
அத்தியாயம் 14
இரவு முழுதும் வாந்தி எடுத்தபடியே இருந்தவளுக்கு உணவு சுத்தமாகச் சேரவில்லை போலும்.
இதில் ஆடவனுடன் தனியாக ஒரே அறையில் இருந்தது வேறு வயிற்றைச் சில்லிடச் செய்தது.
எல்லாம் இணைந்து, சரியாக உறங்காமல் ஆவியாக அலைந்து கொண்டே இருந்தாள். நள்ளிரவில் மீண்டும் குளியலறைக்குச் சென்றவளுக்கு முற்றிலும் சோர்வாகி விட்டது.
அர்ஜித்தோ அவளைக் கண்டுகொள்ளாது, காதில் தலையணையை வைத்து மூடிப் படுத்து விட்டான்.
வாந்தி எடுத்து முடித்து சோபாவில் வந்து அமர்ந்தவளின் பக்கவாட்டில் இருந்த மேஜையில் நீர் பாட்டிலும், ஒரு கண்ணாடி கிளாஸில் எலுமிச்சைச் சாறும் மூடி வைக்கப்பட்டிருந்தது.
அதனைக் குழப்பமாகப் பார்த்தவள் அர்ஜித்தைப் பார்க்க, அவனோ அவள் குளியலறைக்குச் சென்ற போது எந்த நிலையில் படுத்திருந்தானோ அப்படியே தான் படுத்திருந்தான்.
‘இந்த ஜூஸ் ஆல்ரெடி உள்ளேயே இருந்துச்சா, இல்ல இப்ப தான் இருக்கா?’ என்றே தெரியாமல் குழம்பியவள், அதனை எடுக்காமலே இருக்க, “ஜூஸைக் குடிச்சிட்டு மூடிட்டுக் கிடக்கடி. மனுஷனே உறங்கான் விடுனில்லா…(ஜூஸை குடிச்சுட்டு மூடிட்டு படுடி. மனுஷனை தூங்க விட மாட்டுறா…)” எரிச்சல் நிரம்பிய குரல் வந்தது அவனிடம் இருந்து.
“நீ நல்லா காதை மூடிட்டுத் தூங்க வேண்டியது தான. வேணும்னா பஞ்சு வச்சுக்கோ…” என அத்தனைச் சோர்விலும் சண்டைக்கு வந்தவள், ஜூஸைக் குடித்தபிறகே சற்றுத் தெளிவானாள்.
பின் தானாக உறக்கமும் வந்து விட, சோபாவில் சரிந்தே உறங்கியும் விட்டாள்.
மறுநாள் அதிகாலையிலேயே அகமொழியின் அலைபேசி ஒலித்தது. ஏசியின் குளுமை தாளாது கழுத்து வரை போர்த்திக் கொண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள். சோபாவில் இருந்து மெத்தைக்கு வந்ததும் அவளுக்கு உறைக்கவில்லை.
‘ப்ச்’ கண்ணைத் திறக்க இயலாமல் கையால் துழாவி அலைபேசியை ஆன் செய்தவள், லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட எதிர்முனையில் அனகா தான் பேசினாள்.
“ஏடத்தி, எனீற்றுவோ? கோவிலுக்குப் போணம்னு பரஞ்சு. பூஜை ஏற்பாடு செய்திருக்காங்களாம். நிங்களும் அர்ஜியும் வேகம் கிளம்புங்க. (ஏடத்தி எந்திரிச்சுட்டீங்களா? கோவிலுக்குப் போகணும்னு சொன்னாங்க. பூஜை ஏற்பாடு பண்ணிருக்காங்களாம். நீங்களும் அர்ஜியும் சீக்கிரம் கிளம்புங்க)” என்றதில்,
“எதே பூஜையா, இவ்ளோ காலைலயா? நைட்டெல்லாம் தூங்கல அனு…” என்றாள் முணுமுணுவென.
“ஓஹோ!” அனகா நக்கலாகச் சிரிக்க,
“உன் டபில் மீனிங்க்ல தீயை வச்சுடுவேன்…” எனக் கடித்ததில், “சரி சரி வேகம் வரின்…” என்றாள்.
“ஒரு அரை மணி நேரம்…”
“அரை மணி நேரத்தில் வருமோ?”
“இல்ல அரை மணி நேரம் கழிச்சுத் திரும்ப போன் பண்ணி எழுப்பு.”
“ஏடத்தி…” எனப் பல்லைக் கடித்தவள், “முத்தக்ஷி 6 மணிக்கு எல்லாம் நிங்களே கோவில்ல இரிக்கான் பரஞ்சிருந்து… இப்பழே மணி 6. தேஷ்யப் பெடான் போவுந்து…(முத்தக்ஷி 6 மணிக்கு எல்லாம் உங்களை கோவில்ல இருக்க சொல்லிருந்தாங்க. இப்பவே மணி 6. கோபப்பட போறாங்க)” என்றதும், “ம்ம்ஹும்” என முகத்தைத் தலையணையில் புதைத்தவள், “சரி, வந்துடுறேன்.” என்று விட்டுத் திரும்பினாள்.
