39- நதியே தீராநதியே

Loading

 

மலரும் கார்த்தியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க மலர் பேச்சை முதலில் ஆரம்பித்தாள்

“சரி நான் கிளம்பவா கார்த்தி.?” எனக் கேட்டாள்.

“ஏன் மலர் இப்படிப் பண்ணுற.? எல்லாரும் இருக்கும் போது சந்தோசமா சிரிச்சிட்டு தானே இருந்த, இப்போ ஏன் சோகமாகிட்ட, உடனே போகணும் சொல்லுற.?” கார்த்திக் கவலையுடன் கேட்டான்.

“உன்கிட்ட என்னால போலியா இருக்க முடியலைடா கார்த்தி, எனக்கு என்னமோ நடக்கப் போகுதுன்னு எதோ பயம் காட்டுதுடா, நீ பத்திரமா இருந்துக்கோ, அப்போ அப்போ அம்மாவையும் தம்பியையும் பார்த்துக்கோ” கெஞ்சலாய் கேட்டவளின் விழிகளில் பட்டென நீர் விழிய, தன் கரம் கொண்டு துடைத்தவன் தன்னவளை தன் மார்பில் சாய்த்துக்கொண்டன், அவன் நெஞ்சம்தனில் தஞ்சம் புகுந்தவள் அங்கேயே சற்று இளைபாறினாள்.

“நான் பார்த்துக்குறேன்டி எல்லாரையும் கவலைபடாதே, சரளா மேம்கிட்ட கூடக் கேட்டேன் உனக்குத் துணையா நானும் வந்திடலாம்னு, எனக்கு வேலை இல்லைன்னு சொல்லீட்டாங்க, நீ கவலைபடாமல் போயிட்டுவாடி நான் பார்த்துக்கிறேன்” என அவளின் தலைக்கோதினான்.

“தேங்க்ஸ்டா கார்த்தி” எனச் சொன்னவள் மேலும் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“எல்லாமே சரியாகிரும் மலர், என்ன ஆனாலும் நான் உன் கூட நிப்பேன்” எனச் சொல்லி சமாதானம் செய்தான் அவன்.

**********************

அவர்கள் குறும்படம் வெளியிட்ட இரண்டு மூன்று நாட்களில் மலர் அயல்நாட்டு வேலைக்குச் செல்ல தயாராகிவிட்டாள். சென்னை விமான நிலையத்தில் நண்பர்கள் கூட்டம் காத்திருந்தது மலரின் வருகைக்காக.

“ஏய் என்னடா இவ்ளோ நேரம் ஆகுது, மலரை இன்னும் காணலை.?”

“தெரியலையே அதி மார்னிங் டென்னுகெல்லாம் ப்ளைட்டுன்னு சொன்னாள், இன்னும் வரலை” வருத்தமாய்ச் சொன்னான் கார்த்தி.

“டேய் லூசு கார்த்தி, அவளோட அம்மாக்கு கால் செய்து பாருடா” துரிதபடுத்தினாள் நிஹா.

“அவ நம்பருக்கே அடிக்கிறேன்” என மலர்விழியின் எண்ணுக்கு அழைப்பெடுத்தான் அவளின் எண் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக அலைப்பேசி சொல்ல,மலர்விழியின் தாய்க்கு அழைப்பு விடுத்தான். மலர் இரவே கிளம்பிவிட்டதாகவும், அலுவலகத்தில் இருந்து அழைத்துச் சென்றாதகவும் தகவல் வர பயந்து போயினர் மலரின் நண்பர்கள்.

“அதெப்படிடா எங்க கிட்ட சொல்லைனாலும், உன்கிட்ட சொல்லாமல் போயிருப்பா.? எதுக்காக டைமிங் மாத்தினாங்க.?” எனப் பதறிய படி அதி கேட்க கார்த்திக்கிடம் பதில் இல்லை.

