21 மாயோனின் மலரோவியம்

Loading

மாயோன் 21

விக்ரமனிடம் அலைபேசியில் பேசிவிட்டு அதியனை நோக்கி திரும்பினாள் வர்ஷா.

அதுவரை யோசனையுடன் இருந்த அதியனின் முகம், அவளை தெளிவாக பார்த்தபடி ” விக்ரமன் யாரு ? ” என்று கேட்ட நொடி.. அவனை முறைத்து பார்த்த வர்ஷா, கோவில் படிகளில் இருந்து வேகமாக கீழே இறங்க தொடங்கினாள்.

” வர்ஷா உன்கிட்ட தான் கேக்குறேன் அது யாரு ? ” என்றபடி அவனும் அவளை பின்தொடர்ந்தான்.

” என்ன சந்தேகமா? நீங்க என்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணி அஞ்சு நிமிஷம் கூட ஆகலை. அதை நான் அக்ஸப்ட் பண்ணாத அப்பவே இந்த கேள்வி எல்லாம் கேக்குறீங்க. ஒரு வேளை நான் அக்ஸ்ப்ட் பண்ணா? என்ன என்னெல்லாம் கேள்வி கேப்பீங்க?  ஒரு பொண்ணு ஒரு பையன் கிட்ட பேசிட கூடாதே, உடனே அவன் யாரு ? என்னென்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவீங்க.  இதை நான் உங்க கிட்ட இருந்து கொஞ்சம் கூட எதிர்பார்க்கல அதியன்” என்று ஏதேதோ பேசியவள் வேகமாக படி இறங்கினாள்.

அதியன் அப்படி கேட்டதன்  அர்த்தமே வேறு, ஆனால் இவ்ளோ எதையோ புரிந்து கொண்டு மேலும் அவனை காயப்படுத்திவிட்டு சென்றாள். எதற்கெடுத்தாலும் தவறு கண்டுபிடித்து பேசுபவளிடம் அவனும் எதை கூறி, தன் உண்மை நிலைமையை நிரூபிக்க முடியும்.

இனி இவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று எண்ணியவன் மௌனமாக அவளை பின் தொடர்ந்து  சென்றான்.

இருவரும் கார் இருக்கும் இடத்தை அடைந்ததும் ” வண்டியில் ஏறு வர்ஷா ” என்று கூறினான் அதியன்.

”  உங்க மனசுல என்னை பத்தி இப்படி ஒரு எண்ணம் இருக்கும் போது. நான் தனியாவே போய்கிறேன். இதுக்கு மேல ரெண்டு பேரும் சேர்ந்து போறது சரி வராது ” என்றவள் தனியே டேக்ஸி பிடிக்க சென்றாள்.

” இங்க பாரு வர்ஷா. நான் என் விருப்பதை சொன்னேன் அவ்ளோதான். அதுக்காக நான் உன்னை கட்டயப்படுத்தவும் மாட்டேன் காயப்படுத்தவும் மாட்டேன். எந்த நம்பிக்கையில் நீ என்கூட இங்க வந்தியோ, அந்த நம்பிக்கையை ஒரு நாளும் நான் பொய்யாக்க மாட்டேன். எப்படி உன்னை இங்க அழைச்சுட்டு வந்தேனோ, அதே போல உன்னை கொண்டு போய் விட்டுடுறேன். ட்ரெஸ்ட்  மீ இதுக்கு மேல காதலை சொல்லி உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். தயவுசெய்து என்கூட வா ” என்றவன் காரின் பின்பக்க கதவை திறந்து விட்டு அவளை அமர சொல்ல.. அவளோ அவனை முறைத்து பார்த்தபடி முன் பக்க கதவை திறந்து அமர்ந்து கொண்டாள்.

அவனோ அவள் செயலை புரியாமல் பார்க்க… ” எனக்கு பின்னாடி சீட் ஒத்துக்காது ” என்றாள் வர்ஷா அவன் முகத்தையும் பார்க்காமல்..

” ம்ம்ம்  சீட் பெல்ட் போட்டுக்கோ ” என்ற அதியன் டிரைவர் சீட்டுல் வந்து அமர்ந்து கொண்டான்.