அப்போது தான் அர்ஜித்தும் படுக்கையை விட்டு எழுந்திட, “மிஸ்டர் மலையாளி… நீ குளிச்சுட்டுக் கிளம்பிட்டு என்னை எழுப்பு… நான் 5 மினிட்ஸ்ல கிளம்பிடுவேன்.” எனக் குட்டித் தூக்கம் போட விழைந்தவளை அமைதியாக ஏறிட்டவன், பதில் பேசாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
அதன்பிறகு, அடித்துப் போட்டது போல உறங்கியவளுக்குச் சட்டென விழிப்பு வரப் பதறி எழுந்து மணியைப் பார்த்தாள்.
மணி பத்தைத் தொட்டது.
‘ஐயையோ!’ எனத் தலையில் கை வைத்தாள்.
‘டேய் பைத்தியக்காரா… உன்னை எழுப்புன்னு சொன்னேன்ல. இப்பப் பாரு, உன்னால நான் திட்டு வாங்கப் போறேன்…’ எனச் சத்தமாகவே திட்டியவள் அறையில் அவனைத் தேடினாள்.
அவனைக் காணவில்லை என்றதும், அவசரமாகக் குளித்துக் கிளம்பிக் கீழே சென்றாள் கொஞ்சம் பயந்தபடியே.
அங்கு டைனிங் டேபிளில் சுஜாதா சற்றே கோபமாக அமர்ந்திருக்க, அன்விதா காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள்.
கல்யாணி ஏதோ புத்தகத்தில் மூழ்கி இருக்க, அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் குனிந்து கொண்டார்.
அனகாவும் இல்லை. ‘போச்சு… ஏதோ ஒரு பஞ்சாயத்து இருக்கு…’
“அத்..தை…” தட்டுத் தடுமாறி அழைத்தவளிடம், “நீ முதல்ல சாப்பிடு மோளே, லேட் ஆச்சு பாரு…” என்று அமரச் சொல்ல, அவளும் தயக்கத்துடன் அமர்ந்தாள்.
புட்டை எடுத்து அவள் தட்டில் வைத்ததில், ‘இதுக்கு என்னை நாலு திட்டுக் கூடத் திட்டிடுங்க!’ என்ற ரீதியில் நொந்தாள்.
அதற்கும் ஒரு கடலைக் கறியை வைக்கப் போக, “வேணா அத்தை… நான் சுகர் தொட்டுச் சாப்பிட்டுக்குறேன்.” எனப் பரிதாபமாகக் கூறியதில் அவரும் அவளை வற்புறுத்தவில்லை.
“தேங்காய் பூ தரவா அகா?” அன்விதா கேட்டதில், “ம்ம்” எனத் தலையாட்டினாள்.
புட்டிற்குத் தேங்காய்ப்பூவும், சர்க்கரையும் கலந்து உண்பதே வழக்கம் அவளுக்கு.
முந்தைய இரவு எல்லாம், அவள் உண்ணக் கூச்சப்படுவதாக எண்ணிக் கொண்டு வம்படியாகத் தட்டை நிரப்பி வயிறு முட்ட உண்ண வைத்தவரின் அமைதி அவளைச் சுட்டது.
“சாரி அத்தை… என்னை எழுப்பிருக்கலாம்ல.”
மெதுவாகக் கூறியவளிடம், “நீ ஏன் சாரி சொல்ற… எல்லாம் அந்தப் பையனைச் சொல்லணும். கோவிலுக்குப் போகணும்னு படிச்சுப் படிச்சுச் சொல்லியும், விடிஞ்சதும் வேலை இருக்குன்னு போயிட்டான். முதல் முதல்ல கோவிலுக்கு நீ மட்டுமா போக முடியும். சேர்ந்து தான போகணும்.” எனக் கரித்துக் கொட்டினார்.
அகமொழி தான் ஒன்றும் புரியாது விழித்தாள். ‘அப்போ கோபம் நம்ம மேல இல்லையா?’
அன்விதாவும், “அர்ஜியும் கிளம்பிட்டாரு. நீயும் ‘தூங்கிட்டு இருக்க, டிஸ்டர்ப் பண்ண வேணாம்’னு சொல்லிட்டாரா… அதான் எப்படியும் கோவிலுக்குப் போகலைலன்னு உன்னை எழுப்பல.” என்றபடி அவளுக்கு வேண்டியதைப் பரிமாறினாள்.
“ஓ!”
‘அவனுக்கு ஏற்கெனவே க்ரைம் ரேட் கூடிப் போயிருக்கு… ஏன் இன்னும் கொஞ்சம் திட்டு வாங்குறான்.’ எனப் புலம்பினாலும், அகமொழிக்கு அவன் ‘தனக்காகக் கோவிலைத் தவிர்த்துச் சென்றிருப்பானோ’ என்ற சின்னச் சந்தேகம் எழுந்தது.
