Loading

அத்தியாயம் 23

“ஷார்ப் ஐஸா?” அக்ஷிதா உத்ஷவியின் கூற்றில் விழித்து விட்டு, “இப்ப ஏன் நீ அவனை ஐஸ் வைக்கிற. அதான் எப்படியும் விட மாட்டான்னு தெரிஞ்சு போச்சுல…” என்றாள் நக்கலாக.

சஜித்தோ, “இதை அண்ணி கேட்டு இருக்கணும்…!” என முணுமுணுக்க, அது ஸ்வரூப்பிற்கும் கேட்டதில், நொடியில் அவள் மீதிருந்த ரசனைப் பார்வையை மாற்றி இருந்தான்.

உத்ஷவி தான் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், ஆடவனின் முகத்தைக் கண்ணெடுக்காமல் பார்த்தபடி இருக்க, ஸ்வரூப் “எதுக்கு இப்படி பாக்குற?” என்றான் முறைப்பாக.

“இல்ல… நீ உண்மையாவே ஹாண்ட்ஸமா தான் இருக்கியா? இல்ல என் கண்ணுக்கு மட்டும் தான் அப்படி தெரியுறியான்னு பாக்குறேன்.” என யோசனையுடன் கூற, அக்ஷிதா, “அடியேய்… அவன் வச்சு இருக்குற கூலிங் க்ளாஸ் வேணும்ன்னா, நேரடியாவே கேட்டு வாங்கிக்க. அதை விட்டுட்டு, அவனை சைட் அடிச்சு நாயை ஏவி விட வச்சுடாத.” என மிரண்டாள்.

உத்ஷவி அவளை முறைக்க, சஜித் உத்ஷவியை ஒரு மார்க்கமாகப் பார்த்து விட்டு, “அவனுக்கு எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சு” என்றான்.

அதனை சட்டை செய்யாதவள், “இது எனக்கு தேவையில்லாத தகவல். அவனுக்கு என்கேஜ்மென்ட் ஆனா என்ன? கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு இருந்தா எனக்கு என்ன. கூட சுத்துற வரை சைட் அடிக்க வேண்டியது தான்.” என சஜித்தை திகைக்க வைத்தவள்,

“யூ நோ ஸ்வரூப், இப்போ எல்லாம் நான் கவிதை யோசிக்கிறேன்னா பாத்துக்கோயேன். நான் மட்டும் கவிதாயினி ஆனேன்னா அதுக்கு முழு காரணமும் நீ மட்டும் தான்.” என்றவளுக்கு, ஸ்வரூப் கடுப்பாவதைப் பார்த்து ஆனந்தமாக இருந்தது.

‘நான் சைட் அடிக்க கூட ஒர்த் இல்லையா… மவனே… உன்னை திருப்பி என்னை சைட் அடிக்க வைக்கிறேன் இரு…’ என சபதம் எடுத்துக் கொண்டவள் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டே அவனைக் கிண்டலடித்தாள்.

அக்ஷிதாவிற்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை தான். “நீ கவிதாயினி ஆக மட்டும் அவன் காரணமா இருக்க மட்டான்டி. ஜெயில்ல கைதியாகவும் அவன் தான் காரணமா இருக்க போறான்.” எனக் கலாய்க்க, அத்தனை நேரமும் குறும்புக் கூத்தாடிய முகம் நிச்சலனமாய் மாறியது.

“நீ எனக்கு ப்ரெண்டா அவனுக்கு ப்ரெண்டாடி…” என சிறு முறுவலுடன் கேட்ட உத்ஷவி, சட்டெனப் பார்வையை வீடியோவில் திருப்பி, பேச்சை மாற்றினாள்.

ஏனோ பாவையின் பார்வை, ஸ்வரூப்பின் இரும்பு இதயத்தை உருக்கும் உணர்வு எழ, வலுக்கட்டாயமாக அவனும் கவனத்தை வீடியோவில் திசை திருப்பினான்.

மீண்டும் மீண்டும் அந்த ஒளிப்பதிவை பார்த்தும் கூட, சரியாக அங்கே என்ன தான் நடக்கிறது என்று கணிக்க இயலவில்லை.

“இவங்க சம்பந்தப்பட்ட வேற வீடியோ க்ளிப்பிங்ஸ் ஏதாவது கிடைக்குதான்னு பாரு” என்று தம்பியிடம் கூறிட, உத்ஷவி சிந்தனையுடன், நீல சட்டைக்காரனை ரீவைண்ட் செய்து ஜூம் செய்து பார்த்தாள்.

“ஃபேஸ் ஓரளவு தான் க்ளியரா இருக்குன்னாலும், இவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு எனக்கு…” எனப் புருவம் சுருக்கினாள்.

ஸ்வரூப் தீவிரத்துடன், “எங்க பார்த்து இருக்க?” எனக் கேட்டதும், “அதான் ஞாபகம் வரல டைனோசர். ஆனா, பார்த்த மாதிரியே இருக்கு.” என்றாள் குழம்பி.

சஜித், “திருடப் போன இடத்துல பார்த்து இருப்பியோ?” என்று சந்தேகமாகக் கேட்க,

“அப்படி இருக்கலாம் வாய்ப்பு இல்லை. நான் திருடப் போறதே நைட்ல தான். யார் வீட்ல திருடி இருக்கேன்னு கூட எனக்குத் தெரியாது.” என யோசனையில் மிதந்ததில்,

ஸ்வரூப், “ராகேஷோட ஆபிஸ்ல பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கா விஷா?” எனக் கேட்டு நெற்றியை நீவினான்.

