
மாயோன் 23
வர்ஷா அந்த கோப்புகளை எல்லாம் வீட்டிற்கு எடுத்து வந்ததோடு சரி, அதனை அவள் கவனிக்க கூட முடியாத அளவில் தலைவலியில் துவண்டு போனாள். அந்த வலியில் கோப்புகளை முழுவதுமாக மறந்து போனாள்.
அடுத்தநாள் வழக்கம் போல ஆய்வகத்துக்கு கிளம்பினாள் வர்ஷா.
கண்ணாடியின் முன் நின்று தன்னை பார்த்தவளின் கரம் தான் கட்டியிருந்த புடவையை ஆசையுடன் தொட்டு ரசித்தது.
அந்த புடவை அன்றொருநாள் மழைநேரத்தில் அதியன் அவளுக்காக வாங்கி கொடுத்தது ஆகும். அதை நினைவில் நிறுத்தியவளுக்கு எப்போதும் போல அதியனது ஞாபகம் வந்து மனதை வாட்டியது.
அன்று மது போதையில் ஆய்வகத்துக்கு வந்து அவன் பேசியது, அவனது கோவம், அவனது கண்ணீர், கரத்தில் வடிந்த ரத்தம் என ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்து அவளை மேலும் ரணப்படுத்தியது. இமைகளின் நடுவே அவன் நினைவுகளை கொண்டு வந்தவள் கண்களை மூடி ஒரு முடிவெடுத்தவளாக அதியனை காண அவனது இல்லம் நோக்கி பயணித்தாள்.
*******
ஆய்வகத்திற்கு சென்றுகொண்டிருந்த நந்தினி, அதியனது வீட்டை கடந்து தான் செல்ல வேண்டியதாக இருந்தது. அது ஒரு கெஸ்ட் ஹவுஸ் அதில் அதியனும் , சரத்தும் மற்றும் தனியா வசித்து வந்தனர். சரத் ஆய்வகத்தில் இருக்கவே, அதியன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.
அதியனது வீட்டை அடைந்ததும் வண்டியை நிறுத்துனாள் நந்தினி. ‘ அவனை பார்த்து ரெண்டு மூனு நாள் ஆச்சு.. வர்ஷா விஷயத்தில் என்ன முடிவு எடுத்தான்னு வேற தெரியலயே.. சரி இப்போ கேட்டு தெரிஞ்சிப்போம் ‘ என்று எண்ணியவாரே அவன் வீட்டிற்குள் நுழைந்தாள் நந்தினி.
அதியனோ சோபாவில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரில் இருந்த டேபிளில் ஒரு டைரி இருந்தது… டைரியின் தாள்கள் காற்றில் மெதுவாக அசைந்து கொண்டிருந்தது. உள்ளே வந்த நந்தினியின் கண்களில் முதலில் பட்டது அதியனின் முன்னால் இருந்த டைரி தான். அதனை கையில் எடுத்து மெதுவாக அந்த டைரியின் பக்கங்களை புரட்டினாள்..
உன்னையும் சேராமல்
மண்ணையும் சேராமல்… நிழலாடி கொண்டிருக்குறது என் காதல்.
இலை நுனியில் மழைத்துளியாய்…
என்று எழுதியிருந்த வார்த்தைகளை படித்துவிட்டு அவனை சலிப்பாக பார்த்த நந்தினி, அவன் அருகில் வந்து அவனது தோளில் கைவைக்க…பட்டென்று கண்களை திறந்தான் அதியன்.
” நந்தினி நீயா? சொல்லு என்ன விஷயம் ” என்று ஒரு கையால் தன் தலையை பிடித்து கொண்டு அவன் கேட்டான்.
” அதை நீ தான்டா சொல்லணும் வர்ஷா விஷயம் என்ன ஆச்சு? ”
” ப்ளீஸ் நந்தினி ஏற்கனவே நான் நொந்து போய் இருக்கேன். மேலும் என்னை ரணப்படுத்தி பார்க்காத ”
” டேய் என்ன ஆச்சுன்னு தானேடா கேட்டேன். அதுக்கு போய் இப்படி சலிச்சுக்கிற ? ”
” எனக்கு வாழ்க்கையே சலிப்பா தான் இருக்கு நந்தினி ”
” ஏன் ஒரு மாதிரி பேசுற உடம்பு எதுவும் சரி இல்லையா ”
” உடம்பும் சரி இல்லை.. மனசும் சரி இல்லை ”
” என்ன தான்டா ஆச்சு ? ” என்று பொறுமை இழந்து கேட்டாள் நந்தினி.
