விழி வழியே சரணடைந்தேன் -18

Loading

அத்தியாயம் 18

 

இவனை பார்த்ததும் பெண்கள் அனைவரும் வந்து அணைத்து கொள்ள ஆண்களின் பார்வை மொத்தமும் அருகில் நின்ற கனிஷ்காவின் மேல் தான் இருந்தது. 

 

“சித்.. ஹு இஸ் திஸ்? லுக்கிங் கார்ஜியஸ்” என்று ஒருவன் கேட்க “ஷி இஸ் மை லவ்வர்” என்றான் சித்தார்த். 

 

“ஹே வாவ்.. சித் நீயும் லவர் பாய் ஆகிட்ட” என்று சிரிக்க சித்தார்த் திரும்பி கனியை பார்த்தான். அவளோ அவன் லவ்வர் என்று சொன்னதில் ஆச்சர்யமாக பார்த்தாள். 

 

“ரொம்ப யோசிக்காத.. நான் லவ்வர்னு சொல்லலைனா உன்னை தான் டார்ச்சர் பண்ணுவாங்க..” என்று அவளின் காதின் அருகில் சொல்ல அவளின் ஆசை மொத்தமும் வடிந்து போனது. 

 

“நினைச்சேன்..” என்று முணுமுணுத்து விட்டு செல்ல சித்தார்த் புன்னகைத்து கொண்டான். 

 

“ஹே சித்.. நாம ஆடலாமா?” என்று குழைந்து வந்து நின்றாள் சார்லி. 

 

“இன்னைக்கு உன் ஆள் வரலையா என்ன? சார்லி எப்பும் வில்சனுக்கு மட்டும் தான்னு சொல்றது எங்க போச்சு? என்னை தொந்தரவு பண்ணாத..” என்று கூறி விட்டு நகர அவனை பெருமையாக பார்த்து கொண்டு நின்றாள் கனிஷ்கா. 

 

என்னதான் காதலிக்கவில்லை என்று சொன்னாலும் அவளிடம் மட்டுமே அவன் காட்டும் உரிமை அவளுக்கு பிடித்திருந்தது. அவனை தூரத்தில் இருந்தே ரசித்து கொண்டிருக்க அதை உணர்ந்தவனும் திரும்பி பார்த்தான். அவளின் பார்வை வீச்சு தான் எப்போதும் அவனை தாக்கும் ஒரே விஷயம். எங்கு தொடங்கினாலும் கடைசியில் அந்த விழி வீச்சில் தான் சரணடைவான். 

 

அவளின் அருகில் வந்தவன் “கியூட்டி நாம டான்ஸ் ஆடலாமா?” என்று கேட்க சந்தோசமாக அவனுடன் கை கோர்த்தாள் கனிஷ்கா. 

 

“தமிழ் சாங் ப்ளீஸ்..” சித்தார்த் கேட்க அதுவே போடப்பட்டது. 

 

“நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்

கேட்டாலும் வருமா கேட்காத வரமா

இது போதுமா இல்லை அவசரமா

இன்னும் வேண்டுமா ,அதில் நிறைந்திடுமா

நாம் பார்த்ததால் நம் வசம் வருமா

உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடிப் பெண்ணே தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன் நடமாட

வலியடி பெண்ணே வரைமுறை இன்றி

வதைக்கிறாய் என்னை மெதுவாக”

 

அவளின் இடுப்பை பிடித்து கொண்டு அவன் ஆட மற்றவர்களும் தங்கள் இணையோடு ஆட துவங்கினர். இதுவரை மதுவின் பிடியில் இருந்தவர்கள் பாடலின் வரிகளில் லயித்து விட அனைவருக்கும் அந்த பொழுது வித்தியாசமாக இருந்தது. 

 

“நிழல் தரும் இவள் பார்வை

வழி எங்கும் இனி தேவை

உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால்

உடனே வருவேன் உயிர் சாகும் முன்னால்

அனலின்றி குளிர் வீசும்

இது எந்தன் சிறை வாசம்

இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே

நிஜமடிப் பெண்ணே தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன் நடமாட

வலியடி பெண்ணே வரைமுறை இன்றி

வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்

கேட்டாலும் வருமா கேட்காத வரமா

இது போதுமா இல்லை அவசரமா

இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா

நாம் பார்த்ததால் நம் வசம் வருமா

உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி”

 

அவளின் கண்ணை பார்த்து கொண்டே ஆடி முடித்தவன் கடைசியில் அவளின் இதழ்களை சிறைப்பிடித்து விட அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர். 

 

“சித்.. நீ நிறைய மாறிட்ட..” ஒருவர் சிரிக்க “எஸ் அவ என்னை மாத்திட்டா” என்று சித்தார்த் கனிஷ்காவின் முகத்தை பார்த்தான். அவனின் செயலில் செங்கொழுந்தாகி போயிருந்தாள். 

 

அந்த நிமிஷத்தை இருவருமே ரசித்தனர். அதன் பின் மீண்டும் மதுவும் இன்னொருபக்கம் உணவும் பரிமாறப்பட அவளை சாப்பிட அழைத்து சென்றான் சித்தார்த். 

 

அவள் விரும்பி உண்ணும் உணவை எடுத்து தட்டில் வைத்து கொடுக்க “சித்து நான் ஏன் ரொம்ப வித்தியாசமா பீல் பண்றேன்? இங்க எல்லாரும் நான் போடுற மாதிரி தான் ட்ரெஸ் போட்டிருக்காங்க.. ஆனா எனக்கு அது ஒரு மாதிரி இருக்கு.. எல்லாரும் பர்கர், பீட்சா சாப்பிடும் போது எனக்கு மட்டும் ரைஸ் சாப்பிடணும் தோணுது.. அப்போ நான் இந்த நாட்டை சார்ந்தவள் இல்லயா?” என்று அவனின் முகத்தை பார்த்து கேட்க என்ன பதில் சொல்வான் அவன்?

 

“நீ இங்க தானே இருக்க கியூட்டி அப்போ இங்க உள்ளவ தானே” என்று சமாளித்து அடுத்த தட்டில் தனக்கான உணவை எடுக்க “அப்போ எதுக்காக என்னை உன் கண்ட்ரோல்ல வச்சுக்க நினைக்குற? ஏன் எனக்கு ஷாக் கொடுக்குற?” என்ற அவளின் கேள்வியில் தட்டை கீழே வைத்தான். 

 

அவன் சாப்பிடாமல் எழ போவதை பார்த்ததும் “நான் இப்போ எதுவும் கேட்கலை சித்து.. நீ சாப்பிடு” என்றாள். அவளின் கேள்வியில் அவனுக்கு தான் சாப்பாடு தொண்டை குழியில் இறங்க மறுத்தது. 

 

“உனக்கான இந்த பதில் நான் கொடுத்தா அது உனக்கு ரணமா வலிக்கும் கியூட்டி.. இப்போ நீ இருக்குற வாழ்க்கை தான் நிரந்தரம்.. இங்கு உனக்கு கொஞ்சம் வலிகள் இருந்தாலும் நிறைய சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.. ப்ளீஸ் உன்னை நான் பாதுகாக்க தான் நினைக்குறேன்.. இந்த கேள்வி இனி கேட்க மாட்டேன்னு நம்புறேன்” என்று எழுந்து சென்று விட அவனின் பதிலில் மீண்டும் குழம்பி போனாள் கனிஷ்கா.

 

அவளுக்கு தேவையான பதில் இது இல்லையே.. அப்படி என்றால் அவளுக்கு பின்னால் வேறு ஏதோ கதை இருக்க வேண்டும். எப்படி அறிந்து கொள்வது என்று சித்தார்த்தை தேட அவனோ மதுவில் மூழ்கியிருந்தான். அவளின் கேள்வி அவனின் குற்றஉணர்ச்சியை ஏற்றி விட்டிருந்தது. 

 

“கியூட்டி.. உன்கிட்ட இல்லன்னு சொல்ற காதல் பல மாதங்களாக என் மனசுக்குள் புதஞ்சு இருக்குறத எப்படி உனக்கு புரிய வைக்கிறது? நான் உன்னை பற்றி சொன்ன அடுத்த நொடி என்னை விட்டு போயிடுவியே..” என்றவன் மீண்டும் மீண்டும் மதுவை தனக்குள் ஏற்றி கொள்ள அதுவும் அவனை அமைதி படுத்தவில்லை. அவனுக்கு தெரியும் இப்போது எதை தேடினால் அவனுக்கான நிம்மதி கிடைக்கும் என்று. ஆனால் அவளின் குழப்பத்தில் தன்னை ஏற்று கொள்வாளா என அவனுக்கு தெரியவில்லை. 

 

பார்ட்டி முடிந்ததும் அவளை தேட அங்கிருந்த இருக்கையில் தலை கவிழ்த்து படுத்திருந்தாள் கனிஷ்கா. 

 

“கியூட்டி..” என்று அவளின் தலையை வருட நிமிர்ந்து பார்த்தவள் “போகலாமா?” என்று முன்னே நடந்தாள். சித்தார்த் அமைதியாக காரை எடுத்து கொண்டு அவளின் முன் வர முன்னே ஏறி கொண்டவள் அவனை திரும்பி பார்க்க பார்வையை சாலையில் இருந்து சிறிதும் மாற்றாமல் ஓட்டி கொண்டிருந்தான். 

 

வீட்டிற்கு வந்ததும் தன் அறைக்கு சென்றவனின் பின்னோடு சென்றாள் கனிஷ்கா. 

 

“சித்து..” குரல் கேட்டு திரும்பி பார்த்தவன் கண்கள் சிவந்து இருந்தன. தன்னை வெகுவாய் கட்டுபடுத்தி கொண்டிருந்தான். 

 

அவனின் அருகில் சென்றவள் “எனக்கு ஏதோ பழைய விஷயங்கள் இருந்திருக்கு.. அதை நீ மறக்க வச்சிட்ட அவ்ளோ தானே.. அது கசப்பான விஷயங்களா இருந்திருக்கும்.. இப்போ உன்கூட இருக்கும் போது கிடைக்கிற சந்தோசம் அதில் கிடைச்சிருக்குமா?” என்று கேட்க இல்லையென தலையசைத்தான். 

 

“ரொம்ப டிஸ்டர்பா இருக்க இல்ல..” என்று கூறி எம்பி அவனின் கன்னத்தில் முத்தமிட அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தி கொண்டான் அவன். 

 

“நான் உன்னை தினமும் தேட காரணம் என்ன தெரியுமா? உன்கிட்ட மட்டும் தான் என் ஆறுதல், நிம்மதி எல்லாம் இருக்கு.. உன் மூச்சு காற்று தான் எனக்கு தூக்கத்தை தருது.. ஆனா இந்த சந்தேகம், கேள்வி எல்லாம் வந்த பிறகு எப்படி உன்னை தொடுறதுன்னு மனசுக்குள்ள ஒரு கேள்வி.. ஆனா என்னை புரிஞ்சு எனக்கு உன்னை தருவியா?” என்று கேட்க அவளுக்கு இப்போது அவன் குழந்தை மாதிரி தெரிந்தான். 

 

அவள் அறிந்து சித்தார்த் என்றால் மிகப்பெரிய அறிவாளன். அவனின் கண்டுபிடிப்புகளை பற்றி அந்த நாடே பெருமையாக பேசி கொண்டிருக்க அவனோ அவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான். 

 

அவனை பார்த்து புன்னகைத்தவள் தன் கைகளை விரிக்க அவளின் மார்பில் சரணடைந்தவனுக்கு அதுவே போதும் என தோன்றியது. அன்றைய கூடல் இருவரின் மனதிலும் ஒரு அன்பை உணர்த்தியது. அவளுக்காக காதலை வெறுத்தவன் மனதிலும் அவள் காதலை வர வைத்திருந்தாள். 