அது மனத்தை ஏதோ ஒரு வகையில் கொய்யவும் செய்திட, இனம்புரியா சிறு தவிப்பும்!
வந்த சொந்தங்களெல்லாம் ஏற்கெனவே கிளம்பி இருக்க, சுஜாதாவும் அன்விதாவும் மதிய உணவில் இறங்கினர்.
“அமையா குட்டி எங்கக்கா?”
“ஸ்கூலுக்குப் போயிட்டா அகா… ஏற்கெனவே மூணு நாள் லீவ் போட்டாச்சு…” என்றபடி வேலையைத் தொடர்ந்தாள்.
“நான் ஹெல்ப் பண்ணட்டா?” அவள் உதவிக்கு வர, சுஜாதா “அட, புதுப்பொண்ணு எந்த வேலையும் செய்யக் கூடாது. நீ போ மோளே…” என அன்பாக அதட்டினார்.
“அப்போ பழசானதும் பார்த்துக்கலாமா?” கேலியாகக் கேட்டவள், அங்கிருந்து நகரவே இல்லை.
இருவரிடமும் வாயடித்துக் கொண்டிருந்தாள். தனது பிசினஸ் பற்றியும் அவர்களிடம் விளக்கிட,
அன்விதாவும் கூட, “நானும் இன்ஸ்டால கிளாம்பிங் பத்திப் பார்த்திருக்கேன் அகா… எனக்கும் அங்க ஸ்டே பண்ண ஆசை. வியூ நல்லாருக்குமா உன்னோட இடத்துல…” என முதன்முறையாக மனத்திலிருக்கும் ஆசையை வெளியில் கூறிய மருமகளை, ஒரு கணம் நிமிர்ந்து பார்த்த சுஜாதாவிடம் சிறு வியப்புத் தெரிந்தது.
“அதுக்கென்ன, நீங்களும் ப்ரோவும் ஹனிமூன் செலப்ரேட் பண்ணிட்டுப் போங்க!” எனக் கண் சிமிட்டினாள்.
முகம் மாறாமல் முறுவலித்தவள், அதன்பிறகு அதைப் பற்றிப் பேசினாளில்லை.
சுஜாதா தான், “தினமும் போய் நோக்கணுமா மோளே, இல்ல ஆள் போட்டிருக்கியா?” என விவரம் கேட்க,
“மெயின்டனன்ஸ் இருக்காங்க அத்தை. நானும் என் ப்ரெண்ட்ஸும் சேர்ந்து தான் ஹேண்டில் பண்ணோம்… இப்ப அவங்க நேட்டிவ் போயிருக்காங்க. புக்கிங் இல்லாத நாள்ல வேலை இல்ல. கெஸ்ட் வந்துட்டா, அங்க ஆள் இருந்தா தான் கரெக்ட்டா இருக்கும்…” என்றவளுக்கு நாள் செல்லச் செல்ல ரிஷானும், ரூஹியும் இல்லாதது வருத்தத்தை அதிகரித்தது.
பின் சில நிமிடப் பேச்சுக்களுக்குப் பிறகு, “லஞ்சுக்கு அவன் வருவானான்னு கேளு மோளே…” என்றார்.
“நானா?” என விழித்தவளை சுஜாதா ஒரு மாதிரியாகப் பார்க்க, சட்டெனச் சுதாரித்தவள், “ஓகே அத்தை கேக்குறேன்.” என்று அறைக்குச் சென்றாள்.
அர்ஜித்திற்கு அழைத்தவள், “நீ லஞ்சுக்கு வருவியான்னு அத்தை கேட்கச் சொன்னாங்க…” என்றாள் எடுத்ததும்.
“நீ எந்தா, எனிக்கும் அம்மய்க்கும் தூதா?(நீ என்ன எனக்கும் அவங்களுக்கும் தூதா?)” சின்னதொரு கடுப்பு அவனிடம்.
“தூதும் இல்ல, தூதுவளையும் இல்ல. ஏற்கெனவே உன்மேல கோபமா இருக்காங்க. கோவிலுக்குப் போயிருக்கலாம்ல…” என்றபோதே குரல் உள்ளே சென்றது.
“நா..நான் தூங்குனனால போனியா?” கேட்கத் தேவையில்லை என்றெண்ணினாலும் கேட்டு விட்டாள்.
ஒரு நொடி அமைதி காத்தவன், “ஆமா!” என்றிட, அதிவேகமாகத் துடிக்கும் இதயத்தின் துடிப்பை நிறுத்த இயலவில்லை. ஏன் இப்படித் துடித்துத் தொலைகிறது என்றும் தெரியவில்லை.
