
நிதர்ஷனாவின் விழிகள் கடும் அதிர்வைத் தாங்கி இருக்க, எந்த எதிர்வினையும் காட்டாது கீழிறங்கிச் சென்று விட்டாள்.
“ஷிட்!” யாஷ் பிரஜிதன் காலைத் தரையில் உதைத்து விட்டு, நிவேதனையும் தீயாய் முறைத்துச் சென்றான்.
பின்பக்கத் தோட்டத்தில் நிறைந்திருந்த மலர்களை வெறித்திருந்த நிதர்ஷனாவின் முகத்தில் துளியும் புன்னகை இல்லை. இத்தனை மாதங்களாய் சிறுக சிறுக சேர்த்த இன்பங்கள் எல்லாம் துடைத்தெறியப்பட்டது போல இறுகிப்போனது.
அவள் மனதில் ஓடும் எண்ணங்களை அவள் மட்டுமே அறிவாள்! எதனை எண்ணி சிதைந்து போவதென்றே தெரியாது தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து கொண்டிருந்தாள்.
அவளைத் தேடி கீழிறங்கி வந்த யாஷ் பிரஜிதனை அழைத்த ஆதிசக்தி, “என்ன யாஷ்… இவ்ளோ ஹேப்பி நியூஸ் நடக்கும்போது நீ அவ கூட இருக்க வேணாமா? மேரேஜ்ல மட்டும் இல்ல, இந்த விஷயத்துலயும் தமிழ் பொண்ணுங்க சென்சிடிவ் தான். உன் வேலையை எல்லாம் ஓரங்கட்டிட்டு, அவளை போய் பாரு. இந்த ஜூஸை குடுத்துடு” என்று அவன் கையில் ஒரு பழச்சாறு குவளையை நீட்டினார்.
அதனை நொந்து பார்த்த யாஷ், ஒன்றும் பேசாமல் தோட்டத்திற்குச் சென்றான்.
அவனது வரவின் முன்னே வாசம் வந்தது பெண்ணவளுக்கு. ஏனோ திரும்பவில்லை.
“மின்னல்!” தொண்டையை செருமிக்கொண்டு அழைத்தான் யாஷ்.
அவ்ளோ வீம்பாய் அவன் முகம் பாராது நிற்க, “நிது ப்ளீஸ்… ஏதாவது பேசு” என்றான் தவிப்பாக.
அப்போதும் அவள் அமைதியைக் கடைபிடிக்க, “யூ மஸ்ட் பீ டயர்ட். ஜூஸ் குடி” என்று கொடுத்த பிறகே அந்த குவளையை திரும்பி முறைத்தவள், “இதுல என்ன மருந்தை கலந்துருக்க யாஷ்? உன்னை மறந்த மாதிரி இந்தக் குழந்தையையும் மறந்துடுவேன்னு வயித்துலயே கொன்னுடலாம்னு எதுவும் கலந்துருக்கியா?” என வெடித்தாள்.
அவளது கூற்றில் உச்ச கட்டமாய் ஆத்திரம் எழுந்தது அவனுக்கு. கண்ணாடி கிளாஸை தூக்கி எறிந்தவன், “ஆமாடி… இந்த வலியை நான் மட்டும் அனுபவிச்சுக்குறேன். என் பேபியும் அனுபவிக்க வேணாம்…” என்று அவனும் சீறியிருக்க, கண்ணாடித் துண்டுகளை போல அவளது மனமும் சுக்கு நூறாய் உடைந்தது.
“வலி தான் குடுக்குறேன்னு தெரியுதே. அப்பறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணி, இந்த டிராமா எல்லாம்…” கோபம் மெல்ல கேவலாய் மாறிட, கேசத்தை அழுந்தக் கோதினான்.
“டிராமா தான். எல்லாமே உனக்கு டிராமாவா தான் தெரியுதா?”
“என்னைத் தொடுறது கூட உனக்கு டிராமாவா தான இருக்கு…” அழுத்தம் தாளாது கொந்தளித்ததில், அவளை அறையை கையை ஓங்கியவன், முயன்று தன்னை அடக்கிக் கொண்டு, “திஸ் இஸ் தி லிமிட்!” என்றான் பல்லைக்கடித்து.
இவர்களது சத்தத்திலேயே குடும்பத்தினர் அங்கு கூடிவிட, “யாஷ் என்ன பண்ற?” என்று இளவேந்தன் அதட்டினார்.
யாருக்கும் பதில் கூறாது, தன்னவளை அளவுக்கு அதிகமாய் முறைத்து விட்டு வெளியே சென்றவன் நள்ளிரவில் தான் வீட்டை அடைந்தான்.