“ஏய் கார்த்தி ஒருவேளை அவ போயிருந்தாலும் இந்நேரத்துக்கு ரீச் ஆகியிருக்கணும், அவ ஏன் போன் பண்ணலை.?” நிஹாவும் கொதித்தெழுந்தாள்.

“ஏய் இருங்கடி பயம் காட்டாதீங்க, சரளா மேடம் தானே அவளை அனுப்பினாங்க, அவங்களுக்குப் போன் பண்ணி கேட்போம்” எனச் சரளாவுக்கு அழைப்பு விடுத்தான் கார்த்தி.

“சொல்லுப்பா கார்த்தி.?” அவரின் குரல் மறுமுனையில் உற்சாகமாய் ஒலித்தது.

“மேம் மலர் நேத்து ராத்திரியே கிளம்பிட்டதா அவங்க அம்மா சொன்னாங்க, கம்பெனி சார்பில யாரோ வந்து கூட்டிட்டுப் போனதா சொல்லுறாங்க, பட் அவளோட ஃப்ளைட் டைமிங் மார்னிங் தானே.?” கார்த்திக் கேட்டவுடன் பட்டெனத் தடுமாறிய சரளா,

“கார்த்தி நீ பதட்ட படுறதுக்கு ஒன்னுமில்லை இல்லைப்பா, அவ மலேசியா ரீச் ஆகிட்டதா எனக்குத் தகவல் வந்துச்சு ஆறு மாசம் ட்ரெயினிங்ல, அதனால போன்லாம் யூஸ் பண்ண முடியாதுப்பா, நான் அங்கே இருக்க ஏஜென்ட்டுகிட்ட பேசி நான் உனக்கு அடிக்கடி தகவல் கேட்டுச் சொல்லுறேன்” எனச் சமாளித்து வைத்தார் சரளா.

அதே நேரம் அதே சமயம், எதோ ஒரு தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியினுள் மொத்தம் பதினைந்து பெண்கள் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தபட்டிருந்தது ஒவ்வொரு ஒவ்வொருவர் முகத்திலும், அதில் ஒருத்தியாய் மலர்விழியும் சுயநினைவின்றி, அவளுக்கு ஏற்றி இருந்த போதை ஊசியின் காரணத்தினால் மயங்கி கிடந்தாள், இயற்கை உபாதைகளுக்காக அடல்ட் டையப்பர் அனைத்துப் பெண்களுக்கு மாட்ட பட்டிருந்தது, நெடுந்தூர பயணம் கண்டெய்னரிலே செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. மலர்விழியின் கனவுகள் ஒட்டுமொத்தமும் அந்தக் கட்டெய்னருக்குள் அடங்கிப் போயிருந்தது.

வெளிநாட்டு வேலை கைநிறைய சம்பளம் என்ற ஆசை வார்த்தைகளைக் காட்டி, இறுதியில் பாழும் கிணத்தில் தள்ளி விடுவதில் இந்தப் பயணம் முடிவடைகிறது. சில பெண்கள் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர், சிலரோ இதிலிருந்து என்றாவது விடுதலைக் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர், சிலர் அவர்கள் செலுத்தும் போதை மருந்துகளுக்கு அடிமையாகி, அவர்கள் என்ன சொன்னாலும் செய்யத் தயாராகி விடுகின்றனர்.

அனுதினமும் இந்த நரகத்திலிருந்து தப்பிவிட மாட்டோமா.? என்ற நம்பிக்கையில் எஞ்சியிருக்கும் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கிறாள் மலர்விழி. இந்தப் பெண்களை வெற்றிகரமாக அனுப்பிவிட்டால் அதற்காகச் சக்ஸஸ் பார்ட்டி அரங்கேறும், அந்தப் பார்ட்டி தான் மார்ச் எட்டாம் தேதி நடக்கவிருந்தது.