இருவருக்கும் இடையே சிறு ஊடல் இருந்த போதிலும் மறைமுகமாக ஒருவர் மீது ஒருவர் அக்கறையுடன் தான் இருந்தனர்.

பயணத்தின் போது தேவை இல்லாமல் ஒரு வார்த்தை கூட வர்ஷாவிடம் அதியன் பேசவும் இல்லை. ஒருமுறை கூட அவளது முகத்தை திரும்பிப் பார்க்கவும் இல்லை..  ஆனால் அவளோ ஓராயிரம் முறை அவன் பார்வைக்காக ஏங்கி அவனது முகம் பார்த்தபடி பயணித்தாள்.

ஒரு மாலை பொழுதில் விமானம் மூலம் மும்பையை வந்தடைந்தனர் வர்ஷாவும் அதியனும்.

” டைம் ஆச்சு.. நானே உன்னை உங்க வீட்டில் விட்டுடுறேன், என்கூட வா ” என்று அதியன் சொன்னான்..

” ஒன்னும் தேவை இல்லை நான் டேக்ஸியில் போய்க்குவேன், அப்புறம் நான் உங்க கூட எதார்த்தமாக தான் பழகினேன். தேவையில்லாமல் எதையும் நினைச்சு உங்க மனசை காயப்படுத்திக்காதீங்க ” என்ற வர்ஷா, அவனை கடந்து சென்று டேக்ஸி பிடித்து விக்ரமனது இல்லம் நோக்கி பயணித்தாள்.

அவனிடம் ‘தன்னை நினைக்கவேண்டாம்’ என்று கூறியவள் நிமிடத்திற்க்கு நிமிடம் அவனை மட்டுமே நினைத்து கொண்டிருந்தாள்.

என்ன தான் எதார்த்தமாக பழகினோம் என்று கூறினாலும் ‘எதார்த்ததிற்கும்  ஒரு எல்லை உண்டு’ என்பதை இங்கு பலரும் மறந்துவிடுகின்றனர்.

நாம் ஒருவரிடம் பழகும் போது நாம் என்ன நினைத்து பழகுகிறோம் என்பதை விட, நம் செயல்கள் நம்மிடம் பழகுபவரின் மனதில் எந்த வித தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்து பழக வேண்டும்.

நட்பானாலும் சரி,காதலானாலும் சரி அனைத்து உணர்வுகளுக்கும் ஒரு வரைமுறை உள்ளது. நட்பில் காதலை தேடுவதும், காதலில் நட்பை தேடுவதும் தவறில்லை ஆனால் அதில் யார் ஒருவரின் உணர்வுகளும் மிதிக்கப்பட கூடாது.

உணர்வுகள் எல்லை மீறும் போது உறவுகளும் அழிந்து போக கூடும்.

தன்னை கடந்து செல்பவளை  வலியுடன் பார்த்தவாறு நின்றிருந்த அதியனது தோளில் கை வைத்தான் சரத்.

” என்னடா செம்ம ஹேப்பியா ” என்று அவன் ஒரு மார்க்கமாக கேட்க..

அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான் அதியன்.

” என்னடா கேட்டுட்டே இருக்கேன் பதிலே காணோம் ”

” கொஞ்சம் அமைதியா வண்டியை எடுக்குறியா ? தலைவலிக்குது” என்ற அதியன் இருக்கையில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

வீட்டிற்குள் வந்த வர்ஷாவிடம் ” பிரென்ட் கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாடா ? ” என்று ஜோதி கேட்க..

நொடியில் அதியனது நினைவுகள் வர்ஷாவின் மனதில் தோன்ற கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தி கொண்டு ” விக்ரமன் எங்க ம்மா ” என்று கேட்டாள்.

” அவன் ரூம்ல தான்டா இருக்கான். ஏன் என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா? ”

” ஒன்னும் இல்லை ம்மா ”

” சரி வா சாப்பிடலாம் ”

” எனக்கு வேண்டாம் ம்மா பசிக்கல ”

” ஏன் பசிக்கல , உடம்பு எதுவும் சரி இல்லையா ?”  என்று அவளிடம் கேட்ட ஜோதி எழுந்து வந்து வர்ஷாவின் கழுத்தில் கைவைத்து உடலின் வெப்ப நிலையை ஆராய்ந்தார்.