” ஒன்னும் இல்லை நந்தினி. உன்கிட்ட ஸ்லீப்பிங் பில்ஸ் இருக்கா? தூங்கி மூணு நாள் ஆச்சு ”
” ஏன்டா இவ்ளோ பீல் பண்ணுறதுக்கு நேரா அவள் கிட்ட போய் பேசலாம் இல்லை ”
” அவளை பார்த்தால் இப்போ எல்லாம் தப்பு தப்பா தோணுது நந்தினி. எங்க என்னால அவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு ”
” என்னடா சொல்லுற! அவளை கொலை பண்ணுற பிளேன் ஏதாவது வச்சு இருக்கியா? என்ன ? ” என்று நந்தினி சற்று பதட்டத்துடன் கேட்க.
” ஏண்டி உன் புத்தி இப்படி போகுது.. அதெல்லாம் உனக்கு புரியாது. என் வலி எனக்கு தான் தெரியும் , டேப்லெட் இருக்கா இல்லையா ? ” என்று அதியன் கடுப்பாக கேட்டான்.
நந்தினிக்கோ சட்டென தேவனது ஆய்வகத்திலிருந்து எடுத்து வந்த மருந்தின் நியாபகம் வந்தது.
‘ பேசாமல் அந்த மருந்தை அதியனுக்கு இன்ஜெக்ட் பண்ணி பார்க்கலாமா ? மைல்டு ட்ரக்ஸ் தானே.. ஒன்னும் பிரச்சனை வராது. இவனும் வேற மூணு நாளா தூங்கலன்னு சொல்லி புலம்பிட்டு இருக்கான். அந்த மருந்தை இன்ஜெக்ட் பண்ணி தான் பார்ப்போமே ‘ என்று நினைத்தவள் தன் ஹேண்ட் பேகில் இருந்த அந்த மருந்தை எடுத்து, ஊசியில் 2 மில்லி கணக்கில் நிரப்பி கொண்டாள்.
அதனை அவனுக்கு செலுத்த போகும் நேரம் தான் தேவன் கூறிய மருந்தின் அளவு அவளுக்கு ஞாபகம் வந்தது.. உடனே 0.5 மில்லி அளவுக்கு அந்த மருந்தை குறைத்து கொண்டாள். ( நல்ல வேளை அளவை மறக்கல )
” என்னடி இது? ஊசி எல்லாம் வேண்டாம் ” என்று அதியன் மறுக்க..
” உனக்கு தலை வலிக்குது தானே இதை போட்டா சரி ஆகிடும். நல்லா தூக்கம் வரும் ” என்று கூறிய நந்தினி அந்த மருந்தை அதியனுக்கு செலுத்தினாள்.
கொஞ்ச நேரத்தில் அதியனுக்கு லேசான போதை மிதப்பு உருவாக தொடங்கியது.. தலையை உலுக்கி தன்னை சமன்செய்ய பார்த்தவனுக்கு அது முடியாமல் போனது.
” நந்தினி எனக்கு ஒரு மாதிரி இருக்கு நீ போ.. நான் ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கிறேன் ” என்று அதியன் தன்னை நிலைப்படுத்த முடியாமல் கூறினான்.
” என்ன மாதிரி இருக்கு அதி ” என்று நந்தினி அந்த மருந்தின் செயலை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்டாள்.
” உன்னை கொலை பண்ணனும் போல இருக்கு ” என்ற அதியன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள தடுமாறினான்.
” எது ” என்று நந்தினி மிரண்டு முழித்தாள்.
” இப்போ வெளியே போறியா இல்லையா? உன்னை பார்த்தாலே கோவம்கோவமா வருது.. என் வர்ஷாவை வர சொல்லு இப்போ எனக்கு அவள் வேணும்.. ” என்றவன் அருகில் இருந்த பூஞ்சாடியை எடுத்து அவள் மண்டையில் அடிக்க செல்ல.. நந்தினி பயந்து பின்னால் நகர்ந்தாள்.