அதன் பின் கோவா எனும் நரகத்தில் மலரின் வாழ்க்கை கழிய துவங்கியது. அங்கு வரும் ஆண்களில் சிலர் ஐம்பது வயதை கடந்தவர்கள் தான், கோடிக் கணக்கில் சம்பாதித்து வசதி படைத்திருக்கும் நபர்கள் தான், ஒரு வேளை யாராவது அந்தப் பெண்ணைக் கண்டுகொண்டு அவளை அங்கிருந்து காப்பாற்ற முயன்றால் அவன் கோவா கடற்கரையில் பிணமாகத் தான் மிதப்பான். இந்த ஒட்டுமொத்த இருட்டு உலகத்திற்க்கும் முடிசூடா மன்னாய் விளங்கி கொண்டிருப்பவன் அகிலன் தான். பெரும் அரசியல் பலம் இருப்பதால் காவல்துறை கண்ணிலே மண்ணை தூவி விட்டு சாதாரணமாய் இந்த தொழிலை நடத்தி வருகிறான் அகிலன்.

*****************************

கார்த்திக் செந்தமிழனின் உதவியோடு வெளியே வந்துவிட்டாலும், அவன் தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை தான். ஆனால் தீராவின் உதவியோடு அவன் நினைத்ததை சாதிக்க முடிவெடுத்திருந்தான், தன் மலரானவளை அவன் கப்பாற்றும் பொறுப்பில் இருக்கிறான். இத்தனை நாள் ஏமாந்தது போதும் பொங்கி எழ முடிவெடுத்திருந்தான் கார்த்தி.

கார்த்திக் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவன் தந்தையை பார்த்துவிட்டு, மீண்டும் தீராவை பார்க்க சென்றுக்கொண்டிருந்தான், அவனை அழைத்து வர வந்திருந்தாள் அவனின் தோழி அதி. வெகு நாட்கள் கழித்து அவளுடைய ஸ்கூட்டியில் கார்த்திக் பின்னே அமர்ந்திருக்க, அகரநதியோ வண்டியை இயக்கியபடி,

“கார்த்திக்.!”

“ம்ம் சொல்லு அதி” என அவள் தோளில் கை வைத்தபடி கேட்டான் கார்த்திக்.

“நீ எதுக்காகடா போலீஸ்கிட்ட அப்படி கன்ஃபஸ் பண்ணின.?”

“எப்படி கன்ஃபஸ் பண்ணினேன்.?”

“என்னை ரேப் பண்ணிட்டன்னு எப்படிடா உன்னால பொய் சொல்ல முடிஞ்சுது, நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பை கொச்சைபடுத்துற மாதிரி பண்ணிட்டியே கார்த்திக், ஊருக்கே தெரியும் நம்ம ரெண்டு பேரும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸூன்னு, நீ பண்ணின வேலையால, யாரும் ஃப்ரெண்ட்ஷிப்பை மதிக்க மாட்டாங்களேடா, ஒரு ஆணும் பெண்ணும் பழகினாலே காதல்னு பேரு வச்சிருவாங்க, இப்படி இருக்குற நிலைமையில நீ எதுக்காக அப்படி சொன்னடா கார்த்தி”

“அதி.! நான் புத்திக்கெட்டு எதோ சொல்லிட்டேன், அதை வீட்டிரு” சாந்தமாய் பதில் சொன்னான் கார்த்தி.

“ஆனால் நீ வெளியே வந்ததுக்கு அப்பறம் தான்டா நிம்மதியா இருக்கு, நீ என்கிட்ட எதையோ மறைக்குற அப்படி தானேடா.?”

“தொன தொனன்னு பேசாமல் நீ வண்டியை ஒழுங்கா ஓட்டுடி சீக்கிரம் போகணும்” அவளை துரிதபடுத்தினான்.

“சரி அதை பத்தி கேட்டா தான் டென்சன் ஆகுற.? நீயும் தீராவும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டிங்களா.?”

“அப்படிலாம் ஒன்னுமில்லை, உன் கற்பனை குதிரைய காத்துல பறக்க விடாதே அதி.”

“என்னடா சொல்லுற.?நான் என்ன கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டேன்ற.?