அவளோ மேலும் இரு நிமிடம் யோசித்து விட்டு, “ப்ச்… இல்ல. எனக்கு சுத்தமா ஞாபகமே வரல. மே பி ராகேஷ் ஆபிஸ்ல பார்த்து இருக்கலாம். பட் நாட் சியூர்.” என்றதும்,

அக்ஷிதா “அப்போ விஹாகிட்ட கேட்கலாமே. ராகேஷ் ஆபிஸ்லன்னா அவள் பார்த்து இருக்கலாம்ல” என்றதும், “குட் பாயிண்ட்.” என வேகமாக எழுந்தாள்.

நால்வரும் ஜோஷித்தின் அறைக்குச் செல்ல, ஸ்வரூப் வெளிப்புறத்தில் இருந்து சாவி கொண்டு திறந்ததைக் கண்டதும் உத்ஷவி எகிறினாள்.

“எதுக்குடா வெளில பூட்டி இருக்க?” எனக் காட்டமாகக் கேட்க,

அதற்கு பதில் கூறாதவனாய், உள்ளே சென்றான்.

அங்கு சோஃபாவில் விஹானா கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க, ஜோஷித் பற்ற வைக்காத சிகரெட் ஒன்றை வாயில் வைத்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

அவளது நிலையைக் கண்டதும் உத்ஷவி, “ஏன் டார்ல்ஸ் இப்படி உட்கார்ந்து இருக்க? என்ன செஞ்சான் இவன்.” என்று பதற்றம் கொண்டவள், “நீ ஏண்டா பூட்டிட்டு வந்த?” என்று ஸ்வரூப்பிடம் சண்டைக்கு சென்றாள்.

“ஏய் பைத்தியம் மாதிரி பேசாத. உன்னையவே நான் ரூம்ல வச்சு பூட்டிட்டு தான் போனேன். அதுவே தெரியல உனக்கு.” என்று முகத்தைச் சுருக்கியவன், ஜோஷித்திடம் “ஃபீலிங் பெட்டர்?” எனக் கேட்டான்.

“ம்ம்” என அவன் தலையாட்டிட, உத்ஷவி கொந்தளித்தாள்.

“டேய்… இங்க ஒருத்தி காட்டு கத்தா கத்திட்டு இருக்கேன். நீ நலம் விசாரிச்சுட்டு இருக்க. எதுக்குடா பூட்டிட்டு போன?” என்று முறைக்க, ‘எத்தனை ‘டா’ போடுறா பாரு…’ என சினம் சூழ அவன் அனலாய் தகித்தான்.

ஜோஷித் தான், “இன்னொரு தடவை ‘டா’ போட்ட, என் கையில இறங்குன கத்தியை உன் தொண்டைக்குழில இறக்கிடுவேன்.” என்று அழுத்தத்துடன் எச்சரித்தான்.

“எங்க இறக்கி பாருடா. டால்டா.” என்று அவனிடம் எகிற, விஹானாவோ, “ஐயோ டார்ல்ஸ், நீ ஏன் இப்ப வம்பு பண்ணிட்டு இருக்க. இவன் ஒண்ணும் செய்யல. நான் ராகேஷ் ஆபிஸ்ல நடந்ததை தான் யோசிச்சுட்டு இருந்தேன். எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டு இருந்தேன்.” என்று சமன் செய்தாள்.

“அதுக்கு எதுக்கு பூட்டிட்டு போகணும்?” உத்ஷவி மேலும் ஸ்வரூப்பை முறைக்க, சஜித்தோ “அட கடவுளே! ஒரு சேஃப்டிக்கு தான் பூட்டிட்டு போனோம். சட்டுனு யாரும் உள்ள வந்துடக் கூடாதுல” என்று எரிச்சல் பட்டான்.

“கதவை உடைச்சுட்டு உள்ள வர முடியாதாக்கும்…” பல்லைக்கடித்து உத்ஷவி முணுமுணுக்க, ஸ்வரூப் அப்போது தான் வாயைத் திறந்தான்.

“கதவை உடைச்சுட்டு உள்ள வர்ற டைம்ல, அவங்களை எப்படி எதிர்க்கிறதுன்னு யோசிக்கலாம்ல.” என்று அவள் வாயை அடைத்திட, அக்ஷிதா தான், “அய்யய்ய… ஏன் இப்படி ரெண்டு பேரும் சும்மா சும்மா ஆர்க்யூ பண்ணிக்கிட்டே இருக்கீங்க.” எனக் காதை குடைந்தாள்.

ஸ்வரூப் உத்ஷவி மீதிருந்த அனல் பார்வையை மாற்றாமல், நடந்ததை ஜோஷித்திடமும் விஹானாவிடமும் கூறி, சிசிடிவி ஃபுட்ஏஜை காட்ட, அவர்களும் குழம்பினர். விஹானாவும் அவனை யாரெனத் தெரியாது என்று விட,

“இதென்ன நம்ம ஒரு வழில போனா, இந்த பிரச்சனை நம்மளை வேற வழில திருப்பி விட்டுக்கிட்டே இருக்கு.” என்று ஜோஷித் எரிச்சலுற்றான்.

