விழி வழியே சரணடைந்தேன் -27

Loading

அத்தியாயம் 27

 

இரண்டு வருடங்களுக்கு பிறகு : 

 

சமையலறையில் தன் மகள் ஷாரவிக்கு பால்காய்ச்சி கொண்டிருந்தாள் கனிமொழி. அவள் மனம் முழுவதும் இன்று ஜெர்மனியில் இருந்து இந்தியா வரபோகும் கணவன் மீதே இருந்தது. அன்று கீதன் அவளைவிட்டு சென்றான் என்பதை அவளால் ஒத்துகொள்ளவே முடியவில்லை. அவளின் காதலும் அவர்களின் திருமணம் தான் அவனுக்கு முக்கியமாக படவில்லை என்றாலும் தங்கள் மகள் கூடவா கருத்தில் படவில்லை என்று மனம் உறுத்தியது. 

 

அதன்பிறகு இத்தனை வருடங்கள் அவள் கீதனிடம் பேசவே இல்லை. கீதன் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டபோதும் அவளால் அவனை மன்னிக்க முடியவில்லை. காதல் அவ்வளவு லேசானதா? அதை அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுக்க முடியுமா? என்று அவளின் மனம் கேள்வி எழுப்பியது. கீதன் தன் மகளுக்கு செய்த எதையும் அவள் மறுக்கவில்லை. அருணுக்கு தெரிந்தே தான் செய்தான். மனைவியை விட்டு கொடுத்து விட்டான் அல்லவா.. எனவே மகளின் மீது அவன் காட்டிய பாசம் அவனுக்கு பெரிதாக படவில்லை. விஷ்வா தான் இருவருக்கும் இடையில் அல்லாடினான். அவனால் வந்த வினை அல்லவா அவர்களின் பிரிவு. கீதன் ஒவ்வொருநாளும் அவனிடம் பேசும் போது தன் வலியை சொல்ல கனி அசைந்தாளில்லை. இன்று அவன் நாடு திரும்புகிறான் என்பதை அறிந்த போதும் எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்றுவிட்டாள். விஷ்வா தான் விமானநிலையத்துக்கு சென்று கீதனை கூட்டி கொண்டு வந்தான். 

 

வீட்டிற்கு வந்த கீதனை கனி சிறிதும் மதிக்கவில்லை. ஷாரவி மட்டும் “அப்பா..” என்று அவனுடன் தொற்றி கொண்டாள். அவள் அருண் மற்றும் கீதன் இருவரையும் அப்பா என்றே அழைப்பாள். அது இதுவரை யாருக்கும் பெரிதாக படவில்லை. அவள் வளர்ந்த பிறகு மாற்றி கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர். இன்று தன்மகள் “அப்பா…” என்று அழைக்கவும் கீதனுக்கு கண்கள் கலங்கிவிட்டது. அவன் நிமிர்ந்து கனியை பார்க்க அவளுக்கும் அதேநிலை தான். அவர்கள் எதிர்நோக்கிய நிமிடம் அல்லவா இது. 

 

“கனி..” என்று கீதன் அவள் அருகில் செல்ல சட்டென நகர்ந்தவளை அவன் வேதனையோடு பார்த்தான். 

 

“சாரிமா…” 

 

“எத்தனை சாரி சொல்லுவீங்க? தெரியாம பண்ணுற தப்புக்கு தான் சாரி.. நீங்க ஒவ்வொரு முறையும் என் மனசை தெரிஞ்சே தான் காயப்படுத்துறீங்க.. எனக்குன்னு ஆசை இருக்காதா? ஆனா அதை நீங்க புரிஞ்சிக்கவே இல்ல” என்றவள் பின் கண்களை அழுந்த துடைத்து விட்டு “எனக்காக நீங்கபட்ட கஷ்டமும் உங்களுக்காக நான்பட்ட கஷ்டமும் போதும்.. இனி நான் இங்கேயே இருந்துக்குறேன்.. நீங்க சென்னை போய் ஆபரேஷன் பண்ண பாருங்க” என்று கூற கீதன் “நீ வரமாட்டியா?” என்று கேட்டான். அவன் குரலில் அவ்வளவு வலி. 

