22 மாயோனின் மலரோவியம்

Loading

மாயோன் 22

அடுத்த நாளில் இருந்து வழக்கம் போல ஆய்வகத்துக்கு வந்தாள் வர்ஷா.  அதியனும்,சரத்தும் நந்தினியும் கூட அங்கு வந்திருந்தனர்.  ஆனால் வர்ஷா அவர்கள் யாரையும் திரும்பி கூட பார்க்கவில்லை..  தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்துவிட்டாள். தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த வித தலைகுனிவும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தவள்.. தலைகுனிந்து, தன் காதலை தனக்குள்ளே புதைத்து கொண்டு அவனை கடந்து சென்றாள்.

அவள் இங்கு வேலைக்கு சேரும் போதே நான்கு மாதம் கண்டிப்பாக இங்கு பணிபுரிந்தாக வேண்டும் என்று தேவன் கண்டிப்புடன் கூறி இருந்தார்.

மேலும் அதனை மீறி பணிக்கு வர மறுத்தால் அதனாலும் வேறு ஏதாவது பிரச்சனை வரக்கூடும் என்று எண்ணியவள், அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே மீண்டும் பணிக்கு வந்தாள்.

வர்ஷா, அதியனை விட்டு விலகி செல்வதையும். அதியன் அவளை வலியுடன் பார்ப்பதையும் அறிந்து கொண்ட நந்தினியோ அதியனை தனியாக அழைத்து ” வர்ஷாவிடம் லவ் சொல்லிட்டியா? எதுக்கு அவள் இப்படி பிகேவ் பண்ணுறாள் ” என்று கேட்டாள்.

” சொல்லிட்டேன் ஆனால்… ” மேலும் சொல்ல தயங்கினான் அதியன்

” ஏன்டா என்ன ஆச்சு ? நான் வேணும்னா அவள் கிட்ட பேசட்டுமா?” என்ற நந்தினி அங்கிருந்த வர்ஷாவை அழைக்க முற்படும் போது,

” அவளுக்கு என்னை பிடிக்கலயாமாம்டி போதுமா ? ப்ளீஸ் அவளை வற்புறுத்த வேண்டாம். இதை இத்தோட விட்டுடு நான் பார்த்துக்குறேன் ”

” உன்னை பிடிக்கலன்னு சொல்லிட்டாளா? என்ன நினைச்சுட்டு இருக்காள் அவள். உன்கூட ஊரு ஊரா சுத்துவாலாமாம் ஆனால் லவ் சொன்னா மட்டும் பிடிக்கலயாமா அவளுக்கு, என்ன மாதிரி பொண்ணு இவள் எல்லாம்… ”

” இனாப் நந்தினி. அவளை பத்தி தப்பா இன்னொருவார்த்தை பேசின பிரெண்டுன்னு கூட பார்க்க மாட்டேன். அவளுக்கு என்னை பிடிக்கலானாலும் பரவாயில்லை.. அது எங்க தனிப்பட்ட பிரச்சனை அதுல யாரும் தலையிட வேண்டாம்” என்று கோவமா கூறிய அதியன். வர்ஷாவை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

செல்லும் அவனை வேலை செய்தபடி ஓரக்கண்ணால் பார்த்த வர்ஷாவின் கண்கள் கலங்கி போனது. அவனது வலியை உணர்ந்தும் அவனை தன்னிடமிருந்து விலக்கி வைத்தாள்.

நந்தினி அதன் பிறகு வர்ஷாவிடமோ, அதியனிடமோ அவர்களது காதலை பற்றி பேசிக்கொள்வதில்லை.

அதியனுக்கு, வர்ஷாவின் பாரமுகம் மனதில் வலியை ஏற்படுத்தியது.. தன்னால் தான் அவள் இங்கு சாதாரணமாக செயல்பட தயங்குகிறாள்.. என்பதை உணர்ந்த அதியன் அவளை மேலும் துன்பப்படுத்த விரும்பாமல் ஆய்வகத்துக்கு வருவதை நிறுத்தி இருந்தான்.