“ஹலோ காந்தாரி… நின்ட மேல பாசம் பொங்கி ஒந்தும் போயில்லா. நின்னை எழுப்பி விட்டா, பின்னே அனுகிட்ட பரஞ்ச போல எல்லார்கிட்டயும் நைட்டு ஃபுல்லா உறங்கியில்லானு புலம்புவ. எல்லாரும் ஏதோ நின்னை ஞான் ரேப் செய்த ரேஞ்சினு நோக்கி வைக்கவா… இந்து நைட்டாச்சும் வேஸ்ட் செய்யான் கூடாதில்ல. அதானு போயால் போகட்டேன்னு விட்டேன்.(ஹலோ காந்தாரி… உன்மேல பாசம் பொங்கி ஒன்னும் போகல. உன்னை எழுப்பி விட்டு, அப்பறம் அனுட்ட சொன்ன மாதிரி எல்லார்கிட்டயும் நைட்டு ஃபுல்லா தூங்கலைனு புலம்புவ. எல்லாரும் ஏதோ உன்னை ரேப் பண்ண ரேஞ்சுக்கு பார்த்து வைக்கவா. இன்னைக்கு நைட்டாச்சு வேஸ்ட் பண்ண கூடாதுல. அதான் போனா போகுதுன்னு விட்டேன்)” என்று கூறியதில் அவளுக்குத் தானாய் இரத்த அழுத்தம் உயர்ந்தது.
“ஹய்ய, நீ என்மேல பாசம் பொங்கி வழிஞ்சுட்டு இருக்கன்னு நானும் சொல்லல.” எனச் சிலுப்பியவள், “சாப்பிட வர்றியா இல்லையா? நான் அத்தைக்குப் பதில் சொல்லணும்.” எனக் கோபமாகக் கேட்டாள்.
மெலிதாய் இதழ் விரித்தவன், “ஞான் வந்தா ஃபர்ஸ்ட் டே செலெப்ரெட் செய்யலாமா?” ஆழ்ந்த குரலில் அவன் கேட்டு வைக்க, அக்குரலின் ஆழம் அவளைச் சீண்டிச் சிவக்க வைத்தது.
கட்டை விரலை நிலத்தில் பதித்தவளுக்குச் சிலிர்க்கும் அளவு தற்போது எதுவும் நடக்கவில்லை என மேனிக்குப் புரிய வைக்கவே பெரும்பாடானது.
“ப்ளஷ் ஆகுவானோ மொழி?” நக்கல் சிரிப்பு அவனிடம்.
அதில் இன்னும் கொஞ்சம் அடி வயிற்றில் பிரளயம் நடக்க, “ஆமா இவரைப் பார்த்து அப்படியே நாங்க வெட்கப்படுறோம். சகிச்சுக்குறதுன்னு முடிவானதுக்கு அப்புறம் எப்ப சகிச்சுக்கிட்டா என்ன? நீ தொட்டதும் நான் உருகிப் போயிட மாட்டேன்னு ஏற்கெனவே சொல்லிட்டேன்…” எனக் கடித்துக் குதறாத குறையாகக் கூற,
“அதே அதே! இந்தலே கண்டல்லோ. பயத்துல பாத்ரூம்லயே அல்லே ஒளிஞ்சுட்டு இருந்தது (ஆமா ஆமா நேத்தே பார்த்தேனே. பயத்துல பாத்ரூம்லேயே தான ஒளிஞ்சுட்டு இருந்த)” அர்ஜித் கீழுதட்டை மடித்தபடி கூற,
“டேய், நான் ஒன்னும் பயந்துட்டுப் போகல. உன்னைப் பார்த்து நான் ஏன் பயப்படணும்?” என்றவளிடம்,
“அப்போ பயம் அல்லே. சரி, ஒன் அவர்ல வரேன்…” என்று விட்டு அழைப்பைத் துண்டிக்க, அவள் வெகு நேரம் அலைபேசியையே திகைப்பாகப் பார்த்திருந்தாள்.
இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு நிதானத்திற்கு வந்த நேரம், கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் அன்விதா.
“காபி…” எனக் குவளையை நீட்ட, அவளுக்கும் அது தேவையானதாக இருந்ததில் புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.
“தேங்க்ஸ் க்கா!”
“உன் துணியை எல்லாம் எடுத்து வைக்கலையா?” இன்னும் அவளது உடைகள் எல்லாம் ட்ராவல் பேகில் இருந்ததைக் கண்டு கேட்டாள்.
“இல்ல, இனி தான் வைக்கணும்…”
“சரி, இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணு. நாளைக்கு அமையாவை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு நேரமாவே வார்ட்ரோப் செட் பண்ணிடலாம். நானும் ஹெல்ப் பண்றேன்.” என்றவளைக் கனிவாகப் பார்த்தவள்,
“நீங்க எப்பவுமே இப்படித் தானா? இந்த மூத்த மருமக எல்லாம் ஒரு மாதிரி டெரரா இருப்பாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். நீங்க இவ்ளோ சுவீட்டா இருக்கீங்களே…” எனச் சிலாகித்தாள்.
