Loading

அத்தியாயம் 14

நாள்கள் இன்பங்களை அள்ளித் தெளித்தது என்றால் மிகையாகாது.

கதிரவன் சிந்தாமணியின் மறைமுகக் காதல், நிவேதன் கண்மணியின் விழி மொழிக் காதல், யாஷ் மற்றும் நிதர்ஷனாவின் அளப்பரிய காதலுடன் நேரம் வேகமாய் ஓடியது.

இதற்கிடையில் ஆஹில்யனும் ரித்திகாவும் இந்தியா வந்திறங்க, நேராய் யாஷின் பங்களாவிற்கே வந்து விட்டனர்.

நிவேதனைக் கட்டிக் கொண்டாள் ரித்திகா.

“இனிமே எங்க கூடவே இருப்ப தான ரித்தி?” நிவேதன் கேட்டதில்,

“கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்குப் போற வரை இங்க தான் லிவிங்…” என்றாள் கண் சிமிட்டி.

“வேகமா கல்யாணம் பண்ணி அனுப்பி விடுங்கடானு சொல்றா நிவே…” நிதர்ஷனா நக்கலாய் கூறியதில் ஆஹில்யன் வெட்கப்பட்டுக் கொண்டான்.

“அய்யோ மாம்ஸ்… நீங்க ஏன் வெட்கப்படுறீங்க? அவ டிபார்ட்மென்ட் அது!” அவனையும் கிண்டல் செய்தாள்.

கதிரவன் தான் நிவேதனிடம், “உன் ஒரு மச்சான் வெட்கமே பட மாட்டுறான்… ஒரு மச்சான் வெட்கப்பட்டே சாவடிக்கிறான் நிவே…” என்று கேலி செய்ய, “டேய், என்னடா வந்ததுமே ஆரம்பிச்சுட்டீங்க!” என ஆஹில்யன் பரிதாபமாய் ஏறிட்டான்.

மாடியில் இருந்து இறங்கி வந்த யாஷ் பிரஜிதன், “ஹாய் பேப்!” எனப் புன்னகைக்க, அவனைக் கண்டு சோர்வாய் புன்னகைத்த ரித்திகா, தோளோடு கட்டிக் கொண்டாள்.

அந்த அணைப்பில் இருந்த வருத்தம் அவனுக்கும் புரிய, அதனை முகத்தில் துளியும் காட்டாத யாஷ் பிரஜிதன், “ஜெட் லாக் இருக்கும். டேக் ரெஸ்ட்!” என்று விட்டு ஆஹில்யனையும் வரவேற்கும் விதமாகத் தலையசைத்தான்.

ஆஹில்யனும், ரித்திகாவை யோசனையாய் பார்த்தான். சில நாள்களாக அவளது முகத்தில் பூக்கும் புன்னகை கூடச் செயற்கையாகத் தான் இருந்தது.

“சரி நான் கிளம்புறேன்… என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன், பத்திரமா பார்த்துக்கோங்க.” என்று ரித்திகாவை யாஷ் வீட்டில் விட்டு விட்டு ஆஹில்யன் கிளம்ப எத்தனிக்க,

“ஆஹில்!” என அழைத்தான் யாஷ்.

“சொல்லுங்க பாஸ்!”

“உன் வீட்ல உங்க மேரேஜ் பத்திப் பேசியாச்சு. நீ வந்ததும் டேட் ஃபிக்ஸ் பண்றதா சொல்லிருக்காங்க. சீக்கிரம் பேசிட்டு எனக்கு டேட் சொல்லு!” என்றதில், ரித்திகா தவிர அனைவரின் முகத்திலும் ஆனந்தப் புன்னகை.

“எப்ப பாஸ் பேசுனீங்க?” ஆஹில் வியப்பாகப் பார்க்க, “உன் இன் லா’ஸ், நீங்க வர்றதுக்குள்ள வீட்ல பேசணும்னு சொல்லிப் பேசுனாங்க.” என்று நிவேதனையும் நிதர்ஷனாவையும் பார்த்தான்.

