Loading

எனதழகா – 37 ❤️

தன் பின்னிருந்து “யார் நீ? ” என்ற கேள்வி எழுந்தவுடன் தன்னை பின்னிருந்து அடையாளம் தெரியாமல் கூறுகிறாளோ என்று நினைத்தது ஒரு மனம். இல்லை தன் மேல் கோபமாக உள்ளாள். அதனால் தான் இப்படி  பேசுகிறாள் என்று ஒரு மனம் முடிவே செய்தது.

அவளை சமாளிக்க தெரியும், சமாதானமும் செய்ய தெரியும் என்ற ஒரே காரணத்தால் வேகமாக திரும்பி அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். ஆனால், அவ்வணைப்பில் திமிரவும் இல்லை, அதே போல் அவனை அவளும் அணைக்கவும் இல்லை.

திமிராமல் இருப்பதே ஆச்சர்யமாக இருந்தது என்றால், அணைக்காமல் இருப்பது ஒரு வகையான அதிர்ச்சியாக இருந்தது.

மெல்ல அவளை விட்டு விலகி அவளின் கண்களை நிமிர்ந்து பார்த்தான். அவளை அணைத்த போது உள்ள பயம் இந்நொடி அவளின் கண்களை பார்த்த பொழுது நீங்கியது.

அவளின் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டான். அவளின் கண்களைப் பார்த்து கொண்டே இருப்பது அவளுக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வை கொடுத்தது. அதற்கு மேல் முடியாது என்பது போல் கண்களை அவ்வறையில் சூழல விட்டாள். அப்பொழுதும் அவனின் பார்வை அவளுக்கு துயிலுரித்து அவளது நெஞ்சில் பாய்ந்தது.

அவளை அணைத்து இருந்த கைகளை சற்று கீழே இறக்கி முதுகின் வலது பக்கவாட்டில் இடுப்பில் இறக்கி அதை நன்கு இறுக்கி அவளுக்கு சிலிர்ப்பை உண்டாக்கினான்.

அவளும் அதற்கு ஒத்துழைத்து அவனின் சட்டை காலரை இறுக்க அணைத்தாள்.அருகில் அவளின் வதனத்தை கண்டவனுக்கு மோகம் உண்டாகியது.

அவளின் கார் குழல்கள் காற்றிற்கு அசைந்து நெற்றியில் விழுந்து ஆடி கொண்டிருந்தது. அழகான இரு விழிகளுக்குள் கருப்பு குண்டுமணி போல் கரு விழிகள் உள்ளுக்குள் ஓடி ஆடி விளையாடி கொண்டிருந்தது.அவளின் நாசிகளில் இருந்து வரும் மூச்சுக் காற்று இன்னும் அவனின் உடலுக்கு வெப்பத்தை ஏற்றியது. இறுதியாக இருக்கும் அவளின் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தது. அதனை ரசிக்கும் பொழுது  அவளின் சிகை அவளை போலவே தொந்தரவு செய்தது.

அவளின் வதனத்தை தொட்டும் தொடாமலும் அவளது முடியை அவளின் செவியின் பின்னால் சேர்த்து வைத்தவன் அப்பொழுது தான் கவனித்தான் அவளின் செவிகளில் தொங்கும் சிறு வளையம். அதன் மேல் இக்காலத்திற்கு ஏற்ப அடுக்கடுக்காக நான்கு இடத்தில் காது குத்தி அதில் கற்கள் மின்னியது. அதனை தொட்டு ஆராதித்தான்.

அப்பொழுது தான் அவனுக்கு நினைவலைகளாக தோன்றியது. ஒரு நாள், இதே போல் முதன் முறையாக காதின் பக்கவாட்டில் காது குத்திக் கொண்டு வந்தாள். எப்பொழுதும் போல் வந்தவுடன் அணைப்பவன் இன்றும் கன்னங்களோடு காதையும் சேர்த்து கைகளால் பிடித்து  முத்தமிட முனைந்தான்.

அழுத்திப் பிடித்ததில் அவள் அலறிவிட்டாள். அதோடு , ” இனிமே நான் நாலு தோடு போட்டு அதெல்லாம் ஆறுனதுக்கு  அப்புறம் தான் இந்த ஹக்கிங், கிஸ்ஸிங்லாம் . அது வரைக்கும் ஒன்னும் கிடையாது ” என்று கூறி அவனை முடிந்த அளவு அடித்து விட்டு சென்றாள்.

அத்தகைய நியாபகங்கள் மனதிற்கு இதமாக இருந்தது. அன்று அவள் வலிக்கிறது என்று இன்றே கூறியதாக நினைத்து  மயிலிறகால் வருடியது போல் மென்மையாக அவளின் செவி மடலை வருடி விட்ட  , அவனின் உஷ்ண மூச்சுகளால் ஊதி விட்டான். மொத்தத்தில்  மெய் சிலிர்த்து விட்டாள். அதில் அவன் மேலேயே சரிந்தாள்.

