணலாம் அதுவும் தூரமா இருந்தும் கூட…” எனக் கூற, “வாட்?” எனப் புருவம் சுருக்கினான் ஸ்வரூப் அவ்தேஷ்.

அத்தியாயம் 44

உத்ஷவி பரபரப்புடன், “ஜெயராமன் வீட்ல, ரெஸ்ட்ரூம்க்கு ஆப்போசிட்ல ஒரு பெரிய லைப்ரரி செட் பண்ணிருக்கான் டைனோசர். அதை பார்த்துட்டு, அழகா இருக்கேன்னு உள்ள போனேன். உள்ள அவ்ளோ புக்ஸ். அதுல முக்கால்வாசி டிப்ரஷன், ஆங்சைட்டி பத்தின புக் தான்.”
என்றதும், ஜோஷித், “அவரு சைக்கியாட்ரிஸ்ட் ஷவி. அப்போ இந்த புக்கெல்லாம் இருக்கும் தான” என்று கேட்டதில்,

“அஃப்கோர்ஸ் ஜோ. ஆனா, அங்க வித்தியாசமா இருக்குற மாதிரி நான் ஒரு புக்கை பார்த்தேன்.” என்றவள், அவளது அலைபேசியில் அந்த நூலகத்தை புகைப்படம் எடுத்திருந்தாள்.

“ஹியூமன் மைண்ட்ஸ்! இட்ஸ் ட்ரிக்கி.” என்ற பெயர் கொண்ட புத்தகத்தின் முகப்புப் பக்கம் தெரிய, ஸ்வரூப் அதரம் மடக்கி அதனை ஆராய்ந்தான்.

“முதல்ல இதை நான் பெருசா எடுக்கல டைனோசர். இவள் வர்ற வரைக்கும், சும்மா ஓபன் பண்ணி பார்த்துட்டு இருந்தேன் அப்போ தான் ஒரு லைன் கண்ணுல பட்டுச்சு. ‘மனுஷங்களோட மைண்டையும் அவங்களோட குணநலனையும் இன்னொரு மனுஷன் ஆள முடியும். அதுக்கு முதல்ல, அந்த மனுஷன்கிட்ட இருக்குற ஒரிஜினாலிட்டியை, தனித்தன்மையை, யோசிக்கிற யுக்தியை சிதைக்கணும்ன்னு…’ படிக்கும் போது எதுவும் தோணல. ஆனா இப்ப நம்ம பேச பேச, அந்த வார்த்தை என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது ஸ்வரூ.” என்றாள் குழப்பமாக.

உடனடியாக சஜித் ஆன்லைனின் ஆராய, “ஆன்லைன்ல இந்த புக்கே இல்ல ஸ்வரா!” என்றான்.

“அப்போ லைப்ரரில தேடலாம்” என்ற ஸ்வரூப்புடன் அனைவரும் கிளம்பி நூலகத்தை அடைந்தனர். அங்கும் மூலை முடுக்கெல்லாம் அந்த புத்தகத்தை தேடி அலைய, நூலகத்தின் இன்சார்ஜரோ இப்படி ஒரு புத்தகம் நூலகத்திலேயே இல்லை என்றதில் அனைவரின் முகத்திலும் ஒரு அதிருப்தி.

“ஷிட்… அது இவ்ளோ யூனிக்கான புக்கா இருக்கும்னு நினைக்கல. தெரிஞ்சுருந்தா அதை அப்பவே ஆட்டைய போட்டுட்டு வந்துருப்பேன் டைனோசர்” எனப் பாவமாக உரைத்தவளின் கையைப் பற்றி சமன்செய்த ஸ்வரூப், “விடுடி. நைட்டு போய் ஆட்டைய போட்டுடலாம்.” என்றான் தோளைக் குலுக்கி.

அவனை ‘ஆ’ வெனப் பார்த்தவள், “வர வர உனக்கும் என் திருட்டுப் புத்தி ஷேர் ஆக ஆரம்பிச்சுடுச்சு டைனோசர்” என நமுட்டு நகை புரிய, “அது மட்டுமா ஷேர் ஆச்சு?” என விஷமத்துடன் பார்த்தான்.