“இங்க பெரியவங்க யாரும் என்கிட்ட டெரரா நடந்துகிட்டது இல்ல அகா… சோ நானும் அப்படித்தான்!” முறுவலுடன் கூற காபியைப் பருகினாள்.
“அர்ஜி வர்றாங்களா?”
“ம்ம் ஆமா… விஷ்ணு ப்ரோ எங்க காணோம். வேலைக்குப் போயிட்டாரா?”
“ம்ம்!”
“ஓ சரி சரி!” அவள் அடுத்த கேள்வி ஆரம்பிக்கும் முன்,
“நேத்து நைட்டு எல்லாம் ஓகேவா அகா?” என்றதில், முந்தைய நாள் நடந்த கூத்தைச் சுவைபடக் கூறியதில் அன்விதா சிரித்தே விட்டாள்.
“பாவம் என் கொழுந்தன்…”
“அதுசரி, நீங்க தங்கச்சிக்கு தான் சப்போர்ட் பண்ணனும். கல்யாணத்துல பிரியாணி போடாதது அவன் தப்புத் தான?” என உதட்டைப் பிதுக்கியதில், வயிற்றைப் பிடித்துச் சிரித்தவள், “அதுனால தான், அர்ஜி அப்படிச் சொன்னாரா?” என்றாள்.
“எப்படி?” அகமொழி புருவம் சுருக்கிக் கேட்க,
“அது… இப்ப அம்மயும் அர்ஜியும் பேசிக்கிறது இல்லைல. அதுனால அம்மகிட்ட எது சொல்றதுனாலும் என்கிட்டயோ, அனுட்டயோ தான் விவரம் சொல்லச் சொல்லுவாரு. காலைல கிளம்பும்போது, ‘உனக்கு வலுக்கட்டாயமா சாப்பாடு குடுத்துத் திணிக்க வேணாம்… பிடிச்சதை மட்டும் குடுக்கச் சொல்லுங்க’ன்னு என்கிட்டச் சொன்னாரு… நானும் அத்தைகிட்ட சொன்னேன்.” என்றதில், அகமொழி மெலிதாய் அதிர்ந்தாள்.
“அதான் அத்தை அந்தக் கடலைக் கறியை வேணாம்னு சொன்னதும் விட்டுட்டாங்களா? நான் கூட கோபமா இருக்காங்கன்னு நினைச்சேன்…” என்றவளுக்கு மீண்டும் சிலிர்ப்பு ஊடுருவினாலும்,
‘நான் வாந்தி எடுத்து அவன் மூடைக் கெடுக்கக் கூடாதுன்னு சொல்லிருப்பான். கேடி அவன்…’ என முயன்று தடுமாறிய மனத்தை நிலைப்படுத்தினாள்.
———–
வெளியே வேலையாகச் சென்று விட்டு ரிஸார்ட்டிற்கு வந்த பிரணீத், அர்ஜித் கிளம்பிக் கொண்டிருந்ததைக் கண்டு, “என்ன சேட்டா பாய்… லஞ்சுக்கு வீட்டுக்குப் போறிங்களா?” எனக் குறும்பாகக் கேட்க, “போறேன் அல்ல. போறோம். நீயும் வா…” என்றான்.
“நான் எதுக்குடா? புது கபிள்ஸ் பேச நிறைய இருக்கும்… சாரி சாரி சண்டை போட நிறைய இருக்கும்ல.” எனத் திருத்திட,
“இவ்ளோ நாள் நின்னை கல்யாணம் செய்யான் பரஞ்சு ஃபோர்ஸ் செய்யான் எனிக்குப் பிடிச்சில்லடா. இப்ப ஃபோர்ஸ் செய்து நின்னையும் கோர்த்து விடாமெந்து தோணுந்து…(இவ்ளோ நாள் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ண எனக்குப் பிடிக்கலடா. இப்ப ஃபோர்ஸ் பண்ணி உன்னையும் கோர்த்து விடலாமோன்னு தோணுது…)” எனக் கிண்டலாய் கூறினான் அர்ஜித் அகன்.
“டேய் டேய் வேணாம்டா… உங்களைக் கலாய்க்கல போதுமா. அதுக்காக என்னை அந்தப் படுகுழில தள்ளி விடாத.” எனப் பதறினான்.
“ம்ம்ஹும்! ஞான் முடிவு செய்திட்டேன். நின்னை கமிட் ஆக்கணம்னு. அதுவும் அந்தக் காந்தாரி போல ஒருத்திட்ட நின்னை மாட்டி விடணும்னு மனசு வளரே ஆசைப்படுதுடா!” சிரிப்பை அடக்கிக்கொண்டு கூறிய நண்பனைக் கொலை வெறியுடன் பார்த்தான்.
“அடப்பாவி… அவளை மாதிரி ஒருத்தியைக் கல்யாணம் பண்றதுக்கு நான் சந்நியாசமே போயிடுவேன். ம்ம்ஹும், முதல்ல நான் சென்னைக்குக் கிளம்புறேன். இங்க இருக்குற வேலையை நீயே பார்த்துக்கோப்பா!” எனத் தப்பிக்க முயல,
அவன் சட்டைக் காலரைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றான் அர்ஜித்.
