Loading

ரோமியோ-1

பாய் அந்த பொண்ணு (எல்லாம் அவர்கள் மொழியில்)…. என்று தன்னால் முடிந்த அளவிற்கு கத்தினான் அந்த ஆடவன்….

கருநீல கலர் சட்டையில் அட்டகாசமாக ஆறடிக்கு சற்றும் குறைவில்லாமல் வளர்ந்து இருந்தான் … கட்டுமஸ்தான உடல் வாகுடன்… தன் பிஸ்டலை தலையில் தேய்த்து யோசித்து கொண்டே…

அந்த பொண்ண போட்டுருங்க…. என்று சாதாரணமாக கூறி விட்டு அமர… அவன் செயலை கவனித்து கொண்டே அவன் அருகில் வந்து அமர்ந்தான் தவான்…

என்ன ஆச்சு…

தப்பிச்சு போயிட்டா என்று இளக்காரமாக சிரித்தான் அவன்…

பாய் அந்த பொண்ணு ரொம்ப தூரம் எல்லாம் போய் இருக்காது.. எப்படியாவது கண்டு பிடிக்கனும்…

ம்ம்ம் என்று அவர்களை அழுத்தமாக பார்த்து வைத்தான் அவன்….

தவான் கண்ணை காட்டவும் அங்கிருந்து அகன்றனர் அவர்கள்…

அந்த பெண்ணை இப்போ கண்டு பிடிச்சிடலாம்… நம்ம அடுத்த டார்கெட் எங்க…. என்றான் தவான்…

மும்பை…

அங்க?

இந்தியா கேட்…

சரியான இடம் தான்… ஆனால் எப்பவுமே அந்த இடத்தில அலெர்ட்டா இருப்பாங்க…

அதுக்கு என்று அவன் ஒரு பார்வை பார்க்க… தவானுக்கே நடுங்கியது…

இல்ல … நம்ம வேற இடம் என்று கூற… அவன் பார்த்த பார்வையில் வாயை கப்பென்று மூடிக் கொண்டான் தவான்…

இந்த இடத்தையே பிக்ஸ் பண்ணிடுவோம்  என்று தவான் சென்று விட… சற்று முன் நடந்த நிகழ்வை யோசித்து பார்த்தான் அவன்….

இசுலாமாபாத்தை தகைநகரமாக கொண்டிருக்கும் பாகிஸ்தானில்…. அங்குள்ள கரகோரம் உலகின் இரண்டாவது உயரமான சிகரம்(8,611 மீ அல்லது 28,251 அடி)

இந்த மலை தொடருக்கு அடிவாரத்தில் தான் இவர்கள் பதுங்கி இருக்கும் இடங்கள்….

மக்கள் ஆட்சியை களைத்து… தீவிரவாதத்தை முன் நிறுத்தி இவர்களால் நாட்டை ஆள இன்று வரை துடிக்கின்றனர்… பல இன்னல்களை கடந்தும் இந்திய நாடு அதிலிருந்து தப்பிக் கொண்டு வருகிறது….

அந்த மலை தொடரின் கீழ் வசித்து வந்த தீவிரவாதிகள் ….. தங்களை சாதரணமான  மனிதர்களாக மாற்றிக் கொண்டு நாட்டிற்குள் நுழைந்து ஏதேனும் ஒரு சம்பவத்தை நிகழ்த்தி விட்டு செல்கின்றனர்…

அப்படி தவான் செல்லும் போது தான்…. அவன் கையில் வசமாக சிக்கினாள் அவள்…. இரு வாரங்களாகவே கவனித்து கொண்டு வந்தவன்… கேட்க ஆள் இல்லாத ஆனதை பெண்ணை தேர்ந்தெடுத்தான் தங்களுடைய மாபெரும் திட்டத்திற்காக…

தாய் தந்தை யாரென்று இன்றளவிலும் தெரியாமலேயே ஆசிராமத்தில் வளர்ந்தவள் வேலை கிடைக்கவும் ஆசிரமத்தை விட்டு வெளியேறி தனியாக வீடு பிடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கோன்ட் செக்சனில் வேலையில் இருந்தாள்..

அவளை துல்லியமாக கண்காணித்த தவான்…அவள் அசந்த நேரம் அவளை தூக்கினான்…..

யார் செய்தார் எதர்க்காக செய்தார் என்று நினைக்கையில் அவள் மனம் எதேதோ கற்பனையில் உழன்று தவித்தது….

தன்னை மிரட்டி வைத்து ….காசு கேட்கவும் ஆள் இல்லை… ஏன் என்னை கடத்த வேண்டும் என்று அவள் யோசிக்க …. ஒருவேளை என்னை வைத்து தொழில் செய்யவோ என்று அவள் யோசிக்க பயந்து போனாள்…

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இரு நாற்காலியில் இருட்டறையில் அவள் அமர வைக்க பட்டிருந்தாள்…

ஒளி வரும் திசையை பார்த்தவள் அதிந்து போனாள்… வாட்ட சாட்டமாக ஐந்து ஆடவர்கள் அவள் முன் நின்றனர்…

ஐயோ யாருன்னு தெரியலையே…என்று மனதிற்குள் பய பந்து உருள ஆரம்பித்தது….