 

அதை புரிந்து கொண்டாலும் “உங்களுக்கு அருண் தானே முக்கியம்.. அவன் இன்னும் சரி ஆகலையே..” என்று கூற “புரிய வைக்கலாம்மா” என்றான். 

 

அவனை முறைத்தவள் “புரிய வைக்கணும்னு நினைச்சிருந்தா முதலில் அவன் அடிபட்டு இருக்கும் போதே பண்ணிருப்பீங்க.. ஆனா இத்தனை வருஷம் கழிச்சு சொல்லி புரியவைக்க தேவையில்லை.. என் வேலையை நான் பார்த்துட்டு ஷாராவை நான் கவனிச்சுக்குறேன்.. நீங்க போகலாம்” என்று சொல்ல அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினான். 

 

விஷ்வா அவனை சமாதானபடுத்த முயன்றாலும் “அவளை நிறைய காயப்படுத்திட்டேன் விஷ்வா.. இது மறக்க கொஞ்சநாள் ஆகும்” என்றவன் சென்னை வந்து தன் அலுவல்களை பார்த்தான். 

 

தன் பங்கு சொத்து முழுவதையும் மனைவி பேரில் எழுதி வைத்தவன் கனியின் சித்திக்கு தேவையானதையும் கொடுத்துவிட்டு ஒருஆண்டிற்கு பின்னே தான் அறுவை சிகிச்சைக்கு ஒப்புகொண்டான். மூளையில் கட்டி என்பது இத்தனை காலம் அவனுக்கு உயிர்பிச்சை போட்டிருக்காது. ஆனால் அவனின் மனஉறுதி மட்டுமே இத்தனை வருடங்கள் அவனின் உயிரை காத்து வந்தது. 

 

அவனுக்கு அறுவை சிகிட்சை செய்தாலும் பாதிக்கு பாதி தான் உறுதி கொடுக்க முடியும். அது அவனுக்கும் தெரியும். அதனால் தான் இத்தனை வருடங்கள் போராடினான். தன் மனைவிக்கு தன்னால் ஆன அனைத்து உரிமைகளையும் கொடுத்து விட்டே போக வேண்டும் என்று நினைத்தான். ஐந்து வருடங்கள் கழித்து அதை முடித்துவிட்டு கோமாவிற்கு சென்று விட்டான். 

 

இன்று மருத்துவமனையில் அவனின் கைகோர்த்து நடந்த விஷயங்களை சொன்ன கனிமொழியை கண்டு அனுவுக்கே அதிர்ச்சியாக இருந்தது. காதல் கைகூடி விட்ட மகிழ்ச்சியில் அண்ணனின் மனதை கவனிக்காமல் விட்டோமே என்று அவளின் மனம் வருந்தியது. 

 

நேரம் ஆனதை தொடர்ந்து அருணுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று எழுந்த கனி வாசலில் குழந்தையை தோளில் போட்டுகொண்டு நின்ற அருணை கண்டு அதிர்ச்சி எதுவும் அடையவில்லை. இன்னும் ஒருமுறை அந்த கசந்த நினைவுகளை சொல்ல வேண்டாம் என்று மனம் நிம்மதியடைந்தது. 

 

கனியின் அருகில் வந்த அருணிடம் இருந்து ஷாரவியை அனு வாங்கி கொள்ள அருண் கனியை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான். 

 

“என்னை ஏமாத்திடீங்கல..” அவனின் பேச்சுக்கு அவள் பதில் சொல்லும் “நீதான் அவங்க வாழ்க்கையை கெடுத்த..” என்று வந்தான் விஷ்வா. கிளம்பும் போதே கனி சொல்லியிருந்ததால் அவனும் அங்கு வந்திருந்தான். 

 

“நான் என்னடா பண்ணுனேன்? நீங்க தான் என் கனின்னு இவளை நம்ப வச்சு ஏமாத்திடீங்க” என்று சீற ஓங்கி ஒருஅறை விட்டான் விஷ்வா. 