” அதெல்லாம் ஒன்னும் இல்லை ம்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிடும்”

“சரி டா. அப்ரோம் நாளைக்கு உன் நிச்சயத்துக்கு ட்ரெஸ் எடுக்க போகணும் ரெடியா இரு ” என்று ஜோதி கூற.. ஆழ்ந்த பெருமூச்சு எடுத்த வர்ஷா

“ம்ம்ம் சரிமா.. கொஞ்சம் நேரம் யாரும் என்னை தொல்லை பண்ணாதீங்க தலை வலிக்குது” என்றவள் தனது அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டாள்.

அவளது செயல் கண்டு யோசனையுடன் ஜோதி அமர்ந்திருக்க.. தன் அறையில் இருந்து வெளியே வந்தான் விக்ரமன்.

” என்னமா ஏதோ யோசனையில் இருக்கீங்க போல ? ”

” ஆமாடா வர்ஷா முகமே சரி இல்லை, என்னன்னு கேட்டால் தெளிவாவே பதில் சொல்ல மாட்டிங்குறாள் ”

” வந்துட்டாளா ? அப்ரோம் ஏன் என்னை வந்து பார்க்கல ? ”

” அது தான் எனக்கும் தெரியல வந்ததும் உன்னை தான் கேட்டாள், அப்ரோம் தலை வலிக்குதுன்னு சொல்லிட்டு போயிட்டாள். ”

” ம்ம்ம் நான் போய் பார்க்குறேன் ” என்ற விக்ரமன் நேராக வர்ஷா இருக்கும் அறையின் கதவை தட்டினான்.

அப்போது தான் பிரேஷ் ஆகி, முகம் துடைத்து கொண்டிருந்தவள் நிதானமாக வந்து கதவை திறந்தாள்.

அங்கு விக்ரமனை கண்டு ” விக்ரமா ” என்றவளது குரல் நலிந்து ஒலித்தது.  அதை உணராதவனா விக்ரமன்?

” என்ன ஆச்சு தேவா ? ” என்று கேட்டான் விக்ரமன்.

“ஒன்னும் இல்லை ” என்று தலையை இருபக்கமும் ஆட்டியவளின் கண்களில் இருந்து தன்னையும் மீறி ஒரு துளி கண்ணீர் வழிந்தது. அதை கண்டு பதறி போனான் விக்ரமன்.

” டேய் தேவா என்னடா ? ” என்று கேட்ட விக்ரமனை அணைத்து கொண்டவள்.

” என்னால முடியல விக்ரமா? ஏதோ தப்பு பண்ணுற மாதிரி மனுசு முழுக்க உறுத்திட்டே இருக்கு” என்று மௌனமாக அழ தொடங்கினாள்.

அவளுக்கு என்ன வேண்டும் என்பது அவளுக்கே தெரியவில்லை. ஜோதிக்காக இந்த திருமணத்தை செய்து கொள்ள முடிவெடுத்தவளால் தன் மனதை ஒருநிலை படுத்த முடியவில்லை… மனம் எதையோ தேடி அலைபாய்ந்து கொண்டிருந்தது.

“என் தேவா என்னைக்கு தப்பு பண்ண மாட்டாள். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு.. எதுவானாலும் என் கிட்ட சொல்லு, நான் இருக்கேன்டா உனக்கு ”

” உன் தேவா அவ்ளோ நல்லவள் இல்லை விக்ரமா.. என் மேல தான் தவறுன்னு தெரிஞ்சும், வேணும்னே ஒருத்தரை காயப்படுத்திட்டேன் விக்ரமா.. ”

” டேய் யாரு என்ன? கொஞ்சம் தெளிவா சொல்லு தேவா ”

” ப்ளீஸ் விக்ரமா என்கிட்ட எதுவும் கேட்டகாத ? ” என்றவள் தன் உணர்வுளை சரிவர வெளிப்படுத்த முடியாமல் கதறி அழ தொடங்கினாள் .