நேராக வீட்டை அடைந்ததில், “உனக்கு நான் என்னடா பாவம் பண்ணுனேன்…” என்றவனைக் கண்டுகொள்ளாது உள்ளே சென்றான்.
கேசவ நாயரும் அவன் மீது அதிருப்தியில் இருந்ததில், “நாளே கண்டிப்பா கோவிலுக்குப் போயிடு அர்ஜி” என்று முடித்துக் கொண்டார்.
தலையை மட்டும் ஆட்டியவன் தனதறைக்குச் செல்ல, அங்கோ தனது துணியை எல்லாம் கட்டிலில் பரப்பிப் போட்டிருந்தாள் அகமொழி.
எதையோ தேடிக் கொண்டிருக்கிறாள் போலும்.
“எந்தாடி… இங்கனே இட்டு வச்சிரிக்கனது?(என்னடி… இப்படி போட்டு வச்சுருக்க?)” அர்ஜித்தின் கேள்வியில் ஏற்கெனவே எரிச்சலில் இருந்தவள், “எடுத்து வச்சுடுவேன்…” என எரிந்து விழுந்து விட்டு மீண்டும் தனது பை முழுக்கத் தேடினாள்.
“எந்தா தேடுனது?” (என்ன தேடுற?)
“ஒன்னும் இல்ல…”
“ப்ச்” அர்ஜித் காட்டமாக முறைத்ததை உணர்ந்து நிமிர்ந்தவள், “நாப்கின் தேடுறேன்…” என்றாள் மெதுவாக.
அதில் தணிந்தவன், “நான் வாங்கிட்டு வரவா?” எனக் கேட்க,
“இல்ல என்கிட்ட இருந்துச்சு. எங்க போச்சுன்னு தான் தெரியல.” என மீண்டும் தேடிட, அவனும் பார்வையை அவளது துணிகளுக்குள் பதிய விட்டான்.
பின் இடுப்பில் கையூன்றியவன், “கிட்டில்லான்னு பதிலை முடிவு செய்து வச்சிட்டுத் தேடியா இப்படித் தான்… கண்ணு முன்னில் இருந்தாலும் கண்ணை மறைக்கும். (கிடைக்காதுன்னு பதிலை முடிவு செஞ்சு வச்சுட்டு தேடுனா இப்டி தான் கண்ணு முன்னாடி இருந்தாலும் கண்ணை மறைக்கும்)” அழுத்தம் திருத்தமாகக் குத்திக் காட்டியவனை விழி சிவக்க ஏறிட்டாள்.
அவனோ கட்டிலில் ஒரு சுடிதாருக்கு அடியில் ஒளிந்திருந்த நேப்கினை எடுத்துக் கொடுக்க, அதனைக் கண்டதும் மெல்ல எரிச்சல் தணிய வாங்கிக் கொண்டவள் அவனைப் பாராமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவள் மீண்டும் வெளியே வரும்போது மெத்தையில் பரவி இருந்த துணிகளை வார்ட்ரோபில் அடுக்கிக் கொண்டிருந்தான்.
“நீ போய் சாப்பிடு. இதை அப்புறம் எடுத்து வச்சுக்கலாம்…” மிஞ்சி இருந்த எரிச்சலும் தானாக மட்டுப்பட இயல்பாகக் கூறியவளிடம், “நீயும் வா! பசி வந்தால் தன்னே நீ நீயாய் இரிக்கில்லல்லோ… (பசி வந்தா தான் நீ நீயா இருக்க மாட்டியே…)” என அவளையும் அழைத்துச் செல்ல, “ஆமா, உன் இரத்தத்தை உறிஞ்சுடுவேன்!” எனக் கண்ணை உருட்டினாள்.
“இந்த நிலமைல இதினு (இதுக்கு ) ஞான் டபில் மீனிங்ல பதில் குடுத்தா நினக்குத் தன்னே கஷ்டம், பரவாயில்லையா காந்தாரி?” எனக் கிண்டல் தொனியில் கேட்க, அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தவள் என்ன சொல்ல வந்திருப்பான் என்ற யோசனையிலேயே டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
அங்கு மொத்தக் குடும்பத்தாருடன் பிரணீத்தும் இருந்ததைக் கண்டு, “ஹாய் ப்ரோ” என்றவள், தனக்கு அருகில் அமர்ந்த அர்ஜித் அகனை நோக்கிச் சரிந்தாள்.
“டேய், என்னடா சொல்ல வந்த?” அவளது வெண்ணிலா பிளேவரின் வாசம் வேறு அவனைப் பல்லைக் கடிக்க வைத்தது.