‘ அய்யோ ஏன் இவன் இப்படி பிஹேவ் பண்ணுறான்.. காதல் முத்திப்போச்சு போல.. இதுக்கு மேல இங்கயிருந்தால் அடிச்சாலும் அடிச்சிடுவான்.’ என்று யோசித்தவள் அதே யோசனையுடனே அங்கிருந்து ஆய்வகம் நோக்கி புறப்பட்டாள்.
தனக்குள் என்ன நடக்கிறது என்பது அதியனுக்கும் புரியவில்லை.. ஆனால் அவனது மனமும், உடலும் வர்ஷாவை அதிகம் தேடியது என்பது மட்டும் உண்மை. அவனது அந்த தேடல் தான் நந்தினியின் மீது கோவமாக வெளிப்பட்டது.
அந்த மருந்து கொடுத்த போதையில் தன்னிலை இழந்து மொத்தமாக வேறு ஒரு நபராக அங்கு நின்றிருந்தான் அதியன். இது எதுவும் அறியாமல் அங்கு அதியனை காண வந்தாள் வர்ஷா.
கதவு திறந்திருக்க… போதை தலைக்கேறியதால் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான் அதியன்.
ஹாலில் அதியனை கண்டதும் ஒருகணம் தயங்கிய வர்ஷா பின்னர் மெல்ல அடியெடுத்து வைத்து அவனிடம் வந்தாள்.
அவளது கொலுசு சத்தம் கேட்டு அதியன் தனது பார்வையை உயர்த்தி அவளை பார்க்க… அவனது கண்கள் சிவந்திருந்தது. கோவத்தினால் அல்ல தாபத்தினால்…
அவனது பார்வையை சந்தித்தவளின் கால்கள் அப்படியே நின்றது.
‘வந்திருப்பது அவள் தானா?’ என்ற சந்தேகத்துடன் ” நீயா? நீ எங்கே இங்க ” என்று கேட்டபடி எழுந்து அவள் அருகில் வந்தான்.
நடப்பவை அனைத்தும் கனவா? நனவா? என்று வித்யாசம் கண்டறிய முடியாத அளவுக்கு போதையில் இருந்தான்.
அதீத போதை அவனது தேவையை அவனுக்கு உணர்த்த, நொடியில் அவளை நெருங்கியவனது மூச்சு காற்று அனல் காற்றாக மாறி அவளை சுட்டெரித்தது.
திடீரென வெகு அருகில் அவனது முகத்தை கண்டவள், பதட்டத்துடன் விலகி செல்ல பார்க்கவும், அவளது கழுத்தை பிடித்து தன் முகம் பார்க்க வைத்தான் அதியன்.
” வர்ஷா ” என்று தடுமாறி அழைத்தவனது கண்களில் வெளிப்பட்ட உணர்வை கண்ட பெண்பவள் பயத்தில் எச்சில் விழுங்கி கொண்டாள்.
” அதியன் நான்.. உங்க கிட்ட ” என்று அவள் மௌனம் கலைத்து பேச வாயெடுக்கும் முன் அவளை சுவரில் சாயவைத்து, அவள் மீது தேகம் படர சாய்ந்து நின்றவன் நொடியில் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான். நெஞ்சம் படபடக்க அவனை விட்டு விலக நினைத்தவளின் இடையை பிடித்து தன்னோடு நெருக்கி கொண்டவன் அவளது கழுத்து வளைவில் இதழ் பதித்தான்.
அதில் அவளின் பெண்மை விழித்துக்கொள்ள ” அதியன் என்ன பண்ணுறீங்க? தள்ளி போங்க ” என்று அவனை வேகமாக தன்னில் இருந்து பிரித்து தள்ளினாள்.
அதில் தடுமாறிய அதியன், தனது அருகில் இருந்த டேபிளை பிடித்து கொண்டு தன்னை நிலைப்படுத்தி நின்று கொண்டான்.