அவள் புரியாமல் விழிக்க, விஹானா தான், “இதுக்கெல்லாம் ஒரு முடிவு தெரியணும்ன்னா, மேகனாவையும் பத்ரியையும் நம்ம பிடிச்சாகனும் ஸ்வரூ.” என்றிட,

“மேகனாவை பிடிச்சுடலாம். அல்மோஸ்ட் நெருங்கியாச்சு. பத்ரியும் நாளைக்குள்ள கிடைச்சுடுவான்” என்ற ஸ்வரூப்பின் அழுத்தக் கூற்றில்,

“அப்போ மேகனா எங்கன்னு தெரிஞ்சுடுச்சா ஸ்வரூ” உத்ஷவி வியப்புடன் கேட்டாள்.

“ஆல்மோஸ்ட்!” என அவன் மீண்டும் அதே பதிலை அளிக்க, ஜோஷித், “ஓரளவு கெஸ் இருக்கு ஷவி. கன்பார்ம் பண்ணிட்டு சொல்றோம்.” என்றதில், அக்ஷிதா “எங்ககூடவே தானடா இருக்கீங்க. எப்படா இதை பத்தி எல்லாம் டிஸ்கஸ் பண்ணி, கெஸ் பண்றீங்க” எனத் தலையை சொரிந்தாள்.

சஜித்தோ, “ம்ம் நீ கொட்டிக்க போற கேப்ல தான். அப்ப தான், நீ உலகம் மறந்து தட்டுல ஐக்கியம் ஆகிடுறியே” என வாரிட, “ஆமாமா அப்படியே நீங்களும் தினமும் கறியும் சோறுமா, பீசாவும் பர்கருமா போட்டு தள்ளுறீங்க பாருங்க. அந்த சப்பாத்தியை சாப்பிட்டு சாப்பிட்டு, நான் நாலு கிலோ இளைச்சுட்டேன்.” என்று மூக்கை உறிஞ்சிட, அங்கு மெல்லிய சிரிப்பலை எழுந்தது.

இதற்கிடையில், காடனின் உடலில், பயத்தைத் தூண்டுவதற்கான ட்ரக் கொடுக்கப்பட்டது உறுதியாக, மூன்று ஜோடிகளும் இன்னும் பரபரத்தனர்.

“ஜெயராமன் வீட்ல இருந்து அந்த புக்கை எடுத்துட்டு, நேரா விஜயவாடா போறோம். அங்க மேகனாவையும் பத்ரியையும் புடிச்சுடலாம்.” என்ற ஸ்வரூப்பின் கூற்றில், உத்ஷவி “சரி சரி… என்கிட்ட இருந்து எடுத்த என்னோட டூல்ஸ எல்லாம் திரும்பிக் குடு. திருடப்போறப்ப அது இல்லாம கஷ்டமா இருக்கு.” என்றாள் முகம் சுருக்கி.

ஜோஷித், ஒரு பையை அவளிடம் தூக்கிப்போட்டு, “இதுல நீங்க திருட வந்தப்ப உங்ககிட்ட இருந்து பறிமுதல் செஞ்ச எல்லா திங்ஸும் இருக்கு.” என்றிட, அவள் மீண்டும் அதனை ஸ்வரூப்பிடம் தூக்கிப் போட்டு, “இதை நீயே வச்சுரு டைனோசர். நான் கேக்கும் போது எடுத்துத் தரணும் ஓகே வா.” என்றாள் அதிகாரமாக.

ஸ்வரூப் மூக்கு விடைக்க முறைக்க, அதில் பவ்யமாக அந்த பையை வாங்கி ஜோஷித்திடம் கொடுத்தவள், “மர்டர் பண்ண போறப்ப, எங்களை அசிஸ்டன்ஸ்ட்டா கூட்டிட்டு போனீங்கள்ல, இப்ப திருடப்போறதுக்கு உங்களை அசிஸ்டண்டாக்குறது தப்பா ஜோ. உன் உடன்பிறப்போட ஃபயர் லுக்கை குறைக்க சொல்லு. அப்பறம் நான் நின்னு சைட் அடிச்சுட்டே இருப்பேன் சொல்லிட்டேன்.” என்று தோளில் தாடையை இடித்துக் கொண்டாள்.

“இது வேறயா?” என ஜோஷித் கடுப்படிக்க, ஸ்வரூப் தான், அவள் மீது ரசனைப்பார்வை வீசினான்.