“தள்ளிப்போடி! நின்னாலே ஃபர்ஸ்ட் நைட்டும் போய், ஃபர்ஸ்ட் டே’வும் போயி. இப்பத் தன்னே அடுத்து வந்து சம்சாரிக்குள்ளு… (தள்ளிப்போடி. உன்னால ஃபர்ஸ்ட் நைட்டும் போய் ஃபர்ஸ்ட் டே’வும் போச்சு. இப்ப தான் பக்கத்துல வந்து பேசுவா…)”
‘ஓ கடுப்பாகுறியா? ஹை ஜாலி!’ எனக் குதூகலித்தவள், நாற்காலியை இன்னுமாக அவன் பக்கத்தில் இழுத்துப் போட்டு, “என்ன சொல்ல வந்தீங்கன்னு சொல்லுங்க அகன்…” எனக் கொஞ்சும் ஹஸ்கி குரலில் கேட்டு அவனைச் சோதிக்க, “உன்னை…” என ஸ்பூனை எடுத்து அவள் கையில் அடித்தான்.
“ஸ்ஸ்… ஆ!” எனக் கத்தியவள், தானும் ஒரு ஸ்பூனை எடுத்து அவன் விரலில் அடிக்க,
“காந்தாரி… சும்மா இரிக்கடி!(சும்மா இருடி)” என மீண்டும் அடித்தான்.
அவளோ திருப்பி அடித்து, “நீங்க தான் எல்லாத்தையும் முதல்ல ஆரம்பிச்சீங்க மிஸ்டர் மலையாளி!” என்றிட, இம்முறை இருவருமே சத்தமாகப் பேசியதில் டைனிங் டேபிளில் கூடி இருந்த மொத்தக் குடும்பமும் இவர்களைத் தான் பார்த்திருந்தது.
அனகா தான், “அது எந்தா மிஸ்டர் மலையாளி, காந்தாரி… ஓ செல்லப் பேரானோ?” எனக் குறும்பாகச் சிரிக்க, இருவருமே அவளை வேற்றுக் கிரகவாசி போலப் பார்த்தனர்.
கோபால கிருஷ்ணன் முறைப்பதைக் கண்டு ஸ்பூனை டேபிள் மீது வைத்த அர்ஜித் அகன், அவள் புறம் குனிந்து “முதல்ல சாப்பிடு. நான் என்ன சொல்ல வந்தேன்னு சொல்றேன்…” என்றான் விஷமப் புன்னகையுடன்.
“ஓகே!” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டதில் இருவரையும் சுவாரஸ்யமாகப் பார்த்தபடி அவளுக்குத் தட்டில் பிரியாணியை வைத்தார் சுஜாதா.
அதனைக் கண்டு விழி விரித்தவள், “இன்னைக்கு நம்ம வீட்ல சிக்கன் பிரியாணியா?” என முகத்தில் தவுசண்ட் வால்ட் பல்பை எரிய விட, “நீ முன்னப் பின்ன பிரியாணியே பார்த்தது இல்லையா சிஸ்டர்?” என்று கிண்டல் செய்தான் பிரணீத்.
“ப்ச், அவளை ஏன் டீஸ் பண்ற… நீ சாப்பிடு…” என அன்விதா உணவைப் பரிமாற, கல்யாணி “விஷ்ணு வரலையாமா?” என வினவினார்
“இல்ல முத்தக்ஷி, அவருக்கு வேலையாம்.”
பிரியாணியைக் கண்டதும் கிண்டல் செய்த பிரணீத்தை எல்லாம் ஓரம் கட்டியவள், உண்பதில் கவனமானாள்.
“ஊணு கழிக்கும்போல் தன்னே சைலண்டா இருப்பா போல… (சாப்பிடும்போது தான் சைலண்டா இருப்பா போல…)” என முணுமுணுத்த அர்ஜித் அகன், அவள் நிறுத்தி நிதானமாக ரசித்து உண்பதைக் கண்டு கனிந்தான்.
அவள் தட்டுக் காலியாக ஆக, அவனே எடுத்து அவளுக்குப் பரிமாற, “போதும் அகன்… நிறைய வச்சுட்டீங்க.” என்றிட, ப்ரணீத்தும் அன்விதாவும் தான் அவனைக் குறுகுறுவெனப் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
மற்றவர்களுக்கு அவனைப் பற்றித் தெரியும். அனைவரும் அமர்ந்து உண்ணும் போது, அவனும் உண்டு கொண்டிருந்தாலும் கூட, மற்றவர்களுக்கு என்ன வேண்டுமெனப் பார்த்துக் கேட்பான்.
ஆனால், பிரணீத் தான் நண்பனை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.
“ஒருவேளை மஞ்சக்கயிறு மேஜிக்கா இருக்குமோ சிட்டு?” தன்னருகில் நின்று கொண்டிருந்த அன்விதாவிடம் முணுமுணுக்க,
“வெரி சாரி, அவளுக்குத் தாலி செயின்ல தான் போட்டாங்க…” என்று நமுட்டு நகை புரிந்தாள்.