அவள் பேசியது அதியனை பற்றி ஆனால் விக்ரமன் நினைத்தது விஜயை பற்றி. திருமண பேச்சு எடுத்ததில் இருந்து இவள் இயல்பாக இல்லை என்பதை அவன் அறிந்திருந்தான். மேலும் விஜய் அவளை வெளியே அழைத்து செல்ல விருப்பபட்டு கேட்கும் போதெல்லாம் ‘ தலை வலி உடல்வலி ‘ என காரணம் சொல்லி அவள் தப்பிப்பதையும் கவனித்திருந்தான்.

” சரி.. சரி நான் எதுவும் கேட்கலை.. என் தேவா அழ கூடாது சரியா ” என்றவன் அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.

” விக்ரமா இந்த தேவாக்காக எதுவேணாலும் செய்வியா? ” என்று பிள்ளை முகத்துடன் அவள் கேட்க..

மென்மையாக புன்னகைத்தவன்.

” என் தேவாக்காக இந்த விக்ரமன் என்னவேணாலும் செய்வான் சொல்லுடா என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

” அப்போ என்னை திட்ட மாட்ட தானே ? ” என்று இமைகளில் படர்ந்த கண்ணீர் துளியுடன் அவள் கேட்க.

” திட்ட மாட்டேன்.. இந்த கல்யாணத்தை பத்தி தானே பேச நினைக்கிற ? ” என்ற விக்ரமனை வியந்து பார்த்தவள். ஆமா என்று தலையசைக்க..

” ம்ம்ம் நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன்.. சொல்லு இந்த கல்யாணத்தில் உனக்கு என்ன பிரச்சனை ? ”

” இந்த கல்யாணம் தான் என் பிரச்சனை.. என்னால எந்த முடிவையும் தெளிவா எடுக்க முடியல.. ஏதோ ஒன்னு மனசை அழுத்திட்டே இருக்கு எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் விக்ரமா ” என்று தயங்கியபடி கூறியவளை கேள்வியாக பார்த்தவன்.

” ஏன் ? வேண்டாம் ” என்று கேட்டான்

” நான் எவ்ளோ முயற்சி பண்ணியும் என்னால விஜயோட இயல்பா பழக முடியல.. இதுக்கு அப்புறமும் முடியும்ன்னு எனக்கு தோணல.. தேவையில்லாமல் அவர் மனசிலயும் ஆசையை விதைக்க நான் விரும்பல.. அவருக்கு வேற ஒரு நல்ல லைப் பாட்டனர் கிடைப்பாங்க. இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் விக்ரமா ” என்று அவள் கூறினாள். முதலில் ஏதாவது காரணம் கூறி இந்த திருமணத்தை நிறுத்திய பின், அதியனை பற்றி யோசித்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தால் வர்ஷா.

விஜயும், வர்ஷாவும் இயல்பாக  பழகுவது இல்லை என்று விக்ரமனுக்கும் தெரியும் அல்லவா? இருந்தும் கல்யாணத்திற்கு பிறகு அனைத்தும் சரி ஆகிவிடும் என்று அவன் எண்ணிக்கொண்டிருக்க இப்போது இவள் இப்படி கூறும் போது தான், இதற்கு மேலும் இதனை வளரவிடக்கூடாது என்று எண்ணியவன். உடனே வர்ஷாவிடம்  ” சரிடா உனக்கு பிடிக்கலன்னா கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது.. ஆனால் இதை கொஞ்சம் முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்லை.. தேவையில்லாமல் அவன் மனசும்  கஷ்டப்படாமல் இருந்திருக்கும்..  இனிமேல் இந்த தவறை செய்யாத, உன்னால உடனே முடிவெடுக்க முடியலன்னா தெளிவான முடிவு எடுக்கும் நேரம் வரும் வரை காத்திரு தப்பில்லை.. ஆனால் அவசரப்பட்டு முடிவெடுத்து யாரையும் கஷ்டப்படுத்தாத புரியுதா… உன் விருப்பத்தை மீறி இங்க யாரும் எதுவும் பண்ண போறது கிடையாது. நம் உணர்வுகளுக்கு கொடுக்குற மரியாதையை மற்றவர்கள் உணர்வுகளுக்கும் கொடுக்கணும்..”  என்றவன் கண்டிப்புடன் அவளது தலையை வருடி கொடுத்தான்.