சஜித்தும் அதனை ஆமோதித்து “அதே தான்! ஏற்கனவே, ஊர்ல பசங்க காணாம போறாங்கன்ற பிரச்சனையைப் பத்தி விசாரிக்க சென்னைக்கு வரணும்ன்னு பிளான் பண்ணுனோம். அந்த நேரத்துல, ப்ரீத்தன் செஞ்ச குளறுபடினால, அவன்கிட்ட இருந்த டாக்குமெண்ட்ஸை எடுத்து, பிரச்சனை ஆச்சு.

சரியா அதே நேரம், நம்ம அப்பாக்களையும் யாரோ அட்டாக் பண்ணி, படுத்த படுக்கையாக்கிட்டாங்க. அவங்களைக் கொலை செய்ய வந்த அடியாலும் சென்னையில இருந்து வந்ததா சொன்னதும், மறுபடியும் நம்ம பிளான் படி, சென்னைக்கு வந்து காணாமப் போன பசங்களை பத்தியும், நடந்த அட்டாக் பத்தியும் விசாரிச்சுட்டு இருந்தோம்.

அதை முழுசா முடிக்கிறதுக்கு முன்னாடியே, இதோ இந்த அரை லூசுங்க, வீட்டுக்குள்ளப் புகுந்து திருட வந்து, டிராக்க மாத்திடுச்சுங்க. இடைல ராகேஷ் செத்தான். நம்ம கண்ணு முன்னாடி கலெக்டராகி, சந்தோஷமா ஊரை விட்டுப் போன நாகவல்லி காணாமப் போய்ட்டா. அவளைத் தேடி எல்லா ஏற்பாடு செஞ்சாலும் பதில் என்னவோ பூஜ்ஜியம் தான்.

சரின்னு ராகேஷோட பேக் கிரவுண்ட் விசாரிக்கும் போது கிடைச்ச தகவல் படி, அவனோட ரைட் ஹேண்ட் ஒருத்தனைப் பிடிச்சு ஹோட்டல்ல சுட்டு தள்ளுனோம். சென்னைல எந்தத் தடயமும் கிடைக்காததுனால, மறுபடியும் சித்தூர்க்குப் பக்கத்துல இருக்குற இந்த மலைக்கிராமத்துக்கு வந்து பசங்கக் காணாமப் போறதைத் தடுக்க நினைச்சா, மறுபடியும் ஒரு அட்டாக்! மறுபடியும் டிராக் மாறிடுச்சு!

சரின்னு சிசிடிவி ஃபுட்ஏஜ் பார்த்தா, இப்போ எல்லாக் கோட்டையும் அழிச்சுட்டு முதல்ல இருந்துத் தேடுங்கடான்னு எவனோ நம்மகிட்டயே சாலஞ்ச் பண்ற ஃபீல்…” என மூச்சு விடாமல் நடந்த ஒவ்வொன்றையும் பேசி முடித்துக் கோபத்தில் உள்ளங்கையை இறுக்கி மூடிக் கொண்டான்.

மடமடவென பேசிய சஜித்தைப் பார்த்து அக்ஷிதாவிற்கு மூச்சு வாங்கிட, டேபிள் மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் முன் நீட்டியவள், “மூச்சு விட்டுட்டு பேசு காட்ஸில்லா. நீ பேசுறதைக் கேட்டா எனக்கே தலை சுத்துது.” என்றவளுக்கு சற்று பாவமாகக் கூட இருந்தது.

விஹானா தான், “பேசாம போலீஸ்கிட்ட ஹெல்ப் கேட்கலாமே. நீ சொல்றதெல்லாம் பார்த்தா, இந்த பிரச்சனை அனுமான் வால் மாதிரி நீண்டுகிட்டே போகும் போல.” எனக் கவலை கொள்ள,

ஜோஷித், “போலிஸ் பொலிடீஷியன்னு எல்லாரும் இதுல இன்வால்வ் ஆகி தான் இருக்காங்க. ஆனா, எங்களுக்கு எதிரா! எப்படியாவது அவ்தேஷ வம்சத்தோட இத்தனை வருஷ ராஜ்ஜியத்தையும் அழிக்கணும்ன்னு ஒவ்வொருத்தனும் கங்கணம் கட்டிக்கிட்டு அலையிறானுங்க. யாரையும் நம்பி எதையும் சொல்லக்கூட முடியல. அப்படிப்பட்ட பிரச்சனை போயிட்டு இருக்கு.

இதுவே தொடர்ந்தா, சித்தூரும் அதைச் சுத்தி இருக்குற மலைகளும் கிராமங்களும் இயற்கை வளங்களும், அரசுக்கு சொந்தமாகும். ஆனா, அரசுக்கு சொந்தமாகக் கூட விடாம, இடையில இருக்குற கார்ப்பரேட்ஸ் அடிமாட்டு விலைக்கு எல்லாத்தையும் வாங்கி, ஒட்டு மொத்தமா அழிச்சுடுவாங்க. அட்லீஸ்ட் கடத்துறதுக்கான ‘மோட்டிவ்’ என்னன்னு தெரிஞ்சாக் கூட கொஞ்சம் ஈஸியா இருக்கும். ஆனா, எப்ப இந்தப் பிரச்சனை ஆரம்பிச்சுதோ அப்போ இருந்த வெறும் டெட் எண்டு தான்.” என்றான் சோர்வாக.