“வீட்ல என்ன சொன்னாங்க?” ஆஹில்யன் வினவ,

“ம்ம்க்கும்! என் மச்சான் ‘நோ’ சொல்ல ஆப்ஷன் குடுத்தா தான. ரெண்டுல ஒன்னு தொடுங்கனு ஒரு விரலைத் தான் காட்டுனான். இல்ல மச்சான்…” என்று யாஷை வாரினான் நிவேதன்.

நிதர்ஷனாவும், “ஆமா அண்ணா… அத்தை போன வாட்டி வந்தப்பவே அவங்களையும், மாமாவையும் கூட்டிட்டு உங்க வீட்டுக்குப் போய் பேசுனோம். உங்களுக்கு முறைப் பொண்ணு ரெடியா இருக்குனு ஃபர்ஸ்ட் தட்டிக் கழிச்சாங்க.

முறைப் பொண்ணு இருந்தால் தான கல்யாணம் பண்ணி வைப்பீங்கனு உங்க பாஸ் குடுத்த ஷாக்ல, நாங்களே நெஞ்சுல கை வச்சுட்டோம். எதுக்கும் வீட்ல காபி, தண்ணி குடுத்தா கேர்ஃபுல்லா குடிங்க. விஷம் எதுவும் வச்சுருக்கப் போறாங்க…” என்றாள் சிரிப்புடன்.

“அடப்பாவிங்களா!” ஆஹில்யன் வாயில் கை வைக்க, ரித்திகாவோ “சம்பந்தம் பேசச் சொன்னா ரவுடிசம் பண்ணிட்டு வந்துருக்கடா நீ…” என யாஷை முறைத்து விட்டு, “எனக்கு ஆஹில் வீட்ல எல்லாரையும் நல்லாவே தெரியும், நான் பேசிக்கிறேன்…” என்றாள்.

பின், “ஆனா கல்யாணம் இப்ப எதுக்கு?” என அவளே ஆரம்பிக்க,

“அப்போ ஒரு அறுபது வயசு வரை வெயிட் பண்றியா?” கதிரவன் கலாய்த்தான்.

நிவேதனோ, “நியாயமா உனக்குத் தான் முதல்ல கல்யாணம் நடந்திருக்கணும் ரித்தி. நீ நிதாவை விடப் பெரியவ… எவ்ளோ வருஷம் தான் என் மச்சானை அலைய விடுவ…” என்றதில்,

ஆஹில்யன், “ஒரு மச்சானோட மனசு இன்னொரு மச்சானுக்குத் தான் தெரியும்.” என்று நிவேதனை அணைத்துக் கொள்ள, “இந்தக் கருமத்தைப் பார்க்காம இருக்கவாவது இவளைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சுடனும்.” என்று கதிரவன் தலையில் அடித்துக் கொண்டான்.

சிந்தாமணியோ, “உங்களுக்குப் பொறாமை, உங்களை யாரும் கட்டிப் பிடிக்கலைனு…” எனச் சிலுப்பிட,

“உன்னையும் கட்டிப் பிடிக்கவா மச்சி!” என ஆஹில்யன் வந்ததில், “அய்யய்யோ! என்னை இவனாண்ட இருந்து காப்பாத்துங்கடா…” என ஓடியதில், அங்குச் சிரிப்பலை எழுந்தது.

ரித்திகா தான் எதிலும் கலந்து கொள்ளாமல், “யாஷ்” என மறுப்பாய் ஏதோ பேச ஆரம்பிக்க, “கெட் ரெடி ஃபார் மேரேஜ்!” என்றதோடு முடித்துக் கொண்டான்.