” எனக்கு புரியுது விக்ரமா ? நான் தான் தப்பு பண்ணிட்டேன். நானே அவர்கிட்ட இதை சொல்லலாம்னு தான் நெனச்சேன்.. ஆனால் அவர்கிட்ட பேசவே தயக்கமா இருந்தது.. இப்போ வேணும்னா போய் அவர்கிட்ட மன்னிப்பு கேட்கவா? ”

” நீ வேண்டாம்.. நானே அவன்கிட்ட பேசிடுறேன். இதுக்கு மேலயும் இதை வளரவிடுறது ரெண்டு பேருக்குமே நல்லது இல்லை ” என்று கூறிவிட்டு நேராக விஜயிடம் வந்து இதனை பற்றி பேசினான் விக்ரமன்.

” விஜய் உனக்கு நான் சொல்லி தான் தெரியணும்ன்னு இல்லை.. தேவாவுக்கு இந்த கல்யாணத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் இல்லை. இருந்தும் அம்மா சொன்னதுக்காக தான் இதுக்கு சம்மதித்து இருக்காள் போல. ஆனால் இதுக்கு மேல இதை அவளால ஹாண்டில் பண்ண முடியாதுன்னு நினைக்கிறாள்.. நான் என்ன சொல்ல வரேன்னா? ”

” ஐ அண்டர்ஸ்ட்டேன்ட் விக்ரமா. இதுக்கு மேல இந்த கல்யாண பேச்சை யாரும் எடுக்க வேண்டாம்.. நிறுத்திடுவோம்… அவளது செயலில் இருந்தே அவளோட மனசு எனக்கு புரிஞ்சிடுச்சு.. இருந்தும் கல்யாணத்துக்கு பிறகு எல்லாம் சரி ஆகிடும்ன்னு நெனச்சேன் ஆனால் அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு இப்போ புரியுது. ” என்று விஜய் கடினமான புன்னகையுடன் கூற.. விக்ரமனுக்கு மனம் பாரமாகி போனது.

” சாரி விஜய்.. ஆரம்பத்திலே இதை நான் கவனித்து இருக்கணும்.. உனக்கு தேவை இல்லாத ஹோப் கொடுத்திட்டோம். சாரிடா”

” நீ எனக்கு எந்த நம்பிக்கையும் கொடுக்கலயே விக்ரமா, அவளுக்கு ஓகே ன்னா எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லைன்னு தானே சொன்ன.. அவளுக்கே என்னை பிடிக்கலங்கும் போது இதுல உன்மேல தப்பு எதுவுமே இல்லையேடா. ப்ரீயா விடு ஐயம் ஓகே .. டைம் ஆச்சு நான் டியூட்டிக்கு கிளம்புறேன் ” என்று கூறி இயல்பாக புன்னகைக்க முயன்றவனை வருத்தத்துடன் பார்த்த விக்ரமன் சரி என்று கூறி அவனை வழி அனுப்பி வைத்தான்.

இந்த திருமணத்தை பற்றி வர்ஷா பேசவேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்ததன் விளைவாக இன்று அனைவருக்கும் வருத்தம் மட்டுமே மிஞ்சி இருந்தது.

வர்ஷா கன்னியாகுமரியில் இருந்து திரும்பி வந்து இன்றுடன் மூன்று நாள் ஆகி இருந்தது… தனது மன உணர்வுகளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க எண்ணியவள் அந்த மூன்று நாளும் வீட்டில் தான் இருந்தாள். ஆனால் அதியன் ஒவ்வொரு நாளும் ஆய்வகத்தில் அவளை எதிர்பார்த்து கொண்டிருந்தான்.

ஒரே வீட்டில் இருக்கும் போது விஜயின் முகத்தை அடிக்கடி பார்க்கும் நிலை வரும் போதெல்லாம்… அவனை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் பார்வையை தாழ்த்தி கொள்வாள் வர்ஷா.