கதிரவனும், “ஏன் நிதா இப்படி பேசுற. அவன் உனக்காக தான் எல்லாம் செய்றான்” என்று திட்ட, அதன்பிறகு யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை அவள்.
நிவேதனும் அவளைப் பேச வைக்க முயல, யாருடைய முகத்தையும் பாராது அறைக்குள் அடைந்து கொண்டாள்.
ஆதிசக்தி தான், “இது சரியா வராது. நிவே… நாளைக்கு அவளை நீயே ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போ. நீ சொன்னா தான் கேட்பா. அவளைக் கொஞ்சம் சாப்பிட வை” என்றிட,
“அவள் எதுக்குமே அசைய மாட்டுறா அத்தை… மச்சான் வர்ற வரை இப்படி தான் இருப்பா” என்றான் அவளை அறிந்தவனாக.
ஆதிசக்தி அவளுக்கு தினமும் பாலில் மாத்திரை கலந்து கொடுப்பது வழக்கம் தான். யாஷ் கண்டிப்பாக கொடுக்கச் சொல்லியிருந்தான். அவளுக்குத் தேவையான மாற்று மருந்து என்பது வரை மட்டுமே அவர் அறிந்தது. மற்றவை அவர் அறியவில்லை. அதில் அவரும் கூட யாஷ் மீது சிறு கோபத்தில் இருந்தார்.
கருவுற்றிருப்பவள் பட்னி இருப்பதை தாள இயலாமல், அனைவரும் ஹாலிலேயே இருக்க, நேரம் தாழ்த்தி வீட்டிற்கு வந்த யாஷ், அவர்களை கூர்மையாய் ஏறிட்டான்.
அவனைக் கண்டதும் வேகமாய் எழுந்த நிவேதன், “மச்சான் அவ சாப்பிடவே மாட்டுறா. தயவு செஞ்சு எப்படியாச்சு அவளை சாப்பிட வை ப்ளீஸ்” என்று தவிப்பாய் கூற,
அவனைப் பாராது உணவை மட்டும் எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றான்.
பால்கனியில் போடப்பட்டிருந்த அகலமான ஊஞ்சலில் காலைக் குறுக்கி அமர்ந்திருந்த நிதர்ஷனாவின் விழிகள் வானத்தில் ஒளிர்ந்த நிலவினை வேதனையாய் எதிர்கொண்டது.
அவள் அமர்ந்திருந்த கோலம் ஆடவனை என்னவோ செய்ய, அவளருகில் அமர்ந்தான்.
மௌனமாய் உணவை எடுத்து ஊட்டி விட முயல, மறுக்காது வாங்கி கொண்டாள்.
உணவை கொடுத்து முடித்தபிறகு, அவளைத் தோளோடு அணைத்தபடி அமர்ந்த யாஷ் பிரஜிதனும் நிலவினைத் தான் வெறித்தான்.
“உனக்கு நான் என்ன விளக்கம் கொடுக்குறது நிது? எல்லா விளக்கத்தையும் கேட்ட தான?” என அவள் முகம் பார்க்க, அவளோ அமைதியாய் அவன் தோளில் முகத்தைச் சாய்த்துக் கொண்டாள்.
ஒரு கரம் அவளது வயிற்றை வருடியது.
அக்கரத்தின் மீது தானும் கை வைத்தவனாக, “பேபி உன்னை மாதிரி பிறக்குமா? என்னை மாதிரி பிறக்குமா மின்னல்” எனக் கேட்டான்.
அவ்வொற்றை வருடலும் கேள்வியும் அக்குழந்தையின் மீது அடக்கி வைத்திருந்த ஒட்டு மொத்த அன்பையும் பறைசாற்ற, அவளிடம் சிறு அமைதி.
“என் கலர்ல பிறந்தா, என் அம்மா மாதிரி எக்காரணத்தை கொண்டும் விட்டுட மாட்ட தான?” அதற்கும் பதிலின்றி போனதில் அவள் முகம் பார்த்தான்.
தனது தோளில் சாய்ந்தே உறங்கி விட்டிருந்தாள்.
தன்னால், உண்ணாமலும் உறங்காமலும் காத்திருப்பாள் போலும்! முகத்தில் விழுந்த முடிக்கற்றையை மெல்ல ஒதுக்கி விட்டவன், “ஐ லவ் யூ ஆலம்பனா” என அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு விட்டு, மீண்டும் அவள் வயிறை வருடினான்.