எடுத்த எடுப்பிலேயே…” நான் சொன்னதை அப்படியே நீ செய்யனும்”… என்று மிடுக்காக கூறினான் தவான்..

“முடியாது” அதே போல் துடுக்கு தனமாக வெளி வந்தது அவள் குரல்…

பல்லை கடித்த தவான்… நான் சொல்லுறதை  மட்டும் கேட்கலை… உன்ன சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்…

சுட்டுக்கோ… கேட்க கூட ஆள் இல்ல.. அடக்கம் பண்ண கூட நீதான் செலவு பண்ணனும்…

வாயை மூடு… கூட கூட பேசிட்டு இருக்காத… இப்போ உன்ன மும்பையில இருந்து பாகிஸ்தான் கூட்டிட்டு போறோம்… அதுவரைக்கும் பேச்சு மூச்சு வர கூடாது…

எது…. பாகிஸ்த்தானா என்று வாயை பிளந்தாள் அவள்…. ஐயோ நான் பார்த்ததே இல்லையே…செமையா இருக்கனும்ல ஜில்லுன்னு….

இப்படி எல்லாம் பேசி இங்க இருந்து தப்பிக்க பார்க்காத….

இனி நீங்களே சொன்னாலும் நான் போகமாட்டேன் ….என்று இன்னும் நன்றாக அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்….

தவான் ஒரு வித எரிச்சலுடன் அங்கிருந்து சென்றான்…

இவ்வளவு தூரம் தைரியமாக பேசியாவளின் முகம் இருண்டு போனது…. அவன் பாகிஸ்தான் என்று கூறியதுமே ஓரரளவிற்கு யூகித்து விட்டாள் அவள்… கடத்தல் காரன் கடத்துனா கூட அவன் கிட்ட இருந்து  நம்மனால தப்பிக்க முடியாது… இதுல என்கிட்டு தீவிரவாதி கிட்ட இருந்து தப்பிக்க… ஐயோ முருகா எனக்கு இப்டி ஒரு சோதனையா என்று மனதிற்குள் தன் முருகனை எண்ணி கலக்கம் கொண்டாள்..

சற்று நேரத்தில் அரக்க பறக்க உள்ளே ஓடி வந்தான் ஒருவன்… கையில் ஒரு பை… அவள் முன் அந்த பையை வைத்து… வேகமாக வெளியே எடுத்தான் அந்த பொருளை…

அவன் செய்வதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்தவள்.. அவன் வெளியே எடுத்த பொருளை பார்த்து அதிர்ந்து போனாள்…

ஆம் வெடி குண்டு தான்… சர சரவென அதில் உள்ள வயர்களை அகற்றி…. அவள்  அருகில் வந்தவன்..அவள் கட்டுக்களை விடு வித்தான்….

அண்ணா.. இது என்னது… அண்ணா… பயமா இருக்கு… இது வேணாம் என்று அவள் கூச்சல் போட…. வெளியே இருந்த சில பேர் அவள் இரு கைககையும் வாகாக பிடித்து கொள்ள… அவள் ஆடையின் மேல் அந்த பாம்மை பொறுத்தினான் அந்த கயவன்…

வாய திறந்த கொன்னுடுவேன் என்று எச்சரிக்கை செய்தவன்…. அவள் உடலில் கச்சிதமாக பொருத்தி விட்டு டைமரை செட் செய்தான்….பின் அவசரமாக அவளை அழைத்து கொண்டு வெளியே வர… தவான் அங்கு காத்திருந்தான்…

பெர்பெக்ட் பிட்டிங் ( perfect fitting) என்று அவளுக்கு இன்னொரு ஆடையை  அளித்தான்… ஹ்ம்ம் சீக்கிரம் இதை போட்டு வெளியே வா… என்று அவளை உள்ளே அனுப்பி வைக்க…

எ…எதுக்கு இதை போடனும் என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு அவள் கேட்க…

உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை புரியுதா… என்று துப்பாக்கியை நீட்ட… கண்களை அகல விரித்து அந்த துப்பாக்கியை பார்த்து கொண்டே உள்ளே சென்றாள் …. முதல் முறையாக நிஜ துப்பாக்கியை நேரில் பார்க்கிறாள்… அந்த அதிர்ச்சி தான்…

அவன் கொடுத்த ஆடையை அணிந்து கொண்டு வெளியே வர… அவர்கள் பேசியது இவள் காதுக்கு எட்டியது…

பாம் ப்ளாஸ்ட் பண்ணுறதுக்கு நம்ம ஏற்பாடு பண்ண ஆளு தப்பிச்சு போக பார்த்தான்… அதுக்குள்ள பாய் அவன் கதையை முடிச்சுட்டாரு… அதான் இப்போ சொன்ன படி சொன்ன டைமிங்கில அங்க பாம் வெடிக்கனும்… வேற வழி இல்ல.. அதான் இந்த பெண்ணையே மனித வெடிகுண்டா அனுப்ப போறோம்…

சரி என்று அவன் துப்பாக்கியில் குண்டை நிரப்பிக் கொண்டிருக்க…அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக வெளியே வந்தாள் ….

பயம் நெஞ்சை கவ்வியது… இன்னும் சற்று நேரத்தில் தனக்கு மரணம் என்றால் யாரால் தான் தாங்க இயலும்.. வெடித்து சிதறி சாவதற்கு இங்கேயே ஏதாவது கத்தியை வைத்து கழுத்தை அறுத்து தன் உயிரை மாய்த்து கொள்ளலாம்… என்று மனம் கூற.. இல்லை உன்னால் இதில் இருந்து தப்பிக்க இயலும் என்று மூளை கூறியது…

மனம் மூளை இரண்டும் சண்டையிட… இறுதியில் மூளை தான் வெற்றி பெற்றது.. மன உறுதியுடன் அங்கிருந்து அவர்களுடன் சென்றாள்….

ஒவ்வொரு நிமிடமும் திக் திக்கென்று இருந்தது… இப்போது அவர்கள் இருப்பது மும்பையில் உள்ள ஒரு முக்கிய இடத்தில்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… மும்பை மக்கள் ஆட்டம் பாட்டமாக அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர்…

அந்த கூட்டத்தில் நின்றனர் தவான் அவனுடன் இருவர் மற்றும் அவள்…. விநாயாகரை நிமிர்ந்து பார்த்தவள்… இன்னும் எத்தனை சோதனைகள் எல்லாம் என்னை செய்ய போகிறாய்… என்று மனம் வெம்பி அவரிடம் கேட்டு வைத்தாள்…

தவான் அங்குள்ள சில இடங்களை நோட்டமிட்டு… இங்கையே நில் என்று போன் பேச சற்று நகர… அவர்கள் இருவரும் கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்…

அவர்கள் சற்று தள்ளி செல்லவும்… தன்னை பற்றி யாரிடமாவது கூறிவிட வேண்டும் என்று பின்னோக்கி நகர…. ஒருவன் மேல் சட்டென்று இடித்து கொண்டாள்…

பயத்தில் திரும்பி அந்த ஆடவனை பார்க்க…. அவனுடைய சாம்பல் விழிகள் மட்டுமே அவள் கண்களுக்கு தெரிந்தது….

பயத்தில் எச்சில் இல்லாமல் தொண்டைக்கு வறண்டு போக…சார்… ச…சார்… என்று நடுங்கும் கைககை கொண்டு அவன் கைகளை பிடித்தாள்…

சாம்பல் விழிகள் கேள்வியாக புருவங்களை சுருக்கியது…. சார்… ப்ளீஸ் சார்.. நான் சொல்லுறதை கேளுங்க .. என் உடம்பு முழுக்க பாம் வச்சு இருக்காங்க… இப்போ அது வெடிச்சா இங்க உள்ள எல்லாரும் செத்துடுவாங்க… குழந்தை எல்லாம் இருக்காங்க.. ஏன்.. நீங்களே இங்க தான் இருக்கீங்க… ப்ளீஸ் சார் கொஞ்சம் காப்பாத்துங்க சார் என்று அவள் கெஞ்ச….

சாம்பல் நிற விழிகள் இப்போது சிவந்து போனது… சார்….என்று அவள் அழைக்க… தவான் அவன் அருகில் வந்து… ஓஹ் நீயே கண்டு பிடிச்சுட்டியா இந்த பொண்ணு தான் என்று கூற… அவன் சாம்பல் விழி அவளை மேல் இருந்து கீழ் வரை ஆராய்ச்சி செய்தது….

ஐயோ கயவனிடமே சென்று அடைக்கலம் நாடியுள்ளதை நினைத்து… திரும்பி பிள்ளையாரை ஒரு பார்வை பார்த்தாள்…ஒரு முடிவோடு அவன் விழிகளை பார்த்தவள்…. பின் சற்றும் யோசிக்காமல் அந்த சாம்பல் விழிக்காரனை இறுக்கக் காட்டி கொண்டாள் அமிர்தா….

பாய் ……என்று தவான் அதிர… சாம்பல் விழிகள் அவளை எரிப்பது போல் பார்த்து வைத்தது…

சனா💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. kutti sairan

      முதலே 🏃‍♀️🏃‍♀️ 😍😍💃💃💃
      கடத்துனவன் கிட்டயே போய் காப்பாத்து கேட்டுருக்காளே 😂😂🤣🤣🤣
      கடைசி ல அவனைய கட்டிபுடிக்குற😲😲😲
      அவுட் ஆஃப் சிலபஸ் 🤸🏻‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️

      கதை ஸ்டார்டிங் சூப்பர் அக்கா 🤩💃🏻💃🏻😷😷

    2. Ingaium vanthuten la 😂😂😂 semma start ❤️ arambame bayangarama irukeee🔥🔥 mass kadasila kaduthunavan kittaiye poi nikkurale 😂😂 pavam ami papa 😂 super start ekkovvv❤️🔥🔥😘