அவளது செயல் விஜய்க்கு நெருடலாக இருக்கவே ஒருநாள் நேரடியாக இதனை பற்றி அவளிடம் பேசினான் ” எதுக்காக என் முகத்தை பார்க்க தயங்குற வர்ஷா… ”

” சாரி விஜய் நான் உங்களை காயப்படுத்திட்டேன்னு நெனைக்கிறேன் ”

” என்ன வர்ஷா நீ இதுக்காகவா இப்படி பிஹேவ் பண்ணுற ? நீ என்ன என்னை லவ் பண்ணியா விட்டுட்டு போன? ஜஸ்ட் வீட்டுல பேசினாங்க உனக்கு விருப்பம் இல்லை நீ ‘நோ’ சொல்லிட்ட அவ்ளோ தானே… இதுக்கு ஏன் இப்படி உன்னை நீயே தாழ்த்திக்கிற, உன்னை இப்படி பார்க்க எனக்கே கஷ்டமா இருக்கு.. நான் தான் விக்ரமன் கிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கேட்டேன். நீ இப்படி உன்னை தாழ்த்தி என்னை கடந்து போகும் போதெல்லாம் எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு.. பேசாமல் என் விருப்பத்தை உங்க வீட்டுல சொல்லாமல் இருந்திருகலாமோ அப்படிங்குற எண்ணம் வருது. எனக்கு அப்படி ஒரு குற்றஉணர்ச்சியை கொடுக்க வேண்டாம்ன்னு நீ நெனச்சா என்னை நிமிர்ந்து பாரு..” என்று அவன் கூறவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் வர்ஷா.

அவள் நிமிர்ந்து பார்க்கவும், அவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன் அவ்விடம் விட்டு சென்றான்.

‘ இப்படியும் ஒருவனா? ‘ என்று   செல்லும் அவனை பிரமிப்புடன் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் வர்ஷா

மூன்று நாள் ஆகியும் வர்ஷா ஆய்வகத்திற்கு வரவில்லை என்பதால் அதுயனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பயம் வர தொடங்கியது..

தன் காதலை உடனே  ஏற்றுக்கொள்ள சொல்லி அவளை வற்புறுத்த விரும்பாதவன்.. கொஞ்சம் நாளுக்கு பிறகு மீண்டும் தன் காதலை அவளுக்கு புரியவைத்து விடலாம் என்று எண்ணி தான் அமைதியாக இருந்தான். ஆனால் இப்போது அவள் மூன்று நாள் ஆகியும் வேலைக்கு வரவில்லை என்று தெரிந்தபின் ‘ எங்கு அவள் தன்னை விட்டு விட்டு சென்று விடுவாளோ ‘ என்று பயம் அவனை ஆட்கொள்ள தொடங்கியது.

அந்த பயத்துடனே அவளுக்கு போன் செய்தான். ஆனால் அவள்  அழைப்பை ஏற்கவில்லை.. உடனே அவளது எண்ணிற்கு குறும்செய்தி அனுப்பினான்

” என்ன ஆச்சு ஏன் ஒர்க்குக்கு வரல ? ” என்று அதியன் செய்தி அனுப்பினான்.

உடனே அவளிடம் இருந்து பதில் வந்தது ” நாளைக்கு வந்திடுவேன் ” என்று.. அதனை வசித்த பிறகு தான் அதியனுக்கு சுவாசம் சீரானது.

அதனை வாசித்தவன் சிரிக்கும் பொம்மை ஒன்றை அவளுக்கு பதிலாக அனுப்ப.. அதனை பார்த்த வர்ஷாவின் இதழ்களும் தானாக விரிந்து கொண்டது.

திருமணம் நின்ற தகவல் ஜோதியின் மூலம் பரதனையும் சென்றடைந்தது. அப்போது தான் அவனும் போலீஸ் ட்ரையினிங் முடிந்து திரும்பி வந்திருந்தான்.

வர்ஷா லேப்டாப்பில் கன்னியாகுமரியில் அதியனுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசித்தபடியே அதனை எல்லாம் லேப்டாப்பில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தாள். அது முழுவதும் அதில் நகலாக நேரமேடுக்கும் என்பதனால் அவளோ குளித்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் குளிக்க சென்றுவிட்டாள்.