“உன் மம்மா, என் மேல செம்ம கோபத்துல இருக்கா பேபி. நீயும் என் மேல கோபமா இருக்கியா? ஹ்ம்ம்? இந்த வேர்ல்ட்ல எனக்கு ரொம்ப பிடிச்சவ அவ மட்டும் தான் பேபி. அதுக்கு அப்பறம் நீ தான்! உனக்கும் உன் மம்மாக்கும் எதுவும் ஆக விட மாட்டேன். உன் பப்பா மேல உனக்கு கோபம் இல்ல தான்? ம்ம்?” என கொஞ்சலாய் பேசிக்கொண்டவன், சில நிமிடங்கள் கழிய பெருமூச்சுடன் அவளைக் கையில் தூக்கிக் கொண்டு கட்டிலில் கிடத்தினான்.
“ஓவரா தான்டி கோபம் வருது உனக்கு?” அவள் மூக்கோடு மூக்குரசியவன், இதழிலில் மெல்ல இதழ் பதித்து விட்டு விலகிப் பின் சராலென நின்றான்.
அவளது ஒரு கரம் கட்டிலுக்கு வெளியில் தொங்கி கொண்டிருக்க, அவளோ ஆடாமல் அசையாமல் படுத்திருந்தாள்.
மூச்சும் கூட சீரற்று வருவதை உணர்ந்தவன், “ஆலம்பனா… ஆலம்பனா” என அவளை எழுப்ப முயல, அவளிடம் சிறு அசைவும் இல்லை.
“நோ நோ நோ! நிது என்னை பாரு நிது” எனக் கத்தியவனுக்கு விடை என்னவோ பூஜ்யமே!
ஆடவனின் கத்தலில் உறங்காமல் தவித்திருந்த நிவேதன் மாடிக்கு ஓடி வந்தான். தங்கையை கண்டு திகைத்திருந்தவன், “என்ன ஆச்சு இவளுக்கு?” என நடுக்கத்துடன் வினவ, எதுவும் அவன் காதில் விழவில்லை.
அவளைக் கையில் அள்ளிக்கொண்டு வேக வேகமாய் மருத்துவமனைக்கு விரைந்தான்.
அதில் மொத்த குடும்பமும் எழுந்து விட, அவர்களும் பரிதவிப்புடன் சென்றனர்.
கதிரவனுக்கோ பேச்சு மூச்சே இல்லை. அழக்கூட அவனுக்கு தெம்பில்லை. பேயறைந்தது போல இருந்தான். இம்முறை நிவேதன் தான் அழுது தீர்த்து விட்டான்.
“இன்னாடா ஆச்சு அவளுக்கு? எப்ப டா அவளுக்கு மயக்கம் சரியாகும்” என்று யாஷிடமும் கதிரவனிடமும் கேட்டு கேட்டு உடைந்து விட்டான்.
இருவராலும் என்ன பதில் கூற இயலும். போன முறையே சாவின் விளிம்பிற்கு சென்று வந்தாளே.
யாஷ் பிரஜிதனின் நிலையோ வெகு மோசம். வாழ்க்கை தன்னை ஏன் இப்படி சுழற்றி அடிக்கிறது என்ற விரக்தியில் உணர்விழந்திருந்தான்.
எல்லாம் தனது தந்தை ஆரம்பித்த திருவிளையாடல் தானே!
அலெஸ்சாண்ட்ரோ மீது கொலைவெறியே எழுந்திட, விவரம் கேள்விப்பட்டு வேகமாக அங்கு வந்த ஆஹில்யனுக்கும் வேதனை தாளவில்லை. முதன்முறையாவது தனது முதலாளியின் காதலி அவ்வளவே! ஆனால் தற்போது, தன் மீது அன்பைப் பொழிந்து, தனக்காக ரித்திகாவிடம் கூட சண்டையிடுபவளாகிற்றே!
தங்களது திருமணத்திற்கும் கூட, அத்தனை மகிழ்வாய் ஏற்பாடுகளை செய்தவள்.
அவள் நினைத்திருந்தால், தன்னை வெறும் வேலைக்காரனாக நினைத்திருக்கலாம், வரதராஜனைப் போல…
மனம் ஆறவில்லை அவனுக்கு. தலையில் கை வைத்து கண்ணீருடன் அமர்ந்திருந்த ரித்திகாவின் அருகில் அமர்ந்தவன், “ரித்தி” என வருத்தமாக அழைக்க, “எனக்கு அண்ணன், தங்கச்சின்னு இந்த உறவை எல்லாம் இந்தக் கடவுள் காட்டாமலே இருந்துருக்கலாம் ஆஹி!” கன்னம் முழுக்க நீரின் தடத்துடன் பேசியவளை அணைத்துக் கொண்டவன், “அவளுக்கு ஒன்னும் ஆகாது ரித்தி. சீக்கிரம் வந்துடுவா பாரு!” என்றான் வலியுடன்.