 

“யாருடா ஏமாத்துனது? உன்கிட்ட நாங்க உண்மைய சொல்ல வரும்போது எல்லாம் பைத்தியக்காரன் மாதிரி பிஹேவ் பண்ணி கடைசியில் அவரோட பொண்ணு கூட இருக்க முடியாம பண்ணுனது நீ.. நான் கூட சொன்னேன் எதுக்காக உனக்கு இவ்ளோ பாவம் பார்க்கணும்னு.. ஆனா அவர் உன் மனசுல இருந்த காதலை தான் பார்த்தார். கிட்டத்தட்ட நாலு வருஷம் தன்னோட குடும்பத்தை விட்டு உனக்காக பிரிஞ்சு இருந்தவரை பத்தி பேச உனக்கு என்னஉரிமை இருக்கு?” விஷ்வா கேட்க கேட்க “இவ கனிஷ்கா இல்லனா என் கனி எங்க?” என்றே அவன் மனம் கேட்டது. 

 

அதை வாய் வழியாகவும் அவன் கேட்க “இறந்து போயிட்டாங்க..” என்றாள் கனி. இது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. 

 

“வாட்?” விஷ்வா கேட்க “எஸ் இறந்து போயிட்டாங்க.. அதுவும் கொலை..” என்று கூற அருண் “நோ…” என்று கதறி விட்டான். 

 

“யார் பண்ணினது?” விஷ்வாவின் கேள்விக்கு “நான் பதில் சொல்றேன்..” என்று உள்ளே வந்தார் டாக்டர் கிரண். அவர் தான் கீதனுக்கு அறுவை சிகிச்சை செய்திருந்தார். 

 

“உங்களுக்கு எப்படி தெரியும்?” அருண் கேட்க “அவ என் மருமகள்.. புகழ்பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளன் சித்தார்த்தின் மனைவி..” என்றுகூற ஏதோ பட்டிக்காட்டில் இருந்த பெண் அமெரிக்காவில் வசித்தாள் என்பதை நம்ப மறுத்தனர். 

 

“டாக்டர் இட்ஸ் இம்பாசிபிள்..” என்று சொல்ல கனி “எனக்கு சித்தார்த்தை தெரியும்.. அவர் இந்தியா வந்தது அருணை தேடி தான்.. எந்த கணவனுக்கு தான் தன் மனைவியை இன்னொருத்தன் காதலிக்குறது பிடிக்கும்? பட் அவர் தேடி வந்த நேரம் கனிஷ்காவின் உருவத்தில் இருந்த என்னை பார்த்திருக்கார்.. அன்று தான் கனிஷ்காவும் கொடூரமா கொலை செய்யப்பட்டாள். கிட்டத்தட்ட ஆறுமாசத்துக்கு பிறகு அவர் எனக்கு கால் பண்ணி பேசினார்” என்று நிறுத்த “என்ன சொன்னான்?” என்று கேட்டான் அருண். 

 

“கனிஷ்கா மரணத்தை பற்றி சொன்னவர் அது உனக்கு தெரிய வேண்டாம்னு கேட்டு கிட்டார்.. அது உன்னை இன்னும் பாதிக்கலாம்னு கொஞ்சநாள் அப்படியே விட்டுட சொன்னார்.. உன்மேல கொலைவெறியில் வந்தவர் அப்படி பேசுனது எனக்கும் ஆச்சர்யம் தான்.. பட் அவர் அப்போதான் கனியின் காதலை புரிஞ்சிக்கிட்டார்..” அருண் ஆச்சர்யமாக பார்க்க “எஸ் தே லவ் ஈச் அதர்.. அவள் சாகும்போது அவர்களின் காதலுக்கு சாட்சி அவளோட வயிற்றில் வளர்ந்தது..” என்று கூற அங்கிருந்த அனைவரின் கண்களும் கலங்கியது. 