அப்போது வர்ஷாவை காண அவளது அறைக்குள் வந்தான் பரதன். மெத்தையின் மீதிருந்த மடிக்கணினியை பார்த்தவன். அப்போது தான் சரியா கவனித்தான் அதில் வர்ஷா அதியனுடன் சேர்ந்து இருக்கு புகைப்படத்தை… உடனே பதட்டமடைந்தவன் நன்றாக அந்த புகைப்படத்தை காட்சிப்படுத்தி பார்த்தான். அது வர்ஷாவும், அதியனும் தான் என்று அறிந்து கொண்டவனுக்கு கோவம் எல்லை மீறியது.

வர்ஷா, அதியனுடன்  இருக்கும் அனைத்து புகைப்படத்தையும் பரதன் ஒன்றன்பின் ஒன்றாக பார்த்து கொண்டிருக்க… அது அப்போது தான் குளியலறையில் இருந்து வெளியே வந்த வர்ஷாவின் கண்களில் பட பதட்டத்தோடு அவன் பின்னால் வந்து நின்றாள்.

வர்ஷா பின்னால் நிற்பதை அறிந்து கொண்ட பரதன்.. ” என்னடி இது எல்லாம் ” என்று புகைப்படத்தை சுட்டி காட்டி , அனல் தெறிக்க கேட்டான்.

” அது.. அது… வந்து ” என்று அவள் பேசமுடியாமல் எச்சில் விழுங்க..

” என்ன லவ்வா? ” என்று பரதன் அடக்கப்பட்ட கோவதுடன் கேட்க.. அவனை அதிர்ந்து பார்த்தவள் அவனது கண்களை பார்த்து உண்மையை சொல்லும் தைரியம் இல்லாமல் தலை குனிந்து கொண்டாள்.

” நீ என் முகத்தை பார்க்க தயங்கும் போதே தெரியுது இது அந்த எழவு தான்னு.. இந்த பொறுக்கிக்காகவா விஜயை வேண்டாம்னு சொன்ன? இவன் கூடவா கன்னியாகுமரி வர போயிட்டு வந்த? உனக்கு அவனை பத்தி என்னடி தெரியும்? எந்த தைரியத்தில் அவன் கூட அவ்ளோ தூரம் போன? போனது மட்டும் தானா இல்லை.. அதுக்கும் மேல” என்று அவன் ஆக்ரோசமாக கேட்க..

” பரதா ” என்று கோவத்தில் அதிர்ந்து கத்தினாள் வர்ஷா.

” கத்தாத கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு ”

” நான் ஒன்னும் அந்த அளவுக்கு தரம் கெட்டவள் இல்லை ”

” எனக்கும் அது தெரியும்.. ஆனால் வெளியே யாரும் நம்ப மாட்டாங்க ”

” நீங்க யாரும் என்னை நம்பவேண்டாம் என் விக்ரமன் என்னை நம்புவான் ”

” ஒஹ் அந்த நம்பிக்கையில் தான் வீட்டில பொய் சொல்லிட்டு அவன்கூட ஊர் சுத்திட்டு வந்தியா? கண்டிப்பா இது அண்ணாக்கு தெரிய வாய்ப்பே இல்லை, அவருக்கு தெரிஞ்சா கண்டிப்பா உன்னை அவன்கூட அனுப்பி இருக்க மாட்டாரு, வீட்டுல கூட ஒரு வார்த்தை சொல்லாமல் எந்த நம்பிக்கையில் அவன் கூட போன? அவன் உன்னை ஏதாவது பண்ணி இருந்தால்?”

” அவர் ரொம்ப நல்லவர்.. கண்டிப்பா அதுமாதிரி எதுவும் நடக்க வாய்ப்பில்லை ” என்று உடனே பதில் கூறினாள் வர்ஷா.. ஏனோ பரதன் அதியனை பற்றி தவறாக பேசுவதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.