இந்நிலையில் தான் தேவன் சக்ரவர்த்தி புதிதாக ஒரு ப்ராஜெக்ட்டை கையில் எடுத்தார். வெளிநாடுகளில் தயாரிக்க முடியாத தடைசெய்யபட்ட மருந்துகளை இங்கு இவரது நிறுவனம் மூலம் மாற்று முறையில் தயாரித்து மீண்டும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது. இது முழுக்க முழுக்க அரசுக்கு புறம்பான செயல் ஆகும்.. அந்த மருந்துக்களை இங்கு பயன்படுத்துவதும் கூட தண்டனைக்குரிய குற்றமாகும்.

பொதுவாக தேவன் இப்படியான செயலை செய்யும் போது தனியாக செய்ய மாட்டார்.

தவறான செயல்களை தனியாக செய்வது மிகவும் ஆபத்தானது என தேவன் நன்கு அறிவார். அதனால் தான் இந்த ப்ராஜெக்ட்டில் சரத்தையும், நந்தினியையும் பாட்னர்ஸ் ஆக்கி கொண்டார்.

முந்நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ப்ராஜெக்டில் அறுபது சதவீதம் தனக்கும், இருபது சதவீதம் நந்தினிக்கும், மீதி இருபது சதவீதம் சரத்திற்கும் என பங்கு வைத்தார் தேவன்.

இருபது சதவீதம் எனும் போது அவள் பங்கு பணம் அறுபது கோடி என கணக்கு போட்டு பார்த்த நந்தினி… எந்த கேள்வியும் கேட்காமல் அந்த திட்டத்திற்கு சரி என்று சம்மதித்துவிட்டாள்.

சரத்திற்கு இந்த பணம் எல்லாம் பெரியவிஷயம் அல்ல.. ஆனால் தேவனுக்காக இதற்கு சம்மதித்தான். தேவன் மீது அந்த அளவுக்கு ஒரு கண்மூடி தனமான நம்பிக்கை வைத்திருந்தான் சரத்.

தேவன் பணத்திற்காக இந்த திட்டத்தை கையில் எடுத்தது உண்மை தான். ஆனால் அதையும் மீறி இதில் வேறு ஒரு விஷயமும் அடங்கியிருந்தது.

பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து இன்று தான் அந்த ப்ராஜெட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாவதாக இருந்தது. தேவன் கையெழுத்திடவும் அவனை தொடர்ந்து நந்தினியும், சரத்தும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அன்று ஒருநாள் வர்ஷா ஆய்வகத்தில் வைத்து தன் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது என்பதை பற்றி வர்ஷா தன் தோழியிடம் பேசிக்கொண்டிருக்க… அப்போது அவளை கடந்து சென்ற நந்தியின் காதில் ‘மாப்பிளை… போலீஸ்… நிச்சயதார்தம் ‘ என்ற வார்த்தை மட்டும் கேட்கவே… நந்தினிக்கு தூக்கி வாரி போட்டது. மேலும் அங்கு நந்தினியை கண்டதும் வர்ஷா தனது போனை கட் பண்ணவும் ‘ வர்சாவுக்கு தான் நிச்சயம் போல அது தான் அதியனை விட்டு விலகி போறாள்.. இப்போ கூட என்ன பார்த்த உடனே போனை கட் பண்ணுறாள் ‘ என்று தவறாக புரிந்து கொண்டாள் நந்தினி.

இந்த தவறான புரிதல் அவளோடு மட்டும் நிற்காமல்… நேராக இந்த தகவலை அதியனிடம் வந்து கூறினாள்.

அரைகுறை அறிவு மட்டும் ஆபத்து இல்லை… அறை குறையான புரிதலும் கூட ஆபத்து தான்.

வர்ஷா ஒன்றை தன் தோழியிடம் பேச…  ‘அது என்னது?’  என்று முழுவதும் கேட்டு தெளிவடையாமல் அதியனிடமும் சென்று ‘ அவளுக்கு நிச்சயதார்த்தம் போல அது தான் உன்னை விட்டு விலகி போறாள்.. அவளை மறந்துட்டு அடுத்த வேலையை பாரு ‘ என்று அட்வைஸ் பண்ணி விட்டு அங்கிருந்து சென்றாள் நந்தினி.