 

“அவனை போல் திறமை இருக்கணும்னு எல்லாரும் விரும்புவாங்க.. ஆனா அந்த திறமையே அவனின் மனைவிக்கு ஆபத்தா முடிஞ்சு போச்சு..” என்று கலங்கிய டாக்டர் கிரண் பின் “அருண் நீ எவ்ளோ கனிஷ்காவை லவ் பண்ணுனன்னு தெரியல.. பட் கனிஷ்கா சித்துவை உயிரா நினைச்சா.. அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது கூட அவளுக்கு நியாபகம் இல்ல.. அந்த அளவுக்கு அவளை மாற்றியவன் சித்து மட்டும் தான்.. ரொம்ப சந்தோஷமா இந்தியா வந்து அவளோட அப்பாகிட்ட பேசுனான்.. ஆனா போகும்போது அவன் கதறிய கதறல் நீ பார்த்திருந்தால் அவனோட காதல் புரிஞ்சிருக்கும்.. உன்னை யாரும் ஏமாத்தல.. உன் நல்லத்துக்காக பொய் சொன்னாங்க அவ்ளோ தான்” என்று கூற அருணுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

 

எதுவும் சொல்லாமல் வெளியே சென்றவனை விஷ்வா பின்தொடர அவனை தடுத்த கிரண் “அவனுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க.. நல்ல முடிவா எடுப்பான்” என்றவர் கனியின் பக்கம் திரும்பி “உங்க காதல் பவர் ரொம்ப அதிகம்.. சீக்கிரமே கீதன் கண்விழிப்பார்.. கட்டியை மொத்தமா அகற்றிட்டோம்” என்று சொல்ல கண்ணில் நீர்வழிய நன்றி சொன்னாள் கனி. 

 

“நோ கனி.. இந்த மாதிரி ஒரு காதலன் நடைப்பிணமா இருக்கும்போது எனக்கு அதோட வலி புரியும்” என்று வெளியே செல்ல கீதனின் அருகில் சென்று அமர்ந்தாள் கனி. 

 

————–

 

தன் ஆராய்ச்சிகூடத்தில் அமர்ந்து தான் வடிவமைத்த மனித ரோபோக்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கவனித்து கொண்டிருந்த சித்தார்த் கதவு திறக்கவும் திரும்பி பார்த்தான். பென் தான் வந்திருந்தான். 

 

“என்னாச்சு பென்? நாம அனுப்பின ரோபோ எந்த லெவல்ல இருக்கு?” என்று கேட்க “நிச்சயமா இதை ஆர்மியில் கூட பயன்படுத்தலாம் சார்.. சொல்லும் கட்டளையை அப்படியே கேட்டு பண்ணுது..” என்று கூற அதைகேட்டு கொண்டவன் தன் முன் நின்றிருந்த மற்றொரு ரோபோவை பார்த்தான். அதன் கண்கள் சிவப்பு ஒளியை அதிகமாக வெளிப்படுத்த “பென் இந்த ரெட்லைட் பத்தி என்ன நினைக்குற?” என்று கேட்டான். 

 

“அது கொஞ்சம் அதிகமா வந்தாலும் எதிரில் இருப்பவங்க உடலில் கதிர்வீச்சை செலுத்திடும் சார்” 

 

“இதை நடைமுறை படுத்தினா என்ன? இந்த கதிர்வீச்சால் ஆபத்து இல்ல.. பட் அடுத்தவங்க உடலில் வலியை கொடுக்கும்.. தப்பு பண்றவன் யோசிப்பான்ல” சித்தார்த் கூற புரியாமல் அவனை பார்த்தான் பென். 

 

“இதை போலீஸ் போர்ஸ்ல யூஸ் பண்ணிக்கலாமே பென்.. பயம் ஒருத்தன்கிட்ட இருந்து உண்மைய வரவழைக்கும்.. பட் அது அடியா இல்லாம இப்படி இருந்தா அடிக்குற நேரம் மிச்சம்” என்று சொல்ல “பேசி பார்க்கலாம் சார்..” என்றான் பென். 