நிதர்ஷனா தான் அவளை விசித்திரமாக ஏறிட்டு, “என்னமோ உனக்குப் பிடிக்காத கல்யாணத்தைப் பண்ணி வைக்கிற மாதிரி மூஞ்ச ஏன் அப்படி வச்சுருக்க…” என்றதில், உடனடியாய் முகபாவனையை மாற்றிக் கொண்டாள்.

“அதில்ல, எனக்கும் என் அண்ணன் கூடக் கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆசை இருக்கும்ல.”

“இது கொஞ்சம் பெரிய உருட்டா தான் இருக்கு!” கதிரவன் வாரியதில் “டேய்ய்ய்!” எனப் பல்லைக் கடித்தாள் ரித்திகா.

சொன்னது போன்றே, ஆஹில்யனின் வீட்டினரிடம் பேசித் திருமணத் தேதியைக் குறித்திருந்தனர். ப்ராஜக்ட் முடிந்த மறுநாளே திருமணத் தேதி குறிக்கப்பட்டிருந்தது.

திருமண வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், யாஷ் பிரஜிதன் கொடுத்த ப்ராஜக்ட்டும் முடியும் தருவாயில் இருந்தது.

அன்றைய இரவு ஒரு முக்கியமான ப்ரெசன்ட்டேஷன் செய்ய வேண்டுமென நிதர்ஷனா, நிவேதனின் அறையில் இருந்தாள்.

யாஷ் பிரஜிதனும் வீட்டினுள் அமைக்கப்பட்ட லேபில் புதைந்திருக்க, பதினொரு மணி அளவில் தான் அறைக்கு வந்தான்.

உடனே நிதர்ஷனாவிற்கு அலைபேசியில் அழைத்தவன், “எங்கடி இருக்க?” எனக் கேட்டதில், “இன்னும் வேலை முடியல யாஷ், கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.” என்றாள்.

“எதுவா இருந்தாலும் காலைல பார்த்துக்கலாம்டி… ஐ வான்ன ஹக் யூ” என்றான் குழைவாக.

“வந்துடுறேன் யாஷ், இங்க எல்லாரும் இருக்காங்க.” என நெளிந்து அழைப்பைத் துண்டித்தாள்.

அவளுக்காகக் காத்திருந்து, பின் தானாய் கண்ணயர்ந்து விட்டான் யாஷ்.

சிறிது நேரத்தில், அவன் காதினுள் யாரோ கிசுகிசுப்பது போல இருந்தது.

“அரக்கா… அரக்கா!”

சட்டென விழித்தவன் தன்னருகில் அமர்ந்திருந்தவளைக் கண்டு, “என்னடி ஆச்சு?” என்றான்.

“அரக்கா… என் போனைத் தோட்டத்துலயே வச்சுட்டு வந்துட்டேன். போய் எடுத்துட்டு வரலாமா… லைட்டெல்லாம் ஆஃப் ஆகி இருக்கு, எனக்குப் பயமா இருக்கு.” என்றாள் விழிகளை உருட்டி.

அரை உறக்கத்தில் இருந்தவன், “காலைல எடுத்துக்கலாம்டி… இப்ப தூங்கு!” என்று படுக்க முற்பட, “ம்ம்ஹும்… இப்ப வேணும், ப்ளீஸ் யாஷ்” எனக் கண்ணைச் சுருக்கிக் கெஞ்ச, “உன்னை…” எனப் பல்லைக் கடித்தவன் ஆவலுடன் கண்ணைக் கசக்கியபடி தோட்டத்திற்குச் சென்றான்.

அவள் சொன்னது போல இருளடைந்து இருந்தது.

“கார்டன் லைட்ஸ் ஏன் ஆஃப் ஆகி இருக்கு… வாட்ச்மேன்!” எனச் சத்தம் போடப் போகும்போது, அருகில் நிழலுருவமாய் தெரிந்த நிதர்ஷனா அவன் வாயை அடைத்தாள்.

சிறிது நேரத்தில், படபடவென வண்ண விளக்குகள் தோட்டம் முழுக்க ஒளி தர, யாஷ் பிரஜிதனின் கலப்படக் கண்கள் வியப்பில் விரிந்தது.

