Loading

ரோமியோ-9

 

கைகளை முறுக்கி தன்னை கட்டுப் படுத்தியவன்…. சாதாரணமாக அவள் முன்னே வந்து… இப்போ நீ என்ன சொன்ன என்று கேட்க…

அவன் மிரட்டி கேட்டிருந்தால் கூட சொல்லி இருப்பாளோ என்னவோ…. ஆனால் இந்த சாதாரண முக பாவனை அவளை கிளர்ச்சி அடைய செய்தது… பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க நினைத்தாலும்…அதுதான் அவள் முகத்தில் முன் நின்று ஜொலித்தது…

ஐயோ இப்போ என்ன பண்ணுறது ..நம்ம பாட்டுக்கு ஒரு புளோவுல சொல்லிட்டோம்… என்று உடல் நடுங்க நின்று கொண்டிருந்தாள்…

இப்போ என்ன சொன்னனு கேட்டேன் என்று வார்த்தைகள் சற்று அழுத்தமாகவே வர…..

ஆஹா….பார்முக்கு வந்துட்டான்ல… போற உசுரு லவ்வ சொல்லி போனதா சரித்திரம் பேசட்டும் என்று மனதில் நினைத்து கொண்டு… அது… நான் ….. உங்களை… ல…என்று அவள் கூறும் முன்பே…அவளை அப்படியே தூக்கி அந்த குளிர்ந்த ஆற்றில் போட்டு விட்டான்….

ஒரு நிமிடத்தில் என்ன நடந்தது என்பதை அறியாது..தன் இறுதி மூச்சை எண்ணி கொண்டிருந்தாள் அமிர்ந்தா….

********

இதுக்கு மேல என்னால முடியாது மதி.. என்று பொங்கியே விட்டான் ஆதர்சன்.. பாவம் அவனும் என்னதான் செய்வான்… கல்யாணம் ஆகி மனைவியை அருகில் வைத்து கொண்டு படாத பாடு படுபவனை… தற்போது சோதனை செய்து பார்க்கிறாள் அவனது அன்பு மனைவி …

என்னங்க …. உங்களுக்கு குளிக்க வைக்க தெரியுமா தெரியாதா என்று மூக்கு விடைக்க அவள் கேட்க…நொந்து போனான் ஆதர்சன்…

இங்க பாரு டி….கன்னி பையன் சாபம் சும்மா விடாது டி…

நானா உங்களை குளிக்க வைக்க கூப்பிட்டேன்… நீங்க தான் என் பொண்டாட்டிய யாரும் பார்க்க வேணாம்.. நானே பண்ணுறேனு வந்தீங்க…

ஆமா வந்தேன்… அதுக்குன்னு நீ இப்படி தான் பாவடைய மட்டும் கட்டிட்டு என் முன்னாடி வந்து நிக்கிறதா…

அப்போ புடவையை கட்டிட்டி வந்து உட்காரவா..ம்… காட்டமாகவே வந்தது அவள் குரல்…

கத்தி பேசாத டி… வெளிய போய் ஆதர்சன்ன்னு என் பெயரை மட்டும் சொல்லு டி…எப்படி நடுங்குறாங்கன்னு தெரியும்… ஆனால் நீ என்ன ஆட்டி படைக்கிற…

ஓஹோ… நீங்க ஒன்னும் என்ன குளிக்க வைக்க வேணாம்…. கிளம்புங்க என்று அவள் கோபத்தில் வெடிக்க…

உடனே என் பொண்டாட்டிக்கு கோவம் வந்துரும் .. சரி இரு டி…என்று அவனுக்கு தெரிந்ததை போல் அவளை பட்டும் படாமல் குளிக்க செய்தவன்… அவளது ஈர பாவடையை கழற்றும் முன் ஒரு டவலால் அவளை மூடியவன்… அதன் பின் அவள் பாவாடையை நீக்கி…டவலை சுற்றி வெளியே கூட்டி வந்தான்…

ஆதர்சனின் ஒவ்வொரு செயலிலும் காதல் பித்து அவள் தலைக்கேற ….. என்னங்க என்று அவனை அருகில் அழைத்தாள்…

சொல்லு மா…

எக்கி அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்….

கிராதகி…. என்று கருவிக் கொண்டவன் பெரும் மூச்சை வெளியிட்டான்… அதை மட்டும் தான் இப்போது பண்ண முடியும்…

அதன் பின் தன் மனைவியின் கண்களை பார்த்து கொண்டே அவளுக்கு உடை அணிவித்து விட… சரியாக அவளுக்கு மேல் சட்டை பாதி மாட்டிக் கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு அழைப்பு வர…

அவளை அப்படியே அமர்த்தி விட்டு அங்கிருந்து சென்றான் ஆதர்சன்…

சொல்லுங்க என்ன விஷயம்…

அவர்கள் சொன்ன விஷயத்தில் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான் ஆதர்சன்…

வாட் …… என்று அதிர்ந்த ஆதர்சன்… உங்களுக்கு எப்படி தகவல் தெரிஞ்சது….

ஹலோ….

ஹலோ… நான் பேசுறது கேட்குதா….

அழைப்பை துண்டித்த சத்தம் கேட்க…. பதட்டத்துடன் தன் ஆட்களுக்கு அழைத்து …விஷயத்தை முழு மூச்சாக கூறி முடித்தான்….

இது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு தெரியாது… ஒருவேளை இது நம்மளை திசை திருப்ப கூட சொல்லி இருக்கலாம்… ஆனால் இது உண்மையா இருந்தா … ரொம்ப கஷ்டம்… நம்ம நினைச்சு கூட பார்க்காத சம்பவங்கள் எல்லாம் நடக்கும்…. இதை என்னால ஈஸியா எடுத்துக்க முடியலை…

சரி தான் சார்… நாங்க உடனே நீங்க சொன்ன எல்லா இடத்துலையும் அலர்ட் பண்ணுறோம்…

மம்ம்ம்ம் ….ஓகே… அப்பறம் நான் சொன்ன டீடைல்ஸ் எல்லாம் எனக்கு உடனே  வேணும்…

சார் நான் இங்க உள்ள எல்லா பிரான்ச்சுளையும் கேட்டு உடனே மெயில் பண்ணுறேன்….

அப்பறம்…. இது உண்மையா நடந்துததுனா… என்று அவன் நிறுத்த….

அந்த பக்கமும் பலத்த அமைதி…

நம்ம நாட்டையே இழக்க வேண்டியது வரும்…என்று குரல் உள்ளே போய் இருந்தது ஆதர்சனுக்கு…

புரியுது சார்…..

நீங்க டீடைல் கலெக்ட் பண்ணுறது ஒரு சைடு போனாலும்… ஒருவேளை இது நம்ம கையை மீறி போயிடுச்சுனா…. அதுல இருந்து எப்படி வெளிய வரதுன்னு ஒரு மீட்டிங் போடனும்…..

இன்னைக்கு ஈவினிங் வச்சுக்கலாம் சார்…

ஓகே..நானும் பிரீ தான்… நம்ம டீம் கிட்ட சொல்லிடுங்க என்று ஆதர்சன் போனை வைத்து விட்டு பலத்த யோசனையில் ஆழ்ந்தான்….

******
நான் சொன்ன படி எல்லாமே நடந்ததா இல்லையா…

பாய்… எல்லாம் அது படி தான் போயிட்டு இருக்கு… ஆனால்….

அவ்வளவு தான் சாம்பல் விழியனின் ஒரே பார்வையில் அனைத்தும் அடங்கி போனது…

ஆனால்…? என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க….

பாய்… இந்நேரம் அவங்க நம்மள பிடிக்க திட்டம் போட்டு இருப்பாங்க…

அட்டகாசமாய் சிரித்தான் சாம்பல் விழியான்… எந்த திட்டம் போட்டாலும் இந்த முறை எதுவும் நடக்காது ….. என்று வேகமாக தன் குடிலுக்குள் சென்று விட்டான்…

அந்த மாநாட்டிற்கு முன்பு ஆதர்சன் யோசித்ததை போல் இரண்டு சம்பவங்களை நடத்த திட்டமிட்டு இருந்தனர்…

அதில் ஒன்று தான்… பணக்காரர்கள் பயணிக்கும் சொகுசு கப்பல்…… அங்கு தான் தன் கைவரிசையை காட்ட காத்திருக்கிறான் நம் சாம்பல் விழியான்…

அந்த மிகப்பெரிய அதிநவீன சொகுசு கப்பலில் பெயர் தான் …  “தீ ராயல் கிங்டம்” 2017 ல் இருந்து ஆரம்பித்து 2021ஜனவரியில் தான்…சரியாக பார்த்தால் மூன்று வருடங்களாக அதை கட்டி முடித்து தற்போது தான் ஒரு ஏழு நாள் டூரை அமைத்து பயணிகளை அழைத்து கொண்டு சென்று திரும்பியுள்ளது…

இந்த கப்பலில் மொத்தம் 5450 பேர் தாராளமாக பயணம் செய்யலாம்…இந்த கப்பல் முழுவதும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடன் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

 

இந்த கப்பலில் ஏராளமான வசதிகள் உண்டு… இந்த கப்பலில் பயணம் செய்வோருக்கு ஏதேனும் அவசர வேலை வந்துவிட்டால் அந்த நபருடைய சொந்த ஹெலிகாப்டரை வரவழைத்து கொண்டு அதில் பயணம் செய்து கொள்ளும் விதமாக ஹெலிபேட் வசதியும் அமைந்துள்ளது…

பெரும்பாலும் அதிக பணக்காரர்களே இந்த கப்பலை நாடி வருகின்றனர்…. ஏனென்றால் இந்த கப்பலில் பயணம் செய்ய அதிகமான பணம் செலுத்த வேண்டும்

இந்த கப்பலை கட்ட இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ4.4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த கப்பலில் ஒரு முறை பயணம் செய்ய ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் ரூ 1 லட்சம் முதல் ரூ2 லட்சம் வரை வசூலிகப்படுகிறது.

இந்த கப்பல் சொகுசை மட்டும் வழங்காமல் பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கப்பல் கில்லி தான் கப்பலில் விபத்து ஏற்பட்டால் பயணிகள் தப்பிக்க இந்த கப்பலுக்குள்ளேயே சிறிய நீர் முழ்கி கப்பல் வசதியும் உள்ளது. 

இந்த கப்பலில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால்….அதில் இருந்து பயணிகளை காத்து கொள்ள ஏராளமான வசதிகள் படைத்தே இந்த கப்பலை இயக்க ஆரம்பித்துள்ளனர்…

இந்த அட்டவனைகளையும் அதில் உள்ள வசதிகளையும் தன் முன்னே இருக்கும் மரப் பலகையின் மேல் வைத்து தான் வைத்திருக்கும் சிவப்பு நிற மார்க்காரால் சில இடங்களை தன் சாம்பல் விழிகளால் ஆராய்ந்து  குறித்து கொண்டிருந்தான் …

பாய்….

திரும்பியவனின் பார்வை கேள்வியாக இருந்தது…

அது …. அந்த பொண்ணு கண்ணு முழிச்சுடுச்சு ….

கைகளை இறுக்கியவன்…. வழக்கம்போல் அவனது பிஸ்டலை கையில் எடுத்து கொண்டு அருகில் இருக்கும் அமிர்தாவின் குடிலுக்குள் சென்றான்…

குளிரில் உடல் நடுங்க படுத்திருந்தாள் அமிர்தா… தான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம் என்று அவளால் நம்ப கூட இயலவில்லை…

ஐயோ அவன் என்ன தூக்கி அந்த ஆத்துக்குள்ள போட்டானே… அப்பறம் எப்படி நானு இங்க வந்தேன்.. ஒரு வேளை கனவோ… இல்ல ட்ரெஸ் எல்லாம் ஈரமா இருக்கே… என்று அவள் பிதற்றி கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தான் அம்முவின் வில்லன்💘

கண்களை அகல விரித்து பார்த்தவள்….பட்டென்று மூடி கொண்டு ஸ்ரீ ராம ஜெயம் சொல்ல ஆரம்பித்தாள்…உனக்கு துப்பாக்கியால தான் சாவுனா யாரு தடுக்க முடியும்… சாவு டி…என்று நினைத்து கொண்டே அவள் அவனை பாராது கண்களை இறுக்கி கொள்ள…. சரியாக அவள் கழுத்தில் வந்து பதிந்தது அவனது பிஸ்டல்…

போடு….. இன்னைக்கு சாக போறேன்…யோவ் எமன் மாமா…நான் வந்துட்டே இருக்கே …எனக்கு சீட் போட்டு வை …என்று எமனிடம் தூது அனுப்பி விட்டு… அமைதியாக கண்களை திறக்க… அவள் கண் முன் பளிச்சென்று தெரிந்தது அவனது சாம்பல் விழிகள்….

அவ்வளவு தான் சாகும் எண்ணம் பறந்து போய்…அவனுடன் காதல் செய்யும் எண்ணம் வந்துவிட்டது அவளுக்கு… முடிஞ்சுச்சு…என் விரதத்தை களைக்கவே இவன் கண்ண கொண்டு வந்து என் முன்னாடி வைக்கிறான்… அப்பறம் எங்கிட்டு நான் எமன் மாமாட்ட போறது…

ஏச்சிலை கூட்டி விழுங்கியவள்…. ஈஈ….என்று அவனை பார்த்து இழிக்க…. பிஸ்டலோடு சேர்த்து அவள் கன்னத்தில் ஒன்று வைத்தான்….

என்ன நினைச்சுட்டு இருக்க …மம்ம்ம்ம்ம்… என்று அவன் குரலில் கர்ஜிக்க… அது பாவம் அவளுக்கு கேட்கவில்லை…

விட்ட அறையில் காது “கொய்” என்ற சத்தத்தை அல்லவா கொடுத்தது…. என்ன என்று அவள் மீண்டும் கேட்க….

மீண்டும் விட்ட அறையில் காதில் உள்ள அடைப்பு நீங்கி நன்றாக கேட்டது…  நல்ல வேளை அவன் பண்ண அடைப்பை அவனே கிளியர் பண்ணிட்டான் என்று பெருமை பட்டு கொள்ள…மனசாட்சி காரி துப்பி விட்டு உள்ளே ஓடியது… போ போ என் வில்லன் என்னைய அடிக்காம யார அடிப்பாரு… அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு என்று அதனிடம் சொல்லி அனுப்பினாள்…

எனக்கு தெரியும் … நான் இப்போ திரும்ப உயிரோட இங்க இருக்கேனா …அதுக்கு என் காதல் தான் காரணம்… திரும்ப நம்ம சேரனும்னு விதி இருக்கு.. இல்லேன்னா இவ்வளோ நாள் உங்க கூட நான் எப்படி உயிரோட இருக்க முடியும் என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு அவள் பங்கிற்கு பேச…

அவளையே ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தவன்… இதழில் ஒரு மென் புன்னகையை சிந்தி… சரிதான்… நீ எனக்கு பொண்டாட்டியா ஆகுற காலம் வந்துருச்சு.. என்று சாம்பல் விழியான் கூறி விட.. ஆஆஆஆ வென வாயை பிளந்து பார்த்தாள் அமிர்தா…..

அதே நேரம் ஆதர்சனை பளாரென்று கன்னத்தில் அறைந்திருந்தாள் மிளிர்மதி.. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்