“அதி இப்போ பேசுறதுக்கு கூட நேரமில்லைடி என் மைண்ட்டுகுள்ள ஃபுல்லா மலர் தான் இருக்கா, அவளை காப்பாத்தணும்”

“என்னடா சொல்லுற மலருக்கு என்ன ஆச்சு.?”

“மலர் எங்கயோ மாட்டிக்கிட்டு இருக்காடி அவளை கண்டுபிடிக்கணும்”

“உனக்கு இதெல்லாம் யாருடா சொன்னது.?”

“தீரேந்திரன் தான்”

“என்ன கார்த்திக் ஷாக் மேல ஷாக் கொடுக்கிற.?”

“உன்கிட்ட தீரா எதையும் சொல்லலையா.?”

“அவர் எங்கடா இன்வெஸ்டிகேட் பண்ணுறாரு, முழுக்க முழுக்க என் கூட தான் இருக்காரு, அப்படி என்னதை கண்டுபிடிச்சடாராம்”

“அவ்வளவு தான் உனக்கு தெரிஞ்சது அதி, அவரோட ஜாப்ல அவர் கரெக்ட்டா இருக்காரு, இது தான் போலீஸ்காரங்களோட எத்திக்ஸ், அவங்க டீல் பண்ணிட்டு இருக்கிற கேஸை பெத்த அம்மாகிட்டையும் டிஸ்கஸ் பண்ண மாட்டாங்க, கட்டின பொண்டாட்டிகிட்டையும் டிஸ்கஸ் பண்ண மாட்டாங்க”

“நான் லவ்வர் தானே.? என்கிட்ட சொன்னால் என்னவாம், வரட்டும் வச்சிக்கிறேன், மலர் பத்தி என்கிட்டையே மறைச்சிருக்காரு, நான் அவ வீ்ட்டுகெல்லாம் போய் தேடிட்டு வந்தேன் தெரியுமா, அப்போ கூட பாவி வாய் திறந்து சொல்லலை, உன்கிட்ட மட்டும் சொல்லிருக்காரு, என்னை விட நீ அவருக்கு முக்கியமா போயிட்டல்ல” என அலுத்துக்கொண்டாள்.

“ஏய் லூசு அவர் என்கிட்டையே எதையும் முழுசா சொல்லலைடி, வீட்ல அப்பாவ பார்த்திட்டு வாங்க இன்னும் ஒன் வீக் நமக்கு வேலை இருக்குன்னு சொல்லிருக்காரு, மலர் எதோ டேன்ஞசர்ல இருக்குறதா சொல்லியிருக்காரு.”

“சேம் டையலாக் தான் என்கிட்டையும் சொன்னாரு,ஆனா மலர் பத்தி எதுவுமே சொல்லையே”

“இப்போ என்ன தீரா வீட்டுக்கு தானே போறோம் தெரிஞ்சிரும், புலம்பாதே அதி” என கார்த்திக் சொன்னான்.

“இந்த தீரா ஏன் இப்படி பண்ணணும் சரியான லூசா இருப்பாரு போல, கட்டிக்க போறவள்கிட்டயே இப்படி மறைக்கிறாரு” தன்னவன் மீது கோபம் கொண்டாள் அதி.

“அதி அவரு ரொம்ப நல்லவருடி”

“எதை வச்சு சார் அப்படி சொல்லுறீங்க?”

“இல்லைடி அதி, இவ்ளோ நடந்திருக்கு ஆனா நம்ம ப்ரெண்ட்ஷிப் மேல எவ்ளோ நம்பிக்கை இருந்திருந்தா என்னை கூட்டிட்டு வர்றதுக்கு உன்னை அனுப்பி வச்சிருக்காரு பார்றேன் அதி” பிரமித்தபடி சொன்னான் திருமணத்திற்கு பின் ஆண் பெண்ணின் நட்பு தொடர்வதென்பது, குதிரை கொம்பை போலத்தான் மற்ற ஆண்களை காட்டிலும் தனித்து விளங்கினான் தீரேந்திரன்.