ஆங்காங்கே அவளும் அவனுமாக எடுத்த செல்ஃபிகள் பலூனுடன் இணைந்து தொங்க விடப்பட்டிருக்க, மூன்றடுக்கு கேக்கில் மெழுகுவர்த்திகள் உருகிக் கரைந்து கொண்டிருந்ததது.

“ஹேப்பி பர்த்டே அரக்கா…” அவன் உயரத்திற்கு எம்பி அவனது சிவந்த செவியில் முத்தமிட்டு உரைத்தாள் நிதர்ஷனா.

அவனது கண்டுபிடிப்புகளான அனைத்து ஏ.ஐ வீட்டு உபயோகப் பொருள்களும் அங்கு வரிசைப் படுத்தப்பட்டிருக்க, அவை அனைத்தும் தனது முதலாளிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்தது.

அதில் ஒற்றைப் புருவம் உயர்த்திய யாஷ் பிரஜிதனைக் கண்டு சிரிப்பை அடக்கிய நிதர்ஷனா, “என்ன இருந்தாலும் உன் மொத பொண்டாட்டி இது தான?” எனக் கிண்டல் செய்யப் பக்கெனப் புன்னகைத்தவன், “என்னடி இதெல்லாம்… நான் என்ன கிட் ஆ?” என்றான் கேலியாக.

இதுவரை, பிறந்த நாள் வாழ்த்துக் கூட அலெஸ்சாண்ட்ரோ கூறியது கிடையாது. ரித்திகாவும், ஏஞ்சலினாவும் அழைத்து வாழ்த்துக் கூறுவார்கள். அதையும் சில நேரம் கண்டுகொள்ளாது வேலையில் மூழ்கி இருப்பான். வெகு சிறு வயதில் ஆதிசக்தியின் அழைப்பை எதிர்பார்த்து ஏமாந்து கொள்வதால், இந்நாளில் எவ்வித எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்வதில்லை அவன்.

நிறுத்தி, நிதானமாகப் பிறந்தநாளைக் கொண்டாடித் தீர்த்ததெல்லாம் இல்லை.

ஆனால் இன்று… அவனது பிறந்த நாளை நினைவு வைத்து, தன்னைக் கொண்டாடித் தீர்க்க அவனுக்கே அவனுக்காக அவள்.

அவனது கேள்வியில் இடுப்பில் கை வைத்த நிதர்ஷனா, “எனக்கு நீ கிட் தான் அரக்கா… ஒழுங்கா வந்து கேக் வெட்டு!” என்று மிரட்ட மென்னகை புரிந்தான்.

அந்நேரம் நிவேதன், கதிரவன், கண்மணி, சிந்தாமணியுடன், ரித்திகா, ஆஹில்யனும் அங்கிருக்க, உடன் ஆதிசக்தியின் மொத்தக் குடும்பமும் அங்கு வந்திருந்தது.

மகேந்திரனும், பேரனின் பிறந்தநாளுக்காக உறங்காமல் இருந்திருக்கிறார்.

அழகேசனும், கிருஷ்ணவேணியும் அவனுக்கு ஆசி வழங்கிப் பரிசுகளைக் கொடுக்க, யாஷ் பிரஜிதன் திணறினான்.

“நீங்க எல்லாம் எப்போ வந்தீங்க? ஏன் க்ராண்ட்பா, இவ்ளோ நேரம் முழிச்சு இருக்கீங்க.” என்றான் அக்கறையாக.

“வருஷா வருஷம் பண்ணத் தவறிட்டேன்… இந்த வருஷமாவது இந்த வரம் கிடைச்சிருக்கேப்பா…” என்று அவன் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.