” ட்ரிங்க் பண்ணி இருக்கீங்களா ? ” என்ற அவளது குரல், அவனது செவியில் விழவும் தான், இது கனவல்ல நிஜம் என்று அறிந்து கொண்டவன் ” வர்ஷா உண்மையா நீயா? ச்சே சாரிமா ஏதோ கண்ட்ரோல் இல்லாமல்.. ” என்று தலையில் அடித்து கொண்டவன், தன் உணர்வுகளை கட்டுப்படுத்த பெரும் பாடுபட்டான். ஒருக்கட்டத்தில் அது முடியாது என்று உணர்ந்தவன் ” இங்க இருந்து போயிடு ” என்று வர்ஷாவிடம் கூறினான்.
அவன் தன் மீதுள்ள கோவத்தில் தான் தன்னை போக சொல்கிறான் என்று நினைத்து கொண்ட வர்ஷா ” அதியன் நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் நானும் உங்களை…” என்றவள் தயங்கியபடி அவனை நெருங்கி வரவும், அவளது தாடையை வலுவாக பற்றி தன் முகம் நோக்கி கொண்டு வந்தான் அதியன்.
” சொன்னா கேளுடி போ… அது தான் உனக்கு நல்லது ” என்றவனை புரியாமல் பார்த்தாள் வர்ஷா.
” ட்ரிங் பண்ணி இருக்கீங்களா அதியன்.. அதனால தான் இப்படி பிஹேவ் பண்ணுறீங்களா? ஏன் அதியன் இப்படி ? என்னால தானே நீங்க இப்படி இருக்கீங்க ? ” என்று உண்மையான வருத்தத்துடன் கேட்டாள். அதில் அவன் மீதான அக்கறையும் நிறைந்திருந்தது..
அவளது அக்கறையான பேச்சில் அதியனது தூங்கி கிடந்த காதல் மீண்டும் வெளிவந்தது.. அதை விட அந்த மருந்தின் போதை ‘அவளை இப்போதே ஆட்கொண்டு விடு’ என கட்டளை விதிக்க… உணர்வுளை கட்டுபடுத்த முடியாதவன்… அவளது கண்களை ஊடுருவி பார்த்தான்.
அவனது விழிகளில் வெளிப்பட்ட தாபத்தை உணர்ந்தவளுக்கு இதயம் படபடக்க தொடங்கியது. இருந்தும் அதியன் மீது இருந்த நம்பிக்கையில் தன் காதலை சொல்ல அவன் கரம் பற்றினாள்.
ஏற்கனவே உணர்வுகளின் பிடியில் சிக்கி தவித்துகொண்டிருப்பவனுக்கு அவளது தொடுகை மேலும் மேலும் சங்கடத்தை கொடுத்தது.
” கையை விடு வர்ஷா ” என்றவனது சுவாசம் சூடாகி.. மூச்சு காற்று அனலாக வெளிவந்தது..
” ஒரு நிமிஷம் நான் பேசிட்டு போயிடுறேன் ” என்றவளது இடையை நொடியில் நகரவிடாமல் பற்றியிருந்தான் அதியன்.
” என்னால என்னை கட்டுப்படுத்த முடியலடி. என்னை மன்னிச்சிடு .. ஐ நீட் யூ ” என்றவன் அடுத்த நொடியே அவளது இதழ்களை தன் இதழ் கொண்டு வன்மையாக சிறை செய்தான்.
அவன் கூறிய வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தவள் பதட்டத்துடன் அவன் அணைப்பிலிருந்து விலகி செல்ல போராடினாள்.
அவள் தன்னிடமிருந்து விலகி செல்ல முற்படுகிறாள் என்பதை அவனது மனம் உணர்ந்தாலும் அவளை விட முடியாத அளவுக்கு நந்தினி கொடுத்த மருந்து அதன் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தது.
உடனே அவளை கைகளில் தூக்கி கொண்டவன், தள்ளாடியபடியே தன் அறைக்குள் வந்தான். கதவுகளை காலால் அடித்து சாத்தியவன் அவளது திமிரளையும், எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அவளை மெத்தையின் மீது தூக்கி போட்டான்.
அவள் மெத்தையின் மீதிருந்து எழுந்து கொள்ள முயலும் முன், அது முடியாத அளவுக்கு அவள் மீது படர்ந்தான் அதியன்.