 

“பேசி முடிச்சாச்சு.. நாளைக்கு கூட்டிட்டு போக வருவாங்க” என்றவன் அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் எழுந்து சென்றான். 

 

போகும் அவனையே வியப்புடன் பார்த்து கொண்டிருந்தான் பென். கடந்த வருடங்களில் அவன் சாதித்தது ஒன்று இரண்டு இல்ல. அதுவரை தன் புகழுக்காவும் தனக்காகவும் வாழ்ந்து கொண்டிருந்தவன் கனிஷ்காவின் மரணத்திற்கு பின் மக்களுக்கு நன்மை கிடைக்கும் பலதை செய்து விட்டான். பல விருதுகளை பெற்றவன் அந்த சந்தோசம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தான். காலை முழுவதும் ஆராய்ச்சியின் பின் ஓடுபவன் இரவானால் தன்னவளின் நினைவுகளில் இருந்து தப்பமுடியாமல் தூக்கமாத்திரையின் உதவியால் தூங்கி கொண்டிருந்தான். இத்தனை வருடங்களாக வில்சனை தேடி கொண்டுதான் இருக்கிறான். ஆனால் அவனின் மறைவிடம் இவனுக்கு தெரியாமல் போனதே ஆச்சர்யம். 

 

சித்தார்த் வெளியே வர அவனை எதிர்கொண்டு வந்தான் அவனின் நண்பன் ராபர்ட். 

 

“எதாச்சும் தெரிஞ்சுதா ராபி?” சித்தார்த் கேட்க “நீ எப்படி கெவினை மிஸ் பண்ணின?” என்று கேட்டான் ராபர்ட். 

 

“வாட் அவன் வீட்லயா?” என்று சித்தார்த் அதிர்ச்சியுடன் கேட்க “எஸ்.. இத்தனை வருடங்கள் அங்கதான் இருக்கான்.. பட் அமெரிக்காவில் இல்லை.. கெவின் ஐரோப்பாவில் தன் மனைவி மகனுடன் இருக்கான்.. அங்கதான் வில்சன் இருக்கான்” என்று கூற “கெவினுக்கு கொஞ்சம் மனசாட்சி இருக்கும்னு நினைச்சேன்” என்றவன் பொறுப்புகள் அனைத்தையும் பென்னிடம் கொடுத்துவிட்டு ஐரோப்பா நோக்கி சென்றான். 

 

கெவின் தன் மகனை பள்ளியில் இருந்து அழைத்துவர அந்நேரம் அவனை எதிர்கொண்டான் சித்தார்த். 

 

“சார்..” என்று அவன் அதிர “இப்போ உன்மகனை கொன்றால் உனக்கு வலிக்குமா கெவின்?” என்று அவனின் மகன் நெற்றியில் துப்பாக்கியை வைக்க “டேடி..” என்று அழுதான் அந்த சிறுவன். 

 

“சார் ப்ளீஸ் லீவ் ஹிம்..” கெவின் கெஞ்ச “வில்சன் எங்க?” என்று கேட்டான். 

 

“இன்னைக்கு தான் அமெரிக்கா கிளம்பினார்.. அவரின் நண்பர் ஒரு ப்ராஜெக்ட்ல பணம் கொடுக்க வேண்டியிருந்தது..” என்று கெவின் கூற “உன் மகன் நெற்றியில் துப்பாக்கி வைத்ததும் உனக்கு பதறுச்சே.. அன்னைக்கு என் கனியை மலையில் இருந்து தள்ளிவிட்டு சாகடிச்சா எனக்கு எவ்ளோ வலி இருக்கும்? உன்னை கொஞ்சம் நல்லவன்னு நினைச்சேன்.. பட் நீயும் அவன்கூட சேர்ந்து என்னை ஏமாத்திருக்க..” என்ற சித்தார்த் அவன் முட்டியில் சுட மடங்கி அமர்ந்தான் அவன். 

 

“இந்த வலி எப்பவும் உனக்கு நீ பண்ணுன தவறை நியாபாகபடுத்திட்டே இருக்கும்.. இதை விட கொடூரமான மரணம் தான் வில்சன் அனுபவிக்க போறான்” என்றவன் ஆம்புலன்ஸிற்கு அழைத்துவிட்டு மீண்டும் அமெரிக்கா கிளம்பிவிட இம்முறை அவன் கர்ஜிக்கும் சிங்கமாய் இருந்தான். 

 

வில்சன் தன் நண்பன் வழியாக மருந்தை வேறுநாடுகளுக்கு கடத்தியிருக்க அதன்மூலம் வரும் வருமானத்தில் இருவரும் சரிசமமாக பங்கிட நினைத்தனர். இன்றும் அவன் பணத்தை வாங்கிவிட்டு வெளியே செல்ல சித்தார்த் அவனை கடத்தியிருந்தான். கனிஷ்கா தலைகீழாக தொங்க விடபட்டிருந்த அதே மலை குன்றில் வில்சனும் தொங்கவிடபட்டிருந்தான். 

 

அவன் முன் நின்றிருந்த சித்தார்த் வெறிபிடித்த சிங்கமாய் அவனை வெளுத்து வாங்க வலி தாங்காமல் கதறினான். நிற்க வைத்து அடித்தாலே அவனின் அடியில் உயிர் போய்விடும். தொங்கவிட்டு அடித்தால்? கடைசியில் அவனின் மூச்சுதிணற சித்தார்த்தை பார்த்தான். 

 

“சித்து.. விடு ப்ளீஸ்..” என்ற வில்சனின் கதறல் கடைசிநொடி “சித்து…” என்று கதறிய கனிஷ்காவையே அவனுக்கு நினைவுபடுத்தியது. 

 

“யூ.. இடியட்.. கத்துனேனேடா.. என் குழந்தை அவ வயிற்றில் வளருறது தெரிஞ்சும் அவளை கொன்னுட்டியேடா” என்றவன் அவனை அடித்து “எதுக்காக ஆசைபட்டியோ இப்போ அது எல்லாம் அரசால் முடக்கி நாசமா போச்சே.. உன் செல்வாக்கு எல்லாம் அழிந்து போய் வருச கணக்காகுது.. ஆனா நீ என் கையால தான் சாகணும்.. என் கனி இறந்த இதே இடத்தில் தான் உன்உயிர் போகணும்” என்றவன் அந்த கயிற்றை அறுத்துவிட கனியின் கதறலை விட பலமடங்கு கதறலடன் அவன் உயிர் பிரிந்தது. 

 

அவனின் உயிரை பறித்த பின்பும் சித்தார்த்தின் மனம் ஆறுதல் அடையவில்லை. என்னதான் அவனை கொன்றாலும் இறந்து போன அவனின் மனைவி திரும்பி வந்துவிடுவாளா என்ன? முதலிலேயே அவளின்மீது காதலை கொட்டியிருந்தால் அவள் நிம்மதியாக இறந்திருப்பாளோ? அவளின் மனதில் அவனின் காதலை புரிய வைக்காமல் பிரிய விட்டானே. மனம் புழுவாய் துடிக்க குளியலறை ஷவரின் அடியில் நின்றவனுக்கு கனிஷ்காவின் நினைவே போக மறுத்தது. குளித்து விட்டு வந்தவன் தொலைகாட்சியை உயிர்ப்பிக்க அதில் வில்சனின் மரணமே தலைப்புசெய்தியாக போய்கொண்டிருக்க அதை பார்த்தவன் கண்கள் வெறியில் பளபளத்தது. 

 

“உனக்கு தேவையான தண்டனை..” என்று முணுமுணுத்தவன் மனம் கனிஷ்கா மற்றும் அவனின் திருமணநாள் அன்று எடுத்த புகைப்படத்திலேயே நிலைத்து நின்றது. 

 

“ஐ மிஸ் யூ சோ மச் கியூட்டி..” என்று அவன் உச்சரித்த நேரம் ஒரு உயிர் துடித்து அடங்கியது.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்