நந்தினி வந்து இந்த விஷயத்தை சொன்னதிலிருந்தே குடிக்க தொடங்கி இருந்தான் அதியன்.. நேரம் ஆக ஆக போதை தலைக்கேறியது. மனம் தடம் மாற தொடங்கியது.

” என் வர்ஷாவுக்கு இன்னொருத்தனோட நிச்சயமா?  இல்லை கண்டிப்பா இது நடக்காது. அவள் என்னை விட்டு போக மாட்டாள். போகவும் விடமாட்டேன். இது எல்லாம் பொய் தான். இப்போவே நான் அவள் கிட்ட போய் பேசுறேன் ” என்று வெவ்வேறு உணர்வுகளின் பிடியில் தத்தளித்தவன் நேராக காரை எடுத்துக்கொண்டு ஆய்வகம் நோக்கி பயணித்தான்.

காரில் இருந்து கீழே இறங்கிய அதியன், கசங்கிய தன் சட்டையையும் கலைந்த தன் கேசத்தையும் சரி செய்தபடி முகத்தை துடைத்து கொண்டு உள்ளே வந்தான்.

வர்ஷா அங்கு பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து கொண்டிருந்தாள்.

அங்கு அவளை தவிர வேறு யாரும் இல்லை.

சரத், தேவன் மற்றும் அவர்களுடன் சேர்ந்து பணி செய்பவர்கள் என எல்லாரும் கீழ் தளத்தில் புது ப்ராஜெக்ட்டுக்கான மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

மது கொடுத்த போதையில் தள்ளாடியபடியே உள்ளே வந்த அதியனது கரம் பட்டு டேபிளின் மீதிருந்த டெஸ்ட் ட்யூப் ட்ரே கீழே விழுந்து சிதறியது.

அந்த சத்தம் கேட்டு அரண்டு பின்னால் திரும்பி பார்த்தாள் வர்ஷா. அங்கு அதியனை அந்த நிலையில் கண்ட வர்ஷாவுக்கு பயமும், பதட்டமும் தொற்றிக்கொண்டது.

” ஒஹ் சாரி.. நான் தான் உடைச்சிட்டேன்னு தேவன் அண்ணா கிட்ட சொல்லிடு ” என்று கூறியபடி பதட்டத்துடன் நின்றவளின் அருகில் தள்ளாடியபடியே வந்தான்.

அவன் தன்னை நோக்கி வருவதை அறிந்த வர்ஷா அவனிடம் இருந்து விலகி செல்ல முற்பட்டாள். தன்னை கடந்து செல்ல துணிந்தவளின் கரம் பற்றி தன்னை நோக்கி இழுத்தான் அதியன்.

அவன் இழுத்த வேகத்தில் நிலை தடுமாறியவள் அவன் மீது மோதி நின்றாள்.

அவனது அடாவடித்தனமும் அவனிடம் இருந்து வரும் மது வாடையும் பெண்ணவளை முகம் சுளிக்க வைத்தது..

அவளது முகமாற்றத்தை பார்த்தவன்” சாரிமா கொஞ்சம் மனசு கஷ்டமா இருந்ததா அது தான் ட்ரிங்க் பண்ணிட்டேன்.  ”

” இதெல்லாம் எதுக்காக என்கிட்ட சொல்லுறீங்க ? முதலில் என்னை விட்டு தள்ளி போங்க” என்றவள் அவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ள முயற்சித்தாள். அவளது முயற்சிகளை இதழோரம் துளிர்த்த புன்னகையுடன் பார்த்தவன்… மெல்ல அவளை தன் கையணைவில் இருந்து விடுவித்தான்.