இவற்றை எல்லாம் கேட்டு சலித்த உத்ஷவி, “ப்ச்… இப்ப உங்க பிரச்சனை என்ன? காணாம போனவங்களைக் கண்டுபிடிச்சு, உங்கப் பதவியை யாருக்கும் குடுக்காம தக்க வச்சுக்கணும். மக்களையும் உங்களுக்குக் கீழ, உங்களோட கண் பார்வையில ஆளனும். அதான? என அசட்டையாகக் கேட்டாள்.

மறுநொடி அவளது கழுத்தைப் பிடித்தான் ஸ்வரூப் அவ்தேஷ். அவனது முகத்தில் ஆத்திரம் தாண்டவமாடியது.

அவர்களது பணியில் என்றுமே சொந்த விருப்பு வெறுப்பை இணைத்துக் கொண்டது இல்லையே. இப்போதும் துடித்துக் கொண்டு இந்தப் பிரச்னையை சரி செய்ய முயல்வது, தனது முன்னோர்கள் விட்டுச் சென்ற இயற்கையையும் மக்களையும் சுற்றி இருக்கும் பண முதலைகள் அழித்து விடுவார்களே என்ற பதற்றம் தான். பதவியும் செல்வாக்கும் தான் வேண்டுமென எண்ணி இருந்தால், இன்னும் எவ்வளவோ சொத்துக்களைச் சேர்த்து, மாளிகையில் சொகுசாக வாழ்ந்திருக்க இயலும்.

இப்போதும், தங்களுக்கென ஒரு வியாபாரத்தை உருவாக்கி, அதில் உழைத்தே முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் ஆடவர்கள். அப்பேர்பட்ட தங்களது குடும்ப நடைமுறைகளை பற்றி இந்தத் திருட்டுப்பெண்ணிற்கு சொன்னால் கூடப் புரியாது தானே…!

புரிய வைக்கவும் அவன் விரும்பவில்லை. “விடுடா…” என அவன் முறுக்கேறிய புஜங்களை அடித்து, அவனிடம் இருந்து விடுபட முயன்ற உத்ஷவி மூச்சுக்காகப் போராடும் போது தான், ஸ்வரூப் கையை எடுத்தான்.

அதில் அவள் ‘லொக்கு லொக்கு’ என இருமி, “என்னைக் கொல்ல பாக்குறியாடா டைனோசர்…” என்று அப்போதும் அவனிடம் சண்டைக்கே சென்றாள்.

திடீரென ஏற்பட நிகழ்வில் பெண்கள் இருவரும் அரண்டு, உத்ஷவியை ஆசுவாசமாக்க, ஜோஷித்தும் சஜித்தும் ‘அவளுக்கு இது தேவை தான்’ என்பது போல அசட்டையாகப் பார்த்திருந்தனர்.

விஹானா வேகமாக ஸ்வரூப்பைத் திட்ட வர, அவன் பார்த்தப் பார்வையில், தனது கழுத்தை மறைத்துக் கொண்டு, “பொறுமை கடலினும் பெரிது…” என்று தத்துவம் கூறி, சமத்தாக ஓரமாக நின்று கொண்டாள்.

அவளது பாவனையில் ஜோஷித்திற்கு அவனை மீறி மென்முறுவல் பூத்தது.

அத்தியாயம் 24

ஸ்வரூப்பும் உத்ஷவியும் ஒருவரை ஒருவர் முரைத்துக் கொண்டிருக்கும் போதே, சஜித்திற்கு நாகவல்லி பற்றிய தகவல் ஒன்று கிடைத்திட, “கைஸ்… நாகாவோட மொபைல் போன் கிடைச்சு இருக்கு. அதுவும் சித்தூர்க்குள்ள” என்றதும்,

ஸ்வரூப் “வாட்? அவள் ஏன் வேலையை விட்டுட்டு இங்க வரணும். அவள் மொபைல் கிடைச்ச இடத்தை பார்க்கலாம். மே பி அங்க இருந்து கடத்தி இருக்கலாம்.” என்றான் யோசனையாக.

ஜோஷித், “அவள் கடைசியா ஹேண்டில் பண்ணுன கேஸ் என்னன்னு தெரிஞ்சுதா?” எனத் தமையனைப் பார்க்க, அவன் எப்போதும் போல பார்வையை அவன் புறம் திருப்பாமல், “குறிப்பிட்டு சொல்ற அளவு கேஸ் எதுவும் பெருசு இல்ல. மிரட்டல் கால்ஸ், சந்தேகத்துக்குட்படுற மாதிரி அவளோட கேஸ்ல எதுவுமே இல்லை. அப்படி இருக்கும் போது, ஏன் கடத்தப்பட்டான்னு கூட தெரியல.” எனப் பெருமூச்சு விட்டான்.

சஜித் தான் ஆதரவாக, “ஏதாவது ஒரு க்ளூ கண்டிப்பா கிடைக்கும் ஸ்வரா” என்றதும்,

“ம்ம்ஹும்… க்ளூ கண்டிப்பா நம்மள சுத்தி தான் இருக்கும். அதை நம்ம கண்டுபிடிக்கணும். அப்போ தான், இதை எல்லாத்தையும் தடுத்து நிறுத்த முடியும்.” என்ற ஸ்வரூப், நடந்து முடிந்த அனைத்தையும் மீண்டும் ரீவைண்ட் செய்து பார்த்தான்.