அவளின் நாடியை பிடித்து நிமிர்த்து மறுபடியும் அவளின் முகத்தில் ஊதி அவளை வெட்கமடைய வைத்து  , அவள் கன்ன சிவப்பையும், அவள் உடலின் கதகதப்பையும் உள்வாங்கி அவளின் ஆரஞ்சு சுளை போல் உள்ள அவளின் உதட்டின் உல்லாசத்தை அனுபவிக்க குனிந்து ஒரு அடி இடைவெளி விட்டு கண்கள் சொருக காத்திருந்தான்.

“ஏங்க ” என்று கேட்டவுடன், சடாரென்று தீச்சுட்டார் போல் விலகி அமர்ந்தான்.அவளை ஒரு மாதிரி பார்த்தவன் கன்னத்தில் அறைந்து விட்டான்.

வெளியில் நின்றிருந்த பரத்தும் நேரம்  கடக்கிறது என்று நினைத்து நிவானை அழைக்க உள்ளே சென்றான். அப்பொழுது தான் நிவானும் அறைந்தது.

அதில் கடுப்பாகினான் பரத்.” ஏன்டா எத்தனை தடவை தான் அடிப்பா ? இளிச்சவாயினு எதுவும் எழுதி ஒட்டிருக்கா ? கேக்க ஆள் இல்லைனு நினைச்சியா ? என்று கூறி சரமாரியாக அடித்தாள் ஆருஷி.

பரத் முறைத்து கொண்டே அருகில் வர, நிவான் “எதுக்கு இப்போ இந்த நடிப்பு?” என்று நிதானமாக கேட்டான்.

ஆருஷி நன்கு அமர்ந்து கொண்டு “நம்ம பிளான் மிஸஸ் மீராக்கு தெரிஞ்சுருச்சு. அந்த வீட்டு இரத்தம் தான அவங்களும். அதான் இடியட் மாதிரி கத்துனாங்க. இன்னைக்கு முழிச்சாங்க. மாட்டிக்கிட்டா பிரச்சனைனு இப்படி மாத்திக்கிட்டேன்” என்று நிவானுக்கு விளக்கம் கூறி விட்டு பரத்திடம் “நைட் வரும் போது நான் வெஜ் வாங்கிட்டு வா மறக்காமா ” என்ற கூறி விட்டு நன்றாக மெத்தையில் சாய்ந்து அமர்ந்தாள்.

பெருமூச்சு விட்ட நிவான் ” கொடுத்த வேலை என்னாச்சு? “

அவள் பொறுமையாக உடல் சோர்வு போக முறுக்கி கொண்டு ” ஹான் … ஓவர் ஓவர் ” என்று அவள் கூறியவுடன்  பரத்துடன் நிவானும் ஆச்சர்யப்பட்டான்.

“எப்படி” என்று நிவானும் , “என்னது சொத்தை கைப்பத்திட்டியா? “என்று பரத்தும் ஒரு சேரக் கேட்டனர்.

அந்நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு மூவரும் திடுகிட்டனர்.

🏙️AA சொலியுஷன்ஸ்

அர்ஜுன் சென்றதும் மூவரும் முழித்துக் கொண்டிருக்க, ஒரு சில நிமிடத்திற்கு பின் விசும்பல் சத்தம் கேட்டது.

யாரென்று திரும்பி பார்த்தால் சாரா தான் கண்கள் கலங்கி மூக்கை உறிந்து கொண்டு தொலைபேசியில் ஏதோ தேடி கொண்டிருந்தாள்.”பாதி நேரம் குழந்தை மாதிரி யோசிக்கிற “என்று அர்ஜுன் கூறியது மனதில் கூக்குரலிட்டது. எதுவும் கூறாமல் அவ்விடத்திலிருந்து நகர்ந்து விட்டான்.

பிரகாஷிற்கு சாராவின் குணம் பற்றி முன்பே தெரிந்து இருந்ததால் தலையில் அடித்துக் கொண்டு அவளை சமாதானம் செய்யும் பொருட்டு சாராவின் தொலைபேசியை வாங்கி அகிலனுக்கு கால் செய்தான்.

“பதட்டத்துல ஒரு போன் கூட வா பண்ண வராது. என்னைக்கு அர்ஜுன் சார் கிட்ட வாங்கி கட்டிக்கிற போறனு தெரில ” என்று அறிவுரை கூறும் பொழுது , ” பதட்டம் வந்தால் நீங்க நீங்களா இருக்க மாட்டீங்க . ஸ்னிக்கர்ஸ் சாப்பிடுங்க “என்று கதவின் இடுக்கில் ஒரு குரல் வந்தது. 