அவன் தனது பிடியை தளர்த்தவும் வேகமாக அவனிடமிருந்து விலகி நின்றவள் அங்கிருந்து செல்ல முயலும் முன் ” உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வர்ஷா ” என்று அவளை தடுத்து நிறுத்தினான் அதியன்.

” உங்க கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்லை.. நான் போறேன் ” என்றவளை வலுவாக பிடித்து சுவரில் சாயவைத்தவன் தானும் அவள் மீது தேகம் படர சாய்ந்து நின்றான்.

” என்ன பண்ணுறீங்க? என்னை விடுங்க ” என்று திமிரியவளின் நடுக்கத்தை உணர்ந்து தன் கரம் கொண்டு அவள் கன்னம் தாங்கி அவளது நடுக்கத்தை குறைக்க முற்பட்டான் அதியன்.

அவனது தொடுகை இன்னும் அவளுக்கு பயத்தை கொடுத்ததே தவிர ஒரு சதவீதம் கூட அவளது நடுக்கத்தை குறைக்கவில்லை.

” என்னை விட்டு போய்டுவியா? வர்ஷா.. என்னை விட்டுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ண உனக்கு எப்படி டி மனசு வந்தது .. ஏன் என்னை ஆசை காட்டி ஏமாத்தின ? உன்னை பார்க்குற வரைக்கும் சந்தோஷமா இருந்தேன். என்னைக்கு உன்னை பார்த்தேனோ என் நிம்மதி சந்தோசம் எல்லாம் மண்ணோட மண்ணா போச்சு.. என்னை காயப்படுத்தவே கடவுள் உங்களை எல்லாம் படைச்சு அனுப்பி விட்டிருப்பான் போல!! ” என்று வலியுடன் கூறிய அதியனது கண்கள் கலங்கி இருந்தது.

” போதையில் எதையாவது உளராமல் தள்ளி போங்க.. எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம் ”

” என்ன நாளைக்கு பேசிக்கலாம்? என்னடி நாளைக்கு பேசிக்கலாம் ஹான்? நாளைக்கு நீ என்னை விட்டுட்டு வேற எவனயாவது கல்யாணம் பண்ணிட்டு போவ… நான் உன்னையும் இழந்துட்டு பைத்தியகாரனா தெருத்தெருவா அலையனும் அது தானேடி உன் ஆசை ”

” இப்போ நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரிய போறது இல்லை என்னை விடுங்க ” என்றவள் அவனை தன்னில் இருந்து பிரிக்க போராடினாள்.

” அப்படி எல்லாம் உன்னை விட்டுடுவேன்னு நினைக்காத.. என்னை மீறி உன்னை எவனும் கல்யாணம் பண்ண முடியாது.. பண்ணவும் விட மாட்டேன். வாழ்ந்தாலும், செத்தாலும் நீ இந்த அதியனோட பொண்டாட்டியா தான் இருப்ப ” என்றவன் நொடியும் தாமதிக்காமல் அவளது பூவிதழை தன் இதழ் கொண்டு வன்மையாக சிறை செய்தான்.

அவனது தீண்டலில் மனம் நொந்தவள் கண்ணீர் விட்டு அழவும்.. அவளது கண்ணீர் துளிகள் அதினது கன்னத்தை நிறைத்தது.

அதனை உணர்ந்து அவளை விட்டு விலகியவன்.. கண்களை மூடி தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தான்.