மூன்று ஆடவர்களின் குழப்ப முகத்தையும் கண்ட விஹானாவிற்கும் அக்ஷிதாவிற்கும் உதவி செய்யத் தான் மனம் உந்தியது.

ஆனால், திருட்டுத்தனமாய் யோசித்தே பழக்கப்பட்ட மூளையை, திடீரென இன்வெஸ்டிகேஷனில் இறங்கச் சொன்னால் அதுவும் என்ன தான் செய்யும்?

அக்ஷிதா தான், “உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி என் அடி மனசு பிராண்டுது. ஆனா, திடீர்ன்னு போலீஸ் மாதிரி யோசிக்க சொன்னா, மீ என்ன செய்வேன்.” என உதட்டைப் பிதுக்கி, சஜித்தின் குழப்ப முகத்தைக் கனிவாய் மாற்றினாள்.

விஹானாவோ, “நானும் ராகேஷ் சம்பந்தப்பட்ட எல்லாத்தையுமே ஜோஷ்கிட்ட சொல்லிட்டேன். அதுல உங்களுக்கு யூஸ்ஃபுல்லா ஏதாவது இருக்குமான்னு பார்த்துக்கோங்க.” என்றவள், “மறுபடியும் கூட சொல்றேன். அவன்கிட்ட 5 வருஷமா பி. ஏ வா வேலை பார்த்தேன். பேருக்கு மட்டும் தான் நான் பி. ஏ. மத்தபடி, என்கிட்ட எதையுமே சொல்ல மாட்டான். திடீர்ன்னு ஏதாவது டாக்குமெண்ட் ரெடி பண்ண சொல்லுவான். கிளையண்ட் மீட்டிங்ஸ் அரேஞ்ச் பண்ண சொல்லுவான். அவனோட மெய்ன் பிசினஸ், இம்போர்ட் எக்ஸ்போர்ட் தான். அதுல நிறய களவாணித்தனம் பண்ணிருக்கான். அவன் சொன்ன படி, நானும் ஃபேக் டாக்குமெண்ட் ரெடி பண்ணிக் குடுத்து இருக்கேன்.
ஆனால் அதுல எனக்கு எதுவும் பெருசா ஞாபகம் கூட இல்ல.” என்றாள் பரிதாபமாக.

ஸ்வரூப் அவளை ஆராய்ந்தபடி, “ஐஞ்சு வருஷத்துல ஒரு தடவை கூட நீ அவன்கிட்ட எதிர்த்து பேசுனதோ, காரணம் கேட்டதோ இல்லையா? எனக் கூர்ப்பார்வையுடன் கேட்டதில், “ஏன் கேட்டது இல்லை? என் வாய்லாம் சும்மா இருக்குமா. அதெல்லாம் நிறைய தடவை இடக்கா பேசி இருக்கேன்.” என்றாள் துடுக்காக.

“அவன் பதில் சொல்லிருக்கானா?” ஜோஷித் புருவம் நெறித்துக் கேட்டதில்,

“ஓ! சொல்லிருக்கானே! சப்புன்னு ஒன்னு குடுப்பான்” எனக் கன்னத்தில் கை வைத்தவள், “அதோட, என் வாய்க்கு பூட்டு போட்டுட்டு கிளம்பிடுவேன். நமக்கு எதுக்கு ஊர் வம்புன்னு இனிமே அடி வாங்க கூடாதுன்னு சபதம் எடுத்துக்கிட்டாலும் என் வாய் அந்த சபதத்தை கரெக்ட்டா பாலோ பண்ணாது ஜோஷ். அதனால, ஒரு கன்னத்துல அறைஞ்சா அடுத்த தடவை மறு கன்னத்தையும் காட்டுறேன்னு நானே வாலண்டரியா பன்ச் வாங்கிப்பேன்.” என்றவளோ நமுட்டு நகையுடன் கூறிட, அடுத்தக் கேள்வி கேட்க வந்த ஜோஷித் திகைத்து அவளையே பார்த்தான்.

உத்ஷவியும் அக்ஷிதாவும் அதே திகைப்புடன் நிற்க, “அடிச்சா… நீயும் திருப்பி அடிக்க வேண்டியது தான?” எனக் கோபமாகக் கேட்டாள் உத்ஷவி.

விஹானாவோ, “நீ என்ன என்னை ப்ரூஸ்லீன்னு நினைச்சுட்டு இருக்கியா. அவன் பாடி பில்டர் மாதிரி இருப்பான். அவனை அடிச்சு, என் கையை உடைச்சுக்க, எனக்கு என்ன பைத்தியமா. நான் ஜென் நிலைக்கு போய் ரொம்ப வருஷமாகுது.” என்றவளின் முகத்தில் அசட்டுப் புன்னகை மட்டும் மாறவில்லை. அப்புன்னகைக்குப் பின்னால், பல வேதனைகள் இருக்கலாம். அதெல்லாம் மரத்தும் போய் இருக்கலாம்.