” ப்ளீஸ் அதியன் இது வேண்டாம். எனக்கு பயமா இருக்கு. என்னை விட்டுடுங்க.. உங்க மேல நான் நிறையா மரியாதை வச்சு இருக்கேன்.. என் மனசுல இருக்க உங்க பிம்பத்தை நீங்களே அழிச்சிடாதீங்க ப்ளீஸ் அதியன்… நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம்.. தப்பு பண்ணாதீங்க அதியன் ப்ளீஸ் ” என்ற அவளது வார்த்தை எதுவும் அவன் செவிகளை அடையவில்லை.
” அதியன் வேண்டாம் ” என்று அவள் மீண்டும் பேச தொடங்கும் முன் அவளது நடுங்கிய உதடுகளை தன் உதடுகளால் சிறைசெய்தான். வார்த்தைகள் தடைபட அவளது மனதின் வேதனை கண்ணீராக வெளிவந்தது.
அவளை தன்னவள் ஆக்கிக்கொள்ளும் வெறி மட்டுமே அவனுக்குள் நிறைந்திருக்க.. அவளது கதறலை பொருட்படுத்தாதவன் போல தன் செயலில் குறியாக இருந்தான்.
” அதியன் ப்ளீஸ் இது எல்லாம் தப்பு என்னை விடுங்க ” என்று கதறியவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்.. அவளில் தன் தேடலை தொடங்கி இருந்தான்.
அவனது ஒரு கரம் அவளது இடையையும், மறுகரம் அவளது கழுத்தையும் வலுவாக பற்றியிருந்தது.
அவனது பலத்தின் முன் பெண்ணவளின் பலம் ஒன்றுமில்லாமல் போக.. அவனை எதிர்த்து போராட முடியாமல் கண்களில் கண்ணீருடன் அவனை சகித்து கொண்டிருந்தாள்.
அவனது ஆசையும், எதிர்பார்ப்பும் நிறைவேறிய பின்னும் அவளை விட்டு விலகாமல் அவளை தன் கரத்தினுள்ளே வைத்து கொண்டு கண்ணயர்ந்தான் அதியன்.
உணர்வுகள் எல்லாம் மரத்து போன நிலையில் விட்டதை வெறித்து பார்த்தபடி அவன் கரத்தினுள் கிடந்தவளின் விழியோரம் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அவளது கழுத்தின் மீதிருந்த அதியனது கரத்தை வர்ஷாவின் கண்ணீர் துளிகள் நனைக்க… அதனை உணர்ந்து மெல்ல கண்விழித்த அதியன் அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தான்.
அவனுக்கு போதை நன்றாக தெளிந்திருந்தது.. அவளது கண்ணீரை கண்டு பதறியவன் ” சாரிமா.. பெயினா இருக்கா ? ” என்று கேட்டபடி அவளது விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான்.
எந்த உணர்வுமின்றி அவனை பார்த்தவளது கண்கள் மீண்டும் கண்ணீரை சுரந்தது…
” ப்ச் எல்லாம் சரி ஆகிடும்டி.. எதுக்கு இப்போ அழற? நாளைக்கே நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவனை வலியுடன் பார்த்தவள்..
” இன்னிக்கு நடந்த இந்த தப்ப சரி பண்ண, என் கழுத்துல தாலிகட்டி இந்த தப்புக்கு லைசன்ஸ் வாங்க நினைக்கிறீங்க? அதுதானே? இந்த சதைக்காக தான் அன்னைக்கி அவ்ளோ பேசினீங்கலா அதியன் ”
” ஏய் என்னடி பேசுற? ”
” உண்மையை தானே பேசுறேன்.. இப்போ நீங்க என்கிட்ட நடந்துகிட்டதுக்கு பேர் என்ன அதியன் உங்களால அதை சொல்ல முடியுமா? உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் நடந்த எதுவும் இல்லைன்னு ஆகிடுமா? இன்னிக்கு நான் அனுபவிச்ச வலி நான் சாகுறவரை மறையாது ”
” என்னடி பேசுற? நான் பண்ணது தப்பு தான். அதை ஒருநாளும் நியாயப்படுத்த மாட்டேன்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டி.. ஏதோ என்னையும் மீறி இப்படி நடந்திச்சு” என்றவனை பார்த்து விரக்தியாக சிரித்தவள்.