“ஹேப்பி பர்த்டே அண்ணா, பிறந்த நாள் வாழ்த்துகள் மச்சான்…” என ஒவ்வொருவரும் அவனுக்கு வாழ்த்துத் தெரிவிக்க,

இளவேந்தனும் அவனுக்காக வாங்கிய பரிசை நீட்டினார்.

“எதுக்கு அங்கிள், இந்த ஃபார்மாலிட்டி எல்லாம்…” என்றாலும் மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.

ஆதிசக்திக்குத் தான் பேச்சே எழவில்லை. முந்தைய நாளே நிதர்ஷனா கண்டிப்பாய் கூறி விட்டாள்.

அனைவருமே வந்தாக வேண்டும் என்று. ஆதிசக்திக்கும் மகனின் பிறந்தநாளுக்கு உடன் இருப்பதில் அத்தனை ஆர்வம் தான். எத்தனை வருட ஏக்கமிது. மகனின் பிறந்தநாளுக்குக் கூட அழைக்க இயலாத துரதிருஷ்டம் அவரைத் தினம் தினம் கொன்றதே.

இதுநாள் வரை, ஒருமுறை கூட அவனை அழைத்துப் பேசியதில்லை. இப்போது திடீரென வாழ்த்துச் சொல்ல அவருக்கு என்னவோ சங்கடமாக இருந்தது.

‘அவனும் ஏங்கி இருப்பான் தானே!’ எண்ணும்போதே நெஞ்சம் வெடித்தது.

கலங்கிய கண்களைச் சிமிட்டியும் கூட, அவரால் இயலவில்லை.

“மம்மா!” யாஷின் அழைப்பில் கீழுதட்டைக் கடித்தவர், “சாரி யாஷ்…” என்றதோடு ஒன்றும் பேச இயலாமல் முகத்தை மூடி அழுதிட, யாஷிற்கும் புரிந்தது.

தன்னைப் போல அவரும் இந்நாளில் வெகுவாய் ஏங்கி இருப்பது!

“இட்ஸ் ஓகே மம்மா!” அவர் தோளைப் பிடித்து அமைதிப்படுத்தினான்.

அவரோ விடாமல் அழ நிதர்ஷனா தான், “ஹய்ய… பொறந்த நாள் வாழ்த்துச் சொல்ல வரச் சொன்னா, நீங்க என்ன மன்னிப்புப் படலம் நடத்திட்டு இருக்கீங்க அத்த!” என முறைத்தாள்.

ஆதிசக்தியும் அவர்களது மனநிலையைக் கெடுப்பது புரிந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

“ஹேப்பி பர்த்டே யாஷ்…” மகனைக் கட்டி அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட, கண்மணி உடனே அதனைப் புகைப்படமாக அலைபேசியில் பதிந்து கொண்டாள் புன்னகையுடன்.

அதன்பிறகு கேக் கட் செய்ய அவனை அழைக்க, இந்தத் தருணத்திற்குக் காரணமானவளைக் கண்ணால் பருகியபடி கேக்கை வெட்டினான் யாஷ் பிரஜிதன்.

முதல் துண்டை வெட்டி நிதர்ஷனாவிற்குக் கொடுத்தவன், அவள் கன்னத்தில் அழுத்த முத்தத்தையும் கொடுக்க, அதையும் புகைப்படம் எடுத்துக் கொண்டாள் கண்மணி.

“அண்ணி, நீங்க ஊட்டுங்க…” கண்மணி கூறியதும், ஒரு துண்டை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.

அவனோ குறும்புடன் அவள் விரல்களைக் கடித்து வைக்க, விருட்டெனக் கையை எடுத்தவளின் கன்னங்கள் சிவப்பில் ஊர்ந்தது.

பின் அனைவருமாக இணைந்து கேலி பேசி, முகத்தில் க்ரீமைப் பூசி விளையாடி முடிக்கவே இரண்டைத் தாண்டி இருக்க, பேசிப் பேசிக் களைத்த பிறகே தங்களது அறைக்குச் சென்றனர்.