“எவன்டா அது? பெரிய பருப்பா இருந்தா முன்னாடி வந்து பேசுடா ? ” என்று சாரா கத்த, கதவை திறந்து ஆதிரா “போடா வெண்ணை கூப்பிடுறாங்கல !” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வர, ஆகாஷ் அங்கேயே நின்றான்.

திரும்பி பார்த்த ஆதிரா “ஏன்டா நிக்கிற, அதான் கூப்பிடுறால? ஓஓஓ……… தப்பா கூப்பிட்டேன். வாடா பருப்பு “

எனதழகா – 38 ❤️

“அய்யோ சார்! வேற ஏதோ ஞாபகத்துல பேசிட்டேன். மன்னிச்சிடுங்க சார் ” என்று சாரா பம்மினாள்.

பிரகாஷ் ஆதிராவும், ஆகாஷும் உள்ளே நுழைந்ததில் இருந்து  சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் நெளிந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்த ஆகாஷ் “உனக்கெனப்பா வலிப்பு இருக்கா இல்லை குளிர் ஜூரமா இப்படி நெளியுற? ” என்று வெள்ளந்தியாக கேட்டான் .

பிரகாஷ் “அய்யோ ஆமா சார் அய்யயோ இல்லை சார் ! “
“வேற அவசரமோ !” என்று தாடையில் கைவைத்து கொண்டே கூற , ” ஆமாம் சார். நான் கிளம்புறேன் ” என்று கிளம்ப எத்தனிக்கும் நொடி,

“சார், வெள்ளந்தியா எல்லாத்தையும் நம்பாதீங்க. அவன் சிரிக்கிறான் சார் அதுவும் நான் உங்களை  பருப்பு சொன்னதுக்கு ” என்று கூறிய சாரா ,பிரகாஷை மூக்கில் புகை வராத குறையாக முறைத்தாள்.

இதற்கு மேல் முடியாது என்று சத்தமாக பிரகாஷ் சிரிக்க, “பாருங்க எவ்ளோ திமிரு இவனுக்கு? இர்ரெஸ்பான்ஸிபில் இடியட் ” என்று கூற, ஆதிரா சிரித்துக் கொண்டே அதுவும் ஆகாஷின் தோளில் அடித்துக் கொண்டே ” இவள் சொல்லுறா பாரேன் உன்னை வெள்ளந்தினு ” என்று கூறினாள்.

“நீங்க பெரிய ரெஸ்பான்ஸிபில் இடியட்டோ ?  ” என்று ஆகாஷ் கடுப்புடன் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க, “என்ன சார்? என்ன சொன்னீங்க ? ” என்று சாரா கவனிக்காமல் மறுபடியும் கேட்டாள்.

“இல்லை , மேடம் அவர சொல்லுறீங்களே! நீங்க பெரிய ரெஸ்பான்ஸிபில் பர்ஷனா ? ” என்று ஏகத் தோரணையில நக்கலாக கேட்டான்.

“பின்ன, இல்லையா சார் !நீங்க யாரு? ” என்று கூறியவுடன், பிரகாஷ் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். அவனைப் பார்த்து ஆகாஷ் முறைத்தும் அதை கண்டுகொள்ளாமல் பிரகாஷ் சிரித்தான். இவனே இப்படியென்றால், ஆதிராவை சொல்லவே தேவையில்லை. அவள் வேண்டுமென்றே “யாருமா இவன்? ” என்று கேட்க, ” இப்போ இந்த கேள்வி தேவையா? ” என்று பற்களை நறநறவென கடித்துக் கொண்டு கேட்டான்.

” இரு பாண்டா, என்ன தான் சொல்லுறானு பாப்போம் ” என்று கூறி, “நீ சொல்லுமா? ” என்று சாராவின் பக்கம் திரும்பி கேட்டாள் ஆதிரா.

சாரா” என் பாஸ் சார் நீங்க “.

“எதே ” என்று கோரஸாக கேட்டனர் ஆதிரா மற்றும் ஆகாஷ்.

“இல்லை சார், அர்ஜுன் சார் என் பாஸ். அதே மாதிரி நீங்களும் எனக்கு  பாஸ். ஏன்னா, நீங்க என் பாஸோட ஆருயிர் தோழன் ” என்று சீரியஸாக கூறினாள்.

சாரா”அதோட “

ஆகாஷ் “போதும், இதோட நிறுத்திக்கலாம் . நான் கலாய்க்கலாம்னு வந்தா நீ கலாய்க்கிற . சரி , நல்லா இருந்துட்டு போங்க ” என்று கூறிய நொடி ,

என் ஃபியூஸ் உம் போச்சு..
என்ஃபியூஸ் உம்போச்சு
முடியாதுனு சொல்ல முடியாது..