சஜித்தும் அவளைப் பாவமாகப் பார்த்திருக்க, ஸ்வரூப் தான் தொண்டையைக் கணைத்துக் கொண்டு, “அப்படி அடி வாங்கிட்டு அவன்கிட்ட ஏன் வேலை பார்த்த? அதுவும்… எம்.பி. ஏ படிச்சுட்டு.” என்றதும், அக்ஷிதா “எம். பி. ஏ வா… அடி விஹா. நீ அவ்ளோ பெரிய படிப்ஸா” என விழி விரித்துக் கேட்டாள்.

“படிப்பு சோறு போடுமா என்ன? அட போ டார்லிங். என் அப்பா இருக்காரே ராகேஷோட ரைட் ஹேண்ட். அவன் சாக சொன்னாக் கூட கிணத்துல குதிச்சு செத்துருவாரு. எங்க அம்மா ஒரு நாளு பாத்ரூம்ல வழுக்கி விழுந்து கிடந்தப்ப கூட மனுஷன் அந்த ராகேஷ் டாக் கூப்பிட்டுச்சு ஓடியே போய்ட்டாரு. பலமா அடி பட்டதுல என் அம்மா கொஞ்ச நாள்ல உடம்பு சரி இல்லாம இருந்து செத்தே போய்ட்டாங்க.

சரி, இதோடவாவது அவரோடக் கிறுக்குத்தனம் நிற்கும்ன்னு பார்த்தா, என் தம்பியையும் ராகேஷோட கூட்டாளியா மாத்த பிளான் போட, அவர் கூட சண்டை போட்டுட்டு, என் தம்பிய ஹாஸ்டல்ல சேர்த்துட்டேன். ஆனா, அதுக்கு அப்பறம் தான் தலைவலியே ஆரம்பிச்சுது.

என்னைப் பெத்த பைத்தியம், ராகேஷ் செஞ்ச பெரிய தப்பை ஒன்னை மறைக்கிறதுக்காக போலீஸ்கிட்ட ஆஜராகி, அவரை என்கவுண்டர் பண்ணவும் அவரே ஒத்துக்கிட்டு, அவனுக்கு பதிலா இவரு உயிர்த்தியாகம் பண்ணிக்கிட்டாரு. சரி எங்கயோ போய் செத்துத் தொலைஞ்சாலும் பரவாயில்லை, போறதுக்கு முன்னாடி, ‘இனிமே என் இடத்துல என் பொண்ணு இருப்பா’ன்னு ஒரு பெரிய இடியைத் தூக்கி என் தலைல போட்டுட்டு போய்ட்டாரு. அப்பறம், அவன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆக முடியாம, நான் அங்கேயே செட்டில் ஆகிட்டேன்.” எனக் குடும்ப வரலாறை கதை போல கூறியவளைக் கண்டு அங்கிருந்த அனைவருக்கும் மனதில் பாரம் ஏறியது.

கூடவே, அவளது தகப்பனின் மீது கொலைவெறியே எழுந்தது ஜோஷித்திற்கு. “அதான் உன் அப்பனே போய் சேர்ந்துட்டானே அப்பறமும் ஏன் அங்க இருந்த? எப்படியாவது வெளில வந்துருக்க வேண்டியது தான?” எனக் கேட்டவனுக்கு ஆற்றாமை தாளவில்லை.

“வந்துருக்கலாம்… வந்து மட்டும் என்ன செய்ய? என்ன தான் அடிச்சாலும் என் அப்பா மேல இருக்குற மதிப்புனால, எனக்கு பணத்துல குறை இல்லாம பார்த்துக்குவான்.” என்றதும் அவனுக்கு சுளீரென கோபம் வந்தது.

“பணத்துக்காக என்ன வேணாலும் செய்வியா?” எனப் பல்லைக்கடிக்க,

“செய்வேன்” என பட்டெனப் பதிலளித்தவள், “என் தம்பிக்கு ப்ளட் கான்சர். ராகேஷ் தான், அவனை ஹாஸ்பிடல்ல சேர்த்து எல்லா செலவும் பார்த்துக்குறான். இப்ப, அவன் போனதை நினைச்சு சந்தோசப்படவா… இல்ல, என் வேலை போய்டுச்சேன்னு வருத்தப்படவான்னு தெரியல…” என்றாள் உர்ரென.

அதில் மேலும் அதிர்ந்தவர்கள் பதில் கூறத் தெரியாமல் நிற்க, அக்ஷிதா பதறி “என்ன டார்ல்ஸ் சொல்ற? இப்போ தம்பி எங்க இருக்கான்.” என விசாரித்தாள்.

ஸ்வரூப் தான் ஏதோ யோசனையுடன், “எனக்கு ஏதோ நெருடலா இருக்கே விஹானா. எல்லாத் திருட்டுத்தனமும் செய்ற அந்த ராகேஷ் ஏன் உன் தம்பிக்கு இவ்ளோ செய்யணும்? பணம் செலவு செய்ய, இந்த மாதிரி ஆட்கள் ரொம்பவே யோசிப்பாங்க” என்றான் பளிச்சென.

உத்ஷவியும் வேகமாக, “எனக்கும் இதே டவுட் தான் ஸ்வரூப். நான் பார்த்தது வரை, அந்த ராகேஷ் பக்கா சுயநலவாதி. வேலை முடியிற வர, ஒத்த பைசா கூட தரமாட்டான். அப்டி இருக்குறவனுக்கு, அவனுக்காக யார் செத்தாலும் கவலையோ கடமையோ இருக்காது தான?” எனக் கேள்வியாய் வினவ,

அவளை மெச்சுதலாய் பார்த்தவன், “எக்ஸ்சாக்ட்லி.” என இத்தனை நேரம் நிகழ்ந்த வாக்குவாதங்களை மறந்து ஆமோதிக்க, விஹானா, “எதுக்காக இருந்தா என்ன? இதை ஆராய்ச்சி செய்யலாம் எனக்கு தோணல.” எனத் தோளைக் குலுக்கினாள்.

