Loading

அகரநதி தன் மடிக்கணினியை எடுத்து தீராநதி என்றக் கடவுச் சொல்லை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்துவிட்டு அவளவனை பார்த்தாள்

 

“நதி என்ன தேடிட்டு இருக்க? முதலில் லாப்டாப்பை க்ளோஸ் பண்ணு இப்போ அதுகெல்லாம்க் டைமே இல்லை” துரிதப்படுத்தினான் தீரேந்திரன்

“இல்லை தீரா அன்னைக்கி பேய் வேசம் போட்டு போனப்ப எனக்கு புதுசா சில தகவல்கள் கிடைச்சுது, அதுல இருக்குறது எதாவது மலரை கண்டுபிடிக்க உதவும்ல” என சொல்லிய படி அவள் கணினியில் மூழ்கி போனாள்.

“நதி இப்போ அதுக்கெல்லாம் டைம் இல்லை, நம்ம கோவாவுக்கு உடனே கிளம்பணும், வித் அவுட் எனி டிலே” என சொன்னான் தீரேந்திரன். அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருந்தான்.

“அதி, ஆமா சொல்றதை புரிஞ்சுக்கோ எல்லாத்தையும் தீரா பார்த்துப்பாரு நம்ம முதலில் கிளம்புவோம்” என கார்த்திக்கும் துரிதபடுத்திக்கொண்டிருந்த பொழுது,

“சபாஷ் தீரேந்திரன், என்னையவே ஏமாத்திட்டல்ல” எனச் சொன்ன படி வீட்டினுள் நுழைந்திருந்தார் அமைச்சர் செந்தமிழன். அவரின் பார்வையில் கோபம் குடிகொண்டிருந்தது. தீரேந்திரனை முறைத்த போது அவர் சற்று பதற்றமாக செந்தமிழனை பார்த்த நொடியில் திக் என்று ஆனது கார்த்திக்கு.

விழிகள் சிவக்க முறைத்துக்கொண்டிருந்த தீரேந்திரன், “கார்த்திக் நதியை கூட்டிட்டு முன்னாடி போங்க, நான் வந்திடுறேன், இந்தாங்க ஃப்ளைட் டிக்கெட்ஸ்” என தீரா நீட்ட பயந்தபடி வாங்கிக்கொண்டான் கார்த்தி.

“என்னை தாண்டி எல்லாரும் போயிருவீங்களா.? என்னோட பொருளை கொடுத்திட்டு எங்கே வேண்டும்னாலும் போங்க” என உரக்க கத்தியபடி கேட்டார் செந்தமிழன்.

“செந்தமிழன் அதெல்லாம் கொடுக்க முடியாது, நீங்க கிளம்பலாம்” என தீரேந்திரன் எதிர்த்து பேசியது செந்தமிழனுக்குள் எரிச்சலை மூட்டியது.

“கார்த்திக்கை அதுக்காக தான் வெளிய எடுத்தேன், கார்த்திக் எங்கே வச்சிருக்க என் பொருளை”

“அது சேர வேண்டிய இடத்துல சேர்ந்திருச்சு செந்தமிழன், உங்களோட பதவியை பயன்படுத்தி என்ன வேணும்னாலும் செய்யலாம்ன்னு நினைக்காதீங்க, இத்தனை நாள் நீங்க செஞ்சதுக்கெல்லாம் சேர்த்து தண்டனை அனுபவிக்க தயாரா இருங்க மிஸ்டர் செந்தமிழன்” என சொன்ன தீரா,

“நதி, கார்த்தி கிளம்புங்க, ம்மா நாங்க போயிட்டு வர்றோம்” என சொல்லி அவன் நகர முற்பட,

“எனக்கு தெரியும் தீரேந்திரன் இதெல்லாம் நடக்கும்னு, அரசியல்ன்ற சாக்கடையில் முழுசா ஊறி போன என்கிட்டையே உன் வேலையை காட்டிட்டல, இந்த பதவிக்காக சொந்த பெயரை மாத்தி, ஊரை மாத்தி, எல்லாத்தையும் இழந்து இந்த அரசியல்ல என் பேரை நிக்க வைக்கிறதுக்கு படாத பாடு பட்டு வந்து நின்னால், எதிர்ல உன்னை மாதிரி போலீஸ்காரனுக நேர்மையை தூக்கிட்டு வந்திடுறீங்க, ஒன்னு புரிஞ்சுக்கோ போலீஸூ என்னைக்கும் எங்களுக்கு கீழ தான் நீங்க, நாங்க சொல்லுற வேலையை செய்யுற கைக்கூலி தான் நீ” என திமிராய் பேசியவனை பார்த்து கோபம் எழுந்தது தீரேந்திரனுக்கு.

“நீ நடத்துறது அரசியலா.? பொண்ணுங்களை கடத்துறதும், போதை மருந்தை புழக்கத்தில் விடுறதும் நல்ல அரசியல்வாதி செய்யுற செயலா.? உன்னோட சுய லாபத்துக்காக தான உன் பேரை மாத்தின, உன் சொந்த பேரையும், சொந்த ஊரையும் மக்களுக்கு தெரியபடுத்தி ஓட்டு வாங்க துப்பில்லாதவன், உன் பேரை சொன்னால் தான் மக்களுக்கு தெரிஞ்சிருமே, நீ எவ்வளவு பெரிய ஃப்ராடுன்னு, நான் சொல்லவா உன் பேரு, அரசியல் வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தன்னு சொல்லவா.?”

“வார்த்தை தடிக்குது தீரேந்திரன்”

“நீ செய்யுற செயலுக்கு துணை போறதுக்கு நான் என்ன உன் பொண்டாட்டியா.? இல்லை உன் சின்ன வீடு சரளாவா.?”

“தீரேந்திரன் சரளாவ பத்தி ஏன் பேசுற.? உண்மைய சொல்லு என் சரளாவ நீ தான கொண்ண.?”

“நான் எதுக்கு கொல்லணும், அவங்க செஞ்ச தப்பே அவங்களை கொண்ணுருச்சு” என சொல்லிய தீரேந்திரனை பார்த்தவர்.

“நீ எங்கே வேணும்னாலும் போ தீரேந்திரன், ஆனா கார்த்தியும் அகரநதியும் என்னோட கஸ்டெடியில் தான் இருப்பாங்க எனக்கு தேவையானது வர வரைக்கும்” எனச் சொன்னவர் அவருடைய அடியாட்களை வீட்டிற்குள் வரவழைத்திருந்தார். அகரநதியோ ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள்.

“தீரேந்திரன் நீங்க மலரை எப்படியாவது காப்பாத்தி கூட்டிட்டு வாங்க, இங்கே நான் பார்த்துக்குறேன்” என கார்த்திக் சொல்ல,

“இல்லை கார்த்தி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதை முடிச்சிட்டு போயிடலாம்” எனச் சொன்ன தீரேந்திரன்.

“உனக்கு வேண்டியது உயிரோட வேணும்னா.? எங்க வழியில குறுக்க நிக்காதே என தீரேந்திரன் சொன்ன கணப்பொழுதில் அனைவரின் விழிகளும் அதிர்ச்சியில் உறைந்து போனது.

“என்ன பார்க்கிற செந்தமிழன் இப்போ நான் போறதை தடுத்திட்டா மலரை வேற இடத்துல கை மாத்திரலாம்ன்னு சொல்லி அனுப்பினாங்களா.? உன் கணக்கு தப்பு செந்தமிழன், கோவா போலீஸ்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சு, நான் போகலைனாலும் அங்க வேலை நடக்கும்” என மிரட்டல் தொனியில் சொன்னவனின் இதழ் இகழ்ச்சியாய் வளைந்தது.

தீரேந்திரனை முறைத்து பார்த்த செந்தமிழன் “என்னோட உயிருக்கு எதாவது ஆச்சு, உன் உயிர் உனக்கு கிடைக்காது” என அகரநதியை தன்பக்கம் இழுத்து அவளின் கழுத்தை நெறிக்க முற்பட்ட போது.தன்னவளை தன்புறம் இழுத்தவன்,

“உன் பையன்கிட்ட சொன்னதை தான் உன்கிட்டையும் சொல்றேன். ஷீ இஸ் மை கேர்ள்” என எச்சரிக்கையாய் பேசிக் கொண்டிருந்தவனின் கைவளைவில் இதமாய் இளைப்பாறியவள் மனதில் பட்டாம்பூச்சியாய் படபடத்தது காதல்.

************************

தீராவின் வீட்டிலிருந்து எதுவும் செய்ய இயலாமல் கிளம்பிய செந்தமிழனுக்கு ஏசி அறையிலும் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது, அந்தச் சமயம் பார்த்து அவரின் உதவியாளர் ஈஸ்வரன் அங்கே வந்தான்.

“டேய் ஈஸூ என்னடா வேலை பார்த்திட்டு இருக்க?” கோபமாய் அவனைப் பார்த்து முறைத்தபடி கேட்டார்.

“ஐயா சமையல்காரம்மா காய்கறி வாங்கிட்டு வரச்சொன்னாங்க, அதான் வாங்கிட்டு வந்தேன்” எனப் பம்மியபடி பேசினான் ஈஸ்வரன்.

“ஆமாடா இப்போ சோறு தான் ரொம்ப முக்கியம், உன்கிட்ட என்னடா சொல்லிட்டு போனேன்.? நீ என்ன வேலைடா புடிங்கிட்டு இருக்க.?” தீரேந்திரன் மீது காட்ட முடியாத கோபத்தை ஈஸ்வரன் மீது காட்டிக் கொண்டிருந்தார் செந்தமிழன்.

“அய்யா அது வந்து..?”

“என்னடா ஈஸூ வந்து போயினுட்டு, நாளைக்குக் கட்சி மீட்டிங் இருக்கு மேடையில பேசுறதுக்குப் புள்ளிவிவரம் கேட்டேனே ரெடி பண்ணியா.?”

“இதோ ரெடி பண்ணிருவேன் ஐயா”

“நான் சொன்னதைச் செய்யாமல், பொம்பளைக்கு வேலை பார்த்து கொடுத்திட்டு இருக்கியா.? எவ்வளவு பெரிய வேலையை உன் கிட்ட ஒப்படைச்சிருக்கேன்” எனச் சொன்னவர் சோபாவில் இருந்து எழுந்து ஈஸ்வரனை ஓங்கி அறைந்திருந்தார். வலது கரத்தை கன்னத்தில் தாங்கி பிடித்து நின்றிருந்த ஈஸ்வரன்.

“என்ன ஈஷூ நினைச்சிட்டு இருக்க.? நானே ராத்திரியெல்லாம் கண்ணு முழிச்சு நோட்ஸ் எடுத்து அதைப் போய் மீட்டிங்ல பேசுவேன்னு நினைச்சிட்டு இருக்கியா? அப்பறம் எதுக்குடா அசிஸ்டண்ட்டுன்னு நீ இருக்க.? கேனப்பயலே, அந்தத் தீரேந்திரன் தான் தொழில் செய்ய விடாம கொடைச்சல் கொடுக்குறான்னா, நீங்களும் கூட இருந்து ஏன்டா தாலியை அறுக்குறீங்க, எந்தக் கேனப்பயலாவது காசு வாங்கிட்டு ஓட்டை போடுற முட்டாள் சனங்களுக்காகக் கண்ணு முழிச்சு நோட்ஸ் எடுப்பானாடா.?”

“மாமா எங்க அக்கா இல்லைனா இந்த அரசியல்குள்ள நீங்க கால் வச்சிருக்கவே முடியாது, எங்க அக்கா லேடிஸ் தொகுதில நின்னு ஜெயிச்சுச்சு , அது தான் வேணும்னு நீங்க தான் கல்யாணம் பண்ணீங்க, கல்யாணத்துக்கு அப்பறம் தானே தெரிஞ்சுச்சு நீங்க கள்ள நோட்டு அடிச்சு ஜெயிலுக்குப் போயிட்டு வந்துவங்கன்னு, கள்ள நோட்டு மணின்ற பேரை மறைக்கத் தானே செந்தமிழன்னு பேரை மாத்திக்கிட்டிங்க, உங்க அரசியல் லாபத்துகாக எங்க அக்காவ கொன்னு அனுதாபத்து காட்சில சேர்ந்து, அனுதாப ஓட்டு வாங்கி ஜெயிச்சவாங்க தானே நீங்க.?” எனப் பேசியவன் செந்தமிழனை முறைத்தபடி நின்றான்.

“உங்க அக்காவை கட்டிட்டா நான் உனக்கு மாமா ஆயிருவேனாடா.? ஐயான்னு கூப்பிடுன்னு ஆயிரம் தடவ சொல்லிருக்கேன், அடேய் ஈஷூ உங்க அக்காவ கொன்னது தெரிஞ்சும் நீ தானேடா என்னை ஒண்டி பொழைச்சிட்டு இருக்க.? எதுக்காக அண்ணேன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்னு காத்திகிட்டு இருக்க.? இதெல்லாம் தெரியாமல் தான் நான் இருப்பேனாடா போடா போயி மீட்டிங்ல பேச ஸ்ப்பீச்சை எழுதிட்டு வாடா, அந்த ஸ்பீச்சு நெருப்பா இருக்கணும், பேசுற ஒவ்வொரு வார்த்தையிலையும் அனல் பறக்கணும், சிஎம் என்ன கூப்பிட்டு நீ தான் டா அடுத்தச் சிஎம்ன்னு சொல்லணும் அப்படி இருக்கணும் ஸ்கிரிப்பட்டு” என அவர் சொல்லி முடிக்கப் பாவம் ஈஸ்வரன் தான் இருக்கும் இடத்தை விட்டு போக முடியாமல் அவனைப் பகைத்துக் கொள்ளவும் முடியாமல் தவித்து நின்றான்.

“என்ன டா ஈஷூ இவனை விட்டா நமக்குப் போக்கு இடம் இல்லைன்னு தானே நினைக்கிற, அந்த ஒரு காரணத்துகாகத் தான்டா இன்னும் நீ என் கூட இருக்க, இந்த அகிலன் பய வேற மாட்ட கூடாத இடத்தில் மாட்டிக்கிட்டு, இத்தனை நாள் கட்டி காத்த பேருல சேற்றை வாரி இறைச்சிருவான் போலடா” எனப் புலம்பிக்கொண்டிருந்த செந்தமிழனை கண்டுகொள்ளாது சென்றான் ஈஸ்வரன். அதே சமயம் செந்தமிழனின் போன் இசைந்தது, அழைத்திருப்பது முதலமைச்சர் என்று தெரிந்தவுடன் அமர்ந்திருந்தவர் பட்டென எழுந்து நின்றார்.

“தலைவரே செந்தமிழன் பேசுறேன்” எதிரில் ஆள் இல்லை என்றாலும் அவர் தன் உயரத்தில் பாதி உயரம் குனிந்து பேசினார்.

“என்னையா நாளைக்கு மீட்டிங்ல சிறப்பா செஞ்சிருவியா.?”

“தலைவரே அதெல்லாம் பண்ணிரலாம், ஈஷூபயகிட்ட தான் ஸ்பீச் எழுத கொடுத்திருக்கேன், போன தடவ வசனம்லாம் தீயா பறந்துச்சுல அதே மாதிரி பறக்கும் பாருங்க” எனச் சொன்னார் செந்தமிழன்.

“ம்ம் சரி சரி, நீ கேப்மாரி தனம் பண்ணுறியோ, இல்லை மொள்ளமாரி தனம் பண்ணுறியோ அதெல்லாம் எனக்குத் தெரியாது, முக்கியமான தொகுதியில் எல்லாம் நம்ம கட்சி ஜெயிச்சாகணும், நீ கடத்தல் பண்ணுற, போதை மருந்து விக்கிற, எல்லாம் தெரிஞ்சும் உன்னை எதுக்குக் கட்சிக்குள்ள வச்சிருக்கேன், உன்னை நம்பியும், உன் நெகட்டிவிட்டி பின்னாடியும் ஒரு கூட்டம் இருக்குதுன்னு தான். எனக்கு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம், என்ன செய்வீயோ ஏது செய்வீயோ தெரியாது உன்னோட மொள்ளமாரி தனம் மீடியோக்கோ, போலீஸூக்கோ தெரியாமல் கவனமா பார்த்துக்கோ, எல்லாம் தேர்தல் முடியுற வரைக்கும் தான், ஒருவேளை வெளிய தெரிஞ்சுதுனா உன் இடத்துல வேற ஒருத்தன நிக்க வைப்பேன்” என மிரட்டலாய் பேசியவர் அழைப்பை துண்டித்திருந்தார்.

“எல்லாமே இந்த அகிலனால வந்தது அந்தப் பொண்ணு விசயத்துல ஜாக்கிரதையா இருக்கச் சொன்னேன் எவ்வளவு சொல்லியும், நான் சொல்றதை கேட்கவே மாட்டேன்டான் இப்போ நான் இந்தத் தீரேந்திரனுக்கும், கார்த்திக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, எல்லாத்துக்கும் காரணம் இந்த அகிலன் தான்” என வருந்திக்கொண்டார் செந்தமிழன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அகரின் முட்டாள்தனமான பிடிவாதம் எப்பொழுது தான் குறையுமோ. அவன் அழுத்தி சொல்லுவதையும் கேட்காமல் தான் செய்வதை தான் செய்வேன் என்று நிற்கின்றாள்.

    அரசியல் லாபத்திற்காக சொந்த குடும்பத்தையும் நண்பர்களையும் காவு வாங்குபவர்கள் மக்களுக்கு என்ன நல்லது செய்து விட போகிறார்கள்.