” இன்னும் எதுக்கு இந்த லவ் டிராமா எல்லாம், அது தான் உங்க ஆசை தீர்ந்துடுச்சு இல்லையா? அப்ரோம் ஏன்? மறுபடியும் இப்படி நடிச்சு என்னை ஏமாத்த பார்க்குறீங்க? இதுக்கு மேல என்கிட்ட ஒண்ணுமே இல்லை.. இருக்குறது என் உயிர் மட்டும் தான் அதுவும் வேணுமா என்ன? ”
” வர்ஷா ஏன்டி ” என்று கண்ணீருடன் அவளது கன்னம் பற்ற வந்தவனை முறைத்து பார்த்தாள் வர்ஷா.
” மறுபடியும் என்ன? இந்த சதை வேணுமா? ” என்று அவள் ஆக்ரோஷமாக கேட்க.. மொத்தமாக உடைந்து போனான் அதியன்.
” வார்த்தையால என்னை கொல்லாதடி.. சத்தியமா நான் வேணும்னு பிளேன் பண்ணி எதுவும் பன்னல.. என் கண்ட்ரோல் இல்லாமல் இது எல்லாம், நான் எப்படி உனக்கு புரியவைப்பேன்.. நான் அவ்ளோ கெட்டவன் இல்லடி. அதுவும் உன்னை போய் நான் எப்படிடி.. நீ என் உயிர் டி.. உன்னை போய் தப்பா… ”
” பொய் சொல்லாதீங்க நீங்க என்னை காதலிக்கிறேன்னு சொன்னது எல்லாம் பொய்.. இப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுறதும் கூட பொய்.. உங்க தேவை எல்லாம் நான் இல்லை என் உடம்பு மட்டும் தான். ”
” சத்தியமா அப்படி இல்லடி… உன் மேல உயிரே வச்சு இருக்கேன்டி.. என்னை அடி, திட்டு, என்கிட்ட சண்டை போடு …ஆனால் என் காதல் வெறும் உடல் இச்சைக்காகன்னு மட்டும் சொல்லாதடி, தாங்க முடியல, வலிக்குது ”
” எனக்கும் தான் அதியன் வலிக்குது.. உங்களை என் மனசுல எந்த இடத்தில் வச்சு இருந்தேன் தெரியுமா? நீங்க போய் இப்படி ச்சே… தயவு செய்து இனி என்னை தேடி வராதிங்க, இதோட நமக்குள்ள இருந்த எல்லாம் முடிஞ்சுது ” என்றவள் வேக வேகமாக சிதறிகிடைந்த தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
உடைமாற்றிவிட்டு அவள் வேளியே வரவும் தான் அதியன் அவளது ஆடையை கவனித்தான். அவள் கட்டியிருக்கும் புடவை அவன் வாங்கி கொடுத்தது என்று உணர்ந்தவன் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
அவன் மீது ஆசை இல்லாமலா அவன் வாங்கி கொடுத்த ஆடையை அணிந்து கொண்டு அவனை பார்க்க அவனது வீட்டிற்கு வருவாள் ? அதனை அறிந்து தான் இந்த அதிர்ச்சி.
” வர்ஷா இது நான் வாங்கி ” என்றவனை இடைமறித்தவள்..
” அதுவே இப்போ தான் உங்க கண்ணுக்கு தெரியுதா? உங்க கண்ணுக்கு நான் வெறும் சதையா தான் தெரிஞ்சியிருக்கேன் அப்படிங்குறதுக்கு இந்த ஒரு விஷயம் போதுமே!…. இது நீங்க வாங்கி கொடுத்தது தான். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வந்தேன்.. ஆனால் இனி அதை எப்போவும் உங்க கிட்ட சொல்லமாட்டேன்.. அதுக்கு உங்களுக்கு தகுதி இல்லை… என் ஆசையையும், எதிர்பார்ப்பையும் மொத்தமா அழிச்சிட்டீங்க அதியன்” என்றவளை வலியுடன் பார்த்தவன் பேசமுடியாமல் மௌனமானான்.
” உங்களை யாரோ ஒருத்தர் விட்டுட்டு போனாங்கன்னு சொன்னிங்க இல்லையா ? அவங்க உங்களை விட்டுட்டு போக காரணமே நாங்க தான். நான் விக்ரமன் வீட்டு பொண்ணு. ” என்று அவள் கூறிய நொடி அதிர்ந்து நின்றவன்..