“எது? நித்தம் ஒரு போதை நிமிஷத்துக்கு ஒரு பொண்ணுன்னு இருக்கவன் உனக்கு நல்லவனா? ”

” இப்போ அவரு அப்படி இல்லை ? ”

” எப்போ இருந்து இப்படி ஒரு ஞான உதயம் வந்ததாமா அவருக்கு? உன்கிட்ட அவன் நடிச்சியிருப்பான்டி. உன்கிட்ட இப்படி அவன் நல்லவன் வேசம் போட்டு ஏமாத்துறது கூட உன்னை பயன்படுத்திக்கவா தான் இருக்கும். அவன் மேல உயிரே வச்சு இருக்க விக்ரமன் அண்ணாவையே யாருன்னு கேட்டவன். நாளைக்கு எல்லாம் முடிஞ்ச அப்புறம் உன்னையும் அப்படி தான் கேட்பான். அவன் போடுற இந்த நல்லவன் வேசமே அவன் தேவையை தீர்த்துக்க தான். இது நடக்குதா இல்லையான்னு பாரு  ”

வர்ஷாக்கு அவன் கூறியதில் மூளையை சென்றடைந்தது என்னவோ விக்ரமன் பற்றி அவன் பேசியது மட்டும் தான் ” விக்ரமனுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம் ? என்ன சொல்லுற நீ எனக்கு ஒன்னும் புரியல ”

” நமக்கு தெரிஞ்ச விக்ரமன் அபிமன்யு இல்லை அவரு, விக்ரமன் சக்ரவர்த்தி, சக்ரவர்த்தி குடும்பத்தோட வாரிசு.. அது அவர் குடும்பம். அதியன் அவர் தம்பி ” என்றவன் விக்ரமனது குடும்பத்தை பற்றி அனைத்தையும் கூறி முடித்தான்.

” சொத்துக்காக சொந்த புள்ளையையே வெளியே துரத்தின குடும்பம் அது. அந்த குடும்பத்தில் போய் வாழ ஆசைப்படுறியா ?    இப்போவும் நீ இந்த காதல் கண்றாவியை எல்லாம் விக்ரமன் அண்ணா கிட்ட சொன்னால், உனக்காக அவங்க கிட்ட போய் அவர் பேசுவாரு… ஆனால் அவங்க என்ன சொல்லுவாங்க தெரியுமா ? பொண்ணை வச்சு சொத்தை அடைய பாக்குறியான்னு கேட்பாங்க அவ்ளோ ஏன் இதை விட பச்சையா கூட கேட்பாங்க.. நமக்கு வாழ்க்கை கொடுத்தவங்க விக்ரமன் அண்ணா குடும்பம். நம்மால அவங்களுக்கு எந்த தலைகுனிவு வரக்கூடாது அதுவும் அந்த மாதிரி மனுசங்க முன்னாடி நம்ம அர்ஜுன் அப்பாவையும் ஜோதி அம்மாவையும் தலை குனிய வச்சிடாத”

அதனை கேட்டு உடைந்து போய் அமர்ந்தாள் வர்ஷா.

” அவனை பத்திய விஷயத்தை இத்தோட மறந்திடு.. இனிமேல் அவன் கூட எங்கேயாவது வெளியே போனேன்னு எனக்கு தெரிய வந்தா நடக்கிறதே வேற..” என்று கூறி வெளியே சென்ற பரதனை தடுத்து நிறுத்தினாள் வர்ஷா.

” பரதா.. இதை நான் பார்த்துகிறேன். இதனால நம்ம குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் வராது. என்னை நம்பு நான் உயிரோட இருக்க வரை நம்ம விக்ரமனை யாரு முன்னாடியும் தலை குனிய விடமாட்டேன். நம்ம குடும்பத்துக்கு அப்படி ஒரு நிலைமை என்னால என்னைக்கும் வராது.. இதை யாருக்கிட்டயும் சொல்ல வேண்டாம்  ” என்ற வர்ஷாவின் விழியோரம் கண்ணீர் வழிய… அவளை பார்த்து சின்ன தலையசைப்புடன் வெளியே வந்தான் பரதன்.

பரதனோ, வர்ஷாவோ இதனை பற்றி விக்ரமனிடம் கூறவில்லை.. அன்று அவன் அதனை கூறி இருந்தால் நிச்சயம் இப்படி ஒரு நிலைமை வர்ஷாவிற்க்கோ அதியனுக்கோ வந்திருக்காது.

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்