அக்ஷிதா தான், “சரி இனிமே அவன் இல்லைன்னா என்ன டார்ல்ஸ்… நம்ம பிக்பாக்கெட் அடிச்சு, தம்பியை சரி பண்ணிடலாம்” என்று யோசனை கொடுக்க, சஜித் அவளை முறைத்தான்.

“உன் பிக்பாக்கெட் புத்தி உன்னை விட்டு போகுதா பாரு.” என்று கடிந்து கொள்ள, பின், மீண்டும் துப்புத் துலக்கும் பொருட்டு ஆறு பேருமே கிளம்பினர்.

ஜோஷித்திற்கு அதற்கு மேலும் ஓய்வெடுக்க மனம் வரவில்லை. ஏனோ, அவளது குறும்பின் பின் இருக்கும் வலிதனை அறிந்தபின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தள்ளாடியது.

உத்ஷவியும் அவளது நிலை புரியாமல் கோபம் கொண்டதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு வேண்ட, “ஹே டார்லிங். நீ சீரியஸா பேசுற அளவுலாம் அவ்ளோ சீன் இல்ல. இன்னொரு தடவை எங்களை விட்டுட்டு போகணும்ன்னு மட்டும் நினைக்காத ப்ளீஸ்” எனக் கண்ணை சுருக்கிக் கெஞ்சலாகக் கேட்டாள்.

பெருமூச்சு விட்ட உத்ஷவி, “உங்க ரெண்டு பேரோட ப்ரெண்ட்ஷிப்பும் பெரிய இம்சையா தான் இருக்கு. இருந்தாலும் இனிமே நம்ம ஒன்னாவே இருக்கலாம்.” எனத்தலை சரித்துக் குறும்புடன் கூறியவளுக்கு, இவர்களுக்காகவாவது தங்களை கொலை செய்பவனையும், இப்பிரச்சனைகளை களையும் வேகமும் அதிகரித்தது.

அதனால், முழுமனதுடன் ஆடவர்களுக்கு உதவி புரிய முன்வந்தாள்.

ஆறு பேரும் இப்போது ஒரே காரிலேயே பயணித்ததில் அக்ஷிதா “என்னடா மூணு பேரும் ராசி ஆகிட்டீங்களா. ஒரே கார்ல வர்றீங்க” எனக் கலாய்க்க,

உத்ஷவியும் அதனைக் கண்டு கொண்டு, “பெட்ரோல் செலவு அதிகமாகி இருக்கும் டார்ல்ஸ்” என்றாள் நக்கலாக.

அதற்கு ஆடவர்கள் பதில் கூறாமல், அமைதி காக்க, ஸ்வரூப் தான் “மூடிக்கிட்டு வர்றியா?” என முறைத்தான்.

அனைவரும் நாகவல்லியின் அலைபேசி கிடைத்த இடத்திற்கு வந்து விட, அதுவோ மக்கள் புழக்கம் அதிகமாக இருக்கும் பஜார் போன்று இருந்தது.

இவர்களைப் பார்த்ததும் ஒருவன் ஓடி வந்து, அலைபேசியை நீட்டி விட்டு, “இந்த போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி நாலு நாள் ஆகுது சார்.” என்றிட,

“இதுல கடைசியா அவ எங்க எங்க போனான்ற லொகேஷனை ஃபைண்ட் அவுட் பண்ணுங்க.” என்று உத்தரவிட்டான் ஸ்வரூப்.

“சியூர் சார். நீங்க வர்றதுக்காக தான் வெயிட்டிங். போன் லாக்ல இருக்கு. சீக்கிரமே போன்ல இருக்குற டீடெய்ல்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு சொல்றேன்” என்று அவன் கிளம்பி விட, ஜோஷித் “இங்க இவ்ளோ கிரௌட்ல அவளை எப்படி கடத்தி இருக்க முடியும்?” எனக் குழப்பத்துடன் கேட்டான்.

ஸ்வரூப், “இங்க இருக்குற சிசிடிவி எல்லாத்தையும் செக் பண்ண சொல்லியாச்சா” என சஜித்தைப் பார்க்க, “எல்லாமே செக் பண்ணியாச்சு ஸ்வரா. நாலு நாளைக்கு முன்னாடி வரை பார்த்தாச்சு ஆனா, அதுல நாகவல்லி இங்க வந்ததுக்கான அறிகுறியே இல்லை.” என்றான்.

விஹானா தான், “ஒருவேளை போனை மட்டும் யாராவது திருடிட்டு வந்து இருப்பாங்களோ” எனக் கேள்வி கேட்க, அக்ஷிதாவோ, “அப்படி திருடுனா கூட, அதை காசா மாத்த தானடி ட்ரை பண்ணுவாங்க. ஏன் ஒரு மூலைல போட்டுட்டு போகணும்?” என்றாள் அறிவாளியாக.