“நீ… என்ன.. என்ன சொல்லுற? ”
” ஆமா… உண்மை என்ன தெரியுமா? விக்ரமன் உங்களை விட்டுட்டு போனது தப்பே இல்லை..ஏன்னா நீங்க அவரோட அன்புக்கு தகுதியே இல்லாதவர் அவரோட அன்புக்கு மட்டும் இல்லை யாரோட அன்புக்குமே நீங்க தகுதி இல்லாதவர்… என் முகத்துலயே முழிக்காதீங்க… உங்க முகத்தில முழிச்சாலே அது பாவம்… நான் போறேன் ” என்றவள் கோபத்துடன் அங்கிருந்து செல்லும் நேரம் கால் தடுக்கி கீழே விழ பார்த்தாள்.. அப்போது விரைந்து வந்த அதியனது கரம் அவளது கரத்தை பற்றி நிறுத்தியது.
அவனை தீயாக முறைத்து பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தேங்கி இருக்க… அவனது கண்களில் வழிந்த கண்ணீர் அவளிடம் ஆயிரம் முறை மன்னிப்பு வேண்டியது.. ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் அவனது கரத்தில் இருந்து தனது கரத்தை விடுவித்து கொண்டவள்.. விறுவிறுவென அங்கிருந்து சென்றாள்.
செல்லும் அவளை வலியுடன் பார்த்தவாறு நின்றிருந்தான் அதியன். இறுதியாக அவளை கண்களில் நிரப்பி கொண்டவன் கண்களை இறுக மூடியதும், கண்ணீர் அவன் கன்னம் தொட்டு வழிந்தது.
‘ விக்ரமன் வீட்டு பெண் நான் ‘ என்று அவள் சொன்ன மறுகணமே செயலற்று போனான் அதியன்.
எந்த உணர்வுமின்றி குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டவன் சவருக்கு அடியில் நிற்க.. அவன் மனம் ஊமையாக கதறி அழுதது…” இது விக்ரமனுக்கு தெரிஞ்சா என்னை பத்தி என்னை நினைப்பான்… நான் தப்பு பண்ணிட்டேன் பெரிய பாவம் பண்ணிட்டேன் தப்பு… தப்பு ” என்றவன் அவனே அவன் கன்னத்தில் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறி அழுதான்.
” அவள் சொன்னது உண்மை தான். நான் யாரோட அன்புக்குமே தகுதி இல்லாதவன் தான். அதனால் தான் யாரோட அன்புமே எனக்கு கிடைக்கல… எல்லாரும் என்னை விட்டுட்டு போய்ட்டாங்க… ஆஆஆஆ ” என்று அந்த அறையே அதிரும் படி கத்தியவன் தனது கையை மடக்கி சுவரில் ஓங்கி குத்தினான்…
” ஆஆஆ… இவ்ளோ ஆசைகளை எனக்கு கொடுத்த நீ.. ஏன் அதை அடையுற தகுதியை மட்டும் எனக்கு கொடுக்கல, ஏன் ? பதில் சொல்லு ஏன்? யாரோட அன்புக்கும் தகுதி இல்லாமல் என்னை படைச்ச நீ! ஏன் இன்னும் என்னை உயிரோட வச்சு கஷ்டப்படுத்துற பேசாமல் என்னை கொன்னுடு… நான் எல்லாம் ஏன் உயிரோட இருக்கணும் ஏன்? ” என்று இறைவனிடம் கேள்வி கேட்டவன் ” இந்த விஷயம் விக்ரமனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும். அவன் என்னை பத்தி என்னை நினைப்பான். இவளை மாதிரி அவனும் என்னை தப்பா தானே நினைப்பான்.. அவன் மட்டும் அப்படி என்னை தப்பா நெனச்சா அடுத்த நொடி நான் உயிரோடவே இருக்க மாட்டேன். ” என்றவனுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.. நீருக்கு அடியில் பெரிய பெரிய மூச்சுக்கள் இழுத்து விட்டவன் அப்படியே மயங்கி சரிந்தான்.
மயங்கிய நிலையில் அவன் உதடுகள் உரைத்தவை இது மட்டுமே ” என்னை மன்னிச்சிடு விக்ரமா… ”