அவள் சைட் அடிப்பதை சொல்லி விட்டே செய்ய, அவனோ சொல்லாமலேயே அவளை சைட் அடிக்கும் பணியை சிறப்புற செய்தான்.

“இங்கயும் சுவர் ஏறி குத்திக்கணுமா?” ஜெயராமன் வீட்டு வாசலில் நெஞ்சைப் பிடித்தபடி நின்றான் சஜித்.

“வேற வழி… அதான் நாங்களும் வர்றோமே. வா” என ஜோஷித்தும் தன்னை நொந்து காம்பவுண்ட் சுவரில் ஏறி குதிக்க,

“நம்மளாம் எங்க எப்படி இருக்குற ஆளுங்க…” என்று புலம்பியடியே சஜித்தும் குதித்தான்.

ஸ்வரூப்பிறகு கையில் க்ளவ்ஸ்சும் முகத்தில் மாஸ்குமாக பதுங்கி பதுங்கி வந்த உத்ஷவியைக் காண சிரிப்பு வந்ததோடு, இந்த அனுபவம் சுவாரஸ்யத்தையும் கொடுத்தது.

“அது என்ன நீங்க மூணு பேரு மட்டும் கை ரேகை தெரியாத மாதிரி, சிசிடிவில மூஞ்சி தெரியாத மாதிரி வர்றீங்க” எனக் கிளம்பும் போதே சஜித் கடியானான்.

அதற்கு விஹானா தான், “உங்களுக்கு என்னப்பா… நீங்க ராஜபரம்பரைன்னு எஸ்கிப் ஆகிடுவீங்க. மாட்டுறது நாங்க தான.” என்றாள் நாக்கைத் துருக்கி.

அதனை எண்ணி புன்னகைத்த ஜோஷித், மாஸ்க்கில் இருந்து வெளிப்பட பளிச்சென்ற விஹானாவின் விழிகளை அளந்தபடி அவளுடன் நடந்தான்.

சஜித்திற்கு வீட்டு வாசற்படியை நெருங்கும் போதே மனது படபடவென அடித்துக் கொண்டது. அதில் அவனது நடையின் வேகம் தடைபட, “சீக்கிரமா போயேண்டா…” என்று உத்ஷவி அவன் முதுகில் கையை வைத்து தள்ளினாள்.

“அடி பைத்தியமே! பூட்டி இருக்குற வீட்டுக்குள்ள எப்படி போறது?” என ஹஸ்கி குரலில் காய்ந்தான் சஜித் அவ்தேஷ்.

அவன் கேள்வியில் கடியான உத்ஷவி, “என்னை நீ ரொம்ப அசிங்கப்படுத்துற சஜி. திறந்து இருக்குற வீட்டுக்குள்ள போறதுக்கு தான் நான் யோசிப்பேன். பூட்டி இருக்குற வீட்டுக்குள்ள போறது எல்லாம் எனக்கு கை வந்த கலை.” என சட்டைக் காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்

பின், “ஜோ! என் டூல் பாக்ஸை எடு.” எனக் கையை நீட்ட,

“அசிஸ்டண்ட்டா வந்தவளுக்கு அசிஸ்டெண்ட் வேலை பாக்க வேண்டியதா இருக்கு…” என்ற முனகலுடன், அவள் கேட்டதைக் கொடுத்தான் ஜோஷித்.

அதனுள் கொத்துக் கொத்தாக சாவிகள் இருந்ததைக் கண்ட ஸ்வரூப்,

“நடமாடும் சாவிக்கடை நீ தான் விஷா. பூட்டிய வீட்டை திறக்கும் திருடிகள் சங்கம்ன்னு ஒரு குழு ஸ்டார்ட் பண்ணிடேன்.” எனத் தீவிரத்துடன் அவளைக் கிண்டலடித்தான்.

அதில் பக்கென சிரித்து விட்ட அக்ஷிதா, “கிரேட் இன்சல்ட்” என ஸ்வரூப்பிற்கு ஹைஃபை கொடுத்துக் கொள்ள,

விஹானா, “அடியே அவன் நம்மளையும் சேர்த்து தான் கலாய்க்கிறான்.” என்று அவள் முதுகில் குத்தினாள்.