” ஏன்டி என்னை இப்படி எல்லாம் நடந்துக்க வைக்கிற? நான் உங்கூட ஆசைப்பட்டது இப்படி ஒரு வாழ்க்கையை இல்லைடி. உன்னை முறைப்படி கல்யாணம் பண்ணனும்.. சந்தோஷமா உன்கூட வாழனும். உன்னை நிறையா காதலிக்கணும்.. உன்னால நான் அதிகமா காதலிக்கப்படனும்.. அப்போ அப்போ உன்கூட சண்டை போடணும், நீ கோவபடும் போது உன்னை நான் சமாதான படுத்தனும்.. நீ என் புள்ளையை வயித்துல சுமக்கும் போது நான் உன்னையும் நம்ம புள்ளையையும் என் நெஞ்சுல சுமக்கணும்.. உன் வலியை என் வலியா உணரனும்… உன்னை உள்ளங்கையில் வச்சு தாங்கனும்…   நம்ம பையனும் என்னை மாதிரியே உன் மேல பாசமா இருக்கணும், அதுக்காக நான் அவன் மேல பொறாமைபடனும்.. நான் உன்னை ஏதாவது சொன்னால், அதுக்கு அவன் என்னை பொய்யா அடிக்கணும், நீ அவனை தடுக்கணும், நான் வலிக்கிற மாதிரி நடிக்கணும், இப்படி கடைசிவரை உன்னை கண்ணுக்குள்ளேயே வச்சு பார்த்துக்கனும்.. சாகும் போதும் உன் கையை பிடிச்சிட்டு உன் கூடவே இருக்கணும்டி.. அப்படியே நான் உன்னை விட்டுட்டு முன்னாடியே இறந்து போயிட்டால்.. அடுத்த நொடியே உன்னையும் என்கூட கூட்டிட்டு போயிடுவேன், உன்னோட தனிமையில் கூட நான் தான் நிறைஞ்சு இருக்கணும்” என்றவன் அவளது கண்ணீரை துடைத்து விட்டான். அவன் கூறியதை எல்லாம் விழிவிரித்து சிலையாக நின்று கேட்டுக்கொண்டிருந்தாள் வர்ஷா.

” என்ன சொல்லி என் காதலை உனக்கு புரியவைக்கிறதுன்னே தெரியலடி ஆனால் என்னை தவிர வேற யாரையாவது கல்யாணம் பண்ணனும்ன்னு நீ நெனச்சா உன்னையும் கொன்னுட்டு, நானும் செத்துருவேன். ” என்று ஆக்ரோஷமாக கூறியவன் கைகளை மடங்கு அருகில் இருந்த கண்ணாடி மேசையில் ஓங்கி குத்தினான்.

அவனது வலிமையால்  கண்ணாடி மேசை உடைந்து சிதறியது… கண்ணாடி குத்தியதில் கரத்தில் இருந்து ரத்தம் வடிய அதனை பார்த்து பதறியப்படி அவன் அருகில் வந்த வர்ஷாவை கைநீட்டி தடுத்தவன் ” என்னை ரொம்ப படுத்துறடி… இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்தால் கூட உன்னை ஏதாவது பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு…நான் போறேன் போடி” என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு சென்றான். செல்லும் அவனை வேதனையுடன் பார்த்த வர்ஷா சுவரில் சாய்ந்து நிற்க.. விழியோரம் கண்ணீர் வழிந்தது.

நடந்த அனைத்தையும் மறைந்து கொண்டு பார்த்தபடி நின்றிருந்த தேவன் சக்ரவர்த்தி இதழ் வளைத்து வன்மமாக சிரித்து கொண்டார்.

****

அர்ஜுனின் காப்பகத்தில் இருந்து பத்து பேர் காணாமல் போயிருந்தனர்.

அப்போது விக்ரமன் அவனது நண்பணின் திருமணத்திற்காக வெளிநாடு சென்றிருந்தான். இந்நிலையில் இந்த தகவலை விக்ரமனது பார்வைக்கு கொண்டு செல்ல விரும்பாத அர்ஜுன், விஜய் மூலம் அந்த வழக்கை பார்த்து கொண்டார்.

*****

தேவனது முந்நூறு கோடி ரூபாய் ப்ராஜெக்ட் முடிந்து தயாரித்த மருந்துக்களை எல்லாம் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தனர்..

அந்த ப்ராஜெக்ட் சம்மந்த பட்ட ஒப்பந்த பத்திரம் தொடக்கம் அனைத்து கோப்புகளையும் எரிக்க சொல்லி சரத்திடம் கொடுத்தான் தேவன்.