அறைக்குச் சென்றதும் தன்னவளைப் பின்னிருந்து கட்டிக் கொண்ட யாஷ் பிரஜிதன், “தேங்க்ஸ் ஃபார் தி ப்ரீஷியஸ் மொமெண்ட் ஆலம்பனா!” என்றான் அவள் கூந்தலை வாசம் பிடித்து.

அதில் சிலிர்த்தவள், “உன் பர்த்டேக்கு ஒரு கிஃப்ட் இருக்கே அரக்கா…” அவன் மூக்கோடு மூக்குரசி அவனது தோளில் கையை மாலையாகக் கோர்க்க,

“குடுடி!” என்றான் கிறக்கமாக.

“இப்பவே குடுக்க ஆசை தான்… ஆனா, ஒரு வாரம் வெய்ட் பண்ணு!” கண் சிமிட்டியவளின் கூற்றை உணர்ந்து கொள்ளாது, “இப்பக் குடுக்க ஒன்னும் இல்லையா?” எனச் சிலுப்பினான்.

“இருக்கே!” நிதர்ஷனாவின் குரல் தாழ,

“என்னவாம்?” என்றான் வினவலாக.

“நான் தான் கலப்படக் கண்ணுக்காரா!” என்றபடி அவனைச் சுவரில் சாய்த்து முத்தங்களை அடுக்கியதோடு, மொத்தத்தையும் ஆரம்பிக்கத் தொடங்க அவளது அதிரடியில் திணறிப் போனது ஆடவன் தான்!

“ஆலம்பனா!” யாஷ் பிரஜிதன் உருகிக் கிறங்கினான்.

எப்போதும் அவன் தொடங்கும் சேவைகளை, இன்று அவளே தொடங்கி வைக்க, அவனுக்குப் பைத்தியம் பிடிக்காத குறை தான்.

“இன்னைக்கு என் வெயிட்டைத் தாங்குறியானு பார்க்கலாமா அரக்கா?” அவன் கன்னத்தோடு கன்னம் தேய்த்துக் கூறிட, அவனோ பாகாய் கரைந்து கொண்டிருந்தான்.

ஆகினும் ஏற்பட்ட முன் அனுபவத்தின் காரணமாய், “இந்த நேரத்துல உன்னைத் தூக்கி எக்ஸர்சைஸ் செய்யணுமாடி மின்னல்!” என்றான் குழைவாய்.

“ஹய்ய… அதில்ல!” என்று மறுத்தவள், மெத்தையில் அவனுடன் சரிந்து, அவன் மீதே மின்னல் மேகமாய் பரவினாள்.

இன்றேனோ வெட்கம் துறந்து, ஆடவனின் வேலைகளை எல்லாம் அவளே முன்னெடுத்திருந்தவள், அவனுடன் பின்னிப் பிணைந்தாள்.

“தி பெஸ்ட் பர்த்டே கிஃப்ட் எவர் கடன்காரி!” அவளை ஒட்டு மொத்தமாய் ரசித்து, அவளது மூச்சுக் காற்றைத் திருடினான் யாஷ் பிரஜிதன்.

“நீ இவ்ளோ நாள் குடுத்த கடனை எல்லாம் குடுத்தாச்சே… இன்னும் நான் கடன்காரியாயா?” ஹஸ்கி குரலில் அவனைச் சீண்டியதில், இன்று நாணம் கொண்டதேனோ அவன் தான்.

நிலவுமகளை வழியனுப்பிச் சூரியனின் செங்கதிர்கள் தீண்டியும் கூட, தீரவில்லை அவர்களின் தீரா மோகமும் நேசமும்.

தீரத் தீர அனுபவித்ததினாலோ என்னவோ, நீண்ட பிரிவின் முதல் நாள் அதுவென்று அறியாது விடியும் வேளையில் கண்ணயர்ந்தனர்.

அரக்கன் தொடரும்
மேகா!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 60

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
66
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment