Loading

12 – வலுசாறு இடையினில் 

 

“என்ன மாப்ள தனியா ஒக்காந்து சிரிச்சிட்டு இருக்கீங்க?”, என கேட்டபடி  செங்கல்வராயன் அங்கே வந்தார். 

 

“உங்கள பாக்கலாம்ன்னு வீட்டுக்கு வந்தேன் நீங்க முக்கியமான வேலையா வெளிய போனதா சொன்னாங்க”, என அவரை அளந்தபடி பேசினான் வர்மன். 

 

“என்ன விஷயம் மாப்ள? ஓ .. அந்த ஏகாம்பரம் பொண்ண என் பொண்ணு போய் பாத்து பேசினது பத்தி பேச வந்தீங்களா?”, என அவரே நேரடியாக விஷயத்திற்கு வந்தார். 

 

“தேவை இல்லாத விஷயத்துல எதுக்கு நீங்க நுழையறீங்க மாமா?”

 

“எனக்கு தேவை இருக்கு மாப்ள.. என் பொண்ண நீங்க கட்டிக்கணும்ன்னு நானும் தான் கண்டவனுக்கு எல்லாம் பணத்த எரச்சிட்டு இருக்கேன்.. “

 

“நீங்க எதுக்கு உங்க பணத்த எரைக்கணும் ? உங்க வேலைய மட்டும் பாத்தா நல்லது மாமா”

 

“மாப்ள .. உங்க தாத்தா உங்கப்பான்னு எல்லார்கிட்டயும் நான் உறவாடி இருக்கேன்.. நீங்க அப்புடியே எங்க மாமா அதான் உங்க தாத்தாவ உறிச்சி வச்சி இருக்கீங்க.. குணத்துலையும், உருவத்துலையும் .. எனக்கு அது ரொம்ப வசதி பாருங்க.. என் பொண்ண எப்ப வேணா கட்டிகோங்க.. ஆனா அவள தவிர யாரையும் நீங்க கட்ட நான் விடமாட்டேன் ..”, என சிரித்தபடி பேசும்  செங்கல்வராயனை தூக்கி போட்டு மிதிக்க எழுந்த ஆவலை கட்டுபடுத்திக்கொண்டு வர்மன் நின்றான். 

 

“நான் முடியாதுன்னு சொன்னா ?”, வர்மன் மர்மமாக புன்னகைத்தபடி கேட்டான். 

 

“நமக்கு கோழி கழுத்த அறுக்கறதும், பொண்ணு கழுத்த அறுக்கறதும் புதுசு இல்ல மாப்ள.. உங்க ஆச்சி கிட்ட சொல்லி வைங்க.. என்னிக்கி இருந்தாலும் என் பொண்ணு தான் அவங்க வீட்டு மகாராணி ன்னு “, என கூறிவிட்டு சிரித்தபடி எழுந்து சென்றார் செங்கல்வராயன். 

 

“சரியான கேடியா தான் இருக்கான்.. இவனுக்கு ஒரு முடிவு கட்டணும் மொதல்ல”, என நினைத்தபடி வர்மன் தோப்பில் புதிதாக தயாராகும் தொழிற்சாலை நோக்கி நடந்தான். 

 

சிறிதுசிறிதாக நான்கு குடிசைகள் ஒரு பக்கமும், மொத்த கொள்முதல் பொருட்கள் வைக்க தகரம் போட்ட கூரை ஒரு பக்கமும், ஹாலோ பிரிக்ஸ் வைத்து கட்டிய கட்டிடம் ஒரு பக்கம் என “ப” வடிவில் இருந்த சிறிய தொழிற்சாலைகுள் நுழைந்து அனைத்தும் பார்வையிட்டபடி நடந்தான். நேரமும் இரவை நெருங்கியது. 

 

“மச்சான் .. மச்சான் ..”

 

“என்ன மாப்ள ?”

 

“அந்த ஏகாம்பரம் பணத்த பொரட்டி குடுத்துட்டு இருக்கான்”

 

“ம்ம்”

 

“மத்தவனுங்க யாரும் வாய தொறக்க முடியாதபடி யாரோ என்னமோ செஞ்சி இருக்காங்க”

 

“செங்கவராயன் தான் மாப்ள.. அந்த ஆளு என்ன பண்றான் ஏது பண்றான்னு டீப்பா  கவனி .. நாமளும் நல்லா கவனிக்க வசதியா இருக்கும்”, என வர்மன் மீசையை முறுக்கி விட்டபடி கூறினான். 

 

“சரி மச்சான்.. அந்த ஆளும் நம்ம இரத்தினமும் சேர்ந்து தான் சூத்திக்கீட்டு இருக்காங்க.. ஏகாம்பரத்த தூண்டி விட சரியான ஆள தான் உங்க மாமா பிடிச்சி இருக்காரு. அவன் மூலமா தான் இப்போ ஏகாம்பரத்துக்கும் உங்க மமாவுக்கும் வரவு செலவு போயிக்கிட்டு இருக்கு”, தன் காதுக்கு வந்ததை வர்மனின் காதிலும் போட்டு வைத்தான். 

 

“ஏன் மாப்ள .. அந்த மேலூர் கார பசங்க என்ன சம்பவம் பண்ண வந்தாங்க-ல .. அவங்களுக்கும் இந்த இரத்தினத்துக்கும் என்ன சம்பந்தம்?”, வர்மன் யோசனையுடன் கேட்டான். 

 

“அது தெர்ல மச்சான் .. விசாரிச்சிக்கலாம்.. இன்னொரு விஷயம்”, என வட்டி தயங்கி நின்றான். 

 

“என்ன மாப்ள ?”

 

“ஆச்சி உனக்கு பொண்ணு தேட ஜோசியம் பாக்க போகணுமாம்.. “, என கூறிவிட்டு நான்கு அடி தள்ளி நின்றான். 

 

“நீயும் தானே போற ?”

 

“நீ வேணாம்ன்னு சொன்னா போகல மச்சான் .. “, முழியை உருட்டியபடி கூறினான். 

 

“என்ன மாப்ள வட்டி .. முழி எல்லாம் ஒரு தினுஷா இருக்கு .. வேற என்ன உள் அர்த்தம் இருக்கு ?”

 

“சொல்றதா வேணாமா ன்னு தெர்ல .. அந்த பொண்ணு நம்ம ஆச்சிய பாக்க வருது “, என தயங்கியபடி கூறினான். 

“எந்த பொண்ணு ?”

 

“அதான் மச்சான் அந்த பொண்ணு”, என லேசாக சிரித்தபடி கூறினான். 

 

“யாரு இளவேணியா ? அத ஆச்சி வீட்டுகுள்ள விடாதே மாப்ள”

 

“சரி தான்.. உங்க நெனப்பு எல்லாம் அந்த இளவேணி மேல தான் இருக்கா ? நான் தமிழ் தங்கச்சி கிட்ட சொல்லிடறேன்.. நீ நிம்மதியா இரு ]ஆத்தா .. எங்க ஆளு கவனம் வேற பக்கம் திரும்பிரிச்சின்னு”, என கூறிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான். 

 

“டேய் மாப்ள .. வட்டி .. இரு டா “, என ஓடி வந்து வட்டியை நிறுத்தினான் வர்மன். 

 

“என்ன ? அதான் நீங்க அந்த தாவணி புள்ளைய நினைக்க ஆரம்பிச்சிட்டீங்க ல அப்பறம் என்ன? ஆச்சி கிட்ட கூட ஜோசியக்காரன பாக்க வேணாம் ன்னு சொல்லிடறேன் “, என வட்டி வம்பு செய்தான். 

 

“டேய் நில்லு டா.. நம்ம அந்த செங்கல் பத்தி தானே டா பேசிட்டு இருந்தோம் .. நீ திடீர்னு பொண்ணு வருது-ன்னு சொன்ன நான் என்ன டா நெனப்பேன் ? தமிழு நம்ம ஆச்சிய பாக்க வருதா ? எதுக்கு ? நம்ம ஆச்சிய அவளுக்கு எப்படி தெரியும்? எதுவும் நமக்கு தூரத்து சொந்தமா ? இல்லயே .. இருந்தா நமக்கு முன்னயே தெரிஞ்சி இருக்குமே.. என்ன விஷயமாம்?”, என வரிசையா கேள்வி மேல் கேள்விகள் அடுக்கினான். 

 

“எம்மாடி .. எவ்ளோ கேள்வி? மச்சான்.. நான் கூட இந்த அளவுக்கு நீ மாறுவன்னு எதிர்பக்கல மச்சான்.. என் தங்கச்சி நெனப்பு அந்த அளவுக்கு உங்கள மாத்தி இருக்கா?”, என வட்டி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்துடன் கேட்டான். 

 

“நான் என்ன ஆடா இருந்தனா ? மாடா இருந்தனா? இப்ப மனுஷனா மாறுறதுக்கு? நீ விஷயத்த சொல்லு டா..”, என அவசரபடுத்தினான். 

 

“நீ பண்ணிக்கிட்டு இருக்க வேலைய போட்டு குடுக்க வருது மச்சான்.. அத நீ கட்ட முடியாம என்ன பண்ண முடியுமோ அத பண்ணலாம் ணு வருது”, மாலையில் ஆச்சிக்கு வினிதா அழைத்தது முதல் ஆச்சி கூறியது வரை ஒப்பித்து முடித்தான். 

 

“இந்த அளவுக்கு தைரியம் இருக்க அவளுக்கு? வரட்டும் அப்படி என்ன பேசரான்னு நாமளும் கேப்போம்”, என கண்ணடித்து கூறினான். 

 

ஏனோ இன்று அவளிடம் பேசியதில் இருந்து அவனுக்குள் உற்சாகம் கரை புரண்டு ஓடி கொண்டிருக்கிறது. 

 

அடுத்த நாள் காலை வினிதாவும், நங்கையும் நீலா ஆச்சியை காண கல்லூரியில் விடுப்பு எடுத்து கொண்டு கிழக்குபுரி  செல்லும் பேருந்தில் ஏறினர். 

 

“நங்க .. நேத்து உங்க வீட்ல என்ன நடந்துச்சி ? உன் தம்பி படம் பாத்து என்ன ரியாக்சன் ?”

 

“எல்லாம் தலைகீழ் ஆக்க்ஷன் தான் வினி.. வழக்கம் போல வீட்ல கதை சொல்லி அவன் தப்பிச்சிட்டான்”

 

“எப்டி டி அவன உங்க வீட்ல இன்னும் நம்பறாங்க?”

 

“எங்க வீட்ல மட்டுமா ? எல்லார் வீடலையும் இந்த ஆம்பல பசங்க மட்டும் தானே உசத்தி.. அவங்கள யாராவது விட்டு குடுப்பாங்க ? எவ்ளோ தப்பு அவங்க பண்ணாலும் மொத அவங்கள காப்பாத்தறது அம்மாங்க தான்.. அவங்கள வளத்தரதே நீ யாருக்கும் அடங்கி போக கூடாது. நீ ஆம்பல அதனால் என்ன வேணா பண்ணலாம்.. இப்படி தானே சொல்லித்தராங்க.. “

 

“ஆமா நங்க .. நான் கூட யோசிப்பேன் ஏன் நம்மல மட்டும் இவங்க அடக்கி அடக்கி வளத்தராங்க ? ஏன் நமக்குன்னு யாரும் இல்லைன்னு ..”

 

“இவ்ளோ ஏன் வினி.. வீட்ல சண்டைன்னு வந்த மொத நம்மல தான் வீட்ட விட்டு வெளிய போ ன்னு சொல்வாங்க.. அப்பா அம்மா நடுவுல சண்டை வந்தா கூட எனக்கு என் பையன் போதும் நீயும் உன் பொண்ணும் வெளிய போங்க ன்னு ஒரு செகண்ட் ல சொல்ற ஆம்பலைங்க தான் இங்க அதிகம்.. அதுவும் நம்ம ஊர்ல சொல்லவே வேணாம்”

 

“ஏன் நங்க நமக்கு நிலையா வீடு ன்னு ஒண்ணு இல்லாம போச்சி ?”

 

“தெர்ல வினி.. ஆனா நான் சம்பாதிச்சி எனக்கு-ன்னு ஒரு வீட்ட தான் வாங்க போறேன்..  அங்க இருக்கற யாரும் சண்டை வந்தா என்னை வெளிய போ-ன்னு சொல்ல முடியாது “, என்ற அவள் வார்த்தையின் வலி வினிதா மட்டுமின்றி அருகில் அமர்ந்து இருந்த சில பெண்களையும் திரும்பி பார்க்க வைத்தது. 

 

“கண்டிப்பா நங்க.. நீ சம்பாதிச்சி நல்ல தோட்டம் வச்ச வீட்ட வாங்கு.. நான் கூட என் புருஷன் கிட்ட சண்டை போட்டா உன் வீட்ல வந்து தங்கிக்கறேன்.. பொறந்த வீட்ல அண்ணா தம்பிங்க எல்லாம் ரெண்டு நாளைக்கு மேல சோறு போடமாட்டேன் வெளிய போ ன்னு தான் சொல்வாங்க”, என சிரித்தபடி கூறினாள். 

 

“என்ன சமுதாயமோ இது? ஒரு புள்ளைய பெத்து வளத்து ஆளாக்கி வீட்ட உருவாக்கி, அத உயிர்ப்போட வச்சி இருக்க பொம்பளைய தான் எல்லாரும் நிலையா ஒரு வீடு இல்லாம அலைய வைக்கறாங்க.. ஒரு நிழலுக்கு அவ குடுக்கறது அவளோட மொத்த ஒடம்பும் உசுரும் .. ஆனா இது எத்தன பேருக்கு புரியும் ?”

“ஒரு பொம்பள வாழ்க்கை கல்யாணம் பண்ணி ஒரு கொழந்தைய பெத்துட்டா முடிஞ்சது ல .. அவளுக்குன்னு எந்த கனவு, லட்சியம்ன்னு எதுவும் வச்சிக்க கூடாது.. ஆனா இன்னிக்கி கொஞ்சம் பொறந்த வீட்ல புரிஞ்சிக்க ஆரம்பிச்சி இருக்காங்க ல வேற ஊரு பக்கமெல்லாம் ..”

 

“எங்க புரிஞ்சிக்கிட்டாங்க? எல்லாம் சும்மா தான் வினி.. நம்ம கூட மொத வருஷம் படிச்சாலே அந்த மணிமேகல.. அவள கல்யாணம் செஞ்சிட்டு படி ன்னு தானே சொன்னாங்க .. கல்யாணம் பண்ண ஒடனே கொழந்த வந்துரிச்சி .. அவளோ தான்.. இப்பவே அவளுக்கு ரெண்டு புள்ளைங்க வந்துரிச்சி.. பொண்ணு வீட்லயும் அவ படிப்ப பத்தி கண்டுக்கல, பையன் வீட்லயும்  கண்டுக்கல.. எல்லாம் ஆடு தலை ஆற்ற வரைக்கும் தான் அத்தன கவனிப்பு உபசரிப்பு எல்லாம்.. ஒரு தடவ தலைய ஆட்டிட்டா அவ்வளவு தான்.. ஏதோ எங்கயோ ஒண்ணு ரெண்டு வீட்ல படிக்க வைக்கறாங்க”

 

“இப்படி இருந்தா எப்படி இந்தியா வல்லரசு ஆகும் ?”

 

“ஹாஹாஹாஹா .. காமெடி பண்ணாத வினி.. இந்தியா வல்லரசு ஆகணும்னா மொத எல்லாருக்கும் சுய சம்பாத்தியம் இருக்கணும். பொண்ணு பையன் ன்னு எந்த வேறுபாடும் இல்லாத கண்ணோட்டம் இருக்கணும்.. ஒவ்வொரு தனி மனுஷனோட சுயசம்பாத்தியம் ல இருந்து பல விஷயம் மனோ ரீதிலையும், சமுதாய ரீதிலையும் முற்போக்கு சிந்தனை, தொலைநோக்கு பார்வை, சுய கட்டுபாடு, சுயமரியாதை இதுலாம் எப்போ சகஜமா பார்க்க படுதோ அப்போ தான் வல்லரசு பத்தி யோசிக்க முடியும்.. ஆயுத சேகரிப்பு, அதுல அட்வான்ஸ்டு டெக் இருந்தா மட்டும் வல்லரசு ஆகிடாது..”

 

“போதும் டி .. எனக்கு தூக்கம் வருது.. ஆனா நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான் நங்க.. இங்க பெண்களுக்கு சுயமரியாதை இருந்தா கொலை குத்தம் பண்ண கணக்கா இல்ல பாக்கறாங்க  பேசறாங்க .. “

 

“இந்த சமுதாயம் பெண்களுக்கு அதுலாம் இருக்க கூடாதுன்னு நினைச்சி அதுலயே ஊறி இருக்கு”

 

“அப்ப இந்த சமுதாய அமைப்பு தான் காரணமா ?”

 

“இந்த சமுதாய கட்டமைப்புல இருக்க தப்பான புரிதல் , மூட நம்பிக்கை தான் காரணம் வினி.. நம்ம நாட்ல இருக்க இந்த குடும்ப அமைப்புனால தான் நம்ம நாடு இன்னிக்கி வரை ஓரளவு உருப்படியா இருக்கு.. ஆனா சுதந்திரம் கிடைக்கறதுக்கு முன்ன நம்ம பெண்கள காப்பாத்த ஏற்பட்ட சில கட்டுப்பாடுகள இன்னிக்கும் கடை பிடிக்கறது முட்டாள் தனம். இதுல ஆணாதிக்கம் செய்ய நினைச்சவங்க  அவங்க இஷ்டத்துக்கு இன்னும் பல விதிமுறைகள், ஸம்ப்ரதாயம் ன்னு கதை கட்டிக்கிட்டாங்க..  பெரும்பாலான ஆட்கள்  பெண்களை போக பொருளா மட்டுமே பார்த்தாங்க.. பொண்ணுங்க கேள்வி கேட்டா அவங்க சுகத்துக்கு ஆபத்துன்னு வீட்டுக்குள்ளயே அடிமை படுத்தினாங்க.. அதுவே கடந்த இருநூறு வருஷத்துக்கு மேல தொடர்ந்துட்டு இருக்கறது தான் இப்போ பிரச்சனை.. “

 

“போதும் நங்க .. இதுக்கு மேல என்னால இந்த விளக்கம் கேக்க முடியாது.. வா கோவில் வந்துரிச்சி.. போய் மொத உன்ன காப்பாத்தலாம் அப்பறம் நம்ம ஊரு பொண்ணுங்கள காப்பாத்தலாம்.. “, என வினிதா கூறிவிட்டு நங்கையை அழைத்து கொண்டு கோவில் நோக்கி நடந்தாள். 

 

அது ஒரு பழமையான சிவன் கோவில். பல நூறு நூற்றாண்டுகள் முன்பு அந்த பகுதியை ஆண்ட ஒரு மன்னன் அவரின் மனைவியின் விருப்பத்திற்கு இணங்க இதை கட்டியதாக வரலாறு உண்டு. 

 

“வினி .. உனக்கு அந்த ஆச்சிய தெரியுமா ?”, நங்கை பிரகாரத்தை சுற்றி வந்தபடி கேட்டாள். 

 

“இல்ல நங்க.. சின்ன வயசுல பாத்தா ஞாபகம்.. “

 

“அப்பறம் எப்படி டி யாருன்னு தெறிஞ்சிக்கறது ?”, நங்கை கடிந்து கொண்டாள். 

 

“யார தெறிஞ்சிக்கணும் கண்ணு ?”, என கேட்டபடி நீலாயதாட்சி ஆச்சி அவர்கள் அருகில் வந்தார். 

 

“நீங்க ?”, நங்கை தயக்கத்துடன் அவரை பார்த்தாள். 

 

“நான் தான் கண்ணு உன்ன பாக்கணும் ணு சொன்னது.. வா என் அப்பன பாத்துட்டு பேசலாம் “, என கோவில் உள்ளே நுழைந்தார். 

 

“இல்ல பாட்டி”, என இருவரும் தயங்கினர். 

 

“கோபுர வாசல் உள்ளார வந்துட்டு என் அப்பன பாக்கலன்னா, என் அப்பனுக்கு மனசு வலிக்கும் ல கண்ணு.. வா வந்து பாத்துட்டு அப்பறம் பொறுமையா பேசிக்கலாம்”, என இருவரையும் கையை பிடித்து அழைத்து சென்றார் ஆச்சி. 

 

“வாங்க பெரியம்மா .. யார் பேருக்கு அர்ச்சனை? வழக்கம் போலவா ?”, என பூசாரி சிரிப்புடன் கேட்டார். 

 

“ஆமா பூசாரி.. இதோ நிக்குது பாரு என் பேத்திங்க ரெண்டு பேரு பேருக்கும் பண்ணிடுங்க..”, என வர்மன் பெயர் சொல்லி அடுத்து நங்கை பெயர் அவளது ராசி நட்சத்திரம் முதற்கொண்டு கூறி அர்ச்சனை செய்ய வைத்தார். 

 

வினிதாவும், நங்கையும் ஆச்சியை அதிர்ச்சியுடன் பார்த்துகொண்டு இருந்தனர். 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Janu Croos

      ம்க்கும் நங்க நல்ல ஆள் கிட்ட வந்து மாட்டியிருக்க. வர்மனே உன்ன விட்டாலும் ஆச்சி உன்ன விட மாட்டாங்க. ஆனா நீ என்னடானா ஈவங்க கிட்ட பேசி வர்மன தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்ல வந்திருக்க…நம்பமுடியாது ஆச்சி பேசியே உன்ன கவுத்து வர்மன கட்டிக்க சம்மதம் சொல்ல வச்சிடும்..

      சரியான ஈத்தறை குடும்பமா இருக்கும் போலயே. ஒருத்தன் இதுங்கள பாத்தாலே மனுஷனா மதிக்குறான் இல்ல அவனயே சுத்தி சுத்தூ வருதுங்க அப்பனும் பொண்ணும். இதுல நங்கய ஏதாவது பண்ணிடுவேன்னு மெரட்டுறான்…டேய் லூசுப்பயலே நீ நங்கைய ஏதாவது பண்றது எனீன..பண்ரனும்னு நினைச்சாலே வர்மன் அப்பனையும் பொண்ணையும் ஓட விட்டுவெட்டுவான்…வந்துட்டாரு உதார் விட லூசுப்பய.

    2. Archana

      நிதர்சனமான உண்மை😶😶😶 இன்னிக்கு எத்தனை வீட்டுலே ஒரு பொம்பள புள்ளையே மனுஷிமா பார்க்குறாங்க சில இடத்தை தவிர்த்து ஆச்சி அடுத்து என்ன பண்ண போறாங்கன்னு பார்ப்போம்😌😌😌😌