” எதுக்காக அண்ணா இது எரிக்க சொல்லுறீங்க ? ”

” தவறு செய்யுறது தவறில்லை ஆனால் அதை தடயமே இல்லாமல் செய்யணும்.. அப்போ தான் முன்னேற முடியும். ” என்று கூறியவன் அந்த கோப்புகளை எல்லாம் எடுத்து டேபிளின் மீது வைத்தான்.

அப்போது அங்கு வந்தாள் நந்தினி.. டேபிளின் மீதிருந்த பாதி காலியாக இருந்த அந்த மருந்து பாட்டிலை பார்த்தவள் ” அது தான் எல்லாத்தையும் அனுப்பிட்டோமே சார் இந்த பத்து பாட்டில் மட்டும் இங்கயே இருக்கு.. அதுலயும் கொஞ்சம் கொஞ்சமா தான் மருந்து இருக்கு. இதை யூஸ் பண்ணிடீங்களா என்ன? ” என்று கேட்டாள் நந்தினி.

” ஆமா ஆனால் இந்த பாட்டிலுக்கு எல்லாம் வேற ஒரு வேலை இருக்கு காரணமா தான் தனியா எடுத்து வச்சு இருக்கேன்”

” கேட்கணும் நெனச்சேன் சார் இது எந்த மாதிரி மருந்து ? ”

” இதுவும் ஒரு விதமான போதை மருந்து தான் நந்தினி ”

” ஒஹ் இது எப்படி வேலை செய்யும் சார் ? ” என்ற நந்தினி அங்கு இருந்த ஒரு பாட்டிலை கையில் எடுத்து வைத்துக்கொண்டு கேட்டாள்.

” உனக்கு அவளோ ஆர்வம் இருந்தால் யார் உடம்பிலாவது இன்ஜெக்ட் பண்ணி பாரு.  ஆனால் ஒரு விஷயம் 0.5 மில்லி மருந்து மட்டும் இன்ஜெக்ட் பண்ணு அப்போது தான் ரிசல்ட் சரியா தெரியும் ”

” ஒன்னும் பிராப்ளம் இல்லையே சார் ”

” அதெல்லாம் ஒன்னும் இல்லை நந்தினி, பட் அந்த அளவை மட்டும் மறந்திடாத? ”

” ஓகே சார் ” என்று கூறிய நந்தினி அந்த மருந்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

” அப்போ இது வெறும் போதை மருந்து தானா அண்ணா? ஆனால் எனக்கு என்னமோ இதுல வேற ஏதோ பிராப்ளம் இருக்கும் போல தோணுது.” என்று சரத் சந்தேகமாக கேட்டான்.

” சரியா சொன்ன சரத், நான் சொன்ன மாதிரி வெறும் 0.5 அளவு இந்த மருந்தை யூஸ் பண்ணா ஒரு பிரச்சனையும் இல்லை. இது அதிகப்படியான போதையை மட்டும் தான் கொடுக்கும். அந்த 0.5 மில்லி மருந்து செலுத்தினாலே ஐந்து மணி நேரம் நம்ம என்ன பண்ணுறோம்ன்னு நமக்கு தெரிஞ்சாலும் நம்ம செயலை நம்மாலயே கட்டுபடுத்த முடியாது. நம்ம பண்ணுறது தப்புன்னு தெரிஞ்சாலும் கூட அதை தடுக்க முடியாது. இதுவே இந்த மருந்தில் 3 மில்லியை மனித உடலில் செலுத்தினால் கை, கால் செயல்படாமல் போய்டும்.  அதுவே 5 மில்லியை செலுத்தினால் உடனே மாரடைப்பு ஏற்பட்டு இறந்திடுவாங்க” என்று தேவன் நிதானமாக கூற.. அதிர்ந்தான் சரத்.