———— 

அந்த இரவு நேரத்தில் அருண் இருந்த மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அறையின் முன் கலக்கத்தோடு நின்றிருந்தனர் கனி, கீதன் மற்றும் விஷ்வா. 

 

“சாரி மிஸ்டர் விஷ்வா.. அவர் கண் விழித்ததில் இருந்து கனி ன்னு தான் சொல்லிட்டு இருக்கார்.. நிமிஷத்துக்கு நிமிஷம் அவரோட மனநிலை வேறுபட்டுட்டே இருக்கு.. அவரின் முன்னால் கனி வந்தால் மட்டுமே அமைதி படுத்த முடியும்.. இப்படியே நிலைமை போனால் அவருக்கு மனநிலை பாதிக்க கூட வாய்ப்பிருக்கு” என்று கூற நண்பனின் நிலை கண்டு அவன் கண்களில் கண்ணீர் வந்தது. 

 

“டாக்டர் அந்த பொண்ணு இப்ப எங்க இருக்கான்னே தெரியாது.. இந்த நேரத்தில் எப்படி அவளை கொண்டு வர முடியும்?” என்றவனின் மனதில் அருண் சரியாகி விட வேண்டுமே என்ற தவிப்பு மட்டுமே இருந்தது. 

 

தனியாக சமாளிக்க முடியாமல் தான் கீதனை அழைத்திருந்தான். கனி அமைதியாக ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க கீதன் மருத்துவரிடம் சென்றான். 

 

“டாக்டர் இதுக்கு வேற வழியே இல்லயா?” 

 

“மருத்துவம் கொடுத்தா மட்டும் எந்த நோயும் சரி ஆகிடாது.. அதுக்கு ஏற்றார் போல் மனநிலையும் இருக்கணும்.. இப்போ அருணுக்கு தேவை அவரோட காதலி கனி தான்.. அவர் மருந்தை கூட வாங்கிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறார்.. மனசு முழுக்க ஒரே நினைவில் இருந்தா நாங்க என்ன பண்றது? இப்போதைக்கு எந்த அதிர்ச்சியான தகவலும் அவருக்கு சொல்ல கூடாது.. அது இன்னமும் அவரை பாதிக்கும்.. கனி வந்தா மட்டும் தான் அவரை காப்பாத்த முடியும்” என்று மருத்துவர் சொல்லி விட்டு செல்ல கீதன் கனியை பார்த்தான். 

 

அவளோ கைபேசியை பார்த்து கொண்டு இருந்தாள். விஷ்வாவின் தோளை அழுத்திய கீதன் “அருணுக்கு எதுவும் ஆகாது விஷ்வா..” என்று கூறி விட்டு கனியிடம் சென்றான். 

 

“கனி..” என்று அழைக்க நிமிர்ந்து பார்த்தாள். 

 

“என்னங்க?” 

 

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. கேன்டீன் போய் பேசலாம்” என்று அழைக்க புரியாமல் எழுந்தாள். 

 

விஷ்வாவிடம் சொல்லி விட்டு அவளை அழைத்து கொண்டு கேன்டீன் வந்தான். தன் முன்னே அமர்ந்திருந்தவளிடம் தான் யோசித்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தயங்கி கொண்டிருக்க அவளோ “என்னங்க பேசணும்?” என்று கேட்டாள். 

 

மனதில் தோன்றிய வலியை மறைத்து கொண்டவன் “நம்ம காதல் எப்பவுமே அழிஞ்சு போகாதுடா.. ஆனா இப்போ இந்த விஷயம் ஒரு மனிதாபிமானத்தில் செய்ய நினைக்குறேன்” என்று பீடிகை போட 

 

“சுத்தி வளைச்சு பேசாதீங்க.. நேராவே சொல்லுங்க” என்று அவன் முகம் பார்த்தாள். 

 

“நீ.. நீ..” என்று தயங்கியவன் “நீ அருணோட காதலி கனிஷ்காவா நடிக்கணும்” என்று சொல்ல “வாட்?” என்று அதிர்ந்து எழுந்தாள் கனி. 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்