“ஆமால கார்த்தி, அவரு நல்லவரு தான்டா, ஏன்னா நான் லவ் பண்ணுறேன்ல” என இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் அதி.

“சரி சரி வந்தாச்சு, ஆஃபிஸர் என்ன செய்யுறார்னு பார்ப்போம்” என்றபடி தீரேந்திரனின் வீட்டிற்குள் நுழைந்தாள் அகரநதி.

“நதி ஏன் இவ்ளோ லேட்டா வந்திருக்க.? டைம் ஆகிருச்சு உனக்கு கொஞ்சமும் அறிவில்லை” என வாசலில் கால் வைக்கும் முன்னே திட்டியிருந்தான் தீரேந்திரன், இதுவரை கோப முகம் காட்டதவன் முதல் முறை அப்படி பேசியது அவள் மனதை பெரிதும் வாட்டியது.

“தீரா இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி பேசுறீங்க, நீங்க சொன்ன டைம்முக்கு கார்த்திக்கையும் கூட்டிட்டு வர வேண்டாமே, அதுவும் இந்த சென்னை ட்ராஃபிக்ல.?” என பட்டென பேசியவள் அடுக்களையில் நின்றிருந்த வினோதாவிடம் சென்று முறையிட்டாள்.

“அத்தை பார்த்தீங்களா.? உங்க பையனை இப்போவே என்னை எப்படி கொடுமைபடுத்துறாங்கன்னு”

“டேய் என்னடா என்னோட மருமகளை என்னடா சொன்ன.?” கோபமாய் பேசிய தாயை பார்த்தவன்.

“ம்மா எனக்கு காரணம் இல்லாமல் கோபம் வராது உனக்கு தெரியும் தானே விசயம் அப்படி” என்றவன் தன்னவள்புறம் திரும்பி.

“ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதே, மாமியாரும் மருமகளும் ஒண்ணா சேர்ந்திருவிங்களே, நதி சொல்றதை முழுசா புரிஞ்சுக்கோ சைல்டிஷ்ஸா பிகேவ் பண்ணாதே” என சொல்லிக் கொண்டிருந்த போதே, தயங்கியபடி கார்த்தியும் உள்ளே நுழைந்தான்.

“தீரா சொல்லுங்க, மலர்க்கு எங்கே இருக்கா? என்ன பிரச்சனை.? அவ அம்மாவும் தம்பியும் இறந்திட்டாதா தான் நினைச்சிட்டு இருக்காங்க” என கார்த்திக் கேட்க,

“கார்த்திக் மலர் இப்போ கோவால இருக்கிறதா தகவல் வந்திருக்கு, அடிக்கடி இடத்தை மாத்திகிட்டே இருப்பாங்களாம்” என தீரா சொன்னான்.

“வாட் மலர் ஹூமன் டராபிக்கிங்ல மாட்டியிருக்காளா.? இதை ஏன் தீரா என்கிட்ட முன்னவே சொல்லலை என பேசியவள் தன் மடிக்கணினியை எடுத்து உயிர்பித்தவள் எதையோ அவசரமாய் தேடினாள்.

I

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சுற்றி இருக்கும் இடங்களில் நடக்கும் அவலங்களை பற்றி கவலை கொள்பவள் உடன் பழகிய தோழியின் நிலையை பற்றி அறியாமல் போய்விட்டாள்.

    சரளா ஆசிரியர் கைகாட்டியது என்ற ஒன்றை தள்ளி வைத்துவிட்டு ஒரு நொடி யாரேனும் ஒருவர் யோசித்திருந்தாலே இதில் இருக்கும் முரண்பாடுகள் விளங்கி இருக்கும்.

    எல்லாவற்றையும் பற்றி எல்லோரிடமும் எல்லா நேரமும் சொல்லிக்கொண்டு இருக்க முடியாதே.

  2. மலரை காப்பாத்திடுவாங்களா??😞😞