ஆகாஷ் அதிர்ந்து திரும்பினான். சாரா பதறி “சார் இது  காலர் டியூன். நான் ஒன்னும் பண்ணல , பாருங்க !” என்று போனைக் காண்பித்தாள்.

மறுபடியும் யாரோ கால் செய்தனர். அதில் திரும்பவும்,

என் ஃபியூஸ் உம் போச்சு..
என் ஃபியூஸ்உம்போச்சு
முடியாதுனு சொல்ல முடியாது…..
மை பேபி ….
முடியாதுனு சொல்ல கூடாது.

அதில் அகிலனின் புகைப்படம் இருந்து, ஹப்பி என்று போட்டிருந்தது. புருவம் சுருக்கி பார்த்த ஆகாஷ் “யூ யூ ….. ” என்று திக்க, ஆதிரா தான் அவனின் தலையில் அடித்து அவள் எதுவோ கூற வந்தாள்.

அதற்கு முன், இவன் அவளின் வாயை தன் கையால் மூடி  , அவளின் நெற்றியில் அடித்து விட்டு வெளியில் ஓடினான். அந்நேரம் அர்ஜுன் மற்றும் அசோக் உள்ளே நுழைந்தனர்.

இவர்களின் சம்பாஷனைகளை கண்டு கொள்ளாமல், மீட்டிங்கிற்கு உண்டான அட்டவணையை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பொறுத்து பொறுத்து பார்த்த ஆகாஷ், ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல், அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த  மடிக்கணிணியை மூடினான்.

அதில் நிமிர்ந்து அர்ஜுன் மட்டுமில்லை , அசோக்குடன் சாரா மற்றும் பிரகாஷ் கூட அவனை முறைத்தனர். “டேய் , இல்லை மச்சான்… அது.. டேய் …… அது என்ன சொல்ல வந்தேனா…….” என்று ஆகாஷ் உளறினான்.

அதற்கு அர்ஜுன் நிமிர்ந்து உட்கார்ந்து “என்ன சொல்ல வந்த? ” என்று கேட்டான்.

ஆகாஷ் “எதுக்கு இப்ப ஸோல்டரை தூக்குற ? ஆர்ம்ஸ எதுக்கு டைட் பண்ணுற? மெதுவா கேட்டா சொல்ல போறேன் ” என்று இழுக்க, “ஹே…. எங்களுக்கு வேலைக்கு இருக்கு. உன்னை மாறி வெட்டி பய இல்லை நாங்க ” என்று கடுப்பில் வாய்க்கு வந்ததை கூறினான் அசோக்.

“ஆமாம்டா, நாங்களால் வெட்டி. நீங்களாம் பிஸி மேன் தான் . வாடா பாண்டா போலாம்  ” என்று ஆதிரா பொங்கி விட்டாள்.

அதோடு விடாமல் அருகில் வந்த ஆகாஷின் தலையில் அடித்து “இதுக்கு தான் சொன்னேன். ஒழுங்கா தாஸ் அப்பா வீட்டுக்கு போயிருந்தா அம்மா சிக்கன் பிரியாணி பண்ணி கொடுத்திருப்பாங்க. இல்லையா , ஏதாச்சும் ஹோட்டல் போயிருந்தா நல்லா சாப்பிட்டு இருந்திருக்கலாம். சொல்ல சொல்ல கேட்காமால் வந்ததோடு . இவனுங்க கிட்ட இப்படி பேச்சு வாங்க வேண்டியதா இருக்க தேவையா நமக்கு ” என்று கூறி ஆகாஷை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே வந்த ஆகாஷ் “எதுக்கு இவ்ளோ சீன். என்னமோ இப்போ தான் இவனுங்க புதுசா கலாய்க்கிற மாதிரி பண்ணுற ? ” என்று கேட்டான்.

ஆதிரா”இல்லைடா, இப்போ நம்ம கோச்சுக்கிட்டு போய்ட்டோம்னு இவனுங்க பின்னாடியே வருவானுங்க. அப்படியே பேசி கார்ட்டை வாங்கி ஷாப்பிங், ஹோட்டல் போகலாம் . எப்படி என் பிளான் “

ஆகாஷ் ” ஹி ஹி…… “என்று முப்பத்தி இரண்டு பல் தெரிய சிரித்தான்.

ஆதிரா “டன்டனா டன் ” என்று கூறி திரும்ப, அர்ஜுன் மற்றும் அசோக் ஒரு சேர இருவரையும் பார்த்துத் துப்பினர்.

கீர்த்தி☘️

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்