” இவ்ளோ ஆபத்தான மருந்தை நம்ம ப்ரோடியூஸ் பண்ணி அனுப்பினதால நமக்கு எதுவும் பிரச்சனை வந்திடாதே ”

” கண்டிப்பா வரும்.. இது தடை செய்யப்பட்ட மருந்து… அதுக்கு தான் இந்த பயிலை எரிச்சு தடையத்தை அழிக்க சொன்னேன்”

” என்ன சொல்லுறீங்க அண்ணா எனக்கு ஏதோ பயமா இருக்கு ? ”

” அது தான் எல்லாத்தையும் அனுப்பி விட்டாச்சே சரத்.. இனி அந்த அளவுக்கு எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லைடா பிரீ ஆஹ் விடு ”

” இதை நீங்க நந்தினி கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லை, அவள் யாருக்காவது அந்த மருந்தை கொடுத்து வேற யாருக்கும் எதுவும் ஆகிட போகுது. ”

” அதெல்லாம் ஒன்னும் ஆகாது சரத்.. அவள் அப்படியே யாருக்காவது அந்த மருந்தை கொடுத்தாலும் ஒன்னு அவள் தங்கைக்கு கொடுப்பாள், இல்லை அவள் மாமனுக்கு கொடுப்பாள் விடு பார்த்துக்கலாம். ஹான் மறக்காமல் இந்த பைலை எரிச்சிடு ” என்ற தேவனது அலைபேசி ஒலித்தது.. அழைப்பை ஏற்றவன் பேசியபடியே வெளியே சென்றான்.

அந்த கோப்புகளை எரிப்பதற்காக எடுத்த சரத்தின் அலைபேசி சிணுங்கியது.. எதிர்முனையில் அவனது தற்போதைய கேர்ள் பிரென்ட் பேசினாள்.. அவளது குரல் கேட்டு கிறங்கியவன்.. பிறகு வந்து கோப்புகளை எரித்து கொள்வோம் என்ற எண்ணத்தில் போன் பேசியவாறே கோப்புகளை டேபிள் ட்ராவில் வைக்க சென்றவன் கவனிக்காமல், பைலை அதனுள் வைக்காமல் வெறுமனவே பூட்டி விட்டு வெளியே சென்றான். அந்த ஒப்பந்த பத்திரமோ பைலுடன் சேர்ந்து கீழே விழுந்து கிடந்தது.

கோணிகள் ப்ளாஸ்கை வாஷ் செய்து அதனை அடுக்கி வைத்து கொண்டிருந்தாள் வர்ஷா.. அப்போது அவளை நோக்கி வந்த தேவன் தனது கையில் இருந்த சில பைல்களை அங்கிருந்த டேபிளில் வைத்து விட்டு ” வர்ஷா இந்த பையில்ல இருக்கு பேபர்ஸ் எல்லாம் தேதி பார்த்து வரிசை படுத்தி வச்சிடு  ” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

” ஓகே சார் ” என்ற வர்ஷா அந்த பையிலை எடுக்க போகும் நேரம் கரம் நழுவி கோப்புகள் கீழே விழுந்தது.. கீழே கிடந்த பைல்களை எல்லாம் எடுத்து டேபிள் மீது வைத்தாள் வர்ஷா. அதில் அந்த ஒப்பந்த பத்திரம் அடங்கிய கோப்புகளும் இருந்தது… அது அவளுக்கோ தேவனுக்கோ தெரியாது.

அப்போது சரியாக நேரம் இரவு 8 மணியாக இருந்தது.

மீண்டும் அறைக்குள் வந்த தேவன் ” டைம் ஆச்சு இல்ல வர்ஷா நீ கிளம்பு ” என்றான்.

” சார் பையில் அரேஞ் பண்ண சொன்னீங்க ”

” வீட்டுக்கு எடுத்துட்டு போய் கூட பண்ணிட்டு வா வெறும் லேப் அப்பாரட்டஸ் வாங்கின பில் தான். பிரச்சனை இல்லை ” என்று கூறியவனுக்கு மீண்டும் அழைப்பு வரவே அழைப்பை ஏற்றபடி வெளியே சென்றான்.

வர்ஷாவும் அந்த பைலுடன் சேர்த்து இவர்களது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பத்திர பைலயும் எடுத்துக்கொண்டு விக்ரமனது வீட்டிற்கு சென்றாள்.

 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்