அதை விட யாஷை எதிர்கொள்ளவே அவனுக்கு கடினமாக இருந்தது.
“பாஸ்” இப்போது யாஷின் அருகில் செல்ல, “ரித்தியை லேப்கு கூட்டிட்டுப் போ. எதையாவது கண்டுபிடிச்சு தொலைஞ்சாங்களானு பாக்க சொல்லு. இல்லனா தி பெஸ்ட் சைன்டிஸ்ட் டாக்டர்ஸ்னு போர்ட் மாட்டிருக்குற எல்லாரையும் சுட்டுத் தள்ளிடு” என்றான் கடுமையாய்.
ரித்திகாவிற்கும் நிலையின் தீவிரம் புரிய, கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.
ஒரு பக்கம் சுருண்டிருந்த நிவேதனை வேதனையாய் பார்த்து விட்டு, ஆஹில்யனுடன் கிளம்பிட, இங்கோ ஆபத்துக் கட்டத்தை தாண்டாது சோதித்துக் கொண்டிருந்தாள் நிதர்ஷனா.
விடியும் நேரத்தில் தான் மருத்துவர் வந்தவர், “அவங்க பிரக்னன்ட்டா இருந்துருக்காங்க” எனக் கூற, கதிரவன் “ரெண்டு பேருக்கும் ஒன்னும் இல்லல” என்றான் நடுங்கிய குரலில்.
“சாரி மிஸ்டர். சட்டுனு மூளைல ஏற்பட்ட அதிர்வுனால, யூட்டரஸ்கு போற ரத்தம் ஓட்டம் ஸ்டாப் ஆகி” எனக் கூறி முடிக்கும் முன்னே அசையாமல் நின்றிருந்த யாஷ் அவரை நிறுத்தி, “அவள் எப்படி இருக்கா?” என்றான் இறுக்கமாக.
இது அவனும் எதிர்பார்த்த ஒன்று தான்! வலித்தது… பொறுத்துக்கொண்டான்.
“இன்னும் ஸ்டேபிள் ஆகல… பட் நீங்க ஏற்கனவே எல்லாம் தயாரா வைக்க சொன்னதுனால, எங்களால வைரஸை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ண முடிஞ்சுது மிஸ்டர் யாஷ். பட் உங்ககிட்ட நான் ரொம்ப நாளா ரெகமண்ட் பண்றது இது தான். டைரக்டா சர்ஜரி செஞ்சு, ரிமூவ் பண்ண பார்க்கலாம். நாள் ஆக, ஆக அந்த வைரஸ் ஒரு சின்ன கட்டியா ஃபார்ம் ஆகிட்டு இருக்கு. ப்ரெய்ன் டியூமர் ஆக வாய்ப்பு அதிகம்.”
“அப்படி ஆபரேட் பண்ணுனா, எவ்ளோ சான்ஸ் இருக்கு?”
“20 பெர்ஸன்ட்!”
“100 பெர்சன்ட் சான்ஸ் இல்லாம, நான் இதுக்கு ஓகே சொல்லப் போறது இல்ல. அண்ட் மோர் ஓவர், அந்த வைரஸோட கண்டிஷனே இப்ப பாதிக்கு பாதி வீக் ஆகியிருக்கு. ஆபரேட் பண்றது இந்த ஸ்டேஜ்ல சேஃப் இல்ல.
எந்த சைட்ல அது ஓரமா ஒட்டிட்டு இருக்குனு கூட கன்பார்ம் பண்ணிட்டு சர்ஜரி ஸ்டார்ட் பண்ண முடியாது.”
“பட் சர்ஜரி செஞ்சு தான ஆகணும் யாஷ்?” மருத்துவர் குழப்பமாக கேட்க, “செய்யணும். ஆனா மனுஷங்க” இல்ல! என்றவனை மருத்துவர் மட்டுமல்ல, மற்றவர்களும் அதிர்ந்து பார்த்தனர்.
“ரோபோடிக் சர்ஜியன். துல்லியமாக மனித உடலில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு.”
“இது எப்படி சாத்தியம் யாஷ்?” ஆதிசக்தியே குழம்பி விட்டார்.
“நடக்கும் மம்மா. பட் ஐ நீட் டைம்!” என்றவன் மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டான் கண்மூடி.
“சாரி பேபி!” தனது குழந்தைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாதவனாய், உருவமற்ற தன்னுயிரிடம் மன்னிப்பை வேண்டியவனின் விழியில் இருந்து நீர்த்துளியொன்று தரையை அடைந்தது.
தொடரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
26
+1
2
+1