அதற்கு ஸ்வரூப் நமுட்டு நகை புரிய, சஜித் தான் ‘இந்த அவமானம் தேவையா?’ என்பது போல பெண்களைப் பார்த்து நக்கலடித்தான்.

உத்ஷவியோ “நீ சிரிக்காதடா சஜி. எதிரி வீட்டுக்குள்ள போய் தம்மா துண்டு சிப்ப திருட முடியல. இதுல ராஜ பரம்பரைன்ற பீத்தல் வேற…” என அவனைக் கேவலமாக பார்த்து வைக்க, சஜித் கண்ணைச் சுருக்கி முறைத்ததில் இப்போது ஜோஷித் வாயைப் பொத்திக் கொண்டு நகைத்தான்.

கூடவே, உத்ஷவிக்கு ஹைஃபை கொடுத்துக் கொள்ள, சஜித் அவனது தோள்களில் அடித்து, “அவ உன்னையும் சேர்த்து தான்டா அசிங்கப்படுத்துறா பரதேசி.” என்றான் பல்லைக்கடித்து.

“பங்கம்…” எனப் பெண்கள் மூவரும் ஜோஷித்தைக் கண்டு சிரிக்க, ஸ்வரூப் தலையில் அடித்துக் கொண்டான்.

“நம்ம வேணும்ன்னா ஒரு ஓரமா உட்காந்து ஆற அமர பேசி முடிச்சுட்டு பூட்ட உடைப்போமா?” என மற்றவர்களைக் கடிந்து விட்டு, “சீக்கிரம் திறடி” என்றான் அதட்டலாக.

“ம்க்கும்… என் கூட சேர்ந்து செய்றது திருட்டு வேலை. இதுல ஐயாவுக்கு கோபம் வேற வருது…” என இதழ்களை சுளித்துக் கொண்டவளை, காட்டமாகப் பார்த்தான்.

—-

இன்னும் சிரித்துக் கொண்டிருந்த அக்ஷிதாவைக் கடுமையாக ஏறிட்ட சஜித், அவளை ஓரக்கண்ணில் அளவிட்டபடி,

“ம்ஹும்… இந்த வேலை முடிஞ்சு போகும் போது, உனக்கு சாண்ட்விச் வாங்கி தரலாம்ன்னு நினைச்சு இருந்தேன். சிரிம்மா. நீ சிரி. நல்லா சத்தமா சிரி.” என்றதும், கப்பென வாயை மூடிக் கொண்டாள்.

“ஹே… சஜூ கண்ணா… நான் உன்ன பார்த்து சிரிக்கலடா. இந்த ஜோவை பார்த்து தான் சிரிச்சேன். அவன் தான் வொர்ஸ்ட் பாய். நீ அப்படி இல்ல. என்ன திருட தான் வராது. பரவாயில்ல… இனிமே உனக்கு ஸ்வரூ ஏதாவது வேலை குடுத்தா, அதை நானே உனக்காக செஞ்சு தரேன்.” என தேனின் இனிமையுடன் அவனைச் சுரண்டினாள்.

அதனைத் தள்ளி விட்டு, “ஐஸ் வைக்காதடி கேடி.” என முறுக்கிக் கொண்டவனின் கையைப் பற்றியவள், அவன் விரல்களில் மெல்ல சொடுக்கெடுத்து விட்டு,

“நான் உன் பெஸ்ட் பிரண்டுன்னு நீ தான சொன்ன சஜூ. உன் அண்ணன்காரன் வெறும் காய்ஞ்சு போன ரொட்டியா வாங்கி கொடுத்து கொல்றான்டா. பிளீஸ்ஸ்ஸ்…” எனக் கொஞ்சலுடன் அவனைக் கரைத்தாள்.

ஏற்கனவே அவளது உள்ளங்கையின் சூடு, அவனை நிலைகுலைய வைக்க, கொஞ்ச கொஞ்சமாய் அவளிடம் மயங்கிக் கிடந்த உள்ளம் இப்போது மொத்தமாக வீழத் தொடங்கியது.

——

விஹானா கையில் வைத்திருந்த டார்ச்சின் வெளிச்சம் குறையத் தொடங்க, “ஜோஷ்… உன் போன்ல டார்ச் அடி” என்றாள்.