“வர வர நீ கவுண்டர் எல்லாம் குடுக்குற சிட்டு!” என்றதில், இதனைக் கவனித்த அனகா தான், “ஏடத்திக்குச் சேர்க்கை சரி இல்ல டார்லிங்!” என அகமொழியைக் கண் காட்டியதில், மூவருமே ஒன்றாகச் சிரித்து விட்டனர்.
அகமொழியைக் கிண்டல் செய்து தான் சிரிக்கிறார்கள் எனப் புரிந்து கொண்ட அர்ஜித் அகன், நிமிர்ந்து மூவரையும் விழி இடுங்க நோக்கியதில், நெற்றி மத்தியில் இரு கோடுகள் உருவானது.
அதில் இருந்த தீவிரம் புரிந்து ப்ரணீத்தும் அனகாவும் வேகமாகக் குனிந்து கொள்ள, அன்விதா பயத்தில் சுஜாதாவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.
பொதுவாக, வீட்டில் கோபப்பட மாட்டான் தான். அனகாவிடமும், ப்ரணீத்திடமும் அதிக அளவில் கேலி செய்து விளையாடுவான். அனகாவும் அண்ணன் என்ற வரைமுறை இன்றி அனைத்துமே பகிர்ந்து கொள்வாள். ஆனால், அதையும் மீறிக் கோபம் வந்து விட்டால்… ஒரே அழுத்தப் பார்வை தான்! அத்துடன் இருவருமே வாயை மூடி விடுவார்கள். அதனைப் பலமுறை அன்விதா கண்டதுண்டு. ஆனால் அவன் தன்னையும் சேர்த்து முறைத்ததில் அவளுக்குப் பயம் வந்து விட்டது. பாவம்!
இதை எல்லாம் கவனியாத அகமொழி உண்டு விட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு சிங்கிற்குச் செல்ல, அர்ஜித் அகனும் தட்டுடன் அவள் பின்னே சென்றான்.
கையையும் தட்டையும் கழுவி விட்டுத் திரும்பிப் பார்த்தவள், அவனது தட்டையும் வாங்கிக் கழுவி வைத்திட, அவன் அப்போதும் நகரவில்லை.
“என்னடா?” அங்கு யாரும் இல்லாததால் மரியாதை காற்றில் பறந்தது.
“என்னோடு ஏதோ கேட்டியே, எந்தா பரயான் வந்ததென்னு சொல்லட்டா?(என்கிட்ட ஏதோ கேட்டியே. என்ன சொல்ல வந்தேன்னு சொல்லட்டா?)” என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி.
தான் இருக்கும் நிலையில் இவன் எல்லை மீறிட இயலாது என்ற தைரியமும், அடுக்களையில் இருக்கும் அசட்டுத் துணிச்சலுமாக, “சொல்லு…” எனத் தோளைக் குலுக்கினாள்.
அவள் அருகில் மூச்சுக்காற்றுப் படும் தூரம் நெருங்கியவன், “நீ என்டெ இரத்தத்தை உறிஞ்சியால், ஞான்…(நீ என் இரத்தத்தை உறிஞ்சுனா, நான்…)” என நிறுத்தி விட்டு, “எனிக்கு இரத்தம் பிடிக்கில்ல, சோ! ஞான் குடிக்க இந்த ட்ரிங்க் மதி! (எனக்கு இரத்தம் பிடிக்காது சோ! நான் குடிக்க இந்த ட்ரிங்க் போதும்)” என்று குனிந்து அவள் இதழ்களைச் சிறைப் பிடித்தான்.
அவளோ அதனை முற்றிலும் எதிர்பாராது திகைத்துச் சிலைபோல நிற்க, அவனோ வெகு ஆழமாய் இதழமுதங்களை அருந்தத் தொடங்கினான்.
முதல் இதழ் முத்தம். அவளுக்கு மொத்த அணுக்களும் வேலை நிறுத்தம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து உருகத் தொடங்க, கண்ணை இறுக்கி மூடும் வேளையில் யாரோ வரும் அரவம் கேட்டு மெல்ல விலகினான்.
உள்ளே வந்த அனகா, “எந்தா ஏடத்தி, பேயறைஞ்சது போல நிக்கனது?” என உலுக்க,
கன்னம் சிவந்து அதரம் நடுங்க நின்றிருந்தவளைக் கேலி நகையுடன் ஏறிட்டவன், அனகா அறியாமல் “பௌ பௌ…” என மூக்கைச் சுருக்கி அழகு காட்டி விட்டுச் சென்றான். இதழ்களைப் போலவே இதயங்களும் இணையும் தருணம் எப்போதோ?
அகன் வசமாவாள்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
49
+1
1
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அகன் அவளை காதலிக்க ஆரம்பிச்சுட்டானா??🤔🤔.. அவளுக்கும் அது லைட்டா புரியுது.. ஆனா அகன் இல்லைன்னு சாதிக்கிறான்… ரெண்டு பேரும் எப்படி accept பண்றாங்கன்னு பார்ப்போம்… Nice ud..💚💙👍🏻
வாவ் அகன்.