“அது கரெக்ட்டு தான்.” என விஹானா ஒப்புக்கொள்ள, உத்ஷவி இதழ் கடித்து சிந்தித்து விட்டு, “நாலு நாளைக்கு முன்னாடி இருக்குற வீடியோஸ் பார்த்தாச்சா சஜித். ஐ மீன் ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்து பார்த்தாச்சா?” எனக் கேட்க, அவன் மறுப்பாக தலையாட்டினான்.

“அப்போ அதுல செக் பண்ண சொல்லு. ஒருவேளை அந்த பொண்ணைக் கடத்தும் போது, போன் இங்க மிஸ் ஆகி இருக்கலாம். சார்ஜ் போடாம இருந்து நாலு நாளைக்கு முன்னாடி கூட ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கலாம்ல” என்றதும்,

ஸ்வரூப், “வேலிட் பாயிண்ட் விஷா. ஆனா, சரியா அவள் காணாம போய்ட்டான்னு சொல்ற நாளைக்கு முந்தின நாள் நான் அவ கூட அவளோட நம்பர்ல பேசுனேனே. அப்பறம் எப்படி ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே போன் இங்க இருக்கும் சொல்லு.” என்றான் தலையைச் சாய்த்து.

“எந்த பக்கம் போனாலும் கேட்டு போட்டா எப்படி?” என்னும் போதே, ஸ்வரூப்பிற்கு அலைபேசி அழைப்பு வர அதில் கூறப்பட்ட செய்தியில் இன்னும் குழம்பியது அக்கூட்டம்.

“இந்த போன்ல எந்த டேட்டாவும் இல்லையாம். எல்லாமே டெலிட் ஆகி இருக்குன்னு சொல்றாங்க.” என நொந்து போன ஸ்வரூப், ஏதோ தோன்ற அவசரமாக காரினுள் சென்று மடிக்கணினியை ஆன் செய்தான்.

மீண்டும் ஆடவர்கள் கடத்தப்பட்ட வீடியோக்களை பார்த்தவனின் விழியில் சிறு மின்னல் வெட்டியது.

அவனையும் மடிக்கணினியையும் மாறி மாறி பார்த்த உத்ஷவி, “இப்போ ஏன் கண்ணுல லைட்டு விடுற?” எனக் கிண்டலாகக் கேட்க, லேப்டாப்பை அவளிடம் கொடுத்தவன், “இந்த அத்தனை வீடியோலையும் ஒரு ஒற்றுமை இருக்கு என்னன்னு சொல்லு பார்க்கலாம்?” என்றான் ஆராயும் பார்வையுடன்.

“ஒற்றுமையா?” என விழித்து ஐவரும் மடிக்கணினியைப் பார்க்க, அக்ஷிதா சலித்தபடி “என்ன ஒற்றுமை… எல்லாரும் மளிகை சாமான் தான் வாங்குறானுங்க…” என்று சாவகாசமாகக் கூறிட, உத்ஷவி அவளைத் தட்டிக்கொடுத்து “எஸ், அது தான் ஒற்றுமை.” என்று ஸ்வரூப்பைப் பார்த்தாள்.

ஜோஷித்தும் சஜித்தும் தான், அதனை ஆமோதித்து, “எல்லாமே நம்ம அண்ணாச்சி கடைல தான் திங்க்ஸ் வாங்குறானுங்க. அப்போ அவரை பிடிச்சா ஒரு ஐடியா கிடைக்கலாம்” என்றனர்.

“வெய்ட்… வெய்ட்… அது மட்டும் ஒற்றுமை இல்ல. அந்த ஃபுட்ஏஜோட டைமிங்கை பாருங்க. முதல் நாள், அங்க பொருள் வாங்குறவங்க அடுத்த நாள் கடத்தப்படுறாங்க.” என்றிட,

அப்போது தான் அனைவரும் அதனைக் கவனித்தனர்.

உத்ஷவி வெகு தீவிரத்துடன், “ஆனாலும் இது வெறும் கெஸ் தான் டைனோசர். ஒண்ணுப் பண்ணலாம். நீ போய் இன்னைக்கு அந்தக் கடைல திங்க்ஸ் வாங்கு. நாளைக்கு காணாமப் போறியான்னு பார்க்கலாம்” என்று அனைத்துப் பல்லையும் காட்டிட,

அவளை மேலும் கீழுமாகப் பார்த்தவன், “குட் ஐடியா. வா சேர்ந்தே போய் வாங்கலாம்” என அவளைத் தர தரவென இழுத்துச் செல்ல, அவளோ ஸ்தம்பித்து, பின் அவனுடன் செல்லாமல் முரண்டு பிடித்தாள்.

முதலும் முடிவும் நீ…
மேகா

போட்டிக்கு 60 ud podanum athunala ore ud ya pirichu renda poduren drs. Please adjust Karo ❤️ nethu night edit panna mudiyama kanna katiduchu😃 mudincha alavu uds seekiram.poda try panrrn thank you soooo much all for ur lovely comments and suport konjam free agitu elarukum reply panrrn drs… ❤️❤️❤️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
85
+1
2
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. Indhu Mathy

      சூப்பர் கோயிங் 🤩🤩🤩🤩🤩🤩🤩
      ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிளாஷ்பேக்…. விஹா pavam… 😔
      ப்ரீத்தன் தானா இவங்களை இப்படி சுத்தல்ல விடுறது…. 🤔