“என் போன் கார்ல இருக்குடி.” என்றவனிடம், “ஓ… சரி அப்போ உன் லைட்டர் எடு.” என அணைய எத்தனித்த டார்ச்சை உலுக்கினாள்.

அவனோ அசையாமல் நிற்க, “என்னடா சிலை மாதிரி நிக்கிற. லைட்டர எடு.” என்றபடி நிமிர்ந்தாள்.

“நான் லைட்டர் யூஸ் பண்றது இல்ல” என பாக்கெட்டினுள் கை வைத்தபடி பார்வையை வேறு புறம் திருப்பினான்.

விஹானாவோ விழிகளை விரித்து, “அப்போ எப்படி சிகரட்டை பத்த வைப்ப? தலைவர் மாதிரி தீக்குச்சியை உரசுனாலே தீக்கங்கு வரும்ன்னு நம்பிட்டு இருக்கியா?” என்றாள் நக்கல் சிரிப்புடன்.

அதுவரை அவளைப் பாராமல் எங்கெங்கோ அலைந்த அவனது கருவிழிகள், இப்போது அவளின் பளிங்கு முகத்தில் நிலைகொள்ள,

“நான் சிகரட் குடிக்கிறதை நிறுத்திட்டேன். உனக்கு பிடிக்கலைல.” அமைதியாக வெளிவந்த வார்த்தைகள், விஹானாவைத் திகைக்க வைத்தது.

அதிர்ந்த விழிகள் ஜோஷித்தைத் தாக்க, அவனது நேச விழிகள் அவளை ஊடுருவிச் சென்றது.

—-

பூட்டையும் கையில் வைத்திருந்த சாவிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்த உத்ஷவியைப் பின்னால் நின்று உரசியபடி அவளது அசைவுகளைக் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான் ஸ்வரூப்.

ஸ்வரூப்பின் மேனி தந்த வெப்பம் அப்போது தான் உறைத்தது பெண்ணவளுக்கு.

“இத்தனை சாவியையும் போட்டு பார்த்து எப்போ டி கதவை திறக்கிறது?” என அவன் பெருமூச்சுடன் கூற, அது அவளது பின்னங்கழுத்தைப் பதமாகச் சுட்டது.

சட்டென செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தியவள், அவன் புறம் திரும்பாமலேயே, “கொஞ்சம் பின்னாடி தள்ளி நில்லு ஸ்வரூ.” எனக் கண்டிப்புடன் கூறினாள்.

அவனோ அவளது கூற்று புரியாமல், “ஏண்டி, ஓடி வந்து கதவை உடைக்க போறியா?” எனக் கேட்டு மெலிதாய் நகைக்க, அவளுள் பலவித இரசாயனங்கள் ஒன்றாய் உருவெடுத்து, அவஸ்தையைத் தந்தது.

சில நொடிகள் கழித்து அது அவனுக்கும் புரிந்து விட, கள்ளப் புன்னகை வீசியவன், அவளுக்கு இரு புறமும் கரத்தை வைத்து அவளை அணை கட்டிக்கொண்டான்.

“என்ன பண்ற டைனோசர்?” என அவள் பதற,

“யாரும் அட்டாக் பண்ண வந்துடக் கூடாதுன்னு உன்னை சுத்தி இரும்பு வளையமா என் கையை யூஸ் பண்ணிட்டு இருக்கேன் விஷா!” என்றவனின் குரலில் என்றுமில்லா உருகும் தன்மை அவளையும் உருக்கியது.

“அப்படி யாரும் வர மாட்டாங்க. நீ முதல்ல கையை எடு” என்றவள் நெளிந்தாள்.

பாவையின் தவிப்பு, அவனை மீண்டும் சீண்ட வைத்தது.

திமிரையும் திருட்டுத் தனத்தையும் பதுக்கி வைத்திருக்கும் அவ்வழகு முகத்தில், வெட்க ரேகைகளைக் காண, அவனது ஒவ்வொரு அணுவும் துடித்திட, அவளுள் தன்னை முழுதாய் தொலைத்திருந்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

முதலும் முடிவும் நீ
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
97
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. Meenakshi Subburaman

      Dai ithu yena da vidathu karuphu mathiri continue aakiten iruku ,,Ada pongada neenka kandu pidikurathukulla ennaku muchu motuthu super da Vaani kutty 😘😘😘👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